நபி வழியில் நம் தொழுகை - பகுதி 1
உள்ளடக்கம்:
உளூச் செய்தல்.
அகத்தூய்மை பற்றிய ஹதீஸ்.
மஸ்ஜிதிற்கு காணிக்கை தொழுகை.
தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை.
தொழுகையின் போது ஆகுமான செய்கைகள்.
தொழுகையை முறித்துவிடும் காரியங்கள்.
ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை.
தொழும் முறை.
அஸ்ஸலாத் (தொழுகை).
சூரத்துல் பாத்திஹா ஓதுவதன் அவசியம்.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் நிலை.
சூரத்துல் ஃபாத்திஹா.
ருகூஃவிலும், ஸுஜூதுக்கும் செல்லும்போது.
இரண்டாம் ரகாஅத்தை எவ்வாறு தொழவேண்டும்.
இமாமைக் கவனித்து இகாமத் கூறவேண்டும்.
தொழும் முறை.
அத்தஹிய்யாத்து.
தொழுகையில் ஓதப்படும் ஸலவாத்.
கடமையானத் தொழுகையைத் தொழுது அதை மீண்டும் அடைந்தால்.
ஸுஜூதுஸ்ஸஹ்வு - மறதிக்கான ஸஜ்தாக்கள்.
உளூச் செய்தல்:
எண்ணிச் செய்தல்:
உளூச் செய்யும்போது, உளூச் செய்கின்ற எண்ணம் மனம் இருக்கவேண்டும். உளூச் செய்கின்ற எண்ணமில்லாவிட்டால் அது உளூவாக முடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ''அமல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்ததே'' என்று கூறியுள்ளனர் (புகாரி). மனதில் உளூச் செய்யும் எண்ணமிருக்க வேண்டும்.
இங்கே ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், ''உளூச் செய்யும் போது அதைப் பற்றிய எண்ணம் நிச்சயம் உள்ளத்தில் இருக்கத்தானே செய்யும்'' என்ற சந்தேகம் தோன்றலாம். அது உண்மை தான், எனினும் ஒரு சில நேரங்களில் எண்ணமில்லாமலும் சில காரியங்கள் நடந்துவிடும்.
ஒருவன் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது மழை பெய்கின்றது. எல்லா உறுப்புகளும் கழுவப்பட்டு விடுகின்றன. உளூவில் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் நடந்து விடுகின்றது. ஆனால் அந்த மனிதனின் உள்ளத்தில் உளூச் செய்வது பற்றி சிறிதளவும் எண்ணமில்லை. அதுபோல் தற்செயலாக தண்ணீரில் வழுக்கி விழுகிறான். எல்லா உறுப்புக்களும் கழுகப்பட்டுவிடுகின்றன. ஆனால்அவனிடம் உளூச் செய்யும் எண்ணமில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அது உளூவாக ஆகாது. உளூச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் அந்தக் காரியத்தைச் செய்யும்போது, அது உளூவாக ஆகும்.
பாத்திரத்திலிருந்து நாம் உளூச் செய்யும் போது, பாத்திரத்தில் கையை விடுவதற்கு முன், இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிக் கொள்ளவேண்டும். அதன் பின் பாத்திரத்தில் கையைவிட்டு அள்ளி உளூச் செய்யலாம். இதற்கான ஆதாரம்:-
உஸ்மான்(ரழி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து (பாத்திரத்திலிருந்து) ஊற்றி மூன்று முறை மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு தனது வலது கையைப் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீரை அள்ளி) வாய் கொப்பளித்தார்கள். மூக்குக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். இரண்டு கைகளாலும் மூன்றுமுறை முழங்கை வரை கழுவினார்கள். பின்பு தலைக்கு மஸ்ஹு செய்தார்கள். பின்பு இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ''நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் உளூச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்'' என்றார்கள். அறிவிப்பவர்: உஸ்மான்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
இந்த ஹதீஸிலிருந்து, உஸ்மான்(ரழி) அவர்கள் முதலில் பாத்திரத்துக்குள் கையை விடுவதற்கு முன் பாத்திரத்திலிருந்து ஊற்றி மணிக்கட்டு வரைக் கழுவினார்கள் என்பதை நாம் அறிகிறோம். மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கையைவிட்டு அள்ளி ஏனைய உறுப்புக்களைக் கழுவலாம் என்பதும் தெரிகின்றது.
ஒருவன் தூங்கி எழுந்தால் கட்டாயம் பாத்திரத்தில் கையை நுழைப்பதற்கு முன், மணிக்கட்டு வரைக் கழுவியாக வேண்டும்:
உங்களில் தூங்கி எழுந்தால் கையை மூன்று முறை கழுவுவதற்கு முன் தனது கையைப் பாத்திரத்தில் நுழைக்கக் கூடாது என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
முகம், கை, கால்களை ஒவ்வொரு முறை கழுவிக் கொள்வதற்கும், இரண்டிரண்டு முறை கழுவிக் கொள்வதற்கும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் உள்ளன:
''நபி(ஸல்) அவர்கள் (உளூச் செய்யும்போது) ஒரேயொரு முறை கழுவியுள்ளனர்'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி, அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
''நபி(ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவையாக கழுவி உளூ செய்திருக்கிறார்கள்'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு தைமிய்யா நூல்கள்: புகாரி, அஹ்மத்
''நபி(ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவையாக கழுவி உளூ செய்திருக்கிறார்கள்'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு தைமிய்யா நூல்கள்: புகாரி, அஹ்மத்
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் உளூ செய்யும்போது, தண்ணீரில் ஒரு கையை அள்ளி அதிலிருந்து வாய் கொப்பளித்து, மூக்கு தண்ணீர் செலுத்தினார்கள். பிறகு இரண்டு கைகளையும் சேர்த்து இரு கைகளாலும் தண்ணீர் அள்ளி முகம் கழுவினார்கள். பிறகு கையால் தண்ணீரை அள்ளி வலது கையைக் கழுவினார்கள். பிறகு மற்றொரு கையால் தண்ணீரை அள்ளி இடது கையைக் கழுவினார்கள். பிறகு தலைக்கு மஸஹ் செய்தார்கள். பிறகு ஒரு கையால் தண்ணீர் எடுத்து வலது காலைக் கழுவினார்கள், பிறகு இன்னொரு கையால் தண்ணீர் எடுத்து இடது காலைக் கழுவினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் இப்படி உளூ செய்ய நான் கண்டிருக்கிறேன் என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி, தாரமீ, ஹாகிம், இப்னுஹிப்பான்
இந்த மூன்று ஹதீஸ்களிலிருந்து ஒரேயொரு முறை, அல்லது இரண்டிரண்டு முறை கழுவிக் கொண்டாலும் உளூ நிறைவேறும் என்று நாம் அறியலாம்.
மூன்றுக்கு மேல் கூடாது:
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி உளூ செய்வதைப் பற்றிக் கேட்டார். அவருக்கு மும்மூன்றுமுறை (கழுவி) உளூசெய்து காட்டிவிட்டு இதுதான் உளூ என்பதாகும். யார் இதைவிட அதிகப்படுத்துகிறானே, நிச்சயமாக அவன், தீங்கிழைத்துவிட்டான். வரம்பு மீறிவிட்டான்! அநியாயம் செய்துவிட்டான்! என்றார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐபு(ரழி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
மூன்று தடவைக்கு மேல் அதிகமாகக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.
ஒரு தடவை மட்டுமே 'மஸஹ்' செய்யவேண்டும்:
அலி(ரழி) அவர்கள் உளூ செய்யும்போது, இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவி, முகத்தையும் மூன்றுமுறை கழுவி, தலைக்கு ஒரே ஒரு தடவை மட்டும் மஸஹு செய்தார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா(ரழி) நூல்கள்: அபூதாவூது
மற்ற உறுப்புக்களை, ஒரு தடவை அல்லது இரு தடவை, அல்லது மூன்று தடவைக் கழுவும்போதும் தலைக்கு ஒரு தடவை தான் மஸஹ் செய்யவேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
மஸஹ் செய்யும் முறை:
தலைக்கு மஸஹ் செய்யும்போது சிலர் முன் நெற்றியில் இலேசாக விரல்களால் தடவி விட்டு மஸஹ் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் எப்படி மஸஹ் செய்து காட்டியுள்ளார்களோ அப்படித்தான் மஸஹ் செய்யவேண்டும். அதற்கு மாற்றமாகச் செய்தால் அது மஸஹாக ஆக முடியாது.
நபி(ஸல்) அவர்கள் தனது இரண்டு கைகளாலும் தலைக்கு மஸஹ் செய்தார்கள். (எவ்வாறெனில்) தனது தலையின் முன் பாகத்தில் துவங்கி, இரண்டு கைகளையும் பிடரி வரை கொண்டு சென்று, திரும்ப அந்த இரண்டு கைகளையும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு ஜைத் நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
இதுதான் மஸஹ் செய்யும் முறை. அதே நேரத்தில் தலைப்பாகை கட்டி இருந்தால் தலையின் மீது மஸஹ் செய்வதற்கு பதில் தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்யலாம். அல்லது தலைப்பாகையைச் கழற்றாமல் கையை தலைப்பாகைக்குள் செலுத்தி, முன் தலையில் மட்டும் மஸஹ் செய்யலாம். மற்ற நேரங்களில் முழுமையாகவே மஸஹ் செய்யவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் தலைப்பாகை கட்டிய நிலையில் உளூ செய்தார்கள். தலைப்பாகையை அவிழ்க்காமல் தன் கையைத் தலைப் பாகைக்குள் செலுத்தி தலையின் முன்பகுதிக்கு மஸஹ் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்: அபூதாவூது
நபி(ஸல்) அவர்கள் தலைப்பாகை மீது மஸஹ் செய்யபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: உஸ்மான்(ரழி) நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
காற்றுப் பிரிதல்:
'உங்களில் ஒருவருக்கு 'ஹதஸ்' ஏற்பட்டால் (மறு) உளூ செய்யாதவரை அவரது தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரழி) அவர்கள் எடுத்துச் சொல்லும் போது, 'ஹலரமவ்து என்ற ஊரைச் சேர்ந்த ஒரு மனிதர் ''அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன? என்று கேட்டார், அதற்கு அபூஹுரைரா(ரழி) அவர்கள், ''ஒசையுடனோ, ஓசையின்றியோ (பின் துவாரத்திலிருந்து வெளிப்படும் காற்று'' என விளக்கம் தந்தார்கள்.) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இந்த ஹதீஸ் தெளிவாக ''காற்று வெளிப்படுவதால் உளூ முறிந்துவிடும்'' என்று விளக்குகின்றது. இதிலும் அறிஞர்களுக்கிடையே கருத்துவேறுபாடு எதுவுமில்லை.
மனிதனுக்கு 'உணர்ச்சி' மேலிடும் போது அவர்களின் மர்ம ஸ்தானத்திலிருந்து வெளிப்படும் கசிவுக்கு அரபி மொழியில் 'மதீ' என்பர்.
அலீ(ரழி) அவர்கள் அடிக்கடி 'மதீ' வெளிப்படக்கூடியவராக இருந்தார்கள். ''விந்து வெளிப்படும் போது குளிப்பது கடமை'' என்பது போல் இதற்கும் குளிப்பது கடமை என்று கருதிக்கொண்டு அடிக்கடி குளித்து வந்தார்கள். இது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. இது பற்றி அவர்களே பின்வருமாறு விளக்குகிறார்கள்.
நான் அடிக்கடி 'மதீ' வெளிப்படக் கூடியவனாக இருந்தேன் இதுபற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்க நான் நாணமுற்றேன் மிக்தாத் இப்னுல் அஸ்வத்(ரழி) அவர்களை (இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கச் செய்தேன். அவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, ''அதற்கு உளூ தான் செய்யவேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: புகாரி
நீ 'மதீ'யைக் காணும் போது உன் மர்ம உறுப்பைக் கழுவி விட்டு, தொழுகைக்கு செல்வது போன்று உளூ செய்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: அபூதாவூது
தூக்கம் உளூவை நீக்குமா?
உளூவை நீக்குமா? நீக்காதா என்று கருத்து வேறுபாடுள்ள விஷயங்களில் தூக்கமும் ஒன்றாகும். இதுபற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.
அரபு நாடுகளில் குளிர்காலத்தில் தங்கள் கால்களில் உறை அணிந்து கொள்வது வழக்கம். உளூ செய்யும் போது காலுறைகளை அடிக்கடி கழற்றுவது சிரமமானது என்பதால் காலுறை அணிந்தவர்களுக்கு இஸ்லாம் ஒரு சலுகையை வழங்குகின்றது.
உளூ செய்துவிட்டு காலுறைகளை அணிந்து கொண்டால் அணிந்து கொண்ட நேரத்திலிருந்து சரியாக ஒரு நாள் முழுவதும் அதைக் கழற்ற வேண்டிய அவசியமில்லை. உளூச் செய்ய நேரிடும் போது மற்ற உறுப்புக்களை மட்டும் கழுவினால் போதுமானது. கால்களைக் கழுவ வேண்டியதில்லை. கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக காலுறைகளின் மேற்புறத்தில் ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம். காலுறை அணிந்து கொண்ட நேரத்திலிருந்து ஒரு நாள் முழுவதும் எத்தனை முறை உளூச் செய்தாலும், என்ன காரணத்திற்காக உளூச் செய்தாலும் கால்களைக் கழுவாமல் காலுறைகளின் மேற்புறத்தில் 'மஸஹ்' (ஈரக்கையால் தடவிக்) செய்து கொள்ளலாம்.
ஒரு நாள் முழுமை பெற்றுவிட்டால் காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவி விட்டு அணிந்து கொண்டால் மீண்டும் ஒரு நாள் அந்தச் சலுகை, இப்படியே எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
பிராயணம் சென்று கொண்டிருப்போர் தங்கள் பிரயாணக் காலங்களில் மூன்று நாட்களுக்கு இந்த சலுகையைப் பெறுகிறார்கள். பிரயாணத்தில் இருப்போர் உளூச் செய்துவிட்டு காலுறைகளை அணிந்து கொண்டால் அணிந்து கொண்ட நேரத்திலிருந்து மூன்று நாட்களுக்கு அவர்கள் அதைக் கழற்ற வேண்டியதில்லை. உளூ செய்ய நேரிடும் போதெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம்.
ஆனால் குளிப்புக் கடமையாகி விடுமானால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்றி கால்களையும் கழுவ வேண்டும்.
மலஜலம் கழித்தற்காகவோ, வேறு ஏதேனும் காரணத்துக்காகவோ, உளூச் செய்ய நேர்ந்தால் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது 'மஸஹ்' செய்து கொள்ளலாம்.
இதைப் புரிந்து கொண்ட பின் பின்வரும் ஹதீஸை நாம் கவனிப்போம்.
''மல ஜலம் கழித்ததற்காகவோ, தூங்கியதற்காகவோ எங்களின் காலுறைகளைக் கழற்ற வேண்டியதில்லை என்றும், ஆனால் குளிப்புக் கடமையாகி விடுமானால் காலுறைகளைக் கழற்ற வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: ஸப்வான் இப்னு அஸ்ஸால்(ரழி) நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, நஸயீ
உளூவை நீக்கும் காரியங்களான மலஜலம் கழித்தலுடன் தூக்கத்தையும் இணைத்துச் சொல்லி தூக்கமும் உளூவை நீக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆழ்ந்த உறக்கம் உளூவை முறித்து விடும்:
''கண்கள் (அதாவது விழித்துக் கொண்டிருப்பது) பின் துவாரத்தில் (ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று கண்காணிக்கும்) கட்டுப்பாட்டுக் கருவியாகும். எனவே எவரேனும் உறங்கி விட்டால் (எழுந்ததும்) உளூ செய்து கொள்ளவேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா
ஆழ்ந்த உறக்கம் உண்மையில் உளூவை நீக்கும் என்பதையும், விழித்துக் கொண்டிருக்கும் போது காற்று வெளிப்பட்டால் உணர்ந்து கொள்ளமுடிவது போல், உறங்கும் போது உணர முடியாது என்ற காணரத்துக்காவே, உறங்கிய பின் உளூ செய்ய வேண்டும் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் மேற்கூறிய ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
அரைகுறைத் உறக்கம் உளூவை முறிக்காது:
''பள்ளியில் நபித்தோழர்கள் அவர்களின் தலைகள் ஆடுகின்ற அளவுக்கு தூங்குவார்கள். பின்னர் உளூ செய்யாமல் அப்படியே தொழுவார்கள்.'' அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ
இதுபோன்ற அரைகுறைத் தூக்கம் உளூவை நீக்காது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக்குகின்றது.
''தொழுகையில் நின்ற நிலையில் நான் தூங்க ஆரம்பித்து விட்டால் என் காது சேனையை நபி(ஸல்) அவர்கள் பிடி(த்து என்னை விழிக்க வைப்)பார்கள்'' (சுருக்கம்) அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
உளூவை நீக்கும் காரியங்களான மலஜலம் கழித்தலுடன் தூக்கத்தையும் இணைத்துச் சொல்லி தூக்கமும் உளூவை நீக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நின்ற நிலையில் ஆழ்ந்து உறங்க முடியாது. இதுபோன்ற அரைகுறைத் தூக்கத்தால் உளூ நீங்காது என்று நாம் உணரலாம்.
நபிகளாரின் ஆழ்ந்த உறக்கத்தினால் உளூ நீங்காத நிலை:
''நபி(ஸல்) அவர்களின் குறட்டை சப்தத்தை நாங்கள் கேட்கும் அளவுக்கு மைமூனாவின் வீட்டில் தூங்கினார்கள். பின்னர் உளூ செய்யாது தொழுதார்கள்.'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: புகாரி
இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் ஆழ்ந்து உறங்கி விட்டு உளூ செய்யாமல் தொழுதிருக்கிறார்கள். எனினும் இதனடிப்படையில் நாம் செயல்படக்கூடாது. நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் விசேஷமானது என்று நபி(ஸல்) அவர்களே குறிப்பிட்டுச் சொல்லிவிட்ட விஷயங்களில் நாம் பின்பற்ற முடியாது அந்த நேரங்களில் அவர்கள் நமக்கு இட்ட கட்டளையைத் தான் நாம் பின்பற்றியாக வேண்டும்.
''நபி(ஸல்) அவர்களின் கண்கள் தான் உறங்குகின்றன. உள்ளம் விழித்துக் கொண்டுள்ளது. அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் உறங்கினாலும் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை உணரும் அளவுக்கு அவர்களுக்கு உணர்வு இருக்கும் உளூவை நீக்கும் காரியங்கள் தன்னிடம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதை அவர்களால் உணரமுடியும். இதன் காரணத்தினால் தான் சில சமயங்களில் தூங்கி எழுந்ததும் மறுபடியும் உளூ செய்யாமல் தொழுதிருக்கிறார்கள்.
அழுத்தமாக உட்கார்ந்து உறங்குவது உளூவை நீக்காது:
மேற்கூறிய ஹதீஸ்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, (எவற்றையும் நிராகரிக்காமல்) பார்க்கும் போது கீழ்க்கண்ட முடிவு நாம் வரமுடியும்.
ஆழ்ந்து, அயர்ந்து தனக்குள் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் தூங்கினால் உளூ நீங்கிவிடும்.
அரைகுறைத் தூக்கம், நின்று கொண்டு தூங்குதல், காற்று வெளிப்பட முடியாதபடி அழுத்தமாக உட்கார்ந்து தூங்குதல் போன்ற செயல்களால் உளூ நீங்காது.
உட்கார்ந்து உறங்குபவனும், நின்று கொண்டு உறங்குபவனும் உளூச் செய்ய வேண்டியதில்லை. படுத்து உறங்கினால் தான் உளூ செய்ய வேண்டும். நூல்: பைஹகீ
மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா!
உளூவை நீக்குமா! நீக்காதா? என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள விஷயங்களில் மர்மஸ்தானத்தைக் தொடுவதும் ஒன்றாகும். இதுபற்றி முரண்பட்டதாகத் தோன்றுகின்ற இரண்டு ஹதீஸ்கள் அறிவிக்கப்படுவதே கருத்து வேறுபாடு தோன்றக் காரணமாகும்.
யார் தனது மர்ம உறுப்பைத் தொடுகிறாரோ அவர் உளூச் செய்ய வேண்டும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: புஸ்ரா(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு சிலர் மர்மஸ்தானத்தை தொட்டால் உளூ நீங்கும் என்கின்றனர்.
தன் மர்மஸ்தானத்தை ஒருவன் தொட்டுவிட்டால் அவருக்கு உளூ கடமையா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்ட போது ''கடமை இல்லை! மர்ம உறுப்பும் உன்னுடைய (மற்ற உறுப்புக்களைப் போன்ற) ஒரு உறுப்புதான்'' என்று நபி(ஸல்) பதிலாளித்தார்கள். அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், தாரகுத்னீ, தப்ரானீ)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் ''மர்ம உறுப்பைத் தொடுவது உளூவை நீக்காது'' என்று கூறுகின்றனர். இரண்டு கருத்துக்களை கொண்டவர்களும் ஒரு ஹதீஸை எடுத்துக் கொண்டு மற்றொரு ஹதீஸை ஆதாரமற்றது என்று கூறுகின்றனர். உண்மையில் இரண்டு ஹதீஸ்களும் சமமான தரத்திலேயே உள்ளன. எந்த ஹதீஸையும் பலவீனமானது என்று கூறமுடியாத அளவுக்கு ஆதாரப்பூர்வமாகவே உள்ளன.
முரண்பட்டதாகத் தோன்றினால்..
இரண்டு ஹதீஸ்கள் முரண்பட்டதாகத் தோன்றினால் நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் காண்போம்.
''நபி(ஸல்) அவர்கள் நேர் முரணான கருத்துக்களைக் கூற மாட்டார்கள்'' என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நாம் அணுகுவோம்.
முதல் ஹதீஸில் ''மர்ம உறுப்பைத் தொட்டால் உளூச் செய்யவேண்டும்'' என்று கூறப்படுகின்றது. இரண்டாவது ஹதீஸில் உளூ செய்ய வேண்டியதில்லை என்று கூறப்படுகின்றது. இரண்டு ஹதீஸ்களின் வாசகங்களையும், குறிப்பாக இரண்டாவது ஹதீஸின் வாசகத்தைக் கவனமாகப் பார்க்கும் போது, இரண்டு ஹதீஸ் ஒன்றுக்கொன்று விளக்கமாக அமைந்துள்ளதைக் காண்லாம்.
''யார் தனது மர்ம உறுப்பைத் தொடுகின்றாரோ அவர் உளூ செய்து கொள்ளட்டும்'' இது முதல் ஹதீஸ், தன்னுடைய மர்ம உறுப்பைத் தெரிந்தோ, தெரியாமலோ, இச்சையுடனோ, இச்சையின் காராணமாகவோ எப்படித் தொட்டாலும் உளூ நீங்கிவிடும் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகின்றது. இரண்டாவது ஹதீஸும் ''அதுவும் மற்ற உறுப்புக்களைப் போன்றதுதான்'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு அதனால் உளூ அவசியமில்லை என்கிறார்கள்.
''அதுவும் மற்ற உறுப்புக்களைப் போன்றதுதான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து, ''மற்ற உறுப்புக்களை சர்வ சாதாரணமாகத் தொடுவது போல் இச்சை இன்றித் தொட்டுவிட்டால் உளூ நீங்காது'' என்று உணரலாம். ''மற்ற உறுப்புக்களைப் போன்றதாகக் கருதாமல் ஆசையுடன், இச்சையுடன் அந்த உறுப்பை தொடும்போது உளூ நீங்கும் என்றும் உணரலாம். இவ்வாறு நாம் கருதுவதற்கு ''அதுவும் மற்ற உறுப்புக்களைப் போன்றது தான் என்ற வாசகம் இடம் தருகின்றது.
இப்படி நாம் முடிவு செய்யும் போது இரண்டு ஹதீஸ்களில் எதனையும் நாம் நிராகரிக்கவில்லை. இரண்டையுமே ஏற்றுக் கொள்கிறோம்.
சுருங்கச் சொல்வதென்றால் இச்சையுடன் ஆணோ, பெண்ணோ மர்ம உறுப்பைத் தொட்டால் உளூ நீங்கிவிடும். இச்சையின்றி மற்ற உறுப்புக்களைப் போல் தொட்டுவிட்டால் உளூ நீங்காது.
கால் உறைகளின் மீது மஸ்ஹுசெய்தல்:
அல்குர்ஆன் 5:6வது திருவசனத்தில் உளூவைப் பற்றி அல்லாஹ் கட்டளை யிடும்பொழுது, ''அன்றி நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும், மலம் ஜலம் கழித்து விட்டு வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு) கொண்டிருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது சுத்தமான மண்ணைக் கொண்டு உங்கள் முகங்களையும், உங்களின் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் மீது சிரமத்தை உண்டுபண்ண விரும்பவில்லை. எனினும் அவன் உங்களைப் பரிசுத்தப்படுத்தவும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தனது அருட்கொடைகளை உங்கள் மீது சம்பூரணப்படுத்தவும் விரும்புகிறான்.''
இவ்வாறே 22:78வது திருவசனத்தில் ''வமாஜஅல அலைக்கும் ஃபித்தீனி மின் ஹரஜின்'' இம்மார்க்கத்தில் நாம் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறான்.
இவ்வடிப்படையில் நாம் உளூ செய்ய, குளிக்க இயலாத சந்தர்ப்பங்களில் தயம்மும் செய்துகொள்ள இடமளித்திருக்கிறான், நமது மார்க்கத்தில் அநேகக் காரியங்கள் இவ்வாறே எளிதாக்கப்ட்டிருக்கிறது. முக்கியமாக கடினமான குளிர், காலில் வெடிப்பு அல்லது வெற்றுக்காலால் நடப்பதால் தொல்லை ஏதும் ஏற்படுகிறது முதலியவற்றின் காரணமாக காலில் கால் உறைகள் போட்டுக் கொள்கிறோம்.
அந்த உறைகளை ஜங்காலத் தொழுகைகளுக்கு உளூ செய்யும் போதெல்லாம் கழற்றிக் காலைக் கழுவிக் கொண்டும், பிறகு அணிந்து கொண்டும் இருப்பது நமக்கு சிரமெனக் கருதி, நமது தீனுல் இஸ்லாம் நமக்கு ஒரு சலுகை வழங்கியள்ளது. அதுதான் ''கால் உறைகளின் மீது மஸ்ஹு செய்து கொள்வது, இரண்டு கால்களையும் கழுவாது அவைகளில் அணிந்திருக்கும் உறைகளின் மீது தண்ணீரைத் தொட்டு (மஸ்ஹு செய்து) தடவிக் கொள்வதால் சிரமங்கள் நீங்குகிறது.
காலில் அணியும் அவ்வுறை தோலினால் தான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையுமின்றி தோல், துணி, உல்லன் கித்தான் போன்றவற்றால் தயார் செய்யப்பட்டிருந்தாலும் அவற்றையும் அணிந்து கொள்ளலாம்.
ஆனால் அணியும் முன்பாக ஒரு நிபந்தனை; அதாவது நாம் உளூ செய்து விட்டுச் சுத்தமான நிலையில் அவைகளை அணியவேண்டும். அதன் பிறகு தூங்கினாலும், மலம், ஜலம் கழித்தாலும் அவ்வுறைகளைக் கழற்றக்கூடாது. குளிப்புக்கடமையானவர்கள் அவைகளைக் கழற்றிவிட்டு குளித்த பின்பு உளூவுக்குப்பின் உறைகளை அணியவேண்டும்.
மேற்கண்ட முறைப்படி கால் உறையை கழற்றாமல் அணிந்திருப்பவர் உளூ செய்யும் பொழுது காலைக் கழுவுவதற்குப் பகரமாக அக்கால்களில் அணிந்துள்ள உறைகளின் மேற்புறத்தின் மீது மஸ்ஹு செய்தாலே போதும், கால்களைக் கழுவத் தேவையில்லை. உளூ நிறைவேறிவிடும்.
இவ்வாறு ஒரு விடுத்தம் உளூ செய்துவிட்டு அணிந்து கொள்ளும் கால் உறைக்கு மேல் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் மஸ்ஹு செய்து கொள்ளலாம் என்பதில்லை. அதற்கும் மார்க்கம் வரம்பு விதித்திருக்கிறது. உள்ளூரில் இருப்பவராயிருந்தால் ஒரு பகல், ஒரு இரவும், பிரயாணியாயிருந்தால் மூன்று பகல் மூன்று இரவுகளும் மட்டுமே மஸ்ஹு செய்துகொள்ள அனுமதிக்கிறது. அதற்கு மேல் மீண்டும் உளூ செய்து கால்களைக் கழுவி விட்டுத்தான் உறைகளை அணிந்து கொள்ள வேண்டும். பிரயாணிகளுக்கு மூன்று பகல்களும், மூன்று இரவுகளும், உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் மட்டும்தான், அதற்குமேல் அனுமதியில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
இனி ஹதீஸின் வெளிச்சத்தில் கால் உறைகளின் மீது மஸ்ஹு செய்வதைக்காண்போம்!
நபி(ஸல்) அவர்களைத் தங்களின் இரண்டு காலுறைகளின் மீது மஸ்ஹு செய்வதைக் கண்ட நான் யாரசூலுல்லாஹ்! (கழுவுவதற்கு) மறந்து விட்டீர்களோ? என்று கேட்டேன். இல்லை, நீர்தான் மறந்துவிட்டீர், எனது ரப்பு இவ்வாறு (காலுறைகளின் மீது மஸ்ஹு செய்து கொள்ள) எனக்குக் கட்டளையிட்டிருக்கிறான் என்றார்கள். அறிவிப்பவர்: முகீரா(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
நான் நபி(ஸல்) அவர்களை இரண்டு கால் உறைகளின் மேற்புறத்தின் மீது மஸ்ஹு செய்யப் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்: முகீரத்துப்னு ஷுஃபா(ரழி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு சமயம் பிரயாணத்திலிருந்தேன். (அவர்கள் உளூ செய்யும் பொழுது) அவர்களின் கால் உறைகளைக் கழற்ற முயன்றேன். அதற்கவர்கள் அவற்றைத் கழற்ற வேண்டாம் விட்டு விடும், அவற்றை நான் சுத்தமாயிருக்கும் நிலையிலேயே அணிந்திருக்கிறேன் என்று கூறி, அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்து கொண்டார்கள். அறிவிப்பவர்: உர்வத்துப்னு முகீரா(ரழி) நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் நாங்கள் பிரயாணிகளாயிருக்கும் பொழுது ஜுனுபாளி, (குளிக்கக் கடமைப்பட்டவர்) களாயிருந்தாலே அன்றி மற்ற எந்தச் சந்தர்ப்பத்திலும் (குறிப்பாக) மலம் ஜலம் கழித்தல், தூங்குதல் போன்ற நேரங்களிலும் எங்கள் கால் உறைகளை மூன்று இரவுகள் கழற்றக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் ஹஸ்ஸால்(ரழி) நூல்கள்: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா
நான் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் கால் உறைகள் மீது மஸ்ஹு செய்யும் விஷயம் குறித்து கேட்க வந்தபோது, அதற்கவர்கள் அலிய்யிப்னு அபீத்தாலிப்(ரழி) இடத்தில் அது விஷயமாகக்கேளுங்கள் ஏனெனில், ''அவர்கள் தான் நபி(ஸல்) அவர்களுடன் அநேக சந்தர்ப்பங்களில் பிரயாணம் செய்திருக்கிறார்கள்'' என்றார்கள். பின்னர் நான் அது குறித்து அவர்களிடம் விசாரித்தேன். அதற்கவர்கள் பிரயாணிகளுக்கு மூன்று நாட்களும், உள்;ர்வாசிக்கு ஒரு நாளும் என்றார்கள். அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானி(ரழி) நூல்: முஸ்லிம்
அலி(ரழி) அவர்கள் கூறியிருப்பதாக அபூதாவூத், தாரமீ, என்ற இரண்டு ஹதீஸ்கலா வல்லுநர்களும் கீழ்க்காணும் ஒரு விஷயத்தை பதிவு செய்துள்ளார்கள், இந்த (எமது) மார்க்கம் (அல்லாஹ்வின் கட்டளையின்றி) மனிதர்களின் சுய அபிப்பிராயங்களைக் கொண்டு அமைக்கப்பட்டி ருக்குமானால் கால் உறையின் மேற்பாகத்தின் மீது மஸ்ஹு செய்வதைப் பார்க்கிலும் கீழ்ப்பாகத்தில் மஸ்ஹு செய்வது உயர்வானதாயிருக்கும். ஆனால் நபி(ஸல்) அவர்களை அவற்றின் மேல்பாகத்தின் மீதே மஸ்ஹு செய்ய நான் பார்த்திருக்கிறேன்.
''நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, அவர்கள் முகீராவே! தண்ணீர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்'' என்றனர் அதனை நான் எடுத்துக் கொண்டேன். பின்னர் அவர்கள் என்னை விட்டும் மறைந்து சென்று மல, ஜலம் கழித்துவிட்டு வந்தனர் அப்பொழுது அவர்கள் சிரியா நாட்டின் ஜுப்பா அணிந்திருந்தார்கள். அதன் கையை உயர்த்தினார்கள். அது இறுகாலாய் இருந்தது. எனவே அதன் உள்பக்கத்திலிருந்து தங்களின் கையை உருவி எடுத்தனர், பின்னர் நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக உளூ செய்தார்கள். ஆனால் தங்களின் கால் உறைகள் மீது மஸ்ஹு செய்து கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஃபா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூது, திர்மிதீ, நஸயீ
எவற்றால் உளூ நீங்காது:
காற்று வெளியில் வரமுடியாத அளவிற்கு அழுத்தமாக பூமியில் அமர்ந்து தூங்குவதாலும், ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ தொடுவதாலும், புண் கொப்புளம், காயம் முதலியவற்றிலிருந்து, வாய், மூக்கு, காது போன்றவற்றிலிருந்தும் இரத்தம் அதிகமாகவோ, குறைவாகவோ வந்தாலும் உளூ நீங்காது.
இரத்தம் வழிவதால் உளூ முறியாது:
நபித்தோழர்கள் தமது (இரத்தம் தோய்ந்த) காயங்களுடனே தொழுது கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: ஹஸன்(ரழி) நூல்: புகாரி
இப்னு உமர்(ரழி) அவர்கள் தமது முகத்திலிருந்த ஒரு கட்டியைப் பிடித்து அழுத்தினார்கள்; அதிலிருந்து இரத்தம் வடிந்தது. அதை அவர்கள் தமது விரலால் வழித்தெறிந்து விட்டு மீண்டும் உளூச் செய்யாமலே தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீஷைபா நூல்: முஸன்னஃப்
உப்பாது பின் பிஷ்ரு(ரழி) அவர்கள் தொழும் போது அம்பு எய்யப்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதே நிலையில் தொழுது கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீஷைபா நூல்: முஸன்னஃப்
வாந்தி ஏற்படுவதால் உளூ முறியுமா?
வாந்தி எடுப்பது குறித்து உளூ நீங்கி விடும் என்பதற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலாக வந்திருப்பதாகத் தெரியவில்லை.
சப்தமான சிரிப்பில் உளூ நீங்காது:
அவ்வாறே தொழும்போது சப்தமிட்டுச் சிரித்தாலும் உளூ நீங்காது. ஏனெனில் சப்தமிட்டுச் சிரித்தால் உளூ நீங்கிவிடும் என்றுள்ள அறிவிப்புக்கள் அனைத்தும் ஆதாரமாகக் கொள்ளத் தகுதியற்றவையாகயிருக்கின்றன.
எவற்றிற்கு உளூ அவசியம்!
அ. அனைத்துத் தொழுகைகளுக்கும் உளூ அவசியம். உளூவின்றி எத்தொழுகையையும், திருட்டுப் பொருட்களால் செய்யப்படும் எவ்வித தர்மத்தையும் அல்லாஹ் ஏற்பதில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
ஆ. கஃபாவை தவாஃப் செய்யும் பொழுதும் உளூ அவசியம் தவாஃபு செய்தலும் தொழுகையேயாகும், ஆனால் அல்லாஹ் தவாஃபின் பொழுது பேசுவதை ஆகுமாக்கியள்ளான், அப்பொழுது பேசுவோர் நல்லதையே பேசுவாராக! அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: திர்மிதீ, தாரகுத்னீ
உளூவின் பொழுது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை:
1. ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் சொல்லல்:
''பிஸ்மில்லாஹ் சொல்லி உளூ செய்பவர் தமது உடல் முழுவதையும் சுத்தம் செய்கிறார். பிஸ்மில்லாஹ் சொல்லாது உளூ செய்பவர் உளூவின் உறுப்புக்களை மட்டும் சுத்தம் செய்கிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) இப்னு மஸ்ஊத்(ரழி) இப்னு உமர்(ரழி) நூல்: தாரகுத்னீ
2. பல்துலக்கல்:
எனது உம்மத்துக்கு நான் சிரமம் கொடுப்பது இல்லை என்றால் இஷாவைப் பிற்படுத்தித் தொழ வேண்டுமென்றும், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டுமென்றும் கட்டளை யிட்டிருப்பேன். எனவே பல்துலக்குவதை முக்கியமான சுன்னத்தாக கருதிச் செய்வது சிறப்பாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
3. உளூவின் துவக்கத்தில் மணிக்கட்டுவரை கைகளைக் கழுவல்:
நபி(ஸல்) அவர்கள் தாம் உளூ செய்யும் பொழுது மணிக்கட்டுவரை தமது கைகளைக் கழுவ நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்: அவ்ஸுபின் அவ்ஸுஸ் ஸகஃபி(ரழி) நூல்கள்: அஹ்மத், நஸயீ
4. மும்முறை வாய் கொப்பளித்தல்:
நபி(ஸல்) அவர்கள் உளூவின் போது தமது வாயை மும்முறை கொப்பளித்தார்கள். அறிவிப்பவர்: லகீத்துபின் ஸபுரா(ரழி) நூல்கள்: அபூதாவூத், பைஹகீ
5. மும்முறை மூக்கில் தண்ணீர் செலுத்தி அதைச் சுத்தம் செய்தல்:
உங்களில் ஒருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீரைச் செலுத்தி அதைச் சுத்தம் செய்வாராக! மற்றொரு அறிவிப்பில் வாய், மூக்கு இரண்டிற்கும் சேர்த்து மும்முறை தண்ணீர் செலுத்தினார்கள் என்றுமிருக்கிறது. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
6. மூக்கிற்கு, வலது கையால் தண்ணீர் செலுத்தி, இடது கையால் தான் அதைச் சுத்தம் செய்யவேண்டும்.
அலி(ரழி) அவர்கள் உளூவிற்காகத் தண்ணீரைக் கொண்டுவரச் செய்து. அதனால் வாய் கொப்பளித்து, மூக்கிற்கு தண்ணீர் செலுத்தி இடது கையால் அதைச் சுத்தம் செய்தார்கள். இவ்வாறு மும்முறை செய்துவிட்டு, இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்களின் உளூ இருந்தது என்றார்கள். அறிவிப்பவர்: அப்துகைர்(ரழி) நூல்: அஹ்மத், நஸயீ
7. தாடியைக் கோதிக் கழுவுதல்:
நபி(ஸல்) அவர்கள் உளூவின் போது ஒரு கைத் தண்ணீரை தமது தாடைக்குள் செலுத்தி, தாடியைக் கோதிக் கழுவிய பிறகு, இவ்வாறு நான் செய்ய எனது 'ரப்பு' எனக்கு கட்டளையிட்டான் என்றார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: அபூதாவூத், பைஹகீ, ஹாக்கிம்
8. விரல்களைக் கோதித் கழுவுதல்:
நீர் உளூ செய்யும் பொழுது உமது கை, கால், விரல்களைக் கோதிக் கழுவுவீராக! என் நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா
9. உறுப்புக்களை மும்முறை கழுவுதல்:
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளூவைப் பற்றி வினவிய போது, அவர்கள் ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறைக் கழுவிக் காண்பித்து, ''இது தான் உளூ'' இதைவிடக் கூடுதலாகச் செய்வோர் (எனது நடைமுறைக்கு) பங்கம் விளைவித்தவராகவும், எல்லை மீறியவராகவும், அநியாயக்காரருமாவார் என்றார்கள். அறிவிப்பவர்: அம்ருபின் ஷுஐபு(ரழி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
10. தலைக்கும், இரு காதுகளுக்கும் ஒருமுறை மஸ்ஹுசெய்தல்:
நபி(ஸல்) அவர்கள் தமது தலைக்கும், காதுகளுக்கும் ஒரு முறையே மஸ்ஹு செய்தார்கள்.
11. கை, கால் கழுவும் பொழுது வலது புறத்தை முற்படுத்துதல்:
நபி(ஸல்) அவர்கள் தமது காலணிகளை அணியும் பொழுதும் தலை சீவும் பொழுதும், யாதொன்றைக் கழுவும் பொழுதும், ஏன் அவர்களின் அனைத்துக் காரியங்களிலும் வலப்புறத்தை முற்படுத்துவதை விரும்புவார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
நீங்கள் ஆடை அணிந்தாலும், உளூ செய்தாலும் வலது பாகத்தை முற்படுத்துங்கள்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
12. உறுப்புக்களைத் தேய்த்துக் கழுவுதல்:
நபி(ஸல்) அவர்களுக்கு (உளூவிற்காக) மூன்று குவளைத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதனால் அவர்கள் உளூ செய்தவர்களாக, இரண்டு கைகளையும் தேய்த்துக்கழுவினார்கள். மற்றொரு அறிவிப்பில் கைகளைத் தேய்த்துக் கழுவும் நேரத்தில் இப்படித்தான் தேய்த்து கழுவவேண்டும் என்று சொல்லிக் கொண்டு கழுவினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜைத்(ரழி) நூல்கள்: அபூகுசைமா, அபூதாவூத், அஹ்மத்
13. உளூ செய்து கொண்டிருக்கும் பொழுது ஓதும் துஆ:
நான் நபி(ஸல்) அவர்களுக்கு உளூ செய்வதற்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன், அதனால் அவர்கள் உளூ செய்தார்கள் அதுசமயம் அவர்கள் (பின்வருமாறு) ஓதக் கேட்டேன். அல்லாஹும் மஃபிர்லீதன்பீ - வவஸ்ஸிஃலீ ஃபீதாரீ -வ பாரிக்லீஃபீரிஜ்கீ.
பொருள்: யாஅல்லாஹ்! என் பாவத்தை எனக்கு மன்னித்தருள்! மேலும் எனக்கு என் வீட்டில் தாராளமான நிலையை அமைத்தருள்! அன்றி எனது வருவாயிலும் அபிவிருத்தி செய்தருள்!
இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூமூஸல் அஷ்அரீ கூறுகிறார்கள், நான் நபி(ஸல்) அவர்களிடம் யாரசூலுல்லாஹ் தாங்கள் உளூவின் போது ஓதிய துஆவை நான் செவி மடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன், என்று கூற அதற்கவர்கள், அந்த துஆவில் எவையேனும் விடுபட்டிருக்கின்றனவா? என்றார்கள். (அல்லாஹ்விடம் ஒரு மனிதன் கேட்க வேண்டியவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக அதில் அமைந்திருக்கிறதே என்றார்கள்). அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ(ரலி) நூல்: நஸயீ
ஸஹீஹான ஹதீஸின் வாயிலாகக் கிடைத்த இந்த ஒரு துஆவைத் தவிர உளூவின் போது ஓதும் மற்ற துஆக்கள் அனைத்தும் ஆதாரமற்றவையே.
14. குளிப்பதால் உளூ நிறைவேறி விடுகிறது.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குளித்த பின்னர் உளூ செய்ய மாட்டார்கள். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா
நபி(ஸல்) அவர்கள் குளித்துவிட்டு இரண்டு ரகஅத்(சுன்னத்)தும், சுப்ஹு தொழுகையும் தொழுவார்கள். ஆனால் குளித்த பின் மீண்டும் உளூ செய்ததை நான் கண்டதில்லை. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: ஸுனன்
15. உளூ செய்தபின் ஓதும் துஆ:
உங்களில் ஒருவர் உளூவை அதன் ஒழுங்கு முறையுடன் முழுமையாகச் செய்துவிட்டு பின்னர், ''அஷ்ஹது(ன்)ல்லா இலாஹ - இல்லல்லாஹு - வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅஷ்ஹது அன்ன முஹம் மதன் - அப்துஹு - வரசூலுஹு என்று கூறுவாரேயானால் நிச்சயமாக அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறந்து வைக்கப்படும். நான் விரும்பிய வாயிலின் வழியாக அவர் அதில் பிரவேசிக்கலாம். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரழி) நூல்கள்: முஸ்லிம்
பொருள்: நிச்சயமாக - (வணக்க வழிபாட்டிற்குரிய) இறைவன், அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, என்று உறுதிமொழி கூறுகிறேன். அவன் தனித்தவன், அவனுக்கு ஈடுஇணை எவருமில்லை. மேலும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனது திருத்தூதருமென்று உறுதிமொழி கூறுகிறேன்.
அசுத்தங்களும், அவற்றை அகற்றும் முறைகளும்:
நமது வணக்க வழிபாடுகள் அனைத்தும், அகத்தூய்மை, புறத்தூய்மை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஏனெனில் அல்லாஹ் தூய்மையானவனாகவும், தூய்மையானவற்றையே ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கின்றான்.
புறத்தூய்மைப் பற்றி அல்குர்ஆன்:
(நபியே!) உமது ஆடையைப் பரிசுத்தமாக்கிக் கொள்வீராக! அன்றியும் அசுத்தத்தை வெறுத்து விடுவீராக! (74:4,5)
16. உளூ செய்வதற்கு பின் (விரும்பி)இரண்டு ரக்அத்கள் தொழுவது.
நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி)யிடம் பிலாலே நீர் இஸ்லாத்தில் மிகவும் விரும்பி செய்யும் நற்செயலைப்பற்றி எனக்கு தெரிவிப்பீராக! நிச்சயமாக நான் சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உனது பாதத்தின் காலடியின் சத்தத்தை செவியுற்றேன் அதற்கு பிலால்(ரலி) நான் மிகவும் விரும்பி செய்யும் நற்செயல் என்னவெனில் இரவு பகலில் எந்நேரம் நான்தூய்மையாகிறேனோ அப்போது எனக்கு நானே விதித்து கொண்ட தொழுகையை தொழாமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
அகத்தூய்மை பற்றிய ஹதீஸ்:
அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானவை அன்றி மற்றவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
அசுத்தங்களின் விபரம்: அவை மூவகைப்படும்
1. கடுமையானவை
2. நடுத்தரமானவை
3. இலேசானவை.
1. கடுமையானவையும், அவற்றை அகற்றுதலும்:
நாய் வாய் வைத்தவை: ''நாய் உங்கள் பாத்திரங்களில் வாய் வைத்துவிட்டால், அவற்றை சுத்தப்படுத்தும் முறையாவது 7 முறைகள் அவற்றைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும். அவற்றில் முதன்முறை, மண்ணைக் கொண்டு தேய்த்துக் கழுவவேண்டும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்
2. நடுத்தரமானவையும் அவற்றை அகற்றுதலும்:
பாலை மட்டும் உணவாகக் கொண்டுள்ள பெண் குழந்தையின் சிறுநீர், மற்றும் மாதவிடாய் ஆகியவை.
பால் குடிக்கும் ஆண் குழந்தையின் சிறுநீரைச் சுத்தம் செய்வதற்காக, அதன் மீது தண்ணீர் (மட்டும்) ஊற்றுவது (போது)ம், ஆனால் அந்நிலையிலுள்ள பெண் குழந்தையின் சிறுநீரை சுத்தம் செய்வதற்காக தண்ணீரால் கழுவிடவேண்டும். அறிவிப்பவர்: அலி(ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, (அல்லாஹ்வின் தூதரே! ''எங்களில் எவளுடைய ஆடையிலேனும் மாதவிடாய் பட்டுவிட்டால், அதை எவ்வாறு நாங்கள் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் என்று கேட்டார். அதற்கவர்கள் கையால் அதைச் சுரண்டி விட்டு தண்ணீரை அதன் மீது ஊற்றி தேய்த்து கழுவிவிட்டு, பிறகு அதில் அவள் தொழுது கொள்ளலாம்'' என்றார்கள். அறிவிப்பவர்: அஸ்மாபின்த் அபூபக்கர்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மற்றோர் அறிவிப்பில் ''அதை முறைப்படி, கழுவி சுத்தம் செய்த பின்னும், அதன் துர்வாடையோ, அல்லது நிறமோ ஆடையில் இருப்பது பற்றி தவறில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
3. இலேசானவை:
உணவருந்தாது பாலை மட்டும் உணவாகக் கொண்டுள்ள ஆண் குழந்தையின் சிறுநீர்
உம்முகைஸ்பின்த்மிஹ்ஸன்(ரழி) அவர்கள், தமது பால் குடிக்கும் ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்(து கொடுத்)தார்கள். அப்போது அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விடவே, நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு வரச்செய்து, அதைத் தமது ஆடையில் தெளித்துக் கொண்டார்கள். அதை அவர்கள் தேய்த்துக் கழுவவில்லை. நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா
பூனை வாய் வைத்த தண்ணீர் சுத்தமானதே!
கஃபுபின் மாலிக்(ரழி) அவர்களின் மகள் கபஷா(ரழி) என்பவர் அபூகதாதா(ரழி) அவர்களின் மகனுக்கு மனைவியாக இருந்தார்கள்.
ஒருமுறை அபூகதாதா(ரழி) அவர்கள் (தமது மருமகளாராம்) கபஷா(ரழி) இடம் வந்த போது, உளூ செய்வதற்கான தண்ணீரை அவர்களுக்கு கபஷா(ரழி) கொடுத்தார்கள். (அவர்கள் உளூ செய்யமுயலும் தருவாயில்) ஒரு பூனை அத்தண்ணீரைக் குடிப்பதற்காக வந்தது. உடனே அபூகதாதா(ரழி) அவர்கள் அது குடிக்கும் வரை அதற்கு தனது தண்ணீர் பாத்திரத்தைச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள்.
கபஷா(ரழி) கூறுகிறார்கள். ''நான் அதைக் கவனித்துக் கெண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த அபூகதாதா(ரழி) அவர்கள் என்னை நோக்கி, எனது சகோதரர் மகளே! (நான் பூனைக்கு தண்ணீர் காட்டுவது) உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதோ? என்றார்கள். அதற்கு நான் ஆம்'' என்றேன். அப்போதவர்கள், நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் இதை (நஜீஸ்) அசுத்தமானது என்று கூறவில்லை. ஏனெனில் பூனையானது சதா உங்களிடம் வந்து செல்லக் கூடியது. அண்டி வாழும் இனத்தைச் சார்ந்தது என்று கூறினார்கள். நூல்: அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
காட்டு மிருகங்கள் வாய் வைத்த தண்ணீரும் சுத்தமானதே!
ஒரு பயணத்தின் போது, நபி(ஸல்) அவர்கள் இரவில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு மனிதரை தண்ணீருள்ள தனது பள்ளத்தின் அருகில் அமர்ந்து இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரழி) அவர்கள் (அவரை நோக்கி,) ஏதேனும் காட்டு மிருகங்கள் இவ்விரவு இதில் தண்ணீர் குடித்தனவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், பள்ளத்துக்காரரே! இவருக்கு நீர் பதில் சொல்ல வேண்டாம். இவர் வீணாகத் தம்மை அலட்டிக் கொள்கிறார். அவை குடித்தது அவற்றின் வயிறுகளில் இருக்கிறது. எஞ்சியுள்ளது, நமக்கு குடிப்பாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கிறது என்று கூறினார்கள். நூல்: இப்னு உமர், தாரகுத்னீ
''ஈ'' விழுந்து இறந்த தண்ணீரும் சுத்தமானதே!
''உங்கள் பானத்தில் ''ஈ'' விழுந்து விட்டால், அதை அவர் முழுமையாக அதில் ஆழ்த்திவிட்டு (வெளியில்) எடுத்தெறிந்து விடுவாராக. ஏனெனில் அதன் இறகுகளில் ஒன்றில் குணமும், மற்றொன்றில் வியாதியும் இருக்கின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
அசுத்தமான மண் தரையைச் சுத்தம் செய்வதற்கு அதன்மீது அதிகமான தண்ணீரை ஊற்றவேண்டும்!
ஒருமுறை மஸ்ஜிதுந்நபவீ (நபியின் பள்ளி)யில், ஒரு கிராமவாசி நின்ற நிலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஸஹாபாக்கள் அவரைத் தடுக்க முற்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். அவரது சிறுநீரின் மீது ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றிவிடுங்கள். ஏனெனில் (இச் சமுதாயத்திற்கு) ''நீங்கள் இலகு செய்பவர்களாகவே ஏவப்பட்டுள்ளீர்கள். (அவர்களுக்கு) சிரமம் அளிப்பவராக நீங்கள் ஏவப்படவில்லை.'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
மேற்காணும் ஹதீஸின் மூலம் மண் தரையைச் சுத்தம் செய்வதற்காக, அதன்மீது அதிகமான தண்ணீரை ஊற்றவேண்டும், என்பதும் சிறுநீர் அசுத்தமான பொருள்தான் என்பதும் தெளிவாகிறது. சிறுநீரைத் தண்ணீரால் சுத்தம் செய்வது போன்றே, மனீ, மதீ, வதீ ஆகியவற்றையும் சுத்தம் செய்து கொள்வது அவசியம்
மனீ, மதீ, வதீ ஆகியவற்றின் விளக்கம்
மனீ: உணர்ச்சியின் மேலீட்டால் துள்ளி வெளிப்படும் திரவப்பொருள்.
மதீ: இலேசான இன்ப உணர்வின் போது, சாதாரணமாக கசிந்து வெளிப்படும் திரவப்பொருள்.
வதீ:
சீதோஷ்ண ஏற்றத்தாழ்வின் காரணமாக, உடலில் ஏற்படும் கோளாறினால் எவ்வித இன்ப உணர்வின்றி, சிறுநீர் கழிக்கும்போது, அதற்கு முன் அல்லது பின் வெள்ளை நிறமாக வெளிப்படும் திரவப்பொருள்.
இம்மூன்றில் ''மதீ, வதீ'' ஆகியவற்றைத் தண்ணீரால் கழுவியாக வேண்டும். ஆனால் ''மனீ'' ஒன்றை மட்டும் ஈரமாயிருந்தால் கழுவ வேண்டும், காய்ந்துவிட்டால், நன்கு விரல்களால் தேய்த்து சுரண்டுவதன் மூலம் சுத்தமாகி விடும்.
அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருக்கும் ''மனீ'' யை (இந்திரியத்தை ஈரமாயிருப்பின் கழுவிக் கொண்டு, காய்ந்துவிட்டால், விரல்களால் நன்கு தேய்த்து, சுரண்டிக் கொண்டு இருந்தேன். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: தாரகுத்னீ
தோலைப் பதனிடுவதால் அது சுத்தமடைந்து விடுகிறது:
''எத்தோலையும் பதனிட்டு விட்டால் அது சுத்தமாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத்
கிணறுபோன்ற அதிகத் தண்ணீரில் அசுத்தம் விழுந்து விட்டால்?
1. அபூஸயீத்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்களிடத்தில் (மதீனாவிலுள்ள) ''புனாஆ'' என்னும்கிணற்றில் உளூ செய்வது கூடுமா? அதில் மாதவிடாய் துணிகள், நாய்கள், துர்வாடைப் பொருட்கள் முதலியன போடப்படுகின்றனவே என்று கேட்கப்பட்டது. அதற்கவர் ''தண்ணீர் சுத்தமானதாகும், அதை எப்பொருளும் அசுத்தப்படுவதற்கில்லை'' என்றார்கள். நூல்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்
உங்களில் எவரும் தேங்கிய தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் ஏனெனில் பின்னர் அவர் அதில் குளிக்க நேரிடும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா
மேற்காணும் இரு ஹதீஸ்களும், மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்படுவது போல் தோன்றினாலும்' முதலாம் ஹதீஸில் தண்ணீர் சுத்தமானது அதை எப்பொருளும், அசுத்தப்படுத்துவதற்கில்லை என்று கூறியிருப்பதின் காரணத்தால், இரண்டாம் ஹதீஸ் உண்மையில், சிறுநீர் போன்றவை கலந்த தண்ணீரில் குளிப்பது உகந்தல்ல என்ற கருத்தில தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆகவே அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இக்கருத்தையே அன்னை ஆயிஷா(ரழி), உமர்(ரழி) அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) மேலும் அநேக ஸஹாபாக்களும், தாபியீன்களும் சரிகண்டுள்ளனர். (ஸுபுலுஸ்ஸலாம், பிதாயத்துல் முஜ்தஹித்)
சிறுநீர் கழித்த பின்
சிறுநீர் கழித்தபின் கனைக்கவேண்டும் என்பதற்கோ, சிறிது தூரம் நடக்கவேண்டும் என்பதற்கோ, இதுபோன்ற இன்னும் பல சிரமங்களை மேற் கொள்ளவேண்டுமென்பதற்ககோ, மார்க்கத்தில் எந்த ஆதாரமுமில்லை.
இவ்வாறு சிரமப்பட்டு சிறுநீர்க் குழாயில் உள்ள சிறுநீர்த் துளிகளை முழுவதும் வெளிப்படுத்தியேயாக வேண்டுமென்றால் அல்லாஹ்வின் திருத்தூதர் அப்படிச் செய்திருப்பார்கள். நமக்குச் சொல்லித் தந்திருப்பார்கள்.
''சிறுநீர் கழித்தபின் நாம் இயல்பாகவே நடந்து கொள்ள வேண்டும். தண்ணீரால் அந்த இடத்தைக் கழுவலாம். அல்லது 'கல்' போன்ற பொருட்களால் உறிஞ்சச் செய்யலாம்.
''சிறுநீர்த் துளி கழுவிய பின்பு கசிந்திருக்கும்'' என்றெல்லாம் எண்ணுவது 'வஸ்வாஸ்' (வீண் சந்தேகம்) ஆகும்.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''சிறுநீர் கழித்தபின்னர் சில துளிகள் ஆடையில் கசிந்து விட்டதாக தனக்குத் தோன்றுகிறது'' என்று முறையிட்டார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ''உன்னுடைய ஷைத்தான் நாசமாகட்டும்! இது போன்ற எண்ணம் உனக்குத் தோன்றினால், உன் ஆடையில் சிறிது நீரைத் தெளித்துக் கொள்! உன் ஆடையில் ஏதேனும் ஈரம் தென்பட்டால் அதைத் தண்ணீர் என்று எண்ணிக்கொள்! எனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்:பைஹகீ)
'டேலா'களிமண்கட்டி அல்து செங்கல்துண்டு பிடித்து 40 அடி தூரம் நடந்து பின்னர் தான் தண்ணீரால் கழுவ வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களில் எவ்வித ஆதாரமும் இல்லை.
பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?
''உங்களில் எவரும் பெண்களைத் தீண்டினால், தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாவிட்டால் ''தயம்மும்'' செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:43)
இந்தத் திருவசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'லாமஸ்தும்' என்ற பதம் இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. சில இடங்களில் 'தொடுதல்' என்ற பொருளிலும், வேறு சில இடங்களில் ''உடலுறவு கொள்ளுதல்'' என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும் அந்தந்த இடங்களைப் பொறுத்து, பொருத்தமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம், இந்த வசனத்தில் ''பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும்'' என்று முடிவு செய்வதா? அல்லது ''பெண்ணுடன் உடலுறவு கொண்டால் உளூ நீங்கும்'' என்று முடிவு செய்வதா? இது தான் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம்.
இந்த இடத்தில் என்ன பொருள் கொள்வது என்பதை ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் காணும் போது, 'தொடுதல்' என்று பொருளில் கூறப்படவில்லை; 'உடலுறவு கொள்ளுதல்' என்று பொருளிலேயே பயன்படுத்தப்பட வேண்டும். என்பதை உணரலாம்.
(என் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியபோது) இரவில் அவர்களை நான் காணவில்லை. (இருட்டில்) நான் அவர்களை (கைகளால் துளாவித்) தேடினேன். அப்போது பள்ளியில் பாதங்களைக் குத்திட்டு வைத்தவர்களாக (ஸஜ்தாவில்) இருந்தனர். அவர்களின் இரு பாதங்களிலும் என கைகளை வைத்து (அவர்கள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டேன்)..... என்று அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்.நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
பெண்களைத் தொட்டால் உளூ நீங்கிவிடும் என்றிருந்தால், அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியவர்களின் பாதங்களைத் தொட்டதுமே அவர்களின் உளூ முறிந்திருக்கும். உடனே மறுபடியும் உளூ செய்து தொழுதிருப்பார்கள். அன்னை ஆயிஷாவுக்கும் இந்தச் சட்டத்தை விளக்கி இருப்பார்கள். இந்த ஹதீஸ்லிருந்து பெண்களைத் தொட்டால் உளூ நீங்காது என்பது தெளிவு.
''நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரண்டு கால்களும் அவர்கள் ஸஜ்தா செய்யும் இடத்தில் அமைந்திருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது என்னைத் (தம் விரல்களால்) தொடுவார்கள். நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். (ஸஜ்தாவிலிருந்து) அவர்கள் எழுந்தவுடன் மறுபடியும் (கால்களை) நீட்டிக் கொள்வேன்'' என்று அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
இந்த ஹதீஸிலும், நபி(ஸல்) அவர்கள் தொழும்போது, அன்னை ஆயிஷா(ரழி) அவர்களைத் தொட்டிருக்கின்றார்கள். பெண்களைத் தொடுவதால் உளூ நீங்காது என்பதே ஹதீஸ்களிலிருந்து தெளிவாகின்றது. அதுபோல் ஆண்களைத் தொடுவதாலும், பெண்களின் உளூ நீங்காது.
சிலர் ''நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சட்டம்'' என்று அந்த ஹதீஸ்களுக்கு காரணம் கற்பிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் என்றால், அதையும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக்கி இருப்பார்கள். எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லித் தருவதற்குத்தான் அவர்களை அல்லாஹ் தூதராக்கினேன்.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பார்க்கும்போது மேற்கூறப்பட்ட (4:43) வசனத்துக்கு ''பெண்களிடம் உறவு கொண்ட பின்னர் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் ''தயம்மும் செய்யுங்கள்!'' என்றே பொருள் கொள்ள வேண்டும். 'பெண்களின் மேனியைத் தொட்டால் என்ற பொருள் கொள்ளமுடியாது.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் இன்னும் பல நபித்தோழர்களும் இந்த இறைவசனத்திற்கு இவ்வாறே பொருள் கூறியுள்ளனர். 'தயம்மும்' பற்றி நாம் எழுதும்போது இந்த ஆயத்திற்கு விரிவான விளக்கம் தருவோம்.
குளிப்பு
நாம் நமது நடைமுறையில் உளூ இல்லாமலிருப்பதற்கு ''சிறுந் தொடக்கு'' என்றும், குளிப்புக்கடமை எனும் நிலைக்கு 'பெருந்தொடக்கு' என்றும் கூறுகிறோம். எனவே சிறுந் தொடக்கிலிருந்து சுத்தமாவதற்காக உளூ வைப் பற்றித் தெரிந்து கொண்டது போல், பெருந் தொடக்கிலிருந்து சுத்தமாவதற்காகக் குளிப்பைப் பற்றியும், அறிந்துகொள்வது அவசியமாகும்.
வல்ல அல்லாஹ் கூறுகிறான்: ''நீங்கள் பெருந் தொடக்குடை யோராயிருப்பின் குளித்து, உடல் முழுவதையும் (நன்கு) சுத்தம் செய்து கொள்ளுங்கள்''. (5:6)
(நபியே!) அவர்கள் உம்மிடம் மாதவிடாய் பற்றி வினவுகிறார்கள். நீர் கூறும், அது (அசுத்தமான) ஓர் உபாதையாகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் சுத்தமாகி விட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக தவறுக்காக வருந்தி (அதைவிட்டும்) மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் அல்லாஹ்விரும்புகிறான்.
குளிப்பைக் கடமையாக்குபவை
உணர்ச்சியின் மேலீட்டால் ''மனீ'' (இந்திரியம்) துள்ளி வெளியாகுதல், இந்திரியம் போன்ற திரவப் பொருள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது.
1) மனீ: உணர்ச்சியின் மேலீட்டால் துள்ளி வெளிவரும் திரவப் பொருள்.
2) மதீ: இலேசான இன்ப உணர்வின் போது, துடிப்பின்றி சாதாரணமாக கசிந்து வெளிப்படும் திரவப்பொருள்.
3) வதீ: சீதோஷ்ண ஏற்றத்தாழ்வின் காரணமாக உடலில் ஏற்படும் கோளாறினால் எவ்வித இன்பமோ, உணர்ச்சியோ இன்றி, சிறுநீர் முன் அல்லது பின் வெள்ளை நிறமாக வெளிவரும் திரவப்பொருள்.
இம்மூன்றின் விதிகள்
1. '' மனீ '' (இந்திரியம்) வெளிப்பட்டால் குளிப்பு அவசியமாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்:
''மதீ, வதீ'' வெளிப்பட்டால் மர்ம ஸ்தலத்தைக் கழுவி விட்டு உளூ செய்துகொள்ள வேண்டும். (குளிக்க வேண்டிய அவசியமில்லை.) நூல்: பைஹகீ
அலி(ரழி) அறிவிக்கிறார்கள்: நான் அடிக்கடி ''மதீ'' வெளிப்படும் நிலையிலிருந்தேன். அதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு (ஒரு அறிவிப்பின்படி பிறரின் மூலம் கேட்டதற்கு) அவர்கள் அதனால் உளூ (தான் நீங்கிவிடும். ஆகவே உளூ) செய்ய வேண்டும். ஆனால் மனீ ஒன்றுக்குத்தான் குளிக்க வேண்டும் என்றார்கள். நூல்:அஹ்மத், இப்னுமாஜா
2. கனவு காணாது தமது ஆடையில் விந்தின் அடையாளத்தை மட்டும் கண்டால்.
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண், தான் கனவு கண்டது நினைவின்றி, ஈரத்தை மட்டும் கண்டால் (என்ன) என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் குளிக்கவேண்டும் என்றார்கள். அவ்வாறே ஒர் ஆண் (கோளாறான) கனவு கண்டு ஈரம் எதையும் காணவில்லை என்றால் (அப்போது என்ன) அவர் அதற்காகக் குளிக்கவேண்டிய அவசியமில்லை என்றார்கள். (உரையாடலின் போது அரும்லிருந்த) உம்முசுலைம்(ரழி) அவர்கள் (மேற்காணும் இரு நிலைகளை) ஒரு பெண் கண்டால் (அவளுக்கென்ன) என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம் அவளுக்கும் அதே சட்டம் தான். பெண்களும், ஆண்களின் அமைப்பிலுள்ள தான் என்றார்கள். அன்னை ஆயிஷா(ரழி) (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா)
3. ''ஜிமாஉ'' (உடலுறவு) செய்தல்:
ஒருவன் ஒரு பெண்ணின் உடலிலுள்ள நான்கு கிளைகளுக்கு மத்தியில் இரண்டு கால், கைகளுக்கு மத்தியில் அமர்ந்து ஜிமாஉ(உடலுறவு) செய்துவிட்டால் (விந்து) நீர் வெளியானலும், வெளியாகவிட்டாலும் குளிப்பது அவசியமாகும். அபூஹுரைரா(ரழி) (அஹ்மத், முஸ்லிம்)
4. மாதாந்தரத்தீட்டு, பேறுகாலத்தீட்டு வெளிப்பட்டு முடிவுறுதல்
பாத்திமா பின்த் அபூஹஃபீஸ்(ரழி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலம் வரை, தொழுகையை தவிர்த்து விட்டு, (அதன் பின்னர்) குளித்து விட்டுத் தொழுவீராக! என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
பெருந்தொடக்குள்ளவர் குளிக்கும் முறை:
அன்னை மைமூனா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் பெருந்தொடக்குள்ளவர்களாகயிருந்து குளித்தால் (முதன் முதலாக) தமது மர்ம ஸ்தலத்தைக் கழுவிய பின் கையைத் தரையில் அல்லது சுவற்றில் தேய்த்துக் கழுவிக்கொண்டு, பின்னர் தாம் தொழுகைக்கு உளூ செய்வது போல் செய்துவிட்டு, தமது தலையிலும் மேனியிலும் தண்ணீரை ஊற்றுவார்கள். (முஸ்லிம்)
அலி(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். ஒருவர் பெருந் தொடக்குள்ளவராயிருந்து, குளிக்கும் போது உடலில் ஓர் உரோமத்தளவேனும் சிறிதளவு தண்ணீர் படாமல் விட்டு விடுவாரேயானால், அல்லாஹ் அவரை இவ்வாறெல்லாம் தண்டிப்பான் என்று (மிகக் கடுமையாக எச்சரித்துக்) கூறினார்கள். அதன் காரணமாகவே நான் எனது தலைமுடியை வெறுக்கலானேன். (அஹ்மத், அபூதாவூத்)
உண்ணல், குடித்தல், தூங்குதல், மீண்டும் உடலுறவு செய்தல் முதலியவற்றிற்காக உளூ செய்து கொள்வது சிறப்பாகும். (சுன்னத்) அம்மாருபின் யாஸிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள்' பெருந் தொடக்குள்ளவர்கள் உண்ணவோ, குடிக்கவோ, தூங்கவோ நாடினால் தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொண்டு அவற்றைச் செய்து கொள்ளவும் என்று அனுமதி வழங்கினார்கள். (அஹ்மத், தீர்மிதீ)
அபூஸயீத்(ரழி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) கூறினார்கள்: உங்களிலொருவர், தனது மனைவியிடம் கொண்ட பின் மீண்டும் ஒரு முறை விரும்பினால் (மத்தியில்) உளூ செய்து கொள்வாராக! (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)
பெருந்தொடக்குள்ளவர், எவ்விதத் தடையுமின்றிச் செய்வதற்கு ஆகுமானவை:
நகம் வெட்டுதல், உரோமங்களைக் களைதல், வீட்டிலிருந்து வெளியே வழக்கமான காரியங்களுக்காகப் புறப்பட்டுச் செல்லல், பள்ளிக்குள் போய் வருதல், முதலியவை உளூவின்றியே ஆகும்.
அதஃ(ரழி) அறிவிக்கிறார்கள்: பெருந்தொடக்குள்ளவர் இரத்தம் எடுத்தல், நகம் வெட்டுதல், தலை உரோமம் (முதலியவை)களை அகற்றல் உளூ செய்து கொள்ளாமல் செய்வது ஆகும். (புகாரி)
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: நான் ஒருமுறை ஜுனுபாளியாக யிருக்கும் பொழுது, நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்து, எனது கையையும் பிடித்துக் கொண்டார்கள். ஓரிடத்தில் அவர்கள் அமரும் வரை அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். பின்னர் அவர்களுக்குத் தெரியாமல் நழுவி விட்டேன்; உடன் வீட்டிற்குச் சென்று குளித்து விட்டு மீண்டும் வந்தேன். அவர்கள் (அப்படியே) அமர்ந்திருந்தார்கள். அபூஹுரைராவே! நீர் எங்கு சென்றிருந்தீர் என்று கேட்க, (குளித்து விட்டு வந்த) விஷயத்தைக் கூறினேன். அதற்கவர்கள் (ஆச்சரியமாக) சுப்ஹானல்லாஹ்! நிச்சயமாக முஃமின் அசுத்தமாவதில்லையே என்றார்கள். (புகாரி)
அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம், பள்ளிக்குள் சென்று அங்குள்ள தொழுகைப் பாய் ஒன்றை எடுத்து வரும்படி கூற, அதற்கு நான் ஹைளு(தீட்டு)ள்ளவள் என்றேன், அதற்கவர்கள் உமது (தீட்டு)ஹைளு, உமது கையில் இல்லையே என்றார்கள். (முஸ்லிம்)
தீட்டு(ஹைளு)ள்ளவர்களை ஜிமாஉ (உடலுறவு) செய்வது ஹராம் (பெரும்பாவம்)
குர்ஆனிலும், ஸஹீஹான ஹதீஸ்களிலும் மாதவிடாய் காலங்களில் ''ஜிமாஉ'' செய்வது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உணர்ச்சியின் மேலீட்டால் செய்ய வேண்டாத அத்தவற்றைச் செய்து விட்டால், அத்தவறுக்காக வருந்தி தவ்பா(பாவமன்னிப்புச்) செய்வதுடன், மீண்டும் அதைச் செய்வதில்லை என்ற உறுதியான எண்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளவேண்டும். (முடியுமானால்) அரைதீனார் (பொற்காசு) தர்மம் செய்து விட வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, தாரமீ)
பெண்கள் தமது பின்னலை அவிழ்ந்து விட்டு முழுமையாக முடிகளைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. ஆனால் முடியின் காம்புகளை நனைத்தாக வேண்டும்.
அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம் அஸ்மா பின்த்து யஜீத்(ரழி) அவர்கள் வந்து ஒரு பெண் ஹைளுக்காக குளிக்கும் பொழுது எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கவர்கள் உங்களிலொருவர் குளிக்க ஆயத்தமாகும் பொழுது, தண்ணீரையும், அரைத்த எலந்தை இலையை (ப்போன்ற அரப்பு முதலியவற்றை) யும் வைத்துக் கொண்டு, (முதலில்) அதனால் உடலை நல்லவிதமாகத் தேய்த்துக் சுத்தப்படுத்திய பின், தலையில் தண்ணீரை ஊற்றி, தலை முடியின் காம்புகள் வரைத் தண்ணீர் செல்லும்படி தேய்த்து, பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் குளிக்கவேண்டும். பின்னர் கஸ்தூரி (போன்று) வாசனை தடவிய சிறிய பஞ்சைக் கொண்டு அவள் தம்மைச் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்றார்கள்.
அதற்கு அந்த ஸஹாபிப் பெண், (நபி(ஸல்) அவர்களை நோக்கி அதைக் கொண்டு எப்படி சுத்தம் செய்து கொள்வதென்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் (எதுவும் கூறாமல்) ''சுப்ஹானல்லாஹ்'' அதைக் கொண்டு அவள், தம்மை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று (தாம் கூறிய வார்த்தையையே மீண்டும்) கூறினார்கள். (அந்த அம்மையார் ஒன்றும் புரியாது ஸ்தம்பித்து நிற்பதைக் கண்ட) உடனே, அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் (மறைமுகமாக) அவ்வம்மையாரிடம் இரத்தத்தின் வாடையை அப்பஞ்சை வைத்து மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள்.
மீண்டும் அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் (ஹைளு, நிஃபாஸ் அல்லாத) ஜனுபத் குளிப்பு எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கவர்கள், தண்ணீரை எடுத்து உடல் முழுவதும் நன்கு தேய்த்துச் சுத்தம் செய்துகொண்டு, பின்னர் அவளது தலையில் தண்ணீரை வார்த்து உரோமங்களின் காம்புகளை நனையும்படிச் செய்து, பிறகு அவளது உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் கழுவ வேண்டும் என்றார்கள்.
அப்பொழுது (இவை அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்தமையால்) மதீனத்து அன்ஸாரி பெண்களுக்கு மார்க்கத்தைக் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்கு அவர்களின் வெட்கம் சிறிதும் தடையாகவேயில்லை என்று மிக ஆச்சரியமாகக் கூறினார்கள். அன்னை ஆயிஷா(ரழி) (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)
மாதவிடாய் உள்ளவர் தொழுவதும் நோன்பு பிடிப்பதும் (ஹராம்) விலக்கப்பட்டதாகும்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாய்(ஹைளு)ள்ளவர் தொழுவதும் நோன்பு பிடிப்பதும கூடாதல்லவா? ஆம் கூடாது. அபூஸயீதுல்குத்ரி(ரழி) (புகாரி, முஸ்லிம்)
ஹைளுள்ளவர்கள் களாச் செய்வது நோன்பை மட்டும் தான், தொழுகையை அல்ல
முஆதா(ரழி) அறிவிக்கிறார்கள். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம், ஹைளுள்ளவள் நோன்பை (மட்டும்) களாச் செய்வது, தொழுகையை களாச் செய்யாதிருப்பது பற்றி கேட்க, அதற்கவர்கள் நாங்கள் அவ்வாறிருக்கும் பொழுது நோன்பை (மட்டும்) களாச் செய்யவேண்டுமென்றும், தொழுகையை களாச் செய்யவேண்டாம் என்றும் கட்டளையிடப்பட்டிருந்தோம் என்றார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)
மேலும் அவர்கள் தவாஃபு செய்வது ஹராம்:
நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு, நீர் ஹைளாயிருக்கும் பொழுது ஹாஜி செய்யும் காரியங்களைச் செய்து கொள்வீராக! ஆனால் நீர் சுத்தமாகும் வரை கஃபாவைத் தவாஃபு (வலம் வருதல்) மட்டும் செய்ய வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)
தயம்மும்
''தயம்மும்'' எனும் பதத்திற்கு நாடுதல் என்பது பொருள். சன்மார்க்கத்தின் படி ஒருவர் தமக்கு தண்ணீர் கிடைக்காத நிலையிலும், அல்லது அதை உபயோகிக்க முடியாத நிலையிலும், பெருந்தொடக்கு, சிறு தொடக்கு இவற்றை விட்டும் சுத்தமாவதற்காக, இருகைகளையும் மண்ணில் அடித்து அவற்றால் முகத்தையும், இரு கைகளையும் தடவிக் கொள்வதற்காக அதற்குரிய மண்ணை நாடுதல் என்பது பொருளாகும்.
தயம்மும் பற்றி திருகுர்ஆன்:
நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் சுத்தமாகவுள்ள மண்ணை (அதன் மீது கைகளை அடித்துத் தொட்டவர்களாக) உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். (5:6)
தயம்மும் பற்றி ஹதீஸ்:
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கும் எனது உம்மத்திற்கும் பூமி அனைத்தையும் பள்ளியாகவும், (தொழுகை முதலிய காரியங்களுக்கு) சுத்தம் செய்து கொள்ளும் பொருளாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது உம்மத்தில் (சமூகத்தாரில்) எவ்விடத்தில் தொழுகை நேரம் வந்துவிடினும், அவருக்கு அவ்விடத்திலேயே சுத்தமாக செய்து கொள்ளும் சாதனமும் (தொழுமிடமும்) இருக்கிறது. (அபூ உமாமா(ரழி), அஹ்மத்)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்திலிருக்கும் போது அவர்கள் மக்களுக்குத் தொழ வைத்தார்கள். அங்கொருவர் தொழாது தனிமையில் நிற்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஏன் தொழவில்லையா? என்று கேட்க அதற்கவர் நான் ஜுனுபாளி (பெருந் தொடக்குள்ளவர்) ஆக இருக்கிறேன், எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (உமக்குத் தண்ணீர் கிடைக்காத போது) மண்ணை உபயோகித்துக் கொள்! (தயம்மும் செய்து கொள்!) அதுவே உமக்குப் போதுமானது என்றார்கள். இம்ரான் பின் ஹுஸைன்(ரழி) (புகாரி, முஸ்லிம்)
தயம்மும் செய்யும் முறை:
ஒரு முறை நான் ஜுனுபாளியாகி விட்டேன், தண்ணீர் கிடைக்காததால் மண்ணில் (கால்நடைகள் புரல்வது போல்) நான் புரண்டெழுந்து தொழுது விட்டேன். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடப்பைக் கூறினேன். அதற்கவர்கள் தமது இரு கைகளையும் ஒரு முறை தரையில் அடித்து அவ்விரண்டையும் ஊதிவிட்டு அவற்றால் முகத்தையும், முன் கைகளையும் (மணிக்கட்டுவரைத்) தடவிக் காட்டி' இவ்வாறு நீர் செய்து கொண்டால் உமக்குப் போதும் என்றார்கள். அம்மாரு பின் யாªர் (ரழி) (புகாரி, முஸ்லிம்)
அம்மாரு பின் யாஸிர் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் தயம்மும் பற்றி வினவினேன். அதற்கவர்கள் முகத்திற்கும் மணிக்கட்டுவரை இரு கைகளுக்கும் (சேர்த்து) ஒரு அடி (தரையில் அடித்துக் கொள்ள வேண்டும்) என்று கட்டளையிட்டார்கள். (அபூதாவூத்)
தயம்மும் மண்ணில் நாம் செய்ய வேண்டுமென்பதில்லை, சுவர் போன்றவற்றிலும் செய்யலாம்.
பீருல் ஜமல் என்னுமிடத்தை நோக்கி நபி(ஸல்) அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை ஒருவர் சந்தித்து, ஸலாம் கூற, அதற்கவர்கள் பதில் கூறாது, ஒரு சுவற்றிற்கு அருகில் சென்று (அதில் தமது கைகளால் அடித்து) தமது முகத்திலும் கைகளிலும் தடவி தயம்மும் செய்து கொண்டு அவரது, ஸலாத்திற்கு பதிலளித்தார்கள். அபூ ஜுஹை முப்னுல் ஹாரிஸு பின் ஸிம்மா(ரழி) (புகாரி, முஸ்லிம்)
கடின குளிர்காரணமாக தயம்மும் செய்து தொழுவது கூடும்
அம்ருபின் ஆஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். ''ஸலாஸிலு''டைய போருக்கு தாம் அனுப்பப்பட்டிருந்த போது, தமக்கு நிகழ்ந்த சம்பவமொன்றை பின்வருமாறு கூறுகிறார்கள்.
கடின குளிரான ஓர் இரவில் நான் குளிக்க வேண்டியவனாம் விட்டேன். அச்சமயம் நான் குளித்தால் நாசமாவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையுணர்ந்து பயந்து கொண்டு (நான் தொழுததுமட்டுமின்றி) எனது சகாக்களுக்கு தொழ வைக்கவும் செய்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். (எனக்கு முன்பே) மற்றவர்கள் எனது நடப்பை முற்கூட்டியே, அவர்களிடத்தில் கூறி விட்டார்கள் (போலும்). ஆகவே நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்ட மாத்திரத்தில் என்ன அம்மாரே... உமது சகாக்களுக்கு நீர் ஜுனுபாளியாகயிருந்து கொண்டே தொழவைத்து விட்டீராமே? என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ், தனது திருவசனத்தில் ''உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள், அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையுள்ளவனாகயிருக்கிறான் (4:29) என்று கூறியிருப்பதை(யும் என்நிலையையும்) ஒத்துப் பார்த்து தயம்மும் செய்து தொழும் முடிவிற்கு வந்து, அவ்வாறு செய்தேன் என்றேன் அதற்கவர்கள் ஏதும் கூறாது புன்னகை பூத்தார்கள். (அஹ்மத், அபூதாவூத், தாரகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக தயம்மும் செய்வதற்கு மண்ணுமட்டுமின்றி சுவர்போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும், தயம்முமிற்காகக் கைகளை இருமுறைத் தரையில் அடிக்க வேண்டும் என்பதன்றி, ஒரு முறை மட்டும் அடித்துக் கொண்டால் போதும் என்பதையும், முழங்கை வரை அவசியம் தடவிக் கொள்ள வேண்டும் என்பதன்றி, மணிக்கட்டு வரை மட்டும் தடவிக் கொண்டால் போதும் என்பதையும் தெளிவாக உணருகிறோம்.
''முழங்கை வரைத் தடவிக் கொள்ள வேண்டும்'' என்ற ஹதீஸின் அறிவிப்பாளரின் வரிசையில் இடம் பெற்றுள்ள ''ஸலமா'' என்பவர் மணிக்கட்டு வரைக்குமா அல்லது முழங்கை வரைக்குமா எனும் விஷயத்தில் தமக்கே சந்தேகமாக இருக்கிறதென்று அவரே குழப்புகிறார் என்பதாக ஹதீஸ்கலா வல்லுநர்களில் ஒருவரான ஷுஃபா என்பவர் அறிவிக்கிறார். மேலும் முழங்கை வரைத் தடவிக் கொள்ள வேண்டும் என்ற அந்த அறிவிப்பையும் இக்குழப்பத்திற்கு இலக்கான அதே ''ஸலமா'' என்பவரைத் தவிர வேறு எந்த அறிவிப்பாளரும் அறவே அறிவிக்கவில்லை என்று ஹதீஸ்கலையின் மேதைகளில் ஒருவரான ''மன்சூர்'' என்பவரும் எடுத்துக் கூறியிருப்பதால், முழங்கை வரை தடவிக் கொள்ள வேண்டும், என்பதற்கான ஆதாரங்கள் நம்பகமானவையாக இல்லை.
இது ஒரு புறமிருக்க, திருகுர்ஆனில் (5:6)ல் உளூ வைப் பற்றி கூறும் பொழுது உங்கள் கைகளை ''முழங்கை வரை கழுவிக் கொள்ளுங்கள்'' என்று கூறப்பட்டிருப்பது போல், தயம்மும் பற்றிக் கூறுகையில் வெறுமனே ''உங்களின் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்'' என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ''முழங்கைகால் வரை தடவிக் கொள்ளுங்கள்'' என்று கூறப்படாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே கைகளை இருமுறை அடித்து, முகத்திலும், கைகளிலும் தடவிக்கொள்ளுதல் சம்பந்தப்பட்ட அறிவிப்பிலும் கீழ்காணும் கோளாறுகள் உள்ளன் இவ்வறிவிப்பின் தொடரில் இடம் பெற்றுள்ள 'இப்னு உயைனு'' என்பவர் இவ்வறிவிப்பைத் தமக்கு அறிவித்தவர் இன்னார் என்று கூறும் பொழுது ஒருமுறை அப்துல்லாஹ் என்பவரின் தந்தையிடமிருந்து அப்துல்லாஹ் கேட்டுத் தமக்குச் சொன்னதாகவும், மறுமுறை இப்னு அப்பாஸ்(ரழி)யிடமிருந்து அப்துல்லாஹ் என்பவர் கேட்டு தமக்குச் சொன்னதாகவும், இன்னுமொருமுறை இப்னு அப்பாஸ்(ரழி)யிடமிருந்து தானே கேட்டதாகவும், கடைசியாக ஒருமுறை தமது தந்தையிடமிருந்தே தான் கேட்டதாகவும் இவ்வாறு நான்கு வகையான தடுமாற்றத்திற்கு மத்தியில் அவர் அறிவித்திருப்பதாலும், இவ்வாறான அவரது அறிவிப்பிற்கு பலமூட்டும் வகையில் மற்றவரும் எவ்வித அறிவிப்பும் செய்யாததாலும், இதை லயீஃப் எனத் தீர்மானிக்கப்படுவதாக இமாம் அபூதாவூத் கூறுகிறார்கள் ஆதாரம்: அபூதாவூத், முதற்பாகம் (ம்தாபுத்தாஹாரத்) (87வது பக்கம்)
எவற்றால் தயம்மும் நீங்கிவிடும்
உளூவிற்குப் பதிலாக தயம்மும் இருப்பதால் எவற்றால் உளூ நீங்கி விடுமோ, அவற்றினால் தயம்மும் நீங்கிவிடும். அவ்வாறே குளிப்பிற்கு பதிலாக, எக்காரணங்களால் தயம்மும் செய்யப்பட்டதோ, அக்காரணங்கள் நீங்கியவுடன் அதற்காகச் செய்யப்பட்டுள்ள தயம்மும் நீங்கி விடும்.
தண்ணீர் கிடைக்காது தயம்மும் செய்து தொழுதவருக்கு, அந்த வக்து முடியுமுன் தண்ணீர் கிடைக்காவிட்டால் மீண்டும் தொழத் தேவையில்லை.
அபூஸயீதுல் குத்ரீ(ரழி) அறிவிக்கிறார்கள்:
இருவர் பிரயாணம் செய்தனர். அவர்களிடம் தண்ணீரில்லாமையாமல் தயம்மும் செய்து தொழுதனர். பின்னர் அதே நேரத்திற்குள் தண்ணீர் கிடைத்து விடவே, ஒருவர் மட்டும் உளூ செய்துவிட்டு மீண்டும் தொழுதார். மற்றவர் தொழவில்லை, பின்னர் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடப்பைக் கூறினார். அதற்கவர்கள் தொழாதவரைப் பார்த்து நீர் நமது சுன்னத்திற்கு (நடைமுறைக்கு) ஒத்தவராகி விட்டீர், உமது தொழுகை உமக்குப் போதும் என்றார்கள். அவ்வாறே உளூசெய்து மீண்டும் தொழுதவரைப் பார்த்து உமக்கு இரட்டிப்புக் கூலி உண்டு என்றார்கள். (நஸயீ, அபூதாவூத்)
உளூ செய்வதற்கு பின் (விரும்பி)இரண்டு ரக்அத்கள் தொழுவது.
நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி)யிடம் பிலாலே நீர் இஸ்லாத்தில் மிகவும் விரும்பி செய்யும் நற்செயலைப்பற்றி எனக்கு தெரிவிப்பீராக! நிச்சயமாக நான் சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உனது பாதத்தின் காலடியின் சத்தத்தை செவியுற்றேன் அதற்கு பிலால்(ரலி) நான் மிகவும் விரும்பி செய்யும் நற்செயல் என்னவெனில் இரவு பகலில் எந்நேரம் நான்தூய்மையாகிறேனோ அப்போது எனக்கு நானே விதித்து கொண்ட தொழுகையை தொழாமல் இருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
மஸ்ஜிதிற்கு காணிக்கை தொழுகை
மஸ்ஜிதிற்குள் நுழையும்போது காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
1. நபி(ஸல்) அவர்கள் ''உங்களில் ஒருவர் மஸ்ஜிதிற்குள் நுழைந்தால் உடன் இரண்டு ரக்அத்கள் அமர்வதற்கு முன் தொழட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
2. நான் மஸ்ஜிதிற்குள் நுழைந்தபோது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். நானும் அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி நீ அமர்வதற்கு மன் இரண்டுரக்அத்கள் தொழ உம்மை எது தடுத்தது? அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே நான் உங்களையும் மக்களையும் அமர்ந்திருப்பவர்களாக கண்டேன் (அதனால் நானும் அமர்ந்துகொண்டேன்) என்று கூறினேன் '' உங்களில் ஒருவர் மஸ்ஜிதிற்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமரவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம். அபூதாவுத், திர்மிதி, நஸயி.
3. நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினால் முதலில் மஸ்ஜிதிற்குள் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அறிவிப்பவர்: கஅபுபின் மாலிக் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்
தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை
1. தொழும் போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் அபகரிப்பாகும் என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இதுவரையில் மிக எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களாக!
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, ''உமக்கு நான் தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை எச்சரிக்கிறேன்'' என்று கூறிவிட்டு தொழும்போது திரும்பிப் பார்ப்பதானது ஒருவகையான நாசக்கேடாகும். அவசியமாயின நபில் தொழுகையில் ஆகட்டும் என்றும் பர்ளான் தொழுகையில் வேண்டாம் என்றும் கூறினார்கள். (அனஸ்(ரழி), திர்மிதீ)
2. தொழும்போது கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது:
நபி(ஸல்) அவர்கள், தொழும்போது இடுப்பில் கைவைத்துக் கொண்டிருப்பதைத் தடை செய்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
3. தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல்
தொழும்போது வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுததுக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)
4. ஸுஜூது செய்யும்போது முழங்கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வது:
''ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பது போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), அபூதாவூத்)
3. தொழும்போது கொட்டாவி விடுவது:
''உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவிவிட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஸஃது(ரழி), அபூதாவூத்)
6. தூக்கம் மிகைத்த நிலையில் தொழுவது:
''உங்களில் ஒருவருக்குத் தூக்கம் (கடுமையாக) வருமாயின் அவர் தூக்கம் போகும் வரைத் தூங்கிக்கொள்வாராக! (ஏனெனில்) அவர் தாம் தூங்கும் நிலையில் தொழ முற்பட்டால் அவர் (தொழும்போது) பாவ மன்னிப்புத் தேட வேண்டிய கட்டத்தில் (ஒன்றிருக்க ஒன்றை ஓதி) தம்மைத் தாமே ஏசிக்கொள்ள நேரிடலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)
''உங்களில் ஒருவர் இரவில் விழித்துத் தொழும்போது, (தூக்கத்தின் மேலீட்டால்) குர்ஆன் ஒதுவதற்கு நாவு தடுமாறி, தாம் ஓதுவது தமக்குப் புரியாத நிலை ஏற்பட்டு விடுமாயின், உடனே அவர் படுத்துக் கொள்வாராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத்)
தொழுகை என்பது சுய உணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அமலாக இருப்பதால், தூக்கம் மிகைத்த நிலையும் சுய உணர்வை அகற்றிவிடுகிறது. இந்த நிலையில் தொழுகையில் ஓத வேண்டியவைகளை முறையாக ஓதித் தொழ இயலாது. தூங்கி விழித்த பிறகு தொழ வேண்டியவற்றைத் தொழுது கொள்ள வேண்டும்.
பர்ளான தொழுகையைத் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்துக கொண்ட கடும் முயற்சி!
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் பிரயாணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்காக ஓர் இடத்தில் இறங்கினால், தமது வலப்புறமாகப் படுத்திருப்பார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகைக்கு சற்று முன்னர் இறங்கினால் தமது தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தவர்களாக, முழங்கையை நட்டி வைத்து (உஷார் நிலையில்) படுத்திருப்பார்கள். (கதாதா(ரழி), முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திலிருந்து திரும்பும் போது, இரவுப் பிரயாணம் செய்து வந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு இலேசாகத் தூக்கம் வந்தது. அப்போது பிலால்(ரழி) அவர்களிடத்தில் இன்றிரவு நீர் விழித்திருந்து, சுப்ஹுத் தொழுகைக்காக எங்களுக்கு பாதுகாப்புப் பணி செய்வீராக! என்றார்கள்.
அப்போது பிலால்(ரழி) அவர்கள் (அதை ஏற்று சுப்ஹு வரையுள்ள இடை நேரத்தில் அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ள ஓரளவு நேரம் வரை (நபிலான தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் (அயர்ந்து) தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கியபோது பிலால்(ரழி) அவர்கள் சுப்ஹு நேரத்தை எதிர்பார்த்தவர்களாக, ஒட்டகத் தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.
தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த பிலால்(ரழி) அவர்களை அவர்களின் கண்கள் மிகைத்துவிட்டன. (அதனால் அவர்களும் அயர்ந்து விட்டார்கள்) நபி(ஸல்) அவர்களும், பிலால்(ரழி) அவர்களும், மற்றும் சஹாபாக்களில் எவரும் தங்கள் மீது வெயில் அடிக்கும் வரை விழிக்கவில்லை. அவர்களில் முதன்மையாக விழித்தவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவார்கள்.
நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டெழுந்து ''பிலாலே!'' என்றார்கள். உடனே பிலால்(ரழி) அவர்கள் (நபி அவர்களே!) ''உங்களை எது அயர்த்தியதோழூ ழூ அதுவே என்னையும் அயர்த்திவிட்டது'' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் நோக்கி (இவ்விடத்தை விட்டு) அகன்று விடுங்கள்! என்றார்கள். அனைவரும் தமது பயணச் சாமான்களோடு அதைவிட்டு அகன்றுவிட்டனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் உளூ செய்துவிட்டு, பிலால் அவர்களிடம் ''இகாமத்'' சொல்லும் படி கூறிவிட்டு, அவர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகையை முடித்தவுடன் ''ஒருவர் தொழுகையை மறந்துவிட்டால் அவர் அதை நினைத்தவுடன் தொழுது கொள்வாராக!'' என்று கூறினார்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் கூறியுள்ளான்! என்னை நினைப்பதற்காகத் தொழுவீராக! (20:14)
(அபூகதாதா(ரழி) அவர்கள் மூலம் நஸயீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ''ஒருவர் தொழுகையை விட்டுத் தூங்கிவிட்டால் அவர் விழித்தவுடன் அதைத் தொழுது கொள்வாராக!'' என்று உள்ளது. (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
7. சித்திரங்களையும், சிந்தனையை ஈர்ப்பவை அனைத்தையும் நோக்கித் தொழுவது:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாட்டையுடைய ஆடை ஒன்றை அணிந்து தொழுதார்கள். அப்போது அவர்கள் அதன் சித்திர வேலைப்பாட்டை ஒருமுறை பார்த்து விட்டார்கள். தாம் தொழுது முடித்தவுடன் இந்த ஆடையை அபூஜஹ்மு என்பவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவரிடம் சித்திர வேலைப்பாடில்லாத ஆடை ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள். ஏனெனில் இது என்னை எனது தொழுகையை விட்டு சற்று கவனத்தைத் திருப்பிவிட்டது என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ)
மேற்காணும் ஹதீஸின் அடிப்படையில் தொழுபவரின் கவனத்தை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டுத திருப்பக் கூடியவையான எந்தப் பொருளுக்கும் எதிரில் நின்று தொழுவது முறையல்ல. அவை தாம் அணிந்திருக்கும் ஆடையாயிருந்தாலும் சரி, அல்லது தாம் விரித்துத் தொழும் முஸல்லா-தொழுகை விரிப்பாயிருந்தாலும் சரி. இதே அடிப்படையில் தான் பள்ளிவாசலின் சுவர்களில் குர்ஆனின் வசனங்களை எழுதுவதும் தவறாகும்.
8. கண்ணை மூடிக்கொண்டு தொழுவதன் நிலை:
''உங்களில் ஒருவர் தொழுகையிலிருக்கும் போது, தமது கண்களை மூடிக்கொள்ள வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ரானீ)
இவ்வறிவிப்பு முறையானதல்ல. ஏனெனில் இதில் பல கோளாறுகள் காணப்படுகின்றன. அதனால் ஹதீஸ் கலை வல்லுனர்கள் இதை ''முன்கர்'' நிராகரிக்கப்பட்டவையோடு சேர்த்துள்ளார்கள். பொதுவாக கண்கள் திறந்த நிலையில் தொழுவதே முறையாகும். காரணம் நபி(ஸல்) அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தொழுதார்கள் என்பதற்கான ஒரு ஹதீஸும் இல்லை.
9. தொழும்போது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்வது:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழும்போது தமது கைவிரல்களைக் கோர்த்து வைத்திருப்பதைப் பார்த்து, உடனே அவர் விரல்களை அதிலிருந்து பிரித்து விட்டார்கள். (கஃபுபின் உஜ்ரா(ரழி), திர்மிதீ, இப்னுமாஜா)
உங்களில் ஒருவர் தாம் பள்ளியில் இருக்கும்போது, தமது விரல்களைக் கோர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்வாறு செய்து கொள்வது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அஹ்மத்)
சாப்பிட அவசியமான நிலையிலும், மலஜலத்திற்கு அவசியம் செல்ல வேண்டிய கட்டத்திலும் தொழுவது.
''உணவு தயாராக இருக்கும்போது தொழுகை இல்லை. இவ்வாறே மலஜலத்திற்குச் செல்ல அவசியமான நேரத்திலும் தொழுகை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)
இப்னு உமர்(ரழி) அவர்களுக்குச் சாப்பாடு வைக்கப்பட்டு விடும், (அதே நேரத்தில்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடும். (இந்நிலையில்) அவர்கள் இமாமுடைய கிராஅத்து ஓதலைக் கேட்டுக் கொண்டிமிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டு முடிக்காமல் தொழுகைக்கு வரமாட்டார்கள். (நாஃபிஉ(ரழி), புகாரீ)
10. பள்ளியில் தொழும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் தொழுவதையே பழக்கமாக்கிக் கொள்வது:
ஒருவர் தொழுகையில் (ஸுஜூது செய்கையில்) காக்கை கொத்துவது போல் கொத்துவதையும், ஜவாய் மிருகங்கள் விரிப்பதுபோல் கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வதையும், ஒட்டகம் வழக்கப்படுத்திக் கொள்வது போல் பள்ளியில் (தொழுவதற்கென்று) ஓர் இடத்தைக் குறிப்பாக்கிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அப்துர் ரஹ்மான்பின் ஷிப்லு(ரழி), அஹ்மத்)
(வழக்கமாக குறிப்பிட்டதோர் இடத்தில் இமாம் தொழுவதை இவ்வறிவிப்பு கட்டுப்படுத்தாது ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் நின்றே தொழ வைத்துள்ளார்கள்.)
11. தொழும்போது எதிரில் எச்சில் துப்புவது:
உங்களில் ஒருவர் தாம் தொழுகையில் இருக்கும்போது, தமதுகிப்லாவின் பக்கம்-எதிரில் எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது இடப்பக்கமோ அல்லது தமது காலடியிலோ (துப்பிக் கொள்வாராக) என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவர்கள் தமது உடலில் போட்டிருக்கும் ஆடையின் ஒரு ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு மறுபகுதியை மறு பகுதியில் வைத்து மடித்துவிட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்வாராக! என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஒருவர் தாம் தொழும்போது தமது இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் தமக்கு எதிரிலோ அல்லது தமது வலப்புறத்திலோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் அவர் தமது இடப்புறத்தில் தமது காலடியில் துப்பிக்கொள்வராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)
ஆகவே தொழும்போது எச்சில் துப்ப வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் தமக்கு எதிரில்கிப்லாவின் பக்கம் துப்பிவிடாது. தமது இடப்பக்கம் தமது காலடியில் துப்பிவிட்டு, அதன்மேல் மண்ணைத் தள்ளி மறைத்துவிட வேண்டும்.
இவை அனைத்தும் மண் தரையிலான பள்ளிகளுக்கே பொருந்தும், ஆனால் தளம் போடப்பட்டும், விரிப்புகள் விரிக்கப்பட்டு இருப்பின் மேற்காணும் ஹதீஸின் இறுதியில் காணப்படுவது போல் தமது ஆடையில் ஒரு ஓரத்திலோ அல்லது கைக்குட்டை போன்றவற்றிலோ உமிழ்ந்து மடித்து வைத்துக்கொள்வதே உசிதமாகும்.
12. வெங்காயம், பூண்டு முதலிய தூவாடைப் பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு அதன் துர்வாடை தம்மில் இருக்கும்போது பள்ளியில் பிரவேசிப்பது:
''இத்தாவரப் பொருட்களான வெங்காயம், பூண்டு ஆகிய துர்வாடையுடையவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)
தமது தோள்-புஜத்தின் மீது ஆடை ஏதுமின்றி ஓர் ஆடை மட்டும் அணிந்து கொண்டு தொழுவதன் நிலை:
''உங்களில் எவரும் தமது தோள்-புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், நஸயீ, தாரமீ)
''ஓர் ஆடையில் (மட்டும்) தொழுபவர் அந்த ஆடையின் (மேல்) இரு ஓரங்களையும் மாற்றி (பிடறியில் கட்டி)க் கொள்வாராக?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
''உங்களில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் எவரும் அந்த ஆடையில் சிறிது பாகமேனும் (தமது) பிடறியில் இல்லாத நிலையில் (அந்த ஆடையின் மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளாத நிலையில்) தொழ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
நான் ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் ஒரே ஆடையாக தம்மைப் போர்த்திக் கொண்டு தொழுது கொண்டிருக்கும்போது அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களின் மேலதிகமான ஆடைகள் (ஒருபுறம்) வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தொழுது திரும்பியபோது அவர்களை நோக்கி அபூ அப்தில்லாஹ் அவர்களே! உங்கள் மேலதிகமான ஆடைகள் (இதோ) வைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் (இந்த நிலையில் ஒரே ஆடையில்) தொழுகிறீர்களே! என்று கேட்டேன், அதற்கு அவர்கள் உம்மைப் போன்ற விவேகமாற்றவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் (அதனால் இவ்வாறு செய்தேன்) என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களை இவ்வாறு தொழ நான் பார்த்துள்ளேன் என்றார்கள். (முஹம்மதுபின் முன்கதிர்(ரஹ்), புகாரீ)
மேற்காணும் ஹதீஸ்களில் ஓர் ஆடையைக் கொண்டு மட்டும் தொழுபவர் அந்த ஆடை விசாலமாயிருந்தால் அந்த ஆடையின்மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொண்டு தொழ வேண்டும. ஆடை போதிய அளவில்லாது சிறியதாகயிருந்தால், (ஆடை சிறியதாயிருந்தால் அதை உமது இடுப்பில் (மட்டும்) கட்டிக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜாபிர்(ரழி), புகாரீ, அபூதாவூத் என்ற அறிவிப்பின்படி) அதை இடுப்பில் (மட்டும்) அணிந்து கொள்ள வேண்டும்.
மேல் அதிகமாக துண்டு போன்றவையிருந்தால் (உங்களில் எவரும் ''தமது தோள்-புஜத்தின்மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், நஸயீ, தாரமீ என்ற அறிவிப்பின்படி) அவற்றால் புஜத்தை மறைத்துக்கொண்டு தொழ வேண்டும்.
தொழும்போது தோள்-புஜங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவது அவை அவ்ரத்து-அவசியம் மறைக்க வேண்டிய பகுதி என்பதனால் அல்ல, தொழும்போது உடலை மறைத்திருப்பது நல்லது என்ற வகையில்தான் ஹதீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்காணும் ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அவர்களின் அறிவிப்பில் அந்த ஸஹாபி ஒன்றுக்கு அதிகமான ஆடைகளை அணிந்து கொண்டு தொழுவது சிறப்பாயிருப்பினும் ஒரே ஆடையில் அவர்கள் தமது உடலைப் போர்த்திக் கொண்டு தொழுதது போல் தொழுவது ஆகும் என்பதை எடுத்து உணர்த்தியுள்ளார்கள் என்பது தெளிவு.
இவ்வாறு இடுப்பில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் ஒருவருக்கு தோள்-புஜங்கள் அவசியம் மறைக்கவேண்டிய பகுதியாக இல்லாமலிருந்தும் கூட அப்பாகத்தை மறைத்துத் தொழுவது நல்லது - சிறப்பு என்று வலியுறுத்திக் கூறிய நபி(ஸல்) அவர்கள், ''தொழுபவர் தமது தோள் - புஜங்களை மறைப்பது போன்று அவரது தலையையும் மறைத்துத் தொழுவது நல்லது'' என்ற வகையில் ஒரு வார்த்தையேனும் கூறியிருக்கலாமல்லவா? இவ்வாறு அதுபற்றி கூறாமலிருப்பது ஒன்றே ஆண்கள் தலை திறந்த நிலையில் தொழுவது தாராளமாக ஆகும், அதில் எவ்வித குறைபாடுமில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
நோயாளி மற்றும் இயலாதவர் ஆகியோரின் தொழுகை விபரம்:
வியாதி அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக நின்று தொழ வேண்டிய பர்ளான தொழுகையை நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு தொழவேண்டும். அதற்கும் இயலாதவர் மல்லாத்துப்படுத்துக் கொண்டு ருகூஃ, ஸுஜூது ஆகியவற்றைக் சமிக்கை செய்து தொழவேண்டும் என்பதாக மார்க்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
எனக்கு மூலவியாதி இருந்தது. அதனால் நபி(ஸல்) அவர்களிடத்தில் (நோயாளியின்) தொழுகைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் ''நின்று தொழுவீராக! (அதற்கு) உமக்கு இயலாவிட்டால் (ஒரு பக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு தொழவும் இயலாவிட்டால்) மல்லாத்து படுத்துக் கொண்டு தொழுவீராக! ''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமேல் நிர்ப்பந்திப்பதில்லை (2:286) என்று கூறினார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது.
மேற்காணும் ஹதீஸில் மல்லாந்து படுத்துக்கொண்டு சமிக்கை செய்து தொழுவதையே இறுதி கட்டமாக கூறப்பட்டிருப்பதால் அதற்கும் இயலாதவர் அதற்கு மேலும் தமது தலையைக் கொண்டும், அதற்கும் இயலாதவர் தமது கண்களைக் கொண்டும் சமிக்கை செய்து தொழவேண்டும். அதற்கும் இயலாவிட்டால் நாவினால் குர்ஆனை ஓதவேண்டும். அதற்கும் இயலாவிட்டால் (கல்பால்) உள்ளத்தால் குர்ஆனை ஓதவேண்டும் என்று கூறுவதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மல்லாத்து படுத்துக் கொண்டு சமிக்கை செய்து தொழுவதை இறுதிக்கட்டமாகக் கூறிவிட்டு, ''அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமேல் நிர்ப்பந்திப்பதில்லை'' (2:286) என்ற இறை வசனத்தையும் தமது சொல்லுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டிய பின்னரும், ஒரு சிலரால் தன்னிச்சையாகக் கூறப்பட்டவையே அன்றி குர்ஆன், ஹதீஸ்களில் வாயிலாக அவற்றுக்கு முறையான ஆதாரம் எதுவுமில்லை.
நின்று தொழுவதற்கும், உட்கார்ந்து தொழுவதற்குமிடையே கூலியில் பாகுபாடு!
நான் ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவோரின் தொழுகை பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் ''ஒருவர் நின்று தொழுதால் அதுவே மேல் உட்கார்ந்து தொழுவோரின் கூலியில் பாதி உண்டு என்றார்கள். (இம்ரானுபின் ஹுசைன்(ரழி), புகாரீ)
தொழுகையின் போது ஆகுமான செய்கைகள்
1. தேள், பாம்பு முதலிய மக்களுக்கு தீங்கு செய்யும் உயிர் ஐந்துகளை கொல்லுதல்!
''நீங்கள் தொழும்போது தேளையும், பாம்பையும் அடித்துக் கொன்றுவிடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
2. தொழும்போது குழந்தையைத் தோளின் மீது சுமந்து கொண்டு தொழுவது, பின்னர் கீழே இறக்கி விடுவது, மீண்டும் தோளின் மீது தூக்கி வைத்துக் கொள்வது ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் (தமது மகள்) ஜைனபு(ரழி) அவர்களின் மகள் உமாமா எனும் குழந்தையைத் தமது தோளின் மீது இருக்கும் நிலையில் மக்களுக்கு தொழ வைப்பதைப் பார்த்துள்ளேன். தாம் ருகூஃ செய்யும் போது அக்குழந்தையைக் கீழே இறக்கி வைத்து விடுவார்கள். ஸஜ்தா செய்துவிட்டு எழும்போது அதைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். (அபூகதாதா(ரழி), முஸ்லிம்)
3. காலில் உள்ள மிதியடிகளைக் கழற்றி வைத்தல்:
நபி(ஸல்) அவர்கள் தாம் மக்களுக்கு தொழ வைக்கும் போது தமது காலில் உள்ள மிதியடிகளில் அசுத்தமிருப்பதாக ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் உணர்த்தப்பட்டு தமது மிதியடியைக் கழற்றி வைத்து விட்டார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
4. தொழும்போது தமக்கு முன்னால் செல்பவரை கை நீட்டி தடுத்தல்:
உங்களில் ஒருவர் (தாம் தொழும் போது) மக்கள் குறுக்கே சென்றுவிடாத வகையில் ''சுத்ரா'' தடுப்புப் பொருளை (த் தனக்கு எதிரில்) வைத்துத் தொழும்போது, எவரும் குறுக்கே சென்றால் அவரைத் தடுத்து விடுவாராக! மீண்டும் அதை மறுத்துவிட்டு வந்தால் அவரைக் கொன்று விடுவாராக! ஏனெனில் அவர் ஷைத்தானாவார். (அபூஸயீத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
5. ஸஜ்தா செய்யுமிடத்திலுள்ள மண்ணை கையால் சரி செய்தல்:
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யுமிடத்திலுள்ள மண்ணை சரி செய்து கொள்பவரின் விஷயமாக ''நீர் இவ்வாறு செய்து கொள்ள வேண்டுமாயின் ஒரு தடவை செய்து கொள்வீராக!'' என்று கூறினார்கள். (முஅய்க்கீப்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
6. எச்சில் துப்புதல்:
ஒருவர் தாம் தொழும்போது தமது ரட்சகனிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் தமக்கு எதிரிலோ அல்லது தமது வலப்புறத்திலோ எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது இடப்புறத்தில் தமது இடது கால் அடியில் துப்பிக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), புகாரீ)
உங்களில் ஒருவர் தமது தொழுகையில் இருக்கும் போது, தமது கிப்லாவுக்கு முன்னால்-எதிரில் எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது இடப்பக்கமோ அல்லது தமது கால் அடியிலோ (துப்பிக் கொள்வாராக!) என்று கூறிவிட்டு தாம் மேலே போட்டிருக்கும் ஆடையின் ஒரு புறத்தை எடுத்து அதில் உமிழ்ந்து ஒரு புறத்தை மறுபுறத்தில் வைத்து மடித்துவிட்டு அல்லது இவ்வாறு செய்து கொள்வாராக என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)
மேற்காணும் அறிவிப்புகளிலுள்ள காரியங்களை ஒருவர் தாம் தொழும்போது செய்வதால் அவரது தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டது. ஏனெனில் இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களே செய்தவையும், பிறருக்கு எடுத்துக் கூறியவையுமாகும்.
தொழுகையை முறித்துவிடும் காரியங்கள்
1. உளூவை முறிப்பவை அனைத்தும் தொழுகையை முறித்துவிடும்.
காரணம், தொழுகைக்கு உளூ கட்டாயமாகும், உளூவில்லாது தொழ முடியாது. நபிவழியில் நம் தொழுகைப் பகுதியில் உளூ வைப் பற்றி கூறுமிடத்து நாம் முன்பே இதை அறிந்துள்ளோம்.
2. தொழுகையின் பர்ளுகளில் அத்தியாவசியமானவற்றில் ஒன்றை மறதியின்றி வேண்டுமென்றே விட்டுவிடுதல்.
நபி(ஸல்) அவர்கள் கிராமவாசி ஒருவர் தொழுகையை முறைப்படி தொழாது, நிலை, ருகூஃ, ஸுஜூது முதலிய தொழுகையில் பர்ளாயுள்ளவற்றை அரைகுறையான வகையில் செய்து தொழுத போது அவரை நோக்கி மீண்டும் நீர் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவில்லை என்று கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
3. மறதியின்றி வேண்டுமென்றே உண்ணல், குடித்தல் ஆகியவை
ஒருவர் மறதியாக உண்ணுவதால் அல்லது குடிப்பதால் தொழுகை முறியாது.
எங்கள் ரட்சகனே! நாங்கள் மறந்திருப்பினும் அல்லது தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடித்து விடாதே.
இவ்வசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ் ''சரி'' என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாகவும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அறிவிப்பில் ''நிச்சயமாக நான் செய்து விட்டேன்'' என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் உள்ளது. (அபூஹுரைரா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)
ஆகவே இவ்வறிவிப்பின் படி நாம் மறதியாகவோ அல்லது தவறுதலாகவோ செய்பவற்றை அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்பன அறிகிறோம்.
4. மறதியின்றி வேண்டுமென்றே பேசுதல்:
நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம் எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும் போது (சாதாரணமாகப்) பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில், ''அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்'' (2:238) எனும் வசனம் அருளப்பட்டது. அப்போது தான் நாங்கள் (தொழுகையில்) வசனம் அருளப்பட்டது. அப்போது தான் நாங்கள் (தொழுகையில்) மௌனமாக இருக்கும்படி ஏவப்பட்டு, பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டோம். (ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் இருக்கும்போது அவர்களுக்கு ''ஸலாம்'' கூறிக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள் பதில் கூறிக் கொண்டு இருந்தார்கள். பின்னர் நஜ்ஜாஷி அரசரிடமிருந்து நாங்கள் திரும்பி வந்தபோது, நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினோம். ஆனால் அவர்கள் அதற்கு பதில் கூறவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள்) தொழும் போது உங்களுக்கு நாங்கள் ''ஸலாம்'' கூறிக்கொண்டிருந்தீர்கள். அதற்கு அவர்கள் பதில் கூறிக்கொண்டு இருந்தார்கள். பின்னர் நஜ்ஜாஷி அரசரிடமிருந்து நாங்கள் திரும்பி வந்தபோது, நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினோம். ஆனால் அவர்கள் அதற்கு பதில் கூறவில்லை அப்போது அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள்) தொழும் போது உங்களுக்கு நாங்கள் ''ஸலாம்'' கூறிக் கொண்டிருந்தோம். தாங்களும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள், (இப்போது என்ன) என்று கேட்டோம். அதற்கு அவர்கள் ''நிச்சயமாக தொழுகையில் (இதல்லாத) வேறு வேலை இருக்கிறது'' என்று கூறினார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
5. ஒருவர் சட்டம் அறியாமல் தாம் தொழும்போது பேசிவிட்டால் தொழுகை முறியாது:
நான் நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார். அதற்கு நான் ''யர்ஹமுக்கல்லாஹ்'' -அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக! என்றேன். உடனே அங்குள்ளோர் அனைவரும் என்னைக் கூர்ந்து பார்த்தார்கள். அப்போது நான் ''ஏன் என்னை நீங்கள் இவ்வாறு முறைத்துப் பார்க்கிறீர்கள்? உங்கள் தாய்மார்கள் உங்களை இழக்கக் கடவது'' என்றேன். அவ்போது அவர்கள் தம் தொடைகளில் தமது கைகளை அடித்தார்கள். அவர்கள் என்னை மௌனமாக இருக்கும்படி சமிக்கை செய்வதாக உணர்ந்து நான் மௌனமாக இருந்து கொண்டேன்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை அவர்கள் அதட்டவோ, அடிக்கவோ, ஏசவோ, பேசவோ செய்யவில்லை. எனது தாயையும், தந்தையையும் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு முன்னரும், பின்னரும் அவர்களை விடச் சிறந்ததொரு அழகான போதகரை நான் கண்டதேயில்லை.
அப்போது அவர்கள் என்னை நோக்கி, நிச்சயமாக இத்தொழுகையானது இதில் மனிதர்களின் பேச்சுக்கும் இடமில்லை தொழுகை என்றால் ''தஸ்பீஹ்'' செய்தல், தக்பீர் கூறல், குர்ஆன் (முஆவியத்துப்னில் ஹக்கம்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் ஹதீஸில் ''ஒருவர் தாம் தொழும்போது பேசக்கூடாது'' என்ற சட்டம் தெரியாத நிலையில் பேசியுள்ளார். அதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அவரை மீண்டும் தொழும்படி கூறாமல், தொழுகையின் ஒழுக்க முறைகளை மட்டும் அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதை அறிகிறோம். இவ்வறிவிப்பின்படி சட்டம் தெரியாதவர் தொழும்போது பேசி விட்டால் அவரது தொழுகை முறியாது என்பதை அறிகிறோம்.
6. ஒருவர் தமது தொழுகையில் நிகழ்ந்த தவறைச் சுட்டிக் காட்டும் வகையில் பேசினாலும் தொழுகை முறியாது.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரையோ அல்லது அஸ்ரையோ தொழ வைத்தபோது இரண்டாவது ரகாஅத்தில் ''ஸலாம்'' கொடுத்து விட்டார்கள். அப்போது ''துல்யதைன்'' என்பவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் தான் மறந்து விட்டீர்களா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''தொழுகை குறைக்கப்படவுமில்லை, நான் மறந்து விடவுமில்லை'' என்றார்கள். அதற்கு மீண்டும் அவர் அல்லாஹ்வின் தூதரே!'' இல்லை நீங்கள் தாம் மறந்து விட்டீர்கள்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''துல்யதைன் கூறுவது உண்மையா?'' என்று கேட்டார்கள். அனைவரும் ''ஆமாம்'' என்றனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் (விடுபட்டுள்ள) இரண்டு ரகாஅத்துகளையும் தொழுதுவிட்டு 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்களும், மற்றுமுள்ளோரும் தமது தொழுகைக்கு மத்தியில் பேசியுள்ளார்கள். எவ்வாறெனில், நீ ரகாஅத்துத் தொழுகையில் 2வது ரகாஅத்தில் மறதியாக நபி(ஸல்) அவர்கள் ''ஸலாம்'' கொடுத்து விட்டார்கள். அப்போது தொழுதவர்களில் ஒருவர் தவறுதல் பற்றி கேள்வி கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதற்கு பதில் கூற இவ்வாறு இரண்டு ரகாஅத்துகள் மட்டும் தொழுதுவிட்டு 3வது, 4வது ரகாஅத்துகள் தொழுவதற்கு முன்பே இடையில் பேசியுள்ளார்கள்.
ஆனால் அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் தமது தொழுகையில் நிகழ்ந்துள்ள தவறைச் சரி செய்து கொள்வது சம்பந்தமாகவே இருந்துள்ளன. ஆகவே அவர்கள் இவ்வாறு தமக்குள் பேசிக்கொண்டதால் தொழுகை முறியவில்லை. அவ்வாறு அவர்கள் பேசியதால் தொழுகை முறிந்திருக்குமாயின், அவர்கள் மீண்டும் 4 ரகாஅத்துகள் முழுமையாக தொழுதிருப்பார்கள். அவ்வாறின்றி விடுபட்டுள்ள மீது 2 ரகாஅத்துகளை மட்டுமே தொழுதுள்ளார்கள். இதிலிருந்து அவர்கள் தொழுகை முறியவில்லை என்பதை அறிகிறோம்.
7. தொழும் போது மிதியடி முதலியவற்றில் அசுத்தம் இருப்பது தெரிந்து, உடன் அதை அகற்றிவிட்டால் தொழுகை முறியாது.
நபி(ஸல்) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, தமது மிதியடியைக் கழற்றி தமது வலப்புறத்தில் வைத்தார்கள். அப்போது மற்றவர்களும் தமது மிதியடிகளைக் கழற்றி வைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையை நினைவு செய்துவிட்டு, அவர்களை நோக்கி, ஏன் நீங்கள் உங்கள் மிதியடிகளைக் கழற்றி விட்டீர்கள்? என்றார்கள். அதற்கு அவர்கள் ''நீங்கள் தங்களின் மிதியடிகளைக் கழற்றி வைப்பதைப் பார்த்து நாங்களும் எங்கள் மிதியடிகளைக் கழற்றி வைப்பதைப் பார்த்து நாங்களும் எங்கள் மிதியடிகளைக் கழற்றி வைத்துவிட்டோம்'' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ஜிப்ரீல்(அலை) வந்து மிதியடி அசுத்தமாயிருப்பதாகக் கூறினார் (அதனால் அவற்றைக் கழற்றி விட்டேன்.) என்றார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
8. தொழுகைக்கு சம்பந்தமில்லாத செய்கைகளைத் தொழும்போது அதிக அளவில் செய்தல்:
இத்தகைய செய்கைகளைக் குறைந்த அளவு தேவைக்கேற்ப செய்து கொண்டால் தொழுகை முறியாது. ''அதிக அளவு, குறைந்த அளவு'' என்பதற்கு அளவுகோல் ''தொழுகையின்போது ஆகுமான செயல்கள்'' என்ற தலைப்பில் மேலே இடம் பெற்றுள்ள நபி(ஸல்) அவர்களின் சொற்செயல்களேயாகும். இவற்றை அளவுகோலாகக் கொண்டே ஒருவருடைய செய்கை அதிக அளவு, குறைந்த அளவு என்பதை நிர்ணயிக்கவேண்டும்.
ஒரு சிலர், தொழும் ஒருவர் தொழுகைக்கு சம்பந்தமில்லாத செய்கைகளை நிலை, ருகூஃ, ஸுஜூது போன்ற கட்டங்களில் ஒரே கட்டத்தில் மும்முறை செய்து விட்டால் தொழுகை முறித்து விடும் என்கின்றனர்.
வேறு சிலரோ, ''அவ்வாறு செய்வதால் தொழுகை முறியாது'' என்று கூறிவிட்டு, ஒருவர் தொழுகைக்கு சம்பந்தமில்லாத செயலைத் தொழுகையில் அவர் செய்து கொண்டிருக்கும்போது அவரை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் பார்வையில் அவர் தொழுகையில் இல்லை என்று கருதும் அளவுக்கு அவரது செய்கை இருக்குமானால், தொழுகை முறிந்துவிடும் என்கின்றனர்.
இவர்களாகக் கூறும் இந்த அளவுகோலின் படி பார்த்தால் நபி(ஸல்) அவர்கள் தமது பேத்தியான உமாமாவைத் தமது தொழுகையில் நிற்கும்போது தமது தோளின் மீது சுமந்து கொண்டும் பிறகு ருகூஃவுக்குச் செல்லும்போது கீழே இறக்கிக் கொண்டும், தூக்கத் தோளின்மீது வைத்துக் கொண்டும் இருந்தார்கள் என்பதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் பார்வையில் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் இல்லை என்று தான் புலப்படும். இதனால் நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறிந்து விட்டது என்ற முடிவுக்கு வர முடியுமா? ஆகவே நாம் மேலே குறிப்பிட்டுள்ளவாறு சரியான அளவுகோல் இது சம்பந்தமாக ஹதீஸின் காணப்படும் சொற் செயல்களேயாகும்.
9. தொழும்போது சப்தமிட்டுச் சிரித்தல்:
நாங்கள் தொழுகையில் பேசுபவர்களாயிருந்து கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தமக்கு அடுத்துள்ள நபரிடம் தொழும்போது (சாதாரணமாகப்) பேசிக் கொண்டிருப்பார். இந்நிலையில் தான் ''அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்'' (2:238) எனும் வசனம் அருளப்பட்டது. அப்போது நாங்கள் (தொழுகையில்) மௌனமாக இருக்கும்படி ஏவப்பட்டு பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டோம். (ஜைதுபின் அர்க்கம்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
ஜாபிர்(ரழி) அவர்களிடம் தொழும்போது சப்தமிட்டுச் சிரிக்கும் ஒருவரின் நிலை பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் தொழுகையை (மட்டும்) மீட்ட வேண்டும். உளூவை மீண்டும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்கள்.
மேற்காணும் வசனத்தில் தொழுபவர் உள்ளச்சப்பாட்டுடன் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதோடு, ஹதீஸில் மௌனமாயிருக்க வேண்டும் என்பதாகவும் கட்டளை இடப்பட்டுள்ளது. ஆகவே சப்தமிட்டுச் சிரிப்பதானது உள்ளச்சத்திற்கும், மௌனமாயிருப்பதற்கும் புறம்பான செயலாயிருப்பதால் தொழுகையை முறித்துவிடுகிறது.
நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருக்கும்போது, பார்வைக் கோளாறினால் பள்ளியில் பிரவேசித்த ஒருவர் பக்கத்திலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களோடு தொழுது கொண்டிருந்தோரில் அநேகர் தாம் தொழும் போதே (அவர் விழுந்ததைப் பார்த்து) சப்தமிட்டுச் சிரித்து விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு சிரித்தவர்களை நோக்கி அவர்கள் உளூவையும் மீட்ட வேண்டும். தொழுகையையும் மீட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (அபூமூஸா(ரழி), தப்ரானீ)
மேற்காணும் இவ்வறிப்பை ஆதாரமாகக் கொண்டு சிலர் தொழும் போது ஒருவர் சப்தமிட்டுச் சிரித்து விட்டால், அவர் தமது தொழுகையை மீட்டுவதுடன், தமது உளூவையும் மீட்டியாக வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பெரும்பாலோர் நம்பகமானவராயிருப்பினும் ஒரு சில நம்பகமற்றவரும் இடம் பெற்றிருப்பதால் அதை ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது. (மஜ்மஉஜ்ஜவாயித், பாகம் 2, பக்கம் 85)
10. சப்தமில்லாது புன்முறுவலாகச் சிரித்தவர் தொழுகையின் நிலை:
''சப்தமின்றி புன்முறுவலாகச் சிரிப்பதானது தொழுகையை முறிக்காது. ஆனால் சப்தமிட்டுச் சிரிப்பதானது தொழுகையை முறிக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), தப்ரானீ)
11. இறைஅச்சத்தின் காரணமாக சப்தமிட்டு அழுவதால் தொழுகை முறியாது:
ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால் அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். (19:58)
நான் நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது அழுகையின் காரணத்தால் அவர்களின் நெஞ்சிலிருந்து செம்புப்பாத்திரத்திலிருந்து வரும் சப்தத்தைப் போன்றதொரு சப்தம் வருவதைக் கண்டேன். (அப்துல்லாஹிஷ் ஷிக்கீர்(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
''திருகையின் சப்தத்தைப் போன்றதொரு சப்தத்தைக் கண்டேன் என்று அபூதாவூதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் காணப்படுகிறது.
நபி(ஸல்) அவர்களுக்கு வியாதி கடுமையாயிருந்த போது, அவர்களிடம் தொழுகை பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ''அபூபக்ரு அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி கூறுங்கள்'' என்றார்கள். அப்போது ''அபூபக்ரு அவர்கள் இளகிய உள்ளம் படைத்தவர்கள். அவர்கள் குர்ஆனை ஓதினால் அழுகை அவர்களை மிகைத்துவிடும்'' என்று ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அவரைத் தொழ வைக்கும்படி கூறுங்கள்'' என்றார்கள். (சுருக்கம்) (இப்னுஉமர்(ரழி), புகாரீ)
ஒருவர் தாம் தொழுது கொண்டிருக்கும்போது, இறை அச்சத்தின் காரணமாகவோ அல்லது தமது நோய், நொம்பலம், துன்பம், துயரம் முதலியவற்றைத் தம்மால் தாங்கிக் கொள்ள இயலாதததன் காரணமாகவோ சப்தமிட்டு அழுதுவிட்டால் தொழுகை முறியாது. அவ்வாறு அவர் சப்தமிட்டு அழும்போது ''ஆஹ்'' என்பன போன்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ள வார்த்தைகள் நாவிலிருந்து வந்துவிட்டாலும் தொழுகை முறியாது.
காரணம், இறை அச்சத்தால் அழுவதானது தொழுகைக்கு உடன்பாடான செயலே, அதனால் தொழுகை முறியாது. இவ்வாறே நோய், நொம்பலம், துன்பம், துயரம் முதலிய காரணங்களால் சப்தமிட்டு அழுவதாலும் தொழுகை முறியாது. ஏனெனில் இவற்றிற்காக ஒருவர் அழுகிறார் என்றால், இவற்றின் கஷ்டங்களை தம்மால் தாங்கிக் கொள்ள முயலாததன் காரணமாகவே அழுகிறார். இந்நிலையில் ''அவரது தொழுகை முறிந்துவிடும்'' என்று கூறுவதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றின் வாயிலாக போதுமான முறையான ஆதாரம் எதுவுமில்லை.
''அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை'' (2:286)
இவ்வசனத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவ்விதமான இக்கட்டான நிலையில் சப்தமிட்டு அழுபவரின் தொழுகை முறிந்து விடாது என்பதை அறிகிறோம்.
ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை
தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)
மேற்காணும் வசனத்திற்கு ''ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுங்கள்'' என்பதாக இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (தப்ஸீர் இப்னு அப்பாஸ்)
ஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு:
''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
அபூஸயீத்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் 25 பங்கு பதவியில் கூடுதலாகும். என்றும், அபூஹுரைரா(ரழி) வாயிலாக புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் 20க்கு மேலதிகமான பங்கு பதவியால் கூடுதலாகும் என்றும் உள்ளது.
மேற்காணும் ஹதீஸ்களில் 27 பங்கு என்றும், 25 பங்கு என்று 20க்கும் அதிகமான பங்கு என்றும் மூன்று விதமாக இடம் பெற்றிருப்பினும் ''25பங்கு'' எனும் அறிவிப்புகளே மிக அதிகமானவையாகும்.
இவ்வாறு 20க்கும் மேலதிகமான பங்கு, 25 பங்கு, 27 பங்கு என்பன போன்று கூடுதல், குறையுதலாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதற்கு காரணம், அல்லாஹ் அவர்களுக்கு ஆரம்பத்தில் குறையுதலாக அறிவித்து, பின்னர் கூடுதலாக அறிவித்திருக்கலாம் என்பதைத் தவிர, இது வகையில் பிறர் தன்னிச்சையாகத் தந்துள்ள எத்தகைய சுயவிளக்கங்களும் தேவையில்லை.
ஜமாஅத்து நடத்துவதற்கு இருவரோ, அதற்கு மேற்பட்டவரோ இருந்தால் போதும்:
ஒருமுறை நானும் எனது சிறிய தந்தையின் மகனும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் நீங்களிருவரும் பிரயாணம் செய்வீர்களானால், பாங்கு சொல்லி, இகாமத்தும் சொல்லுங்கள். உங்களிருவரில் பெரியவர் இமாமத்துச் செய்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ)
பின்பற்றித் தொழுவோர் அதிகமாவதால், ஜமாஅத்தின் பலனும் அதிகரிக்கிறது:
''ஒருவர் தாம் தனித்துத தொழுவதைவிட மற்றொருவருடன் சேர்ந்து (ஜமாஅத்தாகத்) தொழுவது சிறந்ததாகும். ஒருவர் இருவருடன் சேர்ந்து தொழுவதானது தாம் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விட மேலானதாகும். (ஜமாஅத்) அதிகமாகும் அளவுக்கு அல்லாஹ்வுக்குப் பிரியமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உபய்யுபின் கஃபு(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
ஜமாஅத்துடன் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ள சுன்னத்துகளில் ஒன்றாகும்:
நாளை மறுமையில் தாம் முஸ்லிமான நிலையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவோர் இத்தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு அழைப்புக் கொடுக்கப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) கவனத்தோடு முறையாகத் தொழுது கொள்வாராக! நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய நபி அவர்களுக்கு நேர்வழியான பல சுன்னத்து - நடைமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான், (அதன் அடிப்படையில்) நிச்சயமாக பள்ளிக்குச் சென்று ஜமாஅத்தோடு தொழும் தொழுகைகளும் நேர்வழியான சுன்னத்துகளில் உள்ளவையாகும்.
(ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது) இப் பின்தங்கியவர் தமது வீட்டில் தொழுவதுபோல், நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுது கொள்வீர்களானால், உங்கள் நபி அவர்களின் சுன்னத்தை தவற விட்டவராவீர்கள். உங்கள் நபி அவர்களின் சுன்னத்தைத் தவறவிட்டால் நீங்கள் வழி தவறியவர்களாகிவிடுவீர்கள்.
எவரேனும் ஒருவர் தாம் அழகிய முறையில் உளூ செய்து கொண்டு இப்பள்ளிகளில் யாதேனும ஒரு பள்ளியை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடிக்கும் ஒரு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். ஒரு பதவியை உயர்த்தி, ஒரு பாவத்தையும் அழித்து விடுகிறான். (சஹாபாக்களாகிய) எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன்; பம்ரங்கமாக நயவஞ்சகத் தன்மையுடைய முனாபிக்கான நபரைத் தவிர மற்றொருவரும் ஜமாஅத்துத் தொழுகைக்கு பின்னடைய மாட்டார். (இயலாத) ஒருவரை வரிசையில் நிற்க வைப்பதற்காக, இருவருடைய தோள் புஜங்களில் அவருடைய கைகள் போடப்பட்டு அவரைத் தாங்கிய நிலையில் கொண்டுவந்து பள்ளியில் சேர்க்கப்படும் (சூழ்நிலை அப்போது இருந்து வந்தது) என்று இப்னுமஸ்ஊத்(ரழி) அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)
பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதன் சிறப்பு:
''இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாவார். சுப்ஹை ஜமாஅத்துடன் தொழுதவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போலாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான்(ரழி), முஸ்லிம்)
முனாபிக்கானவர்களுக்கு பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தோடு தொழுவதைப் பார்க்கினும் மிகச் சிரமமான தொழுகை வேறில்லை. அவ்விரண்டின் பலனை அவர்கள் அறிந்து கொண்டால் அவற்றைத் தொழுவதற்காக தவழ்ந்தவர்களாக வேணும் (பள்ளிக்கு) வந்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
ஜமாஅத்துடன் தொழுவதற்காக ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தவருக்கு அது தவறிவிடினும் அதன் பலன் கிடைக்கும்.
''ஒருவர் நல்ல முறையில் உளூ செய்துவிட்டு (ஜமாஅத்தோடு) தொழுவதற்காக பள்ளிக்குகம் சென்றார். (அங்கு) மக்கள் தொழுது முடிந்து விட்டதைக் கண்டார். (தாம் முயற்சித்து வந்தமைக்காக) அந்தத் தொழுகைக்கு வந்து (ஜமாஅத்துடன்) தொழுதவர்களுக்குக் கிடைக்கும் கூலியில் இவருக்கும் அல்லாஹ் கொடுப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)
ஜமாஅத்துடன் தொழுவதற்காக ஓடி வருதல் கூடாது:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது, சிலர் வேகமாக நடந்துவரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றார்கள். தாம் தொழ வைத்து முடித்தவுடன் உங்களுக்கு என்ன நேர்ந்தது? (சிலர் வேகமாக நடந்துவரும் சப்தத்தை நான் கேட்டேனே) என்றார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகைக்காக வேகமாக விரைந்து வந்தோம் என்றனர். ''நீங்கள் அவ்வாறு வேகமாக விரைந்து வர வேண்டாம்'' என்று அவர்களை நோக்கி கூறிவிட்டு, நீங்கள் தொழுகைக்காக வரும்போது கம்பீரத்தோடு அமைதியாக வாருங்கள்! தொழுகையில் உங்களுக்குக் கிடைத்த அளவு தொழுது கொள்ளுங்கள், எந்தளவு தவறி விட்டதோ அதை நிறைவு செய்து கொள்ளுங்கள், எந்தளவு தவறி விட்டதோ அதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். (அப்துல்லாஹ்பின் அபீகதாதா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
வெகுதூரத்திலிருந்து பள்ளிக்குவந்து தொழுவோருக்கு அதிக நன்மை உண்டு:
''நிச்சயமாக தொழுகையில் மகத்தான கூலியை உடையவர், தொழுகைக்கு வருவதில் நடையால் அதிக தூரமுடையவரே ஆவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூமூஸா(ரழி), முஸ்லிம்)
ஜமாஅத்தை விட்டவர்மீது ஷைத்தானின் ஆதிக்கம்:
''ஏதேனும் ஓர் ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று நபர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால், அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள். ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுத்தர்தாஃ(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுகுஜைமா இப்னு ஹிப்பான்)
குருடரும் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுவதே மேலாகும்:
கண்பார்வை இல்லாத ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே? சில (சந்தர்ப்பங்களில்) என்னைப் பள்ளிக்கு அழைத்து வருவோர் யாருமில்லாமலாம் விடுகிறேன் என்று கூறி தமக்கு அனுமதி கொடுத்தால் தமது வீட்டிலேயே தாம் தொழுது கொள்வதாகக் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும்போது, அவரை அவர்கள் அழைத்து, தொழுகையின் அழைப்பாகிய பாங்குடைய சப்தத்தை நீர் கேட்கிறீரா? என்றார்கள். அதற்கு அவர் ''ஆமாம்'' என்றார். (அவ்வாறாயின் அந்த அழைப்பிற்கு) நீர் பதில் அளிப்பீராக! என்றார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டவர் மீது நபி(ஸல்) அவர்களின் ஆத்திரம்!
''எனது வாலிப நேயர்களிடம் கூறி, விறகு கட்டுகளை எனக்காக சேகரிக்கும்படி செய்து, பிறகு காரணமின்றி ஜமாஅத்தோடு தொழாது தமது வீட்டில் தொழுது கொண்டிருப்போரிடம் வந்து (அவற்றைப் போட்டு) அவர்கள் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்திவிடலாம் என்று நான் கருதுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா)
மேற்காணும் அறிவிப்பில் பார்வை இல்லாதவர் பாங்கு சப்தத்தைக் கேட்பதனால், அதற்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதானது, பார்வை இழந்தவரும் தம்மால் இயன்றளவு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுவதே மேலாகும் என்பதை உணர்த்துவதற்காகவே அன்றி அவருக்கு எவ்வித கஷ்டம் ஏற்பட்ட போதிலும் அவர் அதைப் பொருட்படுத்தாது, அவசியம் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதாக வேண்டும் என்ற கருத்தில் அல்ல. காரணம், ''அல்லாஹ் எந்த ஓர் என்பதாக அல்குர்ஆன் கூறுகிறது. (2:286)
இவ்வாறே சரியான காரணமின்றி ஜமாஅத்துடன் தொழாது தமது வீடுகளில் தொழுகிறவர்களின் வீடுகளைத் தீ வைத்து கொளுத்தி விடலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நினைத்தார்கள தவிர, அவ்வாறு எந்த வீட்டையும் அவர்கள் கொளுத்தவிடவில்லை. இவ்வாறு கூறுவதன் மூலம் ஜமாஅத்தை விடுபவர் மீது தமக்குள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
பிரயாணம், வியாதி முதலிய தக்க காரணங்களால் ஜமாஅத்தை விடுபவருக்கு அதன் பலன் உண்டு.
''ஓர் அடியார் வியாதியுற்றுவிட்டால் அல்லது பிரயாணம் செய்து விட்டால், அவர் ஆரோக்கியமாக, தமது சொந்த ஊரில் இருக்கும்போது செய்து கொண்டிருந்த அமல்களை அவருக்கு எழுதப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூமூஸா(ரழி), புகாரீ, அபூதாவூத், அஹ்மத்)
சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றித் தொழுவோர் நிலை:
''நீங்கள் (தொழுகைக்காக) ''இகாமத்து'' சொல்வதைச் செவியுற்றால் உங்களிடம் அமைதியும், கம்பீரமும் உள்ளவர்களாக தொழுகைக்கு நடந்து வாருங்கள்! அவசரப்படாதீர்கள் உங்களுக்கு (இமாமுடன் கிடைத்தவற்றைத் தொழுங்கள். விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்து விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
''உங்களில் ஒருவர் தொழுகையை நாடி (வருவாரா)னால், அவர் தொழுகையில் தான் இருந்து கொண்டிருக்கிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
இவ்வறிவிப்புகளின்படி தொழுகைக்காக வரும் நாம் அதற்காக ஓடிவராமல் மிகவும் அடக்கத்துடன் நடந்து வரவேண்டும் என்பதையும், நாம் தொழுகையை நாடி வருவதால் தொழுகையில் ஒருசில பகுதி நமக்குக் கிடைக்காமல் தவறிவிட்டாலும் தொழுகையின் பலன் நமக்கு உண்டு என்பதையும் அறிகிறோம்.
சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றி தொழுதவர் அந்த இமாமுடன் சேர்ந்து தாம் தொழுதுள்ள ரகாஅத்துகளை, முறையே தமது தொழுகையின் முதலாவது, இரண்டாவது ரகாஅத்து என்பதாகக் கொள்ள வேண்டும்.
மேற்காணும் ஹதீஸில் ''விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்து விடுங்கள்'' என்பதாக வாசகம் இடம்பெற்றிருப்பதால், ஒன்றைப் பூர்த்தி செய்வதென்பது, அதற்குமுன் அதுசம்பந்தமாக எதையும் செய்திருந்தால் தான், அத்துடன் மற்றவற்றையும் சேர்த்து அதைப் பூர்த்தி செய்யமுடியும்.
இவ்வாறே ஒருசில ரகாஅத்துகள் விடுபட்ட ஒருவர் இமாமுடன் தாம் சேர்ந்து ரகாஅத்துகளை முறையே தமது ''முதலாம் ரகாஅத்து, இரண்டாம் ரகாஅத்து'' என்று வரிசைப்படுத்திக் கொண்டால் தான் ஹதீஸின்படி விடுபட்ட மற்ற ரகாஅத்துகளையும் தொழுது அவர் தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்வதென்பதற்குப் பொருத்தமாகும்.
ஒருசில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமுடன் சேர்ந்து தொழும் போது தமக்குக் கிடைத்த ரகாஅத்துகள் தமது தொழுகையின் முற்பகுதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வருமாறு ஓர் அறிவிப்பு பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
இமாமுடன் நீர் அடைந்துகொண்டவை உமது தொழுகையின் முற்பகுதியாகும். (அதன் பிற்பகுதியை நீர் பூர்த்தி செய்கையில்) குர்ஆனில் இருந்து உமக்கு விடுபட்டவற்றை நீர் பூர்த்தி செய்துகொள்வீராக! (பைஹகீ)
ஒரு சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றித் தொழ முனைபவர் தொழுகையின் பர்ளுகளில் ஒன்றாகிய ''தக்பீருத்தஹ்ரீம்'' எனும் முதல் தக்பீரைக் கூறியே இமாமுடன் தொழுகையில் பிரவேசிக்கிறார். ஆகவே அவர் தக்பீர் கூறி தொழுகையில் பிரவேசிக்கும் அந்த ரகாஅத்தே முறைப்படி அவருக்கு முதலாம் ரகாஅத்து ஆகிறது.
ஒருவர் இமாமுடைய கடைசி ரகாஅத்தில் அவரைப் பின்பற்றினால் அவருடன் கடைசி இருப்பு இருந்து, அதில் ''தஷஹ்ஹுது - அத்தஹிய்யாத்து'' ஓதி, இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தமக்கு விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்வதற்காக தாம் எழுந்து தொழவேண்டும்.
அப்போது அவர் இமாமுடன் தொழும்போது தொழுகையின் இறுதியில் தாம் இருந்துள்ள கடைசி இருப்பையும், ஓதிய அத்தஹிய்யாத்தையும் கணக்கிடாமல், அவை தாம் இமாமைப் பின்பற்றியமைக்காக, அவர் செய்வது போன்று தாமும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவையே அன்றி, தமது தொழுகைக்கும் அவற்றிற்கும் சம்பந்தமில்லை. தமது தொழுகையின் இறுதியில் மீண்டும் கடைசி இருப்பு இருந்து, அத்தஹிய்யாத்து ஓதி மறுமுறையும் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இருப்பதால், இமாமுக்கு அது கடைசி ரகாஅத்தாம் இருப்பினும், ஒரு சில ரகாஅத்துகள் விடுபட்டவராக அந்த இமாமுடன் தொழுதவருக்கு அது முதல் ரகாஅத்து என்றே கொள்ளவேண்டும்.
சில ரகாஅத்துகள் விடுபட்டவராக ஒருவர், ஒரு இமாமுடைய கடைசி ரகாஅத்தைப் பெற்றுக்கொள்வாரானால் அந்த இமாமுக்கு அது கடைசி ரகாஅத்தாக இருப்பதுபோல், அவரைப் பின்பற்றிதொழுத அந்த நபருக்கும் அது கடைசி ரகாஅத்தாகும் என்று ஒருசிலர் கூறுவது முறை அல்ல.
காரணம் அவ்வாறு அது கடைசி ரகாஅத்து என்று கூறினால் விடுபட்ட ரகாஅத்துகளைப் பூர்த்தி செய்யும்போது, மீண்டும் கடைசி இருப்பினும் இருக்கவேண்டிய நிலையும், ஏன் ஏற்படுகிறது? இவற்றை எல்லாம் இமாமுடன் தாம் தொழும்போது நிறைவேற்றிய பின்னரும், மீண்டும் இவற்றை நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிலையிருப்பதால், இமாமுடன் தமக்குக் கிடைத்துள்ள அந்த ஒரு ரகாஅத்தைத் தமது முதலாம் ரகாஅத்து என்று கொள்வதே முறையாகும்.
ஆகவே சில ரகாஅத்துகள் விடுபட்டவராக, ஒரு இமாமைப் பின்பற்றித் தொழுதவர், இமாம் தமது தொழுகையை நிறைவு செய்தவுடன் தாம் எழுந்து தமக்கு இமாமுடன் தொழும்போது கிடைத்த ரகாஅத்துகளை முறையே ''முதலாம் ரகாஅத்து, இரண்டாம் ரகாஅத்து'' என்பதாக மனதில் கொண்டு, விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்துவிடுங்கள் என்று ஹதீஸில் இடம்பெற்றிருப்பதால், அதற்கேற்ப, சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் ஓதப்படும் சூரா, நடுஇருப்பு போன்ற தமக்கு விடுபட்டவற்றை தாம் எழுந்து தொழும்போது அது அதன் கட்டத்தில் அவற்றைநிறைவேற்றி தொழுகையை பூர்த்தி செய்யவேண்டும்.
ஒருவர் இமாமுடன் சேர்ந்து தொழும்போது தமக்கு ஏற்படும் சிரமத்திற்காக இமாமைவிட்டுப் பிரிந்து தொழுவது ஆகும்.
முஆது(ரழி) அவர்கள் இஷாத்தொழுகையை நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு, பிறகு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு தொழ வைத்துக்கொண்டிருந்தார்கள். (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்தி தொழுதார்கள். அப்போது அவர் அவர்களுடன் தொழுதுவிட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து (தொழவைக்கும்போது) ''சூரத்துல் பகரா'' வை ஓதினார்கள். அதுசமயம் ஒருவர் தொழும் வரிசையை விட்டு பின்னால் நகர்ந்து தனிமையாகத் தொழுதார். அவரை நோக்கி நீர் முனாஃபிக்கு-நயவஞ்சகராம் விட்டீரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''நான் முனாஃபிக்காகவில்லை நான் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களிடம் சென்று (நீண்ட சூராவை ஓதி சிரமம் தந்மைக்காக) புகார் செய்வேன்'' என்று கூறியவராக நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதுபற்றி அவர்களிடம் புகாரி ர் செய்துவிட்டார். அதற்கு அவர்கள் முஆது(ரழி) அவர்களை நோக்கி, முஆதே! நீர் குழப்பம் செய்கிறீரா? முஆதே! நீர்குழப்பம் செய்கிறீரா? என்று கேட்டுவிட்டு சிறிய சில சூராக்களைச் சுட்டிக்காட்டி) இத்தகைய (சிறிய) சூராக்களை ஓதுவீராக என்று கூறினார்கள். (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மது)
மேற்காணும் அறிவிப்பில் ஒருவர் தாம் அதிக நேரம் இமாமுக்குப் பின் நின்று தொழ முடியாமையால் இமாமை விட்டு அவர் பிரிந்து தொழுதுள்ளார். இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்தும், அவ்வாறு அவர் பிரிந்து தொழுததை ஆமோதித்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
ஆகவே இது போன்ற இமாமுடன் சேர்ந்து தொழும்போது ஏற்படும் சிரமத்திற்காக அவரை விட்டுப்பிரிந்து தொழுவது ஆகும் என்பது தெளிவாகிறது.
இமாம் தம்மைப் பின்பற்றித் தொழுவோரின் இடத்தை விட உயரமான இடத்தில் நின்று தொழ வைப்பது முறை அல்ல.
இமாம் ஒரு பொருளின் மீது ஏறி நின்று கொண்டு மக்கள் அவருக்குப் பின்னால் நின்று தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூமஸ்ஊத்(ரழி), தாருகுத்னீ)
ஒருமுறை ஹுதைஃபா(ரழி) அவர்கள் ''மதாயின்'' நகரத்தில் ஓர் உயரமான இடத்தில் நின்று கொண்டு தொழவைத்தார்கள். அப்போது மஸ்ஊத்(ரழி) அவர்கள் அவர்களின் சட்டையைப் பிடித்து பலமாக இழுத்தார்கள். (இந்நிலையில்) அவர்கள் தொழவைத்து முடித்தவுடன் அவர்களை நோக்கி, மக்கள் இவ்வாறு தொழுவதை விட்டு தடை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் அறியவில்லையா? என்று அபூமஸ்ஊத்(ரழி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஹுதைஃபா(ரழி) அவர்கள் ''ஆம் தங்கள் என்னைப் பிடித்து இழுக்கும்போது தான் அது எனது ஞாபகத்திற்கு வந்தது என்றார்கள். (ஹுமாமுப்னுல் ஹாரிஸ்(ரழி), அபூதாவூத், பைஹகீ)
இவ்வறிவிப்பின் படி பின்பற்றித் தொழுவோரை விட உயரமான இடத்தில் இமாம் நின்று தொழ வைப்பது முறை அல்லவென்பது தெளிவாகிறது.
இமாம் நம்மைப் பின்பற்றித் தொழுவோரைப் பார்க்கினும் உயரமான இடத்தில் நிற்பதானது முக்கிய தேவையை அடிப்படையாகக் கொண்டிருப்பின் அவ்வாறு செய்வது ஆகுமானதாகும்.
நபி(ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவி-மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் நிர்மாணித்துள்ள பள்ளியில்) மிம்பர்-பிரசங்க மேடை தயாரித்து வைக்கப்பட்ட முதல் நாள் அதன் மீது தாம் அமர்ந்தவர்களாக (தொழுகைக்கு) தக்பீர் கூறினார்கள். பிறகு அதில் இருந்துகொண்டே ருகூஃவும் ஸஜ்தாவும் செய்தார்கள். பிறகு (சற்று) பின்னால் நகர்ந்து (அதை விட்டு) கீழே இறங்கி மிம்பரின் அடிபாகத்தில் ''ஸஜ்தா'' செய்தார்கள். பின்னர் மீண்டும் (மிம்பரின் மீது தொழுவதற்காக) ஏறிவிட்டார்கள். தாம் செய்து காட்டியதெல்லாம் நீங்கள் தொழுகையை அறிந்து என்னைப் பின்பற்றி நடப்பதற்காகவே தான்'' என்று கூறினார்கள். (ஸஹ்லுபின் ஸஃதிஸ் ஸாயீத்(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்)
இமாமைப் பின்பற்றித்தொழுவோர் இமாமுடைய இடத்தை விட உயரமான இடத்தில் நின்று தொழுவது ஆகுமானதாகும்:
அனஸ்(ரழி) அவர்கள் ''பஸ்ரா''வெனும் நகரத்தில் பள்ளிவாசலில் எதிரில் தலைவாசலையுடைய பள்ளியின் வடபாகத்திலுள்ள ஓர் ஆள் உயரமுள்ள அறையில் தாம் இருந்துகொண்டு, ''ஜும்ஆ'' தொழும் போது, (தமக்குக் கீழேயுள்ள அப்பள்ளியின்) இமாமைப் பின்பற்றி தொழுதார்கள். அப்போது அங்கு இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸஹாபாக்கள் இதற்கு எந்த மறுப்புமின்றி மௌனமாய் இருந்தார்கள். (ஸுனனு ஸயீதுபின் மன்சூர்)
இவ்வறிப்பை ஸயீதுபின் மன்சூர் அவர்கள் தமது ''ஸுனனு ஸயீதுபின் மன்சூர்'' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறே ''அபூஹுரைரா(ரழி) அவர்கள் பள்ளிவாசலின் மாடியில் இருந்து கொண்டு (தமக்குக் கீழே தொழவைக்கும்) இமாமுடைய தொழுகையைத் தொழுதுள்ளார்கள்'' என்பதாக இமாம் பைஹகீ ஸயீதுபின் மன்சூர் ஆகியோர் அறிவித்திருப்பதோடு, இமாம் புகாரி அவர்களும் தமது ''தஃலீகுல் புகாரீ''யில் அறிவித்துள்ளார்கள்.
ஆகவே இமாமைவிட உயரமான இடத்தில் நின்று தொழுவோர் இமாமுடைய நிலைகளை உணர்ந்து கொள்ளும் அமைப்பில் இருந்து தொழுவது அவசியமாகும். இமாமைவிட உயர்ந்த இடத்தில் ஒருவர் இருந்து கொண்டு தொழக்கூடாது என்பதற்கான தடை ஏதும் ஹதீஸின் வாயிலாக இல்லை.
(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக்கிருபை செய்பவனாகும். (அல்குர்ஆன்: 3:31)
''என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள்'' மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி), புகாரி, முஸ்லிம்
தொழும் முறை
தொழுகைக்கு உடல், உடை, இடம் முதலியவை சுத்தமாயிருத்தல் வேண்டும்:
உடல் சுத்தம்:
உடலை, மலம், சிறுநீர், இரத்தம் முதலிய அசுத்தங்களை விட்டு சுத்தப்படுத்திக் கொள்வதோடு சிறுந்தொடக்கு, பெருந்தொடக்கு ஆகியவற்றை விட்டும் முறையே உளூ செய்து, குளித்து சுத்தப்படுத்திக் கொள்வதே உடல் சுத்தமாகும்.
உடை சுத்தம்:
தொழும்போது அணியும் உடைகளும் சுத்தமாயிருப்பது அவசியமாகும்.
(நபியே!) உமது ஆடையைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வீராக! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்குவீராக! (74:4,5)
ஜாபிருபின் ஸமுரா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன் கலந்துறவாடும் போது அணியும் அதே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது ஆகுமா? என்று கேட்க, அதற்கவர்கள் நீர் அவ்வாடையில் அசுத்தம் எதனையும் காணாவிட்டால் ஆகும். ஆனால் ஏதேனும் அசுத்தம் அதில் தென்பட்டால் அதை நீர் கழுவிவிடவேண்டும் என்று அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (அஹ்மத், இப்னுமாஜா)
இடம் சுத்தம்:
ஒரு முறை மஸ்ஜிதுந் நபவீயில் ஒரு கிராமவாசி நின்ற நிலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். ஸஹாபாக்கள் அவரைத் தடுக்க முயன்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி அவரை அப்படியே விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒருவாளி தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றுங்கள். ஏனெனில் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு எளிதாக்குபவர்களாகவே ஏவப்பட்டுள்ளீர்களே அன்றி அவர்களுக்கு சிரமம் அளிப்பவராக ஏவப்படவில்லை என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரீ, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்
அவ்ரத்(மறைக்க வேண்டிய பாகத்) தை மறைத்தல்
ஆதமுடையமக்களே! நீங்கள் தொழக்கூடிய இடத்தில் (ஆடைகளினால்) உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்ளுங்கள் (7:31)
பஹ்ஜுபின் ஹகீம்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களின் அவ்ரத்(மறைக்க வேண்டிய பாகத்)தை எந்த சந்தர்ப்பத்தில் மறைக்க வேண்டும்? எந்த சந்தர்ப்பத்தில் மறைக்காது விட்டுவிடலாம்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நீர் உமது மனைவி, உமது அடிமைப்பெண் ஆகியவர்களிடத்தில் இருக்கும் சந்தர்ப்பம் தவிர மற்ற நேரங்களில் நீர் உமது மறைவுப் பகுதியை மறைத்துக் கொள்வீராக! என்றார்கள். (மீண்டும்) நான் பிற மனிதர்களுடன் கலந்திருக்கும் போது எப்படி? என்றேன். (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
முன்பின் துவாரத்தின் பகுதிகள் நீங்கலாக ஏனைய தொடைப்பகுதிகள் அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) அல்ல என்பதற்கான ஆதாரம்:
அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தொடைப்பகுதி வெளியில் காணப்படும் நிலையில் (வீட்டில்) அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அபூபக்கர்(ரழி) அவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கோரினார்கள். உமர்(ரழி) அவர்கள் அனுமதி கோர, அவர்களுக்கும் அந்நிலையில் இருந்தவாறே அனுமதி வழங்கினார்கள். பின்னர் உஸ்மான்(ரழி) அவர்கள் அனுமதி கோரியவுடன், அவர்கள் தமது ஆடைகளை சரி செய்து கொண்டார்கள்.
அவர்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்ட பிறகு அல்லாஹ்வின் தூதரே! அபூபக்கர், உமர் ஆகியோர் அனுமதி கோரிய போது, தாங்கள் தமது நிலையில் இருந்து கொண்டே அனுமதி வழங்கினீர்கள். ஆனால் உஸ்மான்(ரழி) அவர்கள் அனுமதி கோரியவுடன் மட்டும் தாங்கள் ஆடையை சரிசெய்து கொண்டீர்களே (ஏன்) என்று கேட்டேன். அதற்கவர்கள் நிச்சயமாக மலக்குகளே வெட்கப்படும் ஒரு நபருக்கு நான் வெட்கப்பட வேண்டாமா? என்றார்கள். (அஹ்மத்)
அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் கைலியைத் தமது தொடைப்பகுதியை விட்டும் அகற்றினார்கள். அப்போது நான் அவர்களின் தொடைப்பகுதியின் வெண்மையைக் கண்டேன். (புகாரி, அஹ்மத்)
தொடைப்பகுதி அவ்ரத்து (மறைக்க வேண்டிய பகுதி தான்) என்பதற்கான ஆதாரம்:
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொடைபாகம் அவ்ரத்(மறைக்கப் படவேண்டிய) பாகம் ஆகும். (திர்மிதீ)
முஹம்மதுபின் அப்துல்லாஹ்பின் ஜஹ்ஷ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் மஃமர்(ரழி) என்பவர் சென்று கொண்டிருந்த போது, அவரது இரு தொடைப்பகுதிகள் திறந்துகிடந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உமது (திறந்து கிடக்கும்) தொடைப் பகுதிகளை மறைத்துக் கொள்வீராக! ஏனெனில் இரு தொடைப்பகுதிகளும் மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும் என்றார்கள். (அஹ்மத்)
ஜர்ஹதுல் அஸ்லமீ(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஒருமுறை நபி(ஸல்) அவர்கள், நான் என்மீது கறுப்புக் கம்பளிப் போர்வை ஒன்றைப் போர்த்தியிருக்கும் சமயம் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எனது தொடைபாகம் திறந்த நிலையில் இருந்தது. அதற்கவர்கள் உமது தொடையை மறைத்துக் கொள்ளும் ஏனெனில் நிச்சயமாக தொடையும் மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, முஆத்தா)
எனவே தொடைப்பகுதி மறைக்கப்படவேண்டிய அவ்ரத்தான் பகுதி என்பதற்கான அறிவிப்புகளும், தொடை மறைக்கப்பட வேண்டிய பகுதி அல்ல என்பதற்கான அறிவிப்புகளும் ஸஹீஹான ஹதீஸ்களாகவே காணப்படுகின்றன.
மாற்றுக் கருத்தையுடைய இருவகை ஹதீஸ்களையும் ஒன்று படுத்தும் விதமாக ஹதீஸ்கலா வல்லுநர்களில் சிலர் முன்பின் துவாரப்பகுதியை மட்டும் கடுமையான அவ்ரத் என்றும், அப்பகுதிகள் அன்றி முட்டுக்காலுக்கு மேலுள்ள தொடைப்பகுதிகள் இலேசான அவ்ரத் என்றும் கூறி, இருவகை ஹதீஸ்களுக்கு இடையிலுள்ள கருத்துவேறுபாடை சரிசெய்கிறார்கள்.
இவ்வேறுபாடை நிவர்த்தி செய்யும் வகையில் இமாம் புகாரீ(ரஹ்) அவர்களின் கருத்து மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அதாவது, கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதியை வெண்மையை நான் கண்டேன் என்று அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த அறிவிப்பு சரியான மிகவும் ஸஹீஹான அறிவிப்பாகும். இவ்வாறே ''உமது தொடையை மறைத்துக் கொள்வீராக! நிச்சயமாகத் தொடையும் அவ்ரத் (மறைக்கப்படவேண்டிய) பாகமாகும்'' என்று ஜர்ஹத்(ரழி) அவர்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் கூறிய அவ்வறிவிப்பு மிகவும் பேணுதலானதாகும்.
எனவே மேற்காணும் ஹதீஸ்களைக் கவனிக்கும்போது, முன் பின் துவாரப்பகுதிகள் நீங்குதலாக, மற்றுமுள்ள தொடைப்பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதன்றி, அவற்றை மறைத்துக் கொள்வது நல்லது - மிகவும் பேணுதலானது என்பதை அறிய முடிகிறது.
பெண்களின் ''அவ்ரத்'' (மறைக்க வேண்டிய பாகம்)
பெண்களுக்கு அவர்களின் முகம் தவிர மற்றுமுள்ள அனைத்தையும் மறைத்தாக வேண்டும். நபி(ஸல்) அவர்களிடம் ஒருமுறை அன்னை உம்முஸலமா(ரழி) அவர்கள் பின் வருமாறு கேட்டார்கள் (அல்லாஹ்வின் தூதரே!) ஒரு பெண் தனது இடுப்பில் எவ்வித ஆடையுமின்றி, நீளமான ஒரு சட்டையும், தலைமுக்காடும் ஆகியவற்றை மட்டும் அணிந்தவளாக தொழுவது கூடுமா? என்று கேட்க, அதற்கவர்கள் அவளின் சட்டை, அவளது இருபாதங்கள் வெளியாகாது மறைத்துக் கொள்ளும் வகையில் நிறைவானதாக அமைந்திருக்குமானால் (கூடும்) என்றார்கள்.
அறிவிப்பவர்: உம்முஸலமா(ரழி) அபூதாவூத்
மேற்காணும் ஹதீஸின் வாயிலாக பெண்கள் தாம் தொழும்போது முகத்தைத் தவிர மற்ற பகுதிகள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம். எனவே பெண்கள் கையில் மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பாகத்தையும், காலில் கரண்டை மொளிக்குக்கீழ் உள்ள பாகத்தையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் பலஹீனமானவையாகும்.
ஆண்கள் தொழும்போது அவர்களின் தலையை மறைத்தாக வேண்டுமா?
ஆண்கள் தொழும்போது அவர்களின் தலையை மூடித் தொழுவது நல்லது-சிறந்தது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் ஹதீஸ்களில் காணப்படவில்லை.
இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
சில நேரங்களில் நபி(ஸல்) அவர்கள் தமது தலையிலுள்ள தொப்பியை எடுத்து தாம் தொழுவதற்கு எதிரில் ''சுத்றா'' தடுப்பாக வைத்துக்கொள்வார்கள். (இப்னு அஸாக்கீர்)
கஃபாவை முன்னோக்குதல்:
தொழும்போது கஃபாவை முன்னோக்கித் தொழுவது அவசியமாகும். ''நீர் (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உம்முகத்தைத் திருப்புவீராக! இன்னும் நீங்கள் எங்கிருந்தபோதிலும் தொழுகையின் போது உங்கள் முகங்களை அந்த (கிப்லா) பக்கமே திருப்பிக்கொள்ளுங்கள்.'' (2:144)
பர்ராஉ(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்தோம். பின்னர் கஃபாவின் பக்கம் திரும்பி தொழலானோம். (முஸ்லிம்)
அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
''கிழக்குக்கும், மேற்குக்கும் மத்தியில் ''கிப்லா'' இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, திர்மிதி)
இந்தியர்களுக்கு வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் மேற்கு திசையில் ''கிப்லா'' இருக்கிறது. இவ்வாறு யார் எங்கிருந்த போதிலும் குர்ஆனின் கட்டளையின்படி உலகமக்கள் அனைவரும் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல்ஹராமை நோக்கியே தொழுதாக வேண்டும்.
''கிப்லா'' வை நோக்கித் தொழுவது பர்லாக இருப்பினும், வாகனத்தில் நஃபிலான தொழுகை தொழுபவர் அதில் அமர்ந்து கொண்டே அவ்வாகனம் எத்திசையை நோக்கிச் சென்றபோதிலும் தொழுவது ஆகுமானதாகும்.
ஆமிருபின் ரபீஆ(ரழி) அறிவித்துள்ளார்கள். நான் நபி(ஸல்) அவர்களை அவர்களின் வாகனத்தில் இருந்தபடியே அது செல்லும் திசையை நோக்கி தமது தலையைக் கொண்டு சமிக்ஞை செய்தவர்களாக தொழுததை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் பர்லு தொழுகையில் அவ்வாறு அவர்கள் செய்தவர்களாக இல்லை. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
எதனையும் கண்டு பயந்தோடுபவர், நோயாளி, நிர்பந்த நிலையில் உள்ளவர் ஆகியோர் ''கிப்லா'' வை முன்னோக்கித் தொழ இயலாவிடில் அதை முன்னோக்கியே ஆகவேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. ''ஆனால் நீங்கள் பயந்த நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்துகொண்டோ தொழுதுகொள்ளுங்கள்''. (2:239)
மேற்காணும் திருவசனத்திற்கு இப்னு உமர்(ரழி) அவர்கள் ''கிப்லா'' வை முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ (தொழுது கொள்ளுங்கள்) என்று விரிவுரை செய்துள்ளார்கள்.'' (புகாரீ)
இவ் விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு பயந்தோடுபவர், 'நோயாளி, நிர்பந்த நிலையில் உள்ளவர்கள் தமது பர்லான தொழுகையின்போது ''கிப்லா''வை முன்னோக்குவது கட்டாயமில்லை என்பதை அறிகிறாம்.
பர்லு தொழுகையின் போது நிலைநிற்பது அவசியமாகும்
தொழும்போது நின்று தொழ சக்தி படைத்தவர் நின்றே தொழவேண்டும். அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
இம்ரான் பின் ஹுசைன் (ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் மூல வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தேன். ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் நான் (எவ்வாறு) தொழுது கொள்வது (என்பது பற்றி வினவினேன். அதற்கவர்கள், நீர் நின்று தொழுவீராக! உமக்கு இயலாவிடில் உட்கார்ந்து கொண்டு தொழுவீராக! (அதற்கும்) இயலவில்லை என்றால் படுத்துக் கொண்டு (தொழுவீராக) என்றார்கள்.
பர்லு அல்லாத தொழுகைகளை உட்கார்ந்து கொண்டும் தொழலாம்.
அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
''நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள் என்பதால் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஒரு மனிதர் தாம் உட்கார்ந்து தொழுவதானது அவர் (நின்று தொழும்) தொழுகையின் (நன்மையில்) பாதி அளவு தான்'' என்றார்கள். (புகாரீ, முஸ்லிம்)
இம்ரானு பின் ஹுஸைன்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
''நான் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழும் நபருடைய தொழுகையைப் பற்றி வினவினேன். அதற்கவர்கள், ஒருவர் தாம் நின்று கொண்டு தொழுவதே அவருக்கு மிக்க மேலானது. ஒருவர் உட்கார்ந்து தொழுவாரேயாயின், அவருக்கு நின்று தொழுவோரின் கூலியில் பாதியுண்டு. ஒருவர் படுத்துக்கொண்டு தொழுவதால் அவருக்கு உட்கார்ந்து தொழுவோரின் கூலியில் பாதியுள்ளது'' என்றார்கள். (திர்மிதீ)
நின்று தொழ இயலாது உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுதவரின் பலனே உண்டு.
அபூமூஸா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தாம் வியாதியுற்று விட்டால், அல்லது பிரயாணம் செய்பவராகிவிட்டால் அவர் தமது உடல் ஆரோக்கியமுள்ள நிலையில் அவர் செய்து கொண்டிருந்த அதே அமலை அல்லாஹ் அவருக்கு எழுதிவிடுவான்.
அஸ்ஸலாத் (தொழுகை)
''தக்பீருத் தஹ்ரீம்'' என்னும் தொழுகையின் முதலாம் தக்பீர் :
நாம் தொழ ஆரம்பிக்கும் போது, தொழுகையில் பிரவேசிப்பதற்காக மனதால் நிய்யத்து செய்தவர்களாக ''அல்லாஹு அக்பர்'' என்று கூறும் முதல் தக்பீரையே ''தக்பீருத் தஹ்ரீம்'' என்று கூறப்படுகிறது. இவ்வாறு கூறிய பின்னரே தொழுகையில் பிரவேசிக்க முடியும்.
தொழுகையின் முதல் ''தக்பீருத் தஹ்ரீம்'' என்று பெயர் வருவதற்கு காரணம்!
நாம் தொழுவதற்கு முன்னர் உண்ணல், குடித்தல், பிறருடன் பேசுதல் முதலியவை நமக்கு ஹலாலாயிருந்தன. முதலாம் தக்பீர் கூறியவுடன் அவை அனைத்தும் நமக்கு ஹராமாம் விடுகின்றன. ஆகவே தொழுகையின் முதலாம் தக்பீரானது நமக்கு ஆகுமானவற்றை தொழுது முடிக்கும் வரை ஆகாதவையாக ஆக்கிவிடுவதால், இதற்கு ''தக்பீருத்தஹ்ரீம்'' என்று ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
அலி(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையின் திறவுகோல் பரிசுத்தமாகும். (எப்பொழுதும் ஆகுமானவற்றை) தொழுகையின் போது மட்டும் ஆகாது என்று ஆக்குவது (முதல்) தக்பீராகும். (தொழுகையின் போது ஆகாது என்று கூறப்பட்டவற்றை) ஆகுமாக்குவது (தொழுகையின் இறுதியில் கூறப்படும்) ஸலாம் ஆகும். அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா
தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்:
அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் தாம் தொழ முயன்றால், எழுந்து சரியாக நின்று கொண்டு, தமது இரு கைகளையும் உயர்த்தி பின்னர் ''அல்லாஹு அக்பர்'' என்று கூறுவார்கள். (இப்னுமாஜா)
தக்பீரின் போது கைகளை எதுவரை உயர்த்துவது?
இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழ எழுந்திருந்தால் தமது இரு கைகளையும் தமது இரு புஜங்களுக்கு நேராக உயர்த்தி, பின்னர் தக்பீர் கூறுவார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுவதற்காக தக்பீர் கூறும்போது தமது இரு கைகளையும் தமது இரு காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். (முஸ்லிம்)
ஆகவே நபி(ஸல்) அவர்கள் தாம் தொழும் போது கைகளை தமது இரு புஜங்கள் வரை உயர்த்தியாகதவும், தமது இரு காதுகள் வரை உயர்த்தியதாகவும், ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதால் இவ்விரு முறைகளின் படி எதனையும் எடுத்து அமுல் நடத்தலாம் என்பதை உணர்கிறோம்.
தொழுகையின் போது கைகளை எவ்வாறு கட்டுவது?
வாயிலு பின் ஹுஜ்ரு (ரழி) அறிவித்துள்ளார்கள். நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது அவர்கள் தமது நெஞ்சின் மீது இடக்கைக்கு மேல் வலக்கையை வைத்து கட்டியிருந்தார்கள். (இப்னு குஜைமா)
(இமாம் இப்னு குஜைமா அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்பதாக உறுதிபடுத்தியுள்ளார்கள்) தொப்புளுக்குக் கீழ் கைகளைக் கட்டுவதற்கான ஆதாரம் முற்றிலும் பலஹீனமானதாகும்.
நிச்சயமாக தொப்புளுக்குத் கீழ் இடக்கை மணிக்கட்டுக்குக் கீழுள்ள பாகத்தின் மீது, வலக்கை மணிக்கட்டுக்கு கீழுள்ள பாகத்தை வைப்பது சுன்னத்தில் உள்ளதாகும், என்று அலி(ரழி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், அஹ்மத்)
மேற்காணும் அறிவிப்பு பலஹீனமானது என்பதற்கான காரணம்:
இதன் அறிவிப்பாளர் தொடரில் ''அப்துர் ரஹ்மானு பின்'' இஸ்ஹாக் கூஃபி'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் குறித்து இமாம் புகாரீ அவர்கள் ''ஆட்சேபனைக்குரியவர்'' என்றும், இமாம் அஹ்மத் அவர்கள் ''பலஹீனமானவர்'' என்றும், இமாம் நவவீ அவர்கள் இவர் ஹதீஸ்கலா' வல்லுநர் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயத்தின்படி மிகவும் பலஹீனமானவர் என்றும் கூறப்பட்டிருப்பதால் இந்த ஹதீஸ் ''லயீஃப்'' (பலஹீனமானது) என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதம் கிடையாது.
கைகளை நெஞ்சின் மீது வைத்து கட்டும் முறை:
வாயிலு பின் ஹுஜ்ரு(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரவேசிக்கும் போது தக்பீர் கூறி பின்னர் தமது வலக்கையின் முற்பகுதியை (மணிக்கட்டுக்குக்கீழ் உள்ள பகுதியை) இடக்கையின் முற்பகுதியின் மீதும், (சில சமயம்) தமது மணிக்கட்டின் மீதும், (சில சமயம்) மணிக்கட்டுக்கு மேல் முழங்கை வரையிலுள்ள பகுதியின் மீதும், வைத்துப் பிடித்திருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். (அபூதாவூத், அஹ்மத்)
ஆகவே தக்பீர் கூறி கைகளைக் கட்டும் போது நெஞ்சின் மீது கட்ட வேண்டும் என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போன்றே இடக்கையின் முற்பகுதியின் மீதோ அல்லது அதன் மணிக்கட்டின் மீதோ அல்லது மணிக்கட்டுக்கு மேல் முழங்கை வரையிலுள்ள அப்பகுதியின் மீதோ, (எந்த முறையிலும்) வலக்கையை வைத்து பிடித்துக்கொள்வதற்கு மேற்காணும் ஸஹீஹான ஹதீஸே ஆதாரமாகக் காணப்படுகிறது.
தொப்புளுக்குக்கீழ் கைகளைக் கட்டவேண்டும் என்பதற்கான அறிவிப்பு ஹதீஸ்கலா வல்லுநர்களில் எவரும் சரிகாணாத பலஹீனமான ஹதீஸாகும். நெஞ்சுக்கும் கீழ் கட்டவேண்டும் என்ற அறிவிப்பைப் பார்ம்னும் நெஞ்சின் மீது கட்டவேண்டும் என்ற அறிவிப்பே மிகவும் ஸஹீஹானதாகயிருக்கிறது.
இவ்வாறே இடக்கை மணிக்கட்டுப்பகுதியில் வலக்கையின் கட்டைவிரல் மற்றும் கண்டுவிரல் ஆகியவற்றால் வளைத்து பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதற்கும் ஹதீஸ்களில் யாதொரு ஆதாரமும் கிடையாது.
தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் ஓதும் துஆ:
அபூஹுரைரா(ரலி) அறிவித்துள்ளார்கள் நபி(ஸல்) தக்பீருக்கும், (சூரத்துல் பாத்திஹா) ஓதுதலுக்கும் மத்தியில் சிறிது மவுனமாக இருந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அல்லாஹ்வின் தூதரே! எனது தாய் தந்தை ஆகியோரைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். தாங்கள் தக்பீருக்கும், (பாத்திஹா) ஓதலுக்கும் இடையே மவுனமாக இருக்கும்போது என்ன ஓதுவீர்கள்'' என்று கேட்டேன் அதற்கவர்கள் கூறினார்கள்.
1. அல்லாஹும்ம பாயித் பய்னீ வ பய்ன கதாயாய கமாபாஅத்த பய்னல் மஷ்ரிக்கி வல் மஃரிபி அல்லாஹும்ம நக்கீனி மினல் கதாயா கமா யுனக்க த்தல்புல் அப்யழு மினத் தனஸி அல்லாஹும்ம க்ஸில் கதாயாய பில்மாயி வத்தல்ஜீ வல் பரத்'' என்று நான் ஓதுவேன் என்றார்கள்.
பொருள்: யா அல்லாஹ்! நீ கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே தூரத்தை அமைத்திருப்பது போன்றே எனக்கும் எனது பாவத்திற்குமிடையே தூரத்தை அமைத்திடுவாயாக! யா அல்லாஹ்! வெண்மையான ஆடையை அழுக்கைவிட்டும் சுத்தப்படுத்துவதுபோன்று என்னை எனது பாவத்தை விட்டும் சுத்தப்படுத்துவாயாக! யா அல்லாஹ்! எனது பாவத்தைக் தண்ணீர், பனிக்கட்டி, ஆலங்கட்டி ஆகியவற்றால் கழுவுவாயாக! (புகாரி, முஸ்லிம்)
2. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழ ஆரம்பிக்கும்போது (பின்வருமாறு) கூறுவார்கள்.
''சுப்ஹானகல்லாஹும்ம வபி ஹம்திக்க வதபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கய்ருக்க''
பொருள்: யா அல்லாஹ்! உன்னை புகழ்வது கொண்டு உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன். உனது பெயர் பாக்கியம் அடைந்துவிட்டது. உனது பெருமை ஓங்கி விட்டது, உன்னை அன்றி வேறு நாயன் இல்லை. (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)
மேற்காணும் ஹதீஸ் அனஸ்(ரழி) அவர்களின் மூலம் இமாம் தப்ரானீ அவர்கள் பலமிக்க அறிவிப்பாளர்களின் வாயிலாக தமது ''அவ்ஸத்'' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
3. முஹம்மத் பின் மஸ்லமா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நஃபிலான தொழுகை தொழ எழுந்தால் ''அல்லாஹு அக்பர்'' என்று கூறி, ''வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபத்தரஸ்ஸமாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமாஅன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ, வநுஸுக்கீ வ மஹ்யாய. வம மாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வபிதாலிக்க உமிர்த்து வ அனமினல் முஸ்லிமீன்'' என்று ஓதிவிட்டு பிறகு ''அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு லாஇலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க வபிஹம்திக்க'' என்றும் ஓதுவார்கள். (நஸயீ)
பொருள்: வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் எனது முகத்தை முறையாகத் திருப்புகிறேன். நான் இணைவைப்பவரைச் சார்ந்தவன் அல்லன். நிச்சயமாக எனது தொழுகையும், ஏனைய வணக்கங்களும், எனது வாழ்வும், எனது மரணமும் அம்ல உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும். அவனுக்கு இணை எவருமில்லை. இவ்வாறு (கூற) நான் ஏவப்பட்டுள்ளேன். நீயே அரசன் உன்னையன்றி வேறு நாயன் இல்லை. உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன்.
4. அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
ஒருவர் தாம் மூச்சுத் திணறியவராக வந்து தொழும் வரிசையில் சேர்ந்து நின்று கொண்டு, ''அல்லாஹு அக்பர்'' என்று கூறிவிட்டு அல்ஹமது லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபின் முபாரகன் ஃபீஹி என்று ஓதினார்.
(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! பரகத் வாய்ந்த மிக்க மேலான அதிகமான புகழாக அவனைப் புகழ்கிறேன்.)
நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்தவுடன் ''உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார்?'' என்று கேட்க, அதற்கு அனைவரும் மவுனமாயிருந்தனர், மறுமுறையும் ''உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார்?'' என்று கேட்க, அவ்வாறே மவுனமாயிருந்தனர்.
பின்னர் உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார்? அவர் தவறாக எதுவும் கூறிவிடவில்லை என்று சொல்லி கேட்க அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நான் மூச்சுத் திணறியவனாக வந்து (தொழுகையில்) சேர்ந்தேன். அவ்வாறு நான், தான் கூறினேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் உமது அவ்வார்த்தைகளை உயர்த்திச் செல்வதற்காக 12 மலக்குகள் விரைபவர்களாகக் கண்டேன் என்று கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே தொழுவதற்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் ''வஜ்ஜஹ்த்து''வை மட்டும் அல்லது ''சுப்ஹான கல்லாஹும்ம''வை மட்டும் ஓதிக்கொண்டிராமல் மேற்கண்டவாறு ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படும் வாசகங்களையும் மனனம் செய்து ஓதி வருவதே மிகவும் மேலானதாகும்.
தொழும் போது பார்வை எங்கிருக்க வேண்டும்?
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நபி(ஸல்) அவர்கள் தொழும் போது தமது பார்வையை பால் வானத்தின் உயர்த்தியவர்களாயிருந்தார்கள். அப்போது ''ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (23:1,2) எனும் வசனம் இறங்கியது. அதன் பின்னர் தமது தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டார்கள். (ஹாக்கிம்)
2. அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் தஷ்ஹ்ஹுது (இருப்பில்) அமரும் போது தமது வலக்கையை வலத்தொடை மீதும், இடக்கையை இடது தொடை மீதும் வைத்து, ஆட்காட்டி விரலைக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள் அவர்களின் பார்வை தாம் சமிக்ஞை (செய்யும் அவ்விரலை) விட்டும் அப்பால் செல்லாது. (அவ்விரலையே நோக்கியதாகயிருந்தது) (அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் இரு ஹதீஸ்களும் தொழுபவர் தாம் நிலையிலிருக்கும் போது எதிரில் உள்ளவற்றின் மீது தமது பார்வையைச் செலுத்தாமல் தமது தலையை கீழே தாழ்த்திய நிலையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், இருப்பில் அமரும் போது தமது பார்வை' சமிக்கை செய்யும் அவ்விரலை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
ஆனால் தொழுகிறவர் தாம் நிலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தாம் தொழும் இடத்தைப் பார்த்தவராக இருப்பது விரும்பத்தக்கது என்று அறிவிக்கப்படும் அறிவிப்பு ''முர்ஸல்'' ஆகும். (ஸஹாபியின் பெயர் கூறப்படாது தாபியீன்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று அறிவிப்பதாகும்). இவ்வாறே நிலையின் போது இரு பாதகங்களையும் பார்த்தவண்ணம் இருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் முறையானதல். ஏனெனில் அதன் அறிவிப்பாளர் வரிசையில் ''முஸப்னு அப்துல்லாஹ்'' என்ற நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே அவ்வறிவிப்பு பலஹீனமானதாகும்.
மேலும், இது போன்று ருகூவின் போது இரு கால்களின் கட்டை விரல்களைப் பார்க்கவேண்டும் என்பதற்கும் ஸுஜூதின் போது மூக்கின் நுனிப்பகுதியைப் பார்க்க வேண்டும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.
தொழுகையில் ஒருவர் தமது இமாமைப் பார்ப்பது தவறாகாது:
அபூமஃமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நாங்கள் ஒரு முறை கப்பாபு(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரு, அஸ்ரு, ஆகிய தொழுகைகளில் கிராஅத் ஓதிக் கொண்டிருந்தார்களா?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் 'ஆம்' என்றார்கள். பின்னர், நாங்கள் அதை எவ்வாறு நீங்கள் அறிந்து கொண்டிருந்தீர்கள் என்றோம். அதற்கவர்கள் அவர்களின் தாடியின் அசைவினால் என்று கூறினார்கள். (புகாரீ)
இந்த ஹதீஸின் மூலம் சஹாபாக்கள் தாம் தொழும்போது தமது இமாமாகிய நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தாடி அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம்.
2. பர்ராஉ(ரழி) அறிவித்துள்ளார்கள்:
ஸஹாபா பெருமக்கள் நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுது கொண்டிருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தியபோது அவர்களும் (அவ்வாறே உயர்த்தி) நபி(ஸல்) அவர்கள் ஸுஜூது செய்யும்வரை அவர்களைப் பார்த்தவர்களாக நின்று கொண்டிருப்பார்கள். (புகாரீ)
3. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
ஒருவர் தொழும்பொழுது வானத்தைப் பார்ப்பது முற்றாக கண்டிக்கப்பட வேண்டியதோர் செயலாகும்.
1. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தாம் தொழும்போது, தமது பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்திய வண்ணம் இருந்து கொண்டிருப் போர் அதைத் தவிர்த்துக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்.
நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அஹ்மத்
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் ''அஊதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்'' என்று ஓதுவது சுன்னத்தாகும்.
(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட சைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல்தேடிக்கொள்வீராக!
அஸ்வத்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் உமர்(ரழி) அவர்களை அவர்கள் தொழ ஆரம்பிக்கும்போது ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலாஇலாஹ கைருக்க'' என்று தாம் ஓதிய பின் ''அஊது'' ஓதுபவர்களாகக் கண்டேன். (தாரகுத்னீ)
முதல் ரகாஅத்தில் மட்டும் ''அஊது'' ஓதுவது:
அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்துக்கு எழுந்திருந்தால் சப்தமின்றி மெதுவாக எதுவும் ஓதாது, ''அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்'' என்று கூறி கிராஅத்தைத் துவங்கிவிடுவார்கள். (முஸ்லிம்)
அனைத்து ரகாஅத்துகளிலும் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்று ஓதுவது:
நயீமுல் முஜம்மீர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நான் ஒரு முறை அபூஹுரைரா(ரழி) அவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்'' என்று ஓதிய பின்னர் ''உம்முல் குர்ஆன்'' சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். (நஸயீ)
சப்தமின்றி மெதுவாக ''பிஸ்மில்லாஹ் ஓதுவது''
1. அனஸ்பின் மாலிக்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நான் நபி(ஸல்) அவர்களுடனும், அபூபக்கர் (ரழி), உமர்(ரழி) உஸ்மான்(ரழி) ஆகியவருடனும் தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்'' என்று ஓத நான் கேட்டதில்லை. (முஸ்லிம், அஹ்மத்)
2. மற்றொரு அறிவிப்பில், நான் நபி(ஸல்) அவர்களின் பின்புறமாக, அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியவர்களின் பின்புறமாகவும் நின்று தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும் ''பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்'' என்று சப்தமிட்டு ஓதிக் கொண்டிருக்க வில்லை.
அனஸ்(ரழி), நஸயீ, அஹ்மத், இப்னுஹிப்பான், தாரகுத்னீ, தப்ரானீ
மற்றொரு அறிவிப்பில் நான், நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) உஸ்மான்(ரழி) ஆகியவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழுதிருக்கிறேன்; அவர்கள் (அனைவரும்) 'அல்ஹம்துலில்லாஹி ரப்பீல் ஆலமீன்'' என்றே (தமது தொழுகையைத்) துவங்கிக் கொண்டிருந்தார்கள். ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்'ம் என்று கிராஅத்தின் ஆரம்பத்திலோ, கடைசியிலோ, ஓத மாட்டார்கள். அனஸ்(ரழி), முஸ்லிம், அஹ்மத்
4. அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் அபூபக்கர் ஸித்தீக்(ரழி), உமருபின் கத்தாபு(ரழி) உஸ்மானு பின் அஃப்பான்(ரழி) ஆகியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதிருக்கிறேன். அவர்கள் அனைவரும் தொழ ஆரம்பித்தால்''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று (சப்தமிட்டு) ஓதாதவர்களாயிருந்தார்கள். (மு அத்தா)
6. அப்துல்லாஹ்பின் முகஃப்பல்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நான் (தொழுகையில்) ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று (சப்தமிட்டு) கூறுவதை எனது தந்தை செவியுற்று, எனது அருமை மகனே! நீ சன்மார்க்கத்தில் புதுமையை - பித்அத்தைப் புகுத்துவதை உனக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களுடனும், அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) உஸ்மான்(ரழி) ஆகியவர்களுடனும் தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும் அதைக் கூறியதாக நான் செவியுறவில்லை. ஆகையால் அதை நீர் (சப்தமிட்டுக்) கூற வேண்டாம். நீர் தொழ ஆரம்பித்தால் ''அல்ஹம்து லில்லாஹி ரப்பீல் ஆலமீன்'' என்பதை மட்டும் (சப்தமிட்டுக்) கூறுவீராக! (திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)
ஹதீஸ் கலா வல்லுநர்களில் உகைலீ(ரஹ்) என்பவர்களும், தாரகுத்னீ(ரஹ்) அவர்களும் ''பிஸ்மில்லாஹ்'' சப்தமிட்டு ஓதுவதற்கான ஹதீஸ்களில் ஒன்று கூட ஸஹீஹானதாக இல்லை என்று கூறியுள்ளார்கள்.
சப்தமிட்டு ''பிஸ்மில்லாஹ்''ஓத வேண்டும் என்பதற்கான அறிவிப்புகளின் நிலை:
1. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுகையை ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்பதைக் கொண்டே துவங்குவார்கள். (திர்மிதீ)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீலுபின் ஹம்மாது என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் அல்லர் என்பதாக இமாம் ''திர்மிதீ'' அவர்களே கூறியுள்ளார்கள்.
2. அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
ஒரு முறை முஆவியா(ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழவைத்தார்கள். அப்போது கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள். ஆனால் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்பதை (சப்தமிட்டு) ஓதவில்லை. அவ்வாறே அவர்கள் தாம் குனியும்போது, நிமிரும்போதும் தக்பீரையும் (சப்தமிட்டுக்) கூறவில்லை. அவர்கள் தொழவைத்து முடித்தவுடன் ''முஹாஜிரீன்''களும், ''அன்ஸார்''களும் அவர்களை அழைத்து ''முஆவியா'' அவர்களே! ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' எங்கே? குனியும்போதும், நிமிரும்போதும் கூறப்படும் தக்பீர் எங்கே? என்று அவர்களைப் பார்த்து கேட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் தாம் (சப்தமிட்டுக்) கூறுவதோடு, தக்பீரையும் (சப்தமிட்டுக்) கூறிக்கொண்டிருந்தார்கள்.
(ஹாக்கிம், முஸ்னத்ஷாபியீ)
மேற்காணும் இவ்வறிப்பை இமாம் ஜைலயீ என்னும் ஹதீஸ் கலா வல்லுநர் இதன் தொடரில் ''அப்துல்லாஹ்பின் உஸ்மானு பின் குஸைம்'' என்ற நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதன் காரணமாக இது லயீஃபான - பலகீனமான அறிவிப்பு என்று கூறியுள்ளார்.
3. இப்னு உமர்(ரழி) அவர்களைப் பற்றி நாஃபிஉ(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இப்னு உமர்(ரழி) அவர்கள் உம்முல்குர்ஆனு (சூரத்துல் பாத்திஹா) ரஹீம்'' என்று தாம் (சப்தமிட்டு) ஓதுவதை (ஒரு போதும்) விடாதவர்களாக இருந்து கொண்டிருந்தார்கள்.
இவ்வறிவிப்பின் தொடரில் இடம்பெற்றுள்ள ''இப்னுஜுரைஹ்'' என்பவர் தமக்கு இவ்விஷயத்தை அறிவித்தவர் யார் என்பது பற்றி அவரது பெயரைத் தெளிவாக எடுத்துக் கூறாது. ''எனக்கு ஒருவர் கூறினார்'' என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். ஆகவே இவ்வறிப்பும் முறையானது அல்ல என்று ஹதீஸ்கலா வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
4. இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்புறமாகவும், இவ்வாறே அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியவர்களுக்குப் பின்புறமாகவும் நின்று தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று சப்தமிட்டு ஓதிக்கொண்டிருந்தார்கள். (தாரகுத்னீ)
இவ்வறிவிப்பின் தொடரில் அபூதாஹிர் அஹ்மது பின் ஈஸா என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் நம்பகமற்றவர் என்று ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்)
5. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் (சூரத்துல் பாத்திஹா மேலும் அத்துடன் ஓதப்படும் மற்ற சூரா ஆகிய) இரு சூராக்களிலும் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று சப்தமிட்டு ஓதியவர்களாகவே இருந்தார்கள். (தாரகுத்னீ)
மேற்காணும் இவ்வறிவிப்பின் வரிசையில் ''உமருபின் ஹஃப்ஸுல் மக்கீ'' என்னும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இதுவும் பலஹீனமான அறிவிப்பாகும்.
ஆகவே, ''பிஸ்மில்லாஹ்''வை சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதற்கான ஹதீஸ்கள் அனைத்தும் பலஹீனமானவையாகவே இருக்கின்றன என்பதை உணர்கிறோம்
சூரத்துல் பாத்திஹா ஓதுவதன் அவசியம்
இமாமும் அவரைப் பின்பற்றி தொழுபவரும், தனித்து தொழுபவரும், தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் ''சூரத்துல் பாத்திஹா'' ஓதுவதன் அவசியம்:
1. உப்பாத்து பின் ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல்கிதாபு சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை கிடையாது. நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (சூரத்துல் பாத்திஹாவை) (மற்றொரு அறிவிப்பில் ஃபாத்திஹத்துல் கீதாபுவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது) ஓதாது தொழுபவரின் தொழுகை குறை பாடுள்ளதாகும். நூல்கள்: புகாரீ, அஹ்மத், முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் எந்த தொழுகையில் எந்த ரகாஅத்துகளில் வேறு சூராவை இணைத்து ஓதினார்கள்? எந்த ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் ஓதினார்கள்?
அபூகதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரு தொழுகையில் முந்தைய இரு ரகாஅத்துகளிலும் உம்முல்ம்தாபு(சூரத்துல் ஃபாத்திஹா)வையும், வேறு இரு சூராக்களையும் ஓதி வந்தார்கள். பிந்தைய இருரகாஅத்துகளிலும் உம்முல்ம்தாபு (சூரத்துல் ஃபாத்திஹா)வை (மட்டும்) ஓதினார்கள் என்பதை அறிகிறோம். ஆனால் பர்லு அல்லாதசுன்னத்து போன்றதொழுகைகளை தொழும்போது இரண்டுக்கு மேற்பட்ட ரகாஅத்துகளிலும் சூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு சூராவை இணைத்து ஓதியுள்ளார்கள்.
அப்துல் அஜீஸ் பின் ஜுரைஹ்(ரஹ்) அறிவித்துள்ளார்கள் : நாங்கள் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் எதை ஓதி வித்ரு தொழுவார்கள் என்று கேட்டோம். அதற்கவர்கள் முதலாம் ரகாஅத்தில் ''ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா'' வையும், இரண்டாம் ரகாஅத்தில் ''குல்யா அய்யுஹல் காஃரூருன்'' என்பதையும், மூன்றாம் ரகாஅத்தில் ''குல்ஹுவல்லாஹு அஹத்'' என்பதையும் ''முஅவ்விததைன்'' (குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப் பின்னாஸ்) ஆகிய சூராக்களையும் ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.
(இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் உபைபின் கஃபுவாயிலாகவும், இமாம் தாரமீ(ரஹ்) அவர்கள் உபைபின் கஃபு வாயிலாகவும், இமாம் தாரமீ(ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் வாயிலாகவும் மேற்காணும் ஹதீஸை மேற்கண்டவாறே அறிவித்துள்ளார்கள். ஆனால் அவ்விருவரும் மூன்றாம் ரகாஅத்தில் ''குல்ஹுவல்லாஹு அஹத்'' ஓதினார் என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். மேலும் அத்துடன் ''குல்அஊது பிரப்பில் பலக்'' குல்அஊது பிரப்பின்னாஸ்'' என்ற சூராக்களையும் ஓதினார்கள் என்று கூறவில்லை.
ஆகவே மேற்காணும் ஹதீஸில் இரண்டிற்கு அதிகமான பர்லுஅல்லாத தொழுகையில் மூன்றாம் ரகாஅத்திலும், சூரத்துல்ஃபாத்திஹாவுடன் வேறு சூராவை இணைத்து ஓதியிருப்பதைக் காணுகிறோம்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் ஃபஜ்ரில் எந்த சூராக்களை ஓதிவந்தார்கள்?
அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தின் ஃபஜ்ரு தொழுகையில் ''அலிஃப் லாம் மீம் தன்ஜீல்'' எனும் சூராவை முதலாம் ரகாஅத்திலும் ''ஹல்அத்தா அலல் இன்ஸான்'' எனும் சூராவை இரண்டாம் ரகாஅத்திலும் ஓதிவந்தார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
ஜும்ஆ தொழுகையில், இருபெருநாள் தொழுகைகளிலும் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த சூராக்கள் யாவை?
நுஃமானுபின் பஷீர்(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், ஜும்ஆவிலும், ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலாவையும், ஹல்அத்தாக்க ஹதீதுல் காஷியா வையும் ஓதி வந்தார்கள். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் சேர்ந்து வந்த போதும் இவ்விரண்டு சூராக்களையே இரு தொழுகைகளிலும் ஓதினார்கள். (முஸ்லிம்)
பஜ்ரு, மஃரிபு தொழுகைகளின் சுன்னத்துகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்கள்:
அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் மஃரிபுக்குப் பின்னுள்ள இரு ரகாஅத்துகளிலும் பஜ்ருக்கு முன்னுள்ள இரு ரகாஅத்துகளிலும் (முதலாம் ரகாஅத்தில் ''குல்யா அய்யுஹல் காஃபிரூன்'' எனும் சூராவையும் (இரண்டாம் ரகாஅத்தில்) ''குல்ஹு வல்லாஹு அஹத்'' எனும் சூராவையும் அவர்கள் ஓதி, நான் செவியுற் றதை என்னால் கணக்கிட இயலாது. (திர்மிதீ)
ஜாபிருபின் ஸமுரா(ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ''வல்லைலி இதாயக்ஷா''வையும், அஸ்ரில் அதைப் போன்றதையும் ஸுப்ஹில் அதைவிட அதிக நீளமுள்ளதையும் ஓதிக் கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)
மஃரிபு, இஷா ஆகியவற்றில் அவர்களின் கிராஅத்:
உம்முல் ஃபழ்லுபின்துல்ஹாரிஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் மஃரிபில் ''வல்முர்ஸலாத் உருஃபன்'' எனும் சூராவை ஓத நான் கேட்டேன். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
பர்ராஉ(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் இஷாவில் ''வத்தீனி வஜ்ஜைத்தூனி'' எனும் சூராவை ஓத நான் கேட்டேன். அவர்களை அழகிய தொணியுடைய எவரையும் நான் கேட்டதில்லை. (புகாரீ, முஸ்லிம்)
முழுமையான சூராவின்றி ஒரு சில ஆயத்துகளை மட்டும் ஓதுதல்:
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி(ஸல்) அவர்கள் பஜ்ருடைய இரு ரகாஅத்துகளில் (சூரத்துல் பகராவின் ஆயத்துகளில்) ''கூலூஆமன்னா பில்லாஹிவமா உன்ஜில இலைனா'' என்பதையும், ஆலஇம்ரானிலுள்ள ''குல்யா அஹ்லல்கிராபிதஆலவ் இலாக லிமத்தின் ஸவாஇன் பைனனா வபைனக்கும்'' என்ற ஆயத்தையும் ஓதினார்கள். நூல்: முஸ்லிம்
முதல் ரகாஅத்தில் ஓதிய சூராவை மீண்டும் இரண்டாம் ரகாஅத்தில் ஓதுவதன் நிலை.
முஆதுபின் அப்தில்லாஹில்ஜுஹ்னீ(ரழி) அவர்கள் தமக்கு ஜுஹைனா குடும்பத்தாரைச் சார்ந்த ஒருவர் பின்வருமாறு அறிவித்ததாகக் கூறியுள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் ''இதாஜுல்ஜிலத்(திர் அர்ளு)'' எனும் சூராவை ஸுப்ஹுடைய இரு ரகாஅத்துகளிலும் ஓத நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது வேண்டும் என்றே செய்தார்களா? என்பதை நான் அறியேன். (அபூதாவூத்)
கீழ்காணும் தொழுகைகளில் கிராஅத்தை சப்தமின்றி மெதுவாக ஓதுவது சுன்னத்தாகும்:
ளுஹ்ரு, அஸ்ரு தொழுகைகள்.
அபூமஃபா(ரழி) அறிவித்துள்ளார்கள். நான் ஒருமுறை கப்பாபு பின் அரத்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரு, அஸ்ரு ஆகிய தொழுகைகளில் கிராஅத் ஓதி வந்தார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ''ஆம்'' என்றார்கள். மீண்டும் நான் அவர்கள் கிராஅத் ஓதியதை நீங்கள் எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள் என்று கேட்டேன். அதை அவர்களின் தாடியின் அசைவின்மூலம் (தெரிந்து கொண்டேன்) என்று அவர்கள் கூறினார்கள்.
அபூகதாதா(ரழி) அவர்களின் மூலம் புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களில் பின்வருமாறு மற்றொரு அறிவிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ''ஒரு சில சமயங்களில் ஒரு சில ஆயத்தை எங்களுக்கும் கேட்கும்படியும் ஓதுவார்கள்''
மஃரிபு தொழுகையின் மூன்றாம் ரகாஅத், இஷாவின் பிந்தைய இரு ரகாஅத்துகள்.
இவ்விரு தொழுகைகளிலும், முந்தைய இரு ரகாஅத்துகளில் மட்டும் தான் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதியுள்ளார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்படுவதால் பிந்தைய மூன்றாம், நான்காம் ரகாஅத்துகளில் சப்தமின்றி மெதுவாக ஓதியுள்ளார்கள் என்பதை அறிகிறோம். மாறாக பிந்தைய மூன்றாம், நான்காம் ரகாஅத்துகளிலும் சப்தமிட்டு ஓதினார்கள் என்பதற்கு எவ்வாதாரமும் ஹதீஸ்களில் கிடையாது.
சூரியகிரகணத் தொழுகை:
ஸமுரத்பின் ஜுன்துபு(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சூரிய கிரகணத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடமிருந்து நாங்கள் (கிராஅத்தில்) சப்தத்தைக் கேட்கவில்லை. (தீர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)
பகலில் தொழப்படும் நபிலான தொழுகைகள்:
இவற்றில் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு தாம் ஓதியதாகவோ, அல்லது பிறர் ஓதுவதை அனுமதித்ததாகவோ ஹதீஸ்களில், ஆதாரம் கிடையாது.
கீழ்க்காணும் தொழுகைகளில் சப்தமிட்டு கிராஅத் ஓதுவது சுன்னத்தாகும்.
ஸுப்ஹுடைய இருரகாஅத்துகளில் சப்தமிட்டு கிராஅத் ஓதுவது சுன்னத்தாகும்.
ஸுப்ஹுடைய இருரகாஅத்துகளிலும், ஜும்ஆ தொழுகையின் இரு ரகாஅத்துகளிலும், மஃரிபு, இஷா ஆகியவற்றின் முந்தைய இரு ரகாஅத்துகளிலும் இரு பெருநாள் தொழுகைகளின் இரு ரகாஅத்துகளிலும் சப்தமிட்டு ஓதவேண்டும்.
மேற்கண்ட தொழுகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த ரகாஅத்துகளில் மட்டும் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு கிராஅத் ஓதியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஸஹாபா பெருமக்களின் வாயிலாக ஹதீஸ் நூற்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
சந்திர கிரஹணத் தொழுகை
அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் சந்திரகிரஹணத் தொழுகையின் போது தமது கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மழை வேண்டித்தொழும் தொழுகை:
அப்துல்லாலஹ் பின்ஜைத்(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி ஒரு தொழுமிடத்திற்கு மக்களுடன் சென்று அங்கு அவர்களுக்கு இரு ரகாஅத்துகள் தொழவைத்தார்கள். அவ்விரு ரகாஅத்துகளிலும் சப்தமிட்டு கிராஅத் ஓதினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (புகாரீ, முஸ்லிம்)
இரவில் தொழப்படும் நபிலான தொழுகைகளில் சப்தத்தைக் கூட்டாது, குறைக்காது நடுநிலையாக ஓதவேண்டும்:
அபூகதாதா (ரழி) அறிவித்துள்ளார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர்(ரழி) அவர்கள் தமது சப்தத்தைத் தாழ்த்திய நிலையில் (ஓதி) தொழுது கொண்டிருந்தார்கள். பின்னர் உமர்(ரழி) அவர்கள் பக்கம் சென்றார்கள். அவர்கள் தமது சப்தத்தை உயர்த்திய நிலையில் (ஓதி) தொழுது கொண்டிருந்தார்கள்.
ஒருமுறை இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் சேர்ந்திருக்கும் போது அபூபக்கரே! நீர் உமது சப்தத்தைத் தாழ்த்திய வண்ணம் தொழுது கொண்டிருக்கும் போது உம் பக்கமாக நான் சென்றேனே (ஏன் அவ்வாறு சப்தமின்றி ஓதினீர்?) என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! நான் யாரிடம் உரையாடுகிறேனோ அவனுக்கு கேட்கும்படி ஓதினேன் என்றார்கள். பின்னர் உமரே! நீர் உமதுதொனியை உயர்த்திய நிலையில் தொழுது கொண்டிருக்கும் போது உம் பக்கமாக நான் வந்தேனே (ஏன் அவ்வாறு தொனியை உயர்த்திய நிலையில் ஓதினீர்) என்றார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் தூக்கத்தின் சடைவை அகற்றிக்கொண்டும், ஷைத்தானை விரட்டிக் கொண்டுமிருந்தேன் என்றார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! உமது தொனியைச் சற்று உயர்த்திக் கொள்வீராக! என்று அவர்களிடமும், உமரே! உமது தொனியைச் சற்று தாழ்த்திக் கொள்வீராக என்று இவர்களிடமும் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி 'ஆமீன்'' என்று அவர் கூறும்போது அவரைப் பின்பற்றித் தொழுவோரும் சப்தமிட்டு ''ஆமீன்'' கூறுவது சுன்னத்தாகும்:
1. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் ''ஆமீன்'' என்று கூறும்போது நீங்களும் ''ஆமீன்'' கூறுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்ததாக அமைந்து விடுகிறதோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, முஅத்தா
2. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் ''கைரில்மக்ழுபி அலைஹிம் வலழ்ழால்லீன்'' என்று தாம் ஓதி முடித்தவுடன் முதல் வரிசையில் இருப்போருக்குக் கேட்கும்படி ஆமீன் கூறுவார்கள். பின்னர் (அங்குள்ளவரின்) ஆமீன் சப்தத்தால் பள்ளி எதிரொலிக்கும். நூல்கள்: இப்னுமாஜ்ஜா, தாரகுத்னீ, பைஹகீ
மேற்காணும் இவ்வறிவிப்பு குறித்து இது ஏற்று அமல் செய்யப்படவேண்டிய ''ஹஸன்'' வகையைச் சார்ந்ததென்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இதன் தொடர் ஸஹீஹானது தான் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இதுவன்றியே மற்றொரு அறிவிப்பாளர் தொடர் இதற்கு உண்டு என்பதாக இமாம் ஹாக்கிம் அவர்களும், ''ஹஸனு ஸஹீஹ்'' என்பதாக இமாம் பைஹகீ அவர்களும் இதற்கு நற்சான்று வழங்கியள்ளார்கள். (நூல்கள்: நைலுல் அவ்த்தார், பாகம்2, பக்கம் 22ல்)
3. வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) ''கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன்'' என்று தாம் ஓதியபின் ''ஆமீன்'' என்று அவர்கள் நீட்டுவதை (மற்றொரு அறிவிப்பில் சப்தத்தை உயர்த்துவதை) நான் கேட்டிருக்கிறேன். நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், தாரகுத்னீ
இவ்வறிவிப்பின் தரம் குறித்து இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாக்கிம் இப்னுஹாஜர்(ரஹ்) ஆகியோர் ''ஸஹீஹ்'' என்பதாக கூறியுள்ளார்கள். மேலும் மேற்காணும் ஹதீஸின் படியே பெரும்பாலான ஸஹாபாக்களும் தாபியீன்களும், இவர்களுக்குப் பின்னுள்ளவர்களும் ''ஆமீன்'' என்று சப்தமிட்டுக் கூறுவதையே சரிகண்டுள்ளார்கள் என்று இமாம் திர்மிதீ அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதீ: பாகம் 2, பக்கம் 49)
4. அதாஉ(ரஹ்) கூறியுள்ளார்கள்: ''ஆமீன்'' என்பது துஆவாகும். இப்னுஜுபைர்(ரழி) அவர்களும், அவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழுதவர்களும் பள்ளி எதிரொலிக்கும் அளவு (சப்தமிட்டு) ஆமீன் கூறினார்கள்.
இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹுல் புகாரீயில் ''இமாம் சப்தமிட்டு ஆமீன் கூறல்'' எனும் தலைப்பின் கீழ் புகாரீ பாகம் 3,ல் இவ்வறிவிப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.
5. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பரஸ்பரம் ஸலாம் சொல்லிக் கொள்வதாலும், (மேலும் நீங்கள் தொழும்போது) ஆமீன் (சப்தமிட்டு) கூறுவதாலும், உங்கள் மீது யூதர்கள் பொறாமை கொள்வது போன்று உங்களில் வேறு எவ்விஷயத்திலும் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொள்வதில்லை. (அஹ்மத், இப்னுமாஜா, தப்ரானீ)
இவ்வறிவிப்பு ஸஹீஹானதே என்று இமாம் இப்னுமாஜ்ஜா, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆகவே, மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களின் வாயிலாகவே இமாமும் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் சப்தமிட்டு ஆமீன் கூறவேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணருகிறோம்.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் நிலை
இமாமைப் பின்பற்றித் தொழுவோர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் நிலை:
1. சூரத்துல் பாஃத்திஹாவை ஒவ்வொரு ரக்அத்துகளிலும் கட்டாயம் ஓதவேண்டும் என்பது முதல் பிரிவினர்
2. சூரத்துல் பாஃத்திஹாவை ஓதவே கூடாது - என்பது இரண்டாவது பிரிவு
3. இமாம் சப்தமாக ஓதும் தொழுகையில் ஓதக்கூடாது. மெதுவாக ஓதும் (லுஹர், அஸர் போன்ற) தொழுகைகளில் ஓதவேண்டும் என்பது மூன்றாம் பிரிவினர்.
1. முதலாம் பிரிவினரின் கூற்று:
இமாமைப் பின்பற்றித் தொழுவோர், அவர் சப்தமாக ஓதினாலும் அல்லது சப்தமின்றி மெதுவாக ஓதினாலும், அவருடன் தாம் தொழும் ஒவ்வொரு ரகாஅத்திலும் அவசியம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியாக வேண்டும் என்பதாகும்.
இவர்களின் ஆதாரங்கள்:
1. உபாதத்துப்னிஸ்ஸாமீத்(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல்கிதாபு (சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை என்பதே இல்லை.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மீதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
1-2 அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (மற்றொரு அறிவிப்பில் ஃபாத்திஹத்துல்கிதாபுவை) ஓதாமல் தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்
இவ்விரு ஹதீஸ்களும் எவ்வித பிரச்சனையுமின்றி முழுமையாக ஏற்கத்தக்கவையே. இவையன்றி வேறு சில ஹதீஸ்களையும் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் பார்ப்போம்.
1-3 அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (சூரத்துல் ஃபாத்திஹாவை) ஓதித்தொழாதவரின் தொழுகை முழுமை பெறாததாகும் என்று மும்முறை கூறிவிட்டு, குறைபாடுள்ளதேயாகும் என்றார்கள். அப்போது அபூஹுரைரா(ரழி) அவர்களிடத்தில் நாங்கள் இமாமுக்குப் பின்னால் இருந்து (அவரைப் பின்பற்றி) தொழகிறோமே (அப்போது நாங்கள் என்ன செய்வது?) என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அதை நீர் உமக்குள்ளேயே ஓதிக்கொள்வீராக! என்றார்கள்.
ஏனெனில் நபி(ஸல்) அவர் (பின்வருமாறு) கூற நான் கேட்டிருக்கிறேன். (அதாவது) அல்லாஹ் கூறுகிறான்; நான் தொழுகையை (தொழுகையில் ஓதப்படும் சூரத்துல் ஃபாத்திஹாவை) எனக்கு எனது அடியானுக்கும் இடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன் எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும்.
அடியான்: அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்(அகில உலகங்களையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்) என்று கூறும் போது,
அல்லாஹ்: ''எனது அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்'' என்று கூறுகிறான்.
அடியான்: அர்ரஹ்மானிர்ரஹீம் (அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது,
அல்லாஹ்: எனது அடியான் என்னை கவுரவப்படுத்தி விட்டான் என்று கூறிவிட்டு, எனது அடியான் (அனைத்தையும்) என்னிடம் ஒப்படைத்து விட்டான் என்றும் கூறுகிறான்.
அடியான்: ''இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தயீன்'' (உன்னையே வணங்கி வழிபடுகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது,
அல்லாஹ்: இது எனக்கும் அடியானுக்கும் இடையிலுள்ள விஷயமாகும். எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும் என்று கூறுகிறான்.
அடியான்: ''இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் ஸிராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம்கைரில் மக்ழுபி அலைஹிம் வலழ்ழால்லீன்'' (உன்னால் கோபிக்கப்பட்டவர்களும், வழி தவறியவர்களும் சென்றவழி அன்றியே, நீ எவர்கள் மீது அருள் செய்திருக்கின்றாயோ அத்தகையோரின் வழியை எங்களுக்குக் காட்டி அருள்வாயாக! என்று கூறும்போது,
அல்லாஹ்: இது எனது அடியானுக்குரியது, எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும் என்று கூறுவான். (முஸ்லிம்)
இந்த ஹதீஸின் நிலையைப் பார்ப்போம். இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அலாஉபின் அப்திர்ரஹ்மான் என்பவர் குறித்து இப்னு முயீன் அவர்கள் இவருடைய ஹதீஸ் எதற்கும் ஆதாரமாக ஏற்கத்தக்கதல்லவென்று கூறியதாக தவ்ரீ கூறுகிறார்கள்.
மேலும் இவ்வறிவிப்பில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் தமக்குள்ளேயே சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதிக் கொள்ள வேண்டும் என்று அபூஹுரைரா(ரழி) அவர்கள் தமது சொந்தக் கருத்தையே கூறியிருக்கிறார்களே அன்றி, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1-4 உபாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகை நடத்திக் கொண்டிருருந்தார்கள். அப்போது அவர்களுக்கு கிராஅத் ஓதுவது சிரமமாம் விட்டது. அவர்கள் தொழவைத்து விட்டுத் திரும்பிய போது (ஸஹாபாக்களை நோக்கி) நீங்கள் உங்கள் இமாமுக்குப் பின்னால் ஓதிக்கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறதே! என்றார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் அவசரமாக ஓதிக்கொள்கிறோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உம்முலகுர்ஆனை (சூரத்துல் ஃபாத்திஹாவை)த்தவிர வேறு எதையும் ஓதாதீர்கள். ஏனெனில் அதை ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது என்றார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
1-5 உபாதத்துப்னிஸ்ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதும் ஒரு தொழுகையை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அப்போது அவர்களுக்கு கிராஅத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது அவர்கள் தொழவைத்து முடித்தவுடன், எங்களை நோக்கி, ''நான் சப்தமாக கிராஅத் ஓதும்போது, நீங்கள் ஓதவா செய்கீறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு எங்களில் ஒருவர் ''ஆம்'' அவ்வாறு ஓதத்தான் செய்கிறோம் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அது) வேண்டாம் என்று கூறிவிட்டு, (உங்களால்) எனக்கு குர்ஆனில் சிக்கல் ஏற்படுவதாக உள்ளது என்று கருதுகிறேன். நான் சப்தமாக ஓதினால் நீங்கள் உம்முல் குர்ஆனை - சூரத்துல் ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓத வேண்டாம் என்றார்கள். (அபூதாவூத்)
இவ்விரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள மக்ஹுல் என்பவர் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் தமது ''மீஜானுல் இஃதிதால்'' எனும் நூலில் பின்வருமாறு விமர்சித்துள்ளார்கள்: ஒரு சிலர் இவரை நம்பகமானவர் என்று கூறுகின்றனர். ஆனால் இவரை ஒரு ஜமாஅத்- கூட்டமே பலகீனமானவர் என்று கூறுகிறார்கள்.
மேலும் இவர் தாம் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தாம் யாரிடமிருந்து இவ்விஷயத்தைக் கேட்டேன் என்று தெளிவாகக் கூறாது எனக்கு ஒருவர் கூறினார் என்று மறைத்து கூறும் பழக்கமுடையவராக இருந்துள்ளார் என்று நான் (தஹபீ) கூறுகிறேன்.
மேற்காணும் இந்நபரைப் பற்றி பலர் நற்சான்று அளித்திருப்பினும், இத்தகைய குறைபாடுகள் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை எடுத்தியம்பும் ஒரு மேதையிடம் காணப்படுவது முறையல்ல.
இரண்டாம் பிரிவினரின் கூற்று:
இமாமைப் பின்பற்றித் தொழுவோர் இமாம் சப்தமாக ஓதும் தொழுகை, சப்தமின்றி மெதுவாக ஓதும் தொழுகை ஆகிய அனைத்துத் தொழுகைகளின் எந்த ரகாஅத்திலும் அறவே சூரத்துல் பாத்திஹாவை ஓதாது, வாய் மூடியே இருக்கவேண்டும் என்பதாகும்.
இவர்களின் ஆதாரங்கள்:
2-1 ''குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள்! மேலும் (அதற்காக) வாய் மூடியிருங்கள்! (அவ்வாறிருப்பின்) நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்.'' 7:204
2-2 அபூமூஸல் அஷ்அரீ(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய்முடியிருங்கள்! (முஸ்லிம்)
2-3 அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரை இமாமாக்கப்படுவதெல்லாம் அவர் (மற்றவரால்) பின்பற்றப்படவேண்டும் என்பதற்காகத் தான். ஆகவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள் அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்!
(அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
மேற்காணும் திருவசனமும், இரு ஸஹீஹான ஹதீஸ்களும் இமாம் சப்தமாக ஓதும்போது மட்டும் அவரைப் பின்பற்றித் தொழுவோர் வாய் மூடியிருக்கவேண்டும் என்பதையே உணர்த்துகின்றன. இரண்டாம் பிரிவினர் கூறுவது போல் இமாம் மெதுவாக ஓதினாலும் அவரைப் பின்பற்றித் தொழுபவர் எப்போதுமே வாய் மூடியிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாசகம் கூட அவற்றில் கிடையாது.
இமாம் சப்தமாக ஓதும்போது அவர் ஓதுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்பவரும் அவரைப் போன்றே தாமும் ஓதியவராகி விடுகிறார். சப்தமின்றி மெதுவாக ஓதும்போது அவர் ஓதுவதைக் கேட்க வாய்ப்பில்லாததால் வெறுமனே வாய் மூடியிருப்பவர் ஓதியவராக மாட்டார்.
2-4: அப்துல்லாஹ் பின் ஷத்தாத்(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒருவருக்கு இமாமாக இருந்தால் அவருடைய கிராஅத்தே தமக்கும் (போதுமானது) ஆகும். (தாரகுத்னீ)
இவ்வறிவிப்பு ஆதாரப்பூர்வமானது என்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருப்பினும், அவ்வழிகள் அனைத்துமே பலகீனமானவையாக உள்ளன.
இவ்வறிவிப்பின் தொடரில் ஸஹாபியின் பெயர் விடுபடுவதால், இவ்வறிவிப்பு ''முர்ஸல்'' (சஹாபி விடுபட்டது) என்ற வகையைச் சார்நததாக அமைந்துள்ளது.
எனவே முர்ஸலான இவ்வறிவிப்பை தமக்கு சாதகமாக வைத்து இரண்டாம் பிரிவினர் இமாம் ஓதும் கிராஅத்தே அவரைப் பின்பற்றித் தொழுவோருக்கும் போதுமானது. ஆகையால், அவர் சப்தமாக ஓதினாலும், மெதுவாக ஓதினாலும் அவரைப் பின்பற்றித் தொழுவோர் வாய் மூடியே இருக்கவேண்டும் என்பதை நியாயப்படுத்தும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். காரணம், ''முர்ஸலான'' அறிவிப்பை மட்டும ஆதாரமாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.
2-5 யஹ்யா பின் யஹ்யா(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஒரு முறை அதா உபின் யஸார் (ரஹ்) அவர்கள் ஜைது பின் ஸாபித்(ரழி) அவர்களிடத்தில் இமாமுடன் (அவரைப் பின்பற்றித் தொழுவோர்) ஓதுவது பற்றி தாம் கேட்டபோது, அதற்கவர்கள் இமாமுடன்'' எந்த சந்தர்ப்பத்திலும் ஓத வேண்டும் என்பதில்லை'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)
மேற்காணும் கடைசி இவ்விரு அறிவிப்புகளும் ஸஹாபாக்ககளின் சொல்லாக இருக்கின்றன. அவ்வாறின்றி, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார் என்றிருப்பின் இவற்றை வைத்து மேற்காணப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புண்டு. அவ்வாறின்றி ''அதார்'' என்னும் ஸஹாபாக்களின் கூற்றாக இருப்பதால் இவற்றை மட்டும் வைத்து ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளவற்றில் எம்மாற்றமும் செய்யமுடியாது.
3. மூன்றாம் பிரிவினரின் கூற்று:
இமாமைப் பின்பற்றித் தொழுபவர், இமாம் சப்தமாக ஓதும் போது மட்டும் எதுவும் ஓதாமல் அவர் ஓதுவதை செவிமடுத்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதும், இமாம் சப்தமின்றி மெதுவாக ஓதும் போது, சூரத்துல் ஃபாத்திஹாவை அவசியம் ஒருவர் ஓதிக் கொள்ளவேண்டும் என்பது ஆகும்.
இவர்களின் ஆதாரங்கள்:
3-1 குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள். மேலும், (அதற்காக) வாய் மூடியிருங்கள்! அவ்வாறிருப்பின் நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள். (7:204)
3-2 உபாதத்துப்னிஸ் ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல்கிதாபு (சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை என்பதேயில்லை.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்
3-3 அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (மற்றொரு அறிவிப்பில் சூரத்துல் ஃபாத்திஹாவை) ஓதாமல் தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)
3-4 அபூமூஸல் அஷ்அரீ(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்!
மேற்காணும் (7:204) திருவசனத்துக்கும், மற்றுமுள்ள ஹதீஸ்களுக்குமுள்ள விளக்கம் முதலாம், இரண்டாம் பிரிவினர்களின் கூற்றுக்களை விமர்சிக்கும் போதே தரப்பட்டுள்ளது.
''இமாம் கிராஅத் ஓதினால் வாய்மூடியிருங்கள்''! எனும் நபிமொழிக்கு மாற்றமாக நடந்த மக்களை நோக்கி, நபி(ஸல்) அவர்கள் கூறியது:
3-5 அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் சப்தமாக கிராஅத் ஓதும் தொழுகையை(த் தொழவைத்து) விட்டுத் திரும்பினார்கள், அப்போது (அங்கிருந்தவர்களை நோக்கி) சற்று முன் உங்களில் யார் என்னுடன் ஓதியவர்? என்று கேட்டார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! ஆம்! (நான் தான்) என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் (எனது) ஓதலில் (உங்களால்) குழப்பம் விளைவிக்கப்படுவதாக கருதுகிறேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், இவ்வாறு கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த (ஸஹாபாக்களாகிய) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதும் தொழுகைகளில் தாங்கள் ஓதுவதை தவிர்த்து கொண்டார்கள். (அபூதாவூத், முஅத்தா, திர்மிதீ.)
மேற்காணும் இந்த அறிவிப்பின் தொடரில் இடம்பெற்றுள்ள இப்னு உகைமாவைப் பற்றி ஒரு சிலர் ''மஜ்ஹுல்'' (ஹதீஸ்கலா வல்லுநர்களுக்கு மத்தியில் அறிமுகமில்லாதவர்) என்று கூறியிருப்பது முறையற்றதாகும்.
ஹதீஸ்கலா வல்லுநர்களுக்கு மத்தியில் பிரதான ஸ்தானத்தை வகிக்கும் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் இப்னு உகைமாவைப் பற்றி கூறும் நற்சான்றுகள் பின்வருமாறு:
''இவரது அசல் பெயர் ''உமாரா'' என்பதாகும். இமாமுக்குப் பின் ஓதுதல் விஷயம் குறித்து அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர் இவர் தான் என்பது தெளிவு. இவர் ஹிஜ்ரி 101-ல் காலமானார் என்று இப்னு ஸஃது கூறுகிறார்.
அபூ ஹாத்திம் அவர்கள் இவரது ஹதீஸ் ஏற்கத்தக்கதாகும் என்று கூறியிருப்பதோடு, இவர் நம்பகமானவரில் ஒருவராவார் என்று இப்னு ஹிப்பானும் கூறியுள்ளார்கள்.
ஆகவே, இப்னு உகைமாவைப் பற்றி அறிமுகமில்லாதவர் என்ற கூற்றுக்கு அறவே இடமில்லை என்பதை மேற்கூறப்பட்டவை நிரூபித்துக் காட்டுகின்றன.
7:204 திருவசனம் பற்றி குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது பின்வருமாறு:
திருகுர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவராம் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தமது தஃப்ªருப்னி அப்பாஸ்'' என்ற நூலில் ''வஇதா குரிஅல் குர்ஆனு'' எனும் வசனத்திற்கு பர்லான தொழுகையில் குர்ஆன் ஓதப்பட்டால் அதன் ஓதுதலுக்காக செவிமடுங்கள்! மேலும் அதன் ஓதுதலுக்காக வாய்மூடியிருங்கள்! என்பதாக விரிவுரை செய்துள்ளார்கள்.
இமாம் ஜுஹ்ரி(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:
இவ்வசனம் அன்ஸார்களைச் சார்ந்ததொரு வாலிபரின் விஷயமாக அருளப்பட்டதாகும். அவர் நபி(ஸல்) அவர்கள் கிராஅத் ஓதும்போதும் அவர்களுடன் தாமும் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது ''குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள். மேலும், வாய்மூடியிருங்கள். நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்'' எனும் திருவசனம் இறங்கியது என்று கூறுகிறார்கள். (இப்னுஜரீர்)
இமாம் முஜாஹித் அவர்கள் மட்டும் இத்திருவசனம் தொழுகை மட்டுமின்றி ஜும்ஆ குத்பாவின் போதும், வாய் மூடியிருப்பது குறித்து அருளப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள். (தப்ஸீர் இப்னுகஸீர்)
ஆகவே, இத்திருவசனம் ஏகோபித்து எல்லா முஃபஸ்ஸிரீன்களின் கருத்துப்படி தொழுகை சம்பந்தமாக தொழுகை கடமையாக்கப்பட்ட பின்னர் அருளப்பட்டுள்ளது என்பதையே தப்ஸீர் இப்னு அப்பாஸ் முதல் ஏனைய நம்பகமான அனைத்து தப்ªர்களும் ஊர்ஜிதம் செய்கின்றன.
''நீங்கள் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதில் கூச்சலிடுங்கள் அதனால் மிகைத்துவிடலாம் என்று காபிர்கள் கூறினர்'' (41:26) என்ற (காபிர்களின் கூற்றுக்கு பதிலாக இந்த (7:204) வசனம் இறக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். இவ்வசனம் அவ்வசனத்திற்கு பதில் கொடுத்ததுபோல் அமைந்திருந்தாலும் காலக் கட்டத்தில் இவ்வசனம் அருளப்படடதாக ஆதாரப்பூர்வமான எந்த தப்ªரிலும் காணப்படவில்லை.
சூரத்துல் ஃபாத்திஹா
இமாமைப் பின்பற்றுவோர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது பற்றிய முடிவு என்ன?
மேலே, நாம் கண்ட 3 பிரிவினரின் கூற்றுக்களையெல்லாம் விட்டு, நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயங்களை மட்டும் கவனமாக நாம் பார்க்கும் போது, கீழ்க்கண்டவை நமக்கு தெளிவாகத் தெரிகின்றன.
1. குர்ஆன் ஓதப்படும் பொழுது, நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிசப்தமாக இருங்கள். நீங்கள்கிருபை செய்யப்படுவீர்கள். (7:204)
2. ''சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகையே இல்லை'' என்ற கருத்தில் காணப்படும் ஆதாரப் பூர்வமான பல ஹதீஸ்கள்.
இவை இரண்டும் அல்லாத, இமாம் சப்தமாக, ஓதும் போது, பின்னால் உள்ளவர்கள் நிசப்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான 2 ஹதீஸ்களை இருந்தும் அவற்றிலும் விவாதம் இருப்பதால், அவற்றையும் விட்டு எல்லாராலும் ஏகோபித்து ஒப்புக் கொள்ளப்பட்ட மேலே காணப்படும் இரண்டு அம்சங்களுக்கு முரண்பாடில்லாத முறையில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது,
1. இமாம் சப்தமிட்டு ஓதும்போது பின்னால் இருப்பவர்கள் செவிதாழ்த்தி நிசப்தமாக கேட்கவேண்டும். அப்படி கேட்கும் போது, சூரத்துல் ஃபாத்திஹாவை அவர்களும் ஓதியவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
(அ. அல்குர்ஆனில் மூஸா(அலை) அவர்கள் மட்டும் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு எதிராக பிரார்த்தனை செய்த போது, அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் பதிலளிக்கையில் ''உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது'' என்று கூறுகிறான். (10:88, 89)
இங்கு மூஸா(அலை) அவர்கள் மட்டும் கேட்டார்கள் என்று தெரிவாகக் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஹாரூன் (அலை) அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னதாக இக்ரிமா(ரழி) கூறுவதாக தப்ஸீ்ர் இப்னு கஸீரில் காணப்படுகிறது. அல்லாஹ் குறிப்பிடும் பொழுது இருவருடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறான். இதிலிருந்து சூரத்துல் ஃபாத்திஹாவை இமாம் ஓதி பின்னால் இருப்பவர்கள் அதனை கேட்டு ஆமீன் சொல்லும் போது அவர்களும் ஓதியவர்களாகவே கருதப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆ. புறம் பேசப்படுவதை கேட்பவனும், புறம் பேசிய குற்றத்திற்கு ஆளாகிறான் என்ற கருத்தில் வரும் நபி மொழிகளை இங்கு கவனிக்க வேண்டுகிறோம்.
இ. இமாம் ஓதும்போது இமாமின் கிராஅத்தை பின்னால் இருப்பவர்கள் கேட்க முடியாதாகையால் அவர்களும் சப்தமின்றி ஓதிக்கொள்ளவேண்டும்.
பகல் நேரத் தொழுகைகளான லுஹர், அஸ்ர் வேளைகளிலும, ஏனைய மூன்று வேளை தொழுகைகளிலும் குறைந்த சப்தத்தில் இமாம் ஓதும் போது கிராஅத்தை பின்னால் இருப்பவர்கள் கேட்க முடியாதாகையால் அவர்களும் சப்தமின்றி ஓதிக் கொள்ளவேண்டும்.
3. இமாம் சப்தமிட்டு ஓதும் போது, பெரும் கூட்டம் காரணமாக மிகவும் பின்னால் இருப்பவர்கள் இமாமின் கிராஅத்தை கேட்க முடியாயிருந்தால் அப்போது, அவர்களும் சப்தமின்றி ஓதிக்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று நிலைகளிலும் மேலே காணப்படும், குர்ஆனின் கட்டளைக்கோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கோ முரண்பட்ட நிலை ஏற்படவில்லை என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும்.
தொழுகையில் கிராஅத் ஓதி முடித்தவுடன் இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் கூறி ருகூஃவுக்குச் செல்லல்:
நாஃபிஉ(ரழி) அறிவித்துள்ளார்கள்:
இப்னு உமர்(ரழி) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போது தமது இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் கூறுவார்கள். அடுத்து ருகூஃவுக்கு செல்லும் போதும், தமது கைகளை உயர்த்துவார்கள். பின்னர் ''ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறும் போதும் தமது கைகளை உயர்த்துவார்கள். மேலும் இரண்டாம் ரகாஅத்தை விட்டு எழுந்திருக்கும் போதும் தமது கைகளை உயர்த்துவார்கள். (புகாரீ)
(இவ்வாறே ''நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்'' என்று இப்னு உமர்(ரழி) அறிவித்திருப்பதாக ''ஹம்மாது பின் ஸலமா'' அவர்களின் ஓர் அறிவிப்புத் தொடரிலும் இடம் பெற்றுள்ளது. (புகாரீ)
புஜங்களுக்கு நேராக கைகளை உயர்த்துதல்:
இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் நபி(ஸல்) அவர்களை, அவர்கள் தொழுகைக்காக நிற்கும் போது இவ்வாறு செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்துவிட்டு ''ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறுவார்கள். ஆனால் இவ்வாறு ஸுஜூதில் செய்யமாட்டார்கள். (புகாரீ)
ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போது ''ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்'' என்று கூறுவதைத் தவிர தொழுகையில் ஒரு நிலையிலிருந்து மறு நிலைகளுக்கு மாறும் போதெல்லாம் தக்பீர் கூறுவது சுன்னத்தாகும்.
இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு குனியுதல் நிமிருதல், எழுந்திருத்தல், உட்காருதல் ஆகிய அனைத்து நிலைகளிலும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறே) அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) ஆகியோரும் (கூறிக்கொண்டிருந்தார்கள்.) (திர்மிதீ)
அபூபக்ருமின் அப்துர்ரஹ்மான்(ரழி) அவர்கள், அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூற தாம் கேட்டதாக அறிவித்துள்ளார்கள்.
அபூஹுரைரா(ரழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகைகக்காக எழுந்து நிற்கும் போது, தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஃவிலிருந்து தமது முதுகுத்தண்டடை உயர்த்தும் போது ''ஸமி அல்லாஹு லிமன்ஹமிதஹ்'' என்பதாக கூறுவார்கள். பின்னர் தாம் நின்றவர்களாக, ''ரப்பனா வலக்கல் ஹம்து'' என்று கூறுவார்கள். பின்னர் (அதிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் (மீண்டும்) ஸுஜூது செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பின்னர் தமது தலையை (அதிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் தாம் தொழுது முடிக்கும் வரை தமது தொழுகை அனைத்திலும் இவ்வாறே செய்வார்கள். மேலும் இரண்டாவது ரகாஅத்தின் இருப்புக்குபின் எழும்பும்போது தக்பீர் கூறுவார்கள். (முஸ்லிம்)
ருகூஃ செய்வது தொழுகையின் பர்லு-முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
விசுவாசிகளே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்! ஸஜ்தாவும் செய்யுங்கள்! இன்னும் உங்கள் ரட்சகனுக்கு வணங்கி வழிபடுங்கள்! மேலும் நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்! (22:77)
ருகூஃ செய்யும் முறை:
முழங்கால்களைப் பிடித்த நிலையில் ருகூஃ செய்தல்:
முஸ் அபுபின் ஸஃது(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நான் ஒருமுறை எனது தந்தையின் அருகில் தொழுது கொண்டிருந்ததேன். நான் ருகூஃ செய்தபோது எனது இரு கைகளையும் சேர்த்து மூடிக்கொண்டு அவற்றை எனது இரு தொடைகளுக்கு மத்தியில் வைத்திருந்தேன். (அதைக் கண்ட எனது தந்தை) இவ்வாறு நான் செய்வதைத் தடுத்து, (மகனே!) இவ்வாறு தான் நாங்கள் (முன்னர்) செய்து கொண்டிருந்தோம். பின்னர் நாங்கள் எங்கள் முட்டுக் கால்களின் மீது, எங்கள் கைகளை வைத்து (பிடித்துக்) கொள்ளவேண்டும் என்பதாக கட்டளையிடப்பட்டோம் என்று கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)
ருகூஃ ஸுஜூதுகளை நிறைவாகச் செய்தல்:
கத்தாதா (ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரழி) அவர்கள் மூலம் நான் கேட்டிருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நீங்கள் ருகூஃ, ஸுஜூது முதலியவற்றை நிறைவேற்றும் போது, அவற்றை முழுமையாக நிறைவேற்றுங்கள்!'' (நஸயீ)
அரை குறையாகத் தொழுவோர் நல்ல மரணத்தை அடையும் பாக்கியத்தை இழக்கநேரிடும் என எச்சரிக்கை!
ஸுலைமான்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
ஜைதுபின் வஹபு(ரழி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஒரு முறை ஹுதைஃபா(ரழி) அவர்கள் ருகூஃ, ஸுஜூதுகளை நிறைவாக செய்யாத ஒருவரை நோக்கி, ''நீர் (தொழ வேண்டியவாறு) தொழவில்லை. இந்நிலையில் நீர் மரித்து விடுவீராயின், முஹமமத்(ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த அமைப்பில் அமைத்துள்ளானோ, அவ்வமைப்புக்கு விரோதமான நிலையில் தான் நீர் மரிக்கநேரிடும் என்று கூறி எச்சரிக்கை செய்தார்கள். (புகாரீ)
(இவ்வாறே ருகூஃ, ஸுஜூதுகளை முறையாக நிறைவேற்றாது தொழுத ஒருவரைப் பார்த்து, நபி(ஸல்) அவர்கள் தாமே எச்சரிக்கை செய்திருப்பதாக மற்றொரு அறிவிப்பு தப்ரானீ இடம் பெற்றிருக்கிறது)
ருகூஃ ஸுஜூதுகளை முறையாக நிறைவேற்றாது தொழுத வரை நோக்கி, நீர் சரியாகத் தொழவில்லை, மீண்டும் நீர் தொழுதாக வேண்டும் என்பதாக நபி(ஸல்) அவர்களின் கட்டளை:
அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
''ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளியில் நுழைந்து தாம் தொழுது விட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறிவிட்டு ''நிச்சயமாக நீர் தொழவில்லை மீண்டும் தொழுவீராக! என்றார்கள். அவர் மீண்டும் சென்று தொழுதுவிட்டு வந்து, நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூற, நபி(ஸல்) அவர்கள் (அவரை நோக்கி) நிச்சயமாக நீர் தொழவில்லை மீண்டும் தொழுவீராக! என்றார்கள். மூன்றாம் முறையில், உங்களை உண்மையில் தூதராக அனுப்பியுள்ளவன் மீது ஆணையாக, இதைவிட அழகாக என்னால் தொழ இயலாது, ஆகவே எனக்கு (அழகாக தொழும் முறையை) கற்றுத்தாருங்கள்! என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்கும் போது, தக்பீரைக் கூறி, பின்னர் குர்ஆனில் நீர் உம்மிடமுள்ளவற்றில் உமக்கு இயலுமானவற்றை ஓதி பின்னர், உமக்கு நிம்மதி நிலவும் வரை ருகூஃ செய்வீராக! பின்னர் நீர் ஒழுங்காக நிற்கும் வரை எழுந்து நிற்பீராக! பின்னர் உமக்கு நிம்மதி நிலவும் வரை ஸுஜூது செய்வீராக. பின்னர் நிம்மதியாக உட்காரும் வரை எழுந்து அமருவீராக! பின்னர் நீர் நிம்மதியாக உட்காரும் வரை எழுந்து அமருவீராக! பின்னர் நீர் நிம்மதியாக ஸுஜூது செய்யும் வரை ஸுஜூது செய்வீராக! என்று கூறி விட்டு, பின்னர் (இவ்வாறே) உமது தொழுகை அனைத்திலும் செய்து கொள்வீராக! என்றார்கள்''.
தொழுகையில் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றாதோரும் ஒரு வகைத் திருடரே ஆவர்!
அபூகதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ''திருட்டால் மிக மோசமான திருடன் தனது தொழுகையிலேயே திருடுபவன் தான்'' என்றார்கள். அதற்கு (சஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எவ்வாறு தனது தொழுகையில் திருட முடியும் என்று கேட்க, அப்போது நபி(ஸல்) அவர்கள் அவன் தொழுகையில் தனது ருகூஃவையும் ஸுஜூதையும் சரிவரச் செய்யமாட்டான்'' என்றார்கள்.
ருகூஃ, ஸுஜூதின் போது குர்ஆன் ஓதத்தடை:
இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நான் ருகூஃவின் போதும், ஸுஜூதின் போதும் குர்ஆன் ஓதத்தடை செய்யப்பட்டுள்ளேன். ஆகவே ருகூஃவின் போது அதில் ரப்பை கண்ணியப்படுத்துங்கள்! பின்னர் ஸுஜூதின் போது அதில் துஆ செய்வதற்கு முயலுங்கள்! உங்களுக்கு (அது) ஏற்றுக் கொள்ளப்படுவது உறுதி. (முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் ருகூஃ, ஸுஜூதுகளில் ஓதி வந்த பல்வகை தஸ்பீஹ்கள்:
1. ருகூஃவில்: ஸுப்ஹான ரப்பியல் அழிம் (கண்ணியமிக்க எனது இரட்சகனைப் பரிசுத்தப்படுத்துகிறேன்)
ஸுஜூதில்: ஸுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வுமிக்க எனது இரட்சகனைப் பரிசுத்தப்படுத்துகிறேன்)
ஹுதைஃபா (ரழி) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவில் ''ஸுப்ஹான ரப்பியல் அழீம்'' என்றும், தமது ஸுஜூதில் ''ஸுப்ஹான ரப்பியல் அஃலா'' என்றும் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
(திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
2. ருகூஃவிலும், ஸுஜூதிலும்: ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக்க அல்லாஹும்மஃ ஃபிர்லீ
(யா அல்லாஹ்! எங்கள் ரட்சகனே! உன்னைப் புகழ்ந்து கொண்டு உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன். அல்லாஹ்வே! என்னை மன்னித்தருள்!)
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவிலும், ஸுஜூதிலும், ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக்க அல்லாஹும்மஃ ஃபிர்லீ'' என்று ஓதி வந்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)
3. ருகூஃவிலும், ஸுஜூதிலும்: ''ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்''
எனது ருகூஃவும், ஸுஜூதும், மலக்குகளுக்கும் ரூஹுக்கும் இரட்சகனாகிய ஈடு இணையற்றவனும், இறைத் தன்மைக்குப் புறம்பான அனைத்து குறைபாடுகளை விட்டும் பரிசுத்தமானவனுமாகிய (அல்லாஹ் ஒரு)வனுக்கே உரித்தானதாகும்.
அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
அவர்கள் கூறுகிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவிலும் ஸுஜூதிலும், ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்று ஓதி வந்தார்கள். (முஸ்லிம்)
4. ருகூஃவிலும் ஸுஜூதிலும்: 'ஸுப்ஹான் தில் ஜபருத்தி வல் மலக்கூத்தி வல்கிப்ரியாயி வல் அழ்மஹ்'
(பேராட்சியும், பேராதிக்கமும், மாபெரும் மம்மையும், மகத்துவமுமிக்க (அல்லாஹ்வான)வான் மிக்க பரிசுத்தமானதாகும்.)
அவ்ஃபுப்னு மாலிக்கில் அஷ்ஜயீ(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவில் ஸுப்ஹானதில் ஜபரூத்தி வல் மலக்கூத்தி வல்கிப்ரியாயி வல் அழ்மஹ்'' என்று ஒதிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறே தமது ஸுஜூதிலும் (ஓதினார்கள்) (அபூதாவூத்)
5. ருகூஃவில் மட்டும்: அல்லாஹும்ம லக்க ரகஃத்து வபிக்க ஆமன்த்து அஸ்லம்த்து வஅலைக்க தவக்கல்த்து அன்த்த ரப்பீ கஷஅ ஸகியீ, வபஸரீ, வதமீ, வலஹ்மீ, வஅழ்மீ, வஅஸபீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
(யா அல்லாஹ்! உனக்கே குனிந்து விட்டேன். உன்னையே விசுவாசித்தேன். உனக்கே முற்றிலும் வழிபட்டேன். மேலும், உன்னிடமே எனது அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டேன். நீயே எனது ரட்சகன். எனது கேள்வியும், பார்வையும், எனது இரத்தமும் தசையும், எனது எலும்பும் நரம்பும், அம்ல உலகங்களையும் படைத்துப் பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே முற்றும் பணிந்து விட்டன)
ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:
நபி(ஸல்) அவர்கள் ருகூஃ செய்யும்போது, (மேற்காணும் ''அல்லாஹும்ம லக்க ரகஃத்து வபிக்க ஆமன்த்து...'' என்பதை ஓதி வந்தார்கள். (நஸயீ)
ருகூஃவிலும், ஸுஜூதுக்கும் செல்லும்போது
ருகூஃவிலிருந்து நிமிர்ந்த பின் நிற்கும் நிலையும், அதன் முக்கியத்துவமும்
இந்நிலையைச் ''சிறுநிலை'' என கூறுகிறோம். இதுவும் தொழுகையின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
1. ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் (முறை கேடாகத் தொழுதவரை நோக்கி உபதேசிக்கையில்) ''பின்னர் நீர் ஒழுங்காக நிற்கும் வரை எழுந்து நிற்பீராக!'' என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி)
2. நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தினால், தாம் நேராக நிமிர்ந்து நிற்காதவரை ஸுஜூதிதுக்குச் செல்லமாட்டார்கள். (அன்னை ஆயிஷா(ரழி), முஸ்லிம்)
3. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது ருகூஃ, ஸுஜூதுக்கு மத்தியில் தமது முதுகெலும்பை நேராக நிமிர்த்தவில்லையோ, அவரது தொழுகை ஏறிட்டும் பார்க்கப்படமாட்டாது. (அபூஹுரைரா(ரழி) அஹ்மத்)
ருகூஃவிலிருந்து எழும்போது என்ன ஓதவேண்டும்?
ருகூஃவிலிருந்து எழும்பும்போது இமாமும், தனித்துத்தொழுவோரும் ''ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறுவதோடு, ''அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்றும் கூறவேண்டும்.
1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறினால் அதற்கு நீங்கள் ஏனெனில் (மலக்குகளும் அவ்வாறு கூறுகின்றனர்) எவருடைய சொல் மலக்குகளின் சொல்லுக்கு ஒத்ததாக அமைந்து விடுமோ, அவருடைய பாவங்களில் முன்னுள்ளவை மன்னிக்கப்பட்டுவிடும். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
“ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழை ஏற்கிறான்.
“அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” அல்லாஹ்வே! எங்கள் ரட்சகனே! உனக்கே சர்வ புகழும்.
மேற்காணும் ''அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' எனும் வாசகமே பெரும்பாலான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ''ரப்பனா லக்கல் ஹம்து'' என்றும், ''ரப்பனா வலக்கல் ஹம்து'' என்றும் ஒரு சில ஹதீஸ்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவைகளும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பதால் இவற்றில் எதனையும் ஓதிக் கொள்ளலாம்.
மேற்கண்டவாறு இமாமைப் பின்பற்றித் தொழுவோர் ''அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று மட்டும் கூறுவதே முறையாகும். மாறாக இமாமைப் பின்பற்றித் தொழுவோர் ''ஸமி அல்லாஹு லிமன்ஹமிதஹ்'' என்பதையும் சேர்த்தே கூறவேண்டும் என்ற சிலரின் கூற்றுக்கு ஸஹீஹான ஒரு ஹதீஸும் ஆதாரமாக இல்லை என்பது தெளிவு.
சிறுநிலையில் ஓதப்படும் பல்வகை துஆக்கள்:
1. அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத்த மின்ஷையின் பஃது (அல்லாஹ்வே! எங்கள் ரட்சகனே! உனக்கே வானங்கள் நிறையவும், பூமி நிறையவும், இவற்றின் பின்னர் எவை எல்லாம் நிறைய வேண்டுமென நீ விரும்புகின்றாயோ அவை யாவும் நிறைய அனைத்துப் புகழும் உரித்தானவை.)
நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது முதுகை உயர்த்தும் போது, ''ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்'' (என்று கூறிவிட்டு மேற்கண்ட ஓதிக்கொண்டிருந்தார்கள். (இப்னு அபீ அவ்ஃபா(ரழி), முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது, ''லிரப்பியல் ஹம்து - லிரப்பியல் ஹம்து'' என்று ஓதுவார்கள். (ஹுதைஃபா(ரழி); நஸயீ) லிப்பிரயல் ஹம்து - லிரப்பியல் ஹம்து (எனது ரட்சகனுக்கே சர்வப் புகழும், எனது ரட்சகனுக்கே சர்வப் புகழும்)
2. ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கதீரன் தய்யிபின் முபாரக் கன்ஃபீஹி (எங்கள் ரட்சகனே! உனக்கு சர்வ புகழும் உரித்து, அப்புகழ் அபரிமிதமானதாகவும், தூய்மையானதாகவும் அபிவிருத்தியானதாகவும் இருக்குமாக!
நாங்கள் ஒரு முறை நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தி ''ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறினார்கள். அது சமயம் அவர்களுக்குப் பின்னால் உள்ளோரில் ஒருவர் ''ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரக்கன் ''ஃபீஹி'' என்று கூறினார். அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பியவுடன் (சற்றுமுன்) பேசியவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு (அவர்) நான் என்றார். அப்போதவர்கள் நீர் கூறிய அவ்வார்த்தைகளை 30-க்கு அதிகமான மலக்குகள் முதலில் தாம் எழுதவேண்டும் என்பதற்காக விரைவதைக் கண்டேன் என்று கூறினார்கள். (ரிஃபா அத்துப்னு ராஃபியிஜ்ஜு ரகிய்யி(ரழி), புகாரீ)
ஸுஜூதுக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை:
தரையில் கைகளை வைத்து பின்னர் முழங்கால்களை வைக்கவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தால் தமது முழங்கால்களை(த் தரையில்) வைப்பதற்கு முன்பே தமது கைகளை வைக்க முற்படுவார்கள். (அபூஹுரைரா(ரழி); தஹாவீ)
2. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: உங்களில் ஒருவர் ஸஜ்தா செய்தால் ஒட்டகம் மண்டியிடுவது போல் மண்டியிட வேண்டாம். அவர் தமது கைகளை (த் தரையில்) வைத்து பின்னர் தமது முழங்கால்களை வைப்பாராக!
(அபூஹுரைரா(ரழி); அஹ்மத், அபூதாவூத், நஸயீ)
3. இப்னு உமர்(ரழி) அவர்கள் ஸுஜூது செய்தால் தமது முழங்கால்களை (த்தரையில்) வைக்கும்முன், தமது கைகளை வைப்பார்கள் என்பதாக ஓர் அறிவிப்பு ஹாக்கிமில் இடம்பெற்று அதை இமாம் ஹாக்கிம் அவர்களும், இமாம் தஹபீ அவர்களும் ஸஹீஹான அறிவிப்பென்றே ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் ஸுஜூதுக்குச் செல்லும்போது முதலாவதாக கைகளைக் கீழே வைத்து, பின்னர் முழங்கால்களை வைப்பதே முறையானது என்பதை உணருகிறோம்.
இதற்கு மாற்றமாக வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி) அவர்களின் மூலம் நபி(ஸல்) ஸுஜூது செய்தால் தமது கைகளைத் தரையில் வைப்பதற்கு முன்பே, தமது முழங்கால்களை வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்'' எனும் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு, அது ஆபூதாவூத், நஸயீ, திர்மிதீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பினும் அதன் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலஹீனமாயிருப்பதுடன், பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்பட்டிருப்பதாலும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.
ஸுஜூது செய்யும் முறை:
ஸுஜூது செய்வது தொழுகையின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஸுஜூதென்பது ஒருவர் தமது நெற்றி, மூக்கு இரு கைகள் (ஐந்து விரல்களைக் கொண்டுள்ள உள்ளங்கைப் பகுதி) இரு முழங்கால்கள், இரு பாதங்களின் (விரல்களைக் கொண்டுள்ள) முற்பகுதி ஆகியவற்றைத் தரையில் வைப்பதாகும்.
1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் 7 எலும்புகளினால் ஸஜ்தா செய்யவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன். (அவையாவன:)
''நெற்றியினால்'' என்று கூறிவிட்டு, தமது கையை தமது மூக்கின்மீது தடவிக் காட்டினார்கள். மேலும் இரு கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் விரல்கள் ஆகியவற்றினாலும் (ஸுஜூது) செய்யவேண்டும் என்றும், அதுசமயம்) தலை உரோமம் மற்றும் ஆடைகள் முதலியவற்றைச் சுருட்டிக் வைத்துக் கொள்ளக்கூடாது (என்றும் ஏவப்பட்டுள்ளேன்.)
(இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ)
2. நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழ வைத்த ஒரு தொழுகையின் போது (அவர்கள் தமது நெற்றி, மூக்கு ஆகியவற்றைக் கொண்டு ஸஜ்தா செய்தமையால்) அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணுடைய வடு காணப்பட்டது.
(அபூஸயீதுல் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
மேற்காணும் இரு ஹதீஸ்களின் வாயிலாக நெற்றியுடன் மூக்கையும் சேர்த்து தரையில் வைக்கவேண்டும் என்பதையும் ஸுஜூதுக்குச் செல்லும்போது ஆடைகளையோ, தலை உரோமங்களையோ சுருட்டி வைத்துக் கொள்ளாது அவற்றை அதன் நிலையில் விட்டுவிட வேண்டும் என்பதையும் உணருகிறோம்.
3. நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். ஓர் அடியார் ஸுஜூது செய்கையில், அவருடன் அவரது முகமும், இரு கைகளும், இரு முழங்கால்களும், மேலும் அவருடைய பாதங்களின் விரல் பகுதி ஆகியவையான 7 உறுப்புகளும் ஸஜ்தா செய்கின்றன. (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)
4. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீர் ஸஜ்தா செய்தால் இரு கைகளின் விரல்களுடன் கூடிய உள்ளங்கைப் பகுதிகளைக் கீழே வைத்து, உமது முழங்கைகளை உயர்த்திக் கொள்வீராக!
(பர்ராஉ பின் ஆஜிப்(ரழி), முஸ்லிம்)
5. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தால் அவர்களின் அக்குளின் வெண்மை பிறரால் பார்க்கப்படும் அளவு, அவர்கள் விலாவை விட்டும் தமது கைகளை அகற்றி வைத்திருப்பார்கள்.
(அம்ருப்னுல் ஹாரிஸ்(ரழி), முஸ்லிம்)
6. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது தமது இருகைகளை (அதிகம்) அகற்றாமலும் (விலாவுடன்) சேர்க்காமலும் (நடுநிலையில்) வைத்திருப்பார்கள். மேலும் தமது கால் விரல்களை ''கிப்லா''வை முன்னோக்கி (மடக்கி) வைத்திருப்பார்கள். (அபூஹுமைத்(ரழி), புகாரீ)
7. நபி(ஸல்) அவர்கள் தாம் ஸஜ்தா செய்கையில் ஆட்டின் ஒரு குட்டி அவர்களின் இரு கைகளின் இடையே (புகுந்து) செல்ல கருதினால் சென்று விடும் அளவு (தமது விலாவை விட்டும்) இரு கைகளையும் அகற்றி வைத்திருப்பார்கள். (மைமூனா(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் இரு ஹதீஸ்களில் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் தாம் ஸுஜூது செய்கையில் இருகைகளை (அதிகம்) அகற்றாது விலாவுடன் (ஒட்டி) சேர்த்துக்கொள்ளாது (நடுநிலையில்) வைத்திருந்ததாகவும், மற்றொன்றில் இருகைகளின் இடையே ஆட்டின் ஒரு குட்டி புகுந்து செல்லும் அளவு இருகைகளையும் (தமது விலாவை விட்டும்) அகற்றி வைத்திருந்ததாகவும் காணுகிறோம்.
ஆகவே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இருவிதமாகவும் இருந்திருப்பதால், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப ஸுஜூது செய்கையில் கைகளை அகற்றியோ, அல்லது சேர்த்தோ வைத்துக் கொள்ளலாம் என்பதை உணருகிறோம்.
8. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, தமது நெற்றியையும் தலையில் நன்கு படும்படி வைப்பார்கள். தமது விலாவை விட்டும், தமது கைகளை அகற்றிக்கொள்வார்கள். மேலும் தமது விரல்களுடன் கூடிய உள்ளங்கை பகுதியை புஜங்களுக்கு நேராக (முன்னால்) வைத்துக் கொள்வார்கள்.
(அபூஹுமைத்(ரழி), திர்மிதீ, அபூதாவூத், இப்னுகுஜைமா)
9. நான் பர்ராஉ பின் ஆஜிப்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, தமது முகத்தை எந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் தமது இரு கஃப்புகளுக்கு மத்தியில் என்று கூறினார்கள். (அபூஇஸ்ஹாக்(ரழி), திர்மிதீ)
(கஃப்பு என்றால் விரல்களையும், உள்ளங்கைளையும் கொண்டுள்ள பகுதிக்குச் சொல்லப்படும். எனவே ஸுஜூது செய்யும் போது இரு புஜங்களுக்கு நேராக இரு கைகளையும் தரையில் வைக்கும் சமயம் முகத்தையும் அவ்விரு கைகளையும் மத்தியில் வைக்கவேண்டும் என்பதை அறிக.
10. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! நீங்கள் உங்கள் முழங்கைகளை (மேலே உயர்த்திக் கொள்ளாது) நாய் (தான் படுக்கும்போது) வைத்திருப்பது போன்று நீங்கள் வைக்காதீர்கள்! (அனஸ்(ரழி), முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதில் ஓதியவை:
நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவிலும், ஸுஜூதிலும் குர்ஆனின் கருத்துக்கேற்ப அமுல்படுத்தும் வகையில் மிக அதிகமாக ''ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக் கல்லாஹும்மஃ ஃபிர்லீ'' எனும் துசூவை ஓதி வந்தார்கள்.
(யாஅல்லாஹ்! எங்கள் ரட்சகனே! உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன்.
(அன்னை ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
(அல்குர்ஆனி (110:3)ல் ''(நபியே! நீர்) உமது ரட்சகனைப் புகழ்வது கொண்டு அவனைப் பரிசுத்தப்படுத்துவீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் ''தவ்பாவை'' (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கிறான்'' என்று கூறப்பட்டிருப்பதால், அக்கட்டளைக்குக் கீழ் பணிந்து நடக்கும் வகையில் மேற்காணும் துஆவை ஓதியுள்ளார்கள்.
2. அல்லாஹும்ம லக்க ஸதத்து வபீக்க ஆமன்த்து வலக்க அஸ்லமத்து ஸஜத வஜ்ஹீலில்லதீ கலக்கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு, தபாரக்கல்லாஹு அஹ்ஸனுல் காலிக்கீன்.
(யா அல்லாஹ் உனக்கே நான் பணிந்து சிரம் தாழ்த்திவிட்டேன். உன்னையே நான் விசுவாசித்தேன். மேலும் உன்னையே வணங்கி வழிபடுகிறேன். எனது முகம் அதனைப் படைத்து உருவாக்கி, அதில் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் உண்டு பண்ணியவனுக்கு ஸுஜூது செய்து விட்டது. படைப்போரில் எல்லாம் மிக அழகானவானகிய அல்லாஹ் மிகவும் சிறப்புமிக்கவனாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது (மேற்காணும்) துஆவை ஓதுவார்கள். (அலி(ரழி), முஸ்லிம்)
3. நபி(ஸல்) அவர்கள் தமது ஸுஜூதில் (மேற்காணும்) அல்லாஹும்மஃ ஃபிர்லீ தன்பீ குல்லஹு திக்கஹு வஜுல்லஹு...'' என்பதை ஓதிக் கொண்டிருந்தார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
(யா அல்லாஹ் எனக்கு என் பாவத்தில் சிறிய, பெரிய, ஆரம்பத்திலுள்ள, கடைசியிலுள்ள, பம்ரங்கமாயுள்ள, மறைவாயுள்ளவை அனைத்தையும் மன்னித்தருள்வாயாக!)
4. ''அஊது பிரிழாக்க மின் ஸகத்திக்க வஅஊது பிமுஆ ஃபாத்திக்க மின் உகூபத்திக்க வஅஊது பின்ன மின்க்க லா உஹ்ªஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக்க''.
(யா அல்லாஹ்!) உனது பொருத்தத்தைக் கொண்டு உனது வெறுப்பை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். உனது தீங்கை அகற்றும் வல்லமை கொண்டு, உனது வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் உன்னைக் கொண்டே உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உனக்குள்ள புகழை என்னால் அளவிட இயலாது. உன்னை நீ எவ்வாறு புகழ்ந்துள்ளாயோ அவ்வாறுள்ளவனாகும்)
நான் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை படுக்கையில் காணாது, இருளில்) எனது கையால் தடவித் தேடிப்பார்த்தேன். அப்போது அவர்கள் (தாம்) தொழுமிடத்தில் இரு பாதங்களும் நட்டப்பட்ட நிலையிலிருந்தார்கள். இந்நிலையில் எனது கை அவர்களின் பாதங்களின் உட்புறத்தில் பட்டுவிட்டது. (அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக) ''அஊது பிரிழாக்க மின் ஸகத்திக்க வஅஊது பிமுஆ ஃபாத்திக்க மின்உ கூபத்திக்க...'' எனும் துஆவை ஓதிக்கொண்டிருந்தார்கள். (ஆயிஷா(ரழி),முஸ்லிம்)
5. ''ரப்பி அஃத்தி நஃப்ª தக்வாஹா வஜக்கிஹா அன்த்த கைரூ மன் ஜக்காஹா அன்த்த வலிய்யுஹா வமவ்லாஹா''.
(எனது ரட்சகனே! என் நஃப்ஸுக்கு அதற்குரிய பயபக்தி நிலையைத் தந்தருள்! மேலும் அதனைப் பரிசுததமாக்கியருள்! அதனைப் பரிசுத்தப்படுத்துவோரில் நீயே மிக்க மேலானவன், நீ தான் அதற்கு உரித்தானவனும், அதன் எஜமானனுமாவாய்.)
ஒருவர் தமது ஆடை, தலைப்பாகை அல்லது தொப்பி ஆகியவற்றின் மீது நெற்றியை வைத்த நிலையில் ஸுஜூது செய்வதன் நிலை:
1. நபி(ஸல்) அவர்கள் தாம் ஸஜ்தா செய்யும்போது, நெற்றியைத் தரையில் நன்கு படும்படி செய்வார்கள். (அபூஹுமைத்(ரழி), அபூதாவூத், திர்மிதீ)
2. நபி(ஸல்) அவர்கள் தொழத்தெரியாத ஒரு நபருக்கு, முறையாகத் தொழுவதைக் கற்றுக் கொடுக்கும்போது...., ''பின்னர் அவர் தக்பீர் கூறி, ஸுஜூது செய்யவேண்டும். அப்போது அவர் தமது நெற்றியைத் தரையில் நன்கு படும்படி செய்யவேண்டும்'' என்ற கூறினார்கள். (ரிஃபாஅத்துபின்ராஃபிஃ(ரழி), பைஹகீ)
மேற்காணும் இரு ஹதீஸ்களும், தொழும்போது ஸுஜூது செய்கையில் நெற்றியைத் தரையில் நன்கு படும்படி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்து கின்றன.
3. நபி(ஸல்) அவர்களைச் சிறிய பாய் ஒன்றில் தொழும்போது அவர்கள் அதன் மீது சுஜூது செய்ய நான் பார்த்துள்ளேன். (அபூஸயீத்(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் ஹதீஸ், ஸுஜூது செய்யும் போது நெற்றி தரையில் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அது தரையில் விரித்துள்ள பாயின் மீதும் இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
4. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்த போது, வெப்பத்தின் காரணமாக எங்களில் சிலர் ஸுஜூது செய்யுமிடத்தில் துணியின் ஒரு ஓரப் பகுதியை வைத்துக்கொள்வோம்.
நூல்கள்: அனஸ்(ரழி), புகாரீ
புகாரீயில் உள்ள இந்த அறிவிப்பில் பொதுவாக ''துணியின் ஒரு ஓரப்பகுதி என்றும், ஆனால் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில் ''தனது துணி'' என்றும், புகாரீயின் மற்றொரு அறிவிப்பில் ''ஸஜத்னா அவாஸியாபினா'' எங்கள் ஆடைகளின் மீது நாங்கள் ஸுஜூது செய்தோம் என்றும் பலவகையில் வாசகங்கள் அமைந்துள்ளன.
எனவே, ''அஸ்ஸவ்பு'' எனும் வார்த்தைக்கு ஆடை, துணி என்ற இரு பொருட்களும் இருக்கும்போது அது ஆடைதான், அல்லது துணி தான் என்று ஒரு பொருளை மட்டும் கூறுவோர், அதற்கான முகாந்தரத்தைக் கூறியாக வேண்டும்.
''அஸ்ஸவ்பு'' என்பதற்கு ஆடை என்பதே பொருள் என்று கூறுவோரின் முகாந்தரம்:
1. நபி(ஸல்) அவர்கள், ஒரு முறை ஒரே ஆடையில் தொழுது கொ ண்டிருந்தார்கள். அப்போதவர்கள் அந்த ஆடையின் மேல் மிச்சமுள்ள பகுதி யால் தரையின் வெப்பத்தையும், குளிரையும் தவிர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இப்னு அப்பாஸ்(ரழி), அஹ்மத்
மேற்காணும் இவ்வறிவிப்பில், ''அஸ்ஸவ்பு'' எனும் வார்த்தையே இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களிடத்தில் இருந்ததோ ஒரு ஆடை தான். அதையே தாம் தொழும்போது அணிந்து கொண்டு. அதைக்கொண்டே தரையின் வெப்பத்தையும், குளிரையும் தவிர்த்துக் கொண்டுமிருந்தார்கள் என்பதாகக் கூறும்போது, அந்த ஆடை சாதாரணத் துணிஅல்ல. அவர்கள் அணிந்துள்ள ஆடைதான என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனையே பின்வரும் அறிவிப்பும் ஊர்ஜிதம் செய்கிறது.
2. நிச்சயமாக நபித்தோழர்கள், தமது கைகள் தமது ஆடைக்குள் (மறைந்து) இருக்கும் நிலையில் ஸுஜூது செய்தவராயிருந்தனர்.
(ஹஸன் பஸரீ(ரஹ்), இப்னு அபீஷைபா, பைஹகீ)
இவ்வறிவிப்பு ஸஹாபாக்களின் நிலை குறித்து தாபியீன்களில் ஒருவரால் எடுத்துக் கூறப்படும் அறிவிப்பாயிருப்பதால், இது ''மக்தூஃ'' எனும் தரத்தைச் சார்ந்தாயிருப்பினும், மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களின் கருத்துக்கு ஒத்திருப்பதால், ஏற்புக்குரியதாகும்.
மேற்காணும் அறிவிப்பு, உடலில் அணிந்துள்ள ஆடைகளின் மீது எவ்வாறு ஸுஜூது செய்வது ஆகுமோ, அவ்வாறே வெப்பம், குளிர் போன்ற காரணங்களை முன்னிட்டு தலையில் அணிந்துள்ள தலைப்பாகை, தொப்பி ஆகியவற்றின் மீதும் ஸுஜூது செய்வது ஆகும் என்பதைக் காட்டுகிறது. இதிலும் 'அஸ்ஸவ்பு' எனும் பதத்திற்கு ஆடை என்ற பொருளே கொள்ளப் பட்டுள்ளது.
''அஸ்ஸவ்பு'' என்பதற்கு ''பொதுவாக துணி'' தான் என்று பொருள் கொள்வோர், தாம் அவ்வாறு கூறுவதற்கு மேற்காணும், 'நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, நெற்றியைத் தரையில் நன்கு படும்படி செய்வார்கள்' என்ற ஹதீஸைத்தான் சான்றாக எடுத்து வைக்கிறார்களே அன்றி, ஒருவருடைய நெற்றி, அவர் தொழும் போது, தாம் அணிந்துள்ள ஆடையால் மறைக்கப்பட்டிருந்து, அதே நிலையில் அவர் ஸஜ்தா செய்தால், அவருடைய ஸஜ்தா கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக ஒரு ஸஹீஹான ஹதீஸையும் அவர்களால் எடுத்துவைக்க முடியவில்லை.
மற்றொரு அறிவிப்பின் நிலை:
நபி(ஸல்) அவர்கள், ஒருவர் தமது நெற்றியின் மீது தலைப்பாகை சுற்றியவராக, நெற்றியின் ஒரு சிறிது பாகத்தை மட்டும் கீழே வைத்து ஸஜ்தா செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, உடனே அவரது தலைப்பாகையை அவருடைய நெற்றிக்குமேல் தூக்கிவிட்டார்கள். (ஸாலிஹுபின் ஹயவான்(ரஹ்), பைஹகீ)
இவ்வறிவிப்பின் தொடரில் ''இப்லுஹைஆ'' எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றிருப்பதால் இது பலஹீனமான அறிவிப்பாக இருப்பதுடன் இதை எடுத்துக் கூறுபவர், இதைத் தமக்கு அறிவித்த ஸஹாபியின் பெயரைக் கூறாததால், 'முர்ஸல்' எனும் பலஹீனமான அறிவிப்பின் தரத்தைச் சார்ந்ததாகும். எனவே, இது ஏற்புக்குரியதல்ல.
ஆகவே, ஒருவர் ஒரு பாயின் மீதோ, பொதுவாக ஏதேனும் ஒரு துணியின் மீதோ, அல்லது வெப்பம், குளிர் போன்றவற்றின் காரணமாக தாம் அணிந்துள்ள சட்டை, தலைப்பாகை, தொப்பி முதலியவற்றின் மீதோ ஸஜ்தா செய்தாலும், ஹதீஸில் கூறப்பட்டிருப்பது போல் ஸஜ்தாவின் போது தமது ஏழு உறுப்புகளையும் கீழே வைத்துவிட்ட தன் காரணமாக அவருடைய ஸஜ்தா நிறைவேறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், நபி(ஸல்) அவர்கள், தாம் ஸஜ்தா செய்யும் போது நெற்றியைத் தரையில் நன்கு படும்படி செய்வார்கள் என்பதாக ஹதீஸ் இருப்பதால், நெற்றியை எப்பொருளாலும் மறைக்காது கீழே படும்படி செய்வதே மிக மேலானதாகும், முறையானதும்கூட நெற்றி மறைக்கப்பட்ட நிலையில் ஸஜ்தா செய்தால் அது நிறைவேறாது என்பதற்கு ஹதீஸ்களில் போதிய ஆதாரங்களில்லை.
முதல் ஸுஜூதிலிருந்து எழுந்து உட்காருதல்:
இந்த இருப்புக்கு ''சிறு இருப்பு, என்று கூறப்படுகிறது. இதுவும் தொழுகையின் முக்கிய கடமை - பர்ளுகளில் ஒன்றாகும்.
1. நபி(ஸல்) அவர்களின் ருகூஃ, ஸுஜூது, இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் உள்ள இருப்பு, ருகூஃவிற்குப் பின் நிற்கும் நிலை ஆகியவை அனைத்தும் சற்றேக்குறைய சமமானவையாகவே இருந்துள்ளன. (பர்ராஉ(ரழி), புகாரீ)
2. நபி(ஸல்) அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தி, இடது காலை (அதன் பாகத்தை) மடக்கி, அதன் மீது உட்காருவார்கள். அப்போது அவர்களுடைய எலும்புகள் அனைத்தும் முறையாக அவற்றின் ஸ்தானங்களில் அமைந்துவிடும். பின்னர் (இரண்டாவது) ஸஜ்தா செய்வார்கள். (அபூஹுமைத்(ரழி), அபூதாவூத்)
சிறு இருப்பில் ஓதும் துஆ:
1. நபி(ஸல்) அவர்கள் தமது இரு ஸுஜூதுகளுக்கு மத்தியில் (சிறு இருப்பில்) ரப்பிஃ ஃபிர்லீ ரப்பிஃ ஃபிர்லீ என்று ஓதிக் கொண்டிருந்தார்கள். (ஹுதைஃபா(ரழி), நஸயீ, இப்னுமாஜ்ஜா) ''ரப்பிஃ ஃபிர்லீ - ரப்பிஃ ஃபிர்லீ'' (எனது ரட்சகனே! என்னை மன்னித்தருள்! எனது ரட்சகனே! என்னை மன்னித்தருள்.
அல்லாஹும்மஃ ஃபிர்லீ - வர்ஹம்னீ - வஜ்புர்னீ - வஹ்தினீ- வர்ஜுக்னீ.
(யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்! எனக்கு அருள்புரி! எனது குறைகளை நிவர்த்தி செய்தருள்! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு (முறையான) ரிஜ்கை - (வருவாயைத்) தந்தருள்!
2. நபி(ஸல்) தமது இரு ஸுஜூதுகளுக்கு மத்தியில் அல்லாஹும்மஃ ஃபிர்லீ- வர்ஹம்னீ - எனும் துஆவை ஓதுவார்கள். (ஜைதுபின்ஹுபாப்(ரழி), ஹாக்கிம்)
இரண்டாவது ஸஜ்தாவும், அதன் தக்பீர்களும்:
இரண்டாவது ஸஜ்தா செய்வதும் தொழுகையின் முக்கிய கடமை பர்ளுகளில் ஒன்றாகும்.
அபூஹுரைரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி வர்ணிக்கையில். பின்னர் ஸுஜூதுக்காக கீழ் நோக்கிச் செல்லும்போது தக்பீர் கூறுவார்கள். மீண்டும் ஸுஜூது செய்கையில் தக்பீர் கூறுவார்கள். (முஸ்லிம்)
இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ஸஜ்தாவும் செய்துள் ளார்கள் என்பது தெளிவு. முதலாம் ஸஜ்தாவைப் போல் இரண்டாவது ஸஜ்தாவும் பர்ளாக . ஆனால் அதற்காக குனியும் போதும், நிமிரும் போதும் தக்பீர் கூறுவது கடமையாகும்.
இரண்டாவது ரகாஅத்துக்காக எழும்போது, உட்காரக் கூடிய இருப்பின் நிலையும் அதிலிருந்து எழும் முறையும்:
இந்த இருப்புக்கு ''ஜல்ஸத்துல் இஸ்த்திராஹத்'' (இளைப்பாரும் இருப்பு) என்று பெயர். இந்த இருப்பு அவசியம் தானா? இல்லையா? என்பதை ஹதீஸ்களின் வாயிலாக கவனிப்போம்.
1. நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையின் ஒற்றைப் படையான ரகாஅத்துகளிலிருந்து (எழும்போது) தாம் சரியாக உட்காராமல் எழமாட்டார் கள் என்பதை மாலிக்குப்பின் ஹுவைரிஸ்(ரழி) தாம் நேரில் கண்டதாக, கூறியுள்ளார்கள் என்று, அபூம்லாபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.
மாலிக்குபின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ
அபூம்லாபா(ரழி) அவர்களின் வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ''இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தினால், உட்கார்ந்து தரையில் ஊன்றி பின்னர் எழுந்திருப்பார்கள்'' என்று . இதில் ''சரியாக உட்கார்ந்து'' எனும் வாசகத்திற்கு பதிலாக ''சரியாக'' எனும் வாசகமில்லாது (வெறுமனே) ''உட்கார்ந்து'' என்று மட்டும் உள்ளது.
இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இரு ஸுஜூதுகளையும் செய்து முடித்துவிட்டு எழும்பும்போது, உட்கார்ந்து ஊன்றி எழுந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம்.
2. அபூஹுமைத்(ரழி) வாயிலாக, ''நபி(ஸல்) இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தி எழுந்து நின்று கொள்வார்கள்'' என்று தஹாவியிலும், பின்னர் தலையை உயாத்தி உட்காராமல் (நேரடியாக) எழுந்துவிடுவார்கள் என்று அபூதாவூதிலும், அதே அபூஹுமைத்(ரழி) அவர்களின் மூலமாகவே அறிவிக்கப்பட்டு ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்விரு அறிவிப்புகளிலும், இரண்டாவது ஸஜ்தா செய்துவிட்டு இடையில் உட்காராமல், நிலைக்கு நேராக எழும்பியுள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம். இவ்விரு ஹதீஸ்களும் ஸஹீஹானவையாகவேயிருக்கிறன.
3. நான் இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களை முதலாவது ரகாஅத்தின் ஸஜ்தாக்களை அவர்கள் முடித்து விட்டு எழும்போது, உற்று நோக்கிக் கொண்டி ருந்தேன். அப்போதவர்கள் (இடையில்) உட்காரமல் தமது பாதங்களின் முற்பகுதிகளின் பலத்தில் நேராக எழுந்திருப்பதைப் பார்த்துள்ளேன்.
அப்துர் ரஹ்மான் பின் யஜீத்(ரஹ்), பைஹகீ
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் பற்றி அப்துர்ரஹ்மான் பின் யஜீத் அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு ஸஹீஹான, முறையான ஸனதுகளைக் கொண்டதுதான் என்பதாக இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள், தமது ஃபத்ஹுல் பாரீயில் குறிப்பிடுகிறார்கள்,
ஆகவே மேற்கண்டவாறு, இது பற்றிய அறிவிப்புகள் ஒரே அமைப்பிலில்லாது, இருவிதமாக இருப்பதோடு, அவை ஸஹீஹானவையாகவு மிருப்பதால், முதலாம் ரகாஅத்து, மூன்றாம் ரகாஅத்துகளின் ஸஜ்தாக்களை முடித்து விட்டு எழும்போது உட்கார்ந்து கையை ஊன்றி எழுவதும், உட்காரா மலும் கையை ஊன்றாமலும் எழுவதும் ஆகிய இரு முறைகளுமே ஆகுமானவையும், சரியானவையுமாகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம்.
இரண்டாம் ரகாஅத்தை எவ்வாறு தொழவேண்டும்
இரண்டாவது ரகாஅத்திற்காக கைகளை எவ்வாறு ஊன்றி எழ வேண்டும்?
இரண்டாவது ரகாஅத்துக்காக ஒருவர் உட்கார்ந்து, பின்னர் தமது கைகளை ஊன்றி எழும்போது சாதாரணமாக கைகளை ஊன்றி எழவேண்டுமே அன்றி, சிலர் கூறுவது போல் கைவிரல்களை மடக்கி, அவற்றை மூடியவாறு ஊன்றி எழ வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. காரணம் அவ்வாறு கை விரல்களை மடக்கி, அவற்றை மூடியவாறு ஊன்றி எழவேண்டும் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை.
நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையில் எழும்போது, மாவு பிசைவது போல், தமது விரல்களை மடக்கியவாறு தரையில் ஊன்றி எழுந்திருப்பர்கள்' என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்பதாக அறிவிப்பொன்று காணப்படுகிறது.
இவ்வறிவிப்பு குறித்து 'இப்னுஸ்ஸலாஹ்' அவர்கள், இது ஸஹீஹான ஹதீஸ் அல்லவென்றும், இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் இது எவ்வித மூலாதாரமுமில்லாத, முறைகேடான, பலகீனமான அறிவிப்பென்றும் கூறியுள்ளார்கள் என்று இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் தமது 'தல்கீஸ்' எனும் நூலில் (பாகம் 3, பக்கம் 492)ல் கூறியுள்ளார்கள்.
அப்படியே இது ஸஹீஹான ஒரு ஹதீஸ் என்று வைத்துப் பார்ப்போமேயானால் இதன் பொருள் மேலே கூறப்பட்டதல்ல. இவ்வறிவிப்பில் இடம் பெற்றுள்ள 'ஆஜீன்' எனும் பதத்திற்கு 'வயோதிகர்' என்பது தான் பொருளாகும்' மாவு பிசையக் கூடியவன் எனும் பொருள் அல்ல. இதன்படி ஹதீஸின் முறையான பொருள், 'ஒரு வயோதிகர் தமது கைகளைத் தரையில் ஊன்றி எழுவது போல், நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை ஊன்றி எழுவார்கள்' என்பதேயாகும்.
இவ்வாறு அந்த அறிவிப்புக்கு இப்னுஸலாஹ் அவர்கள் விளக்கம் கூறிவிட்டு, 'கைவிரல்களை மடக்கிய நிலையில் ஊன்றி எழவேண்டும்'' என்று கூறுவதானது, ஹதீஸின் ஆதாரமின்றி சன்மார்க்கத்தில் இல்லாததோர் செயலை அதில் உண்டு என்று அபத்தமாக கூறுவதாகும் என்றும் அவர்களே கூறியுள்ளார்கள். (தல்கீஸ் பாகம் 3, பக்கம் 492)
இரண்டாம் ரகாஅத்தை எவ்வாறு தொழவேண்டும்?
நபி(ஸல்) அவர்கள், முறை கேடாகத் தொழுத மனிதருக்கு தொழும் முறைகளை விளக்கிக் கூறியபின், இவ்வாறே உமது அனைத்துத் தொழுகைகளிலும் செய்து கொள்வீராக! என்று கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரழி), புகாரீ)
மேற்காணும் இவ்வறிவிப்பின்படி முதலாம் ரகாஅத்தில் இடம் பெற்றுள்ள கிராஅத்து, ருகூஃ, ஸுஜூது, சிறுநிலை, சிறுஇருப்பு முதலியவற்றை நிறைவேற்றியது போன்றே, இரண்டாவது ரகாஅத்திலும் அவற்றை முறையாகச் செய்யவேண்டும்.
இரண்டாவது ரகாஅத்தில் கிராஅத்தை எதைக் கொண்டு துவங்க வேண்டும்?
நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரகாஅத்துக்கு எழுந்தால் (முதலாம் ரகாஅத்திலிருந்தது போல்) சிறிது மவுனமாக இல்லாமல் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று கிராஅத்-ஓதுவதைத் துவங்கி விடுவார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
இவ்வறிவிப்பில், இரண்டாவது ரகாஅத்துக்கு எழுந்தவுடன் சிறிதும் மவுனமாக இல்லாமல், 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதாக கிராஅத்தை ஓத ஆரம்பித்துவிடுவார்கள் எனும் வாசகம் இடம் பெற்றிருப்பதால், 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று ஓதாமலும் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று ஒதத் துவங்கி விடுவார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது.
காரணம் நபி(ஸல்) அவர்கள் 'பிஸ்மில்ஹ்வை'' மெதுவாக ஓதிய பின்னரே அல்ஹம்துவைத் துவங்குவார்கள் என்பதை கீழ்க்காணும் வேறு ஹதீஸ்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்கர்(ரழி) உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரின் பின்னாலும் நின்று தொழுதிருக்கிறேன். ஆனால் அவர்களில் எவரும், 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்பதை சப்தமிட்டு ஓதிக்கொண்டிருக்கவில்லை.
(அனஸ்(ரழி), நஸயீ, அஹ்மத், இப்னு ஹிப்பான்)
எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். அப்போது அவர்கள், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை எங்களுக்கு கேட்கும்படி ஓதவில்லை. (இவ்வாறே) அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) ஆகியோரிடமிருந்து அதை நாங்கள் கேட்டதில்லை. (நஸயீ)
மேற்காணும் ஹதீஸ்களைப் போன்று நபி(ஸல்) அவர்களும் 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்பதை ஓதினார்கள். ஆனால் அதை அவர்கள் சப்தமாக ஓதவில்லை என்பதற்காக பல ஹதீல்கள் உள்ளன.
ஆகையால் முதலாம் ரகாஅத்தைத் தவிர மற்ற ரகாஅத்துகளில் அஊது ஓதவேண்டும் என்பதில்லை.
இரண்டாவது ரகாஅத்தில் இடம் பெற்றுள்ள இருப்பின் நிலை:
மூன்று அல்லது நான்கு ரகாஅத்துகளைக் கொண்டுள்ள தொழுகையில், இந்த இருப்பு 'நடுஇருப்பு' எனப்படும். நடு இருப்பு, தொழுகையின் பிரதான சுன்னத்துகளில் ஒன்றே அன்றி, அதன் பர்ளுகளைச் சார்ந்ததல்ல. ஏனெனில் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அதை மறதியாக தவற விட்டு, நிலைக்கு எழும்பி விட்டார்கள். பின்னர் அதற்காக தொழுகையின் இறுதியில் 'ஸஜ்தா ஸஹ்வு' தான் செய்தார்களே அன்றி, அதை நிறைவேற்றுவதற்காக நிலையிலிருந்து நடு இருப்புக்கு மீளவில்லை.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு ளுஹர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டாம் ரகாஅத்தில் உட்காராமல் எழும்பி விட்டார்கள். அதையொட்டி மற்றவரும் எழுந்துவிட்டனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழுது இறுதியாக அவர்கள் ஸலாம் கொடுப்பதை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்து கொண்டிருந்த அதே நிலையில், ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் தக்பீர் கூறி இரு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறிமுடித்தார்கள். (அப்துல்லாஹ்பின் புஹைனா(ரழி), புகாரீ)
நடு இருப்பில் அமரும் முறை:
நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்தில் உட்காரும் போது, தமது இடது காலின் மீது உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) நட்டிவைத்துக் கொள்வார்கள். (அபூஹுமைத்(ரழி), புகாரீ)
இருப்பில் இருக்கையில் கைகளை எங்கே வைத்து, எந்த விரலால் எவ்வாறு சமிக்கை செய்யவேண்டும்?
நபி(ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில்) தமது இடக்கையை இடது தொடை மீதும், முழங்காலின் மீதும் (சேர்ந்த அமைப்பில்) வைத்து, இவ்வாறே வலக்கையை வலது தொடை மீதும் வைத்துக் கொள்வார்கள். பின்னர் (சுண்டு விரல், மோதிர விரல் ஆகிய) இரு விரல்களையும் மடக்கியவர்களாக, (இந்நிலையில் நடு விரலும் ஓரளவு மடங்கியேயிருக்கும்) நடுவிரலின் மேல், கட்டை விரலை (சிறிது) வளைத்து வட்டமாக வைத்துக கொண்டு, துஆ ஓதியவர்களாக தமது சுட்டு விரலை அசைத்த வண்ணம் இருந்து கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
(வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
விரலை அசைப்பதன் பலன்:
தொழுகையில் இருப்பில் இருக்கும் போது விரலை அசைப்பதானது, ஷைத்தானுக்கு கொடுக்கப்படும் சம்மட்டி அடியாகும்.
(முஜாஹித்(ரழி), பைஹகீ)
விரலை அசைக்காமலும் சமிக்கை செய்யலாம்:
நபி(ஸல்) அவர்கள் (இருப்பில் இருக்கும்போது) தமது விரல்களை (அரபியரின் வழக்கிலுள்ள) 53உடைய அமைப்பில் மடக்கி வைத்துக்கொண்டு, அதாவது வலக்கையின் எல்லா விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு, சுட்டு விரலின் நடுக்கணுவில் கட்டை விரலை வைத்தவர்களாக சமிக்கை செய்தார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்லிம் சுட்டு விரலை மற்ற விரல்களுடன் இணைக்காமலும், அதை அசைக்காமலும் சமிக்கை செய்யும் மற்றொரு முறை:
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் உட்காரும்போது, கட்டைவிரலுக்கு அடுத்துள்ள சுட்டு விரலைத் தவிர, மற்ற எல்லாவிரல்களையும் மூடிக்கொண்டு அதை மட்டும் உயர்த்திய வண்ணம் சமிக்கை செய்தார்கள்.
(இப்னு உமர்(ரழி), முஸ்லிம்)
எந்த விரலையும் மடக்காமல் சுட்டு விரலை மட்டும் உயர்த்தி சமிக்கை செய்யும் முறை:
நபி(ஸல்) அவர்கள் இருப்பின் போது சுட்டு விரலை கிப்லாவை நோக்கி சமிக்கை செய்வதவர்களாக அதைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருப்பார்கள். (ஜுபைர்(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் இந்த அறிவிப்பில் சுட்டு விரலை கிப்லாவை நோக்கி சமிக்கை செய்தார்கள் என்று மட்டுமே கூறப்பட்டிருக்கிறதே அன்றி மற்ற விரல்களை மடக்கி வைத்தார்கள் எனும் விபரம் எதுவும் கூறப்படவில்லை. ஆகவே விரல்களை மடக்காத நிலையில் சுட்டு விரலை கொண்டு மட்டும் சமிக்கை செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஆகவே மேற்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் ஸஹீஹானவையாக இருப்பதால், இவற்றில் எந்த முறைப்படியும் அமல் செய்து கொள்ளலாம். ஒரு சிலர் கூறுவது போல் 'அஷ்ஹது அல்லாஇலாஹ' என்று கூறும் போது, சுட்டு விரலை உயர்த்தி 'இல்லல்லாஹு என்று கூறும்போது அதை மடக்கி வைத்து விடவேண்டும் என்பதற்கோ, அல்லது வேறு சிலர் கூறுவது போல் 'இல்லல்லாஹு' கூறும்போது சுட்டு விரலை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதற்கோ ஹதீஸின் அடிப்படையில் எவ்வித ஆதாரமும் கிடையாது. 'இல்லல்லாஹு' என்று கூறும்போது விரலை உயர்த்துவது சுன்னத்து என்பதாக, முஸ்லிமிலோ அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, போன்ற ஸுனன்களிலோ ஸஹீஹான அறிவிப்போ, அல்லது லயீஃபான -பலகீனமான அறிவிப்பே ஏன் மவ்ழுஃ - இடைச்செறுகளான ஒரு அறிவிப்புக்கூட கிடையாது இவ்வாறே விரலை உயர்த்தி பின்னர் அதை மடக்கி வைத்துவிட வேண்டும் என்பதற்கும் ஹதீஸ்களில் அறவே ஆதாரமில்லை. ஆகவே இருப்பில் அமரும்போதே உடனே சுட்டு விரலை உயர்த்திக் கொள்ளவேண்டும்.
ஜமாஅத்து தவறிவிட்டால் பிறகு ஜமாஅத்து நடத்துவதன் நிலை!
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு தொழ வைத்தார்கள். அதன் பிறகு நபித்தோழர்களில் ஒருவர் அங்கு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, ''ஏன் (ஜமாஅத்துக்கு வராது) தாமதித்து விட்டீர்'' என்றார்கள். அதற்கு அவர் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு, தொழுவதற்கு சென்றுவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு (நன்மை கூடுதலாகக் கிடைப்பதற்கு) உதவி செய்வோர் உங்களில் எவருமில்லையா? என்று கேட்டார்கள். உடனே ஒருவர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார்.
அபூஸயீதில் குத்ரீ(ரழி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்
ஆனால் மீண்டும் ஜமாஅத்து நடத்துவோர் முதல் ஜமாஅத்து நடத்தப்பட்ட மிஹ்ராபில் நின்று நடத்துவதற்கு ஆதாரம் இல்லை. காரணம் இவ்வாறு நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் நடத்தப்படவில்லை. ஆகவே மிஹ்ராபு அல்லாத வேறு இடத்தில் நடத்திக் கொள்வதே முறையாகும்.
பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவது ஆகுமானதாக யிருப்பினும் வீட்டில் தொழுவதே மேலானதாகும்:
உங்கள் பெண்கள் உங்களிடம் இரவு நேரத்தில் பள்ளி(க்கு சென்று தொழ) அனுமதி கோரினால் அனுமதி அளியுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்
பெண்கள் பள்ளிவாசலுக்கு (தொழுவதற்காக)ச் செல்வதைத் தடை செய்யாதீர்கள்! அவர்கள் வீடுகளே அவர்களுக்கு மேலானவையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரழி), அபூதாவூத், அஹ்மத்
ஜமாஅத்தை எதிர்பார்த்து தொழுவதற்காக அமர்ந்திருப் போருக்கும், தொழுது பிறகு உடனே எழுந்து வந்து விடாமல் அதே இடத்தில் அமர்ந்திருப் போருக்கும் மலக்குகளின் துஆ:
(ஜமாஅத்துத்) தொழுகையை எதிர்பார்த்து தமது தொழுமிடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தொழுகையிலே இருந்து கொண்டிருப்பவர். அவர் (வீடு) திரும்பும்வரை அல்லது அவருக்கு உளூ முறியும் வரை யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்! இவருக்குகிருபை செய்தருள்!! என்பதாக மலக்குகள் பிரார்த்தனை செய்து கொண்டிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்
உங்களில் ஒருவர் தமது உளூ முறியாத நிலையில் தாம் தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் வரை யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்! இவருக்குகிருபை செய்தருள்!! என்று மலக்குகள் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்கள். நீங்கள் வீடு திரும்புவதை, தொழுகை தடுத்து கொண்டிருக்கும் வரையில் நீங்கள் தொழுகையிலே தான் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரீ
இமாமத்து - இமாமாகயிருந்து தொழ வைப்போரின் நிலை, இமாமத்துச் செய்வதற்கு மிகவும் ஏற்றமானவர்:
மக்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை அதிகமாக ஓதியவர் இமாமத்துச் செய்வாராக! ஓதலில் அவர்களது (அனைவரும்) சமமானவராயிருப்பின், அடுத்து நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தை (நடைமுறையை) அதிகம் அறிந்தவராவர். சுன்னத்தை அறிந்திருப்பதிலும் அவர்கள் சமமானவராயிருப்பின் ''ஹிஜ்ரத்'' இஸ்லாத் திற்காக நாடு துறந்தவர்களில் முந்தியவராவர். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமான வராயிருப்பின் இஸ்லாத்தை தழுவிய வகையில் முந்தியவராவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி) முஸ்லிம்)
ஒரு முறை நானும் எனது சிறிய தந்தையின் மகனும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி நீங்கள் பிரயாணம் செய்வீர் களானால், நீங்கள் பாங்கு சொல்லி, இகாமத்தும் சொல்லிக் கொள்வீர்களாக! உங்களில் பெரியவர் உங்களுக்கு இமாமத்துச் செய்வாராக! என்று கூறினார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ)
பெண்கள் இமாமாயிருந்து தொழ வைப்பதன் நிலை!
(பெண்களாகிய) எங்களுக்கு ஆயிஷா(ரழி) அவர்கள் இமாமாயிருந்து தொழ வைத்தார்கள். அப்போது பர்ளு தொழுகையில் பெண்களுக்கு மத்தியில் அவர்கள் நின்று கொண்டார்கள் (முன்னால் நிற்கவில்லை).
(ரிப்தத்துல் ஹனபிய்யா(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)
எங்களுக்கு ஒரு முறை உம்மு ஸலமா(ரழி) அஸ்ரு தொழுகையில் இமாமத்துச் செய்தார்கள். அப்போது அவர்கள் எங்களுக்கு மத்தியில் நின்று கொண்டார்கள். (ஹஜீரா(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)
மேற்காணும் இரு அறிவிப்புகளின் படி பெண்கள் இமாமாயிருந்து பெண்களுக்கு தொழ வைப்பது ஆகும் என்பதை அறிகிறோம். ஆனால் பெண் தொழ வைக்கும்போது ஆண்களைப் போல் ஸஃப்புகளுக்கு (வரிசைகளுக்கு முன்னால் நிற்காமல், முதல் வரிசையில் நடுவில் மற்ற பெண்களுடன் சேர்ந்து நின்று கொண்டு தொழ வைக்கவேண்டும்.
முக்ததீ-பின்பற்றித் தொழுபவர் ஒருவரானால் இமாமுக்கு வலப்புறத்திலும், இருவரோ அல்லது அதற்கு அதிகமானவராயிருந்தால் இமாமுக்குப் பின்புறமாக நிற்க வேண்டும்:
நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்று கொண்டிருந்தபோது நான் வந்து அவர்களின் இடப்புறத்தில் நின்றேன். அப்போது அவர்கள் என் கையைப் பிடித்து இழுத்து என்னைத் தமது வலப்புறத்தில் நிற்கும் படி செய்தார்கள். பிறகு ''ஜப்பாருபின் ஸக்ரு'' என்பவர் வந்து நபி(ஸல்) அவர்களின் இடப்புறத்தில் நின்றார். அப்போது அவர்கள் எங்கள் இருவருடைய கைகளையும் பிடித்து எங்களைத் தமது பின்புறமாக நிற்கும்படி செய்து விட்டார்கள். (ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரழி), முஸ்லிம், அபூதாவூத்)
முக்ததீ-பின்பற்றித் தொழுபவர் ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவுமிருந்தால் ஆண் இமாமுக்கு வலப்புறத்திலும் பெண் இமாமுக்கு பின்புறத்திலும் நிற்கவேண்டும்:
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அனஸ்(ரழி) அவர்களின் தாயாருக்கோ அல்லது அவர்களின் சிறிய தாயாருக்கோ (இருவரில் ஒருவருக்கு) தொழ வைத்தார்கள். அனஸ்(ரழி) கூறுகிறார்கள். அப்போது அவர்கள் என்னைத் தமது வலப்புறத்தில் நிறுத்திவிட்டு, பெண்ணாகயிருந்தவர்களை எங்களுக்குப் பின்புறத்திலும் நிற்கும்படி செய்தார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)
பின்பற்றித் தொழுவோரில், இருவர் ஆண்களாகவும் ஒருவர் பெண்ணாகளாகவும், இமாமுக்கு பின்னால் இரு ஆண்களும், அந்த ஆண்களுக்குப் பின்னால் அப்பெண்ணும் நிற்க வேண்டும்:
ஒருமுறை நானும், எனது சகோதரர் எத்தீம் என்பவரும் எங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்களின் பின்புறத்தில் நின்று தொழுது கொண்டிருந்தோம். அப்போது (எங்கள் தாயார்) உம்முஸுலைம் எங்களுக்கு பின்புறமாக நின்று தொழுதார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)
மூவரிருந்தால் ஒருவரை இமாமாக்கி அவரது வலப்புறத்தில் ஒருவரும் இடப்புறத்தில் ஒருவருமாக மூவரும் ஓர் வரிசையில் நின்று தொழ வேண்டும் என்று அறிவிப்பின் நிலை:
ஒருமுறை நானும் எனது சிறிய தந்தை ''அல்கமா'' அவர்களும் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களிடத்தில் மதிய வேளையில் சென்றிருந்தோம். அப்போது ளுஹ்ரு தொழுவதற்காக இகாமத்து கூறினார்கள். நாங்கள் இருவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் என் கையையும், என் சிறிய தந்தையின் கையையும் பிடித்து ஒருவரைத் தமது வலப்புறத்திலும், மற்றொருவரை தமது இடப்புறத்திலும் நிற்கும்படி செய்து அனைவரையும் ஒரே சஃப்பாக - வரிசையாக்கி விட்டு, ''மூவரிருக்கும்போது இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்'' என்று கூறினார்கள். (அஸ்வதுபின் யஜீத்(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
இவ்வறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ''தொரூனுபின் அன்தரா'' என்பவர் பற்றி சிலர் பலர் இவர் நம்பகமற்றவர் என்று கூறியுள்ளார்கள். ''இவருடைய அறிவிப்பு அறவே ஏற்புக்குரியதல்ல'' என்று ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 11,)
ஆகவே இது ஏற்புக்குரியதல்ல என்பதை அறிகிறோம்.
தொழும்போது முறையாக சஃப்பு நிற்பதும் தொழுகையின் அம்சங்களில் ஒன்றாகும்:
''(தொழும் போது) உங்கள் வரிசைகளைச் சீர் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் வரிசையைச் சரி செய்து கொள்வதனாது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
(புகாரீயின் மற்றொரு அறிவிப்பில் ''தொழுகையை நிலைநாட்டும் அம்சங்களில் ஒன்றாகும்'' என்பதாக )
பரஸ்பரம் சேர்ந்து வரிசையாக நிற்கவேண்டும்:
நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) தக்பீர் கூறுவதற்கு சற்றுமுன் எங்கள் பக்கம் தமது முகத்தைத் திருப்பியவர்களாக எங்களை நோக்கி (இடைவெளியின்றி) ''சேர்ந்து நில்லுங்கள்! மேலும் வரிசையில் நேராகவும் நில்லுங்கள்'' என்று கூறுவார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மலக்குகளைப் போல் முறையாக அணி வகுத்து நிற்க வேண்டும்:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து மலக்குகள் நமது ரட்சகனிடத்தில் அணி வகுத்து நிற்பது போல் நீங்கள் அணிவகுத்து நிற்க மாட்டீர்களா? என்றார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! மலக்குகள் தங்கள் ரட்சகனிடத்தில் எவ்வாறு அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அப்போது அவர்கள் மலக்குகள் முதல் வரிசைகளை நிறைவு செய்து கொண்டு, பரஸ்பரம் (வரிசையில்) சேர்ந்து ஒட்டி நின்று கொள்வார்கள் என்று கூறினார்கள்.
(ஜாபிருபின் ஸமுரா(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
தொழுகையில் வரிசை முன்னும் பின்னுமாகயிருந்தால் தொழுவோரின் உள்ளங்கள் மாறுபட்டுவிடும்:
நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக அணிவகுக்கும்போது) வரிசையின் இடையில் வந்து ஒருபுறத்திலிருந்து மறுபுறம் வரை எங்கள் நெஞ்சையும், தோள் புஜங்களையும் தடவிக் கொண்டு (அணி வகுப்பை சரி செய்தவர்களாக) நீங்கள் முன்னும் பின்னுமாக மாறுபட்டு நிற்க வேண்டாம். அவ்வாறாயின் உங்கள் உள்ளங்கள் மாறுபட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்வார்கள். மேலும் நிச்சயமாக முதல் வரிசையில் உள்ளவர்மீது அல்லாஹ் அருள்புரிகிறான். மலக்குகள் நற்பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் கூறுவார்கள். (பர்ராஉபின் ஆஜிப்(ரழி), அபூதாவூத்)
தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து ஸஃப்பு நிற்க வேண்டும்:
நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தை மக்கள் பக்கம் திருப்பியவர்களாக அவர்களை நோக்கி ''உங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மும்முறை கூறிவிட்டு, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் உஙகள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! இல்லை என்றால் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் மாறுபாட்டை உண்டாக்கி விடுவான்'' என்றார்கள். இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை செய்த) பின்னர் (ஸஹாபாக்களில்) ஒருவர் தன் தோள் புஜத்தை பிற நண்பருடைய தோள் புஜத்துடனும், தன் முழங்காலை பிறருடைய முழங்காலுடனும், தன் கரண்டை மொளியை பிறருடைய கரண்டை மொளியுடனும் சேர்த்து வைத்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். என்று நுஃமானுபின் பஷீர்(ரழி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபுல் காஸிமில் ஜத்லீ(ரழி), அபூதாவூத்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களை நோக்கி ''நீங்கள் உங்கள் ஸஃப்பு - வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக நான் உங்களை எனது முதுகுக்குப் பின்னாலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். (இவ்வாறு அவர்கள் வற்புறுத்தி கூறியதாக பின்னர்) எங்களில் ஒவ்வொருவரும் தமது புஜத்தைத் தமது நண்பருடைய புஜத்தோடும், தமது பாதத்தைத் தமது நண்பருடைய பாதத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டோம். (அனஸ்(ரழி), புகாரீ,)
நுஃமானுபின் பஷீர்(ரழி) அவர்களின் வாயிலாக அபுல்காஸிமில்ஜத்லீ அவர்கள் மூலம் அபூதாவூதில் பதிவாகியள்ள அறிவிப்பு புஜத்தோடு புஜம், முழங்காலோடு முழங்கால், கரண்டை மொளியோடு கரண்டை மொளியைச் சேர்த்து சஹாபாக்கள் வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் அறிவிப்புக்கு, அனஸ்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள தமது புஜத்தைத் தமது நண்பருடைய புஜத்தோடும், தமது பாதத்தைத் தமது நண்பருடைய பாதத்தோடும் சேர்த்துக் கொண்டார்கள் என்ற அறிவிப்பு விளக்கமாகவே அமைந்துள்ளது.
மேற்காணும் ஹதீஸின்படி ஒருவர் பிறர் தோளோடு தமது தோளைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்கு சாத்தியம் . ஆனால் பிறர் முட்டுக்காலோடு தமது முழங்காலையும் கரண்டை மொளியோடு தமது கரண்டை மொளியையும் சேர்த்து வைத்துக் கொள்வதென்பது சிரமமானதும் சாத்தியமில்லாததும் கூட, ஆகவே இவ்வாறு அந்த ஹதீஸில் சேர்த்து வைத்துக்கொள்வது பற்றி கூறியிருப்பதன் பொருள், அந்த அளவு மிக நெருக்கமாக பிறர் முழங்காலுக்கு அருகில் தமது முழங்காலையும், கரண்டை மொளிக்கு அருகில் தமது கரண்டை மொளியையும் வைத்திருந்தார்கள் என்றே கொள்ளவேண்டும்!
தோளோடு தோள், காலோடு கால் சஹாபாக்கள் தாமாகவே சேர்த்து வைத்திருந்ததாக ஹதீஸில் காணப்பட்டாலும், இவ்வாறு அவர்கள் சேர்த்து வைத்தவர்களாக, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுததை, நபி(ஸல்) அவர்களும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது புகாரீயின் அறிவிப்பிலிருந்து தெரிய வருகிறது. அதாவது: ''நிச்சயமாக நான் உங்களை எனது முதுகுக்குப் பின்னாலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்ற நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதன்படி சஹாபாக்களின் இச்செய்கையை நபி(ஸல்) அவர்களும் தமது முதுகுக்குப் பின்னால் பார்த்திருப்பதால் இவ்வாறு தோளோடு தோள், காலோடு காலாக தொழுகைக்காக மக்கள் எப்பொழுதும் நிற்க வேண்டும்?
இமாமைக் கவனித்து இகாமத் கூறவேண்டும்
''தொழுகைக்கு ''இகாமத்'' சொல்லப்பட்டால் என்னைப் பார்க்காமல் இகாமத் கூற வேண்டாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
2. தொழுகைக்கு ''இகாமத்'' சொல்லப்படும், நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் புறப்பட்டு வருவதற்கு முன்பே நாங்கள் எழுந்து வரிசைகளை சரிசெய்து கொண்டிருப்போம். பின்னர் அவர்கள் வந்து தமது இடத்தில் நின்று கொள்வார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
3. பிலால்(ரழி) அவர்கள் (ளுஹ்ரு தொழுகைக்கு) சூரியன் சாய்ந்தவுடன் பாங்கு சொல்வார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) புறப்படும் வரை ''இகாமத்'' சொல்லமாட்டார்கள். அவர்கள் (வீட்டை விட்டும்) புறப்பட்டு அவர்களைத் தாம் பார்க்கும் போது தான் ''இகாமத்'' சொல்வார்கள். (ஜாபிருபின் ஸமுரா(ரழி), முஸ்லிம்)
4. அனஸ்(ரழி) அவர்கள் முஅத்தின் - (பாங்கு சொல்பவர்) ''கத்காமத்திஸ்ஸலாத்'' என்று கூறும்போது தான் (தொழுகைக்காக) எழுந்து நிற்பார்கள். (இப்னு முன்திர்)
''இகாமத்'' சொல்ல ஆரம்பித்தவுடன் எழுந்து நின்று கொள்ளவேண்டும் என்பதற்கோ, ''இகாமத்'' சொல்லி முடித்தவுடன் எழுந்திருக்க வேண்டும் என்பதற்கோ ஹதீஸ்களில் ஆதாரமில்லை.
''இகாமத்'' சொல்லும்போது இன்னகட்டத்தில் தான் மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பதாக, குறிப்பிட்ட வரையளவு இருப்பதாக யாரும் கூற நான் கேட்டதில்லை'' என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தமது ''முஅத்தா''வில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே மேற்காணும் ஹதீஸ்களின்படி பொதுவாக இகாமத் சொல்லும்போது மக்கள் எழுந்து தமது வரிசைகளை சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதையும் ''இகாமத்'' சொல்பவர் இமாமுடைய நிலையைக் கவனித்து ''இகாமத்'' சொல்லவேண்டும் என்பதையும் அறிகிறோம்.
ஓர் இமாம் தாம் ''இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நிய்யத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (தனித்துத்) தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் வந்து அவர்களின் சமீபத்தில் ஒரு பக்கமாக (தொழுவதற்காக) நின்று கொண்டேன். பிறகு மற்றொருவர் வந்து அவரும் நின்று கொண்டார். இறுதியாக ஒரு கூட்டமே (தொழுது கொண்டு) இருப்பதை உணர்ந்து (தொழுகையை நீட்டாமல்) குறைந்த பட்ச அளவுள்ள தொழுகையாக தொழ வைத்து முடித்தார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)
நான் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடப்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (தாம் தொழும்போதே) எனது தலையைப் பிடித்து இழுத்து தமது வலப்புறம் நிற்கும்படி செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேற்காணும் இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் தனிமையாக நின்று தொழுது கொண்டிருக்கும்போது பிறர் அவர்களுடன் சேர்ந்து தொழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆகவே அவர்கள் ஆரம்பத்தில் இவர்களுக்கு தாம் இமாமாக நின்று தொழ வைப்பதாக நிய்யத்துச் செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் ஆரம்பத்தில் தனிமையாகவே தொழுது கொண்டிருந்தார் என்பதை அறிகிறோம்.
மேற்காணும் இந்த ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் நஃபிலான தொழுகைக்கு இமாம், தாம் ''இமாமாக நின்று தொழ வைக்கிறேன்'' என்று நிய்யத்து செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் பர்ளான தொழுகையாயிருந்தால் நிய்யத்து செய்தாக வேண்டும் என்கிறார்கள். அதுவும் சரியானதல்ல.
காரணம் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தமது சஹாபாக்களுக்கு தொழ வைத்தார்கள். அதன் பிறகு நபித்தோழர்களில் ஒருவர் அங்கு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தைக் கூறிவிட்டு தொழுவதற்கு நின்றுவிட்டால்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு உதவி செய்வோர் உங்களில் எவரும் இல்லையா? என்று கேட்டார்கள். உடனே ஒருவர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார்.
(அபூஸயீதில் குத்ரீ(ரழி), திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)
இவ்வறிவிப்பில் ஒருவர் பர்ளான தொழுகையின் ஜமாஅத்தைத் தவறவிட்டு அவர் தனிமையாகத் தொழுகையில், பர்ளு தொழுது கொண்டிருக்கும் போது அவரை, மற்றொருவர் பின்பற்றி தொழுதுள்ளார். அவர் ஆரம்பத்தில்தாம் இமாமாக நின்று தொழ வைப்பதாக நிச்சயித்துச் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிவதுடன் நபி(ஸல்) அவர்களும் அவரை நோக்கி இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நீர் நிய்யத்துச் செய்து கொள்ளும் என்று கூறவுமில்லை, என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று ஹதீஸ்களின் வாயிலாக ஆதாரம் இல்லை என்பதை அறிகிறோம்.
இமாம் மக்களின் நிலையை உணர்ந்து தொழுகையை சுலபமாக்கிக் கொள்ளவேண்டும்?
உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்தால் அவர் (தொழுகையைச்) சுலபமாக்கிக் கொள்வாராக! ஏனெனில் அவர்களில் இயலாதவர் நோயாளி, வயோதிகர் ஆகியோர் உள்ளனர். உங்களில் ஒருவர் தனியாகத் தொழுதால் தமது விருப்பத்திற்கேற்ப (தொழுகையை) நீட்டிக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக இன்ன நபர் எங்களுக்கு தொழுகையை நீட்டித் தொழ வைப்பதால், நான் காலைத் தொழுகைக்கு காலதாமதமாகச் செல்கிறேன் என்று கூறினார். அன்று நபி(ஸல்) அவர்களுக்கு பிரசங்கத்தின் போது ஏற்பட்ட கோபத்தைப் போன்று நான் பார்த்ததே இல்லை. அப்போது அவர்கள் நிச்சயமாக உங்களில் மக்களை வெறுப்படையச் செய்வோர் இருக்கிறீர். ஆகவே உங்களில் எவரேனும் பிறருக்குத் தொழ வைக்க நேரிட்டால் (தொழுகையை) சுலபமாக்கிக் கொள்வீராக! ஏனெனில் அவர்களில் இயலாதவர், வயோதிகர், சுயதேவை யுடையவர் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறினார்கள். (அபூமஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களின் தொழுகை மிகச் சுலபமான தொழுகையாகவும் ஆனால் மிகவும் சம்பூரணமான தொழுகையாகவும் அவ்வாறு வேறு யாதொரு இமாமுக்குப் பின்னால் நான் தொழுததில்லை. அவர்கள் குழந்தை அழுகுரலைக்கேட்டு அக்குழந்தையின் தாய் சிரமம் அடைவார் என்று அஞ்சி தொழுகையைச் சுலபமாக்கிக் கொள்வார்கள். என்பதாக அனஸ்(ரழி) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (ஷரீக்குபின் அப்தில்லாஹ்(ரழி), புகாரீ)
நபி(ஸல்) அவர்கள் (தொழ வைத்தால்) தொழுகையை சுலபமானதாகவும் ஆனால் அதைச் சம்பூரணமானதாகவும் ஆக்குவார்கள். (அனஸ்(ரழி), புகாரீ)
முஆதுபின் ஜபல்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களோடு தொழுது விட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்குத் தொழ வைத்து கொண்டிருந் தார்கள். ஒருமுறை நபி(ஸல்) அவர்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு பிறகு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு ''இகாமத்'' செய்தார். தொழ வைத்தார். அப்போது அவர் ''சூரத்துல் பகரா (என்னும் தீண்டதோர் சூரா)வை ஓதத் துவங்கி விட்டார். உடனே ஒருவர் திரும்பி ஸலாம் கொடுத்துவிட்டு, பிறகு தாம் தனிமையாகத் தொழுதுவிட்டு (வீடு) திரும்பிவிட்டார்.
அப்போது அவரைநோக்கி மக்கள், நீர் முனாபிக்காம் விட்டீரா? என்று கேட்டனர். அதற்கு அவர் இல்லை, இறைவன்மீது ஆணையாக இல்லவே இல்லை. நான் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்து இச்செய்தியைக் கூறுவேன் என்று கூறிவிட்டு பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தண்ணீர் இறைக்கும் ஒட்டகத்தை வைத்துக் கொண்டு பகல் முழுவதும் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
''முஆத்'' என்பவர் உங்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு தமது கூட்டத்தாரிடம் வந்து, (தாம் தொழவைப்பவராக) 'சூரத்துல் பகரா'வைத் துவங்கி விடுகிறார் என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் முஆதை நோக்கி, முஆதே! நீர் குழப்பக்காரரா? என்று கேட்விட்டு, நீர் வஷ்ஷம்ஸி வளுஹாஹா - வள்ளுஹா வல்லைலி இதாஸஜா - ஸப்பி ஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா ஆகியவற்றை ஓதுவீராக! என்றார்கள். (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஜமாஅத்தில் யாரை மையமாக வைத்து தொழுகையை சுலபமாக்க வேண்டும்?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, நீர் உமது கூட்டத்தாருக்கு இமாமாக உள்ளீர். ஆகையால் அவர்களில் மிகவும் பலகீனமானவரை மையமாகக் கொண்டு அவர்களைக் கணித்துக் கொள்வீராக! என்றார்கள். (உஸ்மானுபின் அபில்ஆஸ்(ரழி), அபூதாவூத், நஸயீ)
முதல் ரகாஅத்தை மக்கள் அடைந்து கொள்வதற்காக இமாம் அதை நீட்டுவது நல்லதாகும்.
தொழுகைக்கு ''இகாமத்'' சொல்லப்பட்டுவிடும், ஒருவர் 'பகீஃ' எனும் இடத்திற்குச் சென்று தமது சுய தேவையை பூர்த்தி செய்துவிட்டு உளூ செய்துவிட்டு வருவார். அதுவரை நபி(ஸல்) அவர்கள் (கிராஅத் ஓதிக்கொண்டு) முதலாம் ரகாஅத்தை நீட்டியவர்களாக, அதிலேயே இருந்து கொண்டிருப்பார்கள்.
(அபூஸயீதில் குத்ரீ(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா)
இந்த அறிவிப்பின்படி மக்கள் முதல் ரகாஅத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல் ரகாஅத்தை மட்டும் நீட்டுவது வரவேற் கத்தக்கது என்பதை அறிகிறோம்.
இமாமைப் பின்பற்றித் தொழுவோர் எந்தச் செயலிலும் இமாமை முந்துவது கூடாது:
இமாமுக்கு முன் தமது தலையை உயர்த்துவோர் அவரது தலையைக் கழுதையின் தலையாகவோ அல்லது அவரது உருவத்தை கழுதையின் உருவமாகவோ அல்லாஹ் மாற்றி விடுவான் என்பதை நீங்கள் பயந்து கொள்ள வேண்டாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
(முஹம்மதுபின் ஜியாத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் ''ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்'' என்று கூறுவார் களானால் அவர்கள் ஸஜ்தாவுக்குச் சென்றடையும் வரை எங்களில் எவரும் தமது முதுகை வளைக்கமாட்டார்கள். அதற்கு பின்னரே நாங்கள் ஸஜ்தா செய்வோம் என்று பர்ராஉ(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்தவுடன் எங்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள். மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு இமாமாக இருக்கிறேன். ஆகவே நீங்கள் ருகூஃ, சுஜூது, நிலை, தொழுகையை (நிறைவு செய்து) விட்டு திரும்புதல் ஆகியவற்றில் எனக்கு முந்திவிடாதீர்கள். நிச்சயமாக நான் உங்களை எனக்கு முன்னும் பின்னும் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு, முஹம்மதுவின் உயிர் யாருடைய கைவசத்தில் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக, நான் பார்ப்பனவற்றை நீங்கள் பார்த்துவிட்டால், குறைவாகச் சிரித்து, அதிகமாகவே அழுவீர்கள் என்றார்கள்.
அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? என்றார்கள். அதற்கு அவர்கள் நானோ சுவர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கிறேன் என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் ஹதீஸ் ஒன்றில் ''ருகூஃ, சுஜூது முதலியவற்றில் இமாமுக்கு முன்னால் ஒருவர் தமது தலையை உயர்த்தினால், அவருடைய தலையைக் கழுதையின் தலையாகவோ அல்லது அவருடைய உருவத்தை கழுதையின் உருவமாகவோ மாற்றப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.
மற்றொரு ஹதீஸில் ''ருகூஃ, சுஜூது, நிலை, ஸலாம் கொடுத்தல் முதலியவற்றில் இமாமுக்கு நீங்கள் முந்திவிடாதீர்கள்'' என்று கூறப்பட்டி ருப்பதால் இதிலிருந்து இமாமுக்கு முந்துவது தான் கூடாது. ஆனால் அவரைத் தொடர்ந்து அவருடனேயே ருகூஃ, சுஜூது முதலியவற்றை செய்வது ஆகும் என்பதாகத் தெரிய வந்தாலும், மேற்காணும் பர்ராஉ(ரழி) அவர்களின் அறிவிப்பின்படி இமாம் ஒரு செய்கையைச் செய்ய முற்பட்ட பின்னரே, அவரைப் பின்பற்றித் தொழுவோர் அந்தச் செய்கையைச் செய்வதற்கு முற்படுவதுதான் சிறப்பாகும் என்பதை அறிகிறோம்.
இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றித் தொழுவோர் எவ்வாறு தொழ வேண்டும்?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்து, அவர்களின் வலப்புறம் அடிபட்டுவிட்டது. அப்போது அவர்களை நலம் விசாரிப்பதற்காக நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அதுசமயம் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்துகொண்டு தொழவைத்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவர் களாகவே தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்தவுடன் பின்வருமாறு கூறினார்கள்.
ஒருவரை இமாமாக நியமிக்கப்படுவதெல்லாம், அவரைப் பின்பற்று வதற்காகவே ஆகவே அவர் தக்பீர் கூறினால் நீங்கள் தக்பீர் கூறுங்கள். அவல் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ''ஸமி அல்லாஹ்லிமன் ஹமிதஹ்'' என்று கூறினால் நீங்கள் ''ரப்பனா வலக்கல்ஹம்து'' என்று கூறுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதபோது சஹாபாக்களும் உட்கார்ந்து தொழுத சம்பவமானது, நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் ஒரு முறையை அமர்ந்து ஒருமுறை ஏற்பட்டுள்ள சுகக்குறைவின் போது தான். ஆனால் தொழுதபோது மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நின்றவர்களாகவே தொழுதுள்ளார்கள். அதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களை உட்கார்ந்து தொழும்படி ஏவவில்லை. இதன் மூலம் அவர்கள் தமக்குப் பின்னால் நின்று தொழுததை அங்கீகரித்து விட்டார்கள் என்பதை அறிகிறோம்.
ஆகவே நபி(ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தைய செயலையே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பதாக ஹுமைதீ(ரஹ்) அவர்கள் கூறுவதாக புகாரீயில் இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (ஃபத்ஹுல்பாரீ பாகம் 2,)
நஃபில் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவர் பின்பற்றித் தொழுவது கூடும்:
முஆதுபின் ஜபர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஷாத்தொழுகையைத் தொழுதுவிட்டு தமது கூட்டத்தாரிடம் வந்து அதே தொழுகையை அவர்களுக்குத் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (ஜாபிர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
''அவருக்கு (முஆதுபின் ஜபர்(ரழி) அவர்களுக்கு) அது நஃபிலாகவும், அவர்களுக்கு (அவரைப் பின்பற்றி தொழுபவர்களுக்கு) பர்ளாக்கப்பட்டடுள்ள இஷாவாகவும் உள்ளது'' என்று தாருகுத்னீயின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
மேற்காணும் அறிவிப்பில் நபித்தோழரில் ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் இஷாவைத் தொழுதுவிட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து, அதே தொழுகையைத் தொழ வைத்திருப்பதாகப் பார்க்கிறோம். பர்ளு தொழுத ஒருவர் மீண்டும் அதே தொழுகையைத் தொழும்போது அவருக்கு அது நபிலாகி விடுகிறது.
ஆகவே முஆதுபின் ஜபல்(ரழி) அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் நபில் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவர் இவ்வாறு பின்பற்றித் தொழுவது ஆகும் என்று அதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
பர்ளு தொழும் ஒருவரை நபில் தொழுபவர் பின்பற்றித் தொழுவதும் கூடும்:
நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் ஹஜ்ஜின்போது ஆஜராகியிருந்தேன். அப்போது ''மஸ்ஜிதுல் கைஃப்'' எனும் பள்ளியில் அவர்களுடன் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் தமது தொழுகையைத் தொழுதுவிட்டுத் திரும்பி உட்கார்ந்தபோது, அக்கூட்டத்தின் கடைசியில் இரு நபர்கள் தம்மோடு தொழாதவர்களாக இருந்து கொண்டிருப்பதைக் கண்டு, அவ்விருவரையும் தம்மிடம் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். உடன் அவ்விருவரும் நடுங்கிய நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அவர்களை நோக்கி ''நீங்கள் இருவரும் ஏன் எங்களுடன் சேர்ந்து தொடரவில்லை என வினவினார்கள் அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் கூடாரங்களிலேயே தொழுது விட்டோம் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கி, நீங்கள் இவ்வாறு நடந்துகொண்டது முறை அல்ல-கூடாது. நீங்கள் உங்கள் கூடாரங்களில் தொழுதவர்களாயிருப்பினும் பின்னர் ஜமாஅத்து நடந்து கொண்டிருக்கும் ஒரு பள்ளிக்கு வருவீர்களானால், அவர்களுடன் சேர்ந்து நீங்களும் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில் இத்தொழுகைகள் உங்களுக்கு நஃபிலாகிவிடும் என்றார்கள். (ஜாபிருபின் யஜீத்(ரழி), திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், ஹாக்கிம்)
ஆகவே நஃபில் தொழும் ஒருவரை பர்ளு தொழுபவரும், பர்ளு தொழும் ஒருவரை நஃபில் தொழுபவரும் பின்பற்றித் தொழுவது தாராளமாகக் கூடும் என்பதைத் தெளிவாக அறிகிறோம். ''பர்ளு தொழுபவரை மட்டும் நபில் தொழுபவர் பின்பற்றித் தொழுவது கூடும். ஆனால் நபில் தொழுபவரை பர்ளு தொழுபவர் பின்பற்றித் தொழுவது கூடாது'' என்பதற்கு ஹதீஸ் வாயிலாக முறையான ஆதாரம் எதுவுமில்லை.
இமாமின் தவறுகளை ஆண்கள் தஸ்பீஹ் மூலம் பெண்கள் கைகளைத் தட்டுவதன் மூலமும் உணர்த்த வேண்டும்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ''பனு அம்ரிபின் அவ்ஃபு(ரழி) அவர்களிடத்தில், அவர்கள் சம்பந்தப்பட்டதோர் பிரச்சனையை ஒழுங்குபடுத்துவதற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டது. முஅத்தின்- (பாங்கு கூறுபவர்) அபூபக்ரு(ரழி) அவர்களிடம் வந்து நான் இகாமத்துச் சொல்கிறேன். நீங்கள் மக்களுக்குத் தொழ வைக்கிறீர்களா? என்று கேட்க, அதற்கு அவர்கள் ''சரி'' என்றார்கள். அபூபக்ரு(ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழ வைக்கத் துவங்கி விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் தொழுது கொண்டிருக்கும் அதே நிலையில் வந்து, தாமும் வரிசையில் சேர்ந்து நின்று கொண்டார்கள்.
மக்கள் கைகளைத் தட்டினார்கள். அபூபக்ரு(ரழி) அவர்களின் தொழுகையில் திரும்பிப்பார்க்காதவர்களாக இருந்து கொண்டிருந்தார்கள். மக்கள் கைதட்டலை அதிகமாக்கியபோது, அவர்கள் திரும்பியவுடன் நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூபக்ரு(ரழி) அவர்களை தமது இடத்திலேயே இருக்கும்படி சமிக்ஞை செய்தார்கள். உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதர் இதற்காக சமிக்ஞை செய்து கட்டளை இட்டமைக்காக (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில்) தமது இரு கைகளையும் ஏந்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக பின்னால் வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள்.
உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று தொழ வைத்துவிட்டு, அபூபக்ரே! நான் உம்மை உங்கள் இடத்திலேயே நிற்கும்படி சமிக்ஞையாக கட்டளையிட்டும் எதற்காக அதை மறுத்து (பின்னால் வந்து) விட்டீர்கள் என்றார்கள். அதற்கு அபூபக்ரு(ரழி) அவர்கள் அல்லாஹ்வுடைய ரசூலுக்கு முன்னால் அபூகுஹாஃபாவின் மகன் நின்று தொழ வைப்பதற்கு அருகதை இல்லையே என்றார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, நீங்கள் கை தட்டலை அதிகப்படுத்தும் நிலையில் உங்களை நான் ஏன் பார்க்க வேண்டும்? ஒருவருக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டுவிட்டால், நீங்கள் தஸ்பீஹ் செய்யவேண்டும். தஸ்பீஹ் செய்தால் அவர் அதனை உணர்ந்து கொள்வார். கைதட்டல் என்பதெல்லாம் பெண்களுக்குரியதாகும் (ஆண்களுக்கல்ல) என்று கூறினார்கள். (ஸஹ்லுபின் ஸஃது(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஒருவர் இமாமை காணும் எந்நிலையிலும் பின்பற்றுவது கூடும். ஆனால் ருகூஃவில் முழுமையாக தாம் சேர்ந்து கொள்ளாதவரை, அதை ஒரு ரகாஅத்தாக கணக்கிடுவது கூடாது:
நாங்கள் ஸஜ்தாவில் இருக்கும்போது நீங்கள் வந்தால் (நீங்களும்) ஸஜ்தா செய்து கொள்ளுங்கள். ஆனால் அதை (ரக்அத்) கணக்கில் ஒன்று எனக்கருதி விடாதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு எவர் ருகூஃவை அடைந்து கொள்கிறாரோ, அவர் அந்த தொழுகை(யில் ரகாஅத்தையே) அடைந்து கொண்டார் என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), ஹாக்கிம், அபூதாவூத்)
எவர் தொழுகையிலிருந்து ஒரு ரகாஅத்தை, இமாம் தமது முதுகெலும்பை (ருகூஃவிலிருந்து) நிமிர்த்துவதற்கு முன்னர் அடைந்து கொள்கிறாரோ, நிச்சயமாக அவர் அந்த ரகாஅத்தை அடைந்து கொண்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுஹிப்பான்)
நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருந்து கொண்டிருக்கும்போது அபூபக்ரா(ரழி) அவர்கள் பள்ளியில் நுழைந்தார்கள். தமக்கு ருகூஃ தவறிவிடும் என்ற பயத்தால் உடனே ருகூஃ செய்துவிட்டு, பிறகு ஒரு சில காலடிகள் வரிசையை நோக்கி எடுத்து வைத்துக் கொண்டார்கள். தொழுகை முடிந்தவுடன், இது விஷயத்தை அபூபக்ரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூற, அதற்கவர்கள் அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! மீண்டும் செய்யாதீர் என்றார்கள். (அபூபக்ரா(ரழி), புகாரீ, அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான்)
மேற்காணும் ஸஹீஹான பல ஹதீஸ்களின் வாயிலாக ஒருவர் இமாமை ருகூஃவில் முழுமையாகப் பெற்றுக் கொள்வாரானால் அவருக்கு அந்த ரகாஅத்து கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. இமாமுக்குப் பின்னால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதிய பிறகு ருகூஃவில் சேர்ந்தால் தான் அந்த ருகூஃவை ஒரு ரகாஅத்தாக கணக்கிடப்படும். ஆனால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாமல் ருகூஃவில் சேருகிறவர்களுக்கு அந்த ருகூஃ ஒரு ரகாஅத்தாக கணக்கிடப்பட்ட மாட்டாது என்று கூற்றுக்கு சரியான ஆதாரமில்லை. மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக இமாமை ருகூஃவில் முறையாக அடைந்து கொள்பவர் அந்த ரகாஅத்தையே அடைந்து கொள்வார் என்பதை அறிகிறோம்.
''பித்அத்'' முதலிய தவறுகள் செய்யும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதன் நிலை:
ஒருமுறை ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால், அவருடைய ''பித்அத்'' அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள். (ஹிஷாமுபின் ஹஸ்ஸான்(ரஹ்), முஸ்னத் ஸயீதுபின் மன்சூர்)
''அதிய்யுபின் கியார்'' என்பவர் உஸ்மான்(ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது, அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்கு துன்பம் வந்து சம்பவித்துள்ளது.
(இப்போது) எங்களுக்கு குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாம் விடுவோமா என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார். அதற்கு அவர்கள் தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக? என்றார்கள். (அதிய்யுபின் கியார்(ரஹ்), புகாரீ)
மேற்காணும் உஸ்மான்(ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழவைப்பவர் முஸ்லிமாக இருந்தால் போதும், அவர் ''பித்அத்'' காரராகவோ, அல்லது வேறு வகையான தவறுகள் செய்பவராகவோ இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து, நஷ்டம் அடைவதை விட இத்தகையோருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுவதே அவசியமானது என்பதை அறிய முடிகிறது.
பின்பற்றித் தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும் போது, இமாம் முறை கேடாகத் தொழுது, இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரைப் பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது:
''உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பவர்களானால் உங்களுக்கு நல்லதுதான் அவர்கள் தவறிழைப்பார்களானால் அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
ஒரு கூட்டத்தார் வந்து உங்களுக்கு தொழ வைப்பார்கள் அவர்கள் (தொழுகையை) நிறைவாகச் செய்வார்களானால், அவர்களுக்கும், உங்களுக்கும் நல்லதுதான். (அவ்வாறின்றி) அவர்கள் (தொழுகையில்) குறைபாடு செய்வார் களாயின் அவர்களுக்குத் தான் கேடு. உங்களுக்கு நல்லது தான் (அவர்கள் தொழுகையில் செய்துள்ள குறைபாட்டால் உங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை.) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), ஷாபீயீ)
அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி) அவர்கள் ''கஷ்பிய்யா காரிஜிய்யா'' ஆகிய பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், அவர்கள் தமக்குள் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.
அதுசமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டிருக்கும் இந்தக்கூட்டத்தாருக்குப் பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் யார் ''ஹய்யஅலஸ் ஸலாஹ்'' (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுக்கிறாரோ, அவருக்கு பதில் அளிப்பேன்.
யார் ''ஹய்யஅலல் ஃபலாஹ்'' (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுக்கிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் ''ஹய்ய அலா கத்லி அகீக்கல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ'' (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்புவிடுக்கிறாரோ, அதற்கு உடன்படமாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள். (நாபிஉ(ரழி), ஸுனனு ஸயீதுபின் மன்சூர்)
தொழும் முறை
''உளூ'' இல்லாத இமாமுக்குப் பின்னால் தொழுதவர்களின் தொழுகை நிறைவேறிவிடும்:
ஒருமுறை அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்களிடம் உளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்துவிட்டால் என்ன செய்யவேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் (இமாம்) மட்டும் தொழுகையை மீட்டவேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸாலிம்(ரழி), தாருகுத்னீ)
குளிப்பு கடமையாக உள்ள இமாமுக்குப் பின் தொழுதவர்களின் தொழுகையும் கூடிவிடும்:
ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி - குளிப்புக்கடமை உள்ளவர்களாயிருக்கும் போது, (மறதியாக தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்துவிட்டார்கள். பின்னர் நினைவு வரவே அவர்கள் மட்டும்) தொழுகையை மீட்டி தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை. (அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாருகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்கள், (அதர்) - ஸஹாபாக்களின் சொற்செயல்களின் வாயிலாக தொழவைக்கும் ஒரு இமாம் அவர் எப்படி உள்ளவராக இருந்தாலும் சரி, அவர் தொழுகையில் என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் சரி, அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும்போது, அவற்றால் பின்பற்றியவர்களின் தொழுகைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெளிவாக அறிகிறோம்.
தொழவைக்கும் இமாம்கள் சிறந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்ற ஹதீஸின் நிலை:
''உங்கள் இமாம்களை சிறந்தவர்களாக நியமித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள்தான் உங்களுக்கும் உங்கள் ரட்சகனுக்கும் இடையில் தூதுக்குழுவினராவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தாருகுத்னீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ''ஸலாமுபீன் சுலைமானில் மதாயீனீ'' எனும் நம்பகமற்றவர் இடம்பெற்றிருப்பதால் ஹதீஸ்கலா வல்லுநர்கள் இவ்வறிவிப்பை பலகீனமானது என்கிறார்கள். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு வந்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் கோளாறுடையவைகளாகவே காணப்படுகின்றன.
தொழும்போது ''ஸஃப்பு'' - தொழும் வரிசையில் சேராமல், பின்னால் நின்று தொழுவோரின் நிலை:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸஃப்புக்குப் பின்னால் தனித்து தொழுது கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து, (அவர் தொழுது முடிக்கும்வரை) அவ்விடத்திலேயே நின்று, அவர் தொழுது முடித்தவுடன் அவரை நோக்கி, ''நீர் உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! ஏனெனில் ஸஃப்புக்குப் பின்னால் தனித்துத் தொழுவோருக்கு தொழுகை இல்லை'' என்றார்கள். (அலிய்யுபீன் ஷைபான்(ரழி), இப்னுமாஜா, அஹ்மத்)
ஒருமுறை அபூபக்ரா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கும்போது (அவசரமாக) ஸஃப்பில் தாம் சேர்வதற்கு முன்பே ருகூஃ செய்துவிட்டார்கள். (மற்றொரு அறிவிப்பில் ருகூஃ செய்துவிட்டு ருகூஃ செய்த நிலையிலேயே நடந்தவர்களாக ஸஃப்பில் சேர்ந்து கொண்டார்கள் என்று உள்ளது) பிறகு இது விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் தாம் எடுத்துக் கூறியபோது, அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகமாக்குவானாக் மீண்டும் செய்யாதீர்! என்றார்கள். (அபூபக்ரா(ரழி), புகாரீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் அலிய்யுபின் ஷைபான்(ரழி) அவர்களின் அறிவிப்பில் 'ஸஃப்பில் சேராமல் பின்னால் தனித்தவராக நின்று தொழுபவரின் தொழுகை நிறைவேறாது'' என்று கூறப்பட்டிருப்பது, உண்மையில் தொழுகை நிறைவேறாது என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதல்ல.
''பள்ளியின் அண்டை வீட்டவருக்கு பள்ளியில் அன்றி தொழுகையில்லை'' இவ்வாறும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் பொருள் பள்ளியின் அண்டைவீட்டார் பள்ளியில் தொழுவதே மேல் என்பதே தவிர சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் தொழுதுவிட்டால் அவர் தொழுகை நிறைவேறாது என்பதல்ல.
இவ்வாறுதான், தொழுபவர் ஸஃப்பில் சேர்ந்து தொழுவதுதான் மேல், 'ஸஃப்புக்குப் பின்னால் தனித்து தொழுபவருக்கு தொழுகை இல்லை' என்றால் இவ்வாறு தொழுவது முறைஅல்ல. இதனால் தொழுகையின் முழுமையான பலனை அடைந்துகொள்ள முடியாது என்பதே தவிர, தொழுகை கூடாது - நிறைவேறாது என்பதல்ல.
அவர் முறைகேடாக, ஸஃப்புக்குப் பின்னால் தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே உமது தொழுகை கூடாது. நிறைவேறாது என்று நபி(ஸல்) சொல்லியிருப்பார்கள். எனவே அவருடைய அத்தொழுகை கூடும் - நிறைவேறிவிடும் என்ற நிலை இருந்ததினால் தான், அவ்விடத்திலேயே நின்று அவர் தொழுது முடிப்பதை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தது காட்டுகிறது, மீண்டும் அவர் இத்தகைய தவறு செய்வதை கண்டிக்கும் வகையில் தான் மறுபடியும் தொழும்படி கூறியுள்ளார்கள்.
இவ்வாறே அடுத்து ''அபூபக்ரா(ரழி)'' அவர்கள் நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கும் போது, (அவசரமாக) தாம் ஸஃப்பில் சேருவதற்கு முன்பே ருகூஃ செய்துவிட்டார்கள். பிறகு இது விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறியபோது அல்லாஹ் உமக்கு ஆர்வத்தை அதிகமாக்குவானாக! மீண்டும் (இவ்வாறு) செய்யாதீர் என்று கூறினார்களே தவிர, அவருடைய தொழுகையை மீட்டும்படி கூறவில்லை. இதன் மூலமாகவும் ஸஃப்புக்குப் பின்னால் தனித்துப் தொழுபவரின் தொழுகை முறியாது என்பதை அறிகிறோம்.
ஸஃப்பில் உள்ள ஒருவரை பின்னால் இழுத்து தம்மோடு வைத்துக் கொண்டு தொழ வேண்டும்'' என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளின் நிலை:
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸஃப்புக்குப் பின்னால் தொழுதவரைப் பின்னால், தொழுகையாளியே! நீர் ஸஃப்பில் சேர்ந்திருக்கக் கூடாதா? அல்லது ஸஃப்பிலிருந்து ஒருவரை (உன்பக்கம்) இழுத்துக் கொள்ளக் கூடாதா? நீர் உமது தொழுகையை மீட்டுவீராக! என்றார்கள். (வாபிஸா(ரழி), தப்ரானீ, பைஹகீ)
இந்த அறிவிப்பின் தொடரில் ''ஸிர்ருய்யுபின் இஸ்மாயீல்'' என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் கலா வல்லுநர்களால் ஒதுக்கப்பட்டவர். ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானது என்று ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது ''தல்கீஸுல்ஹபீர்'' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
''ஸஃப்புகள் நிறைவான பிறகு வருபவர், தம்மோடு சேர்ந்து நின்று தொழுவதற்காக ஸஃப்பிலுள்ள ஒருவரை(த்தம் பக்கம்) இழுத்துக் கொள்ள வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ரானி) இதன் அறிவிப்பாளர் தொடரிலும் பல கோளாறுகள் காணப்படுவதால் இவ்வறிவிப்பும் முறையானதல்ல என்று இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது ''தல்கீஸுல் ஹபீர்'' எனும் நூலில் பாகம் 2, பக்கம் 37ல் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
ஆகவே போதுமான ஆதாரமின்றி, மேற்காணும் பலகீனமான அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஸஃபுக்குப் பின்னால் தனிமையாக நிற்கக் கூடாது என்பதற்காக, நமக்கு எதிரில், முறையாக ஸஃப்பில் சேர்ந்து தொழுது கொண்டிருக்கும் ஒருவரைப் பிடித்து தம் பக்கம் இழுத்து நம்மோடு நிற்கச் செய்வது கூடாது. காரணம்: இவ்வாறு ஸஃப்பில் சேர்ந்து தொழுது கொண்டிருப்பவரை இழுப்பதால், நபி(ஸல்) அவர்கள்: ''ஸஃப்புகளில் உள்ள இடைவெளிகளை அடைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியிருக்கும் போது, ஸஃப்பில் நாமே இடைவெளியை உண்டாக்கும் முறைகேடு ஏற்படுகிறது.
மேலும் அவர் முதலாம் ஸஃப்பில் - நிற்பவராக இருப்பாரனால் முதல் ஸஃப்பில் நின்று தொழுவதால் அவருக்குக் கிடைக்கவிருக்கும் அதிகப்படியான நன்மையில் பாதிப்பை உண்டாக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே ஸஃப்புக்குப் பின்னால் தனித்து நிற்க வேண்டி உள்ளது என்பதற்காக நமக்கு எதிர் ஸஃப்பில் சேர்ந்து தொழும் ஒருவரைத் நம் பக்கம் இழுத்து தம்மோடு நிற்கச் செய்து கொள்வதற்கு முறையான ஆதாரம் இல்லாமல் இருப்பதோடு இது முறையற்ற செயல் என்பதையும் அறிகிறோம்.
இமாம் ருகூஃவில் இருக்கும் போது தொழுகையின் முதல் தக்பீராகிய 'தக்பீர்தஹ்ரீமை' மட்டும் கூறிக்கொண்டே ருகூஃவில் சேர்ந்து கொள்வதன் நிலை:
நாங்கன் சுஜூது செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் (தொழுகைக்கு) வந்தால் நீங்களும் 'ஸஜ்தா' செய்து கொள்ளுங்கள். ஆனால் அதை (அந்த ஸஜ்தாவை தொழுகையின்) கணக்கில் சேர்த்து விடாதீர்கள். ஒருவர் ருகூஃவை (இமாமுடன்) அடைந்து கொண்டால் தான் அந்தத் தொழுகையை அடைந்து கொண்டார் (மற்றொரு அறிவிப்பில் அந்த ரகாஅத்தை அடைந்து கொண்டார் என்றும் உள்ளது)
(அபூஹுரைரா(ரழி) ஹாக்கிம், அபூதாவூத்)
ஒருவர் நிலையிலோ, ருகூஃவிலோ, சுஜுதிலோ என்னைக் கண்டால் நான் இருந்து கொண்டிருக்கும் அதே நிலையில் என்னுடன் தொழுகையில் சேர்ந்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் என்பவர் அறிவித்துள்ளார். சுனனு ஸயீதிபின் மன்சூர்)
மேற்காணும் இவ்வறிவிப்புகளின் ஒருவர் இமாமை எந்த நிலையில் கண்டாலும் அவருடன் அதே நிலையில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் ருகூஃவில் சேர்ந்து கொண்டால் மட்டுமே அதை ஒரு ரகாஅத்தாகக் கணக்கிட முடியும் என்பதைக் காணுகிறோம்.
இமாம் ருகூஃவில் இருக்கும் போது அவருடன் சேரக்கூடியவர் தொழுகையின் பர்லாகிய முதல் தக்பீரை நின்ற நிலையில் கூறி விட்டுத் தான் இமாமுடன் சேர வேண்டுமே தவிர, தக்பீரைக் கூறிக்கொண்டே ருகூஃவில் சேருவது கூடாது என்று.
தக்பீர் தஹ்ரீமாகிய முதல் தக்பீரையும், ருகூஃவுக்குரிய தக்பீரையும், கூறித்தான் ருகூஃவில் சேரவேண்டும் என்கிறார்கள். இவர்களின் இக்கூற்றுக்குப் போதுமான ஆதாரங்கள் ஹதீஸில் இல்லை.
இமாமுடன் சேர்ந்து தொழுது விட்டு, தமக்கு விடுபட்டவற்றை எழுந்து தொழுது கொண்டிருக்கும் ஒருவரை மற்றொருவர் பின்பற்றித் தொழுவது கூடுமா?
ஜமாஅத்தோடு தொழ வந்த ஒருவருக்கு ஜமாஅத்து கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் ஜமாஅத்தோடு தொழுது விட்டு, தமக்கு விடுபட்ட ரகாஅத்துகளை அவரை ஒருவர் பின்பற்றித் தொழுதால் நிச்சயமாக பின்பற்றித் தொழுதவரின் தொழுகையும் ஜமாஅத் தொழுகையாகக் கூடிவிடும். அதற்கு அவர் இவ்வாறு தொழுது கொண்டிருக்கும் நபருடைய வலப்புறத்தில் நின்று கொள்வது முறையாகும். இமாமுடன் விடுபட்டவற்றை எழுந்து தொழுது கொண்டிருக்கும் அந்த மனிதர் தாம் இமாமாக நின்று தொழ வைக்கிறேன் என்று நிய்யத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
தொழுபவர் இமாமாகவோ, அல்லது அவரை பின்பற்றி தொழுபவராகவோ, அல்லது தனித்துத் தொழுபவராகவோ இருந்து, தாம் தொழுது கொண்டிருக்கும் போது, தமது ஆடையில் நஜீஸ் - (அசுத்தம்) இருப்பதாக சந்தேகம் வருமானால், அவருடைய இச்சந்தேகத்திற்காக அவர் தமது தொழுகையை விட்டு விடக் கூடாது. அவர் அந்நிலையிலேயே தொழுகையை தொழுது முடித்துவிட வேண்டும்.
அவர் தொழுது முடித்துப் பார்க்கும் போது, தமது சந்தேகத்திற்ம்ணங்க ஆடையில் அசுத்தம் இருப்பதை பார்த்து விட்டாலும் அவர் தொழுகை கூடிவிடும்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு சமயம் தமது செருப்பில் அசுத்தம் இருக்கும் நிலையில் தொழுது கொண்டிருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் அதிக அசுத்தம் இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தியவுடன் அதை கழற்றிவிட்டுத் தொழுதார்கள் என்பதாக ஸஹீஹான ஹதீஸ் அபூஸயீதில் குத்ரீ(ரழி) வாயிலாக அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் நபி(ஸல்) தமக்கு அதில் அசுத்தம் இருப்பதாக தெரியாமல் எத்தனை ரகாஅத்துகள் தொழுதார்களோ, அவற்றை அவர்கள் மீட்டித் தொழவில்லை. ஆகவே நபி(ஸல்) அவர்களுக்கு அசுத்தம் இருப்பதாகத் தெரியாமல் தொழுத தொழுகை கூடிவிட்டது என்பதால், அசுத்தத்தை அறியாமல் தொழுத தொழுகையும் கூடிவிடும் என்பதை அறிகிறோம்.
இமாமுக்கு கிராஅத்தில் தடங்கல் ஏற்பட்டால் அதை அவருக்கு எடுத்துக் கொடுப்பது ஆகும்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் கிராஅத் ஓதிக் கொண்டிருந்தபோது நானும் இருந்தேன். அப்போது அவர்கள் சிலவற்றை ஓதாது விட்டு விட்டார்கள். அங்குள்ள ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இன்னின்ன ஆயத்துக்களை ஓதாது விட்டு விட்டீர்களோ? என்றார்கள்.
(மஸ்தூரு பின்யஜீதில் மாலிக்கி(ரழி) அபூதாவூத், அஸ்ரம்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்கு சுப்ஹு தொழும்போது ''கிராஅத்'' ஓதுதலில் தடங்கல் ஏற்பட்டு எவரும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தொழுகையை நிறைவு செய்தவுடன் மக்களை நோக்கி, உபையுபின் கஃபு(ரழி) அவர்கள் தொழுகையில் உங்களுடன் ஆஜராகவில்லையா? என்றார்கள். அதற்கு ''இல்லை'' என்றனர். நபி(ஸல்) உபய்யு பின் கஃபுவைத் தேடுவததன் நோக்கம். தமக்கு கிராஅத்தில் தடங்கல் ஏற்பட்டபோது அதைத் தமக்கு அவர் எடுத்துக் கொடுப்பதற்காகத் தான் தேடியுள்ளார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), அஸ்ரம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் தொழும்போது, கிராஅத் ஓதுகையில் அவர்களுக்குத் தடங்கல் ஏற்பட்டது. தாம் தொழுது முடித்தவுடன் உபையுபின் கஃபு(ரழி) அவர்களை நோக்கி, ''எங்களுடன் தொழுதீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''ஆம்'' என்றார். ஏன் (எனக்கு கிராஅத்தில் தடங்கல் ஏற்பட்டபோது) எடுத்துக் கொடுக்கவில்லை? என்றார்கள். (இப்னு உமர்(ரழி), அபூதாவூத்)
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களை ஆதாரமாக்கிக் கொண்டு, இமாமுக்கு தொழுகையில் கிராஅத்தோதும் போது தடங்கல் நிலை ஏற்பட்டால் எத்தடையுமின்றி தாராளமாக எடுத்துக் கொடுக்கலாம் என்பதை அறிகிறோம்.
''இமாமுக்கு அவர் கிராஅத் ஓதும் போது, (தடுமாற்றம் ஏற்பட்டால்) யாரும் அவருக்கு எடுத்துக் கொடுப்பது முறை அல்ல'' என்பதாக அபூதாவூதில் அலி (ரழி) அவர்களின் வாயிலாக ''ஹாரிஸ்'' என்பவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. ஆனால் இவ்வறிவிப்பு பலகீனமானது, முறையானது அல்லவென்று இமாம் அபூதாவூத்(ரஹ்) அவர்களே விமர்சித்துள்ளார்கள். ஏனெனில் ''ஹாரிஸ்'' என்பவர் அலி(ரழி) அவர்களிடமிருந்து மொத்தம் 4 ஹதீஸ்கள் மட்டுமே கேட்டிருப்பதாக சான்றுகள் உள்ளன. ஆனால் மேற்காணும் அறிவிப்பு அந்த 4 ஹதீஸ்களில் உள்ளது அல்ல என்று கூறுகிறார்கள்.
ஒருவர் சூரத்துல் பாத்திஹா ஓதி முடிப்பதற்குள் இமாம் ருகூஃவுக்குச் சென்று விட்டால் அவரும் அதே நிலையில் ருகூஃவுக்குச் சென்று விட வேண்டும்.
''இமாம் நியமிக்கப்படுவதெல்லாம் அவரை (மக்கள்) பின்பற்றுவதற்காகத்தான். ஆகவே நீங்கள் இமாமுக்கு மாறுபட்டு விடாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூஃவுக்குச் சென்று விட்டால் நீங்களும் உடனே ருகூஃவுக்குச் சென்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேற்காணும் ஹதீஸில் ''அவர் ருகூஃவுக்குச் சென்று விட்டால் நீங்களும் உடனே ருகூஃவுக்குச் சென்று விடுங்கள்'' என்று வாசகம் இமாம் ருகூஃவுக்குச் சென்ற பிறகு காலதாமதம் செய்யாமல் உடனே மற்றவரும் ருகூஃவுக்குச் சென்று விட வேண்டும என்பதை உணர்த்துகிறது.
அத்தஹிய்யாத்து
நடு இருப்புக்காக அமருவதும், அதில் ''தஷ்ஹ்ஹுது'' (அத்தஹிய்யாத்) ஓதுவதும் சுன்னத்து:
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளிலும் ''அத்தஹிய்யாத்'' ஓதிக்கொண்டிருந்தார்கள். (அவற்றின் இருப்பின் போது) தமது இடது காலை மடித்து அதன்மீது உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) நட்டிக் கொள்வார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)
நடு இருப்பில் ஓதப்படும் 'அத்த ஹிய்யாத்து' வின் வாசகம்:
அத்த ஹிய்யாத்து - லில்லாஹி- வஸ்ஸலவாத்து - வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு - அலைக்க - அய்யுஹன்ன பிய்யு-வரஹ்மத்துல்லாஹி வபரகத்துஹு - அஸ்ஸலாமு -அலைனா -வஅலா - இபாதில்லாஹிஸ்- ஸாலிஹீன் - அஷ்ஹது - அல்லா - இலாஹ- இல்லல்லாஹு- வஅஷ்ஹது - அனஸ் - முஹம்மதன் - அப்துஹு-வரசூலுஹு
பொருள்:
சொற்செயல்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. நபியே! உங்கள் மீது ஸலாம் உண்டாகுக! மேலும் அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் உண்டாகுக! எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும்! வணங்கி வழிபடுவதற்கு உரித்தானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்று உறுதிமொழி கூறுகிறேன். மேலும் நிச்சயமாக முஹம்மத்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமென்று உறுதிமொழி கூறுகிறேன்.
''அத்த ஹிய்யாத்து''வின் வாசகங்கள் பல்வேறு ஸஹாபாக்களின் வாயிலாக பல்வேறு அமைப்புகளில் ஹதீஸ்களில் இடம்பெற்றிருப்பினும், இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய அனைத்து நூல்களிலும் இடம்பெற்றுள்ள மேற்காணும் 'அத்த ஹிய்யாத்து' வின் வாசகமே மிகமிக ஸஹீஹானதும், ஆதாரப்பூர்வனதுமாகும். இதனையே பெரும்பாலான ஸஹாபாக்களும், தபாயீன்களும் ஓதி வந்துள்ளார்கள்.
'அத்தஹிய்யாத்து' பற்றி இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் விமர்சனம்:
நபி(ஸல்) அவர்கள் தமது இருகரங்களுக்கு மத்தியில், எனது கை இருக்கும் நிலையில் குர்ஆனுடைய சூராவைக் கற்றுத் தருவது போல் எனக்கு 'தஷஹ்ஹுது' (அத்த ஹிய்யாத்து)வைக் கற்றுத் தந்தார்கள். (இப்னுமஹ்ஊத்(ரழி), நஸயீ, அஹ்மத்)
மேற்காணும் இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள 'அத்த ஹிய்யாத்து'க்கு அடுத்தபடியாக ஸஹீஹானதும், மிக நம்பகமானதும் இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு, ஸஹீஹ் முஸ்லிம், நஸயீ, ஷாபீயீ, அபூ அவானா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளதாகும்.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 'அத்த ஹிய்யாத்து'
அத்த ஹிய்யாத்துல் - முபாரகாத்துஸ் - ஸலவாத்துத் - தய்யிபாத்துலில்லாஹி - அஸ்ஸலாமு அலைக்க - அய்யுஹன் - னபிய்யு - வரஹ்மத்துல்லாஹி - வபரகாத்துஹு - அஸ்ஸலாமு அலைனா - வஅலா - இபாதில்லாஹிஸ் - ஸாலிஹீன் - அஷ்ஹது-அல்லா-இலாஹ-இல்லல்லாஹு-வஅஷ்ஹது-அன்ன முஹம்மதர் -ரசூலுல்லாஹி.
இந்த 'அத்த ஹிய்யாத்து' இடம்பெற்றுள்ள மற்றொரு அறிவிப்புத் தொடரில், 'வஅஷ்ஹது அன்ன முஹம்மதர்-ரசூலுல்லாஹி' எனும் வாசகத்திற்குப் பகரமாக 'வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுல்லாஹு' என்றும் உள்ளது. ஆகவே இவ்வறிவிப்பின் படி இவ்வாறும் ஓதிக் கொள்ளலாம் என்பதை உணருகிறோம். இதன் பொருள் சற்றேறத்தாழ முந்தைய 'அத்தஹிய்யாத்து' வின் பொருளை ஒத்ததாகவே உள்ளது.
நடு இருப்பில் அத்த ஹிய்யாத்துடன் ஸலவாத்தை இணைத்தோதுவதன் நிலை:
நபி(ஸல்) அவர்கள் முந்தைய இரண்டாவது ரகாஅத்தில் உட்காரும் சமயம் சூடான கல்லின் மீது அமருவது போல் அமர்ந்து, (அத்த ஹிய்யாத்தில் அப்துஹு வரசூலுஹு வரை ஓதிவிட்டு சுணக்கமின்றி) உடன் எழுந்து விடுவார்கள். (அபூ உபைதாபின் அப்தில்லாஹிப்னி மஸ்ஊத்(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ)
இவ்வறிவிப்பில் அபூஉபைதா(ரழி) அவர்கள், தமது தந்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களிடம் தாம் இதைச் செவியுற்றதாக அறிவித்துள்ளார்கள். ஆனால் இவர்களைப் பற்றி ஹதீஸ் கலாவல்லுநர்கள் குறிப்பிடும்போது, தமது தந்தை இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களை, இவர்கள் சந்தித்து கேட்டிருப்பதற்கான வாய்ப்பிழந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
ஆகவே இந்த அறிவிப்பு 'முன்கதிஃ (ஸனதில் துண்டிப்பு ஏற்பட்ட அறிவிப்பு எனும் வகையில் பலகீனமான அறிவிப்பின் தரத்தை அடைகிறது என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சிலர் கடைசி இருப்பில் அந்த ஹிய்யாத்துக்குப்பின், ஸலவாத்தை இணைத்தோதுவது போல், அதே அடிப்படையில் நடு இருப்பிலும் அத்த ஹிய்யாத்தில் 'அப்துஹுவரசூலுஹு' என்று ஓதுவது சுன்னத்து என்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் இக்கூற்றிற்குப் போதுமான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது என்பது தெளிவு. எனினும் இதற்கு மாறாக இப்னு குஜைமா, முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது. அதாவது:
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் நடு இருப்பிலும், கடைசி இருப்பிலும் 'அத்த ஹிய்யாத்'வை, 'அப்துஹு வரசூலுஹு' வரை ஓதுவார்கள். ஆனால் நடு இருப்பில் 'தஷஹ்ஹுது' (அப்துஹு வரசூலுஹு முடிய) ஓதி முடிந்தவுடன், எழுந்து விடுவார்கள். கடைசிரகாஅத்தின் போது, தமது 'தஷ்ஹ்ஹுதுவுக்குப் பிறகு (அத்தஹிய்யாத்ததில் 'அப்துஹு வரசூலுஹு' என்று ஓதி முடிந்த பிறகு) அல்லாஹ் அவர்களை துஆ செய்யும்படி நாடியள்ளவற்றைக் கொண்டு துஆ செய்துவிட்டு, பின்னால் ஸலாம் கொடுப்பார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), இப்னு குஜைமா, அஹ்மத்)
மேற்காணும் இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் நடு இருப்பின் போது, 'அத்த ஹிய்யாத்து'வில் அப்துஹு வரசூலுஹு வரை ஓதி முடிந்தவுடன், ஸலவாத்து, துஆ போன்றவை எவற்றையும் ஓதாது, உடனே அடுத்த ரகாஅத்துக்காக எழும்பியுள்ளார்கள் என்பதையும், மேலும் அவர்கள் இந்த கட்டத்தில் ஸலவாத்து போன்று எதனையும் தாம் ஓதிக்கொண்டிருக்கவில்லை என்பதையும் அறிகிறோம்.
அவ்வாறு எவரும் 'அப்துஹு வரசூலுஹுவுக்குப் பிறகு 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்' என்பதாக ஓதிவிட்டால் அதற்காக 'ஸஜ்தா ஸஹ்வு' செய்யவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு ஹதீஸின் அடிப்படையில் எவ்வாதாரமும் கிடையாது.
நடு இருப்பிலிருந்து எழும் முறை:
முதலாம் ரகாஅத்திலிருந்து எழும்போது, கைகளைத் தரையில் ஊன்றி எழும்புதல், அவ்வாறு அவற்றை ஊன்றாமல், முட்டுக்கால்கள் மீது கைகளை வைத்து ஊன்றி எழும்புதல் ஆகிய முறைகள் இரண்டுமே ஸஹீஹான ஹதீஸ்களில் உள்ளவையாயிருப்பதால், இவ்விருமுறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம்.
நடு இருப்பிலிருந்து எழும்போது, தக்பீர் கூறி, நிலைக்கு வந்த பின் கைகளை உயர்த்துதல்:
அபூகதாதா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் தொழுகையை வர்ணித்த போது பின்வருமாறு கூறியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்திலிருந்து எழும்போது தக்பீர்கூறி, தமது இரு கைகளையும் உயர்த்தி(கட்டி)னார்கள். (அபூதாவூத், திர்மீதி)
தொழுகையில் 4 சந்தர்ப்பங்களில் மட்டுமே கைகளை உயர்த்துவது சுன்னத்து.
1. முதல் தக்பீரின்போது, 2 ருகூஃவுக்காக குனியும் போது 3. ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும்போது, 4 நடு இருப்பிலிருந்து எழும்பி நிற்கும்போது.
இப்னுஉமர்(ரழி) அவர்கள் தொழுகையைத் துவங்கும்போது, தமது இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் கூறுவார்கள். அடுதது ருகூஃவுக்குச் செல்லும்போது தமது கைகளை உயர்த்துவார்கள். பின்னர் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறும்போது தமது கைகளை உயர்த்துவார்கள். மேலும் இரண்டாம் ரகாஅத்தைவிட்டு எழும்போதும் தமது கைகளை உயர்த்துவார்கள். (புகாரீ, அபூதாவூத், நஸயீ)
இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார் என்று இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக ஹம்மாதுபின் ஸலமா அவர்களின் ஓர் அறிவிப்புத் தொடரிலும் இடம் பெற்றுள்ளது. (புகாரீ)
முதலாவது ரகாஅத்து, மூன்றாவது ரகாஅத்துகளிலிருந்து எழும்போது கைகளை உயர்த்துவது சுன்னத்தா?
நபி(ஸல்) அவர்கள் ருகூஃ செய்துவிட்டு தமது இருகைகளையும் உயர்த்துவார்கள். (இவ்வாறே) ஸஜ்தா செய்த பின்னரும் (உயர்த்துவார்கள்) என்பதாக ஒரு அறிவிப்பை இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் தமத 'ரஃப்உல்யதைன்' எனும் கிதாபில் எடுத்துக் கூறிவிட்டு, இவ்வறிப்பு பலகீனமானது என்பதாக குறிப்பிடுகிறார்கள்.
இவ்வாறே நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு எழும்போது தமது கைகளை உயர்த்துவார்கள்' என்பதாக ஓர் அறிவிப்பு அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவ்வறிவிப்பின் முன்பின் தொடர்களை உற்றுநோக்கும்போது, இரண்டு ரகாஅத்துகளை முடித்துவிட்டு எழும்போது' என்பதற்கு பதிலாக, அதன் ஸ்தானத்தில் 'இரண்டு ஸஜ்தாக்களைச் செய்துவிட்டு எழும்போது' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது என்பதாக ஹதீஸ் கலாவல்லுநர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே ஹதீஸ் கலையில் போதிய அனுபவமற்ற ஒரு சிலரே மேற்காணும் இரு அறிவிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு எல்லா ரகாஅத்துகளிலிருந்து எழும்போதும் கைகளை உயர்த்துவது சுன்னத்து என்று கூறுகின்றனர். இது முறையல்ல. இவ்வாறு கைகளை உயர்த்துவதற்குப் போதுமான சான்று ஹதீஸ்களில் கிடையாது.
ருகூஃவிலிருந்து தலையை நிமிர்த்தும் போது கைகளை உயர்த்துவதா? அல்லது நிலைக்கு வந்தபின் உயர்த்துவதா?
நபி(ஸல்) அவர்கள் தொழுகையை துவங்கும்போது, தமது கைகளை புஜம் வரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள். ருகூஃவுக்கு தக்பீர் கூறும்போதும், ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும் இவ்வாறே இருகரங்களையும் உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்-ரப்பனா லக்கல் ஹம்து' என்று கூறுவார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வறிவிப்பில் ருகூஃவிலிருந்து எழும்போதே கைகளை நபி(ஸல்) அவர்கள் உயர்த்தியுள்ளார்கள் என்பதைக் காணுகிறோம்.
...பிறகு தமது தலையை (ருகூஃவிலிருந்து) உயர்த்தி, ''ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்'' என்று கூறிவிட்டு பின்னர் தமது இரு கைகளைத் தமது இருபுஜங்களுக்கு நேராக சரியாக உயர்த்துவார்கள். (அபூஹுமைது(ரழி), அபூதாவூத், திர்மிதீ, தாரமீ)
இவ்வறிவிப்பில் ருகூஃவிலிருந்து நிமிர்ந்து, பின்னர் தமது கைகளை உயர்த்தியுள்ளார்கள் என்பதைக் காணுகிறோம். ஆகவே ருகூஃவிலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கும், எழும்பி நின்ற பிறகுதான் கைகளை உயர்த்தவேண்டும் என்பதற்கும், மேற்கண்ட அறிவிப்புகளைப் போன்று இன்னும் பல அறிவிப்புகள் உள்ளன, இவை அனைத்துமே ஸஹீஹானவையாயிருப்பதால் இவ்விரு முறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம் என்பதை அறிகிறோம்.
மூன்றாவது, நான்காவது ரகாஅத்துகளிலும் கிராஅத் ஓதும் முறை:
பர்ளான, தொழுகையாயிருப்பின் மூன்றாம், நான்காம் ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹா மட்டும் ஓதுவது பர்ளு-அவசியமாகும். பர்ளு அல்லாத சுன்னத்து, நபிலான தொழுகைகளாயிருப்பின் சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் மற்றொரு சூராவைச் சேர்த்தோதுவது சுன்னத்தாகும்.
கடைசி இருப்பு:
தொழுகையின் இறுதியில் இடம் பெற்றுள்ள இவ்விருப்பு, தொழுகைகளின் பர்ளு-முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தமது அனைத்து தொழுகைகளிலும் இதை கடைவிடித்து வந்திருப்பதுடன், 'என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள்' என்றும் கூறியுள்ளார்கள். (மாலிக் பின் ஹுனவரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
கடைசிஇருப்பில் அமரும்முறை:
நான் மதீனா வந்தவுடன் (நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு உள்ளது, என்பதை நேரில் பார்க்கவேண்டும் என்று கருதி) கையைத் தமது இடது தொடை மீது வைத்துக்கொண்டு வலது காலை (அதன் பாதத்தை) நட்டி வைத்துக்கொண்டார்கள். (வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி), திர்மிதீ)
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளிலும் ''அத்தஹிய்யாத்து'' ஓதுவதுடன் தமது இடது காலை மடித்து (அதில் உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) நட்டிக் கொள்வார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் இவ்விரு ஹதீஸ்களும் தொழுகையின் நடு இருப்பு மட்டுமின்றி, கடைசி இருப்பில் அமரும்போதும், இடது காலை மடித்து அதன் மீது உட்கார்ந்து, வலது காலின் பாதத்தை நட்டி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்தில் அமரும்போது, தமது இடது காலின் மீது உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) நட்டிக் கொள்வார்கள். ஆனால் கடைசி ரகாஅத்தில் அமரும்போது, (இடது காலின்மீது உட்காராமல்) இடது காலை முன்பக்கம் நகர்த்தி, வலது கால் பாதத்தை நட்டி வைத்துக்கொண்டு தமது புட்டத்தைத் தரையில் வைத்து உட்காருவார்கள். (அபூஹுமைத்(ரழி), புகாரீ)
இவ்வறிவிப்பு கடைசி இருப்பில் அமரும்போது மட்டும் இடது காலை முன் பக்கம் நகர்த்தி, வலது கால் பாதத்தை நட்டி வைத்த நிலையில் புட்டத்தைத் தரையில் வைத்து உட்கார வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
இருப்பில் மற்றொரு வகை அமைப்பு:
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் உட்காரும்போது, தமது இடது காலின் பாதத்தைத் தமது தொடைக்கும், கரண்டைக் காலுக்குமிடையில் வைத்துக்கொண்டு, (இந்நிலையில் புட்டம் தரையில் இருக்கும்) தமது வலது கால் பாதத்தை (நட்டி வைத்துக் கொள்ளாமல்) அதைப் படுக்கை வசமாக மடக்கி வைத்துக்கொள்வார்கள். (அப்துல்லாஹிப்னிஜ்ஜுபைர்(ரழி), முஸ்லிம், அபூதாவூத்)
ஆகவே மேற்காணும் முறைகள் அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பதால், சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப இவற்றில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம்.
கடைசி இருப்பில் ''அத்தஹிய்யாத்து'' ஒதும் நிலை:
தொழுகையில் கடைசி இருப்பு பர்ளாயிருப்பது போன்றே அதில் ''அத்தஹிய்யாத்து'' ஓதுவதும் பர்ளாகும்.
கடைசி இருப்பில் ''அத்தஹிய்யாத்து'' ஓதும் நிலை:
தொழுகையில் கடைசி இருப்பு பர்ளாயிருப்பது போன்றே அதில் ''அத்தஹிய்யாத்து'' ஓதுவதும் பர்ளாகும்.
எங்கள் மீது ''தஷஹ்ஹுது'' (அத்தஹிய்யாத்து) பர்ளாக்கப்படுவதற்கு முன்னர், நாங்கள் ''அஸ்ஸலாமு அலல்லாஹி'' (அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாவதாக!) என்று (விபரமறியாமல்) கூறிக் கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அத்தஹிய்யாத்துல்லாஹி'' (அனைத்து வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கே உரியன) என்பதைக் கூறுங்கள் என்றார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)
மேற்காணும் அறிவிப்பில் ''அத்தஹிய்யாத்து லில்லாஹி'' என்பதைக் கூறுங்கள் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் வாசகம், ஏவல் வினையின் அடிப்படையில் கட்டளையாக உள்ளது.
இதன்படி நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகைகள் அனைத்திலும் இருப்பின்போது, வேறு எதனையும் ஓதாது, சதா இதனையே ஓதி வந்திருப்பதையும், மேலும் என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் என்று ஆணையிட்டிருப்பதையும் முன் வைத்து அத்தஹிய்யாத்து ''அப்துஹு வரசூலுஹு'' வரை ஓதுவது பர்ளு என்பதாக அறிகிறோம்.
''அத்தஹிய்யாத்துக்குப் பின் ''ஸலவாத்து'' ஓதுவதன் நிலை:
கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து ''அப்துஹு வரசூலுஹு'' வரை ஓதிய பின், ஸலாவத்தோதுவது சுன்னத்தாகும். சிலர் கடைசி இருப்பில் ''அல்லாஹுக்க ஸல்லி அலா முஹம்மத்'' என்பது மட்டுமின்றி, ''வஅலா ஆலிமுஹம்மத்'' என்பதையும் அத்துடன் இணைத்தோதுவதும் பர்ளு என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் ஸலவாத்தோதுவது பர்ளு என்று கூறுவதற்குப் போதுமான சான்றுகள் ஹதீஸ்கள் கிடையாது.
அவர்கள் காட்டும் சான்றுகள் பின்வருமாறு:
சுத்தமில்லாமலும், என்மீது ''ஸலவாத்து'' ஓதாமலும் தொழும் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)
இவ்வறிவிப்பில் ஸலவாத்தோவது பர்ளு என்பதற்கானச் சான்று அவர்கள் கருதுவது போல் எதுவுமில்லை. மாறாக தொழுகையில் ஸலவாத்தோதுவது பர்ளு இல்லை என்பதற்கான சான்றுகள் இருக்கிறது. ஏனெனில், தொழுகையில் ஸலவாத்தோதாமல் தொழுது முடித்த ஒருவரை அழைத்து, நீர் தொழுகையில் ஸலவாத்தோதிவிட்டு பின்னர் துஆ ஓத வேண்டும் என்று துஆ ஓதுவதன் ஒழுங்கு முறையைத் தான் நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கற்றுக் கொடுத்தார்களே அன்றி, ஸலவாத்தோதுவது பர்ளு-கட்டாயக்கடமை என்பதாக அவரை நோக்கிக் கூறவில்லை அவ்வாறு பர்ளு என்று இருக்குமானால் அவர் ஸலவாத்தோதாது தொழுதவராயிருப்பதால், மீண்டும் அவரைத் தொழும்படி கட்டளையிட்டிருப்பார்கள் அவ்வாறு அவரை நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழும்படி கட்டளையிடாதிருப்பதே தொழுகையில் ஸலவாத்தோதுவது பர்ளு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் ''அத்தஹிய்யாத்து'' வை ''அப்துஹுவரசூலுஹு'' வரைக் கற்றுக் கொடுத்துவிட்டு, தொழக்கூடியவர் இதன் பின்னர் தமக்கு விருப்பமான, துஆவைத் தேர்ந்தெடுத்து (அதனை) ஓதிக் கொள்வாராக! என்று கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் ''அப்துஹு வரசூலுஹு'' வரை ஓதியபின், ''தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதனை ஓதிக் கொள்வாராக'' என்று கூறியுள்ளார்கள். ஸலவாத்தோதுவது பர்ளு என்றிருந்தால் ''ஸலவாத்தோதிவிட்டு, தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதனை ஓதிக்கொள்வாராக'' என்று கூறியிருப்பார்கள்.
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களிலிருந்து, தொழும் போது கடைசி இருப்பில் ஸலவாத்தோதுவது பர்ளு அல்ல, அது சுன்னத்துதான் என்பதை உணருகிறோம்.
தொழுகையில் ஓதப்படும் ஸலவாத்
தொழுகையில் ஓதப்படும் ஸலவாத்தின் வாசகம்:
அல்லாஹும்ம-ஸல்லி-அலா-முஹம்மதின்-வஅலா-ஆலீ-முஹம்மதின்-கமா-ஸல்லைத்த-அலா-இப்ராஹீம்-வஅலா-ஆலி-இப்ராஹீம-
இன்னக்க-ஹமீதும்மஜீத்,வஅலா-ஆலி-இப்ராஹீம-இன்னக்க-ஹமீதும்மஜீத், அல்லாஹும்ம-பாரிக்-அலா-முஹம்மதின்-வஅலா-ஆலி முஹம்மதின்-கமா-பாரக்த்த-அலா-இப்ராஹீம-வஅலா-ஆலிஇப்ராஹீம-இன்னக்க-ஹதீதும்மஜீத்.
பொருள்: யாஅல்லாஹ்! நீ இப்ராஹீம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் மீதும் அருள் புரிந்ததுபோல், முஹம்மத் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீயே புகழப்படுவோனும், மகிமை மிக்கோனுமாவாய் யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் பரக்கத் செய்ததுபோல், முஹம்மத் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் பரக்கத் செய்தருள்வாயாக! நிச்சயமாக நீயே புகழப்படுவோனும், மகிமை மிக்கோனுமாவாய்.
அப்துல்லாஹ் பின் ஈஸா என்பவர், அப்துர் ரஹ்மான்பின் அபீலைலா என்பவரிடமிருந்து பின்வருமாறு, தான் செவியுற்றதாக அறிவித்துள்ளார். ஒருமுறை என்னை கஃபுபின் உஜ்ரா(ரழி) அவர்கள் சந்தித்து, நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதோர் விஷயத்தை உமக்கு அன்பளிப்பாக எடுத்துக்கூறவா? என்று கேட்க, அதற்கவர்கள் நல்லது எடுத்துக் கூறுங்கள் என்றார். அதற்கவர்கள் நாங்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது எவ்வாறு ஸலாம் கூறவேண்டும் என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில் தாங்கள் ''அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு'' என்று கற்றுத் தந்திருப்பதன் மூலம்) கற்றுக் கொடுத்துவிட்டான். ஆகவே (கண்ணியமிக்க) வீட்டையுடையவர்களாகிய உங்கள் மீது, எவ்வாறு ஸலவாத்துக் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போதவர்கள் அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின்-வஅலா-ஆலி-முஹம்மதின் கமா-ஸல்லைத்த-அலா-இப்ராஹீம-வஅலா-ஆலி-இப்ராஹீம்-இன்னக்க-ஹமீதும்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா-முஹம்மதின் -வஅலா-ஆலி-முஹம்மதின்... என்ற மேற்காணும் ஸலவாத்தை ஓதும்படி கூறினார்கள். (புகாரீ)
மேற்காணும் இந்த ஸலவாத்து, ஸஹீஹுல் புகாரீயில் இதே அமைப்பில் சிறிதும் முன்பின் இல்லாதுகிதாபுல் அன்பியாவில் இப்ராஹீம்(அலை) அவர்களின் தொடரில் இடம் பெற்றுள்ளது. இது வேறு ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருப்பினும், பெரும்பாலான அறிவிப்புகளில் இந்த ஸலவாத்தின் வாசக அமைப்பு சிறிது முன்பின்னாகக் காணப்படுகிறது. இதைப்போன்றே ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள மற்ற ஸலவாத்துக்களையும் ஓதிக் கொள்ளலாம். (ஸலவாத்தின் பொருள் மேலே தரப்பட்டுள்ளது)
கடைசி இருப்பில் துஆ ஓதுவது சுன்னத்தாகும்.
கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்தும், ஸலவாத்தும் ஓதியபின், துஆ ஓதுவது சுன்னத்தாகும். கடைசி இருப்பில் ஒருவர் தாம் அத்தஹிய்யாத்து ஓதியபின் தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து ஓதிக்கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, சிலர் அல்லாஹும்மஃஃபிர்லீ-வலி-வாலிதய்ய-வலி-உஸ்தாதீ-வலி-ஜமீயில் மூமினீன-வல்மூமினாத்...என்று ஹதீஸில் காணப்படாததோர் துஆவை ஓதி வருவது, ஆகுமானதாயிருப்பினும், ஹதீஸில் காணப்படும் துஆவை ஓதுவது தான் மேல் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்த அடிப்படையில் தான் அபூபக்கர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் தாம் தொழுகையில் ஓதுவதற்கான துஆவைத் தமக்குக் கற்றுத் தரும்படி கேட்க, நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஒன்றைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த துஆ புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள துஆவின் விபரம்:
1. ஒருமுறை அபூபக்ரு ஸித்தீக்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் தமக்குத் தொழுகையில் ஓதுவதற்கான துஆ ஒன்றைக் கற்றுத் தரும்படி கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு ஓதும்படி கூறினார்கள்.
அல்லாஹும்ம - இன்னீ-ழலம்த்து-நஃப்ஸீ-ழுல்மன்-கஸீரன்-வலா-யஃஃபிருஸ்-ஸுனூப-இல்லா-அன்த்த-ஃபஃஃபிர்லீ-மஃஃ பிரத்தன்-மின்-இன்திக்க -வர்ஹம்னீ-இன்னக்க-அன்த்தல்-கஃபூருர்-ரஹீம்
பொருள்: யாஅல்லாஹ்! நான் எனக்கே அதிக அளவில் அநியாயம் செய்துவிட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னையன்றி வேறொருவனுமில்லை. ஆகவே உன்புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பளித்து, எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே மன்னித்துக்கிருபை செய்பவனாக இருக்கின்றாய்!
2. நபி(ஸல்) அவர்கள், தஷ்ஹ்ஹுது (அத்தஹிய்யாத்து)க்கும், ஸலாம் கொடுப்பதற்குமிடையில் இறுதியாக பின்வரும் துஆவை ஓதிக்கொண்டிருந்தார்கள்.
அல்லாஹும்மஃஃபிர்லீ-மா-கத்தம்த்து-வமா-அக்கர்த்து-வமா-அஸ்ரத்து-வமா-அஃலன்த்து-வமா-அஸ்ரஃப்த்து-வமா-அன்த்த
-அஃலமு-பிஹீ-மின்னீ-அன்த்தல்-முகத்திமு-வ-அன்த்தல்-முஅக்ம்ரு-லாஇலாஹ-இல்லா-அன்த்த. (அலி(ரழி), முஸ்லிம், திர்மிதீ)
பொருள்: யாஅல்லாஹ் நான் முற்படுத்தியவற்றையும், பிற்படுத்தியவற்றையும், நான் மறைமுகமாகச் செய்தவற்றையும், பம்ரங்கமாகச் செய்தவற்றையும், நான் விரையம் செய்வற்றையும், மேலும் (என்னைப் பற்றி) என்னை விட நீ அதிகமாக அறிந்துள்ளவற்றையும் எனக்கு மன்னித்தருள்வாயாக! நீ தான் முற்படுத்துவோனும், பிற்படுத்து வோனுமாயிருக்கின்றாய். வணங்கி வழிபடுவதற்குரியவன் உன்னையன்றி வேறில்லை.
3. உங்களிலொருவர் தாம் அத்தஹிய்யாத்தோதும் போது, நான்கு விஷயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வருமாறு தாம் ஓதினார்கள்
அல்லாஹும்ம -இன்னீ-அஊது-பிக்க-மின்-அதாபி-ஜஹன்னம்-வமின்-அதாபில்-கப்ரி-வமின்-ஃபித்னத்தில்-மஹ்யா-வல்-மமாத்தி வமின்-ஃபித்னத்தில்-மªஹித்-தஜ்ஜால் (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில் அல்லாஹும்ம-இன்னீ-அஊது-பிக்க-மின்-அதாபில்-கப்ரி-வமின்-அதாபின்னார்...என்றும் உள்ளது.
பொருள்: யாஅல்லாஹ்! நான் உன்னிடம் நரக வேதனையை விட்டும், கப்ருடைய வேதனையைவிட்டும், வாழ்வின்போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையை விட்டும், மேலும் மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், முஆது(ரழி) அவர்களை நோக்கி அனைத்து தொழுகைகளிலும் நீர் ஓதுவதற்கான சில வாசகங்களை, ஓதி வரும்படி நான் உமக்கு உபதேசிக்கிறேன்'' என்று கூறி விட்டு பின்வரும் துஆவை எடுத்துக் கூறினார்கள்.
அல்லாஹும்ம- அயின்னீ - அலா - திக்ரிக்க - வ - ஷுக்ரிக்க - வ - ஹுஸ்னி -இபாதத்திக்க (முஆது(ரழி), அஹ்மத்)
பொருள்: யாஅல்லாஹ்! நான் உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், மேலும் உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், மேலும் உன்னை அழகாய் வணங்கி வழிபடுவதற்கும் எனக்கு உதவி செய்தருள்வாயாக!
மஹ்ஜினுப்னில் அத்ரஃ(ரழி) அவர்கள் கூறியதாக ஹன்ழாபின் அலி என்பவர் அறிவித்துள்ளார்: ஒருமுறை பள்ளியில் ஒருவர் (தமது தொழுகையில்) ''அத்தஹிய்யாத்து'' ஓதிவிட்டு பின்வரும் துஆவை ஓதிக் கொண்டு, தமது தொழுகையை முடிக்கும் தருவாயில் இருந்து கொண்டிருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். (அவர் ஓதிய கொண்டிருந்த துஆவானது)
அல்லாஹும்ம இன்னீ-அஸ்அலுக்க-யா-அல்லாஹுல்-வாஹிதுல்-அஹதுஸ்-ஸமதுல்லதீ-லம்-யலீத்-வ-லம்-யூலத்-வ-லம்-யகுல்லஹு குஃபுவன்-அஹத்-அன்-தஃஃபிரலீ-துனூபி-இன்னக்க-அன்தல்-கஃபுரூர்-ரஹீம் என்பதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அவரை நோக்கி) ''இவர் மன்னிக்கப்பட்டு விட்டார்'' என்று மும்முறை கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
பொருள்: யாஅல்லாஹ்! யாரையும் பெறாதவனும், எவராலும் பெறப்படாதவனும், தனக்கு யாதொரு நிகருமில்லாதவனுமாகிய, தேவையற்றவனும், ஒருவனாயுள்ளவனும், தனித்தவனுமாகிய அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் எனக்கு எனது பாவங்களை மன்னித்தருளும்படி வேண்டுகிறேன். நிச்சயமாக நீயே மன்னித்துக்கிருபை செய்பவனாயிருக்கிறாய்.
மேற்காணும் துஆக்களைப் போன்று மேலும் பல துஆக்கள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் எதனையும் எடுத்து ஓதிக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.
கடைசி இருப்பில் ''அத்தஹிய்யாத்து''க்குப் பின் ஸலாம் கூறுவதன் நிலை:
1. நபி(ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் ஆகுமானவற்றை ஆரம்பித்து ஸலாம் கூறுவது கொண்டு முடிப்பவர்களாயிருந்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)
2. தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். ஆகுமானவற்றை தொழுகையில் ஆகாதவையாக்குவது (முதல்) தக்பீராகும். (தொழும் போது மட்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டவற்றை) ஆகுமாக்குவது ஸலாம் கூறுவதாகும். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், பைஹகீ, தாருகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையைத் தக்பீரைக் கொண்டு துவங்கி, ஸலாம் கூறுவது கொண்டு நிறைவு செய்துள்ளார்கள் என்பதையும், இதற்கு மாற்றமாக வேறு முறைகளை ஒரு போதும் அவர்கள் செய்து காட்டியதில்லை என்பதையும், மேலும் ''என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள்!'' என்று வலியுறுத்தி கூறியிருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு, தொழுகையைத் துவங்கும் போது கூறப்படும் தக்பீர் பர்லாயிருப்பது போன்றே அதை முடிக்கும் போது கூறப்படும் ஸலாமும் பர்ளுதான் என்பதை அறிகிறோம். சிலர் இதற்கு மாறாக தொழுகையின் கடைசி இருப்பில் ஸலாம் கூறுவது சுன்னத்துதான் என்று கூறுவதோடு, தமது கூற்றுக்கு சாதகமாக சில பலகீனமான ஹதீஸ்களையும், ''அதர்'' ஸஹாபாக்களின் சொற்களையும் எடுத்து வைக்கின்றார்கள்.
அவர்களால் எடுத்து வைக்கப்படும் ஆதாரங்களின் நிலை:
தொழுகையின் இறுதிக் கட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு, அவர் ஸலாம் கொடுக்கும் முன் உளூ முறிந்துவிட்டால் அவரது தொழுகை நிறைவேறிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), திர்மிதீ)
''தொழுகை முடியும் தருவாயில் (கடைசி இருப்பில்) அமர்ந்திருக்கும் ஒரு இமாமுக்கு உளூ முறிந்து விட்டால் அல்லது அவருடன் தொழுது விட்டு இந்நிலையில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இமாம் ஸலாம் கொடுக்கும் முன் உளூ முறிந்து விட்டால் அவரின் தொழுகை நிறைவேறிவிட்டது. அவர் அதை மீட்ட வேண்டிய தேவையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), தஹாவீ)
ஒரு தொழுகையாளி தமது தொழுகையின் இறுதியில் தமது தலையை உயர்த்தி (உட்கார்ந்து) ''அத்தஹிய்யாத்து'' ''அப்துஹுவரசூலுஹு'' வரை ஓதியபின் அவருக்கு உளூ முறிந்துவிட்டால் அவரது தொழுகை நிறைவேறிவிட்டது. அவர் அதை மீட்ட வேண்டியதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), தாருகுத்னீ)
மேற்காணும் ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடர்கள் அனைத்திலும் ''அப்துர்ரஹ்மான்பின் ஜியாத்பின் அன்உமில் அஃப்ரீக்கீ'' எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார், இவர் குறித்து இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் ''தமது தஹ்தீபுத்தஹ்தீபு'' எனும் நூலில் பின்வருமாறு விமர்சித்துள்ளார்கள்.
4. ஒருவர் தஷஹ்ஹுது ''அத்தஹிய்யாத்து'' அப்துஹுவரசூலுஹு வரை ஓதும் அளவு (கடைசி இருப்பில்) அமர்ந்து விட்டார். பின்னர் அவருக்கு உளூ முறிந்து விடுமாயின் அவர் தொழுகை நிறைவேறிவிட்டது'' என்று அலி(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆரிமுபின் ழமுரா(ரழி), அபூஅவானா)
இவ்வறிவிப்பு நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்ட ஹதீஸ் அல்ல ''அதர்'' என்னும் ஸஹாபாக்களின் சொல்லாகும். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ''ஆஸிமுபின் ழமுரா'' என்பவர் நம்பகமான அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளுக்கு முரண்படும் நிலையில் அலி(ரழி)களின் பெயரால் பல விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார் என்று ஹதீஸ் கலா வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டவராயிருப்பதால் இவரது அறிவிப்பும் ஏற்புக்குரியதல்ல.
5. நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களுக்கு ''அத்தஹிய்யாத்து'' வைக் கற்றுக்கொடுத்தார்கள்... என்ற ஹதீஸின் தொடரில்.... பின்னர் நீர் இதை ஓதி முடித்துவிட்டால், உமது தொழுகை நிறைவேறிவிட்டது. ''நீர் எழுவதென்றால் எழுந்துவிடலாம், உட்கார வேண்டுமானால், உட்கார்நது கொள்ளலாம்'' என்ற ஒரு வாசகம் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாசகம் நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்டதல்ல, இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களால் ஒருவருக்குக் கூறப்பட்ட வாசகம் தான் என்று ஹதீஸ் அறிவிப்பாளர் அனைவரும் ஒட்டு மொத்தமாகக் கூறியுள்ளார்கள். ஆகவே இதுவகையில் நம்பகமான ஒரு ஹதீஸும் இல்லாமலிருக்கும்போது, ஒரு ஸஹாபியின் சொல்லை மட்டும் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டாது.
தொழுகையின் இறுதியில் எவ்வாறு எத்தனை முறை ஸலாம் கூற வேண்டும்?
நபி(ஸல்) அவர்கள் தமது வலப்புறம், இடப்புறமும் தமது கன்னத்தின் வெண்மைத் தெரியும் அளவு (முகத்தைத் திருப்பி) ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்'' என்று ஸலாம் கூறுவார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)
பொதுவாக தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறுவது பர்ளாயிருப்பினும், ஹதீஸில் காணப்படும் முறைப்படி ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்'' எனும் வாசகத்தை வலப்புறம் திரும்பி ஒருமுறையும், இடப்புறம் திரும்பி ஒருமுறையும் ஆக இரு முறைகள் கூறுவதே சுன்னத்தாகும்.
ஒருமுறை மட்டும் ஸலாம் கூறுவதன் நிலை:
நபி(ஸல்) அவர்கள் (தமது முகத்திற்கு நேராக) ஒரு ஸலாம் மட்டும் கூறுவார்கள்.
(ஸஹ்லுபின் ஸஃது(ரழி), அனஸ்(ரழி), பைஹகீ, இப்னுமாஜா)
இவ்வறிவிப்பின் படி ஒரு முறை மட்டும ஸலாம் கூறுவது ஆகுமானதாயிருப்பினும், இருமுறை கூறுவதே மேலாகும். காரணம், நபி(ஸல்) அவர்கள் இருமுறை ஸலாம் கூறியுள்ளார்கள் என்பதற்கான அறிவிப்புகள் ஒருமுறை கூறினார்கள் எனும் அறிவிப்புகளை விட மிக அதிகமானவையும் பலம் வாய்ந்தவையுமாயுள்ளன.
ஸலாம் யாருக்குச் சொல்லப்படுகிறது?
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் இறுதியில் எங்கள் (தொழுகையை நடத்தி வைக்கும்) இமாம்களுக்கு நாங்கள் ஸலாம் கூற வேண்டும் என்றும், மேலும் எங்களில் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருக்கு ஸலாம் கூறிக் கொள்ளவேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்கள். (மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் முகர்ரபான் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளுக்கும், மற்றும் மூமின் முஸ்லிம்களுக்கும் ஸலாம் கூறுவார்கள் என்று உள்ளது) (ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி), அஹ்மத், ஹாக்கிம், பஜ்ஜார்)
இவ்வறிவிப்பு தொழுகையின் இறுதியில் நாம் இரு புறங்களிலும் திரும்பி ஸலாம் கூறுவதானது, வெறுமனே யாருக்கோ கூறுகிறோம் என்றில்லாமல், இமாமுடன் தொழுதால் அந்த இமாமுக்கும், இரு புறங்களிலிருக்கும் மூமின் முஸ்லிம்களுக்கும், மற்றும் மலக்குகளுக்கும் கூறுகிறோம் என்பதாகவும், தனித்துத் தொழுதால் பொதுவாக மலக்குகளுக்கும், ஏனைய மூமின் முஸ்லிம்களுக்கும் ஸலாம் கூறுவதாகக் கருதி கூறவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பர்ளு தொழுது ஸலாம் கொடுத்தவுடன் ஓத வேண்டியவை:
நபி(ஸல்) அவர்கள் தொழுகையிலிருந்து (ஸலாம் கொடுத்து) திரும்பிவிட்டால் ''அஸ்தஃ ஃபருல்லாஹ்'' என்று மும்முறை கூறி இஸ்திஃ ஃபார்-பாவ மன்னிப்புத் தேடுவார்கள். பின்னர் அல்லாஹும்ம-அன்த்தஸ்ஸலாம்-வமின்கஸ்ஸலாம்-தபாரக்த்த-யாதல் ஜலாலி-வல்இக்ராம் என்று ஓதுவார்கள். (ஸவ்பான்(ரழி), முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
பொருள்: யா அல்லாஹ்! நீயே காப்பற்றக் கூடியவன். உன்னிடமே அனைத்துப் பாதுகாப்புமுள்ளன. கண்ணியமும், மகத்துவமும் உள்ளவனாகிய நீயே மிக்க மேலானவன்.
நபி(ஸல்) அவர்கள் தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்து விட்டால் பின்வருமாறு ஓதுவார்கள். லாஇலாஹ - இல்லல்லாஹு வஹ்தஹு -லாஷழீக்கலஹு - லஹுல்ஹம்து - வஹுவஅலாகுல்லி - ஷையின் - கதீர் -அல்லாஹும்ம - லாமானிஅ - லிமா அஃதைத்த - வலா - முஃதிய - லிமா - மனஃத - யன்ஃபஉ - தல்ஜத்தி - மின்கல்ஜத்து. (முகீரத்துபின் ஷுஃபா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
பொருள்: (வணங்கி வழிபடுவதற்குரிய) இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு ஈடு இணை எவருமில்லை. சர்வ ஆட்சியும், சர்வப் புகழும் அவனுக்கே உரித்தானவை. அவன் அனைத்துப பொருள்கள் மீதும் பேராற்றல் படைத்தவனாகும். யா அல்லாஹ்! நீ கொடுத்தால் தடுப்போரில்லை. நீ தடுத்தால் கொடுப்போருமில்லை. யாதொரு தனவந்தருக்கும் (தமது நல்லஅமல் அன்றி) அவரது செல்வம் உன்னிடத்தில் எப்பயனுமளிக்காது.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின், ஸலாம் கொடுத்த போது பின்வருமாறு ஓதிக்கொண்டிருந்தார்கள்!
லாஇலாஹ-இல்லல்லாஹு-வஹ்தஹு-லாஷரீக்க-லஹுலஹுல்முல்கு-வலஹுல் ஹம்து-வஹுவ-அலாகுல்லி-ஷையின் கதீர்-லாஹவ்ல-வலாகுவ்வத்த-இல்லா-பில்லாஹ்-லாஇலாஹ இல்லல்லாஹு-வலா-நஃபுது-இல்லா-இய்யாஹு-லஹுன்னிஃமத்து-வலஹுல்ஃபழ்லு-வலஹுஸ்ஸனாஉல் ஹஸன்-லாஇலாஹ-இல்லல்லாஹு-முக்லிªன-லஹுத்தீன்-வலவ்கரிஹல்-காஃபிரூன். (அப்துல்லாஹிப்னுஜிஜுபைர்(ரழி), முஸ்லிம்)
பொருள்:
(வணங்கி வழிபடுவதற்குரிய) இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணை எவருமில்லை. அவனுக்கே சர்வ ஆட்சியும், அவனுக்கே சர்வப் புகழும் உரித்தானவை. அவன் அனைத்துப் பொருள்கள் மீதும் பேராற்றல் படைத்தவனாவான். தீங்கைத் தவிர்ப்பதற்கும், நலனை அடைவதற்கும் அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இயலாது. (வணங்கி வழிபடுவதற்குரிய) இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு வழிபட மாட்டோம். அனைத்து அருட்கொடையும் அவனுக்குரியவையே அனைத்து விசேஷமும் அவனுக்குரியவையே. அவனுக்கு அழகிய அனைத்துப் புகும் உள்ளன. (வணங்கி வழிபடுவதற்குரிய) இறைவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாருமில்லை இறை மறுப்பாளன் வெறுத்த போதிலும் அவனுக்கே வழிபட்டு தூய உள்ளம் கொண்டாராக (வாழ்ந்து கொண்டு) இருப்போம்.
இமாமுடன் பர்ளு தொழுது ஸலாம் கொடுத்தவுடன் தக்பீர் கூறுவதன் நிலை:
இமாம் ஸலாம் கொடுத்தவுடன் இமாமும், மற்றுமுள்ளோரும் ''அல்லாஹுஅக்பர்'' என்று ஒருமுறை சப்தமாகக் கூறவேண்டும் என்பதைச் சிலர் கீழ்க்காணும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மார்க்கமாக்கி வைத்துள்ளனர். அவ்வாறு தக்பீர் கூற வேண்டும் என்பதற்கு ஹதீஸ்களில் போதிய ஆதாரமில்லை. அவர்கள் ஆதாரமாகக் காட்டும் ஹதீஸ் பின்வருமாறு:
நான் நபி(ஸல்) அவர்களின் தொழுகை முடிந்து விட்டதென்பதை தக்பீரைக் கொண்டு தெரிந்து கொள்வேன் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ)
இவ்வாறே மக்கள் பர்ளான தொழுகையைத் தொழுது முடித்தவுடன் திக்ரைக் கொண்டு, சப்தத்தை உயர்த்துவதானது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து வந்தது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறிவிட்டு, இவ்வாறு தொழுது முடித்த மக்கள் திக்ரைச் சப்தமாகச் சொல்வதைச் செவியுற்ற நான் (தொழுகை முடிந்து விட்டது என்பதைத்) தெரிந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்கள். (புகாரீ)
இன்னொரு அறிவிப்பில் தக்பீரைக் கொண்டு தெரிந்து கொள்வேன் என்றில்லாமல் ''திக்ரைக் கொண்டு தெரிந்து கொள்வேன்'' என்றும் உள்ளது. திக்ரு என்று கூறும்போது ''சுப்ஹானல்லாஹ்-அல்ஹம்துலில்லாஹ்-அல்லாஹுஅக்பர்' ஆகியவை போன்ற அல்லாஹ்வை தியானிக்கும் அனைத்து வார்த்தையையும் குறிக்கும். ''அல்லாஹு அக்பர்'' என்பதை மட்டும் குறிக்காது. அதுவும் ''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மட்டும் தான் இப்பழக்கம் இருந்தது'' என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுவதால், அவர்கள் காலத்திற்குப் பின்னர் அப்பழக்கம் சஹாபாக்கள் காலத்திலேயே நடைமுறையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆகவே நபி(ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் சஹாபாக்களுக்கு திக்ருடைய பயிற்சி அளிப்பதற்காக அவ்வாறு செய்திருக்கலாம் என்பதை மேற்காணும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் அறிவிப்புகள் காட்டுகின்றனவே அன்றி, நாம் அவ்வாறு நமது தொழுகைகளுக்குப் பின் ஓத வேண்டும் என்பதை உணர்த்தவில்லை என்பதை அறிகிறோம்.
பர்ளான தொழுகைகளுக்குப் பின் ஓதப்படும் தஸ்பீஹ்களின் பல்வேறு முறைகள்: ஒரு முறை ஏழை முஹாஜிரீன்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தனவந்தர்கள் (மட்டும் தமது செல்வத்தின் பயனாக) உயர் பதவியையும், நிரந்தரமான சுகபோக வாழ்வையும் அபரிதமாக அடைந்துகொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போல் அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு பிடிப்பது போல் அவர்களும் பிடிக்கிறார்கள்.
அவர்களிடம் மிதமிஞ்சிய பொருள்களிருப்பதால் அதைக்கொண்டு அவர்கள் ஹஜ்ஜு, உம்ரா ஆகியவற்றைச் செய்கிறார்கள். (தீனுகாகப்) பாடுபடுகிறார்கள். தான தர்மம் செய்கிறார்கள் என்றனர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கி நன்மையான காரியங்களில் உங்களை முந்தி விட்டவர்களை நீங்கள் அடைந்து விடக்கூடியதும், உங்களைப் பார்க்கினும் பின்னுள்ளவர்களைவிட உங்களை முந்தச் செய்யக்கூடியதும், நீங்கள் எதைச் செய்யப் போகிறீர்களோ, அதைப்போன்று அமல் செய்பவர்களைத் தவிர மற்றெவரும் உங்களைவிட மேலானவர்களாக முடியாத வகையிலுள்ள ஒரு (சிறந்த) அமலை நான் உங்களுக்கு அறிவித்துக் கொடுக்கட்டுமா? என்றார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சரி, எடுத்துக் கூறுங்கள் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நீங்கள் ஒவ்வொரு (பர்ளு) தொழுகைக்குப்பின் 33 முறை அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்த வேண்டும், புகழ வேண்டும், அவனைப் பெருமிதப்படுத்த வேண்டும் என்றார்கள்.
இவ்வறிவிப்பை அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பாளராகிய அபூஸாலிஹ் என்பவரிடத்தில் (33 முறை அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துவது, புகழ்வது, அவனைப் பெருமிதப்படுத்துவது என்றால்) அதை எவ்வாறு கூற வேண்டும் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ''சுப்ஹானல்லாஹி-வல்ஹம்துலில்லாஹி-வல்லாஹு அக்பர்'' என்று அவை ஒவ்வொன்றும் 33 ஆகும் விதத்தில் கூற வேண்டும் என்றார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள் அபூஸாலிஹ் என்னும் அந்த அறிவிப்பாளர் கூறுவதாவது:
அதன்பின் மீண்டும் முஹர்ஜிரீன்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து செல்வம் படைத்த எமது சகோதரர்களாகிய அவர்கள், இது விஷயத்தைத் தெரிந்து கொண்டு நாங்கள் (தஸ்பீஹ்) ஓதுவது போல் அவர்களும் ஓத ஆரம்பித்து விட்டார்களே என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அப்படி என்றால்) அது அல்லாஹ்வின் அருட்கொடை அதை அவன் தான் நாடியவர்களுக்குக் கொடுப்பான் என்றார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
மேற்காணும் இவ்வறிவிப்பில் ''சுப்ஹானல்லாஹ்-அல்ஹம்துலில்லாஹ்-அல்லாஹுஅக்பர்'' என்று தனித் தனியாக 33 முறை கூறாமல் ''சுப்ஹானல்லாஹி-வல்ஹம்துலில்லாஹி-வல்லாஹு அக்பர்'' என்று ஒட்டு மொத்தமாக 33 முறை கூறுவதன் மூலம் ஒவ்வொன்றும் தனித்தனியாக 33 முறையாகி விடுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு மூன்றையும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துக் கூறவும் செய்யலாம் என்பதை அறிகிறோம்.
ஒரு அமலுக்குப் பின் செய்ய வேண்டிய அமல்கள் உள்ளன. அவற்றை கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் ஓத வருவோர் அல்லது செய்து வருவோர் (எப்போதும்) நஷ்டமடைந்து விடமாட்டார்.
(அவையாவன:) 33 முறை அல்லாஹுவை தஸ்பீஹ் செய்தல், 33 முறையும், ''அல்ஹம்துலில்லாஹ்'' என்று 33 முறையும் அல்லாஹுஅக்பர் என்று 33 முறையும் ஓதிவிட்டு (இறுதியாக) சம்பூரணமாக 100-வது முறையாக 'லாஇலாஹ இல்லல்லாஹு-வஹ்தஹு லாஷரீக்கலஹு-லஹுல்முல்கு-வலஹுல்ஹம்து-வஹுவ-அலா-குல்லி-ஷையின் கதீர், என்று ஒருவர் ஓதுவாரானால் அவரது பாவங்கள் கடல் நுரையைப் போல் இருப்பினும் மன்னிக்கப்பட்டுவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
மேற்காணும் இவ்வறிவிப்பில் ''சுப்ஹானல்லாஹ்'' 33 முறையும், ''அல்ஹம்துலில்லாஹ்'' என்பதாக 33 முறையும், ''அல்லாஹு அக்பர்'' என்று 33 முறையும் ஓதுவது குறித்து கூறப்பட்டிருப்பதை காணுகிறோம். ஆகவே இவ்வாறு தனித்தனியாகவும் ஓதலாம் என்பதை அறிகிறோம்.
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர் 33 முறை 'சுப்ஹானல்லாஹ்' என்றும். 33 முறை ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றும் 34 முறை ''அல்லாஹுஅக்பர்'' என்றும் நாங்கள் ஒருமுறை அன்ஸார்களில் ஒருவருடைய கனவில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு (பர்ளான) தொழுகைக்குப் பின் இவ்வாறு தஸ்பீஹ் ஓத வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆம் என்றார்கள். அதற்கு (கனவில் தோன்றிய அவர்) அவற்றை 25 ஆக ஆக்கிக் கொண்டு ''லாஇலாஹ இல்லல்லாஹு'' என்பதை அத்துடன் இணைத்து ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
பின்னர் அவர் அதிகாலையில் எழுந்து நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்தவற்றைக் கூறினார். அதற்கு அவர்கள் ''அன்ஸார் தோழர் கூறுவது போல் அவ்வாறே அதை இணைத்து ஓதிக்கொள்ளுங்கள்'' என்றார்கள்.
நஸயீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் 25 முறை ''சுப்ஹானல்லாஹ்'' என்றும், 25 முறை ''அல்ஹம்துலில்லாஹ்'' என்றும் 25 முறை அல்லாஹு அக்பர் என்றும், 25 முறை ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்றும் ஓதிக்கொள்ளுங்கள். அப்போது அவை 100 ஆகும் என்று (கனவில் வந்தவர்) கூறினார். (ஜைதுபின்ஸாபித்(ரழி), நஸயீ, அஹ்மத், தாரமீ)
பர்ளான தொழுகைகளுக்குப்பின் ஓதப்படும் தஸ்பீஹ்களின் பல்வேறு முறைகள் எனும் பகுதியின் தொடர்:
ஒருமுறை ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, செல்வந்தர்கள் தம்மிடமுள்ள செல்வத்தின் பயனாக எங்களால் செய்ய இயலாத பல்வகை நல்ல அமல்களைச் செய்து, அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். நாங்கள் என்ன செய்வது? என்று கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நீங்கள் தொழுது விட்டால் ''சுப்ஹானல்லாஹ்'' என்று 33 முறையும், ''அல்ஹம்துலில்லாஹ்'' என்று 33 முறையும், ''அல்லாஹு அக்பர்'' என்று 34 முறையும் ஒதிவிட்டு (அத்துடன்) ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்று 10 முறையும் ஒதுவீர்களாயின், நிச்சயமாக இவற்றின் மூலம் நீங்கள் (நன்மையால்) உங்களை முந்தியவர்களை அடைந்து விடலாம். மேலும் உங்களுக்குப் பின்னுள்ளோர் உங்களை முந்த முடியாது என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (இப்னு அப்பாஸ்(ரழி), திர்மிதீ)
கடமையானத் தொழுகையைத் தொழுது அதை மீண்டும் அடைந்தால்
ஒருவர் கடமையான பர்ளுத் தொழுகையை நிறைவேற்றி விட்டார், பின் அதே நேரத் தொழுகையை ஜமாத்துடன் வாய்ப்புக் கிடைத்தால்
கடமையானத் தொழுகையைத் தொழுது அதை மீண்டும் அடைந்தால்....
1 மிஹ்ஜன்(ரலி) அவர்கள்(ஸல்) அவர்களின் அவையில் இருந்தார். அப்பொழுது பாங்கு சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். தொழுது முடித்து திரும்பி பார்த்த பொழுது மிஹ்ஜன்(ரலி) அவர்கள் தொழாமல் அவையிலேயே அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழ உம்மை தடுத்தது எது? நீர் முஸ்லிம் இல்லையா? அதற்கு அவர் ''ஆம்'' அல்லாஹ்வின் தூதரே! என்றாலும் நான் என்னுடைய இல்லத்திலேயே தொழுதுவிட்டேன் அதற்கு நீர்
கடமையான தொழுகையை தொழுது மஸ்ஜிதிற்குள் வந்துவிட்டால் அந்நிலையில் தொழுகைக்காக காமத் சொல்லப்படுமேயானால் மக்களுடன் நீரும் தொழுவீராக! என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: புஸ்ர் பின் மிஹ்ஜன்(ரலி) நூல்கள்: முவத்தா, நஸயீ
கடமையான தொழுது மஸ்ஜிதிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ சென்று அங்கு ஜமாஅத்துடன் (கடமையான) தொழுகை நடத்தப்படுமேயானால் அங்கும் தொழவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
2. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜில் இருந்தேன். நான் மஸ்ஜிதிற்குள் அவர்களுடன் ªபுஹுத் தொழுகையை நிறைவேற்றினேன். அவர் தன்னுடைய தொழுகையை முடித்து திரும்பி பார்த்தபோது நபி(ஸல்) அவர்களுடன் ªபுஹுத் தொழுகையை நிறைவேற்றினேன். அவர் தன்னுடைய தொழுகையை முடித்து திரும்பி பார்த்த போது நபி(ஸல்) அவர்களுடன் தொழாத இரண்டு மனிதர்கள் கடைசியில் அமர்ந்திருப்பதை கண்டார்கள், அவ்விருவரையும் நபிகளாரிடம் கொண்டு வரப்பட்டபோது எங்களுடன் தொழலாம் உங்களிருவரையும் தடுத்தது எது? என்று நபி(ஸல்) அவர்கள் வினவ அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இருவரும் எங்களுடைய வீட்டிலேயே தொழுதுவிட்டோம் என்றார்கள். அதற்கு நீங்கள் அவ்வாறு செய்யவேண்டாம். உங்களுடைய வீட்டில் தொழுது பின்னர் மஸ்ஜிதில் ஜமாஅத்தொழுகையை பெற்றுக் கொண்டால் அவர்களுடன் தொழுங்கள். அது உங்களுக்கு உபரியாக அமையும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: யஜீதுபின் அஸ்வத்(ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, நஸயீ
3. தலைவர்கள் கடமையான தொழுகையை நேரத்தை விட்டும் பிற்படுத்தினால் நீர் எவ்வாறு நடந்து கொள்வீர் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் (அந்நேரத்தில்) எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்று ஏவுகிறீர்! என்று கேட்டேன். அதற்கு நீர் அந்தந்த நேரம் அடைந்தால் தொழுதுக் கொள்வீர், நீர் அவர்களுடன் (கடமையான) தொழுகையை பெற்றுக் கொண்டால் அவர்களுடன் தொழுவீராக! நிச்சயமாக அது உபரியாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதரில்கிம்ஃபாரி(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயி
4. ஒரு மனிதர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களிடம் வந்து நான் என்னுடைய இல்லத்திலேயே தொழுதுவிடுகிறேன். பிறகு மஸ்ஜிதிற்குள் செல்லும் போது இமாமுடன் ஜமாஅத்தொழுகையை காண்கிறேன் என்ன நான் அவர்களுடன் (மீண்டும்) தொழவேண்டுமா? என்று வினவினார். அதற்கு இப்னு உமர்(ரலி) அதைப்பற்றி முடிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் எதை நாடுகிறானோ அதை கடமையாகவும், உபரியாகவும் ஆக்குகிறான் என்றார்கள். அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஅத்தா
கடமையானத் தொழுகையைத் தொழுது ஏதேச்சையாகவோ அல்லது பணி வேறு பல அலுவல்கள் விஷயமாக மஸ்ஜிதிற்குள் நுழையும் போது ஜமாஅத் தொழுகையை அங்கு அந்நேரத்தில் மீண்டும் பெற்றுக் கொண்டால் அவர்களுடன் சேர்ந்து தொழலாம். தொழவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மற்றொன்று ஹதீஸில் ஒரு இரண்டு தொழுகை தொழக்கூடாது என்று இருக்கிறது.
5. மைமூனா(ரலி) அவர்களின் அடிமை ªலைமான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் மதீனாவில் உள்ள பிலாத் என்ற இடத்தில் இப்னு உமர்(ரலி) அவர்களை சந்தித்தேன் அருகில் மக்கள் ஜமாஅத்துடன் தொழுதுக் கொண்டியிருந்தார்கள். நான் இப்னு உமர்(ரலி)யிடம் என்ன நீர் அவர்களுடன் தொழவில்லையா? என்று கேட்டேன்.
(ஹதீஸ்தொடர்) அதற்கு இப்னு உமர்(ரலி) ''நான் (இதற்கு முன்னரே தொழுது விட்டேன்) அதனால் மீண்டும் தொழவில்லை ஏனென்றால் நான் நபி(ஸல்) அவர்கள்'' நீங்கள் ஒரே நாளில் இரண்டு தொழுகையை தொழாதீர்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்கள். நூல்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹமத்
6. ''யார் ஸுபுஹு அல்லது மக்ரிப் தொழுகையை தொழுதுவிட்டு பிறகு மீண்டும் இமாமுன் அத்தொழுகையை பெற்றுக் கொண்டால் அவ்விரண்டு தொழுகையை மீண்டும் தொழ வேண்டாம். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: முஅத்தா
கடமையானத் தொழுகையைத் தொழுது மீண்டும் அத்தொழுகையை இமாம் தொழக கூடியவர்களாக கண்டால் தொழுதுவிட்டவர் திருப்பி தொழக் கூடாது என்று இந்த இரண்டு ஹதீஸ்கள் கூறுகின்றன. இவ்விரண்டு ஹதீஸ்களும், கடமையான தொழுகை தொழுது அதை மீண்டும் பெற்றுக் கொண்டால் தொழலாம், தொழவேண்டும் என்று நாம் ஆரம்பத்தில் கண்ட ஹதீஸ்களுடன் மோதுகின்றன. என்ன இவ்விரண்டு முரண்படுகிறதோ என்று நம்மில் பலருக்கு ஐயங்கள் எழலாம்? மேலும் இவ்விரண்டையுமோ அல்லது அவைகளில் ஒன்றையோ நாம் புறக்கணித்து விடவும் முடியாது காரணம் இருக்க கருத்துடைய ஹதீஸ்களும் ஸஹீஹானவை எப்படி இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுத்த முடியும்? என்று கேள்வி எழலாம்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரே நாளில் கடமையான தொழுகையை இரண்டு தடவைக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆரம்ப ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு தொழுகையைப் பற்றிக் கூறும் போது இரண்டில் ஒன்று ''உமக்கு உபரியானதாக அமைந்து விடும் என்று பதிலளித்துள்ளார்கள். எனவே இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறிய படி இரண்டும் கடமையான தொழுகை என்று அமையாது. மாறாக ஒன்று உபரியானதாக அமைந்து விடும் என்று கருத்தில் கொள்ள வேண்டும்.
8. ''நபி(ஸல்) அவர்கள் ''எனக்கு பின்னால் சில தலைவர் தோன்றுவார்கள். அவர்களுக்கு தொழுகை அந்நேரத்தில் தொழுவதை விட்டும் பல அலுவல்கள் அவர்களை உண்டாக்கும். எதுவரை எனில் தொழுகை நேரமே சென்று விடும் (பின்தி தொழுவார்கள்) எனவே நீங்கள் தொழ நேரம் வரும்போது தொழுது கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களுடன் தொழலாமா? என்று வினவினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம்'' நீர் நாடினால் (அவர்களுடன் சேர்ந்தும்) தொழலாம்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உப்பாத்பின் ஸாமித்(ரலி) நூல்கள்: அபூதாவூத், முஸ்லிம்
நாம் ஆரம்பத்தில் இரண்டு கருத்துகளுக்கு மத்தியில் முதல் கருத்துக்கு வலுவூட்டக் கூடிய ஆதாரமாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது. அதாவது கடமையான தொழுகையைத் தொழுது மீண்டும் கடமையான தொழுகையை (வேறிடத்தில்) பெற்றுக் கொண்டால் தொழலாம் விருப்பத்தின் அடிப்படையில் தொழாமல் இருக்கலாம். தொழுதால் அது உபரியாக ஆகிவிடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகின்றன. கட்டாயம் மீண்டும் தொழ வேண்டும் என்ற கருத்தை மறுத்து விருப்பத்தின் அடிப்படையில் உபரியாக தொழுகையை பேணலாமே என்று எண்ணி தொழலாம். அதிக அளவில் உபரியான வணக்கங்களை புரிய முயல வேண்டும்.
ஸுஜூதுஸ்ஸஹ்வு - மறதிக்கான ஸஜ்தாக்கள்
ஸுஜூதுஸ்ஸஹ்வு - என்றால் என்ன?
நாம் தொழும்போது, மறதியாக நிகழும் கூடுதல், குறையுதல் முதலியவற்றை நிவர்த்திச் செய்வதற்காக தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இரு ஸஜ்தாக்களாகும்.
''ஸுஜூதுஸ்ஸஹ்வு'' எவ்வாறு செய்ய வேண்டும்?
ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்வதற்கு இரு முறைகள் உள்ளன.
1. தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறுதல்.
2. தொழுகையின் இறுதியில் ஒரு ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கூறுதல்.
இவ்விரு முறைகளில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம். ஏனெனில் இவ்விரு முறைகளுக்குமே ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதாரமாயுள்ளன.
''ஸுஜூதுஸ்ஸஹ்வு'' செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்:
1. முதல் இருப்பில் (நடு இருப்பில்) உட்காராமல் எழுந்துவிட்டால் (ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் இரண்டாவது ரகாஅத்திலிருந்து உட்காரமல் எழுந்து விட்டார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் எழும்பி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் தருவாயில், மக்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் சொல்லி, 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். (இப்னுபுனஹனா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)
2) தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால்,
எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு பின்னர் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
3. எது சரியானது? என்பதை தம்மால் ஊர்ஜிதம் செய்ய இயலாவிடில்,
சந்தேகத்தை அகற்றிவிட்டு, தமக்கு ஊர்ஜிதமானது எதுவோ அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் ''ஸுஜூதுஸ்ஸஹ்வு'' செய்து கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு நாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது அவருக்குப் புலப்படவில்லை என்றால், உடனே அவர் சந்தேகத்தை அகற்றிவிட்டு, நமக்கு உறுதியானதன்படி, தொழுது முடித்து, பின்னர் தாம் ஸலாம் கூறுமுன், 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக!
அவர் 5 ரகாஅத்து தொழுதவராகிவிட்டால், அவருடைய இவ்விரு ஸஜ்தாக்களும் ஒரு ரகாஅத்துடைய நிலையில் ஆகி (அவருடைய தொழுகை அவருக்கு இரட்டையாகி விடுகிறது) (அவ்வாறின்றி) அவர் முழுமையாக நான்கு ரகாஅத்துக்கள் தொழுதவராகிவிட்டால், நாம் உபரியாகச் செய்துள்ள) 2 ஸஜ்தாக்களும் ஷைத்தானின் தோல்விக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்து விடுகின்றன. (அபூஸயீதில் குத்ரீ(ரழி), முஸ்லிம், அஹ்மத்)
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு, தாம் தொழுதது ஒரு ரகாஅத்தா, அல்லது இரண்டா? என்பது நமக்கு புலப்படாவிடில் (இந்நிலையில் அவர் ஒன்று தொழுதது தமக்கு உறுதியாயிருப்பதால்) அதை ஒன்றுதான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். இவ்வாறே தாம் தொழுதது இரண்டா, அல்லது மூன்றா? என்பது புரியாவிட்டால், (மேற்கண்டவாறு) 2 தான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தாம் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என்பது புரியாவிட்டால், மூன்றுதான் என்று ஊர்ஜிதம் செய்து அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் தாம் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்ளவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துர்ரஹ்மான் அவ்ஃப்(ரழி), திர்மிதீ)
இவ்வறிவிப்பு இதற்கு முன்னால் உள்ள அறிவிப்புக்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுகிறோம். ஏனெனில் முந்தைய அறிவிப்பில் தமக்கு சந்தேகமானதை விட்டுவிட்டு, உறுதியானதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் அதற்கேற்ப, உறுதியானது இன்னதென்பதை இவ்வாறு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் ஒன்றா, இரண்டா? அல்லது இரண்டா, மூன்றா, அல்லது மூன்றா, நான்கா? என்பனவற்றில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு சற்று தடுமாறும் நிலை ஏற்பட்டுவிட்டால், அதிகபட்சத்தை விட்டு விட்டு, குறைந்த பட்சத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
4. ஒருவருக்கு சந்தேகம் தமது தொழுகையின் மத்தியில் ஏற்படாமல், குறிப்பாக தொழுகையின் கடைசி இருப்பில் இருக்கும்போது தாம் எத்தனை ரகாஅத்துக்கள் தொழுதுள்ளோம் என்பதே புரியாதவராகிவிட்டால், அதற்காக அவர் (கடைசி இருப்பில்) தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கொடுக்கவேண்டும்.
உங்களில் ஒருவர் தாம் தொழ ஆரம்பித்துவிட்டால் ஷைத்தான் (அவரிடம்) வந்து, (பல சிந்தனைகளை உண்டு பண்ணிவிட்டு, அவரைக் குழப்புவான். (அதனால்) அவர் தாம் எவ்வளவு தொழுதுள்ளார் என்பதை புலப்படாதவராம் விடுவார். உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டு விட்டால், உடனே அவர் தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)
உங்களில் ஒருவருக்கு மறதி ஏற்பட்டு, தாம் அதிகமாக தொழுதுள்ளாரா? அல்லது குறைவாக தொழுதுள்ளாரா? என்பதும் புரியவில்லையாயின், அப்போது அவர் தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறுவாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (யஹ்யாபின் அபீகதீர்(ரழி), தாருகுத்னீ)
மேற்காணும் இரண்டு அறிவிப்புகளிலும் காணப்படும் பரிகாரமுறை அனைவருக்கும் பொதுவான முறை அல்ல என்பதை நினைவில் கொள்வோமாக! இது ஒருவருக்கு தமது தொழுகையின் மத்தியில் எல்லாம் ஏற்படாமல், தாம் தொழுது முடிக்கும் தருவாயில், தொழுகையின் கடைசி இருப்பில் உட்கார்ந்திருக்கும் போது திடீரென்று அவருக்குத் தோன்றும் சந்தேகமாகும். அதுவும் இதற்கு முன் உள்ள அறிவிப்புகளில் காணப்பட்டதைப் போன்றுள்ள சாதாரணமான சந்தேகம் அல்ல. அவற்றைப் பார்க்கினும் கடுமையான வகையில் பொதுவாக தாம் தொழுதவை இத்தனை ரகாஅத்துகள் தான் என்றோ, கூட்டித் தொழுதுள்ளோமா, அல்லது குறைத்துத தொழுதுள்ளோமா? என்பதை புரியாத நிலையில், (அதுவும் கடைசி இருப்பில் ஸலாம் கூறுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது தோன்றும், மிகச் சிக்கலான சந்தேகமாகும். இத்தகைய சிக்கலான சந்தேகத்தை உடையவர் தான் மேற்காணும் இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்டவாறு, தாம் உட்கார்ந்திருக்கும் அதே நிலையில் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறி தமது தொழுகையை நிறைவு செய்து கொள்ள வேண்டுமே அன்றி, வேறு எவரும் அவ்வாறு செய்து கொள்ளக் கூடாது.
5) ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளை விட ஒரு ரகாஅத் அதிகமாக தொழுது விட்டால் அப்போது அவர்கள், அப்படி என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நீங்கள் 5 ரகாஅத்துகள் தொழவைத்து விட்டீர்கள் என்று ஒருவர் கூறினார். உடனே தாம் ஸலாம் கூறிவிட்டு பின்னர் ஸஜ்தாக்கள் செய்தார்கள். பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு. (இப்னுமஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இப்னு ஸீரீன் அவர்களிடத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸஹ்வுடைய ஸஜ்தாக்கள் செய்த பின்னர் மீண்டும் ஸலாம் கொடுத்தார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம், நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள் என்று இம்ரான்பின் ஹுஸைன்(ரழி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக கூறினார்கள்.
ஆகவே, புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் காணப்படும் இந்த ஸஹீஹான ஹதீஸின்படி நபி(ஸல்) அவர்களுக்கு, தாம் தொழுது முடித்த பின்னர், ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, அந்த ஸுஜூதுஸ்ஸஹ்வு அவர்கள் முதலில் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு செய்வார்களேயானால், அவ்வாறு அவர்கள் ஸஜ்தாக்கள் செய்தவுடன் ஸலாம் கூறிவிடுவார்கள் என்று மட்டுமே உள்ளது.
இவ்வறிவிப்பின்படி, முதலில் ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்பவர் அவ்வாறு அவர் ஸஜ்தாக்கள் செய்து விட்டு, எழுந்து உட்கார்ந்தவுடன் ஸலாம் கூறி விடுவது ஆகுமானதாயிருப்பினும், அவர் ''அத்தஹிய்யாத்'' ஓதிவிட்டு ஸலாம் கொடுப்பதே மேலானதாகும்.
ஏனெனில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும் என்பதாக இப்னுமஸ்ஊத்(ரழி), அவர்கள் வாயிலாக அபூதாவூத், நஸயீ ஆகியவற்றிலும், முகீரா(ரழி) வாயிலாக பைஹகீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் பலகீனமானவையாயிருப்பினும், ''நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்த பின்னர், ''அத்தஹிய்யாத்'' ஓதிய பின்னரே ஸலாம் கொடுப்பார்கள்'' என்பதற்கான ஸஹீஹான அறிவிப்பொன்று இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாகவோ ''முஸன்னஃப் இப்னுஷைபா''வில் இடம் பெற்றிருப்பதாக ஹாபிழ் ஸலாஹுத்தீனில் அலாயீ(ரஹ்) அவர்கள் கூறுவதாக ஹாபிழ் இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுல்பாரீயில் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்ட போது, (தாம்கிப்லாவின் பக்கம்) திரும்பி 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கொடுத்தார்கள் என்றும் உள்ளது.
ஆகவே, நபி(ஸல்) அவர்கள் தாம் மறதியாக 5 ரகாஅத்து தொழ வைத்துவிட்ட நிலையில் ஸுஜூதுஸ்ஸஹ்வுக்குரிய இருமுறைகளில் ஒரு முறைப்படி ஒரு சந்தர்ப்பத்திலும், மற்றோர் முறைப்படி மறு சந்தர்ப்பத்திலும் செய்துள்ளார்கள் என்பதிலிருந்து, யாரும் இரு முறைகளில் ஒன்றின்படி அமல் செய்து கொள்ளலாம் என்பதைத் தெளிவாக அறிகிறோம்.
ஒருவர் தாம் தொழ வேண்டிய ரகாஅத்துகளில் மறதியாக ஒன்றையோ, அல்லது இரண்டையோ குறைத்துத் தொழுது விட்டால், அவற்றை நிறைவு செய்துவிட்டு, இறுதியில் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் அஸ்ரு தொழ வைத்தார்கள் அப்போது 3வது ரகாஅத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு தமது வீட்டில் புகுந்து விட்டார்கள். உடனே கைதாராளம் வாய்ந்தகிர்பாக்(ரழி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! என்று அழைத்து அவர்களின் நடப்பை எடுத்துக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆவேசத்துடன் தமது மேல் ஆடையை இழுத்தவர்களாக வெளியில் வந்து, மக்களை நோக்கி இவர் கூறுவது உண்மையா? என்றார்கள். அனைவரும் ''ஆமாம்'' என்றனர். உடனே ஒரு ரகாஅத்து தொழ வைத்துவிட்டு, பிறகு ஸலாம் கூறி, 2 ஸஜ்தாக்கள் செய்து பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். (இம்ரான்பின் ஹுஸைன்(ரழி), முஸ்லிம்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ரு தொழ வைக்கும்போது, இரண்டாவது ரகாஅத்தில் ஸலாம் கொடுத்து விட்டார்கள். அப்போது ''துல்யதைன்'' என்று அழைக்கப்படும் ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு, அப்படி எல்லாம் எதுவும் நிகழவில்லை'' என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! ''அப்படி சில மட்டுமே நிகழ்ந்துள்ளன'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி ''துல்யதைன்'' கூறுவது உண்மைதானா? என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதரே! 'ஆமாம்' என்றனர். உடனே அவர்கள் தொழுகையில் விடுபட்டவற்றை நிறைவு செய்துவிட்டு, தாம் உட்கார்ந்த நிலையில் ஸலாம் கொடுத்த பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
7 தொழுகையில் மறதியாக இரண்டாவது ரகாஅத்தை விட்டும் எழும் ஒருவருக்கு நினைவு வந்து விட்டால், அவர் முழுமையாக எழாத நிலையில் இருந்தால், உடனே உட்கார்ந்து கொள்ளவேண்டும். முழுமையாக எழுந்து விட்டால் மீண்டும் உட்காராமல் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு இறுதியில் ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு இமாம் இரண்டாவது ரகாஅத்தில் (உட்காராமல்) எழுவாரானால், தாம் முழுமையாக எழுவதற்கு முன் அவருக்கு ஞாபகம் வந்து விட்டால் உடனே அவர் உட்கார்ந்து கொள்ள வேண்டும். (அவ்வாறின்றி) அவர் முழுமையாக எழுந்து விட்டால் பிறகு உட்காருவது கூடாது. அதற்காக அவர் தமது (தொழுகையின் இறுதியில்) மறதிக்குரிய 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முகீரத்துபின் ஷுஃபா(ரழி), அபூதாவூத், இப்னுமாஜா)
இதன் அறிவிப்புத் தொடரில் ''ஜாபிருல்ஜுஅஃபீ'' எனும் நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதால் இதை பலகீனமான அறிவிப்பென்று கருதப்பட்டாலும், இப்ராஹீம்பின் தஹ்மான், கைஸுப்னிர்ரபீஃ ஆகிய இருவரும் ''தஹாவீஃபீஷர்ஹில் மஆனி'' எனும் நூலில் (பாகம் 1, பக்கம் 255-ல்) காணப்படும் இந்த ஹதீஸின் நிலையை சரி கண்டு, இதை ஸஹீஹான அறிவிப்பென்று ஊர்ஜிதம் செய்துள்ளனர். (மிஷ்காத் தஹ்கீக் அல்பானீ பாகம் 1, பக்கம் 322) ஸுஜூதுஸ்ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தாக்கள்) செய்வோரின் கவனத்திற்கு
1. இமாம் இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் மறதியாக எழுந்துவிட்டால் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் அவ்வாறே அவருடன் எழும்பி விட வேண்டும்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகையில் இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் எழுந்து விட்டார்கள். அப்போது அவர்களுடன் தொழுதோரும் எழுந்து விட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (இப்னு புஹைனா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
2. இமாம் தமது மறதிக்காக ஸஹ்வுடைய ஸஜ்தாக்கள் செய்யும் போது பின்பற்றித் தொழுவோரும் அந்த ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
''இமாம் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள்'' என்று இமாமுடன் ஸஜ்தா செய்யும்படி பொதுவாகவே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (ஹுமைதீ(ரழி), பாடம்: இமாமத், முஸ்லிம்)
3. மறதிக்கான ஸஜ்தாக்கள் செய்யும்போது, ஸஜ்தா செய்வதற்காக தமது தலையைத் தாழ்த்தும் போதும், அதிலிருந்து தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூற வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் நான்கு ரகாஅத்துகள் தொழ வேண்டியிருக்க, மறதியால் 2வது ரகாஅத்திலேயே ஸலாம் கூறிவிட்டார்கள். பிறகு விஷயம் தெரிந்தவுடன் விடுபட்ட 2 ரகாஅத்துகளையும் தொழுது விட்டு, ஸலாம் கொடுத்து, பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்து, பிறகு தக்பீர் கூறி தலையை உயர்த்தி, பிறகு தக்பீர் கூறி மீண்டும் ஸஜ்தா செய்து, பிறகு தக்பீர் கூறி எழுந்து அமர்ந்தார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
4. ஒருவர் இமாமை அவர் ருகூஃவிலிருக்கும்போது பின்பற்றி, ருகூஃவுக்குச் சென்றுவிட்டார். அப்போது இமாம் தலையை உயர்த்தினார். இந்நிலையில் அவருக்கு தாம் இமாமுடன் ருகூஃவில் சேர்ந்துவிட்டோமா, இலலையா? என்று சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அப்போது அவர் தமக்கு சந்தேகமாயுள்ள அந்த ரகாஅத்தைக் கணக்கில் எடுக்காமல், தொழுதுவிட்டு ''மறதிக்கான 2 ஸஜ்தாக்கள்'' செய்து கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு தாம் தொழுதவை மூன்றா அல்லது நான்கா? என்பது புலப்படவில்லை என்றால், உடனே சந்தேகத்தை அகற்றிவிட்டு தமக்கு உறுதியானதன்படி தொழுது முடித்துவிட்டு, பின்னர் தாம் ஸலாம் கூறும் முன் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! ''மறதிக்கான 2 ஸஜ்தாக்கள்'' செய்து கொள்ள வேண்டும்.
மறதிக்கான ஸஜ்தாக்கள் (ஸுஜூதுஸ்ஸஹ்வு) செய்யும் போது ஓதும் தஸ்பீஹ்''
மறதியின் காரணமாக, தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இந்த இரண்டு ஸஜ்தாக்களிலும் ஓதுவதற்கான விஷேசமான தஸ்பீஹ் எதுவும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. எனினும் ''நபி(ஸல்) அவர்கள் மறதிக்காக இரு ஸஜ்தாக்கள் செய்தார்கள்'' என்பதையே அன்றி, அந்த ஸஜ்தாக்களில் என்ன தஸ்பீஹ் ஓதினார்கள் என்பது பற்றி எவ்வித விளக்கமுமில்லை. ஆகவே பொதுவாக அவர்கள் ஸஜ்தா செய்யும்போது எந்த தஸ்பீஹை ஓதி வந்தார்களோ அதனையே ஸுஜூதுஸ்ஸஹ்விலும் ஓதியிருப்பார்கள் என்பதை அறிகிறோம்.
சிலர் ஸுஜூதுஸ்ஸஹ்வின் போது ''சுப்ஹான-மனலா-யனாமு-வாலாயஸ்ஹு'' (தூக்கமும், மறதியும் அற்ற அல்லாஹ் பரிசுத்தமானவன்) எனும் தஸ்பீஹை ஓதுவது முஸ்தஹப்பு-விரும்பத்தக்கது என்று கூறியுள்ளார்கள். அவர்களின் இக்கூற்றுக்கு ஹதீஸ்களில் எவ்வித ஆதாரமுமில்லை என்று இமாம் இப்னு ஹஜ்ர் அஸ்கலானீ(ரஹ்) அவர்கள் தமது ''தல்கீஸ்'' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
தொழுகையில் தவறிழைக்கும் இமாமுக்கு அதை உணர்த்தும் முறை:
''உங்கள் தொழுகையில் உங்களுக்கு ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டால், ஆண்கள் (ஜமாஅத்தாக தொழும்போது) ''தஸ்பீஹ்'' சொல்வார்களாக! பெண்கள் ஒரு கையின் உள் பாகத்தால் மற்றொரு கையைத் தட்டுவார்களாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹ்லுபின் ஸஃது(ரழி), புகாரீ, முஸ்லீம்)
மேற்காணும் அறிவிப்பில் இமாம் ஏதேனும் தவறிழைக்கும்போது அதை அவருக்கு உணர்த்தக் கூடியவர் ஆணாகயிருப்பின் ''சுப்ஹானல்லாஹ்'' என்று சப்தமாகக் கூறுவதன் மூலமாகவும், பெண்களாயிருப்பின் தஸ்பீஹ் எதுவும் கூறாமல், தமது ஒரு கையின் உட்புறத்தால் மற்றொரு கையைத் தட்டுவதன் மூலமாகவும் உணர்த்த வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஸுஜூதுஸ்ஸஹ்வு (மறதிக்கான ஸஜ்தாக்கள்) செய்வது சுன்னத்தா? அல்லது வாஜிபா?
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களும், அவர்களைப் போன்று வேறு சில சஹாபாக்களும் அறிவித்துள்ள ஹதீஸ் தொடரில் ''லியஸ்ஜுத்ஸஜ்தைனி'' (அவர் மறதிக்கா) இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று ஏவல் வினையின் அடிப்படையில் ஹதீஸின் வாசகம் அமைந்திருப்பதால், இது அவசியத்தைக் குறிக்கிறது என்று கருதி சிலர் ''ஸுஜூதுஸ்ஸஹ்வு'' செய்வது வாஜிபு என்று கூறுகிறார்கள். ஆனால் ''ஸுஜூதுஸ்ஸஹ்வு'' சுன்னத்துத்தான் என்பதை கீழ்க்காணும் அபூஸயீதில் குத்ரீ(ரழி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால், அவர் சந்தேகத்தை அகற்றிவிட்டு, தமக்கு உறுதியானதன்படி நடந்து கொள்வாராக! (தொழுகையின்) பரிபூரண நிலை உறுதியாகிவிட்டபோது, (சந்தேகம் ஏற்பட்டமைக்கா) இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும். அவருடைய தொழுகை (உண்மையில்) நிறைவானதாயிருப்பின், அவர் தொழுதுள்ள ரகாஅத்து அவருக்கு நபிலாக-உபரியானதாக ஆகிவிடுவதோடு இரண்டு ஸஜ்தாக்களும் (அவ்வாறே உபரி) ஆகிவிடுகின்றன. அவருடைய தொழுகை குறைபாடுள்ளதாயிருப்பின், அவர் தொழுதுள்ள அந்த ரகாஅத்து அவருடைய தொழுகையை நிறைவு செய்வதாம் விடுகிறது. இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுடைய தோல்வியைக் காட்டக் கூடியவையாகி விடுகின்றன. (அபூ ஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
இவ்வறிவிப்பில் அவர் தொழுதுள்ள ரகாஅத் அவருக்கு ''நபிலாக உபரியானதாக ஆகிவிடுவதோடு, இரண்டு ஸஜ்தாக்களும் (அவ்வாறே உபரி) ஆகி விடுகின்றன'' என்ற தொடரில் இரண்டு ஸஜ்தாக்களும் அவ்வாறே உபரியாகி விடுகின்றன என்ற வாசகத்தில் நபி(ஸல்) அவர்களே (ஸஹ்வுடைய) இரு ஸஜ்தாக்களையும் உபரியானவை என்று கூறியிருப்பதால் அவை வாஜிபு-கட்டாயமானவை அல்ல, மேல் மிச்சமானவை தான் என்றும், தொழுகையில் சந்தேகம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியும், செய்தும் காட்டியிருப்பதை ஆதாரமாகக் கொண்டு இவ்விரு ஸஜ்தாக்களையும் சுன்னத்தானவை என்று அறிகிறோம்.
ஸஜ்ததுத் திலாவத்தின் விபரம்:
''ஸஜ்ததுத் திலாவத்'' என்றால் குர்ஆனில் உள்ள ''ஸஜ்தா''வின் ஆயத்தை ஒருவர் ஓதினாலும், அல்லது பிறர் ஓதுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஓதியவரும், கேட்டுக் கொண்டிருந்தவரும் தக்பீர் கூறி ஒரு ஸஜ்தா செய்வதற்கு சொல்லப்படும். இவ்வாறு ஸஜ்தா செய்வது சுன்னத்தாகும். இதற்கு ஹதீஸ்களின் வழக்கில் ''ஸுஜூதுல் குர்ஆன்'' (குர்ஆனுடைய ஸஜ்தாக்கள்) என்று உள்ளது.
ஸஜ்ததுத் திலாவத்தின் சிறப்பு:
ஆதமின் மகன் ஸஜ்தாவின் ஆயத்தை ஓதிவிட்டு (அதற்கான அவன் ஸஜ்தா செய்யும்போது, ஷைத்தான் ஒதுங்கியவனாக, தான் அழுத நிலையில் ''எனக்கு ஏற்பட்ட நரகமே! ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்யும்படி ஏவப்பட்டது. அதற்கு அவன் ஸஜ்தா செய்தான். அவனுக்கு சுவர்க்கம். நான் ஸஜ்தா செய்யும்படி ஏவப்பட்டேன் ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். எனக்கு நரகம்'' என்று கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா)
இவ்வறிவிப்பின்படி ''ஸஜ்தா திலாவத்'' செய்பவர் தக்பீர் கூறி ஒரு ஸஜ்தா செய்வது மட்டுமே ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. ஸஜ்தா செய்த பிறகு மீண்டும் தக்பீர் கூறி எழ வேண்டும் என்பதற்கோ அல்லது அவ்வாறு தக்பீர் கூறி எழுந்து உட்கார்ந்து ஸலாம் கொடுக்க வேண்டும் என்பதற்கோ ஹதீஸில் ஆதாரம் எதுவுமில்லை.
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். ஸஜ்தாவுடைய ஆயத்தை அவர்கள் ஓதினால் உடனே தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார்கள். அப்போது நாங்களும் ஸஜ்தா செய்வோம். (இப்னு உமர்(ரழி), அபூதாவூத், பைஹகீ, ஹாக்கிம்)
இவ்வறிவிப்பின்படி ஸஜ்தாவின் ஆயத்தை ஓதியவரும், அதைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் ஸஜ்தா செய்வது சுன்னத்து என்பதை அறிகிறோம்.
ஸஜ்தத்துத் திலாவத்து சுன்னத்துதான் வாஜிபல்ல என்பதற்கான சான்று:
நபி(ஸல்) அவர்களிடத்தில் ''வந்நஜ்மி'' அத்தியாயத்தை ஓதியுள்ளேன். அவர்கள் அதில் ஸஜ்தா செய்யவில்லை. (தாருகுத்னீயில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில் எங்களில் எவரும் (அதில்) ஸஜ்தா செய்யவில்லை என்று உள்ளது) (ஜைதுபின் ஸாபித்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், தாருகுத்னீ)
நபி(ஸல்) அவர்கள் ''வந்நஜ்மி'' எனும் அத்தியாயத்தில் (அதை ஓதியபின்) ஸஜ்தா செய்தார்கள். அவர்களையொட்டி முஸ்லிம்களும் முஷ்ரிக்குகளும், ஜின் இனத்தவரும், மனித இனத்தவரும் ஸஜ்தா செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, திர்மிதீ)
மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் வந்நஜ்மீ என்னும் ஒரே சூராவை நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு முதல் அறிவிப்பின்படி அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை என்பதையும், இரண்டாவது அறிவிப்பின்படி ஸஜ்தா செய்தார்கள் என்பதையும் காணுகிறோம். ஆகவே ஸஜ்தா செய்வது வாஜிபு (கட்டாயம்) என்றிருந்தால், ஸஜ்தாவுடைய ஆயத்து ஓதியவுடன் ஸஜ்தா செய்திருப்பார்கள். ஆகவே ஸஜ்தா திலாவத்து வாஜிபு அல்ல அது சுன்னத்துதான் என்பதை அறிகிறோம்.
குர்ஆனிலுள்ள ஸஜ்தாவின் ஆயத்துகள் மொத்தம் 15
நபி(ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து 15 ஸஜ்தாக்களை(ச் சுட்டிக்காட்டி) என்னை ஓதும்படி செய்தார்கள். அவற்றில் முஃபஸ்ஸலில் உள்ளவை மூன்றும், சூரத்துல் ஹஜ்ஜில் உள்ளவை இரண்டு ஸஜ்தாக்களும் இடம் பெற்றுள்ளன. (அம்ருப்னில் ஆஸ்(ரழி), அபூதாவூத், ஹாக்கிம்)
(''முஃபஸ்ஸல்'' என்பது ''சூரத்து முஹம்மது'' என்னும் 47-வது அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் இறுதிவரையுள்ள அனைத்து அத்தியாயங்களின் ஒட்டு மொத்தமான பெயராகும்.)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அப்துல்லாஹ்பின் முனைன், ஹாரிஸுபின் ஸஃது ஆகியவர்கள் பற்றி இவர்கள் ''மஜ்ஹுல்'' அறிமுகமில்லாதவர்கள் என்று இப்னும்த்தான் போன்றோர் கூறியிருப்பினும், யஃகூபுபின் சுஃயான் அவர்கள் அப்துல்லாஹ்வின் முனைன் அவர்களை நம்பகமானவர் என்று கூறியிருப்பதை இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 6, பக்கம் 44)
இவ்வாறே ஹாரிஸுபின் ஸஃது அவர்கள் குறித்து ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள், இவர் ''மக்பூல்'' - ஹதீஸ் கலா வல்லுநர்களிடையே அங்கீகரிக்கப்பட்டவர் தான் என்பதாக தமது ''தக்ரீபு'' எனும் நூலில் இப்பெயர் இடம் பெற்றுள்ள பகுதியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்ஆனில் ஸஜ்தா இடம் பெற்றுள்ள சூராக்கள்
நான் நபி(ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் ''முஃபஸ்ஸலில்'' இடம் பெற்றுள்ள ஸஜ்தாக்கள் எதுவுமில்லை. (அவையாவன) அல்அஃராஃப், ரஃது, நஹ்லு, பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ்ஜு, ஃபுர்கான், நம்லு, அலிப்லாம் மீம்ஸஜ்தா ஸாத், ஹாமீம் ஸஜ்தா ஆகிய சூராக்களாகும். (அபுத்தர்தாஃ(ரழி), இப்னுமாஜா)
இவ்வறிவிப்பில் இடம் பெற்றுள்ள 11 ஸஜ்தாக்களுடன் முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களையும் சூரத்துல் ஹஜ்ஜில் உள்ள இரண்டாவது ஸஜ்தாவையும் சேர்த்து பார்க்கும்போது மேற்காணும் ஸஹீஹான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது மொத்தம் 15 என்பது தெளிவாகிறது.
நபி(ஸல்) அவர்கள் முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாகளையும் அவர்கள் செய்துள்ளார்கள் என்பதற்கும், சூரத்துல் ஹஜ்ஜில் உள்ள இரண்டு ஸஜ்தாக்களையும் செய்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதை காரணமாக வைப்பதோடு, இதன் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமற்ற நிலையிலுள்ள உஸ்மானுபின் ஃபாயித் என்பவர் இடம் பெற்றிருப்பதையும் வைத்து இவ்வறிவிப்பு லயீபு பலஹீனமானது என்பதை அறிகிறோம். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 7, பக்கம் 148)
முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களின் ஆயத்துகளை ஓதினால் ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதற்கான ஹதீஸ்கள்:
நபி(ஸல்) அவர்கள் மக்காவில் (இருக்கும்போது) ''வந்நஜ்மி'' எனும் சூராவை ஓதிவிட்டு அவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் ஸஜ்தா செய்தார்கள். ஒரு வயோதிகர் மட்டும் செய்யவில்லை. அவர் ஒருபிடி பொடிக்கல், அல்லது மண்ணை எடுத்து, அதைத் தனது நெற்றி வரை உயர்த்தி எனக்கு இதே போதும் என்று (அலட்சியமாக) கூறினார். அதன் பின் நான் அவரை காபிராகக் கொல்லப்பட்ட நிலையில் காண்டேன். (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), புகாரீ)
நபி(ஸல்) அவர்கள் ''இதஸ்ஸமாஉன் ஷக்கத்'' எனும் சூராவிலும், ''இக்ரஃபிஸ்மிரப்பிக்'' எனும் சூராவிலும் ஸஜ்தா செய்தார்கள். (அபூஹுரைரா(ரழி), பாடம்: ஸுஜூதுல் குர்ஆன், முஸ்லிம்)
மேற்காணும் இரு அறிவிப்புகளிலும் முஃபஸ்ஸலில் இடம் பெற்றுள்ள 3 ஸஜ்தாக்களையும் நபி(ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஸஜ்தா திலாவத்தில் என்ன தஸ்பீஹ் ஓத வேண்டும்?
ஸஜ்தாவின் ஆயத்தை ஓதியதற்காக ஸஜ்தா செய்யும் போது பொதுவாக ஸஜ்தாவில் ஓதப்படும் ''சுப்ஹானரப்பியல் அஃலா'' எனும் தஸ்பீஹை ஓதலாம். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு ஓதியுள்ளாதகவும் ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
ஸஜ்த வஜ்ஹிலில்லதீ கலக்கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்ஆஹு வபஸரஹு பிஹவ்லிஹீ வகுவ்வத்திஹீ ஃபதபாரக்கல்லாஹ அஹ்ஸனுல் காலிக்கீன். (ஆயிஷா(ரழி), திர்மிதீ, அபூதாவூத், தாருகுத்னீ, பைஹகீ, ஹாக்கிம்)
பொருள்:
சுயமே தனது ஆக்கும் திறன், அழிக்கும் திறன் ஆகியவற்றால் எனது முகத்தைப் படைத்து உருவாக்கியவனுக்கு அது பணிந்து விட்டது. மேலும் அவனே அதில் கேட்கும் சக்தியையும், பார்க்கும் சக்தியையும் தோற்றுவித்தான். அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன். படைப்பினங்களில் எல்லாம் மிக அழகான படைப்பாளன்.
தொழுகையில் ஸஜ்தாவின் ஆயத்தை ஓதினால் உடன் ஸஜ்தா செய்வது சுன்னத்து:
நான் அபூஹுரைரா(ரழி) அவர்களுடன் இஷாவைத் தொழுதேன். அப்போது அவர்கள் ''இதஸ்ஸமாஉன் ஷக்கத்'' எனும் சூராவை ஓதிவிட்டு, ஸஜ்தா செய்தார்கள். (தொழுது முடித்தவுடன் நான் அவர்களை நோக்கி) இது என்ன (ஸஜ்தா) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த சூராவை (தொழுகையில்) ஓதியமைக்காக நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நான் ஸஜ்தா செய்துள்ளேன். ஆகவே நான் அவர்களைச் சந்திக்கும் வரை இதை ஓதியபின் ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன் என்றார்கள். (அபூராஃபிஉ(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஆகவே, மேற்காணும் இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் தாம் தொழும் போது ஸஜ்தாவின் ஆயத்தை ஓதிவிட்டு அதற்காக தாம் தொழும்போதே ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
ஸஜ்தா திலாவத்து செய்வதற்கு உளூ அவசியமா?
நபி(ஸல்) அவர்கள் ''வந்நஜ்மி'' எனும் சூராவில் (அதை ஓதிய பின்) ஸஜ்தா செய்தார்கள். அவர்களையொட்டி முஸ்லிம்கள், முஷ்ரிக்கு - இணை கற்பிப்பவர்களும், ஜின் இனத்தவரும், மனித இனத்தவரும் ஸஜ்தா செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
(அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ''அவர்களில் ஒரு வயோதிகர் மட்டும் ஸஜ்தா செய்யவில்லை. அவர் ஒரு பிடி மண்ணை எடுத்து அதைத் தனது நெற்றிவரை உயர்த்தி, எனக்கு இதே போதும் என்று (அலட்சியமாகக்) கூறினார். அதன்பின் நான் அவரை காபிராக கொல்லப்பட்ட நிலையில் கண்டேன்'' என்று உள்ளது)
இவ்வறிவிப்பில் முஷ்ரிக்கு-இணை வைத்து வணங்குவோர் ஸஜ்தா செய்வதற்கு தாம் அருகதையற்றவர்களாகயிருந்தும், தமது நெற்றியைத் தரையில் வைத்து ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதாக இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால், அவர்கள பிரதான ஸஹாபாக்களில் ஒருவராயிருந்தும் ''முஷ்ரிக்கு''கள் செய்துள்ள இச்செயலை ஸஜ்தா என்றே குறிப்பிட்டிருப்பதாலும், இவ்வாறு ஸஜ்தா செய்யாது அலட்சியமாக சிறிது மண்ணை எடுத்து அதைத் தனது நெற்றிவரை உயர்த்தி, எனக்கு இதே போதும் என்று கூறியவர் காபிராக வெட்டுப்பட்ட நிலையில்கிடந்ததை தாம் நேரில் கண்டேன் என்பதாக அந்த ஸஹாபியே கூறியிருப்பதினாலும், முஷ்ரிக்கானவர்கள் உளூ இல்லாமல் செய்துள்ள அந்த ஸஜ்தாவுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என்பதை உணருகிறோம். இந்நிலையில் அவ்விடத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் உளூவுடன் இருந்திருப்பார்கள் என்று கருதுவதற்கு சாத்தியக் கூற எதுவுமில்லை. காரணம், அவர்கள் ஸஜ்தா செய்யவேண்டும் என்பதற்காக உளூ செய்துவிட்டு தயார் நிலையில் இல்லை. இச்சமயம் எதிர்பாராது திடீரென்று நிகழ்ந்திருப்பதாக அறிகிறோம்.
நபி(ஸல்) அவர்களின் பார்வையில் இவ்வாறு முஷ்ரிக்குகளும் முஸ்லிம்களும் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஸஜ்தா செய்திருக்கும் போது அவர்களில் யாரையும் பார்த்து நீங்கள் உளூவுடன் ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையும் கூறாமல் மௌனமாக இருந்திருப்பதிலிருந்தே உளூ இல்லாமல் ஸஜ்தா திலாவத்து செய்யலாம் என்பதை உணர்த்துகிறது.
ஹாபிழ் இப்னு ஹஜர்(ரழி) அவர்கள் தமது ''பத்ஹுல்பாரீ'' எனும் நூலில் பாகம்2, பக்கம் 544-ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
சூரத்துஸ்ஸாதில் உள்ள ஸஜ்தாவின் நிலை:
''ஸாத்'' எனும் அத்தியாயத்தில் உள்ள ஸஜ்தாவானது வலியுறுத்தப்பட்ட ஸஜ்தாக்களில் உள்ளதல்ல என்று இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள். (புகாரீ, திர்மிதீ, அஹ்மத்)
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தாம் மின்பரில் இருந்த நிலையில் ''ஸாத்'' எனும் அத்தியாயத்தை ஓதி, அதில் ஸஜ்தாவின் ஆயத்தை அடைந்தவுடன் மின்பரிலிருந்து இறங்கி ஸஜ்தா செய்தார்கள். அவர்களுடன் மற்ற மக்களும் ஸஜ்தா செய்தார்கள். இவ்வாறு மற்றொரு நாளும் அதே சூராவை ஓதினார்கள். அவர்கள் ஸஜ்தாவின் ஆயத்தை அடைந்தபோது மக்கள் ஸுஜூது செய்வதற்கு ஆயத்தமானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இந்த ஸஜ்தா ஒரு நபியுடைய ''தவ்பா''வாக உள்ளது. எனினும் நீங்கள் அனைவரும் ஸுஜூது செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக காணுகிறேன் என்று கூறிவிட்டு கீழே இறங்கி ஸஜ்தா செய்தார்கள். அவ்வாறே மக்களும் ஸஜ்தா செய்தார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத், ஹாக்கிம், இப்னுகுஜைமா)
இவ்வறிவிப்பின் போக்கை கவனிக்கும் போது மற்ற சூராக்களைப் போன்று இந்த சூராவில் ஸஜ்தா செய்வது வலியுறுத்தப்படாமலிருப்பது ஒருபுறமிருக்க நபி(ஸல்) அவர்கள் மற்றவர்களெல்லாம் ஸஜ்தா செய்வதற்கு தயாராக இருப்பதைப் பார்த்ததன் காரணமாகவே தாம் ஸஜ்தா செய்வதாகக் கூறிக்கொண்டு ஸஜ்தா செய்துள்ளார்கள். ஆகவே சூரத்துஸ்ஸாதில் ஸஜ்தா செய்யாமலிருப்பதற்கு இடம் உள்ளது என்பதை அறிகிறோம்.
ஸஜ்தத்துஷ்ஷுக்ரின் விபரம்:
புதிதாக தமக்கு ஓர் அருட்கொடை கிடைத்தமைக்காக அல்லது தமக்கு ஏற்படவிருந்த ஆபத்து, மாபெரும் கஷ்டம் நீங்கியமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு செய்யக் கூடிய ஸஜ்தாவுக்கு ஸஜ்தத்துஷ்ஷுக்ரீ என்று பெயர். இவ்வாறு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும் ஸஜ்தா செய்வது சுன்னத்தாகவுமிருக்கிறது.
ஹதீஸ்களில் இதற்கான ஆதாரம்:
நபி(ஸல்) அவர்கள் ''ஸாத்'' எனும் சூராவில் ஸஜ்தா செய்து விட்டு தாவூத்(அலை) அவர்கள் ''தவ்பா'' எனும் வகையில் இந்த ஸஜ்தாவைச் செய்தார்கள். நாம் இதை ''ஷுக்ரு'' நன்றி எனும் வகையில் செய்கிறோம் என்று கூறினார்கள். (இப்னுஅப்பாஸ்(ரழி), பைஹகீ)
கஃபுபின் மாலிக்(ரழி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்ளாமல் மதீனாவில் தங்கி விட்டதால் நபி(ஸல்) அவர்கள் மற்ற ஸஹாபாக்களை கஃபுபின் மாலிக்(ரழி) அவர்களுடன் பேசக்கூடாது என்றும், இது போன்ற வேறு சில கட்டுப்பாடும் விதித்திருந்தார்கள். இறுதியாக 50 நாட்களுக்குப் பிறகு இவர்களின் ''தவ்பா''வை அல்லாஹ் கபூல் அங்கீகரித்து விட்டான். இது விஷயத்தை கஃபுபின் மாலிக்(ரழி) அவர்களிடத்தில் ஒருவர் நற்செய்தி கூறியவுடன் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு செய்தார்கள். (சுருக்கம்) புகாரீ, முஸ்லிம்)
ஆகவே சிலர் ஸஜ்தத்துஷ்ஷுக்ருக்கு சரியான ஆதாரம் இல்லை என்று கூறியிருப்பினும் மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக போதுமான ஆதாரம் இருப்பதாக அறிகிறோம்.
ஷுக்ருடைய ஸஜ்தா செய்யும் முறை:
ஸஜ்தா திலாவத்து உளூ எவ்வாறு அவசியமில்லையோ, அவ்வாறே இதற்கும் உளூ அவசியமில்லாமலிருப்பதோடு, தக்பீர் கூறி ஸஜ்தாவுக்குச் செல்ல வேண்டும் என்பதுமில்லை. ஆகவே இதற்கு வெறுமனே ஒரு ஸஜ்தா மட்டும் செய்தால் போதும்.
நூலின் அடுத்த பகுதி https://islamiyapuram.blogspot.com/2013/01/blog-post_31.html
நூலின் அடுத்த பகுதி https://islamiyapuram.blogspot.com/2013/01/blog-post_31.html