நபி வழியில் நம் தொழுகை - பாகம் 2

நபி வழியில் நம் தொழுகை - பாகம் 2


  • நூலின் முதல் பகுதி


  • உள்ளடக்கம்:

    வித்ரு தொழுகையை பேணுவோம்.

    ஜும்ஆத் தொழுகை.

    உபரித் தொழுகைகள்.

    தஹஜ்ஜுத் தொழுகை ஓர் ஆய்வு.

    பெருநாள் தொழுகை.

    லுஹாத் தொழுகை.

    மழைத் தொழுகை.

    கிரகணத் தொழுகையின் விபரம்.

    ஜனாஸாத் தொழுகை.

    இஸ்திகாரஹ் (நாட்டத்) தொழுகை.


    வித்ரு தொழுகையை பேணுவோமே

    உபரியான வணக்கங்கள் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் அலட்சியம் காட்டுகிறது அதை அற்பமாக எண்ணுகிறது காரணம் அது ஒரு ஸுன்னதுதானே? அதை கட்டாயம் பேணித்தான் ஆகவேண்டுமா? அதை பேணாமல் இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனை இறங்குமா? அல்லது நன்மைகளில் ஏதாவது குறைந்து விடப்போகிறதா? என்று பஸப்புவார்த்தைக் கூறி அதை பேணாமல் நழுவுகிறது. இவர்களின் வலையில் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்ட தௌஹீதுவாதிகளும் வீழ்ந்து விட்டார்கள். உபரியான வணக்கங்களை பேணுவதில்லை ''ஏதோ ஐந்துவேளை தொழுகையை தொழுதுவிட்டோம் வந்துவிட்டோம்'' என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸை முழுமையாக பின்பற்றுவோமே இறைவனின் அருளை பெறுவோமே என்ற ஆர்வம் அரிதாம் விட்டது. ஐவேளை கடமையான தொழுகைகளுக்கு முன்பின் ஸுன்னத்தான தொழுகையை ஒன்றிரண்டு பேணினாலும் ஒரு உபரித் தொழுகையை முஸ்லிம் சமுதாயம் முற்றிலுமாக புறக்கணித்து விட்டது. அதுதான் வித்ரு தொழுகையாகும். வித்ர் தொழுகை என்னவென்று அறியாமல் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இருப்பதை காண்கிறோம். ஏன் ஐவேளை தொழுகையை பேணுவோர் கூட இதைப்பற்றி தெரியாமல் இருப்பதைதான் அவர்களுடைய செயல்பாடுகள் காண்பிக்கின்றன. காரணம் மார்க்க விஷயங்களை அற்பமாக நினைப்பதுதான். இந்நிலையை மாறிட சமுதாயம் உபரியான வணக்கங்களை பேண உபரியான வணக்கங்களை தெரிந்து கொள்வோம். இத்தொடரில் 'வித்ரு' தொழுகையைப் பற்றி அதன் மாண்புகள், சட்டதிட்டங்களை அனைத்தையும் தெளிந்துக் கொள்வோம்.

    வித்ருதொழுகை ஓர்அறிமுகம்

    ''வித்ரு'' என்பது இஷா தொழுகைக்குப்பின் சுப்ஹு நேரம் வரை ஒற்றைப்படையாகத் தொழப்படும் ஒரு தொழுகையாகும்.

    வித்ரு தொழுகை வாஜிபா? அல்லது சுன்னத்தா?

    ''ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் ''நஜ்து'' எனும் ஊர்வாசிகளில் ஒருவர் வந்து இஸ்லாத்தைப் பற்றி வினவினார், அப்போது அவர்கள் ஒரு பகலிலும் இரவிலும் ஐந்து (நேரத்) தொழுகைகள் கடமை என்றார்கள். அதற்கு அவர் இவையன்றி வேறு (தொழுகைகள்) என்மீது கடமையாக உள்ளனவா? என்று கேட்டார். அப்போது அவர்கள் ''நீர் உபரியாகத் தொழுது கொண்டாலன்றி வேறில்லை'' என்றார்கள்.
    (தல்ஹத்துபின் உபைதில்லாஹ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    இவ்வறிவிப்பு ஃபர்ளான தொழுகைகளுக்கு அடுத்தபடியாக உபரியாகத் தொழப்படும் சுன்னத்தான தொழுகைகளைத் தவிர ''வாஜிபு'' என்ற வகையில் எத்தொழுகையுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தகின்றது. ஆகவே வித்ரு தொழுகை சுன்னத்தேயன்றி வாஜிபு அல்ல.

    வித்ரு தொழுகை என்பது கடமையான தொழுகையைப்போல் கிடையாது ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஸுன்னதாக ஆக்கியிருக்கிறார்கள். மேலும் நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன் (தனித்தவன்) ஒற்றைப்படையே விரும்புகிறான் குர்ஆன் வழங்கப்பட்டோரே வித்ரு தொழுகையை தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அலி(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூத், நஸயீ, தாரமி.

    வித்ரு தொழுகை என்பது ஐம்பெறும் கடமையான தொழுகையைப் போல் கடமையான தொழுகை கிடையாது. இது உபரியான வணக்கம் தான். நபி(ஸல்) அவர்கள் இதை சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள் காரணம் வித்ரு என்பது ஒற்றைப்படை என்பது பொருள். ஒற்றைப்படை என்பது வல்அல்லாஹ்வின் உன்னதமான அடையாளமாகும். வல்ல அல்லாஹ்வின் அடையாளத்தை குறிக்கும் விதமாக அதனை நினைவுப்படுத்தும் விதமாக வித்ரு தொழுகை திகழ்கிறது. மேலும் வல்ல அல்லாஹ் ஒற்றையானவன் அதாவது ஏகன் தனித்தவனாக இருக்கிறான். அதனையே அவன் விரும்புகிறான். அவனுடைய விருப்பத்தை செயல்படுத்தும் விதமாக வித்ரை தொழுங்கள் என்று மேற்கண்ட ஹதீஸ் மூலமாக பெருமானர்(ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

    நேரமும் அவசியமும்

    இரவில் உங்களுடைய தொழுகைகளில் கடைசி தொழுகையாக வித்ரை ஆக்கிகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    ''காலை விடிவதற்கு முன்னால் வித்ரு தொழுகையை விரைவாகத் தொழுதுகொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: அபூதாவூத், திர்மிதி.

    ''இரவில் எழுந்திருக்கமுடியாது என உங்களில் ஒருவர் அஞ்சினால், அவர் வித்ரை தொழுதுவிட்டு உறங்கவும். இரவின் கடைசியில் சுபுஹுக்குமுன் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ அவர் (உறங்கி எழுந்து) இரவின் இறுதிப் பகுதியில் வித்ரை தொழட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ மற்றும் இப்னுமாஜா

    ''ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்றல், 'லுஹா' தொழுகையை பேணுவதல், தூங்குவதற்கு முன்னர் வித்ரு தொழுகை தொழுதல். ஆகிய மூன்று விஷயங்கள் பற்றி என்னுடைய நண்பர் (நபி(ஸல்) அவர்கள்) எனக்கு உபதேசம் செய்தார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, முஸ்லிம் மற்றும் நஸயீ

    நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் (இரவின் இறுதிப் பகுதியான பஜ்ருக்கு முன்புள்ள) ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதிருக்கிறார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத் மற்றும் அஹ்மத்.

    ''நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) தஹஜ்ஜுத் தொழுகையை தொழுவார்கள். அப்போது அவர்களுக்கு அருகே ஆயிஷா(ரலி) உறங்கி கொண்டிருப்பார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுது முடித்தப்பின்னர் வித்ரு தொழுகை மட்டும் எஞ்சி இருக்கும்போது அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை ஆயிஷாவே எழுந்து வித்ரு தொழுகையை தொழுவீராக! என்று கூறுவார்கள். மேலும் வித்ரு தொழுகையை அவர்கள் தொழுது கொள்வார்கள்'' என்பதை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். நூல்:முஸ்லிம்

    வித்ரு தொழுகையின் நேரத்தை நபி(ஸல்) அவர்கள் வரையறுத்து அதன் அவசியத்தை சொல் மற்றும் செயல் மூலமாகத் தெரிவித்துள்ளார்கள். மேலும் நபித்தோழர்களுக்கு உபதேசங்கள் மூலம் அதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்கள். வித்ரு தொழவேண்டும் என்பதற்காக தம் துணைவியார் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்து வித்ரு தொழவேண்டும் என பணித்துள்ளார்கள்.

    வித்ரு ஒரு ரகாஅத்து என்பதற்கான சான்று:

    ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரகாஅத்துகளாகும். நீர் (தொழ வேண்டியவற்றைத்) தொழுது, அவற்றை முடிக்கும் தருவாயில் கடைசியாக ஒரு ரகாஅத்தை ''வித்ரு'' என்ற வகையில் தொழுது கொள்வீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    ''நான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் வித்ரைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் ''இரவின் கடைசியில் தொழப்படும் ஒரு ரகாஅத்து'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள். இவ்வாறே இப்னு உமர்(ரழி) அவர்களிடம் கேட்டேன், அவர்களும் ''இரவின் கடைசியில் தொழப்படும் ஒரு ரகாஅத்து' என்றார்கள்.

    ''நபி(ஸல்) அவர்கள் ஒரு ரகாஅத்து வித்ரு தொழுதுள்ளார்கள்'' (ஆயிஷா(ரழி), இப்னுமாஜ்ஜா)

    மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகை ஒரு ரகாஅத்து என்று தாம் கூறியிருப்பதோடு, தாமே சில நேரங்களில் வித்ரை ஒரு ரகாஅத்தாக தொழுதுமிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

    மூன்று ரகாஅத்துகள் என்பதற்கான சான்று:

    ''ஐந்து ரகாஅத்துகள் வித்ரு தொழ விரும்புவோர் அவ்வாறு செய்து கொள்வாராக! மூன்று ரகாஅத்துகள் வித்ரு தொழ விரும்புவோர் அவ்வாறு செய்து கொள்வாராக! ஒரு ரகாஅத்து வித்ரு தொழ விரும்புவோர் அவ்வாறு செய்து கொள்வாராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஅய்யூபில் அன்ஸாரீ(ரழி), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    ஒருமுறை அபூஸலமத்திப்னு அப்திர்ரஹ்மான்'' அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நபி(ஸல்) அவர்கள் ரமழானிலும் அதல்லாதவற்றிலும் 11 ரகாஅத்துகளை விட அதிகமாக்கவில்லை என்று கூறிவிட்டு (முதலில்) 4 தொழுவார்கள். பிறகு 4 தொழுவார்கள், பிறகு மூன்று (வித்ரு) தொழுவார்கள் என்று கூறினார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    ''நபி(ஸல்) அவர்கள் வித்ரில் (முதல் ரகாஅத்தில்) ''ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா'' வையும் இரண்டாம் ரகாஅத்தில் ''குல்யாஅய்யு ஹல்காஃபிரூன்'' என்ற சூராவையும், மூன்றாம் ரகாஅத்தில் ''குல்ஹுவல்லாஹு அஹத்'' எனும் சூராவையும் ஓதிவிட்டு இவற்றின் இறுதியில் தான் ஸலாம் கூறுவார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), உபையுமின் கஃபு(ரழி), நஸயீ)

    மேற்காணும் அறிவிப்புகளில் நபி(ஸல்) அவர்கள் வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழுதுள்ளார்கள் என்பதை அறிகிறோம். ஆனால் அதை 2+ 1 என்று பிரித்துத் தொழுதார்கள் என்ற விபரம் காணப்படவில்லை.

    மஃரிபு தொழுகையைப் போல் வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழக்கூடாது என்பதற்கான அறிவிப்புகள்:

    ''வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழாதீர்கள், ஐந்து ரகாஅத்துகளாக, அல்லது ஏழு ரகாஅத்துகளாக தொழுங்கள், மஃரிபு தொழுகையைப் போன்று வித்ரை ஆக்கிவிடாதீர்கள்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அபூஹுரைரா(ரழி), தாரகுத்னீ, இப்னுஹிப்பான், ஹாக்கிம்)

    இவ்வறிவிப்பில் மஃரிபு தொழுகை போன்று வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே மஃரிபு தொழுகை போல் வித்ரைத் தொழாமல் சற்று வித்தியாசப்படுத்தி தொழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

    நபி(ஸல்) அவர்கள் தாம் வித்ரு தொழுகையில் மஃரிபு தொழுகை போல் தொழாமல் எவ்வாறு வித்தியாசப்படுத்தி தொழுதார்கள் என்பது பின்வருமாறு:

    ''நபி(ஸல்) அவர்கள் வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழுதார்கள், அப்போது அவர்கள் கடைசி ரகாஅத்திலன்றி வேறு எந்த ரகாஅத்திலும் உட்காரவில்லை. (ஆயிஷா(ரழி), பைஹகீ)

    ''உமர்(ரழி) அவர்கள் வித்ரு தொழுகையில் மூன்றாவது ரகாஅத்துக்காக (இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல்) தக்பீர் கூறியவர்களாக எழுந்து விடுவார்கள். (ஹபீபுல்முஅல்லீம், பைஹகீ)

    ''அதாஃ(ரழி) அவர்கள் வித்ரை மூன்று ரகாஅத்துகளாக தொழுவார்கள் அப்போது அவற்றில் கடைசி ரகாஅத்தில் அன்றி வேறு எதிலும் (தஷஹது ஓத) உட்கார மாட்டார்கள். அந்தஹிய்யாத்து ஓதவுமாட்டார்கள். (ஆகைஸுபின்ஸஃது(ரழி), பைஹகீ)

    இவ்வாறு வித்ரு தொழுகையில் இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் மூன்றாவது ரகாஅத்தில் மட்டும் உட்காருவதால் மஃரிபு தொழுகையில் இடம் பெற்றுள்ள இரண்டாவது ரகாஅத்தில் உட்கார வேண்டிய நடு இருப்பு இல்லாமல் போய் விடுகிறது. இது ஒன்றே மஃரிபுக்கும் வித்ருக்கும் பெரியதொரு வித்தியாசத்தை உண்டு பண்ணிவிடுகிறது.

    இவ்வாறு வித்ருடைய மூன்று ரகாஅத்துகளையும் தொடர்ச்சியாக இடையில் உட்காராமல் மூன்றாவது ரகாஅத்தில் கடைசி இருப்பு மட்டும் இருந்து தொழுவதால் மேற்கண்டவாறு ''வித்ரை மூன்று ரகாஅத்துகளாக மஃரிபு தொழுகை போல் தொழக்கூடாது'' என்ற நபிமொழிக்கும் ஒப்ப நடந்து கொண்ட நிலை ஏற்படுகிறது.

    மேற்காணும் இம்முறைப்படி வித்ரைத் தொழாமல் தொழுகையை முடித்து 2 + 1 என்ற நிலையில் இரண்டாவது ரகாஅத்தில் உட்கார்ந்து ஸலாம் கூறி, விட்டு பிறகு எழுந்து ஒரு ரகாஅத்து வித்ரு தொழும்போது, இதுமட்டும் மஃரிபு தொழுகைக்கு வித்தியாசமான முறையென கருதிச் செய்தால், அது மஃரிப் தொழுகைக்கு வித்தியாசமானதாகக் கருத முடியாது. ஏனெனில் மஃரிப் தொழுகையின் அமைப்பானது (இடையில் சலாம் கூறி முடிக்காத) தொடர்ச்சியான மூன்று ரகாஅத்துகளாகும். எனவே தொடர்ச்சியானதே வித்ரு ஆகும். நபி(ஸல்) அவர்கள் எவ்விதம் வித்தியாசப்படுத்தினர்கள் என்பதற்குத் தெளிவான ஹதீஸ் சான்றுகள் இருக்கும் போது, அதனடிப்படையில் நடப்பதே முறையானதாகும்.

    மேலும் நபி(ஸல்) அவர்கள் மூன்று ரகாஅத்துகளாக வித்ரு தொழும்போது மேற்காணும் முறைப்படி தொழுதார்கள் என்பதாகக் காணப்படவில்லை, விபரம் வருமாறு:-

    ''நபி(ஸல்) அவர்கள் மூன்று ரகாஅத்து வித்ரு தொழுவார்கள் அப்போது கடைசியிலன்றி ஸலாம் கூறமாட்டார்கள். (ஆயிஷா(ரழி), ஹாக்கீம்)

    ஆகவே வித்ரை மூன்று ரகாஅத்துகளாகத் தொழுவோர் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைபடுத்தியுள்ள முறைப்படி வித்ருடைய இரண்டாவது ரகாஅத்தில் உட்காராமல் மூன்றாவது ரகாஅத்தில் மட்டும் உட்கார்ந்து தொழுவதே முறையாகும்.

    வித்ரை மூன்று ரகாஅத்துகளாக மஃரிபு தொழுகையைப் போன்றே தொழவேண்டும் என்று காட்டும் சான்று பின்வருமாறு:

    ''வித்ரு என்பது பகலின் வித்ராகிய மஃரிபு தொழுகையைப் போன்றதோர் தொழுகையாகும்'' என்று அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துர்ரஹ்மான் பின்யªத்(ரழி), பைஹகீ)

    இவ்வறிவிப்பு 'வித்ரை மூன்று ரகாஅத்துகளாக மஃரிபு தொழுகையைப் போன்று தொழாதீர்கள்' என்ற மேற்காணும் ஸஹீஹான அறிவிப்புக்கு முரண்படுவதோடு, ஒரு ஸஹாபியின் கூற்றான 'அதர்' எனும் தரத்தையுடைய தாகவுமிருக்கிறது. மேலும் மஃரிபு தொழுகையைப் பகலுடைய வித்ரு என்று கூறும் அந்த வார்த்தையே முறையானதாக இல்லை. காரணம் பகல் முடிந்து இரவான பிறகே மஃரிபு வருகிறது. இவ்வாறியிருக்க மஃரிபை எவ்வாறு பகலுடைய 'வித்ரு' என குறிப்பிட முடியும். எனவே ஸஹீஹான ஹதீஸே தெளிவாகயிக்கும்போது, ஸஹாபியின் சொல்லாகிய 'அதரை' எடுக்கவேண்டிய அவசியமில்லை.

    வித்ரு ஐந்து ரகாஅத்துகள் என்பதற்கான சான்று:

    ''நபி(ஸல்) அவர்கள் ஐந்து ரகாஅத்துகள் வித்ரு தொழுதார்கள்; அவற்றில் கடைசி ரகாஅத்தில் ஐந்தாவது ரகாஅத்தைத் தவிர (வேறு ரகாஅத்துகளில், உட்காரவில்லை. (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், நஸயீ)

    ஏழு ரகாஅத்துகள் என்பதற்கான சான்று:

    ''நபி(ஸல்) அவர்கள் ஏழு அல்லது ஐந்து ரகாஅத்தில் வித்ரு தொழுவார்கள் அப்போது அவர்கள் அவற்றுக்கிடையில் ஸலாம் கூறி பிரிக்கமாட்டார்கள். (அவற்றை தொடர்ச்சியாகத் தொழுவார்கள்.) (உம்முஸலமா(ரழி), நஸயீ)

    ''நபி(ஸல்) அவர்கள் ஏழு ரகாஅத்துகள் வித்ரு தொழுவார்கள். அப்போது அவர்கள் அவற்றின் கடைசி ரகாஅத்திலன்றி மற்றவற்றில் உட்காரமாட்டார்கள். (ஆயிஷா(ரழி), நஸயீ)

    ''நபி(ஸல்) அவர்களுக்கு வயோதிக நிலை ஏற்பட்டு, இயலாதவர்களாயிருக்கும் போது, ஏழு ரகாஅத்துகள் வித்ரு தொழுதார்கள். அப்போது ஆறாவது ரகாஅத்திலன்றி (வேறு ரகாஅத்துகளில்) உட்காரவில்லை (அதில் அமர்ந்து ஓத வேண்டியவற்றை ஓதி விட்டு) ஸலாம் கூறாமல் எழுந்து ஏழாவது ரகாஅத்து தொழுது பிறகு ஸலாம் கூறினார்கள். (ஆயிஷா(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

    ஆகவே இவ்வறிவிப்புகளின்படி வித்ரை ஏழு ரகாஅத்துகளாக தொழுவோர் தொடர்ச்சியாக ஏழு ரகாஅத்துகளையும் தொழுதுவிட்டு கடைசி ரகாஅத்தில் ஒரு இருப்பு மட்டும் இருந்து ஸலாம் கூறலாம், இல்லையேல் ஆறாவது ரகாஅத்தில் ஓர் இருப்பு மட்டும் விட்டு ஸலாம் கூறாமல் எழுந்து, பிறகு ஏழாவது ரகாஅத்தில் ஓர் இருப்பிலிருந்து ஸலாம் கூறலாம் என்பதை அறிகிறோம்.

    ஒன்பது ரகாஅத்துகள் என்பதற்கான சான்று:

    நபி(ஸல்) அவர்கள் வித்ரை ஒன்பது ரகாஅத்துகளாக தொழுவார்கள். அப்போது எட்டாவது ரகாஅத்தில் மட்டுமே அமருவார்கள். பிறகு ஒன்பதாம் ரகாஅத்தில் (உட்கார்ந்து) ஸலாம் கூறுவார்கள்.
    (ஆயிஷா(ரழி), முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

    மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையைத் தமது சூழ்நிலைக்கேற்ப 1,3,5,7,9 என்ற அமைப்பில் தொழுதுள்ளார்கள். இத்தகைய பலதரப்பட்ட எண்ணிக்கையில் அமைந்த வித்ரு தொழுகையை எம்முறையில் தொழ வேண்டும் என்பதற்கான சான்றுகள் ஹதீஸ்களின் வாயிலாகத் தெளிவாகத் தெரியும் போது, நபி(ஸல்) அவர்களின் இவ்வழகிய நடைமுறைகளையே நாம் பின்பற்றுவதே முறையானதாகும்.

    வித்ருடைய நேரம்:

    ''இரவின் முற்பகுதி, நடுபகுதி, கடைசிப்பகுதிகளான அனைத்துப் பகுதிகளிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் முடிய (சுப்ஹு நேரத்திற்கு முன்னர்) முடிவடைந்து விடும். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    ''உங்களில் எவரேனும் கடைசி இரவில் விழித்தொழ முடியாது என்று நினைத்தால், அவர் இரவின் முற்பகுதியிலேயே வித்ரு தொழுது கொள்வாராக! அவ்வாறின்றி விழித்தெழ விரும்புவாரானால் அவர் இரவின் கடைசிப் பகுதியில் வித்ரு தொழுது கொள்வாராக! நிச்சயமாக இரவின் கடைசிப் பகுதியில் தான் மலக்குகள் ஆஜராகிறார்கள். மேலும் அது மிக்க மேலானதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்)

    வித்ரில் ஓதப்படும் குனூத்தில் ஓதுவதற்காக (பின்வரும்) சில வாசகங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்;

    அல்லாஹும் மஹ்தினீ - ஃபீமன்- ஹதைத் - வ ஆஃபினீ - ஃபீமன் ஆஃபைத் - வதல்லனீ - ஃபீமன் - தவல்லைத் - வ பாரிக்லீ - ஃபீமாஅஃதைத் - வம்னீ - ஷர்ரமா- கழைத் - ஃப இன்னக்க தக்ழீ- வலாயுக்ழா-அலைக்- இன்னஹு- லாயதில்லு மன்வாலைத் -தபாரக்த-ரப்பனா - வதஆலைத். (ஹஸன்பின் அலி(ரழி) திர்மிதீ, அபுதாவூத், நஸயீ,இப்னுமாஜ்ஜா,அஹ்மத்)

    பொருள்:
    யா அல்லாஹ்! நீ நேர்வழி நடத்திய மக்களிடையே என்னையும் நேர்வழி நடத்துவாயாக! நீ ஆரோக்கியமாக வைத்துள்ள மக்களிடையே என்னையும் ஆரோக்கியமாக வைப்பாயாக! நீ பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கும் மக்களிடையே என் பொறுப்பையும் ஏற்று நடத்துவாயாக! நீ எனக்கு தந்துள்ளவற்றில் '' பரக்கத் '' (அபிவிருத்தி) செய்வாயாக! நீ (என்வகையில்) விதியாக அமைத்துள்ளவற்றின் தீங்கை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதியை அமைப்பவன். உனக்கு எவராலும் விதியை அமைக்க முடியாது. நீ எவரைப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கிறாயோ அவர் இழிநிலையை அடையமாட்டார். எங்கள் ரட்சகனே! நீயே உயர்ந்தவனும், பாக்கியமிக்கவனுமாவாய்!

    பைஹகீ,அஹ்மத் ஆகியோரின் அறிவிப்புகளில் ''இன்னஹு - லாயதில்லு - மன்வாலைத்'' என்பதுடன் வலாயயிஜ்ஜூ - மன் ஆதைத்'' என்றும் .

    பொருள்; நீ யாரைப் பகைத்து விட்டாயோ, அவர் மேல்நிலை அடைய மாட்டார்.

    ''நஸயீ'' யுடைய மற்றொரு அறிவிப்பில் தபாரக்த - ரப்பனா - வதஆலைத் '' என்ற வாசகத்திற்குப் பிறகு ''வஸல்லல்லாஹு - அலன் நபிய்யி - முஹம்மத் '' எனும் தொடர் மேலதிகமாக உள்ளது.

    குறிப்பு: இத்தொடரில் ''அப்துல்லாஹ் பின் அலி'' என்பவர் ஹஸன்பின் அலி(ரழி) அவர்களிடமிருந்து இவ்வறிப்பைத் தாம் கேட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ஹஸன்பின் அலி(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராயுள்ளார். ஆகவே இவ்வறிவிப்பு முன்கதிஃ - அறிவிப்பாளர் வரிசையில் துண்டிப்பு காணப்படுவதால், மேலதிகமாயுள்ள ஸலவாத்துடைய வாசகம் பலகீனமானதாகும்.

    நபி(ஸல்) அவர்கள் வித்ரின் கடைசியில் (பின்வருமாறு) ஓதிக்கொண்டிருந்தார்கள்;

    ''அல்லாஹும்ம - இன்னீ- அஊது பிரிழாக்க - மின் ஸகத்திக் - வஅஊது - பிமுஆஃபாத்திக்க - மின் உகூபத்திக் - வஊது - பிக்க - மின்க் - லா - உஹ்ª - ஸனாஅன் - அலைக்க - அன்தகமா - அஸ்னைத்த - அலா - நஃப்ஸிக் '' (அலி (ரழி), திர்மிதீ, அபுதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    பொருள்: யா அல்லாஹ்! உனது பொருத்தத்தைக் கொண்டு, உனது வெறுப்பை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் உனது தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். உனக்குரிய புகழை என்னால் வரையறுத்திட இயலாது. நீயோ உன்னை நீயே புகழ்ந்து கொண்ட விதத்தில் இருக்கிறாய்.

    மேற்காணும் இவ்வாசகத்தை நபி(ஸல்) அவர்கள் பொதுவாகத் தொழும்போது, தாம் ஸஜ்தா செய்து கொண்டிருக்கும் போது ஓதியதாக ஆயிஷா(ரழி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள் வித்ரின் கடைசியில் இதை ஓதிக்கொண்டிருந்தார்கள்'' என்று மேற்காணும் அறிவிப்பில் பொதுவாகக் கூறப்பட்டிருப்பதால் இந்த வாசகம் வித்ரில் ஓதப்படும் குனூத்தை மட்டும் கட்டுப்படுத்தாமல் வித்ரின் கடைசி இருப்பில், அல்லது ஸஜ்தாவில் இதை ஓதியிருக்கலாம் என்ற ஐயப்பாட்டை உண்டாக்கினாலும், வித்ரின் குனூத்துடைய ஸ்தானத்தில் ஓதியிருக்கவும் வாய்ப்புள்ளது.

    ஆனால் ''அல்லாஹும்ம ஹ்தினீ'' என்று துவங்கும் ஹஸன்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள துஆவோ வித்ருடைய குனூத்து தான் என்பதை ஹதீஸின் வாசகமே தெளிவுபடுத்துகிறது. வித்ருடைய ''குனூத்து துஆ'' என்ற வகையில் மிகத் தெளிவாக நபி(ஸல்) அவர்களின் மூலம் கற்றுத்தரப்பட்டது இந்த ஒன்றைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்பது உறுதி.

    எனவே ''அல்லாஹும்ம - இன்னா - நஸ்த்தயீனுக்க - வநஸ்த்தஃபிருக்க'' என்று துவங்கும் ''குனூத்து துஆ'' வானது இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களின் வாயிலாக பைஹகீ, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பினும், இது இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்கள் ஓதியதாக உள்ளாதே அன்றி, நபி(ஸல்) அவர்களால் இதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. ஆகவே இதைவிட நபி(ஸல்) அவர்களால் ஹஸன்(ரழி) அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டதாக ஹதீஸில் இடம்பெற்றுள்ள அந்த ''குனூத்து துஆ'' வை ஓதுவதே மேலாகும்.

    வித்ரில் ''குனூத்'' எப்போது ஓதவேண்டும்?

    ''நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது ருகூஃவுக்கு முன் 'குனூத்' ஓதுவார்கள்'' (உபையுபின் கஃபு(ரழி) நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    ''நிச்சயமாக இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களும், மற்றுமுள்ள நபித்தோழர்களும் வித்ரில் ருகூஃவுக்கு முன்பே ''குனூத்'' ஓதிக் கொண்டிருந்தார்கள்''. (அல்கமா(ரழி), முஸ்னதுப்னி அபீஷைபா)

    ''நான் வித்ரு (தொழுகையில் கடைசி ரகாஅத்தில்) எனது தலையை உயர்த்தி (மூன்றாவது ரகாஅத்தின் ஸஜ்தாவைத் தவிர வேறு எதுவும் எஞ்சியிராத அந்தக் கட்டத்தில் ''அல்லாஹும்மஹ்தீனி'' என்ற துஆவை ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்தார்கள். (ஹஸன்(ரழி), ஹாக்கிம்)

    வித்ரில் ருகூஃவுக்கு முன் குனூத் ஓதும்போது தக்பீர் கூறி, கையைக் கட்டிக்கொண்டு ''குனூத்'' ஓதும் நிலை:

    இவ்வாறு வித்ரின் மூன்றாவது ரகாஅத்தில் சூரா ஓதி முடிந்தவுடன் ''அல்லாஹு அக்பர்'' என்று இரு கைகளையும் உயர்த்திக் கட்டிக் கொண்டு ''குனூத்'' ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்களின் வாயிலாக ஒரு அறிவிப்பும் இல்லை. இவ்வாறு சஹாபாக்கள் செய்ததாக இருப்பினும், அந்த அறிவிப்புகளின் தொடர்கள் நம்பகமானவையாக இல்லை. இவ்வாறே வித்ரின் குனூத்தின் போது கைகளை உயர்த்திக்கொண்டு ஓதுவதற்கும் நபி(ஸல்) அவர்களின் வாயிலாக ஓர் அறிவிப்பும் இல்லை.

    வித்ர் தொழுகையில் ஓதப்படும் சூராக்கள்:

    நபி(ஸல்) அவர்கள் வித்ரின்போது ''ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா'வையும், இரண்டாவது ரகாஅத்தில் ''குல்யா அய்யுஹல் காஃபீருன்'' என்ற சூராவையும், மூன்றாவது ரகாஅத்தில் ''குல்ஹுவல்லாஹு அஹத்'' எனும் சூராவையும் ஓதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசியிலன்றி (இடையில்) 'ஸலாம்' கூறமாட்டார்கள். (உபையுபின் கஃபு(ரழி), நஸயீ)

    நபி(ஸல்) அவர்கள் வித்ரில் முதல் ரகாஅத்தில் ''ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா''வையும், இரண்டாம் ரகாஅத்தில் குல்யா அய்யுஹல் காஃபீருன்'' என்பதையும், ஓதுவதோடு, மூன்றாம் ரகாஅத்தில் குல்ஹுவல்லாஹு அஹத்'' எனும் சூராவையும் ''குல்அஊது பிரப்பில் ஃபலக்குல்அஊது பிரப்பின்னாஸ்'' ஆகிய சூராக்களையும் ஓதியதாக அப்துல் அஜீஸ்பின் ஜுரைஹ் என்பவர் ஆயிஷா(ரழி) அவர்களிடமிருந்து கேட்டதாக ஓர் அறிவிப்பு அபூதாவூதில் பதிவாகியள்ளது. இவ்வறிவிப்பு பலகீனமானதாகும். காரணம் அப்துல் அஜீஸ் பின் ஜுரைஹ் என்பவர் ஆயிஷா(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராக உள்ளார். மேலும் இவருடைய அறிவிப்பு ஏற்புக்குரியதல்ல என்று இமாம் புகாரீ கூறியுள்ளார்கள்.

    ரமழான் இரவுத் தொழுகை பிற்பகுதியில் மட்டும் வித்ரில் குனூத் ஓதும் நிலை:

    நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ரமழானில் இரவுத் தொழுகை பிற்பகுதியில் மட்டும் வித்ரில் குனூத் ஓதியுள்ளார்கள் என்று ஒரு ஹதீஸும் இல்லை. ஆனால் உமர்(ரழி) அவர்கள் உபையுபின் கஃபு அவர்களை மக்களுக்குத் தொழவைக்கும்படி நியமித்திருந்தபோது உபையுபின் கஃபு அவர்கள் இவ்வாறு ரமழானின் பிற்பகுதியில் குனூத் ஓதியதாக அபூதாவூதில் ஓர் அறிவிப்பு உள்ளது.

    அன்றி, நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக எவ்வித அறிவிப்பும் இல்லை. ரமழான் மாதத்தில் மட்டுமின்றி, வருடத்தின் எல்லா மாதங்களிலும் வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவதை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் எனும் தொழுகை அறிவிப்புகளின்படி நாம் வித்ரு தொழுகையில் குனூத் (எல்லா காலங்களிலும்) ஓதுவது அவசியமானதே என உணர முடிகின்றது

    ஜும்ஆத் தொழுகை

    ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள்

    ''அழகிய முறையில் குளித்து விட்டு பின்னர் ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த அவருக்கு விதிக்கப்பட்டதை தொழுதுவிட்டு பின்னர் ஜும்ஆ உரையை இமாம் முடிக்கும் வரையில்அமைதிகாத்து பின்னர் ஜும்ஆவின் கடமையான தொழுகையை ஜமாஅத்துடன் தொழுபவருக்கு, இந்த ஜும்ஆ மற்றும் அடுத்த வரக்கூடிய ஜும்ஆவுக்கு இடையில் இன்னும் அதிகப்படியாக மூன்று நாட்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறிவிட்டு, 'உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுகையை முடித்து விட்டால் அவர் சுன்னத்தான நான்கு ரக்அத்துகள் தொழுது கொள்ளட்டும்' என்றும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களுடன் நான் ஜும்ஆவுக்கு பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழதுள்ளேன்'' என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம்

    ''ஜும்ஆ தொழுகை முடிந்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு சென்றே இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

    ஐவேளை தொழுகைகளுக்கு முன்பு சுன்னத்தாக உள்ள தொழுகைகளைப் பற்றியும், பின் சுன்னத்துக்களைப் பற்றியும் நாம் மேற்கண்ட நபிமொழிகளில் பார்த்தோம். மேலும் சிறப்பிற்குரிய ஜும்ஆவின் முன் பின் சுன்னத்துகளைப் பற்றியும் பார்த்தோம். இது தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிக!
    மேற்கண்ட நபிமொழிகளை படித்ததோடு விட்டுவிடாமல் மறுமை வெற்றிக்குத் துணைபுரியக்கூடிய இந்தத் தொழுகைகளை செயளவில் நாம் கொண்டு வந்தாக வேண்டும்.

    ஜும்ஆவின் விபரம்:

    மூமின்களே! ஜும்ஆவுடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறியக் கூடியவர்களாயிருப்பின் இதுவே உங்களுக்கு மிக்க மேலான நன்மையுடையதாகும்.

    பின்னர் (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்! அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து கொள்ளுங்கள். (62:9, 10)

    ''ஜும்ஆ'' தினத்தின் சிறப்பு:

    ''சூரியன் உதிக்கும் தினத்தில் ''ஜும்ஆ'' வுடைய தினமே மிகச் சிறந்ததாகும். இத்தினத்தில் தான் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் இத்தினத்தில் தான் சுவர்க்கத்தில் புகுதுவிக்கப்பட்டார்கள். இத்தினத்திலேயே அதிலிருந்து வெளியேற்றவும் பட்டார்கள். யுக முடிவுநாளும் வெள்ளிக்கிழமை தான் நிகழும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ)

    ஜும்ஆவுக்கு வருவோர் மட்டுமே குளிப்பது அவசியம்:

    ''உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வருவாரானால் அவர் அவசியம் குளித்துக் கொள்வாராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    (இப்னு உமர்(ரழி), புகாரீ)

    வீட்டிலுள்ள பெண்கள், சிறார்கள் வெள்ளிக்கிழமைக்காக குளிப்பது அவசியமில்லை. (இப்னு உமர்(ரழி), பைஹகீ)

    ''ஜும்ஆ தினத்தன்று குளிப்பது, வயதுவந்த ஒவ்வொருவர் மீதும் அவசியமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஸயீத் குத்ரீ(ரழி) புகாரீ)

    ''வெள்ளிக்கிழமை குளிப்பது ஜும்ஆ தொழுகை கடமையானவர்கள் மீது மட்டும் தான்'' என்று இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள். (பைஹகீ)

    ஜும்ஆ தினத்தன்று குளிப்பது அவசியமா, அல்லது சிறப்பா?

    ''ஒருவர் ஜும்ஆ தினத்தில் உளூ செய்து கொள்வாரானால் அவ்வாறு அதை அவர் செய்துகொள்ளட்டும், அது நல்லது தான். ஆனால் ஒருவர் குளித்துக் கொள்வாரானால், குளிப்பே மேலானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி) திர்மிதீ)

    ''ஒருவர் உளூவை முறைப்படி செய்து கொண்டு, ஜும்ஆவுக்கு வந்து, தாம் வாய் மூடியவராக குத்பா-பிரசங்கத்தைச் செவிமடுத்துக் கேட்பாரானால், அவருக்கு ஜும்ஆவுக்கும், அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்).

    இந்த ஹதீஸில் ஜும்ஆவுடைய தினத்தில் குளிக்க வேண்டும் என்பதாக ஒரு வாசகமும் இல்லாது, பொதுவாக ''உளூவை முறைப்படி செய்துகொண்டு ஜும்ஆவுக்கு வந்து ''என்ற வாசகமே காணப்படுகிறது. எனவே ஜும்ஆ தினத்தன்று குளிப்பது சிறப்பே தவிர கடமை அல்ல என்பதை உணருகிறோம்.

    ஜும்ஆ தினத்திலும், பெருநாள்களிலும் அணிவதற்காக விஷேச ஆடைகளை, வைத்துக் கொள்வது சிறப்பாகும்.

    நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாட்கள், ஜும்ஆகிய தினங்களில் அணிந்து கொள்வதற்காக விசேஷ ஆடைகள் வைத்திருந்தார்கள். (ஜாபிர்(ரழி), பைஹகீ)

    ''நீங்கள் வேலைசெய்யும் போது அணிந்து கொள்ளும் சாதாரணமான ஆடைகளைத் தவிர, ஜும்ஆவுடைய தினத்தில் அணிந்து கொள்வதற்காக விசேஷ ஆடைகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் மிம்பரின் மீது நின்று கொண்டு கூற நான் கேட்டிருக்கிறேன். (அப்துல்லாஹ் பின் ஸலாம்(ரழி) அபூதாவூத், இப்னு மாஜ்ஜா).

    ஜும்ஆவன்று எண்ணெய் தடவிக்கொள்வதும் சிறப்பாகும்:

    ''ஜும்ஆதினத்தில் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்; தம்முடைய ஆடைகளில் சிறந்ததை அணிந்து கொள்வது மேலாகும். தம்மிடம் வாசனை திரவியம் இருந்தால் அதனைப் பூசிக் கொள்வதும் சிறப்பு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி) புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

    ஒருவர் ''ஜும்ஆ'' தினத்தன்று தம்மால் இயன்ற அளவு தம்மைச் சுத்தம் செய்து குளித்துவிட்டு. தம்முடைய எண்ணெயில் சிறிதளவு எடுத்து (தலை, தாடி முதலியவற்றில்) தடவிக்கொண்டு, இவ்வாறே தமது வீட்டிலுள்ள வாசனை திரவியத்தையும் பூசிக்கொண்டு, பின்னர் பள்ளிக்குச் சென்று, அங்கு இருவருக்கு மத்தியில் தாண்டிச் செல்லாது. முறையாக நடந்து சென்று, பின்னர் அல்லாஹ்வினால் அவருக்கென்று நியமிக்கப்பட்ட அளவு (நஃபிலான தொழுகையைத்) தொழுது விட்டு, இமாம் (குத்பா)-பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, வாய்முடி கேட்டுக் கொண்டிருப்பாரானால், (அதன் பயனாக) அல்லாஹ் அவருடைய பாவங்களை நிச்சயமாக மன்னித்து விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மானுல்பாரிஸி(ரழி) புகாரீ, அஹ்மத்)

    ஜும்ஆவுக்காக முற்கூட்டியே பள்ளிக்குச் செல்வதன் சிறப்பு.

    ''ஜும்ஆவுடைய தினம் வந்து விட்டால் (உலம்லுள்ள) பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிகளின் வாயில்களிலும் மலக்குகள் இருந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வருபவரைப் பதிவுசெய்து கொண்டிருப்பார்கள். (முதற்கட்டமாக) முற்கூட்டியே வந்தவர் ஒரு ஒட்டகத்தை ''குர்பானி'' கொடுத்தவர் போலாவார். மேலும் பிறகு வருபவர் ஒரு கோழியை குர்பானி கொடுத்தவர் போலாவார். ஆகக் கடைசியில் வருபவர் ஒரு முட்டையை குர்பானி கொடுத்தவர் போலாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

    ஜும்ஆவுக்கு நடந்து செல்வதன் பயன்.

    நான் ஒரு முறை ஜும்ஆவுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அபூ அப்ஸு(ரழி) அவர்கள் என்னைப் பார்த்து ''எவருடைய இருபாதங்களும் அல்லாஹ்வின் பாதையில் (நடந்து சென்றமையால்) புழுதி படிந்ததவனவக விடுகின்றனவோ, அல்லாஹ் அவரை நரக நெருப்பை விட்டும், தடை செய்து விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (அஃபாயத்துபின் ரிஃபாயா(ரழி), புகாரீ)

    அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் இமாம் (மிம்பரின் மீது) அமர்ந்து விட்டால் ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன. (அவற்றை எழுதிக் கொண்டிருந்த, மலக்குகள்) சென்று விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக உள்ளது.

    ஜும்ஆவுடைய நாளில் துஆ கபூலாகும் குறிப்பிட்ட நேரம் எது

    ''நிச்சயமாக ஜும்ஆ தினத்தன்று, ஒரு நேரம் உள்ளது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்விடம் எந்த நன்மையானதொன்றைக் கேட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு கொடுத்தே தீருவான். அது வெள்ளி கிழமை அஸ்ருக்குப் பின்னுள்ள நேரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூஸயீதில் குத்ரீ(ரழி) அஹ்மத்)

    ஒரு முறை நபித்தோழர்களில் பலர் ஜும்ஆதினத்தில் துஆ கபூலாகும் நேரம் குறித்து முடிவு செய்வதற்காக கூடி இறுதியாக அந்நேரம் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரம் தான் என்று ஏகமானதாக முடிவு செய்த நிலையில் எழுந்து சென்றார்கள்.
    (அபூஸலமாபின் அப்திர்ரஹ்மான்(ரழி) ஸுனனு ஸயீத்)

    ஜும்ஆவுடைய நேரம்:

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையை உச்சியை விட்டு சூரியன் சாய்ந்து விட்டபோது தொழுது கொண்டிருந்தார்கள்.
    (அனஸ்பின் மாலிக்(ரழி), புகாரீ)

    ஜும்ஆவுக்கு மேலதிகமான பாங்கு எப்போது ஏற்பட்டது?

    நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், பின்னர் அபூபக்ரு(ரழி), உமர்(ரழி) ஆகியோர்காலத்திலும் ஜும்ஆவின் பாங்கு- (அழைப்பு) இமாம் மிம்பரின் மீது அமர்ந்தவுடன் கூறப்பட்டுக்கொண்டிருந்தது. உஸ்மான்(ரழி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது மக்கள் அதிகரித்து விட்டனர். அப்போது அவர்கள் மதீனாவிலுள்ள ''அல்ஜவ்ரா'' வெனும் கடைத்தெரு வாசிகளுக்காக (ஜும்ஆவின் நேரம் வந்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக வழமையான அழைப்புக்கு முன்) மேலதிகமாக மற்றொரு அழைப்பை நிர்ணயித்தார்கள். (ஸாயுபுபின்யஜீத்(ரழி), புகாரீ)

    இப்னு உமர்(ரழி) அவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களின் ''ஜும்ஆவின் மேலதிகமான பாங்கைப்பற்றி விமர்சிக்கையில் ஜும்ஆவுடைய தினத்தில் கூறப்படும் முதல் பாங்கு ''பித்அத்''தானது என்று அவர்கள் கூறியுள்ளார்கள் என்று இப்னு அபீஷைபா அறிவித்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியதற்கு அவர்கள் உஸ்மான்(ரழி) அவர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பாங்கை ஆட்சேபித்துள்ளார்கள் என்று பொருள் கொள்ளவும் செய்யலாம். அல்லது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாததொன்று என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக கூறியுள்ளார்கள் என்றும் பொருள் கொள்ளவும் ஏதுவாகிறது. ''நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இதுநாள்வரை ஜும்ஆவுக்கு (இமாம் மிம்பரின் மீது அமரும் போது கூறப்படும்) ஒரே பாங்கைத்தவிர, வேறு பாங்கு எதுவும் கூறப்படாத சில பகுதிகள் இன்றும் உலகில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது'' என்று இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஜும்ஆதொழுகைக்கு முன் இமாம் மிம்பரில் அமரும் வரை நஃபிலான தொழுகைகள் தொழுது கொள்வது சிறப்பாகும். இமாம் மிம்பரில் அமர்ந்த பிறகு, தஹிய்யத்துல்மஸ்ஜிதெனும் பள்ளியின் காணிக்கைத் தொழுகையைத் தவிர வேறு எத்தொழுகையும் தொழக்கூடாது. ஆனால் ளுஹ்ருடைய தொழுகைக்கு முன், சுன்னத்து தொழுகை இருப்பது போல் ''ஜும்ஆவுக்கு முன் சுன்னத்து தொழுகை'' என்று எதுவுமில்லை.

    இப்னு உமர்(ரழி) அவர்கள் ஜும்ஆ தொழுகைக்கு முன் (நஃபிலான) தொழுகையை மிகவும் நீட்டித் தொழுது கொண்டிருந்ததோடு ஜும்ஆவுக்கு பின்பு இரண்டு ரகாஅத்துகளையும் தொழுது கொண்டிருந்தார்கள். மேலும் இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் (ஜும்ஆவின் போது) தொழுது கொண்டிருந்தார்கள் என்று கூறிக் கொண்டுமிருந்தார்கள். (இப்னு உமர்(ரழி), அபூதாவூத்)

    ஜும்ஆ பிரசங்கம் சுருக்கமாகவும், தெளிவாகவும் இலக்கிய நயத்தோடும் இருத்தல்:

    ஒரு முறை அம்மார்(ரழி) அவர்கள் எங்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும், இலக்கிய நயத்துடனும் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கியவுடன் நாங்கள் அவர்களை நோக்கி, தாங்கள் சிறந்த வகையில் சுருக்கமாகப் பேசிவிட்டீர்கள் சற்று விரிவாகப் பேசியிருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும் என்று கூறினோம். அதற்கு அவர்கள் தொழுகையை நீட்டுவதும், பிரசங்கத்தைச் சுருக்கிக் கொள்வதும் மனிதனின் அறிவாற்றலுக்கோர் எடுத்துக்காட்டாகும். ஆகவே தொழுகையை (மக்களுக்குச் சிரமமில்லாதவாறு) நீட்டி பிரசங்கத்தை சுருக்கிக் கொள்ளுங்கள். நிச்சயமாக பிரசங்கத்தில் பிறரைக் கவரும் தன்மையுள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (அபூவாயில்(ரழி) முஸ்லிம்)

    தவறாகப் பிரசங்கம் செய்பவர் உணர்த்தப்படவேண்டும்.

    ஒருமுறை ஒருவர் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் பிரசங்கம் செய்தார். (அவர் தமது பிரசங்கத்தில்) ''அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்போர் நிச்சயமாக நேர் வழியடைந்து விட்டார். அவ்விருவருக்கும் மாறுசெய்வோர் வழிதவறிவிட்டார் என்று கூறினார்.
    உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ''நீர் பிரசங்கிகளில் மிகக் கெட்டவராவீர். (அவ்விருவருக்கும் மாறு செய்வோர் வழி தவறி விட்டார்'' என்று அல்லாஹ்வுடன் என்னையும் இணைத்துக் கூறாமல்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்வோர் (வழி தவறிவிட்டார்) என்று கூறுவீராக! என்றார்கள். (அதிய்யுபின்ஹாத்திம்(ரழி) முஸ்லிம்)

    மேற்காணும் இவ்வறிவிப்பு பின்வரும் குர்ஆன் வசனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு மூஃமினாகிய எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ, அவர் பம்ரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார். (33:36)

    இவ்வசனத்தில் ''அவ்விருவருக்கும் மாறுசெய்வோர்'' என்று கூறுவதற்கு ஏதுவான கட்டத்தில், அல்லாஹ் அவ்வாறு கூறாமல் ''எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ'' என்று தனித்தனியாக அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பிரித்துக் கூறியிருப்பதைக் காணலாம்.

    எனவே பிரசங்கம் செய்த அந்த நபித் தோழர் ''அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் என்று கூறாமல், ''அவ்விருவருக்கும் மாறு செய்வோர்'' என்று அனைவரையும் படைத்துப் பரிபாலனம் செய்யும், தனித்தன்மை வாய்ந்த ரட்சகனோடு, அவனாலேயே படைக்கப்பட்டு, சுயசக்தியின்றி, அவனுடைய தயவில், அவனுக்கே முழுக்க, முழுக்க அடிமையாகவும், தூதராகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவராகிய, நபி(ஸல்) அவர்களையும் இணைத்து, 'அவ்விருவருக்கும் மாறு செய்வோர்'' என்று நேரடியாக கூறுவதால் அது (ஷிர்க்காக)-அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாக இல்லாவிடினும், இவ்வாசகத்தில் மறைமுகமாக ஷிர்க்குடைய சாயல் தொனிப்பதால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை இவ்வாறு கூறுவதிலிருந்து தடை செய்துள்ளார்கள்.

    ஆகவே பிரசங்கம் என்ற வகையில் யார் எதைக் கூறினாலும் அனைத்திற்கும் 'ஆமாம்' போடுகிறவர்களாக, கண்மூடித்தனமாக நாம் இருந்து விடாது, கூறுபவை குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உடன்பாடானவை அல்லது முரண்பாடானவையா? என்பனவற்றைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

    குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் அவை முரண்பாடனவையாயிருப்பின், அதைத் தட்டிக் கேட்டு, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்டவரைச் சீர்திருத்தம் செய்ய வேண்டிய பொறுப்பும் நம்மையே சார்ந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்பதாக மேற்காணும் ஹதீஸ் உணர்த்துகிறது.

    பிரசங்கத்தின் போது நரகத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்:

    ''நபி(ஸல்) அவர்கள் பிரசங்கத்தின் போது 'நான் உங்களுக்கு நரகத்தைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். என்று கூறுவதாக நான் கேட்டிருக்கிறேன். (நுஃமானுபின் பஷீர்(ரழி), அஹ்மத்)
    ''நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் உள்ளவர்களாக ''வநாதவ் யாமாலிக்'' எனும் வசனத்தை ஓதுவதை நான் கேட்டுள்ளேன் என்று ஸஃப்வானுபின் யஃலா(ரழி) என்பவர் தமது தந்தை தமக்கு அறிவித்ததாக அறிவித்துள்ளார். (ஸஃப்வாறு பின் யஃலா (ரழி) முஸ்லிம்)

    மேற்காணும் வசனத்தின் பொருள்: (இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபரை நோக்கி) மாலிக்கே! உமதிறைவன் எங்களைத் தீர்த்துக்கட்டி விடட்டும் (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்) என்று சப்தமிடுவார்கள். அதற்கு அவர் (முடியாது) ''நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் வேதனையை அனுபவித்துக் கொண்டே மரிக்காது) நிலைத்திருக்க வேண்டியது தான்) என்று கூறுவார். (43:77)

    மேற்காணும் வகையில் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள் என்பதாகத்தான் ஹதீஸ்களில் காணப்படுகிறதே தவிர, தக்வாவைக் கொண்டு வஸிய்யத்துச் செய்யும் வகையில் ''ஊªக்கும் இபாதல்லாஹி வ இய்யாய பிதக்வல்லாஹ்' - 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்கும், எனக்கும் அல்லாஹ்வுக்கு பயபக்தியோடு நடந்து கொள்ளும்படி வஸிய்யத்து - உபதேசம் செய்து கொள்கிறேன்'' என்பதாகக் காணப்படவில்லை.

    ஜும்ஆ பிரசங்கம் செய்பவர் வரும் போது குறிப்பாக மிம்பருக்கு அருகில் உள்ளவர்களுக்கும், மிம்பரில் ஏறியவுடன் மக்களை நோக்கி, பொதுவாக அனைவருக்கும் ஸலாம் கூறவேண்டும் என்பதற்கான அறிவிப்பின் நிலை:

    நபி(ஸல்) அவர்கள் மிம்பருக்கு அருகில் வரும்போது அதற்கு அருகில் அமர்ந்திருப்பபோருக்கு ஸலாம் கூறுவார்கள்.
    பின்னர் மிம்பரில் ஏறியவுடன் மக்களை நோக்கி, ஸலாம் கூறி அமர்வார்கள். (இப்னு உமர்(ரழி), இப்னு அதீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் 'ஈஸப்னு அப்தில்லாஹில் அன்ஸாரீ எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார்.
    ''நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறினால் ஸலாம் சொல்கிறவர்களா யிருந்தார்கள். (ஜாபிர்(ரழி), இப்னுமாஜா)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னுலுஹைஆ' வெனும் நம்பகமற்றவர் இடம்பெற்றுள்ளார். ஆகவே மேற்காணும் அறிவிப்புகள் பலகீனமானவை யாகும்.
    ''உங்களில் ஒருவர் ஒரு சபைக்குச் சென்றால் உடனே (அவர்களுக்கு) ஸலாம் கூறுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), திர்மிதி, அபூதாவூத்)

    ''உங்களில் ஒருவர் தமது சகோதரரைச் சந்தித்தால் உடன் அவருக்கு ஸலாம் கூறுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), அபூதாவூத்)

    மேற்காணும் அறிவிப்புகள் ஒருவர் சபைக்குச் சென்றவுடன் ஸலாம் கூறவேண்டும் என்றும், முஸ்லிம் சகோதரரைக் கண்டவுடன் ஸலாம் கூறவேண்டும். அதுதான் நபி(ஸல்) என்றும் தெளிவுபடுத்துகின்றன. பொதுவாக 'ஸலாம்' கூறுவதை அதிகப்படுத்துவதால் சகோதரத்துவம் தழைப்பதால், பிரசங்கத்திற்கு முன் மக்களைப் பார்த்து ஸலாம் கூறுவது பாவமான செயலன்று.

    தடியோ, அல்லது வில்லையோ ஊன்றிக் கொண்டு ஜும்ஆபிரசங்கம் நிகழ்த்துதல்:
    நான் எழுவரில் ஏழாவது நபராக, அல்லது ஒன்பது பேரில் ஒன்பதாவது நபராக வந்து, அனைவரும் நபி(ஸல்) அவர்களிடம் சேர்ந்தோம். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களை வந்து சந்தித்துள்ளோம். ஆகவே எங்களுக்கு சிறிதளவு பேரீத்தம் பழம் தருவதற்கு உத்திரவிட்டார்கள். அப்போதயை காலநிலை மிக மோசமாயிருந்தது. பின்னர் நாங்கள் அங்கேயே பல தினங்கள் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ஜும்ஆவில் ஆஜராயிருந்தோம். அது சமயம் அவர்கள் ஒரு தடியையோ, அல்லது ஒரு வில்லையோ ஊன்றியவர்களாக நின்று கொண்டு, அல்லாஹ்வை மிகச் சிறந்த அழகிய எளிய நடையில் புகழ்ந்து விட்டு, ஜனங்களே! நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்து அமல் செய்துவிட முடியாது. அவ்வாறு அமல் செய்யவும் இயலாது. ஆகவே நீங்கள் (இயன்ற அளவு) செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து கொண்டு, மகிழ்ச்சியாயிருங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள். (அல்ஹக்க முப்னுல் ஹஜ்ன்(ரழி) அபூதாவூத், அஹ்மத்)

    அவர்கள் தடியையோ, அல்லது வில்லையோ ஊன்றிக் கொண்டு ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தியது மிம்பர் அமைக்கப்படுவதற்கு முன்புதான் என்பதை மேற்காணும் அல்ஹக்கமுப்னுல்ஹஜ்ன்(ரழி) அவர்களில் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள ''வஷ்ஷானு இத்தாக்க தூன்'' அப்போது கால நிலை மிக மோசமாக இருந்தது. எனும் வாசகம் உணர்த்துகிறது. இதை அவர்கள் ஏன் சொன்னார்கள் என்றால், உடனே அவர்கள் எங்களுக்கு சிறிதளவு பேரீத்தம் பழம் தருவதற்கு உத்திரவிட்டார்கள் என்று கூறிய அந்த நபித்தோழர் அதற்கான காரணத்தை விளக்கும் போதுதான், அப்போது கால நிலை மிகமோசமாக இருந்தது என்று கூறியுள்ளார்கள்.

    மிம்பர் கட்டப்பட்டது. ஹிஜ்ரி 8ன் இறுதியில் என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர்(ரழி) அவர்கள் ஃபத்ஹுல்பரீ எனும் நூலில் பாகம் 2 பக்கம் 399-ல் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அந்த நபித்தோழர் கூறுவது போல் அப்போது கால நிலை மிகமோசமாக இருக்கவில்லை. ஹிஜ்ரி 8ல் எல்லாம் நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் பொருளாதார நிலையில் மிகவும் நல்ல நிலையில் இருந்துள்ளார்கள். ஆகவே அந்த நபித்தோழர் அவர்கள் பிரசங்கம் செய்த கால கட்டத்தையே குறிப்பிடுகிறார் என்பதை சாதாரணமாகப் பார்க்கும்போதே அறிய முடிகிறது.
    ஜும்ஆ பிரசங்கம் சம்பந்தமாக ஹதீஸில் காணப்படும் முக்கிய அம்சங்ளோடு, தன்னிச்சையாக வேறு பல அம்சங்களையும் இணைத்து ஒட்டு மொத்தமாக அனைத்தையும் ஃபர்ளு என்று கூறுதல்.

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்கையிலும், மற்ற சந்தர்ப்பங்களில் சொற்பொழிவாற்றும் போதும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழுதல், குர்ஆன் வசனங்களை எடுத்தோதி உபதேசம் செய்தல், ஆகியவற்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளார்கள் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிகிறோம்.

    மூமின்களே! ஜும்ஆவுடைய தினத்தில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் திக்ரு - தியானத்தின்பால் (பள்ளிக்கு) விரையுங்கள். நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையடையதாகும். (62:9)

    ஆகவே அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ இவ்வாறு அவ்வசனத்தின் மூலம் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் போன்றவற்றில் யாதேனும் ஒன்றை ஜும்ஆ பிரசங்கத்தின் போது கூறியாக வேண்டும் என்று விதித்துள்ளதாகக் கருத இடமில்லை.

    ஜும்ஆ தொழுகைக்காக பலதரப்பட்ட நிபந்தனைகள்:

    ஜும்ஆ தொழுகை நிறைவேற வேண்டுமானால் இமாமைச் சேர்த்து மூவர் இருந்ததாக வேண்டுமென்று 40 நபர்கள் இருந்ததாக வேண்டும் என்று 4,7,9,12,20, 30,50,70 நபர்கள் இருந்தாக வேண்டும் என்றும், ஜும்ஆ தொழுவதற்குப் பெரிய நகரமாக இருக்கவேண்டும் என்றும், அதற்கு அளவுகோல் எந்தப் பள்ளியில் அதன் ஊர்வாசிகள் அனைவரும் ஒன்று கூடினால் அப்பள்ளி நிறைந்து விடுமோ அத்தகைய பள்ளியையுடைய ஊர்தான் நகரமாகும் என்றும் கூறப்படும் பல நிபந்தனைகளுக்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.

    ஜும்ஆ பிரசங்கம் இரண்டு ரகாஅத்துடைய ஸ்தானத்தில் என்ற அறிவிப்பின் நிலை:

    வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்படும் பிரசங்கமானது இரண்டு ரகாஅத்துக்களுக்குப் பகரமாக அவற்றின் ஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் ஜும்ஆ பிரசங்கத்தை எவர் கேட்கத்தவறி விட்டாரோ, அவர் 4 ரகாஅத்துகள் தொழுது கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் பின்வருமாறு:

    ஜும்ஆ ஆரம்பத்தில் 4 ரகாஅத்துகளாகவே இருந்தது, பிறகு குத்பாவக்காக அவை இரண்டாகப்பட்டுள்ளது. ஆகவே குத்பாவைத் தவற விட்டவர் 4 ரகாஅத்துகள் தொழுது கொள்வாராக! என்று உமர்(ரழி) கூறியுள்ளார்கள். (அம்ருபின் ஷுஐபு, இப்னு அபீஷைபா)

    இவ்வறிப்பை உமர்(ரழி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என்று கூறும் ''அம்ருபின் ஷுஐபு'' என்பவர் உமர்(ரழி) அவர்களை சந்திக்கும் வாய்ப்பிழந்தவராக இருப்பதோடு, நம்பகமற்றவரும் கூட, இவரைப் பற்றி இவர் பலம் வாய்ந்த அறிவிப்பாளர்களுக்கு எதிராக பல விஷயங்களை அறிவித்துள்ளார், இவருடைய அறிவிப்புகள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவை அல்ல என்று இமாம் அஹ்மத் பின் ஹம்மல் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று ''மைமூனீ'' அவர்கள் கூறுகிறார்கள்.

    ''தொழுகையில் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்து கொண்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    மேற்காணும் ஸஹீஹான அறிவிப்பில் பொதுவாக தொழுகையில் ஒரு ரகாஅத்தை இமாமுடன் அடைந்து கொண்டவர், அந்தத் தொழுகையையே அடைந்து கொண்டார் என்றிருப்பதால் அத்துடன் மற்றொரு ரகாஅத்தையும் தொழுது நிறைவு செய்து கொள்ளவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆகவே ஜும்ஆவின் பிரசங்கத்தைத் தவறவிட்டவர் 4 ரகாஅத்துகள் தொழவேண்டும் என்ற அறிவிப்பு தவறானதாகும்.

    ஜும்ஆ தொழுகையை இமாமுடன் சேர்ந்து தொழுவது (ஷர்த்தாகும்) கடமையாகும்.

    ஜும்ஆவுடைய தொழுகை 4 நபர்களைத் தவிர ஏனைய அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜமாஅத்தாகத் தொழுவது உரித்தான கடமையாகும். அடிமை, பெண், சிறுவர், மற்றும் நோயாளி ஆகியோர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தாரிக்குபின் ஷிஹாபு(ரழி) அபூதாவூத், ஹாக்கிம்)

    ஜமாஅத்தாகத் தொழுவதற்கு இருவரே போதும்.

    ஒரு முறை ஒருவர் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்து முடித்த பின் வந்து பள்ளியில் நுழைந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''யார் இவருடன் தொழுது இவருக்கு சகாயம் செய்பவர்?'' என்று கேட்க ஒருவர் எழுந்து அவருடன்தொழுதார். (அபூஸயீத்(ரழி), அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்)

    ஜும்ஆ தொழுவதற்கு இரு நபர்கள் மட்டும் இருந்தாலே போதும் தொழுதுகொள்ளலாம். ஜும்ஆ தொழுகையும் மற்ற தொழுகைகளைப் போன்றதோர் தொழுகைதான். ஆனால் மற்ற தொழுகைகளைத் தனியாக ஒருவர் தொழுதாலும் கூடிவிடும். ஜும்வோ ஒருவர் மட்டும் தனியாகத் தொழுதல் கூடாது. அதற்கு ஜமாஅத்து (ஷர்த்தாக) கடமையாக உள்ளது.

    ஆகவே இரு நபர்கள் மட்டுமிருந்து ஒருவர் தொழவைக்க மற்றொருவர் அவரைப் பின்பற்றித் தொழுது விட்டால் அவர்களின் கடமை நீங்கிவிட்டது. ஜும்ஆவும் நிறைவேறிவிட்டது. ஜும்ஆ பிரசங்கம் குத்பா என்பது சுன்னத்துத்தான். அதை நிகழ்த்த முடியுமானால் செய்து கொள்ளட்டும். இயலாவிடில் அது சுன்னத்தாயிருப்பதால் அது விடுபடுவதன் காரணமாக ஜும்ஆத் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

    ஜும்ஆ பிரசங்கத்தின் போது வாய் மூடி, செவி மடுப்பது அவசியம்.

    இமாம் ஜும்ஆ பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, (அதைச் செவி மடுக்காமல் பேசிக் கொண்டிருக்கும்) உமது நண்பராகிய ஒருவரை நோக்கி ''நீர் வாய் மூடியிருப்பீராக!'' என்று நீர் கூறினால், நீர் வீண் வேலை செய்தவராவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரி)

    மேற்காணும் அறிவிப்பில் இமாம் ஜும்ஆ பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது என்ற வாசகம் அமைந்திருப்பதால் அவர் பிரசங்கத்தைத் துவங்குவதற்கு முன்னரும், இரு பிரசங்கங்களுக்கிடையில் அவர் அமர்ந்திருக்கும்போதும் பிறர் பேசுவதைத் தடுப்பது தவறில்லை என்பதை உணர்த்துகிறது. இவ்வாறே ஒருவர் தாம் பேசாமல் தமது வாயில் கையை வைத்து சமிக்கை செய்துபிறரைப் பேசாது தடுப்பதும் தவறில்லை.

    ஜும்ஆ பிரசங்கத்தின் போது பள்ளியில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடறியைத் தாண்டி கொண்டு முன்னால் செல்வது முறை கேடாகும்.

    வெள்ளிக்கிழமை ஒருவர் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது (அமர்ந்திருக்கும்) மக்களின் பிடறிகளைத் தாண்டிக் கொண்டு வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீர் உட்காரும்! நீர் காலதாமதமாக வந்திருப்பதோடு, பிறருக்குச் சிரமத்தையும் அளித்து விட்டீரே' என்றார்கள். (அப்துல்லாஹ் பின் புஸ்ரு(ரழி) அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

    ஜும்ஆ பிரசங்கத்தின்போது இமாம் குறிப்பாக ஒருவரிடம் பேசுவதும், பிறர் இமாமிடம் பேசுவதும் ஆகுமானதாகும்.

    வெள்ளிக்கிழமை நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்தார். அவரை நோக்கி நீர் தொழுது விட்டீரா? என்று அவர் கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். உடனே எழுந்து தொழுவீராக'' என்றார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி)

    ஒருமுறை நான் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்யும்போது அவர்களிடம் சென்று ''அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்வாசி உங்களிடம் தமது மார்க்கத்தைப் பற்றிக் கேட்டு அறிவதற்காக வந்துள்ளார். அவரோ தமது மார்க்கத்தைப் பற்றி அறியாதவராயிருக்கிறார்'' என்று (என்னைப் பற்றி) நானே கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆ பிரசங்கத்தை ஒத்தி வைத்திவிட்டு, என்னை நோக்கி வந்து என்னை அடைந்தார்கள். உடனே ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது அதன் கால்கள் இரும்பாக இருந்ததாகக் கருதுகிறேன். உடனே நபி(ஸல்) அவர்கள் அதில் அமர்ந்தவர்களாக, அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுத் தந்தவற்றை எனக்குக் கற்றுத் தரலானார்கள். பிறகு தமது ஜும்ஆ பிரசங்கத்திற்கு வந்து அதன் இறுதி பாகத்தை நிறைவு செய்தார்கள். அபூரிஃபாஆ(ரழி) முஸ்லிம்)

    மேற்காணும் இரு அறிவிப்புகளில் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆ பிரசங்கத்தின் போது தனிப்பட்ட ஒருவரிடம் பேசியுள்ளார்கள். மற்றொன்றில் தனிப்பட்ட ஒருவர், ஜும்ஆ பிரசங்கத்தை நபி(ஸல்) அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் பேசியுள்ளார். ஆகவே ஜும்ஆ பிரசங்கம் செய்யும் இமாமும், தனிப்பட்ட ஒரு நபரும் பிரசங்கத்திற்கு மத்தியில் பேசியுள்ளார்கள். இதன் மூலம் இவ்வாறு பிரசாங்கத்தின்போது இரு சாராரும் பேசிக் கொள்வது ஆகும் என்பது தெளிவாகிறது.

    தாய்மொழியிலேயே ஜும்ஆ பிரசங்கம் இருப்பதன் அவசியம்:

    ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு அவ(ரவ)வருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியும்படி) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம். (14:4)

    மேற்கண்டவாறு ஜும்ஆ பிரசங்கம் உணர்ச்சிமிக்கதாகவும், உத்வேகமுள்ளதாகவும், பிறரைக் கவரும் தன்மை வாய்ந்ததாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்திருக்க வேண்டுமானால் அது தாய்மொழியிலேயே இருந்தால்தான் சாத்தியமாகும். இந்த அடிப்படையில் தான் அனைத்து நபிமார்களையும் தமது சமூகத்தாருக்கு நற்செய்தி கூறக்கூடியவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்களாகவும், அவரவர், சமூகத்தாரின் மொழி பேசும் வகையிலேயே இறைவன் அனுப்பி வைத்துள்ளான். நபியின் மொழியும், அவரது சமூகத்தாரின் மொழியும் வேறுபட்டிருக்குமானால் நபிமார்களிடமிருந்து எந்த சமூகத்தாரும் எவ்விதப் பயனையும் அடைந்திருக்க முடியாது.

    ஜும்ஆ தொழுகையில் கடைசி இருப்பை அடைந்து கொண்டால் எழுந்து தாம் தொழும் போது ஜும்ஆ என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகள் மட்டுமே தொழ வேண்டும்.

    நீங்கள் (தொழுகைக்காக) இகாமத்துச் சொல்வதைச் செவியுற்றால் உடனே நீங்கள் அமைதியையும், கம்பீரத்தையும் கடைபிடித்தவர்களாக தொழுகைக்கு நடந்து செல்லுங்கள் - விரைந்து செல்லாதீர்கள். (இமாமுடன்) கிடைத்தவற்றைத் தொழுது கொண்டு, தவறிவிட்டவற்றை (உடனே எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பு அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா

    ஜும்ஆ தொழுகைக்கும் மற்ற தொழுகைகளுக்கும் இடையே எவ்வித பாகுபாடுமில்லை ஜும்ஆ தொழுகையும் எனவே மற்ற தொழுகைகளைப் போன்ற ஒரு தொழுகைதான் என்ற கண்ணோட்டத்தில் மற்ற தொழுகைகளைப் போன்று கடைசி இருப்பில் இமாமை அடைந்து கொண்டவர், எழுந்து, தமக்கு தவறிவிட்ட ரகா அத்துகளை எவ்வாறு நிறைவு செய்வாரோ, அவ்வாறே ஜும்ஆ தொழுகையில் கடைசி இருப்பை அடைந்து கொண்ட வரும் நிறைவு செய்து கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

    ஜும்ஆ தொழுகையில் கடைசி இருப்பை அடைந்து கொண்டவர், எழுந்து 4 ரகாஅத்து தொழவேண்டும் என்று கூறும் அறிவிப்புகளின் நிலை:

    ஒருவர் ஜும்ஆ தொழுகையில் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டால் அத்துடன் மற்றொரு ரகாஅத்தையும் சேர்த்துத் தொழுது கொள்வாராக! இரண்டு ரகாஅத்துகளும் தவறிவிட்டால் (எழுந்து) 4 ரகாஅத்துகள் தொழுது கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) தாருகுத்னீ)

    மேற்காணும் அறிவிப்பின் அறிவிப்பாளர் தொடரில் ''யாªன்'' என்னும் நம்பக மற்றவர் இடம் பெற்றுள்ளார். என இப்னு ஹிப்பான் அவர்கள் இவரை விமர்சித்துள்ளார்கள். தாரகுத்னீயிலும் வேறு சில நூல்களிலும் இக்கருத்தை மையமாக வைத்து பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன, அவற்றின் அறிவிப்பாளர்கள் நம்பக மற்றவர்களாகவே காணப்படுகிறார்கள்.

    ஒருவர் ஜும்ஆவில் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டால் அவர் தொழுகையை அடைந்து கொண்டார். ஆகவே அத்துடன் மற்றொரு ரகாஅத்தையும் சேர்த்துத் தொழுது கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி) இப்னுமாஜ்ஜா, நஸயீ, தாரகுத்னீ) 

    ஜும்ஆவில் இரண்டாவது ரகாஅத்தில் ருகூஃவுக்குப் பின்னால் உள்ள நிலையாக நிற்கும் சிறுநிலை, அல்லது ஸுஜுது, அல்லது கடைசி இருப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அவருக்கு ஜும்ஆ கிடைக்கவில்லை என்ற கருத்து மறைமுகமா தொனிருக்கிறது. ஆகவே இத்தகையோர், எழுந்து 4 ரகாஅத்துகள் தாம் தொழவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள்.

    மேற்காணும் இப்னுஉமர்(ரழி) அவர்களின் அறிவிப்பில் காணப்படும் 'ஒருவர் ஜும்ஆவில் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டால் என்ற வாசகம் புகாரீ, முஸ்லிம் முதலிய ஸஹீஹான பலமமான அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ள வாசகத்திற்கு மாற்றமாக - ஹதீஸ் கலா வல்லுநர்களின் ஐயப்பாட்டிற்குரிய வகையில் இடம் பெற்றுள்ளது.

    ஸஹீஹான பலமான அறிவிப்புகளில் எல்லாம் ஒருவர் தொழுகையில் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டால் அவர் தொழுகையை அடைந்து கொண்டார் என்று பொதுவாகத் தொழுகை என்றுதான் காணப்படுகிறதே அன்றி ஒருவர் ஜும்ஆவில் ஒருரகாஅத்தை அடைந்து கொண்டால் என்ற வாசகம் இடம் பெறவில்லை. ஆகவே இந்தவாசகம் நம்பகமானதல்ல என்பதாக ஹதீஸ் கலாவல்லுநர்களின் எடுத்து கூறுகிறார்கள்.

    இது மட்டுமின்றி இதன் அறிவிப்பாளர் தொடரில் 'பகிய்யா' என்னும் நம்பகமற்றவரும் இடம் பெற்றுள்ளார். ஆகவே இவ்வறிவிப்பில் ஹதீஸுடைய (மத்தனில்) - வாசகத்தில் கோளாறிருப்பது போன்று இதை அறிவிக்கும் அறிவிப்பாளரிலும் கோளாறுள்ளதாக காணப்படுகிறது. இத்தகைய கோளாறுகள் உள்ள ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவை அல்ல.

    இத்தகைய அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஜும்ஆவில் கடைசி இருப்பு மட்டும் கிடைத்தால் அவர் எழுந்து ஜும்ஆ என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகள் மட்டும் தொழாமல் ளுஹர் என்ற வகையில் 4 ரகாஅத்துகள் தொழவேண்டும் என்று கூறுவது முறையல்ல.

    ஏனெனில் மேற்கண்டவாறு '(இமாமுடன்) கிடைத்தவற்றைத் தொழுது கொண்டு, தவறி விட்டவற்றை (உடனே எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் இன்ன தொழுகை என்று குறிப்பிடாமல் பொதுவாகக் கூறியிருப்பது மிகத் தெளிவாகவே தெரிவதால், இந்த பலமான - ஸஹீஹான ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஜும்ஆ தொழுகையில் இரண்டாவது ரகாஅத்துடைய ருகூஃவுக்குப் பிறகு இமாமுடன் சேர்ந்தவரும் எழுந்து, ஜும்ஆ என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகள் மட்டுமே தொழுது கொள்ள வேண்டும் என்பதை அறிகிறோம்.

    ஜும்ஆ தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் ஒதிவந்துள்ள சூராக்கள்:

    ''நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாட்களிலும், ஜும்ஆவிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலாவையும், ஹல்அத்தாக்கஹதீஸுல் காஷியஹ்'' வையும் ஓதுவார்கள். பெரு நாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து விட்டால் இவ்விரு சூராக்களையுமே இரு தொழுகைகளிலும் ஓதுவார்கள். (நுஃமான்பின் பஷீர்(ரலி) முஸ்லிம்)

    ''நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய தொழுகையில் ''ஜும்ஆ'' என்ற சூராக்களையும், ''முனாஃபிகூன்'' என்ற சூராவையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)

    நுஃமானுபின் பஷீர்(ரழி) அவர்களிடம் ''ழஹ்ஹாக்'' என்பவர் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் சூரத்துல் ஜும்ஆவை ஓதியதை அடுத்து வேறு எந்த சூராவை ஓதுவார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் ''ஹல்அத்தாக் ஹதீஸுல் காஷியஹ்'' எனும் சூராவை ஓதினார்கள் என்றார்கள். (நுஃமான்பின் பஷீர்(ரழி) முஸ்லிம்)

    மேற்காணும் ஹதீஸ்களின் படி நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையின் போது மூன்று விதமாக ஓதியிருப்பது தெளிவாகிறது அவையாவன:

    1. ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலாவும், ஹல்அத்தாக்க ஹதீஸுல் காஷியஹ்வம்

    2. சூரத்துல்ஜும்ஆவும், சூரத்துல் முனாஃபிகூனும்.

    3. சூரத்துல்ஜும்ஆவும், ஹல்அத்தாக்க ஹதீஸுல் காஷியஹ்வும் ஆகும்.

    ஜும்ஆநாளின் பஜ்ரு தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஒதிவந்துள்ள சூராக்கள்.

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தின் பஜ்ரு தொழுகையில் ''அலிஃப் லாம் மும்தன்ஜீலுஸ்ஸஜிதா, 'ஹல்அத்தா அலல் இன்ஸானி ஹீனும்மினத்தஹ்ர்' எனும் சூராக்களையும் ஓதினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ, அபூதாவூத்)

    மேலும் ஜும்ஆ தினத்தின் பஜ்ரில் அலிஃப்லாம்மீம் ஸஜிதாவும், ஹல்அத்தா அலல் இன்ஸானி ஹீனும்மினத்தஹ்ர் என்று சூராக்களுமாகும்.

    ஜும்ஆ தினத்தில் இதர தொழுகைகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்கள் பற்றிய அறிவிப்புகளின் நிலை:

    இதுமட்டுமின்றி ''வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகையில் குல்யா அய்யுஹல் காஃபிரூனும், குல்ஹுவல்லாஹ் சூராவும் அன்றைய இஷா தொழுகையில் சூரத்துல் ஜும்ஆவும், சூரத்துல் முனாஃபிகூனும் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள்.

    இவ்வறிவிப்பை இப்னுஹிப்பான் அவர்கள் முழுமையாகவும் பைஹகீ அவர்கள் இதன் முற்பகுதியை மட்டும் ஸயீதுபின்ஸிமாக்கு பின் ஹாபு என்பவரின் வாயிலாக அறிவித்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்று தமது தந்தை தமக்கு அறிவித்தாகக் கூறும் ஸயீது என்பவர் ஹதீஸ் கலாவல்லுநர்களிடத்தில் பேச்சு எடுபடாதவராக உள்ளார். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

    மேற்காணும் பலகீனமான அறிவிப்பில் காணப்படுவதுபோல் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய இரவு இஷாதொழுகையில் சூரத்துல் ஜும்ஆவும், சூரத்துல் முனாஃபிகூனும் ஓதியதற்கான ஆதாரம் ஸஹீஹான ஹதீஸ்களில் கிடையாது. இவ்வாறே ஜும்ஆவுடைய இரவு இஷாதொழுகையில் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலாவும், ஹல்அத்தாக்க ஹதீஸ் காஷியஹ்வும் ஓதியதற்கும் ஒரு ஹதீஸும் இல்லை. இதுபோன்றே சனிக்கிழமை இரவு மஃரிபுத் தொழுகையில் 'குல் அஊது பிரப்பில் பலக்கும், குல்அஊது பிரப்பின் னாஸும் ஓதியதற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை.

    தக்க காரணமின்றி ஜும்ஆ தொழுகையை விடுபவருக்கு நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

    அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அபூஹுரைரா(ரழி) ஆகியோர் (பின்வருமாறு) நபி(ஸல்) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாக அறிவித்துள்ளனர். அதாவது: ஜும்ஆ தொழுகைகளை விடுவதிலிருந்து (அவ்வாறு விடும்) கூட்டத்தார் தம்மைத் தவிர்த்துக் கொள்ளவார்களாக! இன்றேல் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரை வைத்து விடுவான். பின்னர் அவர்கள் நிச்சயமாக மறதியாளர்களில் உள்ளவர்களாக ஆகிவிடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்)

    ஒருவர் மும்முறை ஜும்ஆ தொழுகையை விட்டு விடுவாரானால் அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு, அவருடைய உள்ளத்தை முனாஃபிக் குடைய உள்ளமாக ஆக்கிவிடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (தமது சிறிய தந்தையின் வாயிலாக முஹம்மது பின் அப்திர்ரஹ்மான் பின் ஸஃதுபின் ஜராரா(ரழி) (முஸ்னத் அபியஃலா)

    கடுமையான மழையின் போது, சேற்றிலும், களிமண்ணிலும் மக்கள் நடந்துவர சிரமமாக இருக்கும் நிலையில் ஜும்ஆவை விடுவதற்கு அனுமதி
    மழைபெய்து கொண்டிருக்கும் ஒரு தினத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தமது முஅத்தினை நோக்கி, (நீர் இன்று) ''அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்'' என்று கூறிவிட்டு ஹய்ய அலஸ்ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள் என்று கூற வேண்டாம் (அதற்கு பதிலாக) ''ஸல்லூஃபீயுயூத்திக்கும்'' - உங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்றார்கள்.
    மக்கள் இது விவரம் அறியாமல் (திகைத்துக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்கள் ''என்னை விடச் சிறந்தவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்'' என்று கூறிவிட்டு, நிச்சயமாக ஜும்ஆ என்பது மிகவும் அவசியமானது தான். ஆனால் நான் உங்களை (வீட்டை விட்டும்) வெளிப்படுத்தி நீங்கள் இந்தச் சேற்றிலும், வழுக்கி விழ ஏதுவாயுள்ள களிமண்ணிலும் (சிரமப்பட்டு) நடந்து வருவதை வெறுப்பாகக் கருதினேன் என்றார்கள். (அப்துல்லாஹிப்னுல் ஹாரிஸ்(ரழி) புகாரீ)

    ஆகவே மிகச் சிரமப்பட்டு நடந்து செல்லும் வகையில் உள்ள கடுமையான மழை, உடல் நலக்குறைவு, பிரயாணம் முதலிய காரணங்களல் ஜும்ஆவை விடுவதை மார்க்கம் அனுமதிக்கிறது. தக்க காரணமின்றி ஜும்ஆவை விடுவதுதான் பாவமாகும்.

    பிரயாணம் ஜும்ஆவை விடுவதற்கு முறையான காரணமாகும்:

    ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் பிரயாணத் கோலத்தில் ஒருவரைப் பார்த்தார்கள். அப்போது அவர் ''இன்று ஜும்ஆவுடைய தினமாக இல்லையாயின் நான் வெளியில் புறப்பட்டுச் சென்றிருப்பேன்'' என்றார். அதற்கு உமர்(ரழி) அவர்கள் ''நீர் புறப்படுவீராக! நிச்சயமாக ஜும்ஆவானது உமது பிரயாணத்தைத் தடை செய்யவில்லை என்றார்கள். (உமர்(ரழி) முஸ்னது ஷாஃபியீ)

    ஒரே தினத்தில் ஜும்ஆவும், பெருநாளும் அமைந்து விட்டால் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு, ஜும்ஆ தொழுகையைத் தொழாமலிருப்பது ஆகும்.

    இப்னு ஜுபைர்(ரழி) அவர்களின் காலத்தில் ஒரே தினத்தில் இரு பெருநாட்களும் ஜும்ஆவும் ஒரே தினத்தில் வந்துவிட்டன. அப்போது அவர்கள் பகற்பொழுது உயர்ந்து உச்சியை அடையும்வரை (தொழ வைக்கப்) புறப்படாதிருந்துவிட்டு, பிறகு புறப்பட்டுச் சென்று குத்பா - சொற்பொழிவு நிகழ்த்தியபின் கீழே இறங்கி தொழ வைத்தார்கள். அன்று அவர்கள் ஜும்ஆ தொழவைக்கவில்லை. இது பற்றி நான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ''இப்னுஜுபைர் அவர்கள் நபிவழிப்படியே முறையாக நடந்துள்ளார்கள்'' என்றார்கள். (வஹ்புபின்கைஸான்(ரழி) அபூதாவூத், நஸயீ)

    மேற்காணும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஜைதுபின் அர்க்கம்(ரழி) வாயிலாகவும், அபூஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும் அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்திலும் அறிவிப்பாளர்களில் கோளாறுகள் காணப்படுகின்றன. ஆகவே மேற்காணும் அறிவிப்பு ஒன்றே ஸஹீஹானதாக அமைந்திருப்பதோடு, பெருநாளும், ஜும்ஆவும் ஒரு தினத்தில் அமைந்து விட்டால் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு, அன்றைய ஜும்ஆ தொழுகையைத் தொழாமலிருப்பது மார்க்கத்தில் ஆகும் என்பதற்கு தக்க சான்றாகவும் விளங்குகிறது.

    கடமையான ஜும்ஆ தொழுகையின் ஸ்தானத்தில் பெருநாள் தொழுகையே போதும் என்றால் பெருநாள் தொழுகையும் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிகிறோம். ஆயினும் அது சுன்னத்தே அன்றி ஃபர்ளு அல்ல.

    ஜும்ஆவும், பெருநாளும் போது இரு தொழுகைகளையும் தனித்தனியாக ஒரே தினத்தில் தனித்தனியாக தொழுவது:

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவிலும், இருபெருநாட்களிலும் ''ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, ஹல்அதாக்க ஹதீஸில் காஷியஹ்'' ஆகிய சூராக்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் அமைந்து விட்டால் இவ்விரு சூராக்களையே அவ்விரு தொழுகைகளிலும் ஓதுவார்கள். (நுஃமானுபின் பஷீர்(ரழி) முஸ்லிம்)

    இவ்வறிவிப்பில் ஒரேதினத்தில் ஜும்ஆவும் பெருநாளும் ஒரே தினத்தில் அமைந்து போது இரு தொழுகைகளையும் நபி(ஸல்) அவர்கள் தனித்தனியாகத் தொழ வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே இப்னு ஜுபைர்(ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றிருப்பது போல் பெருநாள் தொழுகையை மட்டும் தொழுதுவிட்டு ஜும்ஆவைத் தொழாமலிருப்பதும் இரு தொழுகைகளையும் தனித்தனியாகத் தொழுவதும் நபி வழிதான் என்பதை அறிகிறோம்.


    உபரித் தொழுகைகள்

    உபரியான வணக்கங்கள்தான் மறுமையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும், அதன் மாண்பையும் அதைப் பேணுவதன் அவசியத்தையும் இதற்கு முந்திய அத்தியாயத்தில் பார்த்தோம் இனி உபரியான வணக்கங்களைக் நபிவழியில் காண்போம்.

    ''லுஹருக்குமுன் (இரண்டு இரண்டாக) நான்கு ரக்அத்துகள், லுஹருக்கு பின்பு இரண்டு ரக்அத்துகள் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு இரண்டு ரக்அத்துகள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துகள் ஆகிய (கடமையல்லாது உபரியான) பனிரெண்டு ரக்அத்துகள் தொழுபவர்களுக்கு சொர்க்கத்தில் மாளிகை கட்டப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஹபீபா, நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ.

    ''ஒவ்வொரு பாங்கு மற்றும் இகாமத்துக்கு இடையில் தொழுகை உண்டு. ''ஒவ்வொரு பாங்குக்கு மற்றும் இகாமத்துக்கு இடையில் தொழுகை உண்டு என்று இரண்டு முறை கூறி விட்டு மூன்றாவது முறையாக விரும்பியவர்கள் தொழலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    ''நான் நபி(ஸல்) அவர்களின் உபரித் தொழுகையைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்தில் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகளை தொழுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்கு சென்று மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்துவார்கள். தொழுகை முடிந்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். (அவ்வாறே) மக்ரிப் தொழவைக்காக பள்ளிவாசலுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். தொழுகை முடிந்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் பின்னர், இஷா தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்வார்கள் தொழுகை முடித்த பின்பு என் இல்லத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.

    மேலும், நபி(ஸல்) அவர்கள் இரவில் ஒன்பது ரக்அத்துகள் தொழுவார்கள். அவற்றில் வித்ரும் அடங்கும்.

    நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுகையை நீண்டநேரம் நின்றும், நீண்டநேரம் அமர்ந்தும் தொழுவார்கள் அவர்கள் (தொழுகையில்) நின்று ஓதுவார்களேயானால் நின்ற நிலையிலேயே ருகூவும், ஸுஜுதும் செய்வார்கள். அவர்கள் (தொழுகையில்) அமர்ந்த நிலையில் ஓதுவார்களேயானால் அமர்ந்த நிலையிலேயே ருகூவும், ஸுஜுதும் செய்வார்கள். மேலும் ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்' என அவர்கள் கூறினார்கள்'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்ன ஷகீக்(ரலி) நூல்: முஸ்லிம்

    மேற்கண்ட நபிமொழியிலிருந்து ஒவ்வொரு நாளும் தொழக்கூடிய உபரித் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நிலையை அறிந்தோம். உண்மையில் நாம் நபிவழியைப் பேணக்கூடியவர்களாக இருப்பின் இதைப் பேணி நடக்க வேண்டும். மேற்கண்ட உபரித் தொழுகையின் சிறப்புகளையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

    ''சுன்னத்தான தொழுகைகளில் ஃபஜ்ருக்கு முன்பு உள்ள சுன்னத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் அதிகமாகப் பேணுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    ''ஃபஜ்ருக்கு முன்பு உள்ள இரு ரக்அத்துகள் உலகம் மற்றும்அதில் இருப்பவை அனைத்தையும் விட மேலானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ மற்றும் நஸயீ.

    நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்பு உள்ள நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ருக்கு முன்பு உள்ள இரண்டு ரக்அத்துகளையும் தொழுவதை ஒருபோதும் விடமாட்டர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி.

    ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு உள்ள சுன்னத்தான இரண்டு ரக்அத்துகளை பேணக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

    ஃபஜ்ருடைய கடமையான தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது அதில் பங்கு கொள்ளாமல் முன் சுன்னத்தை மிகவும் அக்கரையுடன் தொழுது கொண்டிருப்பார்கள். பின்னர் ஜமாஅத் தொழுகையில் வந்து தாமதமாகக் கலந்து கொள்வார்கள். இது தவறான செயலாகும். நபி(ஸல்) அவர்களும் இதைக் கண்டித்துள்ளார்கள்.

    ''இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் தனித்து நின்று தொழுவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ஜமாஅத் தொழுகை முடிந்த பின்பு மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது, நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் ''சுப்ஹு தொழுகை நான்கு ரக்அத்களா?'' என்று (அவரை எச்சரிக்கும் முகமாகக்) கேட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    இகாமத் சொல்லப்பட்டு விட்டால் சுன்னத்தான தொழுகையை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தாமல் ஜமாஅத் தொழுகையில் உடனடியாகக் கலந்து கொள்ள வேண்டும். அந்த தொழுகையை 'ஃபஜ்ர்' ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னர் நிறைவேற்ற வேண்டும்.

    லுஹர் முன்பின் சுன்னத்துகள்

    ''நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன்னால் இரண்டு ரக்அத்தையும் லுஹருக்கு பின்னால் இரண்டு ரக்அத்தையும் தொழுதுள்ளேன்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, முஸ்லிம் மற்றும் திர்மிதி.

    ''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத்கள் தொழுதை விட்டதே இல்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, திர்மீதி.
    ''என்னுடைய இல்லத்தில் லுஹருக்கு முன் நான்கு ரக் அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். பின்னர் பள்ளிவாசல் சென்று கடமையான தொழுகையை மக்களுக்கு நடத்துவார்கள். அதை முடித்தப் பின்னர் வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்'' என ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்.

    ''லுஹருக்கு முன்பு சூரியன் உச்சத்திற்குப் பின்பு நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். இதைப் பற்றி அவர்கள் கூறுகையில்... 'நிச்சயமாக இந்நேரங்களில் தான் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. இந்நேரத்தில் என்னுடைய நற்செயல்கள் (இறைவனளவில்) கொண்டு செல்லப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்றார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு ஸாயிப்(ரலி) அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

    ''நபி(ஸல்)அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்'' என அலி(ரலி) அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

    அஸர் தொழுகையின் முன் சுன்னத்துகள்

    ''நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்துகள் சுன்னத்தான தொழுகையை நிறைவேற்றுவார்கள்'' என அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) நூல்: அபுதாவூத்

    ''அஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழுபவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: அபூதாவூத், திர்மிதி மற்றும் இப்னு ஹிப்பான்.

    ''நபி(ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்'' அலீ இப்னு அபூதாலிப்(ரலி) அறிவிக்கிறார். நூல்: திர்மிதி.

    மக்ரிப் தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

    ''மக்ரிப் தொழுகைக்கு முன்னால் நீங்கள் தொழுங்கள்' நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாவது முறை 'விரும்பியவர் தொழுது கொள்ளட்டும்' என்று கூறினார்கள். அதை அவசியமான சுன்னத்தாக மக்கள் எண்ணாமல் இருப்பதற்காகவே அவர்கள் இவ்வாறு கூறினார்கள்'' எனஅப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: புகாரி, அபூதாவூத்.

    ''நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவிக்கிறார். நூல்: இப்னு ஹிப்பான்.

    ''நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய மறைந்த பின்பு மக்ரிப் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துகள் நாங்கள் தொழுவோம். என்று அனஸ்(ரலி) கூறியபோது, 'அந்த இரண்டு ரக்அத்துக்களை நபி(ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்களா' என்று கேட்கப்பட்டது. அதற்கு, 'நாங்கள் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் அதை எங்களுக்கு (கட்டாயமாக) ஏவவுமில்லை தடுக்கவுமில்லை'' என அனஸ்(ரலி) பதிலளித்தார். நூல்: முஸ்லிம்

    ''நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.'" நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் மற்றும் திர்மிதி.

    மக்ரிப் தொழுகைக்கு முன் விரும்பியவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் மேற்கண்ட நபிமொழிகளின் வாயிலாக அறிகிறோம். ஆனால் இன்று பல பள்ளிவாசல்களில் மக்ரிப் பாங்கு சொன்னவுடம் ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுகிறது. விரும்பியவர் தொழுது கொள்ளட்டும் என்ற அடிப்படையில் இரண்டு இரக்அத் தொழுவதற்கான அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. இது நபிவழியை புறக்கனிக்கும் செயலாகும். மார்க்க அறிஞர்களும், ஜமாஅத் நிர்வாம்களும் இதை நன்றாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இஷா தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

    ''நபி(ஸல்) அவர்களுடன் இஷாவுக்கு பின் இரண்டு ரக்அத்கள் நான் தொழுதுள்ளேன்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம்

    ''நபி(ஸல்) அவர்களின் உபரித் தொழுகைகள் பற்றி கேட்கப்பட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்' என்று அன்னை ஆயிஷா(ரலி) கூறினார்'' என அப்துல்லாஹ் இப்னு ஷகீக் அறிவிக்கிறார். நூல்: திர்மிதி

    மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் இஷாவுக்கு பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.

    கடமையான இஷாத் தொழுகைக்கு முன்னுள்ள சுன்னத்தான தொழுகைகள் பற்றியோ ரக்அத்துகளின் எண்ணிக்கை பற்றியோ சரியான ஆதாரம் இல்லை. எனவே இஷாவுக்கு முன் நாம் விரும்பியவாறு தொழுது கொள்ளலாமோ என்ற ஒரு சந்தேகம் நமக்கு எழலாம். அதைப் போக்கும் விதமாக...

    ''ஓவ்வொரு பாங்குக்கு மற்றும் இகாமத்திற்கு இடையில் தொழுகை உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாவது முறையாக விரும்பியவர்கள் தொழுது கொள்ளட்டும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதை கவனத்தில் கொள்க. நூல்: புகாரி, முஸ்லிம்

    எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் இஷாவுக்கு முன்பு விரும்பியவர் தொழுது கொள்ளலாம் என்பதை அறிக!

    ஜும்ஆ தொழுகையின் முன் பின் சுன்னத்துகள்

    ''நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் வந்து (தொழாமல்யே) அமர்ந்துவிட்டார். எனவே நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி 'நீர் தொழுதுவிட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இல்லை' என்றார் (இதைக் கேட்டதும்) 'இரண்டு ரக்அத்து தொழுவீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம்

    ''நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஸலீகுல் கத்ஃபான் என்ற நபித்தோழர் பள்ளிவாயிலுக்குள் வந்து தொழாமல் உரை கேட்க அமர்ந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரைநோக்கி 'ஸலீகே! எழும் சுருக்கமான இரண்டு ரக்அத்து தொழுது கொள்ளும்!' என்று கூறினார்கள். பின்னர் 'உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்காக பள்ளிவாசலுக்கு வந்திருக்கும் நிலையில் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பினும் அவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

    உபரித் தொழுகைகளின் அட்டவணை

    எண் தொழுகை முன் சுன்னத்துகள் பின் சுன்னத்துகள்

    1. ஃபஜ்ர் 2 -
    2. லுஹர் 4 (அ) 2 2
    3. அஸர் 2 (அ) 4 -
    4. மக்ரிப் 2(விரும்பியவர்கள்) 2
    5. இஷா 2(விரும்பியவர்கள்) 2
    6. ஜும்ஆ 2 2(அ)4

    பள்ளியை விட வீட்டில் தொழுவதன் சிறப்பு

    உபரித் தொழுகைகளை வீட்டில் தொழுவதே மேலானது. கடமையல்லாத உபரித் தொழுகைகளை முடிந்தளவு வீட்டில் தொழ முயற்சிக்க வேண்டும். உண்மையில் அதுவே சிறப்பிற்குரியது.

    ''மக்களே! நீங்கள் உங்களுடைய இல்லங்களில் தொழுங்கள் ஏனெனில் கடமையான தொழுகைகள் தவிர ஏனைய தொழுகைகளை, தன் வீட்டிலேயே தொழுவதுதான் ஒரு மனிதன் தொழும் தொழுகைகளில் மிகச்சிறந்த தொழுகையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், நஸயீ, திர்மிதி மற்றும் இப்னுமாஜா

    ''உங்களுடைய தொழுகைகளில் (உபரியானதை) உங்கள் இல்லத்திற்கென ஆக்கிக் கொள்ளுங்கள்! அதை சமாதிகளாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம்

    ''உங்களில் எவர் தன் தொழுகைகயைப் பள்ளிவாசலில் நிறைவேற்று கின்றாரோ அவர் தன் தொழுகைகளில் இன்னொரு பகுதியை வீட்டில் தொழட்டும். அல்லாஹ் அவருடைய தொழுகையின் மூலமாக அவருடைய வீட்டில் நன்மையை ஏற்படுத்துவான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

    மனிதன் தன் வாழ்க்கையில் நன்மைகள் சேகரிப்பதற்கு உபரியான வணக்கங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. எனவே அவன் அவற்றைப் பேண வேண்டும். மேலும் அவற்றை பள்ளிவாசலில் தொழுவதை விட வீட்டில் தொழுவதற்கே முயற்சிக்க வேண்டும். ஏனெனில் வீட்டில் தொழுவதே மேன்மைமிக்கது. அதன் மூலமாக அல்லாஹ் அவருடைய இல்லத்தில் நன்மையை ஏற்படுத்துவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    உபரித் தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்தாகவே தொழ வேண்டும்.

    ''இரவிலும் பகலிலும் தொழும் (கடமையல்லாத) உபரித் தொழுகைகள் இரண்டு இரண்டாகத்தான் (தொழவேண்டும்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி மற்றும் இப்னுமாஜா.

    உபரித் தொழுகைகளை கடமையான தொழுகைகளைப் போல் நான்கு ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழாமல் இரண்டு இரண்டாகவே தொழ வேண்டும். இதுதான் கடமையான தொழுகைக்கும் சுன்னத்திற்கும் இடையிலான வித்தியாசமாகும். எனவே நாம் இம்முறைப்படியே அனுதினமும் தொழுது இறையருளைப் பெறவேண்டும் 

    தஹஜ்ஜுத் தொழுகை ஓர் ஆய்வு

    உபரியான வணக்கங்களில் ஒன்று தான் ''தஹ்ஜ்ஜுத்''யாகும். இதற்கு பின்னிரவுத் தொழுகை என்று பொருள்படும். இத்தொழுகை மற்ற உபரித் தொழுகையை விட ரக்அத்துகளின் எண்ணிக்கையிலும், நீண்டநேரம் நின்றுதொழுவதிலும் சிறப்புற அமைந்துள்ளது. மேலும் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கிகரிக்கப்படக் கூடிய நேரங்களில் ஒரு நேரமாக இரவுத்தொழுகையுள்ளது. மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழவேண்டுமெனில் இரவு தூக்ககத்தின் ஒரு பகுயீதயைத் தியாகம் செய்யவேண்டும் விழித்தொழுந்து இறைவனை தொழுதிட வேண்டும் இதனால் இறைவனே திருக்குர்ஆனில் இத்தொழுகையைப்பற்றி மாண்புகளை கூறி ஆர்வமுட்டுகிறான். ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக் (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

    போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக!
    அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிதுக் குறைத்துக் கொள்ளலாம்.
    அல்லது அதை விடச்சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக் மேலும் குர்ஆனைத்தெளிவாகவும் நிறுத்தி நிறுத்தியும் ஒதுவீராக: (73:1,2,3,4,)

    இரவுத் தொழுமாறு மேற்கண்ட வசனங்கள் மூலமாக தெளிவுப்படுத்தி அதன்பால் இறைவன் திருமறையில் ஆர்வமூட்டுகிறான். மேலும் பயபக்தி இறைநம்பிக்கையளர்களின் பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இரவில் உபரித் தொழுகையை தொழுவார்கள் என்கிறான்.

    நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள் அவற்றைப்பற்றி நினைவுட்டபப்பட்டால் அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவார்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருயைடிக்கவும் மாட்டார்கள்.

    அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:15,16)

    நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் (சுவர்க்கத்தின்) சோலைகளிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
    அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக்கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
    அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
    அவர்கள் விடியற்காலங்களில்(பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18)

    இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை கூறிய இறைவன் தஹஜ்ஜத் தொழுகையைதொழுவதின் மாண்புகளையும் நவின்றுள்ளான்.
    நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

    ஆரம்ப இரு வசனங்களில் தஹஜ்ஜத் தொழுகையை தொழுமாறு பெருமானார் (ஸல்) அவர்களை இதற்கு நற்கூலியாக ''மகாமே மஹ்மூத்''
    என்னும் புனித தலத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் எழுப்பப்படலாம் என்று அல்லாஹ் முன்னறிவிப்பு வழங்குகிறான். மேற்கண்ட இருவசனங்கள் நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்துவதால் நபி(ஸல்) அவர்கள்தான் தொழ வேண்டும் நாம் தொழ வேண்டிய அவசியமில்லைஎன்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக அடுத்துவரக் கூடிய வசனங்கள் கட்டளை என்ற அடிப்படையில் இல்லாமல் மூமின்கள்தங்களுடைய இறைத்தொண்டுகளில் ஒன்றாக தஹஜ்ஜத் எனும் இரவுத் தொழுகையை அனுதினமும் தொழுவார்கள் என்று கூறுகிறான்.

    சிறப்பு: நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையின்சிறப்புகளையும் அதை பேனுவதின் அவசியத்தையும் குறிப்பிட்டு அதை தொழுமாறு ஸஹபாக்களுக்கு ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

    ரமளானுக்கு பிறகு நோற்கபடக்கூடிய நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். மேலும் கடடமையான தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயி, அஹ்மத்.

    இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது

    நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன்.
    யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவுக் கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவுக் கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் இருந்தேன். ''இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்கு கொண்டு சென்றார்கள்.கிணற்றுக்கு சுற்று சுவர் எழுப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் (சுவர்) எழுப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்கு தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்று கூறினேன். அது சமயம் வேறு ஒரு வானவர் என்னை சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவுக் கண்டேன். இக்கனவை ஹஃபீஸா(ரலி) இடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களில் மிகவும் நல்லவர்'' என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை. அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

    கடமையான, தொழுகைகளுக்கு பிறகு சிறந்த (உபரியான) தொழுகை இரவுத்தொழுகை என்று சிலாஹித்த நபி(ஸல்) அவர்கள் இத்தொழுகை நேரத்தில் தான் இறைவன் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதாக முன்னறிவிப்பை நபி(ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

    அவசியம்

    மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

    நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும் ªப்ஹானல்லாஹ்! இந்த இரவில் தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளது? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பாத்திமா (ரலி) இல்லத்திற்கு வருகை தந்துபோது என்ன நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று வினவினார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி) நூல்: புகாரி

    உபரியான இரவுத் தொழுகையை தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் அவசியப்படுத்தினார்கள். அதற்காக தோழர்களின் இல்லங்களின் கதவை தட்டி எழுப்பியுள்ளார்கள்.

    அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள் பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கொள்வார்கள். அதனால் அவருடைய பாதங்கள் வீங்கிவிடும். அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். உமக்கு நான் முன்பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே என்று நான் வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்க கூடாதா என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    உபரித் தொழுகைகளில் மேன்மையான தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையை தொழுவதில் அதை பேணுவதில் இறைத்தூதர் தாவூத்(அலை) முன்மாதிரியாக திகழ்ந்ததை முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்கள். மேலும் பெருமானார்(ஸல்) அவர்களின் முன்பின் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டும் கூட அதற்கும் நன்றி செலுத்தும் விதமாக நபி(ஸல்) உபரியான இரவுத் தொழுகை தொழுதது நம்முடைய மேனி சிலிர்க்கிறது.

    ''தஹஜ்ஜுத்'' தொழுகை நேரம்

    தஹஜ்ஜுத் தொழுகை தொழுவதற்காக இரவின் அனைத்து நேரங்களையும் நாம் கையாள முடியாது மாறாக அத்தொழுகைக் கொன்று பிரத்தியேகமான நேரத்தை நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் வகுத்து தந்துள்ளார்கள். மஸ்ரூக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து செய்யும் அமல் என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'சேவல் கூவும் போது எழுவார்கள்' என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி

    மற்றொரு அறிவிப்பில் சேவல் கூவும் போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.

    நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள், பிறகு படுக்கைக்கு செல்வார்கள். அறிவிப்பவர்: அஸ்வத்(ரலி) நூல்: புகாரி
    (இரவின் ஆரம்ப நேரத்தில் தொழமுயன்ற) அபூதர்தா(ரலி) இடம் ''உறங்குவீராக! இரவின் கடைசிப்பகுதியில் எழுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ''ஸலமான் கூறுவது உண்மையே!'' என்று குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி

    உபரியான தஹஜ்ஜித் தொழுகை இரவின் பிற்பகுதியில் தான் தொழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

    தஹஜ்ஜுத் தொழுகை ரக்அத்தின் எண்ணிக்கை

    தஹஜ்ஜுத் தொழுகையின் மாண்புகளையும் அதன் அவசியங்களையும் விவரித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரக்அத்துகளின் எண்ணிக்கையும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதன் மூலமாக தஹஜ்ஜுத் தொழுகையை நம் இஷ்தத்திற்கேற்ப எத்தனை எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை நீக்கி அதற்கு ஒரு வரம்பை நிர்ணயித்து தொழுதுள்ளார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் ''இஷா தொழுகை''யிலிருந்து பதினோரு ''ரக்அத்து''கள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு மத்தியிலும் ஸலாம் சொல்வார்கள். ஒரு ''ரக்அத்வித்ரு'' தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    நான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ஏழு ரக்அத்துகள், (சிலசமயம்) ஒன்பது ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள் ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துகள் (ஸுன்னத்) ஆகியவை தொழுவார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக்(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்துகள் தொழுவார்கள் என்று மேற்கண்ட முதல் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. இரண்டாம் ஹதீஸில் ஏழு ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள், என்பது வித்ரு தொழுகையின் எண்ணிக்கையாகும். பதினோரு ரக்அத்துகள் என்பது தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கையாகும் என்பது தெளிவாகிறது.

    நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் அதில் உள்ளவை தான் வித்ரு மற்றும் ''ஃபஜ்ரின்'' இரண்டு (சுன்னத்தான) ரக்அத்துகள் அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் அபூதாவூத், நஸயீ, தாரமி

    ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாக தொழுவது கிடையாது.
    நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    உபரியான இரவுத்தொழுகையில் எண்ணிக்கையை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது. ஆனால் உபரித் தொழுகையின் ஆர்வலர்கள் ''தஹஜ்ஜுத் தொழுகையை தொழுகிறோம் என்ற பெயரில் ரக்அத்துகளின் வரம்பை மீறாமல் இரவெல்லாம் தொழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு முன்மாதிரியாக பெரியார்கள், நல்லடியார்களின் சரித்திரத்தை முன்னிலைப்படுத்துவார்கள். ஆனால் இச்சரித்திரங்கள் மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்திற்கு நேர் மாற்றமாக அமைந்துள்ளதை நிதர்சனமாக காண்கிறோம்.

    ''தஹஜ்ஜுத்'' தொழுகை இரண்டிரண்டாக தொழுதல்.

    ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை தொழும் விதம் யாது? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ரு தொழுவீராக என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி,

    நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகளைக் கொண்டு ஆரம்பிப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்

    கடமையான தொழுகையைப் பொருத்தவரை அதனுடைய எண்ணிக்கை அடிப்படையின் தொழவேண்டும். ஆனால் உபரித் தொழுகையை பொறுத்தவரை இரண்டிரண்டாக தான் தொழவேண்டும். இதுதான் கடமைக்கும், உபரிக்கும் மத்தியில் வித்தியாசமாகும். இதே அடிப்படையில் தஹஜ்ஜுத் தொழுகை தொழவேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது.

    ''தஹஜ்ஜுத் தொழுகையை நீட்டித் தொழலாம்.

    நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையில் சிறந்தது எது? என்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நீண்ட நேரம் நின்று தொழுவது'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

    நான் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன் நான் தவறான முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று நான் கேட்டேன் அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன் என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூவாயில்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாக தொழுததில்லை நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீர் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் நீர் கேட்காதீர். பின்னர் மூன்று ரக்அத்துகள் (வித்ரு) தொழுவார் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி) நூல்: புகாரி

    நான் நபி(ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தொழுதேன் அவர்க்ள (தொழுகையில்) ஸுரத்துல பகராவை ஆரம்பித்து 100வது வசனத்தில் ருகூவு செய்வார்கள் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். பிறகு தொடர்ந்தார்கள். நான் முன்பு போலவே எனக்கு நானே கூறிக்கொண்டேன். பிறகு ஸுரத்துன்நிஸாவை ஆரம்பித்தார்கள். அதை ஒதிக் கொண்டே இருந்தார்கள். பிறகு ஆல இம்ரானை ஸுராவை ஆரம்பித்தார்கள். தொழுகையில் தஸ்பீஹ் என்ற வசனத்தை கடந்தால் தஸ்பீஹ் கூறுவார்கள். கேள்வி தோரணையில் உள்ள ஒரு வசனம் கடந்தால் கேள்வி தொடுப்பார்கள். பிறகு ருகூவு செய்வார்கள் அதில் ''ஸுப்ஹான ரப்பியல் அழீம்'' என்று கூறுவார்கள் எவ்வாறு நீண்ட நேரம் நின்று தொழுதார்களோ அவ்வாறே நீண்ட நேரம் ருகூவு செய்வார்கள். பிறகு ருகூவிலிருந்து எழுந்ததும் அவ்வாறே நீண்டநேரம் நிற்பார்கள். மேலும் ஸஜ்தா செய்யும் போதும் நீண்ட நேரம் அவ்வாறே ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

    நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐந்து வசனங்கள் ஓதக்கூடிய நேரம் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    உபரித் தொழுகைகளில் சிறந்த தொழுகை தஹஜ்ஜுத் தெரிந்து கொண்டோம் மேலும் நீண்ட நேரம் நின்று தொழுவதும் சிறந்த தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் சிலாஹித்து கூறியுள்ளார்கள்.

    நீண்ட நேரம் நின்று தொழும் விதத்தையும் நபி(ஸல்) அவர்கள் செயல்முறை மூலமாக காட்டியுள்ளார்கள். எந்த அளவுக்கெனில் அதன் நீளத்தையும், அழகையும் வார்த்தைகளில் வழங்க இயலாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள். நின்று தொழுகிற போது பெரிய ஸுராக்களை ஓதக் கூடியவர்களாகவும் அதற்கு இணையாக நீண்ட நேரம் ருகூவும், ஸுஜுதும் செய்வார்கள். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் இதற்கு (நீண்ட நேரம் நின்று தொழுவது) சிறந்த தொழுகையாக நவின்றுள்ளார்கள்.

    தஹஜ்ஜுத்தில் சில சிறப்பு அம்சங்களை கடைபிடிக்க!

    பிரார்த்தனை

    தஹஜ்ஜுத் தொழுகைக்கென சில விசேஷச பிரார்த்தனைகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அத்துவாக்களை மனனம் செய்து இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும்.

    இரவில் எழுந்ததும் ஓதவேண்டிய பிரார்த்தனை

    ''யார் இரவில் விழித்து''
    ''லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு
    வல்ஹுல்ஹம்து வஹீவஅலாகுல்லி ஷய்யின்கதீர் அல்ஹம்து
    லில்லாஹி வஸுப்ஹானல்லாஹு வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு
    அக்பர் வலா ஹவுலாவலாகுவ்வத இல்லாபில்லாஹ் 
    என்று பிரார்த்தித்த பிறகு அல்லாஹும்மக்ஃபிர்லி என்றோ வேறு பிரார்த்தனைகளோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: உபாதாபின்ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி

    பொருள்:
    வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை; அவன் ஏகன் அவனுக்கு நிகரானவர், இல்லை ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்து பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அவன் தூயவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்து விடு என்றோ அல்லது வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும்.

    இரண்டாம் பிரார்த்தனை:

    நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்)
    அல்லாஹும்மலகல்ஹம்து அன்த கய்யிமுஸ்ஸமாவாதி
    வல்அர்லி வமன்ஃபீஹுன்ன வலகல்ஹம்து லக முல்குஸ்ஸமாவாத்வல் அர்ளி
    வமன்ஃபியின்ன வலகல்ஹம்து அன்த நூருஸ்ஸமாவாதி வல் அர்ளி
    வலகல் ஹம்து அன்த முல்கு ஸ்ஸமாவாதி வல்அர்ளி. வலகல் ஹம்து அன்தல்
    ஹக்கு வவஅதுகல்
    ஹக்கு வலிகாவுக ஹக்கு வகவுலுகஹக்கு வல்ஜன்னது ஹக்கு வந்நாரு ஹக்கு வந்நபிய்யூஹக்கு வமுஹம்மது ஸல்லல்லாஹு
    அலைஹிவஸல்லம் ஹக்கு வஸ்ஸாஅது ஹக்கு அல்லாஹும்ம
    லகஅஸ்லமது வபிக ஆமனது வஅலைக தவக்கல்து
    வயிலைக அனப்து வபிக காஸம்து வலைக ஹாகம்து
    ஃபக்ஃபிர்லி மாகத்தம்து வமாஅக்கரது வமாஅஸ்ரர்து
    வமா அஃலன்து அன்தல்முகத்திமு வஅன்தல் முஅக்கிரு
    லாயிலாஹ இல்ல அன்த (என்றோ அல்லது லாயிலாஹா கைருக என்றோ கூறலாம்)

    பொருள்:
    இறைவா! உனக்கே புகழ் அனைத்தும், வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமி அவற்றில் உள்ளவைகளின் உரிமை உனக்காக உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் நீ உண்மையானவன், உன் வாக்குறுதி உண்மை, உனது சந்திப்பு உண்மை உனது கூற்று உண்மை, சொர்க்கம் உண்மை, நரகம் உண்மை நபிமார்கள் உண்மை, முஹம்மது உண்மையானவர்கள் மறுமை நாள் உண்மை, இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீதே உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன் உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்த பம்ரங்கமாக செய்த, இரகசியமாக செய்த பாவங்களை மன்னித்து விடு நீயே (சிலரை) முற்படுத்துபவன் (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    மூன்றாம் பிரார்த்தனை

    நபி(ஸல்) அவர்கள் இரவில் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தை தடவித் தூக்கக்கலத்தை போக்கினார்கள். பின் ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்கள் (3:191லிருந்து 200 வரை) ஓதினார்கள். பிறகு எழுந்து பழைய தோல்பையிலிருந்து (தண்ணீர் எடுத்து உளூ செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    நான்காம் பிராத்தனை

    நான் அன்னை ஆயிஷா(ரலி) அவக்ளிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைகளின் துவக்கத்தில் என்ன ஓதுவார்கள்? என்று வினவினேன். அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய இரவுத் தொழுகையின் துவக்கத்தில்.
    அல்லாஹும்ம ரப்ப ஜீப்ரயீல வமீகாயீல வ இஸ்ராஃபீல ஃபதிரஸ்
    ஸமாவாதி வல்அர்ளி ஆலிமுல் கைபி வஷ்ஷஹாததி, அன்த
    தஹ்குமு பைன இபாததிக ஃபிம கானு ஃபீஹி யக்தலிஃபூன்
    இஹ்தினி லமக் துலிஃப ஃபிஹு மினல்ஹக்கு பிஇஸ்னிக இன்னக தஹ்தி மன் தஷாவு இலா ªராதின் முஸ்தஜீம்.
    மேற்கண்ட துவாவை ஓதுவார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின்அவுஃபு நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ-இப்னுமாஜா

    பொருள்:
    இறைவா! ஜிப்ரயீல், மீகாயில், இஸ்ராஃபீல் -யின் இறைவனே வானங்களையும் பூமியை படைத்தவன், மறைவான, வெளிப்படையான விஷயங்களை அறியக் கூடியவன், உம்முடைய அடியார்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டியிருக்கிறார்களோ அவ்விஷயத்தில் நீ தீர்ப்பவனாக இருக்கிறாய்! அவர்கள் (அடியார்கள்) சத்தியத்திலிருந்து எதில் கருத்து வேறுபாடு கொண்டேயிருக்கிறார்களே அவ்விஷயத்தில் உம்முடைய அனுமதின் மூலமாக நீ அவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! நிச்சயமாக நீ நாடியவர்களுக்கு நேரான வழியின் பக்கம் செலுத்த கூடியவராக இருக்கிறாய்!

    உபரியான இரவுத் தொழுகைகளை தொழுவதற்கு முன்னால் எழுந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் நான்கு பிராத்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவைகளில் முதல் பிராத்தனையைப் பற்றி கூறும் போது அது இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள். இரண்டாம் மூன்றாம் பிராத்தனைகள் நீண்ட பிரார்த்தனையாகவும் நபி(ஸல்) அவர்கள் பிராத்தித்துள்ளார்கள். மேலும் ஆல இம்ரானின் (191லிருந்து 200வரை) கடைசி பத்துவசனங்களையும் ஓதியுள்ளார்கள். அந்த பத்து வசனங்களும் பிரர்த்தனை வடிவில் அமைந்துள்ளது. இவை மூன்ற பிரார்த்தனைகளையோ அல்லது மூன்றில் ஒன்றை மனனம் செய்து அதை ஒவ்வொரு நாளும் பேணி இறைவனுடைய அருளை பெற முயற்சிக்க வேண்டும்.

    இரவுத்தொழுகை முடிந்ததும் வலப்பக்கம் சாய்தல்

    நபி(ஸல்) அவர்கள் இரவு தொழுகை முடிக்கையில் ஃபஜ்ரு தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லி முடிந்துவிட்டால் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் முஅத்தின் இகாமத் சொல்லும் வரை வலப்புறமாக சாய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ªன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    உபரியான தஹஜ்ஜுத் தொழுகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இரவுத் தொழுகையை முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் சிறிதுநேரம் வலதுபக்கமாக சாய்வதை பிரியமாக்கி கொண்டுள்ளார்கள். இதற்கென தனியான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. மாறாக விருப்பமான அடிப்படையில் வலது பக்கமாக சிறிதுநேரம் சாய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளர்கள். நேரமும், சந்தர்ப்பமும் நமக்கு எட்டுமானால் நாமும் அவ்வாறே சிறிது நேரம் வலது பக்கம் சாய்ந்து படுத்துக்கொள்ளலாம்.

    தஹஜ்ஜுத் தொழுகை தவறினால் பகலில் தொழலாமா?

    மற்ற உபரித் தொழுகைகளுக்கு இல்லாத சிறப்பு இத்தொழுகையில் அமைந்துள்ளது. அதாவது இரவில் ''தஹஜ்ஜுத்'' நோய் போன்ற காரணங்களால் தொழமுடியாமல் போனால் அதை பகலில் நிறைவேற்றலாம் என்றும் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் நோயின் காரணமாக அல்லது வேறு காரணமாகவோ இரவில் தொழுகை இழந்து விட்டால் பகலில் 12 ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ

    உபரித் தொழுகைகளில் பேணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழ முடியாமல் போனதால் பகலில் தொழுதுள்ளார்கள். மாறாக இதை கட்டாயம் என்று வாதிட முடியாது. சிலர் அப்படிப்பட்ட வாதத்தை எடுத்துவைக்கின்றனர். ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் ''வித்ரு'' ரக்அத்களின் எண்ணிக்கையை நாம் ஆராய்ந்தோமானால் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் ரக்அத்துகள் அமைந்திருப்பதை காணலாம். ''தஹஜ்ஜுத்'' எனும் 8 ரக்அத்துகளை தொழுதுவிட்டு 1அல்லது 3 ரக்அத்கள் தொழலாமே தவிர 5,7,9 என்ற எண்ணிக்கையில் ''தஹஜ்ஜுத்''துடன் வித்ரை தொழுதுவிட்டு. எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில வேளை வித்ரு மட்டும் தொழுதுள்ளார்கள். சில வேளை ''தஹஜ்ஜு''தை தொழுது குறைந்த எண்ணிக்கை(3)யில் வித்ரை தொழுதுள்ளார்கள். அதற்கு மேற்படி அவர்கள் தொழுதது கிடையாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் சான்றாக இருக்கிறது. இதன்மூலமாக ''தஹஜ்ஜுத்'' தொழுகை கட்டாயம் என்று இல்லாமல் பகலிலும் தொழுதுள்ளார்கள். மேலும் ஆதாரங்கள் பின்னால் தெளிவாகிறது.

    ''தஹஜ்ஜுத்'' தொழுகையில் கவனம் தேவை

    ''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்பை அறிந்தவர்கள் அதை தினந்தோறும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சிலர் சில வேளை உடல் பலகீனமாகயிருந்தும் மிகவும் கஷ்டத்தோட அதை நிறைவேற்றுகிறார்கள். மேலும கடும் உழைப்பின் காரணமாகவோ, அல்லது இரவு விழித்ததின் காரணமாகவோ, கடுமையான தூக்கம் இருக்கும், தினந்தோறும் ''தஹஜ்ஜுத்'' தொழுகை தொழுவதில் வழக்கமுடியவர்கள் அன்றும் நிறைவேற்றியதாக வேண்டும் எனும் லட்சியத்தில் அரைத்தூக்கத்தில் உளூச் செய்து ''தஹஜ்ஜுத்'' தொழுகையை நிறைவேற்றுவார்கள். இதனால் எத்தனை ரக்அத்துகள் தொழுதார், எதை ஓதினார், என்ன பிராதித்தார் என்பதை அவர் அறியமுடியாமல் போய் விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட சமயங்களில் (''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழாமல் அதை பகலில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிறைவேற்றுவது போன்று பகலில் நிறைவேற்றலாம்) நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு தொழுவதை தடுத்திருக்கிறார்கள்.

    ''உங்களில் எவராவது தொழுது கொண்டிருக்கும் போது கண் அயர்ந்து விடுவாரானால் அவரை விட்டும் தூக்கம் நீங்குகிறவரை தூங்கிவிடட்டும ஏனெனில் சிற்றுரக்கம் ஏற்பட்டுயிருந்தும் தொழுவாரேயானால் அவர் (இறைவனிடம்) பாவமன்னிப்பு கோருகிறாரோ அல்லது தன்னை பழிக்கிறாரோ என்பது எவருக்கு தெரியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    உங்களில் ஒருவர் தொழுகையில் கண் அயர்ந்து விடுவோரானால் தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறிவது வரை தூங்கி விடட்டும். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ தொழவில்லை. அறிவிப்பவர்: ஜுன்துப்(ரலி) நூல்:புகாரி

    சிலர் உபரியான ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டுமென்பதற்காக அதை மக்கள் கட்டாயம் தொழவேண்டும் என்பதற்காக பெரியார்களின், நல்லடியார்களின் உவமைகளை முன் வைக்கிறார்கள், ஆனால் அவர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்மாதிரி இல்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையே நமக்கு முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுகை விஷயத்தில் நடந்துக் கொண்டார்களோ அவ்வாறு தான் நடக்க வேண்டும். எனவே அதிக தூக்கம் அல்லது நோய் போன்ற நேரங்களில் முடிந்தளவு விட்டுவிட்டு நல்ல நிலையில் ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டும். இதற்கு மேற்கண்ட பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸே நமக்கு சான்றாக திகழ்கிறது.

    ''தஹஜ்ஜுத்'' தொழுகைக்காக எழும் போது பல் துலக்குதல்:-

    ''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக பல் துலக்குவதும் இதனுடைய சிறப்பம்சமாக இருக்கிறது. பொதுவாக தொழுகைக்காக உளூ செய்வார்கள். ஆனால் உளூவில் பல் துலக்குவதை நபி(ஸல்) அவர்கள் அவசியமாக்கவில்லை. ஆனால் இச்சிறப்புக்குரிற தொழுகையில் சிறப்பம்சமாக பல் துலக்குவதையும் அவசியமாக்கியிருக்கிறார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக இரவில் எழும் போது பல் துலக்குவார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) நூல்: புகாரி

    நம்முடைய உடலில் ஆகாரம் புகுவதற்கு எந்திரமாக திகழக்கூடிய வாயை(பல்லை) எப்போழுதும் சுத்தமாக வைத்து கொள்ளலாம் நலம் என்பதை நபி(ஸல்) அவர்கள் செயல்மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

    ''தஹஜ்ஜுத்'' தொழுவதை வழக்கமாக்கி கொள்ளுதல்

    நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல நீர் ஆகிவிடாதீர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்: புகாரி

    ''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்புகளை அறிந்துக் கொண்டோர். அதை தொழ வேண்டும் என்று விரும்ப ஆரம்பத்தில் ஆர்வமாக துடிப்பாக தொழுவார்கள் சில நாட்கள் பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு ''தஹஜ்ஜுத்'' தொழுகை என்பதையே மறந்து விடுவார்கள். இதுதான் முஸ்லிம்களின் யதார்த்த நிலையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு நம்மிடம் இருக்க கூடாது. இப்படிப்பட்ட அலட்சியப் போக்கு நம்மிடம் இருக்க கூடாது என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அவரின் செயலை பாராட்டி எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை அனுதினமும் பேணுவீராக என்று உபதேசித்துள்ளார்கள்.

    ''தஹஜ்ஜுத்'' தொழுகையின் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முழு ஆய்வையும் தெரிந்துக் கொண்டோம்; எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழுது இறைவனுடைய அருளை பெறுவோமாக!

    பிற்காலத்தவரால் ''தராவீஹ்'' என்றழைக்கப்படும் ரமழான் இரவுத் தொழுகை

    நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகை விஷயமாக (மக்களுக்கு அதை வலியுறுத்திக் கட்டளையிடாமல் ''ரமழானில் ஈமானோடும், நன்மைகிட்டும் வணக்கம் புரிவோரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். (ரமழான் இரவுத் தொழுகை தினசரி ஜமாஅத்தாக - பலரும் சேர்ந்து தொழாமலிருக்கும்) இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். பின்னர் அபூபக்கரு(ரழி) அவர்கள் ஆட்சிகாலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தின் ஆரம்ப இடத்திலும் நிலமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான ''இமாம் ஜுஹ்ரீ'' அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    ரமழான் இரவுத் தொழுகை சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?

    ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் நடு நிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்து விடவே (மறுநாள்) அவர்களை விட அதிகமானோர் கூடி விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி அவர்களும் தொழுதார்கள். காலையில் (முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
    நான்காம் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள், (இரவுத் தொழுகைக்கு வரவில்லை) சுப்ஹு தொழுகை தொழ வைத்து முடித்தவுடன் (எப்போதும் தமது சொற்பொழிவுக்கு முன் ஓதக் கூடிய) ''தஷஹ்ஹுது, அம்மா பஃது'' ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அவற்றை நீங்கள் தொழ இயலாது போய் விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்து விட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. (ஆயிஷா (ரழி), புகாரீ)

    மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான் இரவுத் தொழுகையின் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாஅத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

    நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை.

    அபூஸலமத்திப்னு அப்திர்ரஹ்மான்(ரழி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு ''ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரகாஅத்துகளை விட அதிகமாக அறவே தொழுததில்லை'' என்று கூறிவிட்டு, (முதலில்) 4 ரகாஅத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் (என்னிடம்) கேட்காதீர் (என்னால் அவற்றை எடுத்தியம்ப இயலாது, அவ்வளவு நிறைவாகம்ருந்தன) பிறகு 4 ரகாஅத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர் (அவ்வளவு நிறைவாகயிருந்தன) பிறகு 3ரகாஅத்துகள் தொழுதார்கள் என்று கூறினார்கள். (அபூஸலமத்துப்னு அப்திர் ரஹ்மான்(ரழி) புகாரீ)

    நபி(ஸல்) அவர்கள் ரமழான் நடு இரவில் 8+ 3 பதினொன்று என்ற அமைப்பில் தான் தொழ வைத்துமுள்ளார்கள்.

    ''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ரமழானில் ஓரிரவு 8 ரகாஅத்துகளுக்கு வித்ரும் தொழ வைத்தார்கள். மறு நாள் நாங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதிகாலை வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்(உபரியான) வித்ரு தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விட்டு என்பதைப் பயந்து (இருந்து) விட்டேன் என்றார்கள். (ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரழி) இப்னு குஜைமா)

    ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்ட போது, ''ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை'' என்றுஅவர்கள் பதில் அளித்திருப்பதால் மூலம், ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், வழக்கமாக - தினசரி தொழுது கொண்டிருந்த 8+ 3 பதினொரு ரகாஅத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    ரமழான் இரவுத் தொழுகை பதினொரு ரகாஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம்

    ஒருமுறை உபையுப்னுகஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமழானின் இரவில் நான் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர் உபையு அவர்களே! அது என்ன? என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன் (அதிகமாக) ஓத இயலாதவர்கள் ஆகையால் (நீர் எங்களுக்கு தொழ வைத்தால்) உமது தொழுகையைப் பின்பற்றி நாங்களும் தொழுது கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8 ரகாஅத்துகள் தொழ வைத்துவிட்டு, பிறகு வித்ரும் தொழ வைத்தேன் என்றார். அதற்கு அவர்கள் ஏதும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மௌனமானது அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகிவிட்டது.
    (ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அபூயஃலா, தப்ரானீ)

    உமர்(ரழி) அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி ரகாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்

    ''நான் ரமழானில் ஓரிரவு உமர்(ரழி) அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக இருந்து கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுது கொண்டிருந்தார்கள். அதுசமயம் உமர்(ரழி) அவர்கள இம்மக்கள் அனைவரையும் ஒரே இமாமுக்குப்பின் தொழும்படி செய்தால் மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையுபின்கஃபு(ரழி) அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தார்கள்.

    பிறகு மற்றொரு இரவு அவர்களுடன் புறப்பட்டு வந்தேன், மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு, ''புதிய இவ்வேற்பாடு மிகச்சிறப்பாயுள்ளது'' என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, ''இவர்கள் நின்று தொழுது கொண்டிருக்கும் இந்நேரத்தைவிட, இவர்கள் (தொழுதுவிட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு) மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர்.

    (அப்துர்ரஹ்மான் (ரழி) புகாரீ) மற்றொரு அறிவிப்பில் உபையுபின் கஃபு(ரழி) அவர்களையும், தமீமுமுத்தாரீ(ரழி) அவர்களையும் உமர்(ரழி) அவர்கள் 11 ரகாஅத்துகள் தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள் என்று . (ஸாயுபுபின்யஜீத்(ரழி) முஅத்தா மாலிக்)

    இத்தொழுகையை இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதிகளாகிய அனைத்துப் பகுதியிலும் தொழுதல்
    ''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ரமழான்) நோன்பு நோற்றோம், ரமழானில் 7 நாட்கள் மீதமிருக்கும் வரை (22 நாட்கள் வரை) எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. அதற்குப் பிறகு (23-வது நாள்) இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை (சுமார் இரவு 10 மணி வரை எங்களுக்கு தொழ வைத்தார்கள்.

    பிறகு 24-வது நாள் தொழ வைக்கவில்லை. பிறகு 25-வது நாள் இரவில் பாதிவரை (சுமார் 12மணி வரை) தொழவைத்தார்கள். பிறகு ரமழானில் மூன்று நாள் மீதமிருக்கும் வரை அவர்கள் தொழ வைக்கவில்லை. 27-வது நாள் ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4 மணி வரை) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகைக்கு தமது மனைவிமார்களையும், குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டார்கள். (ஹதீஸ் சுருக்கம், அபூதர்ரு(ரழி) திர்மிதீ)

    மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத்தான் பலநேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்று நோக்கும் போது இஷா தொழுகைக்குப் பின் ஸஹர் நேரம் முடிய - சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால் வரை தொழப்படும் தொழுகை தான் அது என்பது புலனாகிறது.

    இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் - இரவுத் தொழுகை, தஹஜ்ஜுது, வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. ''தான் தொழுகை'' என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் தாமாக அதிகப்படுத்தி தொழப்படும் 20 ரகாஅத்வுத் தொழுகைக்கு மக்கள் தாமாக சூட்டிக் கொண்டதோர் பெயராகும்.

    ''வித்ரு'' என்பது இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்று தான் என்பதற்குச் சான்று.

    ''நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ரு முன்பு வரை) வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    மேலும் ஜாபிருபின் அல்லாஹ்(ரழி) அவர்களின் வாயிலாக ''இப்னுகுஜைமா''வில் பதிவாகியள்ள இதே தொடரில் மேற்கண்ட அறிவிப்பில் ''நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) ''வித்ரு தொழுகை'' உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடும் என்று பயந்து இருந்து விட்டேன் என்றார்கள்'' என்ற வாசகமே நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை ''வித்ரு'' என்று கூறியிருப்பதன் ''வித்ரு'' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொரு பெயர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது பொதுவாக இஷாவுக்குப் பிறகு தொழக்கூடிய இரவுத்தொழுகை ஒற்றைப் படையாகத் தொழ வேண்டியிருப்பதால் அதை ''வித்ரு'' என்று அழைக்கப்படுகிறது.

    ரமழான் இரவுத் தொழுகை 20 ரகாஅத்துகள் என்று காணப்படும் அறிவிப்புகளின் நிலை

    நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாஅத்து அன்றி 20 ரகாஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) பைஹகீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ''இப்ராஹீம் பின் சுலைமான்'' என்பவர் மிகவும் பலமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷுஃபா அவர்களும், நம்பக மற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன், புகாரீ, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாரகுத்னீ ஆகியோரும், ஹதீஸ்களினால் புறக்கணிக்கப்பட்டனர் என்று திர்மிதி, அபூதாலிப் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.

    உமர்(ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகாஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள். (யஜீதுபின் ரூமான், பைஹகீ)

    இதன் முதல் அறிவிப்பாளரான யஜீது பின்ரூமான்'' என்பவர் உமர்(ரழி) அவர்களின் காலத்தவர் அல்லாதவர் என்று இமாம் பைஹகீ அவர்களை விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு ஒருவர் காலத்தில் வாழ்ந்திராத அவர் அக்காலத்தவரின் நடைமுறை பற்றி எடுத்துக்கூறுவதை எவ்வளவு ஏற்கமுடியும்? ஆகவே இந்த அடிப்படையில் இவ்வறிவிப்பு கோளாறுடைதாயிருப்பதால் ஏற்புக்குரியதல்ல.

    அலி(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகாஅத்துகள் தொழ வைக்கும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். (அபுல்ஹஸனாஃ, பைஹகீ, இப்னு அபீஷைபா)

    இதன் அறிவிப்பாளராகிய ''அபுல்ஹஸனாஃ'' என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் தமது ''தக்ரீபு'' எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது ஏற்புக்குரியதல்ல.

    ''ஒரு முறை அலி(ரழி) அவர்கள் ரமழானில், குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகாஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி(ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அபூ அப்திர்ரஹ்மானிஸ்ஸில்மீ, பைஹகீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ''ஹம்மாதுபின்ஷுஜபு'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இப்னு முயீன், நஸயீ ஆகியோர் பலகீனமானவர் என்கிறார்கள். இமாம் புகாரீ அவர்கள் இவர் பிரச்சனைக்குரியவர் என்றும், இப்னு அதீ அவர்கள் இவருடைய பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்லவென்றும் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது முறையான அறிவிப்பல்ல.

    உமர்(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகாஅத்துகள் தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள். (யஹ்யப்னுஸயீத் இப்னு அபீஷைபா)

    இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள ''யாஹ்யா பின் ஸயீத்'' என்பவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் உள்ளவரல்லர். ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவு காணப்படுவதால் இதுவும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.

    உபையுமின் கஃபு (ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகாஅத்துகள் தொழ வைத்துவிட்டு, 3 ரகாஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அப்துல் அஜீஸ்பின் ரஃபீஉ, இப்னு அபீஷைபா)

    இதன் அறிவிப்பாளராகிய ''அப்துல் அஜீஸ்பின் ரஃபீஉ'' என்பவர் உபையுபின் காலத்தில் உள்ளவர் அல்லர். ஆகவே இவ்வறிவிப்புத் தொடரில் முறிவு ஏற்பட்டு ஏற்புத்தன்மையை இழந்திருப்பதோடு, உபையபின் கஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தாம் தமது குடும்பத்தாருக்கு 8 ரகாஅத்துகளும் வித்ரும் தொழவைத்தாக எடுத்துக் கூறப்பட்ட அறிவிப்பும், உமர்(ரழி) அவர்கள் உபையுபின்கஃபு(ரழி) தமீமுமுத்தாரீ(ரழி) ஆகியோருக்கு 11 ரகாஅத்துகள் தொழ வைக்குபடி கட்டளையிட்ட அறிவிப்பும் மிக பலம் வாய்ந்தவையாயிருக்கும் போது அவற்றுக்கு முரண்பட்டதாகவுமிருக்கிறது.

    இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்கள் 20 ரகாஅத்துகள் தொழுதுவிட்டு, 3 ரகாஅத்துகள் வித்ருதொழுவார்கள். (அஃமஷ்,கிதாபு கியாமில்லைல்)

    இதன் அறிவிப்பாளராகிய ''அஃமஷ்'' என்பவர் இப்னுமஸ்ஊத்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராவார். ஆகவே இதும் ஏற்புக்குரியதல்ல.

    நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகாஅத்துகளும், வித்ரும் தொழுதோம். (ஸாயிபுபின்யஜீத், பைஹகீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ''அபூஉஸ்மான் அப்தில்லாஹ்'' என்பவர் ஹதீஸ்கலைக்கு அறிமுகமற்றவராயிருப்பதோடு, மேலும் இதே தொடரில் ''அதுதாஹிரில்ஃபகீஹ்'' எனும் ''பைஹகீதாஹிரீல்ஃ பகீஹ்'' எனும் பைஹகீ அவர்களின் ஆசிரியர் இடம் பெற்றுள்ளார். இவரை எவரும் நம்பகமானவர் என்று எடுத்துக் கூறியதில்லை.

    மேலும் இதே ''ஸாயிபுபின்யஜீத் என்பவர் ''நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 11ரகாஅத்துகள் தொழுது கொண்டிருந்தோம்'' என்று அறிவித்துள்ள அறிவிப்பு ''சுனனு ஸயீதிப்னிசூர்'' எனும் நூலில் காணப்படுகிறது. இவ்வறிவிப்பு மிகவும் வாய்ந்த ஸஹீஹான அறிவிப்பு என்று ''அல்மஸாபீஹ் ஸலாத்திந்தராவீஹ்'' எனும் நூலில் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவ்வாறே ''உமர்(ரழி) அவர் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகாஅத்துகள் தொழுதுகொண்டிருந்தார்கள்'' என்ற ஓர் அறிவிப்பு பைஹகீயில் காணப்படுகின்றன. இதன் அறிவிப்பாளரான ''அபூதில்லாஹ்பின் ஃபன்ஜ வைஹீனூரி'' என்பவர் ஹதீஸ்கலை அறிமுகமில்லாதவராயுள்ளார் ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.

    மேற்கண்டவாறு 20 ரகாஅத்துகள் என்ற வகையில் ஆதரமற்ற அறிவிப்புகள் பல காணப்படுவதிலும், அவை அனைத்தும் அதர்கள் சஹாபாக்களின் சொற்செயல்கள் தான். நமக்கு 8 + 3 பதினொரு ரகாஅத்துகள் என்பதற்கு மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்களின் சொல்லும் செயலும், அங்கீகாரமும் அசைக்க முடியாத ஸஹீஹான ஆதாரங்களாயிருப்பதால் ரமழானுடைய இரவுத் தொழுகை 8 ழூழூ 3 பதினொரு ரகாஅத்துகள் தான் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.

    எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8+ 3 தொழுவது நபிவழியாகும் (ஸுன்னத்) இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல, ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனித்தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.

    ரமளானில் இரவுத்தொழுகை

    அருள்மறையாகி திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாம் ரமளானில் இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாம் கடமையான நோன்பு நோற்பதை கடமையாக்கியிருக்கிறான் இப்புனிதமிக்க மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் தராவீஹ் என்று பெயர் சூட்டப்பட்ட இரவை தொழுகையைப்பற்றி சில கூடுதலான சிறப்புகளை வழங்கியுள்ளார்கள்.

    1 யார் ரமளானில் ஈமானுடன் நன்மையை நாடி இரவுத்தொழுகையை தொழுகிறாரோ அவருடைய முந்திய பாவங்களை மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ

    2 நபி(ஸல்) அவர்கள் கடமையென்று இல்லாமல் ரமளானில் இரவு தொழுகை தொழுமாறு (தோழர்களுக்கு) பேர்வார்மூட்டியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

    3 நபி(ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் புறப்பட்டு பள்ளிவாயிலுக்கு சென்று தொழுதார்கள். அவர்களை தொடர்ந்து சில மனிதர்கள் தொழுதார்கள், மறுகாலைப் பொழுது அடையும் போது மக்கள் இதுபற்றி பேசிக்கொண்டார்கள். எனவே அடுத்து வரக்கூடிய இரவில் அதிகமக்கள் இரவுத் தொழுகையை நபி(ஸல்) அவர்களை பின்பற்றி தொழுதார்கள். இவ்வாறு மூன்று இரவுகள் நபி(ஸல்) மக்களுக்கு இரவுத் தொழுகையை தொழவைத்தபோது மக்கள் தொடர்ந்து அதிகமாக பள்ளிவாயிலுக்கு வரத்தொடங்கினார்கள். நான்காம் இரவில் நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். ªப்ஹுத் தொழுகையை முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் (இன்றிரவு) வந்திருந்தது எனக்கு தெரியாமலில்லை, எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்ட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன் எனக் கூறினார்கள்.

    4 நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பள்ளிவாசலில் தொழுதார்கள், அவர்களை பின்பற்றி மக்களும் தொழுதார்கள் மறுநாள் நபி(ஸல்)அவர்கள் தொழுதபோது மக்கள் அதிகமானார்கள் மூன்றாவது, நான்காவது இரவுகளில் மக்கள் திரண்டபோது நபி(ஸல்) அவர்கள் வழக்கம் போல் இரவில் வரவில்லை. மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி ''நீங்கள் செய்தததை நிச்சயமாக நான் பார்த்து கொண்டு தான் இருந்தேன். உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சியது தான் உங்களிடம் என்னை வராமல் தடுத்துவிட்டது என்று கூறினார்கள். இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    ''(ரமளானின் இரவுத் தொழுகைகைய அவரவர்தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள்இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் உமர்(ரலி) அவர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது என்று இமாம் இப்னு ஷீஹாப் ஷீஹ்ரி (ரஹ்) கூறுகிறார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

    5. அப்துர் ரஹ்மான் பின்அப்துல் காரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    நான் உமர் (ரலி) அவர்களுடன் ரமலான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவசலுக்கு சென்றேன்.அங்கே மக்கள் பிரிந்து பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுதுகொண்டிருந்தனர்.
    சிலரைப் பின்பற்றி சிறு கூட்டத்தினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவர்கள் அனைவரையும் ஒர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே ! என்று கூறி விட்டு அந்த முடிவுக்கு உறுதியாக வந்து மக்களை உபைபின்கஅபு (ரலி) அவர்ககளுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர் மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களையெல்லாம் தங்கள் இமாமை பின்பற்றி தொழுது கொண்டிருந்தார்கள் அப்போது உமர் (ரலி) அவர்கள் ''இந்தப்புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது இப்போது (இரவின் முற்பகுதியில் ) நின்று வணங்குவதைவிட உறங்கி விட்டு பின்னர் (இரவின் பின்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்! என்று கூறினார்கள் மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். நூல்கள்: புகாரி.

    6. அபூஸலாமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது? ''என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கவர் ரமளானினும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள். நூல்கள்: புகாரி

    புனிதமிக்க மாதமான பாவங்கள் மன்னிக்க படக்கூடிய, புனிதம் நிறைந்த இறைவனின் அருள்பொழியக் கூடிய மாதமான ரமளானில் நாம் அனைவரும் இரவுத் தொழுகையை சரிவர பேணி இறையருளை பெறுவோமாக.

    பெருநாள் தொழுகை

    முஸ்லிம்கள் சந்தோஷத்துடன் கொண்டாட இஸ்லாம் வருடத்தில் இரண்டு பெருநாள்களை வழங்கியுள்ளது. இந்நன் நாளைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளார்கள்.

    1 ''நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வருகை தந்து போது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு திருநாள்கள் இருந்தன. அவ்விரண்டு நாள்களிலே விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''இவ்விரண்டு நாளை விடச்சிறந்த இரண்டு நாள்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானி பெருநாள், மற்றும் ஃபிதர் பெருநாளாகும்'' எனறார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: அபூதாவூத், நஸயீ
    மகிழ்ச்சிகரமான இவ்விருநாள்களில் ஆனந்தத்துடன் கொண்டாடுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகையைக் கொண்டு துவக்குமாறு நபி(ஸல்) அவர்கள் செயல்முறை மூலம் உணர்த்தியுள்ளார்கள்.

    2 ''நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்து பலியிடுவோம் யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழி முறையைப் பேணியவராவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ரா(ரலி) நூல்: புகாரி

    நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு (மைதானத்திற்கு) செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்த பின்னர் மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள், (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள், ஏதேனும் ஒரு பகுதிக்கு பட்டாளத்தை அனுப்ப நாடியிருந்தால் அனுப்புவார்கள். ஏதேனும் (கட்டளையிட வேண்டியிருந்தால் கட்டளையிடுவார்கள் பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்தி நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

    பெருநாளை கொண்டாடுவதற்கு முன் இரண்டு ரக்அத்களை தொழுது ஆரம்பிக்க நபி(ஸல்) அவர்கள் ஸுன்னத்தாக (வழிமுறையாக) ஆக்கியுள்ளார்கள். எனவே நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். இனி பெருநாள் எவ்வாறு தொழ வேண்டும். இதுதான் பெருநாள் தொழுகைக்கும் மற்ற தொழுகைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசமானதாகும். மேலும் பெருநாள் தொழுகையை உபரித் தொழுகைக்கும் மற்ற தொழுகைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசமானதாகும். மேலும் பெருநாள் தொழுகையை உபரித் தொழுகைக்குண்டான அந்தஸ்து தான் உள்ளது. இச்சிறப்பு தொழுகையை பேணாமல் இருந்தால் தண்டனை உண்டு என்று இஸ்லாம் குறிப்பிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

    பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழுவது

    4 நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

    பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் தொழாமல் (ஊரைச் சுற்றியுள்ள மைதானங்களில் வயல் வெளிகளில் அல்லது கடற்கரை மலையோரங்களில் உள்ள இடங்களில் நன்கு தூய்மையான இடத்தை தேர்ந்தெடுத்து தொழவேண்டும் ஆனால் இன்று தமிழகத்தின் பல ஊர்களில் மஸ்ஜிதுகளிலேயே தொழுவதை நாம் காண்கிறோம். இது நபிவழிக்கு மாற்றமானது. எனவே வருடத்தின் இரு பெருநாளையும் மேற்கண்ட திடல்களில் தொழமுயற்சி மேற்கொள்ள வேண்டும். இடமின்மையோ அல்லது நிர்பந்திற்க சூழ்நிலையில் குற்றமில்லை.

    5 நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள் அவர்களை வரும் முன்பே கைத்தடி கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு முன்னால் நட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, நஸயீ

    பெருநாள் தொழுகையில் பாங்கும், இகாமத்தும் இல்லை

    6 நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு ஹஜ் பெருநாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. தொழுகைக்கு பிறகு உரை தான் அமைந்திருந்தது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    7 பாங்கு மற்றும் இகாமத் இல்லாமல் ஒன்றல்ல பல தடவை இரு பெருநாள்கள் தொழுகையை நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன். அறிவிப்பவர்: ஜாபிர்பின்ஸமுதா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

    வருடத்திற்கு இருமுறையை பெருநாள் தொழுகையை தொழுவதனால் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழவேண்டுமா என்று நம்மில் யாருக்கும் சந்தேகம் உண்டாகலாம். இதைப்பற்றி தெளிவுப்படுத்தும் வண்ணமாக நபித்தோழர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

    பெருநாள் தொழுகையை காலையில் தொழுவது

    8 வாகனக் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்து தாங்கள் நேற்று பிறையைப் பார்த்தாக சாட்சி அளித்தனர். நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், காலை விடிந்ததும் தொழும் திடலுக்கு செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அறிவிப்பவர்: அபூ உமைர்(ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ

    9 அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரலி) பெருநாள் தொழுகைக்காக கண்டபோது நாங்கள் இந்நேரம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (பெருநாள்) தொழுது முடித்து விடுவோம் என்று கூறினார். நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா

    சூரியன் உச்சிக்கு வருவதற்குமுன், லுஹாத் தொழுகை நேரத்தில் பெருநாள் தொழுகையை தொழுதிட வேண்டும்.

    தொழுகை தொழுவதற்கு முன்

    10 நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளன்று சாப்பிடாமல் (தொழுகைக்காக) வெளியேற மாட்டார்கள். குர்பானிப் பெருநாளில் தொழாதவரை சாப்பிட மாட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு புரைதா நூல்கள்: திர்மிதி, அஹமத், இப்னுமாஜா

    தொழுகையில்

    11 நபி(ஸல்) அவர்கள் நோன்பும் ஹஜ் பெருநாள்களில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்

    12 நோன்பு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் உள்ளது. அவை இரண்டு (கூறிய பிறகு) கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப் (ரலி) நூல்: அபூதாவூத்

    13 உமர்(ரலி) அவர்கள் அபூவாம்த் அல் லைஸி(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் குர்பானிப் பெருநாளில் எதை (ஸுரவை) ஓதுவார்கள் என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் (இவ்விறு நாளிலும்) ஸுரகாஃப் மற்றும் ஸுர இக்தரபத் ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று விடையளித்தார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி) நூல்கள்: முஸ்லிம், முஅத்தா அபூதாவூத்

    14 இரு பெருநாள் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸுரத்துல அஃலா இரண்டாம் ரக்அத்தில் ஸுரத்துல் காஷியா ஆகிய அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பவர்: ஸமுதா(ரலி) நூல்கள்: அஹ்மத், தஃப்ரானி

    பெண்கள் கலந்து கொள்வது

    15 நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டும் விலகியிருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி

    16. நாங்கள் இரு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண்மணி பனீகலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தால் அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக அறிவிக்கிறார். அவரது சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் கலந்து கொண்ட பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோட இருந்தவராவர். உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூறியதாவது:
    நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம் நோயாளியை கவனிப்போம். நான் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு, அவளது சகோதரி (சிநேம்தி) தன் உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும் பெண்கள் (பெரு நாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹப்ஸா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    17. திடலில் பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீர் (முழக்கத்துடன்) பெண்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்கள் பிராதிக்கும் போது அவர்களும் சேர்ந்து இறைவனிடம் பிராதிப்பார்கள் அந்த நாளின் பழக்கத்தையும் (பாவத்தை விட்டும்) புனிதத்தையும் அவர்கள் எதிர் பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி

    கன்னிப்பெண்கள் திருமணமானவர்; மாதவிடாய்கள் ஆகிய பெண்கள் பெருநாள் தொழுகைக்கு அவசியம் வருகைதந்து தொழுமாறும் தக்பீர் முழக்கங்களிலும், இறை நினைவு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மாதவிடாய்கள் தொடமுடியாத பட்சத்தில் தொழும் நேரத்தில் மட்டும் தொழும் திடலிலிருந்து விலகியிருக்க வேண்டும். மேலும புர்கா, பர்தா இல்லாதவர்கள், மிதமிஞ்சி இருப்பவர்களிடம் இரவல் வாங்கி கெல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். பெண்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதை யாரும் தடுக்க கூடாது. கணவன்மார்கள் பெருநாள் தொழுகைக்காக செல்ல அவசியம் அனுமதி தரவேண்டும். அப்பொழுது தான் பெண்கள் பெருமானார்(ஸல்) அவர்களின் கட்டளையை பின்பற்ற இயலும் பெருநாள் தொழுகைக்கு செல்லும பெண்கள் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் திடலில் இருக்கும் போது தக்பீர் முழக்க புரியவேண்டும். மேலும, பாவமன்னிப்புக்கோரி இறைவனிடம் பிராதிக்கவேண்டும்.

    இரு பெரு நாட்களின் விபரம் 

    பெருநாள் தினத்தில் குளிப்பது:

    பெருநாட்களின் குளிப்பு நபி(ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய தினங்களில் குளித்துக் கொண்டிருந்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) இப்னுமாஜ்ஜா)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜுபாரா, ஹஜ்ஜாஜுபின் தமீம் ஆகிய நம்பகமற்றோர் இடம் பெற்றிருப்பதால் இவ்வறிவிப்பு பலகீனமானதாகிவிட்டாலும், பெருநாள் அன்று குளிப்பது சிறப்பு என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கீழ்காணும் அதர் - சஹாபாக்களின் செய்து சான்றாக அமைகிறது.

    பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னே இப்னு உமர்(ரழி) அவர்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். (நஃபிஉ(ரழி) முஅத்தா)

    பெருநாட்களிலும், ஜும்ஆதினத்திலும் அணிந்து கொள்வதற்காக விசேஷ ஆடைகள் வைத்துக் கொள்வது சிறப்பாகும்.

    நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாட்களிலும், ஜும்ஆவுடைய தினத்திலும் அணிந்து கொள்வதற்காக விசேஷ ஆடைகள் வைத்திருந்தார்கள். (ஜாபிர்(ரழி) பைஹகீ, இப்னுகுஜைமா)

    நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன் ஏதேனும் சாப்பிட்டு விட்டுச்செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முன் எதுவும் சாப்பிடாமல் செல்வதும் நபிவழியாகும்.

    நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன் ஏதேனும் சாப்பிடும்வரை செல்லமாட்டார்கள். ஆனால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுது விட்டுத் திரும்பும் வரை எதனையும் சாப்பிடமாட்டார்கள். (புரைதா(ரழி), திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

    அஹ்மத் அவர்களின் அறிவிப்பில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) தமது குர்பானியின் மாமிசத்தைச் சாப்பிடுவார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது.

    நோன்புப் பெருநாள் காலை நேரத்தில் பேரீத்தம் பழங்களை ஒற்றையாகச்சாப்பிடுவதும் நபி வழியாகும்.
    நபி(ஸல்) அவர்கள் நோன்புப்பெருநாள் தொழுகைக்கு முன் பேரீத்தம் பழங்களைச் சாப்பிடும் வரை புறப்படமாட்டார்கள் மேலும் அவற்றை ஒற்றையாகவும் சாப்பிடுவார்கள். (அனஸ்(ரழி) புகாரீ, அஹ்மத்)

    பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது தக்பீர் கூறிக் கொண்டு புறப்படுதல்.

    இப்னுஉமர்(ரழி) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது தொழும் இடம் செல்லும் வரை தஹ்லீல், தக்பீர் சொல்லிக்கொண்டு செல்வார்கள். (இப்னுஉமர்(ரழி) பைஹகீ, ஹாக்கிம்)

    இதை அடிப்படையாகக் கொண்டே பெருநாள் தொழுகைக்குச் செல்கையில் தக்பீர் கூறிக்கொண்டு செல்வதை நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது.

    பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது பாதையை மாற்றிக்கொள்வது.

    நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்குச் சென்றால் (செல்வதற்கு ஒரு வழி, திரும்பி வருகையில் ஒரு வழி என்ற வகையில்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். (ஜாபிர்(ரழி) புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

    பெருநாள் தொழுகைக்காக தனியாக ஓர் இடத்தை அமைத்துக்கொண்டு அங்கு சென்று தொழுவது விசேஷமாகும்.

    நபி(ஸல்) இரு பெருநாள் தொழுகைகளுக்கும் (பள்ளிவாசல் அன்றி விசேஷமாக) ஒரு தொழும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள். (அபூஸயீத்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படி பெருநாள் தொழுகைகளை வெளியில் புறப்பட்டு ஓர் இடத்தைத் தொழுவதற்காக நியமித்து அங்கு தொழுவது சிறப்பாயிருப்பினும் மழைபோன்ற இடையூறுகளிருப்பின் பள்ளியில் தொழுதுகொள்வதும் ஆகும்.

    பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்கு பெண்கள் செல்வது ஆகும்.

    பெருநாள் தொழுகை தொழும் இடத்திற்கு (பெண்களாகிய) நாங்கள் புறப்பட்டு வருவதோடு இளம்பெண்களும், மாதவிடாய் உள்ளவர்களும் புறப்பட்டு வரும்படி நபி(ஸல்) அவர்களின் வாயிலாக) எங்களுக்குக் கட்டளை யிடப்பட்டிருந்தது. ஆனால் மாதவிடாய் உள்ளவர்கள் தொழமல் இருந்து கொண்டு, முஸ்லிம்களின் கூட்டத்திலும் அவர்களின் பிரார்த்தனைகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என்று உம்மு அதிய்யா(ரழி) அறிவித் துள்ளார்கள். (உம்மு அதிய்யா(ரழி) புகாரீ, முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)

    பெருநாளான்று பொதுச் சொற்பொழிவுக்குப் பிறகு பெண்களுக்கு மட்டும் விசேஷமாக தனிச் சொற்பொழிவு நிகழ்த்துதல்.

    நான் ஒருமுறை நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ, நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். அப்போது அவர்கள் தொழவைத்து விட்டு சொற்பொழிவாற்றிய பிறகு பெண்களிடம் வந்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ததோடு அவர்களை தர்மம் செய்யும் படியும் கட்டளையிட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ)

    பெண்கள் வெளியில் புறப்பட்டுச் செல்வதில் இடையூறுகள் எதுவும் இல்லாதிருந்தால் அவர்கள் பெருநாள் தொழுகை நடத்தப்படும் இடத்திற்குச் சென்று தொழுவதே சிறப்பாகும்.

    பெருநாள் தொழுகையின் நேரம்

    நபி(ஸல்) அவர்கள் சூரியன் இரு ஈட்டிகளின் அளவு (உயர்ந்து) வரும் போது, நோன்புப் பெருநாள் தொழுகையையும், ஒரு ஈட்டியின் அளவு வரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் எங்களுக்கு தொழ வைத்தார்கள். (ஜுன்துபு(ரழி) தல்கீஸுல் ஹபீர்)
    (ஒரு ஈட்டியின் அளவை என்பது மூன்று மீட்டர்களாக கணிக்கப்படுகிறது.)

    பெருநாள் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் இல்லை

    நான் ஒருமுறை, இரு முறை அன்றி (பன்முறைகள்) நபி(ஸல்) அவர்களுடன் பாங்கும், இகாமத்துமின்றி பெருநாள் தொழுகை தொழுதுள்ளேன்.
    (ஜாபிருபின் சமுரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் திர்மிதீ)

    பெருநாள் தொழுகைக்குப் பின்னரே குத்பா - சொற்பொழிவு

    நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் அன்று பெருநாள் தொழுமிடத்திற்குப் புறப்பட்டுச் சென்று முதன் முதலாக தொழுகையைத் துவங்குவார்கள். பிறகு மக்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் நிலையில் மக்களை நோக்கி நின்றவர்களாக, அவர்களுக்கு (பல) கட்டளைகளை இடுவதோடு, (தக்வாவை - பயபக்தியைக் கொண்டு) வஸிய்யத்துச் செய்தவர்களாக நல்லுபதேசமும் செய்வார்கள். பிறகு (சன்மார்க்கப் பணிக்காக) யாதேனும் ஜமாஅத்தை அனுப்பவோ, அல்லது யாதேனும் முக்கிய கட்டளையிடவோ கருதினால் அவற்றைச் செய்துவிட்டு (வீடு) திரும்பி விடுவார்கள். (அபூஸயீது(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    இவ்வாறு தொழுகையை முற்படுத்தி (குத்பா) - சொற்பொழிவைப் பிற்படுத்துவதென்பது பெருநாள் தொழுகையைத் தொழும் சந்தர்ப்பத்தில் மட்டும் தான். ஆனால் ஒரே தினத்தில் பெருநாளும், ஜும்ஆவும் அமைந்து விட்ட காலத்தில் இப்னு ஜுபைர்(ரழி) அவர்களின் அறிவிப்பின்படி பெருநாள் தொழுகை மட்டும் தொழுது விட்டு ஜும்ஆ தொழாமலிருக்கும் சந்தர்ப்பத்தில் அவ்வறிவிப்பில் கண்டது போல் குத்பா - சொற்பொழிவை முன்னால் நிகழ்த்திவிட்டு பிறகு தொழுவதே முறையாகும்.

    பெருநாள் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்கள்

    நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவிலும் இருபெருநாள் (தொழுகை)களிலும் ''ஸப்பிஹிஸ்ம ரப்பிரக்கல் அஃலா - ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியஹ் ஆகிய சூராக்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். (நுஃமானுபின் பஷீர்(ரழி) முஸ்லிம்)

    அபூவாம் தில்லைª(ரழி) கூறுகிறார்கள். ஒருமுறை உமர்(ரழி) அவர்கள் அபூவாம்தீ(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் தொழுகைகளில் எதை ஓதினார்கள் என்று கேட்டதற்கு அவர்கள் ''காஃப் வல் குர்ஆனில் மஜீத் - இக்ராபத்திஸ்ஸாஅத்து'' ஆகிய சூராக்களை ஓதினார்கள் என்றார்கள்.
    (அபூவாம்தீ(ரழி) முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

    பெருநாள் தொழுகைக்கு எத்தனை தக்பீர்கள்?

    நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையின் போது முதல் ரகாஅத்தில் ஏழும், இரண்டாம் ரகாஅத்தில் ஐந்தும், ஆக பன்னிரண்டு தக்பீர்கள் கூறினார்கள். (அம்ருபின்ஷுஐபு(ரழி) இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

    பெருநாள் தொழுகையில் மேல அதிகமாகவுள்ள தக்பீர்களை கிராஅத்து ஓதுவதற்கு முன்பே கூறிவிட வேண்டும்

    நபி(ஸல்) அவர்கள் இருபெருநாட்களிலும் கிராஅத் ஓதுவதற்கு முன்முதல் ரகாஅத்தில் 7 தக்பீர்களும், இவ்வாறே இரண்டாவது ரகாஅத்தில் கிராஅத்து ஓதுவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அம்ருபின் அவ்உஃபு(ரழி) திர்மிதீ

    ஆகவே மற்ற தொழுகைகளைப் போன்றதொரு தொழுகைதான் என்ற அடிப்படையில் பெருநாள் தொழுகைக்கு தக்பீர்கட்டியவுடன் மற்ற தொழுகைகளுக்கு தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் ஓதக்கூடி ''சுப்ஹானகல்லாஹும்ம அல்லது அதுபோன்றதை ஓதிய பின்னர், கிராஅத் ஓதுவதற்கு முன்பு, முதல் ரகாஅத்தில் 7 தக்பீர்கள் கூறிய பின், அஊது ஓதி கிராஅத் ஓதவேண்டும்.

    மேல் அதிகமாயுள்ள தக்பீர்கள் 12 மட்டுமே:

    பெருநாள் தொழுகையின் மேல் அதிகமாயுள்ள தக்பீர்கள் 12 தான் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அம்ருபின்ஷுஐபு(ரழி) அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு திர்மிதீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்பும் ஆகிய இவ்விரு அறிவிப்புகள் மட்டுமே மிகவும் ஸஹீஹானவையாக உள்ளனவென்று இமாம்புகாரீ(ரஷ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்று இப்னுஹஜர் அவர்கள் தமது ''தஹ்கீஸுல் ஹபீ'' எனும் நூலில் பாகம் 2, பக்கம் 84ல் எடுத்துககாட்டியுள்ளார்கள்.

    பெருநாள் தொழுகையில் மேல் அதிகமாயுள்ள தக்பீர் 6 எனும் ஹதீனின் நிலை:

    ஒவ்வொரு ரகாஅத்திலும் 3 தக்பீர்கள் வீதம் இரண்டு ரகாஅத்துகளில் மொத்தம் ஆறு தக்பீர்கள் என்பதற்கான ஓர் அறிவிப்பு அபூமூஸா(ரழி) மூலம் அபூதாவூதில் பதிவாகியிருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ''அபூஆயிஷா'' என்பவர் ஹதீஸ்கலா வல்லுநர்களிடத்தில் அமைந்திருப்பதாலும் இவ்வறிவிப்பு பலகீனமானது என்று இமாம்பைஹகீ கூறுகிறார்கள்.

    மேல் அதிகமாகவுள்ள தக்பீர்களை கூறும்போது கைகளை உயர்த்தாமல் இருக்கவேண்டும்:

    கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கான அறிவிப்பின் பின்நிலை

    உமர்(ரழி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையிலும், பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீர்களிலும் தமது கையை உயர்த்துவார்கள் (பக்ருபின்ஸவாதா (ரழி) லைஹகீ அஸ்ரம்).

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ''இப்னுலுஹைஆ'' எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இது பலகீனமானதாகும். கைகளை உயர்த்துவதற்கு போதுமான ஆதாரம் ஹதீஸ்களில் இல்லை. சிலர் பொதுவாக நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு தக்பீர் கூறும் போது தமது கைகளை உயர்த்துவார்கள் என்ற வகையில் வந்துள்ள அறிவிப்புகளை ஆதரமாக வைத்து பெருநாள் தொழுகையில் மேல் அதிகமாயுள்ள தக்பீர்கள் கூறும்போதும் கைகளை உயர்த்தவேண்டும் என்று வாதிடுகிறார்கள் இந்த வாதம் முறையானதல்ல.

    ஏனெனில், இவ்விசயத்தில் வேறு பல நபித்தோழர்களின் நம்பகமான செயல்முறைகள் எதுவும் காணப்படவில்லை. மேலும், உமர்(ரழி) அவர்களின் செயலை அறிவிக்கும் அறிவிப்பும் பலகீனமானது. அன்றி, நபி(ஸல்) அவர்களின் நேரடியான முன்மாதிரி எதுவும் காணப்படவில்லை. பெருநாள் தொழுகையின் சொற்பொழிவு (குத்பா) வழக்கமான 'ஜும்ஆ' குத்பாவின் அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டிருப்பது போல, வழக்கமான தொழுகையின் தக்பீர்களிலிருந்து, பெருநாளின் மேலதிகமான (தக்பீர் (கைகளை, உயர்த்தமால்) சற்று மாறுபட்டிருக்கலாம். மேல் அதிகமாயுள்ள தக்பீர்கள் கூறும்போது ஒவ்வொரு தக்பீர்களுக்கு இடையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும்.

    பெருநாளின் ஒவ்வொரு தக்பீர்களுக்கிமிடையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும் என்று அப்துல்லாஹ்பின் ரஸ்ஊத்(ரழி) கூறியுள்ளார்கள். (அல்கமா(ரழி), பைஹகீ, அஸ்ரம்)

    இவ்வறிப்பில் எவ்வாறு அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும் ''என்பதற்கான வாசகம் எதுவும் கூறப்படாமல் பொதுவாக அல்லாஹ்வைப் போற்றி புகழ வேண்டும் என்று'' காணப்படுவதால் அதற்கேற்ப ''சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லலாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்'' என்று ஒவ்வொரு தக்பீருக்கும் இடையில் கூறினாலும் போதுமானதே.

    பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்துகள் எதுவுமில்லை.

    ''நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரகாஅத்துகள் (மட்டும்) தொழுதார்கள். ஆனால் அதற்கு முன்னும், பின்னும் எதுவும் தொழவில்லை. (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    பெருநாள் தொழுகைகளில் கிராஅத்தை சப்தமாக ஓதுவது:
    ''நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளிலும் ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலாவையும், ஹல்அதாக்க ஹதீஸுல் காஷியஹ்வையும் ஓதிக்கொண்டிருந்தார்கள். (ஸமுரா(ரழி), அஹ்மத்)

    மேற்காணும் இரு சூராக்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக அறிவிக்கக் கூடியவர்கள் அவர்கள் சப்தமாக ஓதியதைத் தாம் கேட்டதாலேயே அதை அறிவித்துள்ளார்கள். இதுவே நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளில் சப்தமாக ஓதியுள்ளார்கள் என்பதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.

    இரு பெருநாட்களின் குத்பாவையும் ஹம்து - அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வது கொண்டே துவங்க வேண்டும், தக்பீர்களைக் கொண்டல்ல.

    சிலர், பெருநாள் குத்பாவை தக்பீர்களைக் கொண்டுதான் துவங்கவேண்டும் என்றும், அவ்வாறு தக்பீர்களைக் கொண்டு துவங்குவதுதான் சுன்னத்து - நபிவழி என்றும் கூறுகிறார்கள். அவர்களின் இக்கூற்றுக்கு முறையான ஆதாரம் எதுவுமில்லை. இவ்வாறு அவர்கள் பெருநாள் குத்பாவை தக்பீர்களைக் கொண்டு துவங்கினார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸும் இல்லை.

    இதற்காக அவர்கள் காட்டும் அறிவிப்பின் நிலை:

    நபி(ஸல்) அவர்கள் குத்பாவுக்கு மத்தியில் தக்பீர் கூறுவார்கள் இருபெருநாட்களின் குத்பாவில் தக்பீரை அதிகமாகக் கூறுவார்கள். (அப்துர்ரஹ்மான் பின் ஸஃது(ரழி), இப்னுமாஜ்ஜா, பைஹம்)

    இதன் அறிவிப்பாளராகிய அப்துர்ரஹ்மான் பின் ஸஃது என்பவர் நம்பகமற்றவராயிருப்பவர் இவ்வறிவிப்பு பலகீனமானதாகும். எனவே இந்த பலவீனமான அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு மார்க்கத்தில் ஒரு அமலை இது சுன்னத்து என்று கூற இயலாது, நபி(ஸல்) அவர்கள் தமது குத்பாக்களை, ஹம்தை - அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டே துவக்கியள்ளார்கள் என்பதற்கு பின்வரும் (பலமான) ஸஹீஹான ஹதீஸ் ஆதாரமாயுள்ளது.

    நபி(ஸல்) அவர்கள் (குத்பாவின்போது) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்ததன் பின்னர் ''அம்மாபஃது'' என்று கூறுவார்கள். (அம்ருபின்தஃலபு(ரழி), புகாரீ)

    பெருநாள் குத்பா - சொற்பொழிவு ஒன்றா அல்லது இரண்டா?

    நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ புறப்பட்டுச் சென்று தாம் நின்றவர்களாக குத்பா-சொற்பொழிவு செய்துவிட்டு பிறகு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பிறகு எழுந்தார்கள். (ஜாபிர்(ரழி), இப்னுமாஜ்ஜா)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ''இஸ்மாயீல்'' பின் முஸ்லிம் என நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இவ்வறிவிப்பு பலமானதாகும்.

    ''பெருநாளைக்கு இரண்டு குத்பாக்கள் உண்டு, அவ்விரண்டிற்கு இடையில் அமர்ந்து பிறகு எழவேண்டும்'' என்ற வகையில் வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலகீனமானவையே. பெருநாள் தொழுகைக்கு இரண்டு குத்பாக்கள் உண்டு என்ற அமைப்பில் ஒரு ஹதீஸும் முறையானதாக இல்லை என்று இமாம் நவவீ(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    பிறையைக்கண்ட செய்தி காலதாமதமாகக் கிடைக்குமானால் அன்றைய நோன்பை விட்டுவிட்டு அடுத்தநாள் பெருநாள் தொழுகை தொழுவது:

    ''ஒரு முறை எங்களுக்கு ஷவ்வால் மாதப்பிறை காணப்படாது மறைவு ஏற்பட்டு விட்டது. நாங்கள் அன்று காலையில் நோன்பு நோற்றிருந்தோம். அன்று பிற்பகல் ஒரு பிரயாணக் கூட்டத்தார் வந்து நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்ற இரவு (ஷவ்வால் மாதப்) பிறையைப் பார்த்தோம் என்று உறுதி அளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்கள் அனைவரையும் நோன்பை துறக்கும்படி செய்து, அடுத்தநாள் பெருநாள் தொழுகைக்காகப் புறப்படும் படியும் கட்டளையிட்டார்கள். (அபூஉமைர்பின் அனஸ்(ரழி), நஸயீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா)

    இவ்வறிவிப்பின்படி பிறைகண்ட செய்தி ஊர்ஜிதமாகத் தெரிந்து விட்டால் உடனே நோன்பைத் துறந்து விடவேண்டும். அன்று பெருநாள் தொழ சந்தர்ப்பமிருந்தால் தொழுது கொள்ளவேண்டும். இல்லையெனில் அடுத்தநாள் தொழுது கொள்ளலாம் என்பதை அறிகிறோம்.

    ஹஜ்ஜுப்பெருநாளின் விபரம்:

    நோன்புப் பெருநாளின் தொழுகை, குத்பா ஆகியவற்றைப் போன்றே ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், குத்பாவும் சுன்னத்தாக உள்ளன.

    பெருநாள் குத்பாக்களில் அமருவோர் அமரலாம், எழுந்து செல்வோர்' எழுந்து செல்லலாம்.

    ''நான் ஒரு முறை பெருநாளின் போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (பெருநாள்) தொழுகை தொழுது முடித்தவுடன் ''நாங்கள் (குத்பா)-பிரசங்கம் செய்யப் போகிறோம் பிரசங்கத்திற்காக அமர விரும்புபவர் அமருவாராக! செல்ல விரும்புபவர் செல்வாராக!'' என்று கூறினார்கள். (அப்துல்லாஹி ப்னுஸ்ஸாயிபு(ரலி), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    அரஃபா தினத்தின் சுப்ஹில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி தினத்தின் அஸ்ருவரை ஜங்காலத் தொழுகைக்குப் பின் தக்பீர் கூறுவதும் சுன்னத்.

    ''நபி(ஸல்) அவர்கள் அரஃபா தினத்தின் பஜ்ரு தொழுகையைத் தொழுது விட்டு, தமது தோழர்களை நோக்கி அனைவரும் அவரவர் இடத்தில் இருங்கள் என்று கூறி, ''அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - வலில் லாஹில்ஹம்து' என்று அரஃபாதினத்தின் பஜ்ரில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக்குடைய இறுதி நாள் அஸ்ருவரை தக்பீர் கூறினார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி), தாருகுத்னீ)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள ''ஜாபிருரில் ஜு அஃபீ என்பவர் நம்பகமானவர் இல்லை என இமாம் புகாரீ, அபூஹாத்தீம் கூறுவதால் இது பலஹீனமானது.

    தக்பீரை உறுதிப்படுத்தும் அறிவிப்புகள்:

    ''அலி(ரலி) அவர்கள் அரஃபா தினத்தின் பஜ்ரு தொழுகைக்குப் பின்னால் இருந்து அய்யாமுத் தஷரீக்குடைய இறுதி நாள் அஸ்ருவரை தக்பீர் கூறிக் கொண்டிருந்தார்கள் - அஸ்ரு தொழுகைக்குப் பின்னால்வரை தக்பீர் கூறினார்கள். (முஸ்னத் இப்னீ, அபீஷைபா, பைஹகீ)

    இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அய்யாமுத்தஷ்ரீக்குடைய தினங்களில் ''அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து என்று தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்னத் இப்னி அபீஷைபா)

    பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன் - அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹ் அன்றி வணங்கி வழிபடுவதற்குரியவன் வேறு யாருமில்லை அல்லாஹ் மிகப் பெரியவன் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

    இவ்விரு அதர் -ஸஹாபாக்களின் செய்கையை அடிப்படையாகக் கொண்டே அய்யாமுத் தஷ்ரீக்குடைய தக்பீர் செயல்பாட்டில் உள்ளது. இவ்வறிவிப்பில் இருமுறைகள் - அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறுவதாகும். இதற்கு மாறாக மேற்காணும் பலகீனமான அறிவிப்பில் தான் மும்முறை அல்லாஹு அக்பர் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    லுஹாத் தொழுகை

    உபரித் தொழுகைகளில் ஒன்றாக லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

    லுஹாத் தொழுகையை தானும் தொழுததுடன் தோழர்களுக்கும் உபதேசித்துள்ளார்கள்.

    1 என்னுடைய நண்பர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்குமாறும் இரண்டு ரக்அத் லுஹாத் தொழுகையை தொழுமாறும். இரவில் தூங்குவதற்கு முன்னால் வித்ரு தொழுகையை தொழுமாறும் எனக்கு உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹமத்

    2 ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பை நோற்குமாறும், லுஹாத் தொழுகை தொழுமாறும் வித்ரு தொழுகை தொழாமல் தூங்கக்கூடாது எனக்கு என்று எனது சிநேகிதர் நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்: முஸ்லிம்

    3 நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஷகீக(ரலி) நூல்: முஸ்லிம்

    4 நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை ஆனால் நான் தொழுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அஹமத்

    லுஹாத் தொழுகையை தொழுமாறு உபதேசித்த நபி(ஸல்) அவர்கள் அதனுடைய நேரத்தையும் குறிப்பிட்டுள்ளோர்கள்.

    5 (காலைநேரத்தில்) நபி(ஸல்) அவர்கள் குபாவாசிகளிடம் (புறப்பட்டு) வந்தபோது அவர்கள் தொழுவதை கண்டார்கள்.

    அவ்வாபீன்களின் (இறைவனிடம் மீளுபவர்கள்) தொழுகை வெப்பமேறிய மணல் அதனால் ஒட்டக குட்டிகளின் கால்கள் சுட்டோரிக்கும் உள்ள நேரமேயாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுபின் அர்கம் நூல்: முஸ்லிம், திர்மிதி

    லுஹாத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சிக்குவருமுன் உள்ள நேரமாகும். அதாவது முற்பகலாகும் என்பதை நபி(ஸல்) அவர்கள் உவமையின் மூலமாக விளக்கியுள்ளார்கள். அது ஃபஜர் மற்றும் லுஹர்ருக்கு இடைப்பட்ட நேரமாகும் எண்ணமுடிகிறது.

    லுஹாத் தொழுகை எத்தனை ரத்அத்கள் தொழலாம் என்பதை காண்போம்.

    6 லுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழலாம் நபி(ஸல்) அவர்கள் எனக்கு இரண்டு ரக்அத்கள் தொழுமாறு எனக்கு உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

    7 உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து உங்களிடம், சேர்ந்து (நின்று) என்னால் தொழ இயலவில்லை என முறையிட்டார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்து, விருந்திற்காக தம் இல்லத்திற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக பாயின் ஓர் ஓரத்தில் தண்ணீர் தெளிந்து பதப்படுதினார். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுவார்களா? என்று அனஸ்(ரலி) இடம் கேட்டேன் அதற்கவர்கள் அன்றையதினம் தவிரவேறு எப்போதும் தொழ நான் பார்த்ததில்லை என விடையளித்தார்கள் என்று இப்னுல் ஜாரூத் குறிப்பிட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

    8 நீங்கள் காலை விழிக்கும் போது உங்களுடைய ஒவ்வொரு உருப்புகளுக்கும் தர்மம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு தடவை (ஸுப்ஹானல்லாஹ்) என்று தஸ்பீஹ் சொல்வதும் ஸதாகவாகிறது.

    ஒவ்வொரு தடவை (அல்ஹம்துலில்லா) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (லாயிலாஹ இல்லல்லாஹ்) சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (அல்லாஹு அக்பர்) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. நன்மையை ஏவுவதும் ஸதகாவாகிறது தீமையைத்தடுப்பதும் ஸதகாவாகிறது. இவை அனைத்திற்கும் லுஹாவின் இரண்டு ரக்அத்துகள் தொழுவது போதுமானதாம் விடுகிறது. அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

    லுஹாத் தொழுகையை நான்காக தொழலாம்

    9. நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத் லுஹாத் தொழுகை தொழுவார்கள் மேலும் மாஷா அல்லாஹ் அதைவிடவும் அதிகப்படுத்தியும் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்

    லுஹாத் தொழுகையை எட்டு ரக்அத்களாக தொழலாம்.

    10 மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் எனது இல்லத்திற்கு வந்து குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் (லுஹாத் தொழுகை தொழுதார்கள். அதை விட சுருக்கமாக வேறு எந்த தொழுகையையும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை ஆயினும் அவர்கள் ருகூவையும், ஸுஜுதையும் முழுமையாக செய்தார்கள். அறிவிப்பவர்: உம்முஹானி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    மேலும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை எட்டு ரக்அத்களாக தொழுதார்கள் என்று அறிவிக்கும் செய்தி ஹிப்னுஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    11. நான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் எட்டு ரக்அத்கள் லுஹாத் தொழுகையை தொழுததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்:அனஸ்பின்மாலிக்(ரலி) நூல்கள்: அஹமத், இப்னுகுஸைமா, ஹாகிம்

    உபரியான லுஹாத் தொழுகை பற்றி நபி(ஸல்) அவர்களின் அதை தொழுவதினால் ஊந்தக்கூடிய உபதேசங்கள் அத்தொழுகையின் நேரம் மற்றும் ரக்அத்துகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டோம். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் வாசகர்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். காரணம் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததாக நான் பார்த்ததில்லை என்கிறார்கள். ஆனால் மற்றுமொரு ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்துகள் எட்டுரக்அத்துகள் லுஹாத் தொழுததாக அறிவிக்கிறார்கள், எப்படி அவர்கள் பார்க்காமல் லுஹாத் தொழுகையின் தொழுகையின் எண்ணிக்கை அறிவிக்கிறார்கள் என்று ஐயம் ஏற்படலாம். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் முரண்பாடில்லாமல் புரிய வேண்டுமெனில் அறிஞர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் வீட்டில் இல்லாமைதான் ஆயிஷா(ரலி) அவர்கள் பார்க்காததற்கு காரணம் என்கின்றனர். ஆனால் இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் விளக்கும்போது அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ''நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததாக பார்க்கவில்லை என்பதற்கு தொடர்ந்து தொழுததாக நான் பார்க்கவில்லை என்று தான் விளங்கவேண்டும் என்றும் ''ஆனால் நான் தொழுவேன்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கருத்துக்கு நான் தொடர்ந்து தொழுவேன் என்று விளங்க வேண்டும் என்று கூறுகிறார். நூல்: ஃபத்ஹுல்பாரி,  ஹதீஸ்எண் 1177

    இமாம் பைஹகீ(ரஹ்) அவர்களின் கருத்தை வலுஊட்டும் வண்ணமாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸே ஆதாரமாக உள்ளது.

    12. நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீம்(ரலி) நூல்: முஸ்லிம்

    மேற்கண்ட ஹதீஸ் லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்துள்ளார்கள் என்பதை தெளிவாக்கிறதல்லவா என்று இந்த அடிப்படையில் தான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் லுஹாத் தொழுகையின் எண்ணிக்கையை அறிவித்துள்ளார்கள் என்பதை ஐயமில்லாமல் விளங்கி கொள்ளலாம்.

    மழைத் தொழுகை

    உலகில் வாழக்கூடிய மனிதர்களுக்கு அல்லாஹ் சில சீற்றங்களால் சோதிக்கின்றன இயற்கை சீற்றங்களில் சில இடங்களில் மழையையே பொழியாமல் ஆக்குவது போன்ற பாதிப்புகளாகும், மழையின்றி மனிதன் வாழ முடியாச் சூழ்நிலை ஏற்படுகிறது. காரணம் ஒரு நாட்டிலோ அல்லது ஒரு ஊரிலோ மழை பொழியவில்லையென்றால் வரட்சி, பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் செடி கொடிமரம், நிலம், காடு வற்றிப்போய் மனிதன் மட்டும் இன்றி ஏனைய உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன இவ்வாறு பஞ்சம் வறட்சி போன்ற அபாயங்கள் ஏற்படுமேயானால் துவண்டுவிட்டால் இறைவனிடம் பிரார்த்தித் தொழுகை நடத்துமாறும் இஸ்லாம் கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் செயல்முறைப்படுத்தியுள்ளார்கள்.

    மழைத்தொழுகையின் நேரம்:

    சூரியனின் சுடர் வெளிவந்தபோது மழைத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். (ஆயிஷா(ரழி), அபூதாவூத்)

    மழைத் தொழுகையின் ரகாஅத்துகளும், அவற்றில் ''கிராஅத்'' ஓதும் முறையும்:

    நபி(ஸல்) அவர்கள் மழைக்கு வேண்டியவர்களாக தொழுமிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றுகிப்லாவை முன்னோக்கி துஆ செய்துவிட்டு தமது மேலாடையைப் புரட்டிப் போட்டுக் கொண்டு பிறகு 2 ரகாஅத்துகள் தொழுதார்கள். அவ்விரண்டிலும் கிராஅத்தைச் சப்தமாக ஓதினார்கள். (அப்துல்லாஹ் பின் ஜைத்(ரழி), புகாரீ)

    1. நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பொழியாமல் வரட்சியாக இருப்பதைப் பற்றி முறையிட்டனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மின்பர் கொண்டு வர ஏவினார்கள். அது (வெளியிலுள்ள) தொழுமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. மக்கள் அடுத்த நாள் (மறுநாள்) அவ்விடத்திற்கு வரவேண்டுமென கட்டளையிட்டார்கள். சூரியன் ஓரத்தில் வெளிப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். தொழுமிடத்திற்கு வந்ததும் மிம்பரில் அமர்ந்தார்கள். பின்னர் தக்பீர் கூறினார்கள். இறைவனைப் புகழ்ந்தார்கள். பின்னர் ''மக்களே! நீங்கள் உங்களில் நகரத்தின் வரட்சியைப்பற்றி முறையீட்டிர்கள். நீங்கள் அல்லாஹ்விடம் பிரர்த்திக்குமாறு அவன் உங்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளான். மேலும் உங்கள் பிரார்த்தனைக்கு பதிலளிப்பதாகவும் வாக்களித்துள்ளான். பிறகு தம் இரு கைகளையும் உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள் பின்னர் மக்களின் பால் திரும்பி மிம்பரை விட்டும் இறங்கினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்துகள் தொழ வைத்தார்கள். அப்போது அல்லாஹ் வானத்தில் மேகத்தை உண்டாக்கினான். அதில் இடியுடன் சேர்ந்து மின்னலுடன் மழை பொழிந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: அபூதாவூத்

    2. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். அவர் நின்றவாரே நபி(ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளை செத்துப்போய்விட்டன, பாதைகள் பல சீர்கெட்டுள்ளன. எனவே எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று வினவினார். நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் மழை பொழிந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    மழை வேண்டி அல்லாஹ்விடம் பிரர்த்திக்க வேண்டும் மற்றும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும்.

    திடலுக்கு செல்லுதல்

    3. நபி(ஸல்) அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்கு புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யªது(ரலி) நூல்கள்: புகாரி

    தொழுகைக்கு முன்

    மழைவேண்டித் தொழுவதற்கு முன் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

    4. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! மழைபொய்த்து விட்டது எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என்று வேண்டினார். நபி(ஸல்) துஆச் செய்ததும் மழை பொழிந்தது. அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி

    5. பிரர்த்திக்கும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகை காட்டிக்கிப்லாவை நோக்கி பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத்(ரலி) நூல்: புகாரி

    பிரார்த்திக்கும் போது கைகளை உயர்த்த வேண்டும்
    நபி(ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது வேறு எந்த பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி

    7. நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க மக்களோடு சென்றனர். நின்றாவது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகுகிப்லாவை நோக்கினார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள் அவர்களுக்கு மழை பொழிந்தது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத்(ரலி) நூல்: புகாரி

    மழைவேண்டி தொழுவதற்கு முன்னால் மிம்பரில் நின்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்திக்கும் முறைகிப்லாவை முன்னோக்கி தம் இரு பின்னங்கைகளை அக்குள் வெண்மை தெரியும் அளவுக்கு உயர்த்தி பிரார்த்தனை புரிய வேண்டும் என்பது மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. மழை வேண்டிப் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் விசேஷமான பிரார்த்தனை எதுவும் கற்றுத் தரவில்லை என்றாலும் பிரார்த்தனையில் நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

    9. ''அல்லாஹும்ம அஸ்ம்னா'' இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று மூன்றுமுறை பிரார்த்திதார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி

    10. நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யªது(ரலி) நூல்கள்: புகாரி

    11. நபி(ஸல்) அவர்கள் எளிய உடையணிந்து, பணிவானவர்களாக, நிதாமான நடையுடன், இறைவனிடம் மன்றாடியவர்களாக (தொழும் திடலுக்கு) சென்றார்கள். மேலும் பெருநாள் தொழுகை தொழுவதும் போன்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். உங்களது இந்த உரையைப் போன்று உரையாற்றவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி

    கிரகணத் தொழுகையின் விபரம்

    உலகில் கிரகணங்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன, விண்கோளங்களில் சூரியன், சந்திரன் நேர் எதிரே சந்திக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகிறபோது, அவை விலகும் வரை, நபி(ஸல்) அவர்கள் அவற்றுக்காக விசேஷத் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆகவே சூரிய, சந்திர கிரகணங்களின் போது, அவற்றுக்கென விசேஷத் தொழுகை நடத்துவது நபிவழியாகும்.

    கிரகணத் தொழுகைக்காக மக்களை எவ்வாறு அழைக்க வேண்டும்?

    நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது ஓர் அழைப்பாளரை ''அஸ்ஸலாத்து ஜாமிஆ'' தொழுகை தயார் நிலையில் (புறப்பட்டு வாருங்கள்!) என்று அழைக்கும்படி அனுப்பி வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்)

    கிரகணத் தொழுகை எத்தனை ரகாஅத்து அதை எவ்வாறு தொழவேண்டும்?

    நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப்பின் மக்கள் அணிவகுத்து நிற்க, உடன் தக்பீர் கூறி (தொழுகையை துவங்கி)னார்கள். பிறகு நீண்ட கிராஅத் ஓதிவிட்டு, தக்பீர் கூறி நீண்ட ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமின்ஹமிதஹ் - ரப்பனா வலக்கல்ஹம்து' என்று கூறி எழுந்து நின்றார்கள்.

    ஆனால் உடன் ''ஸஜ்தா'' செய்யாமல் மீண்டும் நீண்ட ''கிராஅத்'' ஓதினார்கள். எனினும் இது முந்தைய கிராஅத்தைவிட சற்று குறைவாக இருந்தது. பிறகு தக்பீர் கூறி முந்தைய ருகூஃவை விட சற்று குறைவாக ருகூஃ செய்தார்கள். பிறகு ''ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ் - ரப்பனா வலக்கல் ஹம்து'' என்று கூறி (எழுந்து நிற்ககலா)னார்கள்.

    பிறகு ''ஸஜ்தா'' செய்தார்கள். பிறகு இவ்வாறே மற்றொரு ரகாஅத்திலும் செய்துவிட்டு, (இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம்) 4 ருகூஃகளையும், 4 ஸஜ்தாக்களையும் நிறைவு செய்தார்கள். (இவ்வாறு) அவர்கள் தொழுது முடிக்குமுன் சூரியன் கிரகணத்திலிருந்து விடுபட்டு விட்டது.

    பிறகு எழுந்து மக்களுக்கு குத்பா சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு நிச்சயமாக சூரியனும், சந்திரனும் கண்ணியமும், மகத்துவமுமிக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ அவற்றில் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் சூரிய கிரகணம், சந்திரகிரகணம் ஆகியவற்றைக் கண்டால் உடனே தொழுகைக்கு விரையுங்கள்! என்று கூறினார்கள் (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    மேற்காணும் அறிவிப்பின் மூலம், கிரகணத் தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போல் அல்லாமல், ஒரு ரகாஅத்துக்கு இரண்டு ருகூஃகளையும், இரண்டு ஸஜ்தாகளையும் கொண்டது என்பதையும், அது இரண்டு ரகாஅத்துகள் தான் என்பதையும், அவ்விரு ரகாஅத்துகளிலும் நீண்ட சூராக்கள் ஓத வேண்டும்.

    ஆனால் முதலாம் ரகாஅத்தில் ஓதப்படும் சூராவைவிட, இரண்டாம் ரகாஅத்தில் ஓதப்படக்கூடியது குறைவாகயிருக்கவேண்டும். இவ்வாறே முதலாம் ருகூஃவை விட இரண்டாம் ருகூஃ சற்று குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் அறிகிறோம்.

    ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவுக்கும் அதிகமானவை இடம் பெற்றுள்ள அறிவிப்புகளின் நிலை:

    ஒரு ரகாஅத்துக்கு 3 ருகூஃகள் வீதம் 2 ரகாஅத்துகளுக்கும் 6 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின் போது செய்தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), திர்மிதீ)

    ஒரு ரகாஅத்துக்கு 4ருகூஃகள் வீதம், 2 ரகாஅத்துகளுக்கும் 8 ருகூஃகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (இப்னுஅப்பாஸ்(ரழி), முஸ்லிம்)

    ஒரு ரகாஅத்துக்கு 5 ருகூஃகள் வீதம் இரண்டு ரகாஅத்துகளிலும் (10 ருகூஃகள்) நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையின்போது செய்தார்கள். (உபையுபின் கஃபு (ரழி), அபூதாவூத்)

    திர்மிதீயில், இடம் பெற்றுள்ள ''மூன்று ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு, இவ்வாறே முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ''நான்கு ருகூஃகள் செய்தார்கள்'' என்ற அறிவிப்பு ஆகியவற்றின் தொடரில், ''தாவூஸ்'' இடமிருந்து ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் இவ்வறிவிப்பை எடுத்துக் கூறியுள்ளார்.

    ஆனால் ''ஹபீபுபின் அபீஸாபித்'' என்பவர் ''தாவூஸ்'' அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராயுள்ளார். ஆகவே இவ்விரு அறிவிப்புகளும் ''மக்தூஃ'' அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டவையாயிருப்பதால் பலகீனமானவையாகும்.

    எனினும் மூன்று ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பு மட்டும், ஜாபிர்(ரழி) ஆயிஷா(ரழி) ஆகியோரின் மூலம் முஸ்லிமில் அறிவிப்பாளர் தொடர் முறையானவையாக அமைந்துள்ளது. ஐந்து ருகூஃகள் செய்தார்கள் என்பதற்கான அறிவிப்பின் தொடரில் ''அபூஜஃபருர்ராஜீ'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமற்றவர், பலகீனமானவர் என்று அஹ்மத், நஸயீ ஆகியோர் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இவ்வறிவிப்பு பலகீனமானதாகும்.

    கிரகணத் தொழுகையை மற்ற தொழுகையைப் போன்று வழக்கம் போல் ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும், 2 ஸஜ்தாகளும் செய்து தொழுதல்:

    ''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது (சாதாரணமான) உங்கள் தொழுகையைப் போல் 2 ரகாஅத்துகள் தொழுதார்கள்'' (அபூ பக்ரா(ரழி), நஸயீ)
    ''நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் தொழுகையின் போது) இரு சூராக்களை ஓதி, இரு ரகாஅத்துகள் தொழுதார்கள்' (அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா(ரழி), முஸ்லிம்)

    ஒரு நாள் நாங்கள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்த போது, சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தமது ஆடையை இழுத்துக்கொண்டு பீதியடைந்தவர்களாக புறப்பட்டு வந்து 2 ரகாஅத்துகள் நீட்டித் தொழுதார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கும், சூரியன் கிரகணத்திலிருந்து விடுபடுவதற்கும் நேரம் சரியாகயிருந்தது. பிறகு அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, நிச்சயமாக சூரியனும், சந்திரனும அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாயுள்ளன. மேலும் அவற்றில் யாருடைய இறப்புக்காகவோ, பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அவை கிரகணம் பிடிக்கும் நிலையை நீங்கள் கண்டால் நீங்கள் தொழக்கூடிய பர்ளு தொழுகையைப் போல் (அதற்காக தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினார்கள். (கபீஸத்துல்ஹிலால்(ரழி), நஸயீ)

    மேற்காணும் இவ்வறிவிப்புகள் நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையைச் சாதாரணத் தொழுகை போன்றே ஒரு ரகாஅத்தில் ஒரு ருகூஃவும் 2ஸஜ்தாகளும் செய்து தொழுதுள்ளார்கள் என்பதை உணர்த்துவதோடு, இவ்வாறு தொழும்படியும் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. இவையும் ஸஹீஹான அறிவிப்புகளாயிருப்பதால் இவ்வாறும் தொழுவது ஆகுமென்றிருப்பினும் ஒரு ரகாஅத்தில் 2 ருகூஃவும் 2 ஸஜ்தாவும் என்ற வகையில் இரண்டு ரகாஅத்துகளிலும் மொத்தம் 4 ருகூஃகளும், 4 ஸஜ்தாகளும் என்ற அமைப்பில் புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்புகளின் படி கிரகணத் தொழுகை தொழுவதே மேலாகும். ஏனெனில் மிகமிக நம்பகமான இருபெரும் நூல்களில் இவ்வறிவிப்பு இடம் பெற்றிருப்பதோடு, இவற்றை அறிவிக்கும் சஹாபாக்கள், மற்ற அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். சஹாபாக்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும், வயதால் மூத்தவர்களாகவுமுள்ளார்கள்.

    கிரகணத் தொழுகையில் கிராஅத்தை எவ்வாறு ஓதவேண்டும்?

    ''நபி(ஸல்) அவர்கள் கிரகணத தொழுகையில் கிராஅத்தை சப்தமாக ஓதினார்கள்'' (ஆயிஷா(ரழி), புகாரீ,)

    ''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கிரகணத்தின்போது தொழ வைத்தார்கள். அதில் அவர்களின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை'' (ஸமுரா(ரழி), அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மக்களுடன் தொழுதார்கள். அப்போது சூரத்துல் பகராவைப் போன்றதோர் (சூராவை ஓதும்) அளவு வெகுதூரம் நின்றார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

    மேற்காணும் அறிவிப்புகளில் முதலாம் அறிவிப்வில் நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ''கிராஅத்'' ஓதியதாகவும், இரண்டாவது அறிவிப்பில் கிராஅத்தின் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை என்பதாகவும், மூன்றாவது அறிவிப்பில் சூரத்துல் பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு வெகுநேரம் நின்றார்கள் என்றுமிருப்பதால் இவ்வறிவிப்பும் சப்தமாக ஓதவில்லை என்பதையே ஊர்ஜிதம் செய்கிறது. காரணம், நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதியிருந்தால் இந்த சூராவைத்தான் அவர்கள் ஓதினார்கள் என்று குறிப்பிட்டுக்கூற வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர்கள் சப்தமாக ஓதாமல் இருந்ததன் காரணமாகவே சூரத்துல பகராவைப் போன்றதோர் சூராவை ஓதும் அளவு நின்றார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

    ஆகவே மேற்காணும் இருவகையான அறிவிப்புகளும் ஸஹீஹானவையாயிருப்பதால் அவ்விருவகை ஹதீஸ்களின்படி அமல் செய்வது ஆகுமானதாயிருப்பினும் பொதுவாக ஹதீஸ்களில் ஒரு விஷயம் நடந்துள்ளது என்றும், அல்லது அது நடக்கவில்லை என்றும் இருவிதமான அறிவிப்புகள் இடம் பெறும் சந்தர்ப்பத்தில் விஷயம் நடந்துள்ளதென்று கூறும் அறிவிப்புக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்ற அடிப்படையில், கிரகணத்தொழுகையில் கிராஅத்தைச் சப்தமாக ஓதுவதே முறையாகும் என்பதை அறிகிறோம்.

    கிரகணத் தொழுகையின் போது குத்பா - சொற்பொழிவு

    ''(கிரகணத்தொழுகை பற்றிய விபரத்தை எடுத்துக் கூறிவிட்டு) பிறகு நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்கேற்றவாறு அவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு ''அம்மாபஃது'' இதன்பின்னர் என்று கூறி (குத்பா வைத்துவங்கி)னார்கள். (அஸ்மா(ரழி), புகாரீ)

    எனவே கிரகணத் தொழுகைக்குப் பின் நடத்தப்படும் குத்பா சொற்பொழிவு சாதாரணமான சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டுள்ளதே அன்றி ஜும்ஆவின் போது நிகழ்த்தப்படும் சொற்பொழிவைப் போன்று இரண்டு குத்பா - சொற்பொழிவுகள் நிகழ்த்தியதாகவோ, இரு குத்பாக்களுக்கு மத்தியில் நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து எழுந்திருந்தார்கள் என்பதாகவோ ஹதீஸ்கள் இல்லை என்பது தெளிவு.

    கிரகணத்தின்போது தொழுவதோடு, மேலதிகமாகச் செய்ய வேண்டிய வேறு பல அமல்கள்:

    ''நீங்கள் கிரகணத்தைப் பார்த்தால் உடனே அல்லாஹ்வின் திக்ருதியானம், துஆ, பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றை மிக பயத்தோடு செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூமூஸா (ரழி), புகாரீ, முஸ்லிம்)

    மற்றொரு அறிவிப்பில் ''நீங்கள் கிரகணத்தைக் கண்டால் உடனே அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். மேலும் தக்பீர் கூறுங்கள். தொழுதுவிட்டு தானதருமம் செய்யுங்கள்'' என்று . (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    ஆகவே கிரகணத்தின்போது தொழுவதோடு, தானதருமம் செய்தல், திக்ருசெய்தல், துஆ கேட்டல், பாவமன்னிப்புத் தேடல் ஆகியவற்றைச் செய்வதும் நபி வழியாகும்.

    கிரகணத் தொழுகையில் பெண்கள்

    கிரகணத் தொழுகையில் பெண்கள் கலந்து கொண்டதை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

    13. ஒரு சூரிய கிரகணத்தின் போது ஆயிஷா(ரலி) இடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி) மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது? என்று வினவினேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து ''ªப்ஹானல்லாஹ்'' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று வினவினேன். அதற்கு ''ஆம்'' என்று சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை முடித்ததும் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    14. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டவர்களாக உடனே கவச ஆடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார்கள். பிறகு அவர்களுடைய ஆடையை பெற்றுக் கொண்ட போது அதை அணிந்து கொண்டார்கள். நான் என்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டு மஸ்ஜிதிற்குள் நுழைந்தேன். நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) நிற்க கண்டேன். அவர்களுக்கு பின்னால் நானும் நின்று கொண்டேன். நான் அமர்ந்து விடலாமா என்று நினைக்குமளவுக்கு நீண்டநேரம் (தொழுகையில்) நின்றார்கள். பிறகு நான் திரும்பி பார்த்தபோது என்னை விட பலம் குன்றிய பெண்ணை நிற்க கண்டேன். இவரோ என்னை விட பலம் குன்றியவர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்தார்கள். ருகூவை நீட்டினார்கள் பிறகு தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றார்கள் ஒருவர் தொழுகைக்கு வந்து என்ன இவர் இன்னும் ருகூவு செய்யவில்லையா? என்று நினைக்குமாளவுக்கு நின்றார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி) நூல்: முஸ்லிம்

    சூரிய சந்திர கிரகணத்தில் பெண்களும் கலந்து கொள்ளலாம். ஹதீஸ்களின் அடிப்படையில் சூரிய, சந்திர கிரகணத்தில் பெண்களும் கலந்து கொள்ளலாம். ஹதீஸ்களின் அடிப்படையில் சூரிய, சந்திரகிரணத் தொழுகை தொழுது இறைத்தண்டணையில் காப்போமாக!

    ஜனாஸாத் தொழுகை

    இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் பாகுபாடின்றி மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.
    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேணடும். (3:185)

    இது அல்லாஹ் விதித்த விதியாகும். இதிலிருந்து தப்பியவர் உலகில் எவறுமில்லை என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

    அவர்களுடைய தவணை (மரணவேளை) வந்துவிட்டால் ஒரு கணமேனும் (உயிர் பறிக்கப்படுவதில்) அவர்கள் (வானவர்கள்) பிந்தவு மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (16:61)

    மனிதர்கள் வாழும் போது கண்ணியம் அளித்த இஸ்லாம் மரணிக்கும் போதும் கண்ணியப்படுத்துகிறது. மரணிக்கும் மனிதர்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் அவர்களுக்காக ஜனாஸா தொழ வைக்குமாறும் அதன்மூலமாக அவர்களுக்காக பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்விடம் பிராதிக்குமாறும் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்படும். ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்லுமாறும் அவர்கள் அடக்கம் செய்து வரும் வரை பின்தொடர (முஸ்லிமான) நம்மை நபி(ஸல்) அவர்கள வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் இது முஸ்லிம் சகோதரரர்கள் மத்தியில் பேணப்பட வேண்டிய உரிமையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    1. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது நோயாளியை விசாரிப்பது ஜனாஸாவை பின் தொடர்வது விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது தும்மு கொண்டிருப்பவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    2. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும் படி) கட்டளையிட்டார்கள். ஜனாஸாவை பின் தெடர்வதால், நோயாளியை நலம் விசாரித்தல், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளித்தல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், செய்த சத்தியத்தை பூரணமாக நிறைவேற்றுதல் ஸலாமுக்கு பதில் கூறுதல், தும்முபவருக்கு வர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ் என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராவுபின் ஆஸிப்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    3. யார் ஈமானுடன், நன்மையை நாடியவராக முஸ்லிமுடைய ஜனாஸாவை பின்தொடர்ந்து ஜனாஸாவை தொழ வைக்கப்படும் வரை (ஜனாஸாவுடன்) இருக்கிறாரோ நிச்சயமாக இரண்டு கிராஅத் நன்மையளவு உள்ள கூலியை பெற்றவராக திரும்புகிறார். ஒவ்வொரு கிராஅத்தின் அளவு உஹது அளவுள்ளதாகும். எவர் ஜனாஸாவைத் தொழுது அது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னால் திரும்பிவிடுகிறாரோ நிச்சயமாக ஒரு கிராஅத் நன்மையை பெற்றவராக திரும்பிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

    4. யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ''இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை பின் தொடர வேண்டுமென்றும் அது ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரருக்கு செய்ய வேண்டிய உரிமையாகும் என்றும், இதனால் அவருக்கு மதினாவில் உள்ள உஹது மலை அளவுள்ள நன்மை கிடைக்குமென்றும் நற்செய்தி வழங்கினார்கள் நபி(ஸல்) அவர்கள் ஆனால் இன்றுள்ள நிலமையை காணுகிறபோது கைசேதப்பட வேண்டியதாக இருக்கிறது மனிதநேயமே அற்றுபோய்கிடக்கிறது. முஸ்லிமான ஜனாஸாவைத் தொழுவதோ அல்லது அதை பின்தொடர்வதோ மேலும் அடக்கம் செய்யப்படும் வரை காத்திருப்பது ஜனாஸாவின் நெருங்கிய ரத்தபந்தமுள்ள உறவினர்களே மற்றவர்கள் ஏறிட்டு கூட பார்ப்பதில்லை. ஏன் ஜனாஸாவின் உறவினர்கள் கூட இவ்வாறு நடந்து கொள்வது வேதனையிலும் வேதனை காணரம் பொருளாதார பேதமை, ஒன்றுபட்டு இருக்கவேண்டிய முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் அன்னியொன்யம், இதனால் மனித நேயமே பாதிக்கப்படுகிறது. இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் சமுதாயம் மேற்கண்ட காரணம்ளை களைந்து நபி(ஸல்) அவர்களின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும்.

    பெண்கள் ஜனாஸாவை பின் தொடரலாமா?

    ஜானாஸாவை பின்தொடர பெக்ளுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா என்று ஐயம் ஏற்படலாம்.
    ஸஹாபிய பெண்மணி உம்மு அதிய்யா(ரலி) அவர்களே விளக்கமளித்துள்ளார்கள்.

    5. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை. நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸா தொழுகைகளில் ஸஹாபிய பெண்மணிகளில் ஒருபெண்மணி ஜனாஸாவை பின் துயர்ந்து சென்றதாக ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

    6. ''நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவைபின் தொடர்ந்து சென்றபோது ஒரு பெண் அதை பின்தொடர்ந்து வருவதை உடனிருந்த உமர்(ரலி) கண்டு சத்தம் எழுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''உமரே அவளை விட்டு விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா

    எனினும் ஆண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லை பொது நலன் கருதியே நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். மேலும் பெண்கள் ஜனாஸாத் தொழுகை தொழவும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

    7. பிரசவத் தொடகத்துடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுத போது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழுதேன்''. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

    வேறு சில ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் பெண்கள் தொழுத போது அவர்கள் தடுக்கவுமில்லை பெண்கள் தொழுமாறு வலியுறுத்தவுமில்லை.

    ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர் நடந்துகொள்ளும் முறைகளையும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

    8. நீங்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள். அதைப்பின் தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்காரவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

    9. உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டும் அதனுடன் நடந்து செல்லபோவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரை கடந்து செல்லும் வரை அல்லது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆமீர் பின் ரபீ(ரலி) நூல்கள்: புகாரி

    ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் அது கீழே வைக்கப்படும் வரை உட்கார கூடாது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர முடியாதவர்கள் அவரை விட்டும் கடக்கும் வரை அல்லது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஜனாஸா வைக்கப்படுமானால் அதுவரை நிற்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    ஜனாஸாத் தொழுகையை ஒரு தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொழுவதின் சிறப்பை ஏற்கனவே ஆரம்ப ஹதீஸ்களில் கண்டோம். அது சம்பந்தமான ஒரு சில ஹதீஸ்களை காண்போம்.

    10. ஒரு ஜனாஸாவை முஸ்லிம்களில் நூறுபேரைக் அடையக் கூடிய ஒரு குழு தொழுவார்களேயானால் மேலும் அவருக்காக ஷிபா அத் செய்வார்களேயானால் அவர் விஷயத்தில் அவர்களுடைய பரிந்து ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்

    11. நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்த ஒரு முஸ்லிமான ஜனாஸாவுக்கும் அதற்காக அல்லாஹ்வுக்கு எதைக் கொண்டும் இணை வைக்காத நாற்பது நபர்கள் நின்று தொழுவார்களேயானால் அவர் விஷயத்தில் அவர்களுடைய பரிந்துரை அல்லஹ் ஏற்றுக் கொள்வான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம்

    ஜனாஸாத் தொழுகை நடத்துவதின் மாண்பினை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஜனாஸாத் தொழுகை தொழுபவர்களால் செய்யப்படும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள்.

    ஜனாஸாத் தொழுகை மற்ற கடமை, உபரித் தொழுகையை விட வித்தியாசமானதாகும் இதில் ருகூவோ, அல்லது ஸுஜுதோ அறவே கிடையாது. மாறாக பிரார்த்தனை மட்டும் தான் என்பதை ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் தெளிவாக்குகின்றன. ஜனாஸாத் தொழும் முறையை பார்ப்பதற்கு முன்னால் யாருக்கு ஜனாஸா தொழுகை நடத்தல் வேண்டும், யாருக்கெல்லாம் ஜனாஸாத் தொழுகை கூடாது என்பதை சுருக்கமாக அறிந்துக் கொள்வோம். முஸ்லிமான ஆண் பெண் ஆகிய அனைவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் இதில் யாருக்கும் தடையில்லை ஏன் அவர்கள் நோயாளியாக இருந்தாலும், அல்லஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். மேலும் சிறுவர் சிறுமியர் பச்சிளம் குழந்தைகள் போன்ற பாவம் அறியா பருவமடையாத குழந்தைகள் இறந்துவிட்டால் ஜனாஸாத் தொழுகை உண்டா என்று ஐயங்கள் ஏற்படலாம்.

    குழந்தைகளுக்கு ஜனாஸாத் தொழுகை விஷயத்தில் இருவிதமான கருத்துகள் நிகழ்கின்றன.

    12. நபி(ஸல்) அவர்கள் தம் மகன் இப்ராஹீம்(ரலி) இறந்த போது அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹமத்

    13. அன்சாரி குழந்தைகளில் ஒரு குழந்தையில் ஜனாஸா நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயீ

    14. அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் பைளா என்ற நபரின் இருமகன்களுக்கும் பள்ளிவாயிலில் தொழவைத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்

    சிறுவர்களுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஜனாஸா தொழுகை உண்டு.

    சிறுவருக்கு (ஜனாஸா) தொழவைக்கப்படும். (அபூதாவூதுடைய அறிவிப்பில் ''குறைமாதக் குழந்தைக்கும் தொழ வைக்கப்படும்'' என்றுள்ளது) மேலும் அதன் பெற்றோரின் பாவமன்னிப்புக்கும், (அல்லாஹ்வின்) ரஹ்மத்துக்கும் துஆ செய்யப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முகீரத்துபின்ஷுஃபா(ரழி) அபூதாவூத், நஸயீ, திர்மிதீ)
    ''நபி(ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகளின் சிறுவர்களில் இறந்த ஒருவரை (மய்யித்தாக) கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் அச்சிறுவரின் மய்யித்துக்கு தொழ வைத்தார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், நஸயீ)

    தொழவைக்கப்பட வேண்டிய குறைமாதக் குழந்தை எத்தனை மாதத்துடையதாயிருத்தல் வேண்டும்?

    ''நிச்சயமாக உங்களில் ஒவ்வொரு வரும் படைக்கப்பட்ட விபரமாவது: ஒருவர் தமது தாய் வயிற்றில் 40 தினங்கள் இந்திரியமகாவும், அது போன்றே (40 தினங்கள்) கர்ப்பப்பையில் ஒட்டி உறிஞ்சும் தன்மை வாய்ந்ததாகவும் (ஆக்கப்பட்டு,) பின்னர் அதேபோன்று (40தினங்கள்) தசைபிண்டமாகவும் அமைக்கப்படுகிறார். பிறகு (தசைப்பிண்டமாயுள்ள) அவரிடத்தில் நான்கு விஷயங்களைக் கொண்டு ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்பி, அவருடைய அமல், அவருடைய தவணை, அவருடைய ரிஜ்கு-வருவாய், நற்பாக்கியசாலி, அல்லது துர்பாக்கியசாலி ஆகியவை எழுதப்பட்டு, பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

    இந்த ஹதீஸின்படி வயிற்றிலுள்ள சிசுவுக்கு மூன்று நாற்பது தினங்கள் (4 மாதங்கள்) பூர்த்தியானவுடன் உயிர் ஊதப்படுகிறது என்பதை அறிகிறோம். 4மாதங்களுக்குப்பிறகு மரித்துப் பிறக்கும் குழந்தையைத்தான் மரித்த குழந்தை என்று கூற முடியுமே அன்றி, அதற்கு முன்னால் பிறந்ததை மரித்த குழந்தை என்று கூறமுடியாது. காரணம் அதற்கு உயிர் ஊதப்படவேயில்லை. ஆகவே 4 மாதங்கள் பூர்த்தியாகி தாயின் வயிற்றிலிருந்து மரித்துப் பிறக்கும் குழந்தையைத் தான் கழுவி, குளிப்பாட்டி தொழவைக்கவேண்டும். அதற்கு முன் தாய் வயிற்றிலிருந்து வெளிவந்ததைத் தொழவைக்காமல் கபனிட்டு அடக்கி விடவேண்டும்.

    இதற்கு மாற்றமான ஹதீஸ்களின் நிலை.

    ''குறைமாதக் குழந்தை அழும் சப்தத்தோடு பிறந்து இறந்தால் அதற்கு தொழவைக்கப்படும்; மேலும் அது வாரிசுரிமை பெற்றதுமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), இப்னுமாஜ்ஜா, தாரிமி)

    இதன் அறிவிப்பாளர் தொடரில் ''ரபீஉபின்பத்ரு'' என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் புகாரீ, அபூதாவூத் ஆகியோர் பலகீனமானவர் என்று கூறியிருக்கின்றனர்.

    மேலும் இக்கருத்தை மையமாகக் கொண்டு, ''குழந்தை அழும் சப்தத்தோடு பிறந்தலான்றி அதற்கு தொழவைக்கப்படமாட்டாது, இன்னும் வாரிசுரிமை பெறவும் மாட்டாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக, திர்மிதீயில் பதிவாகியள்ள அறிவிப்பு பற்றி இமாம் திர்மிதீ அவர்களே ''இந்த அறிவிப்பு மவ்கூஃபு - ஸஹாபியின் சொல்தான் என்பதற்கு பல அறிவிப்புகளின் மூலம் சான்றுகள் இருக்கின்றனவேயன்றி, மர்ஃபூஉ - நபி(ஸல்) அவர்களின் சொல் என்பதற்கான சரியான சான்றுகள் எதுவுமில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே உயிர் ஊதப்பட்டு மனித சமுதாயத்தில் ஓர் அங்கமாகிவிட்ட ஒரு குழந்தை உயிருடன் பிறந்து பின்னர் இறந்தாலென்ன? மரித்துப்பிறந்தாலென்ன? அதற்கு தொழவைப்பதே முறையாகும். ஏனெனில் ''குறைமாதக்குழந்தைக்கும் தொழவைக்கப்படும்'' என்ற மேற்காணும் ஹதீஸ் பொதுவாயிருப்பதோடு, நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவே முறையான ஆதாரமுமிருப்பதால் 4 மாதங்களுக்கு மேல் பிறக்கும் குழந்தை மரித்துப் பிறந்தாலும் (அதற்கும்) தொழவைக்கவேண்டும் என்பதை அறிகிறோம்.

    இறந்த குழந்தைக்கு தொழ வைக்கும் போது என்ன துஆ ஓத வேண்டும்?

    இறந்த குழந்தைக்கு தொழ வைக்கும் போது நபி(ஸல்) அவர்கள் என்ன துஆ ஓதினார்கள் என்ற விபரம் ஹதீஸ்களில் காணப்படாததால் இமாம் புகாரீ அவர்கள் தாபியீன்களில் ஒருவராகிய ஹஸனுல் பஸ்ரீ(ரஹ்) அவர்கள் குழந்தை மய்யித்துக்கு ஓதி வந்துள்ள துஆ ஒன்றை அறிவிப்பாளர் தொடரின்றி தமக்குக் கிடைத்துள்ளதாக, பின்வருமாறு புகாரீயில் பதிவு செய்துள்ளார்கள். அதாவது:

    ஹஸனுல்பஸரீ அவர்கள் குழந்தை மய்யித்துக்கு தொழவைக்கும் போது, சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதோடு,

    ''அல்லாஹும்மஜ்அல்ஹு -லனா- ஸலஃபன் - வ- ஃபரத்தன் -வ- துக்ரன் -வ-அஜ்ரா''

    பொருள்: யா அல்லாஹ் இக்குழந்தையை எங்களுக்கு பலனுள்ளதாகவும், எங்களுக்கானவற்றை முற்கூட்டியே தயார் செய்யக்கூடியதாகவும், மறுமைக்கானவற்றை எங்களுக்கு சித்தப்படுத்தக்கூடியதாகவும் (நாங்கள்) நற்கூலி பெறுவதற்குக் காரணமானதாகவும் ஆக்கி அருள்வாயாக!

    ஆகவே மேற்காணும் இந்த துஆவையோ, அல்லது இது போன்று ஓரளவேனும் ஆதாரமான மற்ற துஆவையோ, அல்லது மேற்காணும் வகையில் முகீரத்துபின் ஷுஃபா(ரழி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெற்றிருப்பது போல், சிறுவருக்கு தொழவைக்கப்படும், மேலும் அவர்களின் பெற்றோரின் பாவமன்னிப்புக்கும், அல்லாஹ்வின் ரஹ்மத்துக்கும் துஆ செய்யப்படும்'' என்பதற்கேற்ப துஆ செய்துகொள்வதும் முறையாகும். நபி(ஸல்) அவர்கள் தம் மகனார் இப்ராஹீம்(ரலி) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லையென்றாலும் மற்ற குழந்தைகளின் ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தி அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். எனவே குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை தொழலாம் என்பது மேற்கண்ட ஹதீஸ் மூலமாக தெளிவாகிறது. மேலும் குற்றங்களால் மரணதண்டனை பெற்றவர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.

    15. ஜுஹைனா கூட்டத்தாரைச் சோந்த பெண் விபச்சாரத்தின் குற்றத்திற்காக மரண தண்டனை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இம்ரான்(ரலி) நூல்: முஸ்லிம், நஸயீ

    16. பாவசம் செய்தவர், கடனாளி, மற்றும் போரில் மோசடி செய்தவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தவில்லையென்றாலும். உங்களது தோழருக்காக தொழுங்கள் என்று மற்ற தோழர்களை பார்த்து கூறுவார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

    இவர்கள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம் என்று அங்கீகாரம் அளித்துள்ளார்கள். எனவே ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். தற்கொலை செய்தவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    17. ஒரு மனிதர் நோயுற்றபோது அவர் திடுக்கத்துள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்து விட்டார் என்று சொன்னார். அவரிடம் அவர் இறந்தது உனக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் அவரை (இறந்து போக) கண்டேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். பிறகு அவர் (நோயாளிடம்) வந்ததும் அவர் கூர் ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இறந்தது உனக்கு எப்படி தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்து கொண்டார். நீ பார்த்தாயா? என்று நபி(ஸல்) அவர்கள் வினவ அதற்கு அவர் ''ஆம்'' என்றதும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறென்றால் நான் அவருக்கு தொழுவிக்க மாட்டேன் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

    தற்கொலை செய்தவனுக்கு நரகம் தான் தண்டனை என்று நபி(ஸல்) அவர்கள் (வேறு பல ஹதீஸ்களில்) குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்த மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி பிறர் தற்கொலை செய்தவறுக்கு ஜனாஸாத் தொழுகை தொழவைக்கவும் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே தற்கொலை செய்தவரை குளிப்பாட்டி அப்படியே அடக்கி விடவேண்டும்.

    மேலும் இணைவைப்பாளர் மற்றும் முனஃபிகீன்களுக்கும் ஜனாஸா தொழுகை தொழுவிக்க கூடாது.

    இணைவைப்பவர்கள் தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் என்று தெளிவான பின் அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பதும் நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் உகந்ததல்ல. (அல்குர்ஆன் 9:113)

    மேலும் நயவஞ்சகர்களுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தல் கூடாது என்றும் எனினும் அவர்கள் இரட்டைவேடம் பூண்டு இஸ்லாத்திற்கெதிராக பெறும் சூழ்ச்சி செய்து இஸ்லாத்தை இழிவுப்படுத்துகிறார்கள். இவர்கள் பம்ரங்கமாக அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூதரையும் நிரகரிப்பவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் முனாஃபீகின்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபய்யி இறந்தபோது அவருடைய ஜனாஸழவைத் தொழவைத்தபோது அல்லாஹ் கண்டித்து வசனத்தை இறக்கியருளினான்.
    அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிராத்தனைக்காக) நிற்கவேண்டாம்.

    (குர்ஆன் வசனத்தொடர்) ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள். (9:84)

    ஜனாஸாத் தொழுகை தொழும் முறை:-

    ஜனாஸாத் தொழுகை நடத்தும் முறையை நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். நாமும் அவர்கள் செயல்முறைப்படுத்தி அடிப்படையில்தான் தொழவேண்டும்.

    ஜனாஸாத் தொழுகையில் அணிஅணியாக நிற்கவேண்டும்

    18. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுவித்தார்கள். அப்போது தான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி

    19. நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷியின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

    ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று செயல் விளக்கம் காட்டியுள்ளார்கள். மேலும் மற்றொரு ஹதீஸில் ஐந்து தக்பீர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைது இப்னு அர்க்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கும் எனவே ஜனாஸாத் தொழுகையில் ஐந்து தக்பீரும் கூறலாம்.

    முதல் தகபீரில் ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதவேண்டும்

    20. நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன் அப்போது அவர் பாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்) என்று கூறினார். அறிவிப்பவர்: தல்ஹா(ரலி) நூல்: புகாரி

    இரண்டாம் தக்பீரில் ஸலவாத்தும் மூன்றாம் தக்பீரில் பிராத்தனைகளையும் புரியவேண்டும்.

    21. ஜனாஸாத் தொழுகையில் முதல் தக்பீருக்குப் பிறகு உள்ள மூன்று தக்பீர்களில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாவத்து சொல்வதும் தூய்மையான முறையில் (மய்யித்திற்கு) பிராத்தனை புரிவதும் ஸலாம் கூறுவதும் நபிவழியாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா நூல்கள்: ஹாகிம், பைஹகீ

    22. இரண்டாம் தக்பீரில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.

    அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
    கமாஸல்லைத அலா இப்ராஹீம் வஅலா ஆலி இப்ராஹீம
    இன்னக ஹமீதுன்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின்
    வஅலா ஆலி முஹம்மதின் காபாரக்த அலா இப்ராஹீம
    வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்

    பொருள்:
    இறைவா! முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் மீதும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தைப்போல் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்! இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்தது போல் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றாய்! அறிவிப்பவர்: கவுபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்: புகாரி

    மூன்றாம் நான்காம் தக்பீர்களில் மய்யித்திற்காக பிராத்தனை புரிய வேண்டும்.

    23. நீங்கள் ஜனாஸாத் தொழுகை தொழுவீர்களேயானால் இறந்தவருக்காக பிராத்தனையை உரித்தாக்குங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னு ஹிப்பான்

    இறந்தவருக்காக பிராத்தனை எவ்வாறெல்லாம் புரியலாம் என்பதை நபி(ஸல்) அவர்களே நமக்கு கற்றுதந்துள்ளார்கள்.

    24. நபி(ஸல்) அவர்கள் செய்த (பின்வரும்) துஆவை நான் மனனம் செய்து கொண்டேன், இந்த சிறப்பான துஆவின் காரணத்தினால் அந்த மய்யித்து நானாக இருக்க கூடாதா என்று எண்ணினேன் என்று அவுஃப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    ஹதீஸ் தொடர்

    அல்லாஹும்மக்ஃபிர்லவு வர்ஹம்ஹீவ ஆஃபிஹி வஃபு அன்ஹு
    வஅக்ரிம் நுஸுவு வவஸ்ஸூஃ மத்கலவு வஅக்ஸில்வு பில்மாயி
    வஸ்ஸல்ஜி வல்பர்தி வனக்கிஹி மினல்கதாயா கமா நக்கைதங்
    ஸவுபல் அப்யளு மினத்தனஸி வஅப்தில்ஹு தாரன்கைரன்
    மின்தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி
    வஜவுஜன்கைரன் மின்ஜவுஜீஹீ வஅத்கில்வுல் ஜன்னத
    வஅ மின் அதாபில்கப்ரி வமின் அதாபின்னார்.

    பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமாமனதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடைஅழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னுமாலிக்(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்

    25. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.

    அல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா
    வகாயிபினா வஸம்ரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா
    அல்லாஹும்ம மன் அஹ்யைதஹு மின்னா ஃபஅஹிஹு
    அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு
    மின்னா ஃபதவஃபவு அலல் ஈமான் அல்லாஹும்ம
    லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு

    பொருள்:
    யா அல்லாஹ்! எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக! இறைவா! எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக!

    எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி

    மேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். சுருங்கக்கருதி இங்கே தொகுக்கப்படவில்லை.

    ஜனாஸாத் தொழுகையில் நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறியவாறு ஸலாம் கூற வேண்டும் என்பது ஹதிஸில் தெளிவாகிறது.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டுவிட்டனர் அவற்றில் உள்ளதுதான் தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவதாகும். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரலி) நூல்கள்: தப்ரானி, பைஹகி.

    மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் முஸ்லிம்கள் வாழாப் பகுதியில் இறந்துவிட்டதனால் அவருக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதே அடிப்படையில் இறந்துவிட்டால் தொழலாம். மாறாக தொழுதவறுக்காக மீண்டும் காயிப் ஜனாஸா தொழ அனுமதியில்லை மேலும் நபி(ஸல்) அவர்கள் இறந்து அடக்கப்பட்ட பணியாளர் கப்ருக்கருகில் தொழுததை ஆதாரம் காட்டுகிறார்கள் ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் ஸஹாபாக்கள் அடக்கிவிட்டதால் நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழுதார்கள் பிறகு ''நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்கு தெரிவிக்காமல் இருக்க கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவனுக்கு அருட்கொடையாகும் '' என்றார்கள். அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் நூல்கள்: இப்னுமாஜா

    நபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில்மரணிக்கும் எந்த நபரும் அவரைப் பற்றி உடன் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுளளார்கள் இது நபி(ஸல்) அவர்கள் கப்ருகளில் போய் தொழுததை ஆதாரமாக எடுத்து கொள்ளமுடியாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் மதினாவில்இருக்கும்போது மக்காவில் இறந்த ஸஹாபிகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.

    ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?

    நிச்சயமாக உமர்(ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும், பெரு நாள் தொழுகையிலும் (கூறப்படும்) ஒவ்வொரு தக்பீரின் போதும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். (பக்ருபின் ஸவாத்(ரழி) பைஹகீ, அல்அஸ்ரம்)

    இவ்வறிவிப்பின் தொடரில் இப்னு ''லுஹைஆ'' வெனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இது பலகீனமானதாகும். எனவே ஜனாஸா தொழுகையிலோ, பெருநாள் தொழுகையிலோ மேலதிகமாகக் கூறப்படும் தக்பீரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதாகவோ, அல்லது உயர்த்தும் படி கூறியதாகவோ ஒரு ஹதீஸும் இல்லை.

    (ஷஹீது) - போரில் கொல்லப்பட்டவருக்கும் தொழ வைக்கப்படும்.

    ''கைபர்'' போரின் போது, ஷஹீதாம் விட்ட ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவைக் கொண்டு கஃபனிட்டு, அவரைத் தமக்கு எதிரில் வைத்து தொழவைத்தார்கள். (ஹதீஸ் சுருக்கம், ஷத்தாதுபின் ஹாத்(ரழி) நஸயீ, பைஹகீ, ஹாக்கிம்)

    நபி(ஸல்) அவர்கள் ''பத்ரு, உஹது'' போர் போன்ற ஆரம்பகாலப் போர்களின் போதெல்லாம் ஷஹீதாகியவர்களுக்கு தொழவைக்கவில்லை என்பதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்பட்டாலும், பின்னர் ஹிஜ்ரீ 7ல் நடந்த ''கைபர்'' போரின் போது மேற்கண்டவாறு ஷஹீதுககு தொழவைத்துள்ளார்கள் என்பதாகவும் ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதால் அவர்களின் பிற்காலத்திய அனுஷ்டானங்களையே நாம் அமலுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

    தற்கொலை போன்ற பெரும் பாவங்கள் செய்தவரின் மய்யித்துக்கும் தொழவைக்கவேண்டும்.

    வியாதியுற்றிருந்த நபித்தோழர் ஒருவர் தம்மிடமுள்ள அம்பு ஒன்றால் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் அவ்வாறாயின் அவருக்கு நான் தொழவைக்கமாட்டேன் என்றார்கள்.
    (ஹதீஸ் சுருக்கம் - ஜாபிருபின் ஸமுரா(ரழி) முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    இவ்வறிவிப்பு பலகீனமானதாகும். ஏனெனில் இது ஸஹீஹ் முஸ்லிம் உள்பட பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருப்பினும், இதன் அறிவிப்பாளர் தொடர்கள் அனைத்திலும் ''ஸிமாக்குபின்ஹர்பு'' என்பவரே இடம் பெற்றுள்ளார்.

    இவர்பற்றி ''ஷுஃபா, இப்னு முபாரக்'' ஆகியோர் பலகீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ''இவருடைய அறிவிப்பு அடிப்படையான - முக்கியமான விஷயமாயிருப்பின், இவருடைய அறிவிப்பை மட்டும் ஆதாரமாக வைத்து எதுவும் செய்யமுடியாது'' என்று இமாம் நஸயீ அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

    இவ்வடிப்படையில் பலகீனமான இவர் இடம் பெற்றுள்ள இவ்வறிவிப்பைத்தவிர வேறு எதிலும், தற்கொலை செய்து கொண்டவர் குறித்து நபி(ஸல்) அவர்கள் ''நான் தொழவைக்கமாட்டேன்'' என்று கூறியதாக வாசகம் இடம் பெறவில்லை. ஆகவே இந்த அறிவிப்பு பலகீனமானதாம் விடுவதோடு ''தற்கொலை செய்து கொண்டவருக்கு தொழவைக்கக்கூடாது'' என்ற சட்டத்தை எடுப்பதற்கும் அருகதையற்றதாகிவிடுகிறது.

    எனவே மய்யித்தானவர், தற்கொலை செய்தல், குடித்தல், சூதாடுதல், திருடுதல், மோசடி செய்தல், தொழுகையை விடுதல், வட்டி வாங்குதல் போன்ற பெரிய பாவங்களைச் செய்த படுபாவியாயிருப்பினும் அவர் முஸ்லிமாயிருப்பின் அவருக்கு ஜனாஸா தொழவைக்கத்தான் வேண்டும். ஏனெனில் ஜனாஸா தொழுகையில் மய்யித்துக்காக பாவமன்னிப்பு தேடப்படுகிறது. பொதுவாக பாவமன்னிப்பு காபிர்களைத் தவிர மற்றவர்களுக்குச் செய்வதை குர்ஆன் தடைசெய்யவில்லை. மேற்காணும் பெரும் பாவங்களை ஒருவர் செய்வதால் பாவியாகி விடுவாரேயன்றி காஃபிராகிவிடமாட்டார். ஒருவர் நரகவாசி என்பதைத் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, அவருக்காக பாவமன்னிப்புத் தேடுவதையே அல்குர்ஆன் பின்வருமாறு தடைசெய்கிறது. முஷ்ரிக்குகள் - இணை வைப்ப வர்கள் தம் நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்பு கோருவது நபிக்கும், மூமின்களுக்கும் முறைஅல்ல.
    இப்ராஹீம் தம் தந்தைக்காக மன்னிப்புக்கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒருவாக்குறுதிக்காகவேயன்றி வேறில்லை. உண்மையில் அவர் தந்தை அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் இரக்கமுடையவராகவும், பொறுமையும், சாந்தமும் உடையவராகவும் இருந்தார். (9:113, 114)

    ஆகவே மூமின்கள் (யாவரும்) சகோதரர்களேயாவர் (49:10) என்று அல்லாஹ்வும் ''ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுக்கு சகோதரர் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்களும் கூறியிருப்பதை முன் வைத்து தற்கொலை செய்து கொண்டவர் உள்பட ஏனைய பெரும்பாவங்களைச் செய்துவிட்ட பாவியான சகோதரர்களுக்கும் நமது சகோதரர்கள் என்ற வகையில் அவர்களின் மய்யித்துத் தொழுகையை நடத்தி அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதே முறையாகும்.

    மய்யித்தை கப்ரில் அடக்கிய பிறகு அதன் அருகில் நின்று தொழவைப்பது:

    நபி(ஸல்) அவர்களால் சுகம் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒருவர் மரணமாகிவிட்டார். அவரை இரவில் ஸஹாபாக்கள் அடக்கம் செய்து விட்டு, காலையில் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள் எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்க, இரவாயிருந்ததுடன், இருளாகவுமிருந்தது; உங்களுக்குச் சிரமம் அளிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள். உடனே அவருடைய கப்ருக்கு வந்து (அதன் அருகில் நின்று) அவருக் ஜனாஸா தொழுகையைக் நிறைவேற்றினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ)

    இவ்வாறு கப்ரில் அடக்கம் செய்த பிறகு தொழுவதென்பது ஏற்கனவே தொழவைக்காமல் அடக்கம் செய்யப்பட மய்யித்தாயிருந்தால், அவசியமாகும். மேற்காணும் அறிவிப்பில் கண்டவாறு, ஏற்கனவே தொழவைக்கப்பட்ட மய்யித்தாயிருந்தாலும், முன்னால் அதற்காக தொழாதவர்கள் தொழவதும் ஆகும். ஆனால் அது கட்டாயமல்ல. சிலர் மய்யித்துத் தொழுகை தொழுதுவிட்டால் மற்றவர் மீது அக்கடமை நீங்கி விடுகிறது.

    வெளியூரில் மரணமாகியவருக்காக, மறைமுகமான (காயிப்) மய்யித்துத்தொழுகை:

    ''நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் அபீசினிய மன்னர் நஸாஷீ(ரழி) அவர்கள் மரணித்த தினத்தன்று, அவரது மரணச்செய்தியை மக்களுக்கு அறிவித்து விட்டு (மற்றொரு அறிவிப்பில், ''உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்களுடைய நாடல்லாத வேறு நாட்டில் மரணமாகிவிட்டார் என்று கூறிவிட்டு'' என்று ) தாமும் மக்களுடன் தொழும்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று அவர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி தொழவைத்தார்கள். (அபூஹுரைரா(ரலி) புகாரீ, முஸ்லிம்)

    இவ்வறிவிப்பை அடிப்படையாக வைத்து சிலர் மறைமுகமான மய்யித்துத் தொழுகை யாருக்கும், எப்போதும் தொழவைப்பது ஆகும் என்கிறார்கள் மற்றும் சிலர்.

    அ. நபி(ஸல்) அவர்கள் மட்டுமே அவர்கள் காலத்தில் இவ்வாறு மறைவான மய்யித்துத் தொழுகை நடத்தியுள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகிறதே அன்றி அவர்களுக்குப் பின்னர் மற்ற நபித்தோழர்கள் யாருக்கேனும் இவ்வாறு தொழுகை நடத்தியதாக வரலாறு எதுவுமில்லை. ஆகவே இது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது. நாம் அவ்வாறு தொழுவது கூடாது என்று கூறுகிறார்கள். வேறு சிலரோ.

    ஆ. மேற்காணும் ஹதீஸில் காணப்படும்'' உங்கள் சகோதரர் நஜாஷீ அவர்கள் உங்கள் நாடல்லாத வேறு நாட்டில் மரணமாம் விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்நியநாட்டில் ஒருவர் மரணமாம், அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படாதிருந்த சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்கள் ''நஜாஷீ'' அவர்களுக்கு மதீனாவில் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தியிருப்பதால், இவ்வாறு பிறரால் ஜனாஸா தொழுகை நடத்தப்படாத நிலையில் உள்ள மய்யித்துக்கு மட்டுமே மறைமுகமான ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிறார்கள்.

    இ. இம்மூன்று சாராரின் கூற்றுகளில் இறுதிசாராரின் கூற்றுப்படி அந்நிய ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவில்லை என்று தெரிந்தால் மட்டுமே பிறர் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்று கூறுவது முறையல்ல. காரணம் மேற்கண்டவாறு நபித்தோழர்களால் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட கப்ரின் அருகில் நின்று பிறரால் தொழவைக்கப்பட்ட மய்யித்துக்கே மீண்டும் நபி(ஸல்) அவர்கள் தொழவைத்துள்ளார்கள். இதன்படி தொழவைத்த மய்யித்துக்கு தொழவைப்பது ஆகும் என்பது தெளிவாகிறது.

    ஆகவே உள்ளுரில் தொழவைத்து அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு பிறர் தொழவைத்து விட்டதால் மீண்டும் மற்றவர் தொழ வைப்பது கடமையில்லாவிடினும் மீண்டும் தொழவைப்பது ஆகுமாயிருப்பது போல், பிற ஊரில் மரணமாகிய ஒருவருக்கு அவ்வூரார் தொழுகை நடத்தியருப்பதால் மற்ற ஊரார், அவருக்கு தொழுகை நடத்துவது கடமையில்லை என்றாலும் அவருக்காக அவர்கள் மறைவான ஜனாஸா தொழுகை நடத்தக்கூடாது என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை.

    ஒருவரை அடக்கியபின், எத்தனை நாட்கள்வரை கப்ரு அருகில் நின்று ஜனாஸா தொழுகை நடத்துவது ஆகும்?

    ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டு, உயிருள்ளோர், மரித்தோர் ஆகியோரிடம் பயணம் கூறுபவர் போன்று 8 வருடங்களுக்குப் பின்னர் உஹதுடைய சஹாபாக்களுக்கு மய்யித்துக்குத் தொழவைப்பது போல் தொழுதார்கள். (உக்பத்துபின் ஆமிர்(ரழி) புகாரீ, நஸயீ)

    அடக்கம் செய்யப்பட்ட மய்யித்துக்கு மூன்று தினங்கள் வரை, அல்லது கப்ருடைய ஈரம் காயும்வரை அல்லது ஒருமாதம் வரை, அல்லது மய்யித்தின் உடல் கெட்டுப்போகாமல் இருக்கும் வரை என்று பலரும் பலவாறு கூறுகிறார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் 8 வருடத்திற்குப் பின்னர் கூட ஜனாஸா தொழுகை தொழுதிருப்பதாக ஸஹீஹான ஹதீஸ் புகாரீ, அபூதாவூத் போன்ற நூல்களில் காணப்படுகிறது.

    இதற்குப் புறம்பாக மேற்கண்டவாறு குறிப்பிட்ட காலம் வரை என்று அதற்குக் கெடு கொடுப்பதுமின்றி, ''8 வருடங்களுக்குப்பின் மய்யித்துக்குத் தொழவைப்பது போல் தொழுதார்கள்'' என்று மிகத் தெளிவாக அவர்கள் தொழுதார்கள் என்று ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகத்திற்கு ''மய்யித்துக்கு துஆ செய்வது போல் துஆ செய்தார்கள்'' என்று தவறாக பொருள் செய்து கொள்வது.

    ஆகவே மேற்காணும் ஹதீஸில் கண்டவாறு பல்லாண்டுகளுக்குப் பின்னரும் கப்ரில் நின்று ஜனாஸா தொழுகை நடத்துவது ஆகும் என்பதை அறிகிறோம்.

    ஜனாஸா தொழுகையில் மக்கள் அதிகமாக கலந்து கொள்ளும் அளவு மய்யித்துக்கு நன்மையுண்டு:

    ''மய்யித்துக்கு பரிந்துரை செய்தவர்களாக 100 நபர்களைக் கொண்டதோர் முஸ்லிம்களின் கூட்டம் ஒரு மய்யித்துக்கு தொழுகை நடத்தும் போது நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம், நஸயீ, திர்மிதீ)

    ''ஒரு முஸ்லிமாகிய மனிதர் மரணமாம், அவருடைய மய்யித்துக்கு அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையிலுள்ளவர்கள் ஜனாஸா தொழுகை நடத்துவார்களானால் அல்லாஹ் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான், என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

    ''முஸ்லிமான ஒருவர் மரணமாம், அவருக்கு முஸ்லிம்களில் மூன்று ஸஃப்பு - அணிகள் ஜனாஸா தொழுவார்களானால் அவருக்கு நிச்சயமாக (நற்பதவி) கிடைத்துவிடும்'' என்று கூறியுள்ளார்கள். மாலிக்கு பின் ஹுபைரா(ரழி) அவர்கள் இந்த ஹதீஸ் அடிப்படையில் ஜனாஸா தொழுவோரை மூன்று அணிகளாக நிற்கும்படி செய்து கொண்டிருந்தார்கள். (மாலிக்கு பின் ஹுiபா(ரழி) அபூதாவூத், திர்மிதீ)

    மூன்று நேரங்களில் மய்யித் தொழுகை நடத்துவது முறையல்ல.

    மூன்று நேரங்களில் எங்களில் இறந்தவர்களுக்காக தொழவைப்பதை அல்லது அவர்களை அடக்கம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். சூரியன் உதிக்கும்போது, அது உதித்து பிரகாசிக்கும்வரை, உச்சிப் பொழுதின் போது, சூரியன் சாயும் வரை, சூரிய அஸ்துமனத்தின் போது, அதுமுழுமையாக அஸ்தமிக்கும் வரை. (உக்பத்துபின் ஆமீர்(ரழி) முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

    மய்யித்தை அடக்கியவுடன், கப்ரு அருகில் நின்று அதற்காக துஆ செய்வது.

    ''நபி(ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கி முடித்துவிட்டால், அதன் அருகில் நின்றுகொண்டு, உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுவதோடு, அவருக்கு உறுதிப்பாட்டைத் தரும்படி (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்யுங்கள்''என்றும் கூறினார்கள். (உஸ்மான்(ரழி) அபூதாவூத், ஹாக்கிம்)

    ஜனாஸா தொழுகை கடடைமயான தொழுகை கருத்தில் கொள்ளாமல் உபரித் தொழுகைகளில் ஜனாஸாத் தொழுகை என்பதை கருத்தில் கொண்டு ஜனாஸா தொழும் முறையை பேணி அதிகமதிகம் தொழுது நன்மையை பெற முயற்சிப்போமாக ஜனாஸாத் தொழுகை!

    இஸ்திகாரஹ் (நாட்டத்) தொழுகை

    மனிதன் எதை எண்ணுகிறானோ அதனடிப்படையில் அவனுடைய செயல்பாடு அமைந்து விடுகிறது. அது நன்மை தீமை என்று வித்தியாசமில்லாமல் ஏற்படுகிறது. இதனால் மனிதன் பல சிக்கல்களில் சிக்குண்டு விடுகிறான். பிரச்சனைகளில் நல்லதை தேர்வு செய்யும் மனப்பான்மையை இழந்து விடுகிறான் காரணம் எது நன்மை எது தீமை? என்பதை அறியாதது தான். இவற்றை அறியக்கூடிய ஆற்றல் சர்வ வல்லமைப்படைத்த அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. மனிதனை நேரிய வழியின் பக்கம் வழிகாட்டுவது அவனுடைய உரிமை அடியார்களாகிய நாம் நமது பிரச்சனைகள் சாலுவடைய தீமையை தவிர்த்து நன்மையை தெரிவுச் செய்ய அல்லாஹ்விடம் பிரார்திக்க நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் இறைவனிடம் பிரர்த்திக்க ஒரு பிரார்த்தனையை கற்றுதந்துள்ளார்கள். இதற்கு இஸ்திகாரத் தொழுகை என்று பெயர்.

    1. நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்கு கற்று தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையை கற்றுத் தந்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள்'' உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை தொழுது பின்னர் (கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை புரியட்டும் என்று கூறினார்கள்.'

    அல்லாஹும்ம இன்னி அஸ்தகீருக பிஇல்மிக வஸ்தக்திருக
    பிகுத்ரதிக வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அழீம் ஃபஇன்னக
    தக்திரு வலாஅக்திரு வதஅலம் வலாஅஃலம்
    வஅன்த அல்லாமுல்குயூப் அல்லாஹும்ம இன்குன்த தஃலம்
    அன்ன ஹாதல் அம்ரு கைருன்லி ஃபிதீனி வமஆஷீ
    வஆம்பதி அம்ரி ஃபக்துர்ஹீலி வயஸ்ªர்ரவுலீ ªம்ம
    பாக்லீ ஃபிஹு வஇன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ரு
    ஷர்ருன்லி ஃபீதினி வமஆஷி வஆம்பதி அம்ரி ஃபஸ்ரிஃப்ஹு
    அன்னி வஸ்ரிஃப் அன்ஹு வக்துர்ல அல்கைர ஹைது கான ªம்ம அர்ளனீ பிஹி.
    மேற்கண்ட பிரார்த்தனைபுரிந்து தனக்கு (ஏற்பட்ட பிரச்சனைகள்) தேவைகளை குறிப்பிடுமாறு கூறினார்கள்.

    பொருள்:
    இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு உனக்கு ஆற்றல் இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன், உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவன் நான் ஆற்றல் உள்ளவன் அல்லன், நீ அனைத்தையும் அறிகிறாய் நான் அறிய மாட்டேன் மறைவானவற்றையும் நீ அறிபவன் இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும் எனக்கு மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும், எனது மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத்தா அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும் எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்த காரியத்தை விட்டு என்னையும் திருப்பிவிடு எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைதா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத்தா! அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி

    Previous Post Next Post