இமாம்களும் மத்ஹபுகளும்

கருத்து, அபிப்பிராயம் போக்கு, வெளிவாசல் செல்வது போன்ற பரந்துபட்ட பொருளைத் தரும் இந்தச் சொல் இஸ்லாமிய மார்க்க சட்ட அகழ்வில் பாரிய பரப்பை ஆய்வு செய்துள்ள பகுதி என்பதை மறுக்க முடியாது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தின் பின்னால்  
மார்க்க அறிவற்ற மக்களின் இஸ்லாமியப் பிரவேசம் மார்க்க விளக்கம் தரும் ஆசிரியர் பெருமக்களை வேண்டி நின்றது.

அவர்கள் தமக்கு நேரடியாகத் தெரியாத சான்றுகளை பிற சான்றுகளின் நிழலில் (கியாஸ் மூலம்) அணுகி தீர்வினைப் பெற்றுத் தந்தனர். 

காலப் போக்கில் அவரது போக்கு, கருத்தியல் முறை மத்ஹப் எனப் பெயர் பெற்றது.

இதற்கு தற்காலத்தில் தவ்ஹீத் பெயரில், அல்லது வேறு சிந்தனை முகாமில் தனிமனித சிந்தனையில் இயங்கும் சில குழுக்கள் தெளிவான சான்றுகளாகும்.

ஒரு விஷயத்தில் நேரடியானதும், தெளிவானதுமான குர்ஆன் வசனம், ஹதீஸ்களைத் தலைகீழாகப் புரட்டி ஆய்வு செய்வது நபித்தோழர், தாபியீன்களிடம் பாடம் படித்த   எந்த இமாம், அல்லது அறிஞரின் போக்கும் பண்பும் கிடையாது. 

ஹதீஸ், தஃப்ஸீர், ஃபிக்ஹ், உலூமுல் ஹதீஸ், தக்ரீஜ்? லுகா, அதப் என ஷரீஆவின் பல்வேறுபட்ட துறைகளில் இஸ்லாமிய அறிஞர்கள் கால் பதித்து சமூகத்திற்கு ஆற்றிய அழப்பெரிய சேவைகளின் மகிமைகள் முறைப்படி கல்வியைத் தேடாத, மார்க்க அறிவில் பாரிய குறைபாடுள்ள ஒரு அறிஞனின் உரைக்குள் சுருண்டு படுக்கும் தமிழ் உலக வேற்றுக் கிரக வாசிகளுக்கு இது புரியவே புரியாது.

ஃபிக்ஹ் துறை இமாம்கள் குர்ஆனிய வசனங்கள், நபிமொழி மூலம்
சட்டவாக்கத்தைக் கையாழும் முறையை  காட்டித் தந்த நல்ல பெரிய அறிஞர்களே! 
அவர்கள் ஒருவரும் தனது கருத்துக்கோ, இயக்கத்திற்கோ அங்கத்தவர் சேர்த்து சமூகங்களை சின்னா பின்னப்படுத்தியோரும் கிடையாது.

உதாரணமாக முவத்தா கிரந்தத்தை தொகுத்தளித்த இமாம் மாலிக், ரிஸாலா, உம்மு, அல்உலுவ்வு போன்ற நூல்களைத் தந்த இமாம் ஷாஃபிஈ, அஸ்ஸுன்னா,  அர்ரத்து அலல் ஜஹ்மிய்யா, முஸ்னத் போன்ற அறிவுப்  பொக்கிஷங்களை வழங்கிய இமாம் அஹ்மத் ஆகிய மூன்று இமாம்களையும் எடுத்துக் கொண்டால் அவர்கள் ஆசிரியர்களும் மாணவர்களுமே.

அவர்கள் நம்மைப் போல் இயக்கம் பிரித்து பிரிந்தவர்களே கிடையாது.  அகீதாவில் ஒன்றுபட்டிருந்த இவர்களின் ஃபிக்ஹ் சார்ந்த பார்வை வேறுபட்டதாக இருந்தது. இருக்கவே வேண்டும். அதுதான் அவர்களுடைய மத்ஹப் எனப்படும் கருத்துக்கள். அவை முரண்பாடுகளின் போது தவிர்க்க முடியாத செயலணியாகும்.

மாலிக் என்ற தனது ஷேக்கை வழிகெட்டவராக அவரது மாணவரான ஷாஃபியோ, அவரை அவரது மாணவரான அஹ்மதோ வழிதவிறியவராகக் கூறியதை பார்க்க முடியாது.

அவர்கள் ஹதீஸ், ஃபிக்ஹ், உசூல் போன்ற  பல்வேறுபட்ட ஆழமான துறைகளில் கால்பதித்த மேதைகள் என்பதை விளங்கிக் கொள்ளும்  ஒரு மாணவர் அவர்களின் நூல்களை வாசித்து ஒப்பீடு செய்து அவர்கள் எவ்வாறான வழிமுறைகளைக் கையாண்டு தமது பணிகளை முன்னெடுத்தனர் ? ச மஸாயில்களில் சட்ட அகழ்வு செய்தனர்? அவற்றில் எவை
சரியானவை? எவை மிகச் சரியானவை  என்பன போன்ற கோணத்தில்  ஆய்வு செய்வான். பயன்பெறுவான்.

அறிவில்லாதவனோ அவர்களை குப்பைகளைத் தந்தவர்களாக நோக்குவான். அது அவர்களின் மதிப்பைக் குறைத்தும் விடாது.

இமாம்களைப் பற்றி தேடும் ஒருவன்,
அவர்களின் கல்வித் தேடல்,  சட்ட அகழ்வாக்க முறை, பயன்படுத்திய ஹதீஸின் தரம், வழிமுறை, செலவிட்ட நேரங்கள், தியாகங்கள் என பல்வேறுபட்ட கோணங்களில் சத்தியத்தை அடைய முயற்சிப்பான்.

அந்தப் பின்னணி  பற்றி எதுவும்
அறிவில்  சீரோவான ஒருவன்  விமர்சனத்தில் ஹீரோவாக இருந்து கொண்டு இவ்வாறானவர்களை
மட்டம் தட்டுவதும் அவர்களைக்
குப்பைகளைப் போதிப்பவர்களாக  சித்தரிக்க முயல்யவதுடன்,  தவறு செய்யும் தமது ஷேக்கை, இயக்க நிர்வணரை அணுதினமும் ஆட்ட அசைவிலும் ஷேட் களரிலும் தக்லீத் செய்து கொண்டு துதிபாடும் வழியானது  வழிகேடர்களின் பொதுவான இயல்பான குணமாகும். 

அரபியில்  ஒரு வசனத்தையேனும் வசிக்கத் தெரியாத இந்த அறிவாளிகள்தான் அந்தப் பெரிய பணி செய்த அறிவின் முன்னோடிகளான  இமாம்களை விமர்சிக்கும் ஜாஹில் முஜ்தஹிதுகள். இது தனிமனித தவ்ஹீத் பேசும் ஜாஹில்களிடம் அதிகம்.
 
இவ்வாறானவர்கள் 
 அறிஞர்களின் தியாயங்களை, சட்டத் தேடல்களை ஒப்பீடு செய்து மதிக்கத் தெரியாத பண்பாடற்ற காடேறிகளே அன்றி வேறு யாராகவும் இருக்க முடியாது.

தனிமனித அல்லது  ஷேக்குகளின் தூய்மைப்படுத்தலை நோக்கி மறைவாகப் பயணிக்கும் இவ்வாறானவர்கள்  காலப் போக்கில் 
தனது ஷேக் பெயரில்  தூய்மையை வாதிடுவது, அவருக்காக இயக்கம் அமைப்பது, அவர் தவறே செய்யாதவர் போல வாதிடுவது போன்ற சகலவிதமான இழி செயல்களிலும்  ஈடுபடுவர்.

இந்த விதி ஸாலிஹான அறிஞர்களை விமர்சனம் செய்யும் எல்லோருக்கும் எழுதப்படும் நஞ்சூடப்பட்ட  விதியாகும். 

அவர் அந்த இழிவையும் அதன் கேவலத்தைச் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தான் தலைமேல் போற்றும் அல்லது மதிக்கும் அறிஞர் ஒரு பெண்ணோடு விபச்சாரம் செய்தவர், பாலின சேர்க்கையில் ஈடுபட்டவராக அறியப்பட்டவர், ஃபஜ்ர் தோழாதவர், சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவர் என சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டாலும் நெஞ்சங்களைக் கல்லாக்கி, வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு அவரையே பேறிஞனாக வில்லாதி வில்லனாக அறிமுகம் செய்யும்   
 மன நிலை பாதிக்கப்பட்டோர்களாக வலம் வருவது இவர்களிடம் தவிர்க்க முடியாததாகும்.

இது அரபி, அஜமி உலகில் சமமானதாகும்.

ஆம்! இமாம்கள் அவ்வாறான 
நடத்தை கெட்டவர்களை ஃபாஸிக் எனக் கூறி அவரது அறிவிப்புக்களை புறம் தள்ளிவிடுவர்.

நமது ரசிகர்களோ இல்லை; இல்லை; எங்கண்ணே, எங்க உஸ்தாத், ஷேக், முஃப்தி, தங்கள் தூதர் போன்ற  பரிசுத்தமான மனிதர் எனத் தத்துவம் பேசித் தாலாட்டுவர்.

ஆக! இமாம்கள் என்போர் பேனா முனையில், 
விலை மதிக்க முடியாத பணி செய்த மாபெரும் தியாகிகள் என்பதை மறுப்பதும் இஸ்லாமிய மார்க்க விரிவாக்கத் தேடல், சேவையில் இழைக்கப்படுகின்ற மிகப் பெரிய அநீதியாகும்.

குறிப்பு: -
மனிதன் தவறிழைப்பவன் என்ற விதியோடு வாசிக்க வேண்டும். 

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post