கற்றவரும் கல்லாதவரும்

بسم الله الرحمن الرحیم  

கற்றவரும் கல்லாதவரும்:

"பாமர மனிதர் தவறு செய்தால் அவருக்கு எழுபது முறைகள் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால், கற்றறிந்த அறிஞருக்கோ ஒரே ஒரு முறைதான் மன்னிப்பு வழங்கப்படும். ஏனெனில், கற்றவர், கல்லாதோரைப் போன்றவர் அல்லர்" என்பது சான்றோர் மொழியாகும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

கற்றோரும் கல்லாதோரும் சமமாவார்களா? என்று (நபியே!) நீர் கூறுவீராக!அறிவுடையோர் மட்டுமே அறிவுரை பெறுவர்.

[அல் குர்ஆன், 39:9]

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகளில் சிலர் நரகவாசிகளில் சிலரை எட்டிப் பார்ப்பர். அப்போது, அந்தச் சொர்க்கவாசிகள் (நரகவாசிகளிடம்), "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலமாகவே நாங்கள் சொர்க்கத்திற்குச் சென்றுள்ளோம். (அவ்வாறிருக்க,) நீங்கள் நரகத்தில் நுழைந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்பர்.

அதற்கு அவர்கள், "நாங்கள் (எல்லாருக்கும்) சொல்லிக்கொண்டுதான் இருந்தோம். ஆனால், நாங்கள் செயல்படவில்லை" என்று கூறுவர்.
[நூல்: இப்னு அசாகிர்]

ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்
أحدث أقدم