தவறான புரிந்துணர்வாலும் வழிகெட்ட அழைப்பாளர்களின் வழிகாட்டலினாலும் தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களை தக்ஃபீர் செய்வது (காஃபிர்) என தீர்ப்பளிப்பதும் அழைப்பாளர்கள் உட்பட பலரிடமும் இக்வானிஸ கவாரிஜ சிந்தனைகள் மேலோங்கி இருப்பதும் கண்கூடாக காணமுடிகிறது. எனவே சில மார்க்க விஷயங்களை எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம்
யூத நாஸாராக்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது .
யூத கிறிஸ்தவர்களிடம் வியாபார ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், கொடுக்கல் வாங்கல், மார்க்க வரம்புகளை மீறாமல் செய்வதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை மாறாக இஸ்லாமிய வரலாறு நெடிகிலும் அனுமதியே உள்ளன. சில உதாரணங்கள்
ஹுதைபியா உடன்படிக்கை, பனூ குறைழா பனூ நழீர் போன்ற யூத கோத்திரங்கங்களோடு நபியவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், யூதர்களோடும், கிறிஸ்தவர்களோடும், முஷ்ரிக்குகளோடு செய்த வியாபாரங்கள் இவை அனைத்தும் மார்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது யூத கிறிஸ்தவர்களை உற்ற நண்பர்களாக, பாது காவலர்களாக எடுத்துக் கொண்டதாக அமையாது.
2916. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தமது போர்க் கவசம் முப்பது ‘ஸாஉ’கள் தொலி நீக்கப்படாத கோதுமைக்குப் பகர மாக ஒரு யூதரிடம் அடகுவைக்கப்பட்டி ருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
(அல் முதாராத் ) காஃபிர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற மென்மையாக நடப்பது எப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது ?
(அல் முதாராத்) அல் - முதாஹனா (மார்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி காஃபிர்களை திருப்திப் படுத்த நினைப்பது) மத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன?
காஃபிர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லீம்கள் பாதுகாப்பு பெற காஃபிர்களிடத்தில் மென்மையாக நடப்பது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அல் முதாராத் எனப்படும்.
3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
காஃபிர்களை நேசிப்பது, அவர்களுக்கு உதவுவது, அவர்களை பாதுகாவலர்களாக ஏற்படுத்துவது இவர்களிடமிருந்து அல்லாஹ் விலகிக் கொள்கிறான். இது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.
எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை;
ஆனால் காஃபிர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு பொருளாதாரத்தை வழங்குவது இது உற்ற நண்பனாக எடுத்துக் கொள்வதில் வராது. நிச்சயமாக இது அவர்களின் மூலமாக முஸ்லீம்களுக்கு ஏற்படும் தீமையை தடுப்பதற்காக பொருளாதாரத்தை வழங்குவது , அவர்கள் விரும்பும் உலக காரியங்களை செய்து கொடுப்பது இது (அல் முதாராத் ) எனும் காஃபிர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு பெற மிகவும் அவசியமான தருணத்தில் இது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
(அல் - முதாஹனா) என்னும் மார்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி காஃபிர்களை திருப்தி படுத்த நினைப்பது பொதுவாக இது அனைத்து நிலைகளிலும் தடுக்கப்பட்டுள்ளது.
68:8. எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
68:9. (சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
56:81. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
காஃபிர்களின் திருப்திக்காக இதை நீங்கள் விட்டு விடுவீர்களா?
மக்காவில் காஃபிர்கள் நபி ( ﷺ ) அவர்களிடம் ஒரு வருடம் நாங்கள் உங்களுடன் அல்லாஹ்வை வணகுகிறோம் நீங்கள் ஒருவருடம் எங்களுடன் இணைந்து எங்களின் தெய்வங்களை வணங்க வேண்டும் என்று மார்கத்தில் தளர்வை ஏற்படுத்த விரும்பினார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக சூரத்துல் காஃபிரூனை இறக்கிவைத்தான்.
(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
17:73. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
17:74. மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
இஸ்லாமிய மார்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி காஃபிர்களை திருப்திபடுத்த அனைத்து நிலைகளிலும் தடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களில் பலர் அல் முதாராத், அல் - முதாஹனா இவ்விரண்டிற்கும் மத்தியில் உள்ள வேறுபாடுகளை அறியாமல் இரண்டையும் ஒன்றாக பார்கின்றனர்.
அல்லாமா அஷ்ஷைக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (حفظه الله ) அவர்களின் நவாகிழுஷ் ஷஹாதா நூலின் விரிவுரையிலிருந்து தமிழில் : யாஸிர் ஃபிர்தௌஸி
அல் - ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம் , சவூதி அரேபியா
குறிப்பு : மார்கத்தை கற்றறிந்த அழைப்பாளர்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திவிட்டு உலமாக்களின் மூலம் எழுதப்பட்ட புத்தகங்களிலிருந்து முறைப்படுத்தப்பட்ட மரபுவழிக் கல்வியை மக்களுக்கு கற்பிக்க வேண்டும் . இதில்தான் நமது மார்கத்தின் பாதுகாப்பும் மறுமை வெற்றியும் அடங்கியுள்ளது.