ரியாதில் (1382 ஹி) பிறந்து தனது பனிரெண்டு வயதிலே அல்குர்ஆனை பூர்த்தியாக மனனம் செய்து முடித்து தனது ஆரம்பக் கல்வியையும் பட்டப்படிப்பையும் ரியாதிலே வெற்றிகரமாக நிறைவு செய்தார்கள்.
புனித ஹரம் ஷரீபின் இமாமத் பதவியை (1404/8/22 ஹி) பெறுப்பேற்றார்கள்.
அதே ஆண்டு உஸூலுல் பிக்ஹு துறையில் தனது முதுமாணி பட்டப்படிப்பை ஜாமிஅதுல் இமாம் முஹம்மத் பின் ஸுஊதில் நிறைவு செய்தார்கள்.
அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ், அப்துர் ரஸ்ஸாக் அல் அபீபீ, ஸாலிஹ் அல்பௌஸான், அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அல் பர்ராக்,
அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அத்தர்வீஷ், அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் ஆலு ஷேஹ், அப்துர் ரஹ்மான் பின் ஜபரீன், ஸாலிஹ் பின் கானிம் அஸ்ஸத்லான்,அப்துர் ரஹ்மான் அஸ்ஸத்ஹான் போன்ற புகழ்பெற்ற மேதைகளிடம் கல்வி பயின்றுள்ளார்கள்.
தனது கலாநிதிப் பட்டப்படிப்பை மாக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் (1416 ஹி) பூர்த்தி செய்தார்கள், அதன் பின் உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்கள்.
புனித ஹரம் ஷரீபில் இமாமத், குத்பா என்பதோடு சேர்த்து அகீதா, பிக்ஹ், தப்ஸீர், ஹதீஸ் போன்ற பல்வேறு துறைகளிலும் தொடர்ச்சியாக விரிவுரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அல்லாமா சுதைஸ் அவர்கள் இஸ்லாமிய சட்டத் துறை, சட்ட மூலவாக்கத் துறை, வரலாறு, தர்பியா, வழிகாட்டல் போன்ற பல்வேறு துறைகளிலும் தொகுத்த சில நூற்கள்..
1- அல் வாழிஹ் பீ உஸூலில் பிக்ஹ்
(இமாம் அபுல் வபா பின் அகீல் அல் ஹன்பலி (ரஹ்) அவர்களது அற்புதமான இந்த நூல் பற்றிய ஆய்வும் தெளிவும்) இந்த ஆய்வுக்கான மேற்பார்வை உஸ்தாத் அஹ்மத் பஹ்மி அவர்களினால் வழங்கப்பட்ட அதே வேளை கலாநிதி, அல்லாமா அப்துல்லாஹ் பின் அப்துல் முஹ்ஸின் அத்துர்கி அவர்களினால் நேர்முக கலந்துரையாடலுக்கு உற்படுத்தப்பட்டது.
2- அல் மஸாஇலுல் உஸூலிய்யா அல் முதஅல்லிகா பிbல் அதில்லதிஷ் ஷரஇய்யா அல்லதீ ஹாخலப பீஹா இப்னு குதாமா.
3- கவ்கபதுல் ஹுதபில் முனீபா மின் ஜிவாரில் கஃபதிஷ் ஷரீபா
4- இத்திஹாபுல் முஷ்தாக் பிலம்ஹாதின் மின் மன்ஹஜி வஸீரதிஷ் ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக்.
5- அஹம்முல் முகவ்வமாத் பீ ஸலாஹில் முஅல்லிமீன் வல் முஅல்லிமாத்
6- தௌருல் உலமா பீ தப்லீகில் அஹ்கீமிஷ் ஷரஇய்யா
7- ரிஸாலா இலல் மர்அதில் முஸ்லிமா
8- அத்தஃலீகுல் மஃமூல் அலா தலாஸதி உஸூல்
9- அல் ஈழாஹாத் அல் ஜலிய்யா அலல் கவாயிதில் ஹம்ஸா அல்குல்லியா.
10- அஷ்ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் அபீபீ வமன்ஹஜுஹுல் உஸூலி.
11- கலாமு ரப்பில் ஆலமீன் பைன உலமாஇ உஸூலில் பிக்ஹி வஉஸூலித் தீன்.
12 - முஃஜமுல் முப்ரதாதில் உஸூலிய்யா
13 - அல் பிரகுல் உஸூலிய்யா
இதுவல்லாது ஸலபுகளின் வழிமுறைக்கமைய சட்ட விதிகளின் பல்வேறு அடிப்படைகளை கோர்வை செய்து நெறிப்படுத்தியுள்ளார்கள்.
இது போன்று ஹன்பலி சட்ட மரபின் அடிப்படை சட்ட விதிகளை துல்லியமாக வெளிக்கொணர்வதில் மிகுந்த பிரயத்தனத்தையும் மேற்கோண்டுள்ளார்கள்.
இஸ்லாமிய முதுசங்களின் பல்வேறு மூல நூற்களை திறனாய்வு செய்யும் பணியில் நீண்ட காலம் உழைத்துள்ளார்கள்.
உள்நாடு, வெளிநாடுகளில் பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வு மன்றங்கள், உரைகள், வழிகாட்டல் நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
தனது ஆய்வு, அறிவியல் பயணத்தை தொடர்ந்த வண்ணமே தற்போது இரு புனிதஸ்தலங்களினதும் நிர்வாகத் தலைவராக கடமை புரிந்து வருகிறார்கள்.
இரு புனிதஸ்தலங்களினது கண்ணியத்தையும் அல்லாஹ் உயர்த்தியது போன்று அதன் ஊழியர்களையும் மென்மேலும் கண்ணியப்படுத்துவானாக!
அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.