சகோதரன் ஒருவனின் தேவையை நிறைவேற்றுவது


நபி ஸல் அவர்கள் கூறியதாக உமர் றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள் :

"என்னுடைய இந்த (மதீனா) பள்ளிவாசலில் ஒரு மாத காலம் தங்கியிருந்து இஃதிகாப் கடைப்பிடிப்பதை விடவும் என்னுடைய சகோதரன் ஒருவனின் தேவையை நிறைவேற்றுவதற்காக நடந்து செல்வது எனக்கு மிகவும் விருப்பமானது.யார் ஒருவன் தன் சகோதர முஸ்லிமின் தேவையை நிறைவு செய்யும் வரை நடந்து செல்கின்றானோ, பாதங்கள் சறுகி விலகிவிடும் மறுமை நாளில் அவனது இரு பாதங்களையும் ஸ்திரப்படுத்துவான்."
 
இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கையில், முஸ்லிம்களின் தேவையை நிறைவு செய்வது பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதை விடவும் முக்கியமானது எனக் கூறியுள்ளார்கள். ஏனெனில், அதற்கு அதிக பலன்கள் உள்ளன. குறைந்த பலன் உள்ளதை விட அதிக பலன்கள் உள்ளவை மிக மேலானது. குறுகிய பலன் உள்ளவை இஸ்லாத்தின் பிரதான அம்சமாகவும் அதன் வாஜிபான கடமைகளுக்கு உட்பட்டிந்தாலே தவிர என மேலும் விளக்கம் அளித்துள்ளார்கள்.



Previous Post Next Post