அல்லாஹ் தஆலா கூறியுள்ளான்:
"அல்லாஹ் பரிசுத்தவான்களை நேசிக்கின்றான்."
(அத்தியாயம் : அத்தௌபா , வசனம் : 108)
இமாம் அஸ்ஸஃதி றஹ் அவர்கள் இவ்வசனத்திற்கு அளித்துள்ள விளக்கம் :
"இவ்வசனத்தில் வரும் பரிசுத்தம் என்பதன் ஆன்மீக ரீதியான பொருள்,இணைவைத்தல் மற்றும் அற்ப குணங்களை விட்டு சுத்தமாக இருப்பதைக் குறிக்கும்.
பரிசுத்தம் என்பதன் பௌதீக ரீதியானதும் புலனியல் ரீதியானதுமான கருத்து, அசுத்தம், தொடக்குகளை விட்டு சுத்தமாக இருப்பதைக் குறிக்கும்."