அல்லாஹ் தஆலா கூறியுள்ளான் :
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள்.நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம்".
(சூறா ஆல இம்றான் : 102 )
இமாம் இப்னு கதீர் றஹ் அவர்கள் இதற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்:
" நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம் என்பதன் அர்த்தம், நீங்கள் ஆரோக்கியமான, பாதுகாப்பான நிலைமைகளில் இஸ்லாத்தை பேணி வாருங்கள். அதே நிலையில் நீங்கள் இறக்க நேரிடலாம். ஏனெனில், சங்கை மிகுந்த ஒருவன் தன்னை வழமையில் சங்கை மிகுந்த ஒருவனாகவே வழிநடத்திச் செல்வான். அதாவது ஒருவன் எவ்விதம் வாழ்கிறானோ அதே விதமாகவே மரணிப்பான். எவ்விதம் மரணிக்கிறானோ அதே விதமாகவே எழுப்பப்படுவான். இதற்கு மாற்றமான நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக!