நேர்த்திகடன்!

இஸ்லாத்தில் நேர்ச்சை (நேர்த்திகடன்) செய்ய வேண்டும் என்றோ அல்லது செய்வது சிறப்பு என்றோ அல்குர்ஆனிளும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை!

உதாரணமாக : குர்பானி கொடுப்பது பல இடங்களில் நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்! குழந்தை பிறந்தால் 7 வது நாள் அகீகா கொடுக்க வேண்டும்! ஹஜ் செய்தால் குர்பானி கொடுக்க வேண்டும்! Etc... ஆனால் இவ்வாறு நேர்ச்சைக்கு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை!

ஆனாலும் நேர்ச்சை இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று அல்ல அனுமதிக்கப்பட்ட செயல் ஆகும்! ஆனால் இது சிறந்த அம்சம் அல்ல! நேர்ச்சையினால் எதுவும் மாறி விடாது!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது! மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 6694)

நேர்ச்சை செய்ய நாடும் நபர் மார்க்கத்திற்கு முரனாக இல்லாமல் நேர்ச்சை செய்ய வேண்டும்!

உதாரணமாக : எனது குழந்தைக்கு உடல் நலம் பெற்று விட்டால் அல்லாஹ்விற்காக ஆடு அறுத்து கொடுக்கிறேன்!

நேர்ச்சை ஒரு போதும் மார்க்கத்திற்கு முரனாக இருக்க கூடாது!

உதாரணமாக : எனக்கு குழந்தை பிறந்தால் இந்த தர்ஹாவிற்கு பிள்ளையை அழைத்து வந்து மொட்டை போடுகிறேன்! அல்லது தர்ஹாவிற்கு வந்து குர்பானி கொடுக்கிறேன்! இவையெல்லாம் ஷிர்க் ஆகும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறை வேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 6696)

நேர்ச்சை விசயத்தில் மிகவும் கவனமாக பெண்கள் இருக்க வேண்டும்! காரணம் ஏதேனும் சோதனை கவலை கஷ்டம் வந்தால் உடனே நேர்ச்சை செய்து விடுவார்கள்! அதுவும் தங்கள் சக்திக்கு மீறி செய்வார்கள்!

உதாரணமாக : எனது கணவருக்கு கஷ்டம் நீங்கினால் 60 நோன்பு தொடர்ச்சியாக வைப்பேன்! மாடு அறுத்து குர்பானி கொடுப்பேன்! மாதம் மாதம் விடாமல் மூன்று நோன்பு வைப்பேன் etc

ஆனால் நேர்ச்சை நிறைவேறிவிட்டால் இவர்களால் அதை செய்ய முடியாமல் போய் விடும்! எப்போதும் சக்திக்கு மீறி நேர்ச்சை செய்ய கூடாது!

நேர்ச்சை பொறுத்த வரை கட்டாயம் அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டும் இதை தவிர்த்து பிறருக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்! இன்றும் பலர் தர்ஹாவிற்கு அவ்லியாவிற்கு இறந்தவர்களுக்கு எல்லாம் நேர்ச்சை செய்வார்கள் இது ஷிர்க் ஆகும்!

நாம் நேர்ச்சை செய்து அது அல்லாஹ்வின் உதவினால் நிறைவேறி விட்டால் கட்டாயம் அதை யார் நேர்ச்சை செய்தார்களோ அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்! நேர்ச்சை நிறைவேற வில்லை என்றால் நாம் நேர்த்திகடன் செய்யவேண்டிய அவசியம் இல்லை!

நேர்ச்சை யார் செய்கிறார்களோ அவர்கள் தான் அதை நிறைவேற்ற வேண்டும்! சிலர் தங்களால் முடியாத போது பிறரை செய்ய சொல்லுவார்கள் ஆனால் இவ்வாறு செய்யமுடியாது! என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

@அல்லாஹ் போதுமானவன் 
أحدث أقدم