அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள் வானவர்கள் உங்களில் ஒருவருக்கு அவர் தொழுத இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம், ஒழு முறியாத காலமெல்லாம் துஆ செய்கிறார்கள்.
யா அல்லாஹ் இவரை மன்னித்து விடுவாயாக இவருக்கு அருள் புரிவாயாக என்று வானவர்கள் கூறுகிறார்கள்.
நூல் -ஸஹீஹ் புகாரி
எண்-659
அறிவிப்பாளர் - அபூ ஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு
தரம் - ஸஹீஹ்
குறிப்பு -
இந்த நபிமொழி தொழுகைக்காக எதிர்பார்த்து இருக்கும் தொழுகையாளிகளையும் தொழுத பின்பு உடனடியாக எழுந்திருக்காமல் அமர்ந்து திக்ரிலும் துவாவிலும் ஈடுபடுபவர்களுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
சில அறிஞர்கள் விளக்கம் அளிக்கும்போது இந்த நபிமொழி வீட்டில் தொழும் பெண்களையும் குறிக்கும் தொழுகைக்காக அவர்கள் எதிர்பார்த்து இருக்கும் காலமெல்லாம் வானவர்களின் துவாவையும் பாவமன்னிப்பையும் பெறுவார்கள் என்றும் உள்ளத்தை அமைதிப்படுத்தி நன்மையான காரியத்தில் ஈடுபடுத்துவதற்காக சற்று நேரம் அல்லாஹ்விற்காக பள்ளியில் நேரத்தை செலவு செய்வது மகத்தான நன்மை அளிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நபி மொழிக்கு இப்னுல் பதால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கம் அளிக்கும்போது
யாருக்கு பாவங்கள் அதிகமாக இருந்து சிரமம் இல்லாமல் அதை அல்லாஹ் போக்க வேண்டும் என்று நாடினால் தொழுத பின்பு அந்த இடத்தில் உடனே எழுந்திருக்காமல் சற்று அமரவும் இந்த அமர்வு மலக்குகளின் துஆவையும் பாவமன்னிப்பையும் பெற்று தரும்.
-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி