கருத்து வேறுபாடுகளை முன்வைக்கும் ஒழுங்கு.

கல்வி கற்கும் மாணவர்களுக்கு அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் இந்த உபதேசம் மிகப் பொருத்தமானதாக இருக்கும். 

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுவதாவது ;  

"(மார்க்கத்தில்) கருத்து வேறுபாடுகள் சார்ந்த விடயங்களை முன்வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய மிக அழகான வழிமுறை என்னவென்றால்;

குறித்த ஒரு மஸ்அலாவை குறித்த இடத்தில் வெளிப்படுத்தும் போது அது சார்ந்த அனைத்து கருத்துகளையும் குறிப்பிட வேண்டும், அத்துடன் அதில் ஏற்றமான கருத்தை சரியாகச் சொல்லுவதுடன் ஏற்க்க முடியாத பிழையான கருத்தை ( நியாயமான காரணங்களுடனும், அது உருவாகிய விதம் மற்றும் கருத்து வேறுபாடுகளின் நன்மைகளையும்) சுட்டிக்காட்ட வேண்டும்.

காரணம்; அந்த விடயம் தொடர்ந்து அனாவசியமான பிரச்சனைகள் கருத்தாடல்களுக்கு இட்டுச் செல்லாமல் அத்தியாவசியமான முக்கியமான விடயங்களில் ஈடுபடுத்த உதவும்...!!!

அந்த வகையில் யார் கருத்துவேறுபாடுகளை முழுமையாக முன்வைக்காமல் சுருக்கிக் கொள்கிறாரோ..?? (சில சமயம் அவர் கூறாமல் விட்டதில் ஏற்றமான கருத்து இருக்கலாம்.) அல்லது ஒட்டமொத்தமாக கூறி சரியானதை தெளிவு படுத்தவில்லையோ அவர் குறை செய்தவராகவே கணிக்கப்படுவார்.

அதேபோன்று யார் பிழையான கருத்தை வேண்டுமென்றே சரிகாண்கிறாரோ அவர் வேண்டுமென்றே பொய்யுரைத்தவராவார், அல்லது அறியாமை காரணமாக சரிகண்டார் எனில் தவறிழைத்தவராவார். 

அவ்வாறே தேவையில்லாத இடத்தில்  கருத்துவேறுபாடுகளைக் கூறி அல்லது  பல கருத்துவேறுபாடுகளை குறிப்பிட்டு அதில் ஒன்று அல்லது இரண்டு கருத்துகளை கேட்டு, பிடித்தமாதிரி எடுப்பாரேயானால் அவர் காலத்தை வீணடித்தவரும் பிழையானவற்றை அதிகம் உரைத்தவருமாவார்."

நூல் : (தப்ஸீருல் குர்ஆனில் அழீம் : 1/21)

Ahsan Asman Muhajiri
Previous Post Next Post