ஷெய்க் முக்பில் பின் ஹாதி (ரஹி) கூறுகிறார்கள்

ஷெய்க் முக்பில் பின் ஹாதி றஹிமஹுல்லாஹ் :

1. மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்பார்த்தே இருக்கிறார்கள். மாணவர்கள் சான்றிதழ்களுக்காகவே கற்கிறார்கள். பின்வரும் கவிதையைச் சொன்னவர் சிறப்பாகச் சொல்லிவிட்டார். 

சிறப்பான வார்த்தை கொண்டு நான் சொல்கிறேன்! 
நீ நாசமாவதை விட்டும் தூரமாயிரு! 
கற்றுக் கொடுப்பவரின் நோக்கமோ தூய்மையில்லை!
படிப்பவனுக்கும் அந்நோக்கமில்லை!
இவன் சான்றிதழ் தேடி வந்தான்!
கற்பிப்பவரோ சொத்தைத் தேடி வந்தார்!

2. யாரெல்லாம் அழைப்பாளர்களைப் பார்த்து, இவர்கள் வஹ்ஹாபிகள் என்றும் சஊதிக்கு ஊழியம் செய்பவர்களென்றும் கூறுகிறார்களோ அத்தகையவர்களுக்கு நாம் மறுப்பளிக்கிறோம். இவர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம் உலமாக்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் தடுப்பொன்றை ஏற்படுத்துகிறார்கள்.

3. முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வேதத்தையும் றஸுலுல்லாஹ்வின் சுன்னாவையும் நிலைநாட்டுவதன் பால் திரும்பும் வரை முஸ்லிம்களுக்கு வெற்றியோ மதிப்போ கிடைக்கமாட்டாது என்பதை நாம் நம்புகிறோம்.
 
4. உலமாக்களின் தனிக் கருத்தில் கண்மூடித்தனத்தைத் தவிர்ந்து கொள்வோம். யார் சத்தியத்தைச் சுமந்து வந்த போதும் அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். 
 
5. நாம் அல்லாஹ்வின் வேதமான அல் குர்ஆனின் விளக்கத்தையும் அல்லாஹ்வின் தூதருடைய சுன்னாவின் விளக்கத்தையும் (எடுக்கும் விடயத்தில்) இந்த உம்மத்தின் முஹத்திஸீன்களின் வழிமுறையால் (வந்த) ஸலபுகளின் விளக்கத்துடன் நின்று கொள்கிறோம்.

6. நாம் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதை ஒருபோதும் சரிகாண மாட்டோம், அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் வரை! அதே போன்று ஆர்ப்பாட்டங்கள் செய்வது சீர் திருத்தம் செய்வதற்கான வழிமுறையென்று கூற மாட்டோம். மாறாக, அது சமூகத்தில் அழிவை ஏற்படுத்தும் வழிமுறையென்று கூறுவோம்.

நூல் : ஹாதிஹி தஃவதுனா வ அகீததுனா
أحدث أقدم