அல் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து ஸலாம் கூறினால்

கேள்வி :
நான் புனித அல் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து எனக்கு ஸலாம் கூறினால், நான் அவருக்கு பதில் சொல்ல வேண்டுமா? அல்லது நான் ஓதிக் கொண்டிருந்த திருக்குர்ஆன் வசனத்தை பூர்த்தி செய்ய வேண்டுமா?

பதில் :
இமாம் ஸாலிஹ் அல் பௌஸான் (ஹபி) அவர்கள் அளித்துள்ள பதில் :

நீ ஓதிக்கொண்டிருந்த திருக்குர்ஆன் வசனத்தை முதலில் ஓதி பூர்த்தி செய்துவிட்டு, பின்னர் ஸலாம் கூறியவருக்கு பதில் சொல். உண்மையில், புனித அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பவருக்கு ஸலாம் கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட வில்லை. ஏனெனில், இச்செயற்பாடு திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பவரது கவனத்தை திசைதிருப்பி, இடைநடுவில் திருக்குர்ஆனை ஓதுவதை விட்டும் நிறுத்திவிட வேண்டி ஏற்படுகிறது. ஆதலால், திருக்குர்ஆனை ஓதுபவர் அதனை ஓதி முடித்த பின்னர், அவருக்கு ஸலாம் கூறவும்.



Previous Post Next Post