ஜகாதுல் ஃபித்ரை அதன் அளவை மதிப்பிட்டு பணமாக கொடுப்பதற்கு அனுமதியில்லை.
ஏனெனில், அது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறாக அமைகின்றது
மூத்த மார்க்க அறிஞர்கள் குழு இதுபற்றி கூறியதாவது:
ஜகாதுல் ஃபித்ரின் அளவை மதிப்பிட்டு பணமாக கொடுப்பது கூடாது.
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எவ்வாறு உணவுப் பொருளாக கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்களோ,
அவ்வாறே கொடுக்க வேண்டும்.
இக்கருத்தையே பல ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றது.
மேலும் இவ்வாறு கொடுப்பதே. மக்களின் செயல்பாட்டில் இருக்கின்றது.
ஏனெனில் ஜகாத்துல் பித்ர் வணக்க வழிபாடாகும்.
நபி (ஸல்) ஜகாதுல் ஃபித்ரை உணவாக கொடுக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திருக்கிறார்கள்.
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய காலத்திலும் மற்றும் அவர்களது குலஃபா அர்ராஷிதீன் (நேர்வழி பெற்ற பிரதிநிதிகளின்) காலத்திலும் எண்ணற்ற ஏழைகள் இருந்தார்கள்.
ஏழைகள் அதிகமாக இருந்தும்,
அக்காலம் முழுவதும் ஜகாதுல் ஃபித்ர் உணவாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
(அவ்வாறு கொடுத்த போதும்) உணவு அல்லாது உடுக்க உடை.
இருக்க இடம் போன்ற மற்ற விஷயங்களுக்கு அந்த ஏழைகள் தேவை உடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறிருந்தும், ரசூலுல்லாஹ் (ஸல்) ஏழைகளுக்கு,
அவரவர்களுக்கு ஏற்பவாறு உணவுக்கு உணவு,
உடைக்கு உடை அல்லது பணத்திற்கு பணம் என ஜகாதுல் ஃபித்ரை நிர்ணயித்து வழங்கினதாக நாம் எங்கும் காண இயலாது.
அவ்வாறே அவர்களின் பிரதிநிதிகளின் (அபூ பக்ர், உமர், உஸ்மான், அலிய் (ரழி) அஜ்மயீன்) காலத்திலும் காண இயலாது.
மாறாக அவர்கள் அனைவரிடமும் ஜகாத்துல் பித்ரை உணவாக கொடுக்கும் வழிமுறைதான் வழக்கமாக இருந்துள்ளது.
ஆகையால் இவ்வும்மத்திற்கு நன்மை,
நபி )ஸல்) அவர்களை பின்பற்றுவதிலும் அவர்களது குலஃபா அர்ராஷிதீன் (நேர்வழி பெற்ற பிரதிநிதிகளை) பின்பற்றுவதிலும் இருக்கின்றது.
(இருப்பினும்) உணவு அல்லாது மற்ற பொருள்களுக்கு தேவை உடையவராக இருக்கும் ஏழை,
அவருடைய தேவையை பூர்த்தி செய்வதற்கும்,
கொடுக்கப்படும் ஃபித்ரா பொருள் அவருக்கு பயன் தரும் பொருட்டும்.
அவர் விரும்பினால் அதனை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
அல்லஜினதுத் தாயிமா
(மூத்த அறிஞர்களின் நிரந்தர ஃபத்வா குழு) ஃபத்வா எண்: 24651.