علم الفراسة وطريفة الإمام الشافعي فيها
ஆம்! இதுவரை வழக்கொழிந்து வரும் இஸ்லாமிய பாரம்பரியக் கலையாகும். ஜாஹிலிய்ய அறபிகளின் காலத்திற்கு முன்பிருந்தே அறியப்பட்ட இக்கலைக்கு Physiognomy என்று ஆங்கிலத்தில் சூட்டப்பட்டு 20 ம் நூற்றாண்டில் பெல்ஜியம் நாட்டு ஆங்கிலேயர் ஒருவரால் இக்கலை உருவாக்கப்பபட்டதாக கூகுல் சொல்கிறது.
இதை வரைவிலக்கணப்படுத்தினால் ஒரு மனிதனின் உருவ அமைப்பு அங்க பரிமாணங்களை வைத்து அவரின் குணாதிசயங்கள், சுபாவங்களை ஊகிக்கும் ஒரு மனோதத்துவக் கலையாகும்.
ஒரு மனிதனின் கண் காது மூக்கு கை கால் ஏனைய அனைத்து உடலுறுப்பின் பாங்கும் அதை இவர் வைத்திருக்கும் முறையும் ஓவ்வொரு அர்த்தங்களை தாங்கியுள்ளதாக இக்கலை சொல்கின்றது.
புருடத்துவக் கலை பற்றி இமாம்ஷாபி(றஹ்) அவர்களின் சம்பவம் சவாரஸ்யமிக்கதாகும்.
அவர்கள் கூறுகின்றார்கள்..
நான் புருடத்துவக்கலையை அறிந்து வைத்யிருந்தேன். எனினும் அது யூகத்தின் அடிப்படையில் உருவானதாகையால் அதில் எனக்கு முழுமையாக நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் எனக்கு ஒருபயணத்தில் கிடைத்த அனுபவம் எனது அக்கருத்தை மாற்றியமைத்துவிட்டது.
ஆம்! ஒருதடவை நான் என் பணியாளுடன் பயணமொன்றை மேற்கொண்டேன்.
தொலைதூரப் பயணத்தின்போது எங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமொன்று தேவைப்பட்டது. அங்கு ஒருவர் தன்வீட்டின் முன் நிற்கக்கண்டு அவரிடம் அன்றிரவு தங்கிச்செல்ல அனுமதி கேட்க விரும்பினோம். அம்மனிதரைப்பார்த்த மாத்திரத்தில் அவர் ஒரு கடைந்தெடுத்த கஞ்சத்தனமும், கடும் சொல்லால் பிறரைப் புண்படுத்தும் முரடனாகவும் இருப்பானென்றும் என் புருடடத்துவ அறிவு என்னை எச்சரித்து.
வேறு வழியின்றி அவரிடம் உதவிகோரினோம். என்ன ஆச்சரியம்! அவரோ எங்களை விழுந்து விழுந்து வரவேற்றார். தடல்புடலாக இரவுவிருந்தளித்தார். தங்குவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து, நாங்கள் ஏறிவந்த குதிரைக்குக் கூட தீவனமிட்டு நன்கு கவனித்தார். இவற்றைக் கவனித்த நான் இக்கலை நூறுவீதம் உண்மையாகவிருக்க வாய்ப்பேயில்லை, ஏனெனில் இம்மனிதருடைய விடயத்தில் புருடத்துவம் பொய்த்துப்போய்விட்டதே ! என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
மறுநாள் காலை எழுந்தவுடன் பயணத்தைத் தொடர தீர்மானித்தேன். உடனே அம்மனிதரிடம் கனிவாக தாங்கள் செய்த உதவிகளுக்கு மிக்க நன்றி.. தாங்கள் மக்காவுக்கு வந்தால் முஹம்மத் பின் இத்ரீஸ் ஷாபியின் வீடு எங்கென விசாரித்து கட்டாயம் என் வீட்டுக்கு வரவேண்டுமென அன்புக் கட்டளையிட்டார்கள் .
இதைக்கேட்ட அம்மனிதன் கோபமுற்றவனாக " நானென்ன உன் தந்தை இத்ரீஸ் பிடித்துவைத்த வேலைக்காரனா.. உன்னைத்தேடி மக்கா வருவதற்கு... எனக் கொதித்தான். இதைக்கேட்ட நான் நீ என்ன சொல்ல வருகிறாய் என வினவ அவனோ எடு என் பணத்தை .. நான் உனக்கு போட்ட விருந்துக்கு.. படுக்க தந்த அறைக்கு..போர்வை தலையணைக்கு ... என்று பட்டியலிட்பான். உடனே நான் அவமானப்பட்டவனாக அவன்கேட்ட பணத்தை எண்ணிக் கொடுத்தேன். உன் குதிரைக்கு போட்ட கொள்ளுக்கு உங்கப்பனா காசு தருவது என முழங்க அதற்குரிய பணத்தையும் பெற்றக்கொண்டு நானென்ன சத்திரமா நடத்துகிறேன் உங்களுக்கு சேவைசெய்ய .. என்று கடிந்கொண்டே கதவைச் சார்த்தினான். அவமானப்பட்டு வெளியேறிய எனக்கு அன்றுமுதல் புருடத்துவக் கலைமேல் இருந்ந நம்பிக்கை அதிகரித்துவிட்டது.
நூல் ;.: அல்அறபிய்யா பைன யதைக்க , பாகம் 3
AGM. ஜலீல் மதனி