கல்வியைத் தேடும் மாணவருக்கு ஒரு அழகிய உபதேசம்

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஆலு ஷைஃக் ஹபிஃதஹுல்லாஹ்

கல்வியைத் தேடக்கூடிய மாணவருக்கு என்னுடைய உபதேசமாவது, கல்வியின் பாதை மீது அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், உண்மையில் எவர் தான், பாதுகாப்பு பெற வேண்டுமென நாடுகிறாரோ, அப்பாதுகாப்பானது மார்க்கக் கல்வியைத் (தேடுவதிலும்), (அதைக் கொண்டு) ஸாலிஹான அமல்கள் செய்வதிலும் தவிர வேறெதனைக் கொண்டும் இல்லை. பாதுகாப்பு ஏற்படுவற்குறிய மிகப்பெரும் வழியாக, தவ்ஹீத் மற்றும் சரியான அகீதாவைப் (கொள்கை) பற்றிய கல்வியே இருக்கின்றது.

ஏனெனில், இதில் தான் உள்ளத்தின் தூய்மையும், மேலும் மனோஇச்சை மற்றும் வழிகெடுக்கக் கூடிய சந்தேகங்களிலிருந்து பாதுகாப்பும் இருக்கின்றது. 

எனவே, அதில் (கல்வியைத் தேடுவதில்) உறுதியாக இருக்குமாறும், புத்தகங்களை வாசிக்குமாறும், ஒருவரால் இயன்ற அளவு கல்வியைத் தன்னுடைய வீட்டிலும், தன்னுடைய தோழர்களுடனும், (மேலும்) எந்த இடமாயினும், அவரால் இயன்ற அளவிற்கு கல்வியைப் பரப்புமாறும், எனக்கும் உங்களுக்கும் நான் உபதேசம் செய்கிறேன். 

மேலும் மக்கள், மார்க்கக் கல்வியைத் தேடக்கூடிய மாணவர்களின் பக்கம் மிகப்பெரும் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள். 

பயனுள்ள கல்வி, 

அதனை அடையக்கூடிய வழிகள், 

உலமாக்கள் இருப்பது, 

எளிதில் புத்தகங்களை அடைவது, 

பாதுகாப்பும், ஆரோக்கியமும் இருப்பது, 

மனிதனை பொதுவான  விடயங்களில் மூழ்கச்செய்யும் திசைதிருப்பக் கூடியவைகள் இல்லாதிருத்தல், அதாவது பாதுகாப்பு குறித்த விடயங்கள், 

மேலும் உள்ளங்கள் மற்றும் சிந்தனைகளை திசைத் திருப்புபவைகள் (இல்லாதிருந்தல்),

ஆகியவைகளை ஏற்படுத்திக்கொடுத்த   அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

இவை நாம் கல்வி தேடுவதையும், அதற்காக (நேரம், பொருளாதாரம் ஆகியவற்றை) செலவு செய்வதையும் எளிதாக்கி தருகின்றன. 

எனவே, நமக்குத் தெரியாது, ஏதேனும் ஒரு நேரம் வரலாம், (அந்நேரத்தில்) மனிதன் இப்போது எவ்வாறு கல்வியைத் தேடிக் கொண்டிருக்கின்றானோ மேலும் எவ்வாறு கற்றுக் கொண்டிருக்கிறானோ, அவ்வாறு அவனால் செய்ய இயலாமல் போகலாம். 

இதன் காரணத்தினால், வேலை  வருவதற்கு முன்பாக ஓய்வு நேரத்தை  பயன்படுத்திக்கொள்வதிலும், தலைமைத்துவம் அடைவதற்கு  முன்பாக (தீனுடைய) விளக்கத்தைப் பெறுவதிலும், கல்வியைத் தேடக்கூடிய மாணவர் ஆர்வத்துடன் இருப்பது, அவர்மீது அவசியமானதாக  இருக்கின்றது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

ஷர்ஹ் அல்-அகீதா அத்தஹாவிய்யாஹ், 2/514,515


أحدث أقدم