அல்லாஹ்விடம் தன் தேவையை கேடகாதிருப்பவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்

நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் :

"யார் அல்லாஹ்விடம் தன் தேவையை கேடகாதிருக்கிறானோ அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்"

இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள் இந்த ஹதீஸிற்கு பின்வருமாறு விளக்கம்  கூறியுள்ளார்கள் :

அல்லாஹ்வுடைய படைப்புக்களில் அவனுக்கு மிகவும் விருப்பத்துக்குரியவர்கள், அவனிடம் மிகச் சிறந்த முறையிலும் அதிகமாகவும் தம் தேவையை கேட்பவர்களாவர். விடாமுயற்சியாக வலியுறுத்தி கேட்டு பிரார்த்திப்பவனை அல்லாஹ் நேசிக்கின்றான். ஓர் அடியான் அல்லாஹ்விடம் விடாமுயற்சியாக வற்புறுத்தி தன் தேவையை கேட்டு பிரார்த்திக்கும் போதெல்லாம் அல்லாஹ் அவ்வடியானை நேசிக்கின்றான்;  தன்னோடு நெருக்கமாக்கிக் கொள்கின்றான்; அவன் கேட்பதை எல்லாம் கொடுக்கின்றான்."



أحدث أقدم