"யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களில் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர்கள் கூட தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியையே தேடுகின்றனர். அவனது அருளை ஆதரவு வைக்கின்றனர். மேலும், அவனது தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக உமது இரட்சகனின் தண்டனை அஞ்சப்பட வேண்டியதாகவே இருக்கிறது."
(அல் குர்ஆன் - சூறா பனீ இஸ்ராயீல்: 57)
இமாம் இப்னுல் கைய்யிம் றஹ் அவர்கள், மேலுள்ள திருக்குர்ஆன் வசனத்தில் மூன்று பிரதான இபாதத்தின் அடிப்படைகள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
அவை மூன்றும் வருமாறு :
இறைவனின் தண்டனையை அஞ்சுதல்.
அவனது அருளை ஆதரவு வைத்தல்.
அவன் மீது அளவுகடந்த அன்பு வைத்தல்.