ஷஃபான் மாத நடுப்பகுதி (பிறை 15) இரவு, பகல் வேளைகளில் செய்யும் வணக்க வழிபாடுகள் தொடர்பான மார்க்க அறிஞர்களின் தீர்ப்புக்கள்

இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
" ஷஃபான் மாதத்தின் நடுப்பகுக்கு என தனி முக்கியத்துவம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில், பொதுவாக அதன் சிறப்பு சம்பந்தமாக சரியான அறிவிப்புக்கள் எதுவும் வரவில்லை. பின்னுள்ளோர் முக்கியத்துவம் கொடுப்பதாக நீ அறிகின்றவை முன்னோரிடம் இருந்து வந்தவை அல்ல."

இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"ஷஃபான் மாத நடுப்பகுதி இரவை கொண்டாடுவதும்  அதன் பகல் பொழுதில் விஷேட நோன்பு நோற்பதும் சில மனிதர்கள் உருவாக்கியுள்ள பித்அத்தான செயற்பாடாகும். இச்செயற்பாட்டுக்கு அங்கிகாரம் பெற்ற ஆதாரம் எதுவும் கிடையாது. அது தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்கள் ஆதாரபூர்வமற்றவையாகும்."

இமாம் இப்னு உதைமீன் றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் :
"ஷஃபான் மாத நடுப்பகுதியை முன்னிட்டு விஷேடமாக இரவில் நின்று வணங்கவும் பகலில் நோன்பு நோற்கவும் படவும்மாட்டது. யாராவது மாத நடுப்பகுதியான 'அய்யாமுமுல்' நாட்களில் வழமையாக நோற்று வருபவராக இருந்தால் அவரை நோன்பு நோற்க வேண்டாம் என நாம் கூறமாட்டோம்.நாம் கூறுவதெல்லாம் ஷஃபான் மாத நடுப்பகுதியில் விஷேடமாக இரவில் நின்று வணங்கியும் அதன் பகல் பொழுதில் நோன்பு நோற்கவும் வேண்டாம் என்றுதான்."


Previous Post Next Post