உண்மையைக் கடைப்பிடியுங்கள்! பொய்யை விட்டும், மோசடியை விட்டும் தூரமாகுங்கள்!


         இமாம் சுப்fயான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், அலி இப்னுல் ஹசன் அஸ்ஸுலமீ  அவர்களுக்குச் செய்த உபதேசத்தில் இவ்வாறு வந்திருக்கிறது:-

         *“அனைத்து இடங்களிலும் உண்மையை நீ இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்; பொய் மற்றும் மோசடியை விட்டும், இவற்றில் ஈடுபடுவோருடன் அமர்வதை விட்டும் உன்னை நான் எச்சரிக்கிறேன்! ஏனெனில், இவையனைத்துமே பாவமாகும். மரணத்தை நினைவுகூர்வதை அதிகப்படுத்திக் கொள்; முன் சென்ற உன் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிழைபொறுக்கத் தேடுவதையும் நீ அதிகப்படுத்திக்கொள். அத்தோடு, எஞ்சியிருக்கும் உன் வாழ்நாளுக்காக அல்லாஹ்விடம் ஈடேற்றத்தையும் சாந்தியையும் நீ வேண்டிக்கொள்!”*

{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 07/82 }


               قال الإمام سفيان الثوري فيما أوصى به عليّ بن الحسن السّلمي:-

            *[ عليك بالصدق في المواطن كلها، وإياك والكذب والخيانة ومجالسة أصحابها، فإنها وزر كلّه. وأكثر ذكر الموت، وأكثر الإستغفار ممّا قد سلف من ذنوبك، وسل الله السّلامة لما بقي من عمرك! ]*

{ رواه الإمام أبو نعيم الأصفهاني رحمه الله في 'حلية الأولياء'،  ٧/٨٢ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

*“உண்மை,* நன்மைக்கு வழிகாட்டும்; நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் *'உண்மையாளர்'* (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். *பொய்,* தீமைக்கு வழி வகுக்கும்;தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் *'பெரும் பொய்யர்'* எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்!” (நூல் : முஸ்லிம் - 5081)


❇👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் *மோசடி செய்யாதீர்கள்.* நீங்கள் அறிந்துகொண்டே உங்களிடமுள்ள அமானிதங்களுக்கும் *மோசடி செய்யாதீர்கள்!”* (அல்குர்ஆன், 08:27)

♻➖➖➖➖➖➖➖➖♻

              ✍ தமிழில்✍

               *அஷ்ஷெய்க்*

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post