இந்த இயல்புகளையுடைய மனிதர்களாக இருக்காதீர்கள்


           அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அல்ஜர்பூbஃ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“மனிதர்களில் சில தரப்பினர் இருக்கின்றார்கள். அவர்கள் ஷைத்தானிய இயல்புகளையுடையவர்கள்; அவர்களிடமிருந்த நல்ல இயல்புத் தன்மையெல்லாம் (அவர்களை விட்டும்)  சென்றுவிட்டன; அவர்களின் உள்ளங்களும் கல்லாகி விட்டன!  நல்லதை அவர்கள் விரும்பாதிருப்பது மாத்திரமின்றி அதனோடு விரோதமும் பாராட்டுகின்றனர்!* அல்லாஹ் கூறுவது போல, “(சத்தியத்தை விட்டும்) அவர்கள் விலகிச் சென்ற போது, அல்லாஹ்வும் அவர்களது உள்ளங்களை  விலகச் செய்தான்!”. (அல்குர்ஆன்,61:05). *மேலும், அவர்களின் செவிப்புலனிலும் பார்வைகளிலும் (நல்லதைக் கேட்காதவாறும், பார்க்காதவாறும்) அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான்!* 

             *அல்லாஹ் கூறுகிறான்:* “அவர்களின் உள்ளங்களிலும், அவர்களின் செவிப்புலனிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகள் மீது திரையும் இருக்கின்றது. மேலும், அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு”. (அல்குர்ஆன், 02:07)

           *மற்றொரு வழிகெட்ட பிரிவினரும் மனிதர்களில் இருக்கின்றனர். கற்பனைகளுக்கும், மெளட்டீகங்களுக்கும், (சமூகம் பின்பற்றி வரும்) வழமைகளுக்கும், கண்மூடித்தனமான பின்பற்றல்களுக்கும் இவர்கள் அடிபணிந்து விட்டவர்கள்; தாம் விரும்பும் மார்க்கத்தை இதிலிருந்தே இவர்கள் ஆக்கிக்கொண்டனர்; தாமும் இதில் வளர்ந்து, தமது சந்ததியினரையும் இதிலேயே வளர்த்தும் விட்டனர்; இதிலிருந்து  பிரிவதென்பது இவர்களுக்கு கஷ்டமாகி விட்டது! தமது இந்த அனந்தரப் பழக்கத்தையும், தமது மூதாதையர்களின் அடையாளத்தையும் பாதுகாத்தல் என்ற போர்வையில் சத்தியத்திற்கு இவர்கள் மாறு செய்து ம் விட்டனர்! இந்த வகை மனிதர்கள் குறித்துத்தான் அல்லாஹ் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறான்:* “அவர்களிடம், 'அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள்!' என்று கூறப்பட்டால் 'இல்லை; நாம் நமது மூதாதையர்களை எதில் இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்!' எனக் கூறுகின்றனர். அவர்களின் மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (பின்பற்றுவார்கள்?)”. (அல்குர்ஆன், 02:170)

{ நூல்: 'அதருல் ஈமான் பீf தஹ்ஸீனில் உம்மதில் இஸ்லாமிய்யா', பக்கம் : 68,69 }

🔹➖➖➖➖➖➖➖➖🔹

            قال الشيخ عبدالله بن عبدالرحمن الجربوع حفظه الله:-

            [ فهناك فئات من الناس لها طبائع شيطانية، قد انتكست فطرها وقست قلوبها، لا يحبّون الخير بل يعادونه. قد زاغوا فأزاغ الله قلوبهم، وختم على سمعهم وأبصارهم كما قال تعالى: *« فلما زاغوا أزاغ الله قلوبهم »* وقال: *« ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم »*.

              وطائفة ضالّة أخرى خضعت للأوهام والخرافات، والعادات والتقاليد. وجعلت منها دينا ألفته، وتربّت عليه، وربّت عليه أجيالها، حتى صعب عليها فراقه، وخالفت الحق محافظة على ميراثها وسمة أجدادها. وقد أشار الله إلى هذا النوع بقوله: *« وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أو لوا كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون »*.

{ أثر الإيمان في تحصين الأمة الإسلامية،  ص - ٦٨،٦٩ }

🔹➖➖➖➖➖➖➖➖🔹

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post