புத்திசாலி மனிதனாகச் செயல்படுங்கள்


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          *“ புத்திசாலியாக இருக்கின்ற மனிதன், மறுமையில் தான் பெற்றுக்கொள்ளும் (நன்மை, தீமை உள்ளடங்கிய செயல்களின்) அப்பதிவேட்டில் என்ன எழுதப்பட்டதாக இருக்கும்? என்பதை (சிந்தித்து)ப் பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். என்றாலும், தீமைகள் அனைத்தையும் அழித்தொழிக்க முடியுமான வாசலொன்று எமக்கு முன்னால் (திறந்து விடப்பட்டதாகத்தான்) இருக்கிறது. அதுதான் பாவமன்னிப்பாகும்! அடியான், அல்லாஹ்வின்பால் பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டால் அவனது பாவம் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அவனின் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.”*

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 08/510 }


         قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

         *[ والإنسان العاقل لابد أن ينظر ماذا كتب في هذا الكتاب الذي سوف يجده يوم القيامة مكتوبا. ولكن نحن أمامنا باب يمكن أن يقضي على كل السيئات وهو التوبة! وإذا تاب العبد إلى الله مهما عظم ذنبه فإن الله يتوب عليه "*.

{ مجموع الفتاوى،  ٨/٥١٠ }

➖➖👇👇👇👇👇👇➖➖

➡ அல்லாஹ் கூறுகிறான்: *“தமக்குத்தாமே (அநியாயம் செய்து) வரம்பு மீறிய எனது அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என (நபியே) நீர் கூறுவீராக!”* (அல்குர்ஆன், 39:53)


➡ மேலும் அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். இதுவல்லாத ஏனையவற்றைத் தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்”*. (அல்குர்ஆன், 04:116)

♦➖➖➖➖➖➖➖➖♦

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post