நீங்கள் உண்மையாளராக இருந்தால், என்னை அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள் பொய்யராக இருந்தால், உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!


              “(இஸ்லாமியப் பெரியார்களான) 'ஹசன் பின் ஹசன் (ரஹிமஹுல்லாஹ்)' அவர்களுக்கும், இவரது சாச்சா மகனான 'அலீ இப்னுல் ஹுசைன் (ரஹிமஹுல்லாஹ்)' அவர்களுக்குமிடையில் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஒரு சந்தர்ப்பத்தில், அலீ அவர்களின் விடயத்தில் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அவற்றையெல்லாம் ஹசன் விடாமல் சொல்லி விட்டார். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த அலீ அவர்களோ) எதுவுமே பேசாது மெளனமாக இருந்தார். பின்னர், (அவ்விடத்தை விட்டு) ஹசன் அவர்களும் போய் விட்டார்கள்!. இரவு நேரம் வந்தபோது தன்னைத் திட்டிய ஹசனிடம் அலீ அவர்கள் வந்தார்கள். அவரோ வெளியே செல்ல முற்பட்டார். அப்போது அலீ அவர்கள் ஹசனைப் பார்த்து, *“என் சாச்சாவின் மகனே! நீங்கள் உண்மையாளராக இருந்தால், என்னை அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள் பொய்யராக இருந்தால், உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்!!”* என்று கூறினார். இதைக்கேட்ட மாத்திரமே அலியை ஹசன்  கட்டித் தழுவினார். ஹசன் மீது அலீ அன்பு கொண்டு இரக்கப்படும் அளவுக்கு ஹசன் அழுதார்”.

{ நூல்: 'நுஸ்ஹதுல் fபுழலா தஹ்தீபு சியரி அஃலாமின் நுபbலா', பக்கம்: 407,408 }

🌠➖➖➖➖➖➖➖➖🌠

             *{ كان بين حسن بن حسن وبين إبن عمّه علي بن الحسين شيئ، فما ترك حسن شيئا إلاّ قاله، وعليّ ساكت، فذهب حسن. فلما كان في الليل أتاه عليّ، فخرج! فقال عليّ: «ياابن عمّي! إن كنت صادقا فغفر الله لي، وإن كنت كاذبا فغفر الله لك؛ السلام عليك ». فالتزمه حسن، وبكى حتى رثى له }.*

[ 'نزهة الفضلاء تهذيب سير أعلام النبلاء' لمحمد حسن عقيل موسى، ص - ٤٠٧،٤٠٨ ]

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post