மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்


           இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது மாணவர் 'அல்முஸனீ' (ரஹிமஹுல்லாஹ்) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள்:-

          *“அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்; உன் உள்ளத்தில் மறுமையை நீ நிறுத்திப் பார்; உன் கண்கள் இரண்டிற்கும் முன்னால் மரணத்தை வைத்துக்கொள்! அல்லாஹ்வுக்கு முன் நிற்பதை நீ மறந்து விடாதே; அல்லாஹ்விடமிருந்து வரும் விடயங்களில் நடுக்கத்துடனும்  அச்சத்துடனும் இரு!*

          *மேலும், அவன் தடுத்தவற்றைத் தவிர்ந்துகொள்; அவனின் கடமைகளை நிறைவேற்று; எங்கிருந்த போதிலும் சத்தியத்துடனேயே நீ இரு! உன்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகள் குறைவாக இருப்பினும் அவற்றை அற்பமாகக் கருதாது நன்றியுடன் அவற்றை எதிர்கொள்!*

         *இன்னும், உன் மெளனம் சிந்தனைக்குரியதாகவும், உன் பேச்சு நினைவூட்டலாகவும், உன் பார்வை படிப்பினையாகவும் இருக்கட்டும்! அத்தோடு, இறையச்சத்தின் மூலம் நரகத்திலிருந்து அல்லாஹ்விடம் நீ பாதுகாப்பைத் தேடிக்கொள்!”*

{ நூல்: 'மனாகிபுbல் இமாம் அஷ்ஷாfபிஈ', 02/294 }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

 

            قال الإمام الشافعي لتلميذه المزني رحمهما الله تعالى:

           *[ إتّق الله، ومثّل الآخرة في قلبك، واجعل الموت نصب عينيك، ولا تنس موقفك بين يدي الله، وكن من الله على وجل!*

            *واجتنب محارمه، وأدّ فرائضه، وكن مع الحق حيث كان،ولا تستصغرنّ نعم الله عليك وإن قلّت، وقابلها بالشكر.*

            *وليكن صمتك تفكّرا، وكلامك ذكرا، ونظرك عبرة، واستعذ بالله من النار بالتقوى! ]*

{ مناقب الإمام الشافعي، ٢/٢٩٤ }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

   *✍✍ தமிழில்✍✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

   

أحدث أقدم