சஊதி அரேபியாவின் தலைமை முப்fதியாக இருந்த *அல்லாமா இப்னு பாஸ் (ரஹ்)* கூறுகின்றார்கள்:-
*“தாடி என்பது, ஆணுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்துள்ள கண்ணியமாகும்! பெண்களை விட ஆணுக்குரிய தனிச் சிறப்பம்சமாக இதை அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். தமது தாடிகளைச் சிரைத்து அல்லாஹ்வுக்கு மாறு செய்துகொண்டிருப்போரை விட்டும், மற்றும் நிராகரிப்பாளர்களை விட்டும் (முஸ்லிம் ஆண்களைப்) பிரித்துக்காட்டுகின்ற தனிச் சிறப்பம்சமாகவும் இதை அல்லாஹ் ஆக்கிவைத்திருக்கின்றான். இந்தவகையில் தாடி:*
*1} ஆணுக்கேயுரிய ஓர் அலங்காரமாகும்!*
*2} முகத்தில் (பிரகாசிக்கும்) ஓர் ஒளியாகும்!*
*3} பெண்களை விட்டுவிட்டு ஆணை (மாத்திரம்) பிரித்துக்காட்டுகின்ற தனியானதோர் சிறப்பம்சமாகும்!*
{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 07/17 }
قال العلامة إبن باز رحمه الله تعالى:-
*[ اللحية كرامة من الله للرجل، وجعلها الله ميزة له على النساء، وجعلها ميزة عن الكفرة والعصاة الذين يحلقون لحاهم.*
*❇ فهي زينة للرجل.*
*❇ وهي نور في الوجه.*
*❇ وهي ميزة له عن النساء.*
{ مجموع الفتاوى، ٧/١٧ }
➖➖➖➖➖➖➖➖➖➖
❇👉🏿 அல்லாமா முஹம்மத் அல்அமீன் அஷ்ஷன்கீதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:-
*“உரோம - பாரசீக மன்னர்களின் பொக்கிஷங்களை (போரின் மூலம்) முஸ்லிம் போராட்ட வீரர்கள் கைப்பற்றினார்கள்; பூமியின் கிழக்குப் பிரதேசங்களும் அதன் மேற்குப் பிரதேசங்களும் அவர்களிடம் வீழ்ந்தன. அவர்களில் ஒருவர்கூட தாடியைச் சிரைத்தவராக இருக்கவில்லை!!”*
{ நூல்: 'தப்ஸீர் அழ்வாஉல் பbயான்', 04/94 }
قال العلامة محمد الأمين الشنقيطي رحمه الله :-
*[ والرجال الذين أخذوا كنوز كسرى وقيصر، ودانت لهم مشارق الأرض ومغاربها ليس فيهم حالق لحية! ]*
{ تفسير أضواء البيان، ٤/ ٩٤ }
🔹➖➖➖➖➖➖➖➖🔹
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா