பிழையான வழியில் செல்வோரும், தாம் நேரான வழியில் செல்வதாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்!


          *“ 'பூமியில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால், 'நாங்கள்தான் சீர்திருத்தவாதிகள்!' என அவர்கள் கூறுகின்றனர்!”* 

          *அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் குழப்பவாதிகள்; எனினும், (அதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்!”* (02:11,12) என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் கூறுகின்றார்கள்:-

           *“அசத்தியத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் ஒவ்வொரு மனிதனும், தான் சத்தியத்தின் மீதுருப்பதாகவே எண்ணிக்கொள்கின்றான்! குழப்பத்தின்பால் அழைப்பு விடுக்கும் ஒவ்வொரு மனிதனும், சீர்திருத்தத்தின்பால் தான் அழைத்துக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான்!*

             *'சீர்திருத்தத்திற்கும் குழப்பத்திற்கிடையிலும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கிடையிலும் இருக்கின்ற வேறுபாட்டை எதை வைத்து அளவீடு செய்யப்பட வேண்டும்?'* என்று ஒருவர் கேட்டால் அதற்கு நாம், *'(இதை விளங்குவதற்கு)  அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் பக்கம் செல்ல வேண்டும் என்றும், இவ்விரண்டைக்கொண்டே அசத்தியத்திலிருந்து சத்தியம் அறியப்படும்; குழப்பத்திலிருந்து சீர்திருத்தம் அறியப்படும்!'* என்று பதில் சொல்வோம்”.

{ நூல்: 'அஹ்காமுன் மினல் குர்ஆனில் கரீம்', 01/95 }


              قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-  [يستفاد من قول الله سبحانه وتعالى: *« وإذا قيل لهم لاتفسدوا في الأرض قالوا إنّما نحن مصلحون 🔅ألا إنّهم هم المفسدون ولكن لاّ يشعرون »*  ( سورة البقرة، الآية: ١١،١٢) 

               *[أن كل إنسان يدعو إلى باطل فإنّما يزعم أنّه على حق، وأنّ كل إنسان يدعو إلى فساد فإنّما يزعم أنّه يدعو إلى صلاح.*

           *فإذا قال قائل: بأي شيئ يوزن الصلاح والفساد والحق والباطل؟*

          *قلنا: بالرّجوع إلى الكتاب والسنة. فبهما يعرف الحق من الباطل ويعرف الصلاح من الفساد]*

{ أحكام من القرآن الكريم، ١/٩٥}

➖➖➖➖➖➖➖➖➖➖

🎯 அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட  நூதன அனுஷ்டானங்களைச் செய்யும் bபித்அத்வாதிகளுக்கு மறுப்புக் கொடுப்பதை சமூகத்தைப் பிரித்து அதைச் சின்னாபின்னமாக்கும் செயல் என்று யார் நினைக்கின்றானோ அவனும் வழிகெட்டவனேயாவான்! ஏனெனில், சமூகத்தை அசத்தியத்தில் ஒன்றுகூட்ட அவன் விரும்புகிறான்!”*

{ நூல்: 'இர்ஷாதுஸ் ஸாரீ', பக்கம்: 82 }  


             قال العلّامة أحمد بن يحي النّجمي رحمه الله تعالى:-

           *« من زعم أن الإنكار على أصحاب البدع تفريق للأمة وتشتيت لها فهو ضالّ أيضا. لأنه يريد إجتماع الأمة على باطل »*

{ إرشاد الساري، ص - ٨٢ }

🏵➖➖➖➖➖➖➖➖🏵

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم