அல்லாஹ்விடம் நாமும் நேர்வழியை (றுஷ்தை)க் கேட்போம்


        அஷ்ஷெய்க் ஹைஸான் அல்ஹைஸான் (ஹபிfழஹுல்லாஹ்) தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு  கூறுகின்றார்கள்:-

          “குகைவாசிகளான அந்த இளைஞர்கள் அல்லாஹ்விடம் உதவியையோ, வெற்றியையோ, (தமது அபிலாசைகளை சாத்தியப்படுத்துவதற்கான) வசதியை ஏற்படுத்தித் தருமாறோ கேட்காது நேர்வழியைத்தான் கேட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்: *“எங்கள் இரட்சகனே! உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கித் தருவாயாக!' எனப் பிரார்த்தித்தனர்”*. (அல்குர்ஆன், 18:10)

        அல்குர்ஆன் ஓதப்படுவதை ஜின்கள் முதன்முதல் செவிமடுத்ததும் தமது இரட்சகனிடம் எதை வேண்டினார்கள்? நேர்வழியைத்தான் அவர்கள் வேண்டினார்கள். அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக நாம் ஆச்சரியமிக்கதொரு குர்ஆனைச் செவியேற்றோம். அது நேர்வழியின்பால் இட்டுச் செல்கின்றது. அதை நாம் நம்பிக்கை கொண்டோம்! என ஜின்கள் கூறினர்”*. (அல்குர்ஆன், 72:01,02)

             *“(நபியே!) என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கின்றேன் (எனக் கூறுவீராக!) பிரார்த்திப்பவன் என்னை அழைத்தால், அழைப்புக்கு நான் விடையளிப்பேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னையே அழைக்கட்டும்; என்னையே நம்பிக்கையும் கொள்ளட்டும்”*" (அல்குர்ஆன், 02: 186) என்ற இந்த வசனத்திலும் “நேர்வழி” குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றது.

        “நேர்வழி, நல்வழி” என்ற சொற்கருத்தைக் கொடுக்கும் *« رشد - றுஷ்த் »* என்பதன் விரிவான பொருள் என்ன?

01) உண்மையை சரியான முறையில் பெற்றுக்கொள்ளல்.

02) சரியாகவும்,  தெளிவாகவும், உறுதியாகவும் இருத்தல்.

03) சரியான திசையில் செல்லல்.

           இந்த அடிப்படையில் அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டிவிட்டால், நிச்சயமாக நீ மகத்தான நன்மை கொடுக்கப்பட்டுவிட்டாய்; உனது நகர்வுகளிலும் நீ அருள்பாலிக்கப்பட்டுவிட்டாய்! எனவேதான், இந்த நேர்வழியை எப்போதும் திரும்பத்திரும்பக் கேட்கும்படியாக அல்லாஹ் எமக்கு உபதேசம் செய்கின்றான். *“எனது இரட்சகன் இதைவிட நேர்வழிக்கு மிக நெருக்கமானவற்றின்பால் எனக்கு வழிகாட்டுவான் என (நபியே) நீர் கூறுவீராக”* (அல்குர்ஆன், 18: 24)

            (அல்லாஹ்விடமிருந்து அருளும், அறிவும் வழங்கப்பட்ட) அந்த நல்ல மனிதரை இறைத்தூதர் மூசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அடைந்தபோது,  அவரிடம், “நேர்வழி அல்லது நல்வழி” என்ற இந்த ஒரேயொரு விடயத்தைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்: *“உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றிலிருந்து நீர் எனக்கு நல்வழியைக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்தொடரட்டுமா? எனக் கேட்டார்”*. (அல்குர்ஆன், 18:66)


          قال الشيخ حيزان الحيزان حفظه الله في فيس بوك:

         { إنهم سألوا الله "الرّشد" دون أن يسالوه النصر، ولا الظفر، ولا التمكين!! *« ربّنا آتنا من لّدنك رحمة وهيّئ لنا من أمرنا رشدا »* - سورة الكهف، الآية : ١٠ - 

        وماذا طلب الجنّ من رّبّهم لمّا سمعوا القرآن أول مرة؟! طلبوا " الرّشد"! *« فقالوا إنا سمعنا قرآنا عجبا🔅يهدي إلى الرّشد فآمنّا به »* - سورة الجن، الآية : ١،٢ -

        وفي قوله تعالى:  *« وإذا سألك عبادي عنّي فإنّي قريب أجيب دعوة الدّاع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلّهم يرشدون »* - سورة البقرة، الآية : ١٨٦ -  "الرّشد".

*فما هو الرّشد؟* 

*الرّشد هو:* ١- إصابة وجه الحقيقة.  ٢- هو السّداد.  ٣- هو السّير في الإتجاه الصحيح. 

         فإذا أرشدك الله فقد أوتيت خيرا عظيما، وبوركت خطواتك. ولذلك يوصينا الله سبحانه وتعالى أن نردّد دائما: *« وقل عسى أن يهدين ربّي لأقرب من هذا رشدا »* - سورة الكهف، الآية: ٢٤ - 

          وحين بلغ موسى الرّجل الصالح لم يطلب منه إلّا أمرا واحدا وهو: *« هل أتّبعك على أن تعلّمن ممّا علّمت رشدا »* - سورة الكهف، الآية: ٦٦ - فقط "رشدا " }

[ صفحة فيس بوك:  *حيزان الحيزان* ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.


أحدث أقدم