ஒருவரை அல்லாஹ் புகழ்கிறான் என்றால் அதில் இரண்டு விடயங்களை எம்மிடம் அவன் எதிர்பார்க்கின்றான்


🔅அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக இப்ராஹீம் நேரிய வழியில் நின்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகமாக இருந்தார். அவர் இணைவைப்போரில் இருக்கவில்லை”* (அல்குர்ஆன், 16:120)

            இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “அல்லாஹ்வின்  புகழ் மனிதர்களில் ஒருவர்மீது இருக்கிறது  என்றால், அந்த மனிதர் குறித்த புகழ் மாத்திரம் எம்மை வந்தடைய வேண்டும் என்று அதன்மூலம் அல்லாஹ்  நாடவில்லை. மாறாக, அதிலிருந்து முக்கிய இரு விடயங்களை அவன் நாடுகின்றான் என்பதை கட்டாயம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

*ஒன்று:* யார் குறித்து  நல்ல முறையில் அல்லாஹ்  புகழ்ந்துரைக்கின்றானோ அவர்மீது நாம் நேசம் கொள்ள வேண்டும். கெட்ட செயலைச் செய்ததற்காக  அல்லாஹ் இகழ்பவனை எப்படி நாம் கோபித்து, வெறுப்போமோ அதைப்போல...! இந்த வகையில்,  இறைத்தூதர் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நாம் நேசிக்கின்றோம்;  காரணம், அவர் நேரிய வழியில் நின்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்த ஒரு தலைவராக இருந்தார். இவர்களின் சமூகத்தாரை நாம் வெறுக்கிறோம்; காரணம், அவர்கள் வழிகெட்டவர்களாக இருந்தனர். இவ்வாறுதான், எமது இனத்தைச் சார்ந்தோராக இல்லாவிட்டாலும் வானவர்களை நாம் நேசிக்கின்றோம்; காரணம், அல்லாஹ்வின் கட்டளையை அவர்கள் எடுத்து நடக்கின்றார்கள். ஷைத்தான்களை நாம் வெறுக்கிறோம்; காரணம், அல்லாஹ்வுக்கு அவர்கள் மாறுசெய்து நடக்கின்றனர். அத்தோடு, எமக்கும் அல்லாஹ்வுக்கும் எதிரிகளாக இருக்கின்றனர். ஷைத்தான்களைப் பின்பற்றி நடப்போரையும் நாம் வெறுக்கிறோம்; ஏனெனில், அவர்களும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து நடக்கும் அதேவேளை அல்லாஹ்வுக்கும், எமக்கும் எதிரிகளாகவே இருக்கின்றனர். 

*இரண்டு:* அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் மனிதரில் உள்ள பண்புகளை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும். ஏனெனில்,  புகழ்தலின் இடமே அதுதான்! ஆதலால், அல்லாஹ் புகழ்ந்துரைத்த மனிதரில் காணப்படும் பண்புகளை முடிந்தளவுக்கு நாம் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியமாகும். இது குறித்து அல்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்: *“இவர்களின் சரித்திரங்களில் சிந்தனையுடையோருக்கு நிச்சயமாக படிப்பினை இருக்கின்றது”*. (அல்குர்ஆன், 12:111) , *“நிச்சயமாக இப்ராஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது”*. (அல்குர்ஆன், 60:04)

          இது ஒரு முக்கியமான விடயமாகும். ஏனெனில், நாம் மேலே கூறிய முக்கிய இரு விடயங்களில் முதலாவதாகக் கூறப்பட்ட அந்த நோக்கம் மனிதனின் சிந்தனையை விட்டே சிலநேரம் காணாமல் போயிருக்கும். அதுதான், “நல்ல முறையில் அல்லாஹ் புகழ்ந்துரைத்துக் கூறும் அந்த மனிதர் மீது நேசம் கொள்ளுதல்” என்ற விடயமாகும். என்றாலும்   இது,  மனிதனின் சிந்தனையை விட்டு  காணாமல் போகாமலிருப்பது கட்டாயமாகும். காரணம், “நேசித்தலும் அல்லாஹ்வின் விடயத்தில்தான்! கோபித்தலும் அல்லாஹ்வின் விடயத்தில்தான்!!” என்ற இவ்விடயம் ஈமானின் மிக உறுதியான விடயமாகும்”.

[ நூல்: 'அல்கவ்லுல் முfபீத் அலா கிதாபித் தவ்ஹீத்' , 01/113,114 ]


🔅قال الله تعالى: *{ إن إبراهيم كان أمّة قانتا للّه حنيفا ولم يك من المشركين }* « سورة النحل، الآية - ١٢٠ »

         قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله:-

          { ويجب أن نعلم أن ثناء الله على أحد من خلقه لا يقصد منه أن يصل إلينا الثناء فقط، لكن يقصد منه أمران هامان:

*الأول:* محبة هذا الذي أثنى الله عليه خيرا، كما أن من أثنى الله عليه شرّا فإننا نبغضه ونكرهه. فنحب إبراهيم عليه السلام؛ لأنه كان إماما حنيفا قانتا للّه ولم يكن من المشركين. ونكره قومه؛ لأنهم كانوا ضالّين. ونحب الملائكة وإن كانوا من غير جنسنا؛ لأنهم قائمون بأمر الله. ونكره الشياطين؛ لأنهم عاصون للّه، وأعداء لنا وللّه. ونكره أتباع الشياطين؛ لأنهم عاصون للّه أيضا، وأعداء للّه ولنا.

*الثاني:* أن نقتدي به في هذه الصفات التي أثنى الله بها عليه؛ لأنها محل الثناء. ولنا من الثناء بقدر ما اقتدينا به فيها، قال تعالى: *{ لقد كان في قصصهم عبرة لأولي الألباب }* « سورة يوسف، الآية - ١١١ » ، وقال تعالى: *{ قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه }* « سورة الممتحنة، الآية - ٤ »

         وهذه مسألة مهمّة؛ لأن الإنسان أحيانا يغيب عن باله الغرض الأول، وهو محبة هذا الذي أثنى الله عليه خيرا. ولكن لا ينبغي أن يغيب؛ لأن الحب في الله، والبغض في الله من أوثق عرى الإيمان }. 

[ المصدر: 'القول المفيد على كتاب التوحيد' ، ١/١١٣،١١٤ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم