அநீதி ஆபத்தானது; அதை அஞ்சிக்கொள்ளுங்கள்


           அல்லாஹ் கூறுகிறான்: *“(நபியே!) அநியாயக்காரர்கள் செய்வது குறித்து அல்லாஹ் அலட்சியமாக இருக்கின்றான் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். பார்வைகள் பிதுங்கும் ஒரு நாளுக்காகவே அவன் அவர்களைப் பிற்படுத்துகின்றான்”.* (அல்குர்ஆன், 14:42)

               *“அநீதியிழைக்கப்பட்டவனுக்கு ஆறுதலை அளிப்பதாகவும், அநீதியிழைத்தவனுக்கு எச்சரிக்கையாகவும் இந்த வசனம் இருக்கிறது!”* என இமாம் மைமூன் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள்.

{ நூல்: 'தப்fஸீர் அத்தபbரீ', 13/703 }


              قال الله تعالى: *[ ولا تحسبنّ الله غافلا عمّا يعمل الظّالمون ]* (إبراهيم : ٤٢)

            قال الإمام ميمون بن مهران رحمه الله تعالى: *« هي تعزية للمظلوم، ووعيد للظالم »* { تفسير الطبري،  ١٣/٧٠٣ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

            *“ஒருவன் தன் சகோதரருக்கு அவருடைய மானத்திலோ, (பணம், சொத்து போன்ற) வேறு விடயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவன் அவரிடமிருந்து அதற்காக இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ, வெள்ளிக்காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் மன்னிப்புப் பெறட்டும். (ஏனெனில், மறுமை நாளில்) அவனிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் அளவுக்கு அவனிடமிருந்து எடுக்கப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவனிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் (அநீதிக்குள்ளான) அவனின் தோழரின் தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவன் மீது சுமத்தப்பட்டு விடும்!”* { புகாரி, ஹதீஸ் இலக்கம்- 2449 }

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post