உண்மையாகவே ஆதரவற்று, அநாதரவாக இருப்பவர் யார்?


         இமாம் இப்னுத் துருக்மானீ அல்ஹனபீf (ரஹ்) கூறுகின்றார்கள்:

              *“குடும்பத்தையும் நாடுகளையும் பிரிந்திருத்தலோ, அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பயணம் செய்தலோ அநாதரவு கிடையாது. அல்குர்ஆன் மற்றும் சுன்னாவைக்கொண்டு செயல்பட்டு, இதற்காக உதவி செய்வோரைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பவரே (உண்மையாகவே) ஆதரவற்று, அநாதரவாக இருப்பவர்!. இத்தகையவர், மனிதர்களிடம் வேண்டுமானால் அநாதரவானவராக இருந்துகொண்டிருப்பார்; ஆனால், அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும்  மிக நெருக்கத்திற்குரியவராக இவர் இருந்துகொண்டிருப்பார்!”*

{ நூல்: 'அல்லுமஃ பிfல்ஹவாதிஸ் வல்பிbதஃ', பக்கம்:584 }


              قال الإمام إبن التركماني الحنفي رحمه الله:-

           *[ ليست الغربة مفارقة الأهل والأوطان، والسفر من مكان إلى مكان!* 

*الغريب: هو العامل بالسنة والقرآن ولم يجد من يساعده على ذلك. فيصير بين الخلق غريبا، ومن الله ورسوله قريبا ! ]*

{ اللّمع في الحوادث والبدع، ص- ٥٨٤ }

➖➖👇👇👇👇👇👇➖➖

❇👉🏿 *“அநாதரவானவர்கள் மீது சுபசோபனம் உண்டாகட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, 'அநாதரவானவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?!' என வினவப்பட்டது. அப்போது நபியவர்கள்: 'அதிகமாக இருக்கும் கெட்ட மனிதர்களிடத்தில் குறைவாக இருக்கும் நல்லவர்கள்; அவர்களில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்போரை விட, அவனுக்கு மாறு செய்து நடப்போரே மிகக்கூடுதலாக இருப்பர்!” எனப் பதிலளித்தார்கள்.*

{ நூல்: 'அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா' லில்அல்பானீ, ஹதீஸ் இலக்கம் -  1619 }


          قال رسول الله صلّى الله عليه وسلم: *[ طوبى للغرباء! قيل: ومن الغرباء يا رسول الله؟ قال: ناس صالحون قليل في ناس سوء كثير، من يعصيهم أكثر ممّن يطيعهم ]*

{ السلسلة الصحيحة - ١٦١٩ }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post