🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“எங்கள் இரட்சகனே! ௭ங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களைத் தடம்புரளச் செய்து விடாதே! மேலும், உன்னிடமிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளன் ஆவாய்”.* (அல்குர்ஆன், 03: 08)
அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மார்க்க அறிவில் தேர்ச்சி பெற்று சத்தியத்தில் உறுதியாக இருப்போர், தமக்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின்னர் தமது உள்ளங்களைத் தடம்புரள வைக்காதிருக்கும்படி அவனிடம் வேண்டுவார்கள் என்பதாக அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். வேறு சில வசனங்களில், அசத்தியவாதிகளின் உள்ளங்கள் நேர்வழியை விட்டும் தடம்புரண்டு சென்றதற்கான காரணங்கள் குறித்துத் தெரிவித்து விட்டு, அவர்களின் செயல்பாடே அதற்குக் காரணம் என்றும் அவன் குறிப்பிடுகின்றான். அல்லாஹ் கூறுகிறான்: *“(சத்தியத்தை விட்டும்) அவர்கள் விலகிச் சென்றபோது, அல்லாஹ்வும் அவர்களது உள்ளங்களை விலகச் செய்தான்”.* (அல்குர்ஆன், 61: 05)
*“ஏதேனும் ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டால் சிலர் மற்றும் சிலரைப் பார்த்து, 'உங்களை எவரேனும் பார்க்கின்றனரா?' என்று கூறி திரும்பிச்சென்று விடுகின்றனர். நிச்சயமாக அவர்கள் விளங்கிக்கொள்ளாத கூட்டத்தினராக இருப்பதனால் அல்லாஹ் அவர்களது உள்ளங்களைத் திருப்பிவிட்டான்”.* (அல்குர்ஆன், 09: 127)
எனவே, ஒரு மனிதன் தனது இரட்சகனைப் புறக்கணித்துச் சென்றுவிட்டால், அல்லாஹ்வின் எதிரியோடு அவன் நேசம் பாராட்டினால், சத்தியத்தைக் கண்டும் அதை அவன் புறக்கணித்து விட்டால், அசத்தியத்தைப் பார்த்து அதையே (நல்லது என்பதாக) அவன் தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவன் தனக்காக எடுத்துக்கொண்ட (அந்தப் பிழையான) வழியிலேயே அல்லாஹ்வும் அவனை விட்டுவிடுவான். அத்தோடு, அவனுக்கான தண்டனையாக வழிகேட்டில் இருக்கும்படியாகவே அவனின் உள்ளத்தையும் அல்லாஹ் தடம்புரளச் செய்து விடுவான். இவ்வகையில் நோக்கும்போது, அல்லாஹ் அவனுக்கு அநியாயம் செய்யவே இல்லை! அவன்தான் தனக்குத்தானே அநியாயம் செய்துகொண்டான். எனவே, தீமை செய்யத் தூண்டுகின்ற தன் ஆன்மாவையே அவன் பழித்துக்கொள்ளட்டும்!அல்லாஹ் மிக அறிந்தவன்!!”.
{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தப்சீரி கலாமில் மன்னான்' லிஸ்ஸஃதீ, பக்கம்:102 } 🌠➖➖➖➖➖➖➖➖🌠
📚 قال الله تعالى: *« ربّنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لّدنك رحمة إنك أنت الوهّاب »* (سورة آل عمران، الآية: ٨)
قال العلّامة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-
{ وذلك أن الله ذكر عن الرّاسخين، أنهم يسألونه أن لا يزيغ قلوبهم بعد إذ هداهم. وقد أخبر في آيات أخر عن الأسباب التي بها تزيغ قلوب أهل الإنحراف، وأن ذلك بسبب كسبهم، كقوله: *« فلمّا زاغوا أزاغ الله قلوبهم »* (سورة الصّفّ، الآية: ٥)، *« وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض، هل يراكم مّن أحد ثمّ انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لّا يفقهون »* (سورة التوبة، الآية: ١٢٧)
فالعبد إذا تولّى عن ربّه، ووالى عدوّه، ورأى الحق فصدف عنه، ورأى الباطل فاختاره ولّاه الله ما تولّى لنفسه، وأزاغ قلبه عقوبة له على زيغه. وما ظلمه الله، ولكنّه ظلم نفسه، فلا يلم إلا نفسه الأمّارة بالسّوء، والله أعلم! }
[ ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي، ص - ١٠٢ ]
🌠➖➖➖➖➖➖➖➖🌠
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
🌀⭕⭕⭕⭕⭕⭕⭕⭕🌀