அல்குர்ஆனின் ஆச்சரியமூட்டும் அற்புதத் தகவல்


     *[* நவீன அறிவியல் உண்மைகளை உறுதிப்படுத்தி,  ஆச்சரியமூட்டும் அற்புதத் தகவல்களைப் பொதிந்துள்ள ஓர்  இறைவேதம்தான் அல்குர்ஆன் ஆகும். இந்த அல்குர்ஆன்,   மறுமை நாள் ஏற்படும் நேரத்தில் உள்ள மனிதர்களின் நிலையை *'ஈசல் பூச்சிகளுக்கும்*, உயிர் கொடுத்து மஹ்ஷர் வெளியில் அவர்கள் ஒன்றுதிரட்டிக் கொண்டுவரப்படுகின்ற அந்த நிலையை *வெட்டுக்கிளிகளுக்கும்* ஒப்பிட்டுக் கூறுகிறது. ஏன் தெரியுமா? *]*


          “வெட்டுக்கிளிகள் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பில் நேர்த்தியாகவே  சென்றுகொண்டிருக்கும். தாம் எங்கு செல்கிறோம் என்பதையும் அவை அறிந்திருக்கும். இதற்கிடையே ஈசல்களோ,  ஒழுங்குமுறை சீர்குலைந்து செல்லுமிடம் தெரியாமல் சிதறிப் பறந்துகொண்டிருக்கும்.

           மறுமை நாள் நிகழும்போது இருக்கும் மனிதர்களின் அச்ச நிலை, ஒழுங்குமுறை சீர்குலைந்து திக்குத் தெரியாமல் சிதறிப் பறந்துகொண்டிருக்கும் ஈசல்களின் நிலை போன்றே  இருந்துகொண்டிருக்கும். அல்லாஹ் இதை இவ்வாறு கூறுகிறான்: *“சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போன்று அந்நாளில் மனிதர்கள் ஆகிவிடுவார்கள்”*. (அல்குர்ஆன், 101:04)

          எனினும், மனிதர்களுக்கு  உயிர் கொடுத்து,  மண்ணறைகளிலிருந்து அவர்கள் எழுப்பிக் கொண்டுவரப்பட்டு,  மஹ்ஷர் பெருவெளி நோக்கி அவர்கள் வருகின்றபோது (வெட்டுக்கிளிகள் போல்)  ஒழுங்குமுறைப்படியே அவர்கள் வருவார்கள். இவ்வாறு அல்லாஹ் இதைக் குறிப்பிடுகின்றான்: “(அவர்களுக்கு) வெறுப்பாக இருக்கும் விடயத்தின்பால் அழைப்பவர் அழைக்கும் நாளில் அவர்களது பார்வைகள் தாழ்ந்திருக்கும். *அவர்கள், பரவிக்கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் மண்ணறைகளிலிருந்து அழைப்பாளரை நோக்கி விரைந்தவர்களாக வெளிவருவார்கள்”*. (அல்குர்ஆன், 54:06 - 08)

        அல்குர்ஆனின் இலக்கிய நயம் எவ்வளவு பிரமாதம்!!!


*[ முகநூலில் مجموعة طريق التوبة எனும் பக்கத்தில் ]*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


         « الجراد يسير ضمن ترتيب منظم ، يعرف أين يذهب؛ بينما الفراش يسير بشكل فوضوي. 

          عند قيام الساعة يكون حال الناس كحال الفراش. قال الله تعالى: *{ يوم يكون الناس كالفراش المبثوث }* < سورة القارعة، الآية - ٤ > 

          أما عند البعث فإنهم يتجهون إلى ساحة المحشر بانتظام. قال الله تعالى: *{ يوم يدع الدّاع إلى شيئ نكر 🔅خشّعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر🔅مّهطعين إلى الدّاع.... }* < سورة القمر، الآيات : ٦ - ٨ >

         ما أعظم بلاغة القرآن !!!


*[* فيس بوك :  مجموعة طريق التوبة *]*

➖➖➖➖➖➖➖➖➖➖➖

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.

       

Previous Post Next Post