இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“மேற்கத்தியர்களின் சடவாத பலத்தில் மதிமயங்கி, அதில் பெருமிதம் கொள்ளும் குறைமதியாளர்களான எம்மவர் சிலர் செய்யும் செயல்கள் மிக அருவருக்கத்தக்கதாகவே இருக்கிறது. மேற்கத்தியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி நடப்பதுதான் நாகரிகம், முன்னேற்றம் என்றும் இவர்கள் நினைத்துவிட்டார்கள். மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களாக இருக்கும் விடயங்களில்கூட அவர்களையே பின்பற்றி நடக்கின்ற அளவுக்கு இவர்களை இது இட்டுச்சென்றுவிட்டது. இதனால்தான், நம்மில் சிலர் சிலரிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் வேளையில் 'உங்களுக்கு அல்லாஹ்வின் சாந்தி உண்டாட்டும்!' என்ற பொருள் தரும் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்ற வார்த்தைக்குப் பதிலாக, 'பாbய் பாbய்' (bye bye) என்று சொல்வதைப் பார்க்கிறோம். மட்டுமன்றி, தம் குழந்தைகளுக்கும் இதையே இவர்கள் கற்றுக்கொடுத்தும் இருக்கின்றனர். பெற்றோரிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் குழந்தைகள் சிலர் - அது மகனோ, அல்லது மகளோ - யாராக இருப்பினும் *'பாbய் பாbய்' (bye bye)* என்ற இவ்வார்த்தையைக் கூறுவதை உண்மையில் நாம் செவிமடுத்துத்தான் இருக்கிறோம்.
இக்கலாச்சாரம் எங்கிருந்து வந்தது?
▪உள்ளம் பலவீனமானவர்களாக,
▪ஆளுமை பலவீனமானவர்களாக இருக்கும் பெற்றோர்களின் கற்பித்தலிலிருந்துதான் இது வந்திருக்கிறது.
ஒரு முஸ்லிமுக்கு தான் இருக்கும் மார்க்கம், அவன் கடைப்பிடித்து வருகின்ற இஸ்லாமிய நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கண்ணியமுடையவனாக இருக்க வேண்டியதும், அல்லாஹ்வின் ஷரீஅத் சட்டத்தை அவனிலும் அல்லாஹ்வின் அடியார்களிலும் அமுல்படுத்துவதை அவன் பெருமையாகக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
இது இவ்வாறிருக்க, சலாம் சொல்வதிலுள்ள கீழ்க்காணும் மார்க்க ஒழுங்கையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும் சகோதரா. அதுதான்:
🔅சிறியவர் பெரியவருக்கும்,
🔅குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கும்,
🔅வாகனத்தில் பயணிப்பவர் நடந்து செல்பவருக்கும்,
🔅நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சலாம் சொல்ல வேண்டும் என்ற விடயமாகும்.
இந்ந நபிவழிகாட்டல் அமுலில் இருக்குமாக இருந்தால் அதுவே அதி சிறப்புக்குரியதாக இருக்கும்!.
*💐அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுழ்ழாஹி வ பbறகாதுஹு💐*
[ நூருன் அலத் தர்ப்b, இறுவட்டு இலக்கம் - 338 ]
🖊قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
« وأقبح ما يفعله بعض السفهاء الذين انبهروا بقوة الغرب المادية حتى ظنوا أن
🔹 الرقى
🔹 والتقدم
بتقليدهم حتى في الشعائر الدينية، حيث كان بعضهم يقول: "باي باي" (يعني: السلام عليك). وربما علّموها صبيانهم كما سمعنا ذلك فعلا من بعض الصبيان إذا انصرف أو انصرفت عنه قال: "باي باي".
من أين جاء هذا إلّا من تعليم الآباء
↙️ ضعفاء النفوس
↙️ ضعفاء الشخصيات!
المسلم يجب أن يكون عزيزا بإسلامه ودينه، وأن يفخر إذا طبّق شريعة الله في نفسه وفي عبادالله.
ثم اعلم أن المشروع أن يسلّم
▪الصغير على الكبير
▪والقليل على الكثير
▪والراكب على الماشي
▪والماشي على القاعد.
فإن حصل تطبيق هذه السنة فهو الأفضل.... ».
*💐 السلام عليكم ورحمة الله وبركاته💐*
[ نور على الدرب، الشريط - ٣٣٨ ]
➖➖➖➖➖➖➖➖➖➖
*✍ தமிழில்✍*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.