ஸலபுகளிடமிருந்து.. பகுதி 07

ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..

தொகுப்பு: Shalafmanhaj



1. இறைவேதத்தின் மீதும் இறைத்தூதர் வழியின் மீதும் நிலைத்திருப்பதே பொறுமை எனப்படும் என்று சிலரும் 

சோதனைகளில் சாதனை படைப்பதே பொறுமை எனப்படும் என்று வேறு சிலரும் கூறியுள்ளனர். 

நூல் : அல்மின்ஹாஜ்


2. இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

தன் மரணத்திற்குப் பிறகு தன் பணி தடைபடக் கூடாது என்று விரும்புகிறவன் 

அறிவைப் பரப்பட்டும்.

நூல் : அத் தாத்கிரா, எண். 55


3. இமாம் அல்-அஜுரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிவு இல்லாமல் வழிபாடு சாத்தியமில்லை.

எனவே அறிவைத் தேடுவது கட்டாயமானது மற்றும் அறியாமை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு நல்ல நிலை அல்ல.

அதனால் அறியாமையை தன்னிடமிருந்து அகற்றி,

 அல்லாஹ் கட்டளையிட்ட வழியில் அல்லாஹ்வை வணங்குவதற்கு அவன் அறிவைத் தேடுகிறான்..."

அஹ்லாக் அல்-உலமா பக்.42-43


4. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இந்த வாழ்க்கையின் கவலைகளை சுமக்காதீர்கள்,

ஏனென்றால் இது அல்லாஹ்வுக்கானது!

மேலும் உணவின் கவலையை சுமக்காதீர்கள், 

ஏனெனில் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது!

மேலும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை சுமக்காதீர்கள், 

ஏனென்றால் அது அல்லாஹ்வின் கையில் உள்ளது!


5. பாத்திமா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

எந்த அந்நிய ஆண்களைப் பார்க்காதவரும்

எந்த அந்நிய ஆண்களால்

பார்க்கப்படாதவர்களும்மே 

சிறந்த பெண்கள் ஆவாா்கள்!

நூல் : அஹ்காம் / 219


6. அபூசுஹைல் அத்தாரானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் எனது இல்லத்திருந்து வெளியே வருகிறேன். 

அப்போது எனது பார்வை எந்தப் பொருளின் மீது விழுந்தாலும் அந்தப் பொருளில் அல்லாஹ் எனக்கோர் அருட்கொடையையும் படிப்பினையையும் வைத்திருப்பதையே நான் காண்கிறேன்.

நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்


7. ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

ஒரு மணி நேரம் சிந்தனை செய்தல் ஓரிரவு (முழுவதும்) நின்று வணங்குவதைவிடச்
சிறந்ததாகும்.

நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்


8. ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"சிந்தனை ஒரு கண்ணாடி; 

அது உன் நன்மைகளையும் தீமைகளையும் உனக்குக் காட்டும்"

நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்


9. இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் கூறினார்கள்:

எவரது பேச்சு சிந்திக்கத் தூண்டுவதாகவும்,

அவரது மௌனம் சிந்தனையாகவும்,

பார்வை படிப்பினை பெறுவதாகவும் அமைந்துள்ளதோ அவருக்கு நல்வாழ்த்து உண்டாகட்டும்!

நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்


10. இமாம் இப்னு அல் கையும் ரஹ் அவர்கள் கூறினார்கள்:

நேர் வழியை அதன் ஆதாரத்துடன் கற்றுக் கொள்வது இல்ம்.

அறிவும் தக்லீதும் கண்மூடி தனமாக பின்பற்றுவது ஒரு நாளும் சமமாகது.


11. இமாம் முஹம்மத் அமான் இப்னு அலீ அல் ஜாமீ رحمه الله கூறினார்கள்:

கல்வியை கொண்டு உன்னை நீ சீர்செய். பின்பு மற்றவரை சீர்செய்ய முயற்சிசெய்.

நூல்: ஷர்ஹு குர்ரதி உயூனில் முவஹ்ஹிதீன் பக்கம்: 12


12. இமாம் இப்னுல் முபாறக் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: 

(உள்ளத்தில் ஏற்படும்  நிய்யத் எனும்) எண்ணமானது எத்தனையோ சிறு அமல்களை (நன்மையில்) பெரும் அமல்களாக மாற்றுகிறது;

மற்றும், 

எண்ணம்தான் எத்தனையோ பெரும் அமல்களை (நன்மையில்) சிறு அமல்களாகவும் மாற்றுகிறது.

நூல்: السير (8/400)

قال الإمام عبد الله بن المبارك رحمه الله تعالى: 

رُبَّ عَمَلٍ صَغِيْرٍ تُكَثِّرُهُ النِّيَّةُ،

 وَرُبَّ عَمَلٍ كَثِيْرٍ تُصَغِّرُهُ النِّيَّةُ.


13. புழைல் இப்னு இயால் (றஹிமஹுல்லாஹ்) (மரணம்: ஹி 187) கூறினார்கள்: 

வாய்மையையும் ஹலாலைத் தேடுவதையும் விட சிறப்பான எதனைக் கொண்டும் மனிதர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவில்லை.

 السير (8/426):

قال الفضيل (ت ١٨٧):

 لم يتزين الناس بشيء أفضل من الصدق، وطلب الحلال.


14. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹி கூறினார்கள் :

அல்லாஹ் உங்களுக்கு இரவுத் தொழுககையை எழுந்து தொழுக்கூடிய பாக்கியத்தை தந்தால்

உங்கள் அருகில்  தூங்கிக் கொண்டிருப்பவர்களை அலட்சியப் பார்வையுடன் பார்காதீர்கள்!

ஒரு வேளை தூங்கி கொண்டிருப்பவர்  உங்களை விட அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவராக இருக்கலாம்!

நூல் : அல்பவாயித்


15. இமாம் மாலிக் رحمه الله அவர்கள் கூறினார்கள்:

அறியாமையை பகிரங்கப்படுத்தும் மடையன்.

மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்.

மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன். இவன் நபிமொழியைக் கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே!

நல்லவர், வணக்கசாலி, சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர்.

ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள். 

நூல் : இமாம் தஹபி رحمه الله அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162


16. ஷெய்க் அப்துல் ஹமீத் அஸ்-ஸுகாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் 

“உங்களுக்குக் கொடுக்கப்படும் போதெல்லாம் நன்றியுள்ளவர்களாக நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால், 

நீங்கள் தடுக்கப்படும் போதெல்லாம்,

நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்கள், 

மேலும் நீங்கள் பாவம் செய்யும்போதெல்லாம் நீங்கள் மனந்திரும்பி மன்னிப்பைத் தேடுவதில் விரைந்திருப்பீர்கள்; 

அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள், 

மகிழ்ச்சியாக இறப்பீர்கள், 

மகிழ்ச்சியாக இருக்கும்போதே உயிர்த்தெழுப்பப்படுவீர்கள்.


17. இமாம் அஹ்மது பின் ஹம்பல்( ரஹி) கூறினார்கள் : 

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று நான் ஒரு போதும் சொல்லமாட்டேன்!  

நூல் : அல் பஹ்ர் 6/11


18. அபுதர்தரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

நான் ஏழையாக இருப்பதை விரும்புகிறேன்,

ஏனென்றால் அது இறைவனின் முன் என்னைத் தாழ்த்துகிறது!

நூல் : அத்தாக்கிரா


19. இமாம் மாலிக் இப்னு தீனார் رحمه الله கூறுகின்றார்:

நாயிடம் தங்கத்தையும் வெள்ளியையும் வீசினால் அதற்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. 

ஆனால், நாயிடம் எலும்புத் துண்டு வீசப்பட்டால் அதைக் கவ்விப் பிடித்துக் கொள்ளும்.

இதுபோன்றுதான் உங்களது மடையர்களும் சத்தியத்தை அறியாதவர்களாக உள்ளனர்.

நூல்: தஹ்தீபுல் ஹில்யா (1/419)


20. இமாம் சயீத் இப்னுல் முஸ்ஸயிப் (ரஹி) கூறினார்கள் : 

இப்லீஸ்  அல்லாஹ் அனுப்பிய ஒவ்வொரு நபியையும் வழிதவற செய்வதற்கு பெண்களை பயன் படுத்துவதை கொண்டு வழிதவறச் செய்வதற்கு அவன் சோர்வடைவதில்லை!

நூல் : இப்னு  அபிதுன்யா


21. நான் எல்லா மனிதர்களையும் மன்னிக்க பழகிய பின்பு என் இதயத்தை பகைமை உணர்வில் இருந்து விடுவித்தேன்!

- இமாம் ஷாபிஈ ரஹி
ஆதாரம் : திவான் அல் ஷாபிஈ 31


21. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அறிவு இல்லாவிட்டால் மனிதர்கள் மிருகங்களைப் போல் ஆகிவிடுவார்கள்

إعلام الموقعين عن رب العالمين (182/2)


22. இமாம் இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்:

"அறிவைப் பரப்புவதை விட நபித்துவத்திற்குப் பின் நல்லதொரு தரம் எனக்குத் தெரியாது!"

[தஹ்தீப் அல்-கமால், 16/20]


23. இமாம் இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"உடலை அழிக்கும் நான்கு விஷயங்கள் உள்ளன.

துக்கம்  
சோகம்   
பசி  
தூக்கமின்மை."

நூல் : ஸாத் அல்-முஆத்


24. இமாம் அல் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

இன்ஷாஅல்லாஹ் என்று கூறி அதை நிறைவேற்றக்கூடாது என்ற நோக்கத்துடன் வாக்குறுதியளிப்பது பாசாங்குத்தனமாகும்.

நூல் : ஜாமி அல்-உலூம், (2/482)


25. அஸ்ஸாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"மற்றவர்களைக் கேலி செய்பவர் பெரும்பாலும் அவர்களை விட மோசமானவர்.

மனிதர்களை கேலி செய்வது கெட்ட குணங்கள் நிறைந்த இதயத்தில் இருந்துதான் உருவாகிறது.

நூல் : தைசிர்-உல்-கரீம், பக். 801


26. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"நம்பிக்கையாளர் ஒரு முத்து போன்றவர்; 

அவர் எங்கிருந்தாலும், 

அவருடைய அழகான குணங்கள் அவருடன் இருக்கும்."

நூல் : ஹிலியாத் அல்-அவ்லியா


27. இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"யார் கவலை மற்றும் சோகத்தை அதிகரிக்கிறார்களோ, 

அவர் அதிகமாக கூற வேண்டும்: 

லா ஹவ்லா வ லா குவ்வதா இல்லா பில்லாஹ்."

நூல் : ஸாத் அல்-மூஆத் (4/183)


مَن كثرَت همومُه وغمومه فليكثِر من قول لا حول ولا قوة إلَّا بالله

زاد المعاد (4 / 183)


28. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"எவர் மக்களில் பெரும் செல்வந்தராக விரும்புகிறாரோ, 

அவர் தனது கையை விட அல்லாஹ்வின் கையில் உள்ளதை நம்பட்டும்."

مجموعة الفتاوى


29. இமாம்  முக்பில் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

என் சொந்தம், செல்வம் மற்றும் என் சந்ததியை விட என்னுடைய தாவாவும் அகீதாவும் எனககு மிகவும் பிடித்தமானவை!

நூல் : தர்ஜுமமா அபீ அப்துர்ரஹ்மான் முக்பில் பக்கம் / 135/142/


30. இமாம் இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

"ஒருவன் தன் நேரத்தை அல்லாஹ்வுக்காகச் செலவிடவில்லை என்றால், மரணமே சிறந்தது."

நூல் : அத்தா வத் தாவா


31. இமாம் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வை நேசிப்பது அவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர முழுமையடையாது. 

மேலும் அவனுடைய தூதரைப் பின்பற்றுவதைத் தவிர அவருக்குக் கீழ்ப்படிவதற்கு வேறு வழியில்லை."

[தஃப்சீர் இப்னு ரஜப் 1/497]


32. "நம் முன்னோர் தம் பிள்ளைகளுக்கு குர்ஆனிலுள்ள ஸூராக்களை கற்றுக் கொடுப்பது போல் அபூபக்ர், உமர் றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் மீது அன்பு கொள்வதையும் கற்றுக் கொடுப்பார்கள்".

நூல் : ஷர்ஹ் இஃதிகாத் உஸூலு அஹ்லுஸ் ஸஷுன்னதி வல் ஜமாஅஹ் 7 பாகம் 1140 பக்கம்


33. இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இந்த உலகம் ஒரு பாலம், 

பாலத்தை வீடாக எடுத்துக்கொள்ளக்கூடாது."

 நூல்: ஆன்மாவை ஒழுங்குபடுத்துதல்


34. சுஃப்யான் அத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நன்றாக நடந்து கொள்ளுங்கள், 

அல்லாஹ் உங்கள் பொது வாழ்க்கையை சிறந்ததாக்குவான்."

 நூல் : ஹில்யாத் அல் அவ்லியா 7/35


35. புழைல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

யார் குறை இல்லாத சகோதரனை தேடுவானோ, 

அவன் சகோதரன் இன்றி (தனித்தவனாக) இருப்பான்.

நூல் : ரவ்லதுல் உகலா : 168.


36. இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு வழிபட உதவி செய்யக்கூடிய ஒரு தோழன் உனக்கு இருந்தால் அவனைப் பற்றிப் பிடித்துக் கொள்

ஏனெனில் தோழமை பெற்றுக் கொள்வது கடினமானது 

அவனை பிரிவது இலகுவானது.

நூல் : ஹில்யதுல் அவ்லியா: 4/101


37. ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"மிக அழகிய பண்பு - வெட்கம்."

நூல் :  அல்-அதாப் அஷ்-ஷரிய்யா (2/344)


38. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பாலினத்துடன் மற்றொரு பாலினம் கலப்பது சோதனை மற்றும் குழப்பத்திற்க்குக் காரணம். 

ஆண்கள் (தேவையில்லாமல்) பெண்களுடன் கலப்பது, விறகுடன் நெருப்பு கலப்பது போன்றது."

நூல் : அல்-இஸ்திகாமா, 1/361


39. இமாம் அல்பானி ரஹி கூறுகிறார்கள் :

இமாம் மாலிக் ரஹி அவா்களின் இந்த வரிகள் தங்கத்தால் செதுக்கபட வேண்டும்!

அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது!

நூல் : ஸில்ஸிலத்துல் ஹுதா வந்நூர் 1/194/


40. இப்னு அகில் ரஹிமஹுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:

“என் வாழ்க்கையில் ஒரு மணிநேரத்தை வீணாக்க எனக்கு அனுமதி இல்லை. 

நான் பாடங்களைச் சொல்லாமலும் படிக்காமலும் இருந்தாலும்,

நான் படுத்திருக்கும்போதும் என் மனம் சில விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும்,

மேலும் எழுதுவதற்கு உபயோகமான ஒன்றைக் கண்டுபிடிக்கும் வரை நான் எழுந்திருக்க மாட்டேன். 

என் இருபதுகளில் இருந்ததை விட எண்பதுகளில் [நான்] இருக்கும்போது அறிவைத் தேடுவதில் நான் இன்னும் வைராக்கியத்தைக் காண்கிறேன்.

நூல் : அல்-முந்தாதம் (9/214).


41. ஷெய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு மனிதன் காதலிப்பதில் சோதனைக்கு உள்ளானால், 

அவன் தன் கற்பைப் பேணி, 

பொறுமையுடன் அதைத் தாங்கினால், 

அவன் அல்லாஹ்வை அஞ்சியதற்கான வெகுமதியைப் பெறுவான்."

மஜ்மூ அல்-ஃபதாவா (10/133)


42. இமாம் இப்னு அல்-ஜவ்ஸி (அல்லாஹ் அவர்மீது கருணை புரியட்டும்) கூறுகிறார்: 

சில நேரங்களில், 

உடலுறவின் விளைவாக இமாம் ஷாஃபி, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (அல்லாஹ் அவர்கள்மீது கருணை புரியட்டும்) போன்றோரின் தரத்தில் சந்ததிகளைப் பெறக்கூடும்.

இந்தன்மையுடைய உடலுறவு ஆயிரமாண்டு தஃபில் (கடமையில்லாத) வழிபாட்டைவிட உயர்வானது! 

நூல்:  தல்பீஸ் இப்லீஸ் 358


43. இப்ராஹிம் அல் தைமி (ரஹ்) அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்கும் கடந்த கால மக்களுக்கும்,

ஸலஃப்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம்! 

உலகச் செல்வம் அவர்களிடம் வந்தது, 

ஆனால் அவர்கள் அதை விட்டு ஓடிவிட்டனர், 

ஆனால் உலகம் உங்களைத் திருப்பிக் கொண்டது, 

நீங்கள் அதன் பின்னால் செல்கிறீர்கள்."

[இப்னு அல்-முபாரக், அல்-ஜுஹ்த் வா அ-ரகாயிக் 538]


44. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஷைத்தான் மனிதனின் அறிவின்மைக்கு ஏற்ப அவனை வழிகெடுக்கிறான் (எனவே உங்கள் மார்க்கத்தின் அறிவைத் தேடுங்கள்).

நூல்: அஸ்-சரிம், அல்-மஸ்லுல், 390


45. இமாம் அஸ் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அறிவு என்பது நன்மை பயக்கும், 

மனப்பாடம் செய்வது அல்ல."

நூல் : சியார் ஆலாம் அந்-நுபாலா 10/89


46. சுஃபியான் அத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"மூன்று விஷயங்களைப் பற்றி மக்களிடம் பேச வேண்டாம்:

1. உங்கள் பாவங்கள்

2. உங்கள் நல்ல செயல்கள்

3. உங்கள் கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள்."

நூல் : ஹில்யதுல் அவ்லியா 9397


47. ஷெய்க் அல் உதைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"ஒரு பாவத்தின் மீது உனக்கு எவ்வளவு பெரிய ஆசை இருக்கிறதோ,

 அதை விட்டுவிட்டால் உன் ஈமான் பெரிது."

நூல் : ஃபாத்-உர்-ரப், பக். 105


48. இமாம் இப்னு கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

ஒருவனை (அல்லாஹ்வுக்கு) அடிபணிய வைக்கும் பாவம் அல்லாஹ்வின் பார்வையில் ஒருவனுக்கு பெருமையை உண்டாக்கும் நற்செயல்களை விட விரும்பத்தக்கதாகும்.

நூல்: அல்-ஃபவாயித்  பக்கம்: 122


49. ஹபீப் பின் உபைத் (ரஹ்) கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறிவைக் கற்று, 

அதைப் புரிந்துகொண்டு பயனடையுங்கள் (அதன் மூலம் வாழுங்கள்); 

அதைக் கொண்டு உங்களை அலங்கரிப்பதற்காக அதைப் படிக்காதீர்கள், 

ஏனென்றால் நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்தால், 

ஒரு மனிதன் தனது ஆடைகளால் தன்னை அழகுபடுத்துவதைப் போல அறிவை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு காலத்தை நீங்கள் காணலாம்.

நூல்: இப்னு அல்-முபாரக், அல்-ஜுஹ்த் வா அல்-ராகாயிக் எண். 1056.


50. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"எல்லோரும் மகிழ்ச்சியடைகிறார்கள், 

சோகமாகிறார்கள், 

ஆனால் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியை (அல்லாஹ்வுக்கு) நன்றியுடையவராகவும், 

உங்கள் சோகத்தை பொறுமையாகவும் (சப்ர்) மாற்ற வேண்டும்."

இப்னு கஸீர் தஃப்சீர் அல் ஹதீஸ் : 23.


51. ..மேலும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஆதாரங்களுடன் இல்லாத ஒவ்வொரு பாதையும் நரகத்தின் பாதைகள் மற்றும் சபிக்கப்பட்ட ஷைத்தானின் பாதைகளிலிருந்து வந்தவை 

இப்னுல் கையீம் எழுதிய மதாரிஸ் அல் ஸாலிகீன் (2/439)

[و كلُّ طريقٍ لم يصحبها دليلُ القرآن والسنَّة فهي مِن طرق الجحيم والشيطان الرجيم ] 

مدارج السالكين لإبن القيم (2/439)


52. கல்லறைகளுக்கு மேல் மசூதிகள் கட்டுவது முஸ்லிம்களின் மார்க்கத்தின் ஒரு பகுதி அல்ல

 இப்னு தைமியாவின் மஜ்மூஃ ஃபத்வா (27/489-48

[[ بناء المساجد على القبور ليس من دين المسلمين.]]

  مجموع فتاوى ابن تيمية (27 /489-488).


53. இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நீர் பூமிக்கு உயிர் கொடுப்பது போல் குர்ஆன் இதயத்தை உயிர்ப்பிக்கிறது.

நூல் : மிஃப்தா தார் அஸ்-ஸாதா, 250


54. அல்-இமாம் அல்-அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"யார் இரவில் நீண்ட நேரம் (தொழுகையில்) நிற்கிறாரோ, 

அல்லாஹ் மறுமை நாளில் அவரது நிலைப்பாட்டை எளிதாக்குகிறான்."

நூல் : சியார் 'ஆலம் அந்-நுபலா′ 7/119]


55. ஷேக் இப்னு உதைமீன்(ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 "சோதனைகள் மற்றும் இன்னல்களிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளில் இருந்து
(பிரார்த்தனை) இரவுத் தொழுகை ஆகும்."

شرح صحيح البخاري ٥٠١/٩]


56. சுஃப்யான் அல்-தவ்ரி  (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“அறிவு செயலுக்கு அழைப்பு விடுகிறது. 

அதற்கு பதிலளிக்கவில்லை என்றால், 

அது வெளியேறுகிறது.

நூல்:  ஹயாத் அல்-சலாஃப் பைனா அல்-கவ்ல் வ அல்-‘அமல் (ப.90)


57. இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

மேலும் சிறந்த செயல்கள்  இரகசியமாகவும் பகிரங்கமாகவும் இறைவனுக்கு அஞ்சுவதுதான்.

நூல் : இப்னு ரஜப் 4/663 ஃபத்ஹுல்பாரி

قال الإمام ابن رجب رحمه الله

وأفضل الأعمال خشية الله في السر والعلن.

فتح الباري لابن رجب ٦٣/٤


58. இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"காதலிப்பது ஒரு நோய், 

அதைக் குணப்படுத்துவது திருமணம்தான்."

நூல்: அத்திப் அல் நவவி பக்.251 


59. ஷெய்க் சாலிஹ் அல்-ஃபவ்ஸான் (حفظه الله) அவர்கள் கூறினார்கள்:

"நமது உம்மத்திற்கு தற்போதைய மிகக் கடுமையான அச்சுறுத்தல் என்னவென்றால், 

அறியா ஜாஹில்கள் (அறியாமைகள்) தாவாக்களத்தில் செயல்படுகிறார்கள். 

அவர்களுக்கு இல்ம் இல்லை, 

ஆனால் அவர்கள் தங்கள் சொந்த வழிகேட்டாலும் அறியாமையாலும் தவாஹ் செய்கிறார்கள்."

‎[إعانة العستفيد ١/٣٣٧]


60. யஹ்யா இப்னு முஆத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இரவு நீண்டது, 

எனவே அதை உங்கள் தூக்கத்தால் குறைக்க வேண்டாம்!

மேலும் நாள் தூய்மையானது, 

எனவே உங்கள் பாவங்களால் அதை அசுத்தமாக்காதீர்கள்! ”

நூல்: சிஃபாது அஸ்-ஸஃப்வா, 4/94


61. பக்ர் பின் அப்துல்லாஹ் அல்-முஸானி رحمه الله அவர்கள் கூறினார்கள்: 

சிரித்துக் கொண்டே பாவம் செய்பவர் அழுது கொண்டே  நெருப்பில் (நரகத்தில்) நுழைவார்.

நூல்: ஹிலியாத் உல்-அவ்லியா, 6/185.

قال بكر بن عبد الله المزني رحمه الله:

من يأت الخطيئة وهو يضحك دخل النار وهو يبكي

حلية الأولياء ٦/١٨٥ | أبي نعيم الأصبهاني رحمه الله


62. ஹஸன் அல் பஸரி رحمه الله அவர்கள் கூறினார்கள் :

 "இதயம் ஆறு வழிகளால் சிதைகிறது:

 1- மனந்திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் பாவம் செய்தல்

2 - அறிவைத் தேடி அதைப் பயன்படுத்தாமல் இருப்பது

3 - உண்மை இல்லாமல் பழகுவது

4 - அல்லாஹ்வைப் போற்றாமல் அவனுடைய உணவை உண்பது

5 - அல்லாஹ்வின் ஒதுக்கீட்டில் திருப்தி அடையாதிருத்தல் (விதி)

6 - இறந்தவர்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாமல் அடக்கம் செய்தல்."

தக்வா: நம்பிக்கையாளர்களின் ஏற்பாடு, பக் 30


63. இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

ஷியாக்களில் பல பிரிவுகள்  இருக்கிறது!

அந்த பிரிவுளில் மிகவும்

 ஆபத்தானவர்கள் 

(கொமைனியின் கூட்டமாகும்!)

நூல் : இப்னு பாஸ் பஃதாவா தொகுப்பு 4/439)


64. சுஃப்யான் அத் தவ்ரி ரஹிமஹுல்லாஹ்  கூறினார்கள் : 

நான் மக்களிடம் அதிகமாக எச்சரித்த ஒரு விஷயம் 

நீங்கள் புகழ்ச்சியை விருப்பாமல் இருங்கள் என்று கூறினேன்!

நூல் : இமாம் தஹபி சியருன் அலா பின் நுபலா! (7/260)


65. இமாம் அவ்ஜாயீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

அறிவு என்பது அல்லாஹ்வின் தூதரின் தோழர்களிடமிருந்து வந்தது!

அவர்களிடமிருந்து வராதது 
அறிவு அல்ல!

நூல் : இப்னு அசாகீர் தாரீகுல் திமிஷ்க்


66. உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அறிஞர்களின் தவறுகளாலும், 

குர்ஆனை தவறாகப் புரிந்துகொள்ளும் நயவஞ்சகர்களின் வாதங்களாலும்,

ஆட்சியாளர்களை தவறாக வழிநடத்துவதாலும் 

இஸ்லாம் அழிக்கப்படும்."

[மஹ்த் அஸ்-சவாப், 2/717]


67. ஜாஃபர் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"எல்லாத் தீமைகளுக்கும் கோபமே திறவுகோல்!"

நூல்: ஜாமி அல் உலும் வல் ஹிகாம், 1/363


68. உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறினார்:

"மென்மையே ஞானத்தின் தலை!"

நூல்: அஹ்மத், அல்-ஜுஹ்த் (274)


69. முஹம்மது இப்னு அல்-காசிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நாங்கள் மாலிக் (ரஹ்) அவர்களை விட்டு வெளியேறும் போதெல்லாம்,

அவர் எங்களிடம் (பிரியாவிடை ஆலோசனையாக)

“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், 

இந்த அறிவைப் பரப்புங்கள்! 

அதைக் கற்றுக் கொடுங்கள், 

அதை மறைக்க வேண்டாம்! ”

நூல்: ஜாமி பயான், 1/492


70. உமர் இப்னு அல்-கத்தாப் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

"அடிக்கடி மனந்திரும்புபவர்களுடன் உட்கார்ந்து கொள்ளுங்கள், 

அவர்கள் மென்மையான இதயங்களைக் கொண்டுள்ளனர்!"

நூல்: ஹிலியாதுல் அவ்லியா, 1/51


71. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 “ஒரு நபர் தனது ஷெய்கிடம் கேட்டார்;

 நான் பாவம் செய்தேன், 

பிறகு வருந்துகிறேன், 

பிறகு பாவம் செய்கிறேன், 

பிறகு மனந்திரும்புகிறேன், 

எப்போது வரை?

அவர் கூறினார்:

ஷைத்தான் உங்களைப் பற்றி விரக்தியடையும் வரை."

  [‏مجموع الفتاوى ٧/٤٩٢]


72. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் மிகவும் ஆதரவற்றவர்கள்.

நூல்: தப்ரானி ஸஹீஹ் அல்பானி

قال رسول الله ﷺ :

أعجز الناس من عجز عن الدعاء

رواه الطبراني وصححه الألباني


73. இமாம் இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"அறிவின் ஆரம்பம் (சரியானதைக் கொண்டிருப்பது) நியாஹ், 

பின்னர் கவனித்துக் கேட்பது, 

பின்னர் அதைப் புரிந்துகொள்வது, 

பின்னர் அதை மனப்பாடம் செய்வது, 

பின்னர் அதைச் செயல்படுத்துவது மற்றும் அதைப் பரப்புவது."

நூல்: ஜாமி' பயான் அல்-'இல்ம் வா ஃபட்லிஹி, பக். 476


74. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

தனிமைப்படுத்தப் பழகுங்கள் எல்லா நன்மைகளுக்கும் அது அடிப்படையாகும், 

கெட்ட தோழமையில் ஜாக்கிரதையாக இருங்கள், 

நமது முன்னோடிகளின் வாழ்க்கையைப் பற்றிய புத்தகங்களும் வாசிப்பும் உங்கள் தோழர்களாக இருக்கட்டும்.

(நூல் - புனிதமான அறிவைத் தேடுபவர்களுக்கு நேர்மையான ஆலோசனைகளை)


75. ஹராமான தொழில் செய்து பணக்காரராக இருப்பதை விட 

ஹலாலான  வருமானத்தில் 
ஏழையாக இருப்பது எனக்கு 
சிறந்தது!

- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு


76. எவர் ஏழ்மையால் அவதிப்பட்டு, அதற்காக மக்களிடம் மன்றாடுகிறாறரோ, அவரது வறுமை முடிவுக்கு வராது.

எவர் ஏழ்மையால் அவதிப்பட்டு, அதற்காக அல்லாஹ்விடம் மன்றாடுகிறாரோ, அவருக்கு விரைவில் அல்லாஹ் உதவி செய்வான்!

- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு


77. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒருவர் மனந்திரும்பினால், 

அல்லாஹ் அவரை நேசிப்பான், 

அவன் மனந்திரும்புதலின் மூலம் அந்தஸ்தில் உயர்வான்."

( مجموعة الفتاوى v.10, p.45)


78. இமாம் அல்-முஸானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“ஒருவர் ஹராமான (சட்டவிரோதமான) விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் 

மற்றும் வதந்திகளைப் பரப்புதல், 

பொய், 

பழிவாங்குதல், 

மற்றவர்களின் உரிமைகளை மீறுதல் 

மற்றும் அறிவு இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றி பேசுதல் 

ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

இவை அனைத்தும் பெரிய பாவங்கள்.

‎( شرح السنة س.١٢٢)


79. ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

பெண்களே உங்களுக்கு உங்களுடைய
கணவன்மார்களின் உரிமைகள் இருக்கிறது! 

அது உங்களுக்கு தெரிந்தது என்றால் 

உங்கள் முகத்தின் ஊடாக 
அவா்களின் காலணியில் தூசிகளை துடைபபீர்கள்!

நூல் : இமாம்  தஹபி சியருன் அலா பின் நுபலா!


80. இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: 

உலகில் இஸ்லாமிய ஆட்சி  வேண்டும் என்று கூக்குரலிடுபவர்களில், 

பெரும்பான்மையானவர்கள் தங்கள் சொந்த வீடுகளில், தங்கள் மகன்கள்,

மகள்கள் அல்லது தங்கள் மனைவிகளில் இஸ்லாமிய மார்க்க சட்டங்களை, கொடுத்துள்ளார்களா! என்றால் இல்லை!

ஒன்றும் இல்லாதவனால் எதையும் கொடுக்க முடியாது!

ஸில்ஸிலத்துல் ஹுதா வந்நூர் /352/)


81. இமாம் அஷ்-ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"அறிவை விரும்பாதவரிடம் எந்த நன்மையும் இல்லை, 

உங்களுக்கும் அவருக்கும் இடையே எந்த நட்பும் இருக்கக்கூடாது."

 [‎المصدر: توالي التأنيس لابن حجر ١٦٧]


82. கேள்வி:  எனக்கு அறிவுரை கூறுங்கள்.

அயூப் அஸ்-சக்தியானி: 

கொஞ்சமாக பேசு.

ஆதாரம்: சிஃபாத் அஸ்-ஸஃப்வா (பாகம். 3, பக்கம். 210)


83. சுஃப்யான் இப்னு உனயாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

 “எவர் குர்ஆனை விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வை நேசிக்கிறார்.”

ஆதாரம்: அல்-ஹிலியா (பாகம். 7, பக்கம். 278)


84. அழுது கொண்டு வருவபவர் எல்லாம் நல்லவன்  என்று நம்பி விடாதே!

யூசுப் நபி சகோதர்களும் தவறு செய்து விட்டு அழுது கொண்டுதான் வந்தார்கள்!

- இமாம் இப்னுல் ஜவ்ஸி


85. ஆயிஷா ரழி-அல்லாஹு அன்ஹா கூறினார்: 

"அவர் (ஃபாத்திமா ரழி-அல்லாஹு அன்ஹா) அவர் மீது (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நுழையும்போது, ​​

அவர் அவளுக்காக எழுந்து நின்று, அவளை வரவேற்பார்.

அவளை முத்தமிட்டு, அவளை அவருடைய இடத்தில் உட்கார வைக்கவும் செய்வார்கள்.

‎ [الأدب المفرد ٩٧١ ، صححه الألباني]


86. லுக்மான் (அலை) அவர்கள் கூறினார்கள் :

 "என் மகனே, நல்ல பேச்சு மற்றும் பிரகாசமான [சிரிக்கும்] முகம், 

மக்கள் தங்கத்தையும் பணத்தையும் கொடுப்பவரை நேசிப்பதை விட அதிகமாக உன்னை நேசிப்பார்கள்!"

ஆதாரம்: ஜாமிஉல் முன்தகாப் (வச. 7, பக். 431)


87. கேள்வி: அல்லாஹ்வுக்காக நேசிப்பது என்றால் என்ன?

இமாம் அஹ்மத் (ரஹ்) : 
எந்த ஒரு உலக ஆதாயத்திற்காகவும் நீங்கள் ஒருவரை நேசிக்காத போது.

طبقات الحنابلة ١/٥٧


88. இமாம்  அல்பானி ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : 

ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ஹதீஸைக் கண்டால் இரண்டு விஷயங்களைச் செய்வது!சிறந்தது

முதல் விஷயம்

இது ஸஹீஹ் உண்மையானதுதானா என்று பார்க்க வேண்டும்!

பலவீனமானதாஅல்லது ஆதாரப்பூர்வமான என்று   அறிஞர்களிடம் விளக்கம் கேட்டுக் பெறவும்!

பிறகு இரண்டாவது விஷயம்!

பிறகு இந்த ஹதீஸ் ஸஹீஹ் இருக்கும் பட்சத்தில் அதன் சரியான விளக்கம் மற்றும் பொருள் பற்றி கேட்பது!

ஒரு முஸ்லீம் உன்னதமான அல்லாஹ்வின் மார்க்கத்தில் நேர்மையாக இருப்பான்!

மேலும் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிவான்!


89. என்னை பற்றி நீங்கள் (புறம்) பேசியதாக தகவல் கிடைத்தது!

அதற்கு என்னால் முடிந்த சிறிய உதவி

இந்த (பேரிச்சம் பழத்தை)

வாங்கிக் கொள்ளுங்கள்!

- இமாம் சுஃப்யான் அத் தவ்ரி (ரஹி)


90. ஒவ்வாருவரும் பேசுவதற்கு,

முன் நாம் பேசும் இந்த வார்த்தை,

அல்லாஹ்வை 

பிரியபடுத்துமா என்று பார்க்க்கடும்!

- இமாம் ஷாபிஈ( ரஹி)


91. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“பெண்களிடம் அதிகமாகப் பழகுபவன் வாழ்க்கையை அனுபவிக்கவே மாட்டான்.

 மேலும் மதுவை ரசிப்பவன் ஒரு போதும் நல்ல மனதை அனுபவிக்க மாட்டான், 

மேலும் செல்வத்தை விரும்புபவன் வாழும் காலம் வரை அதற்கு அடிமையாகவே இருப்பான்.

நூல்: கைப்பற்றப்பட்ட எண்ணங்கள் பக்.593


92. அல்-இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தடைகளிலிருந்து பார்வையைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் அன்பைக் கொண்டுவருகிறது."

மஜ்மு அல்-ஃபதாவா, 15/394


93. இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 

"குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு, படைக்கப்படாதது, எனவே உண்மையில் யார் குர்ஆனை நேசிக்கிறாரோ அவர் அல்லாஹ்வை நேசிக்கிறார்."

‎ [‏فقه الأدعية والأذكار ج١ ص٦٦]


94. ஹசன் அல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதை நீங்கள் விரும்பும் வரை உங்களால் அவனை நேசிக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!"

 நூல்: சொர்க்கத்திற்கான திறவுகோல், இப்னு  ரஜப் அல்-ஹன்பலி


95. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹி) கூறினார்கள் : 

சுயமரியாதை உள்ளவன் 

இந்த  உலக வாழ்க்கைக்கு

எந்த மதிப்பையும் கொடுப்பதில்லை!

நூல் : (சிஃப்து ஸப்வா))


96. நமது முன்னோடிகளின்

வாழ்க்கையைப் பற்றிய

புத்தகங்களும் வாசிப்பும்

உங்கள் தோழர்களாக இருக்கட்டும்!

-இப்னுல் ஜவ்ஸி


97. நீங்கள் தெரிந்தே செய்த கடந்தகால பாவங்களை  நினைத்து மனம் வருந்தி கண்ணீர் சிந்துங்கள்!

- அப்துல்லா இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு


98. குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்!

ஏனென்றால் நீங்கள் அதைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்!

- அப்துல்லாஹ் இப்னு உமர்  ரலியல்லாஹு அன்ஹு


99. மக்களை கேலி செய்வது கெட்ட பழக்கவழக்கங்கள் நிறைந்த இதயத்திலிருந்து மட்டுமே வருகிறது.

நூல்: இமாம் ஸாதியின் தஃப்ஸீர் (பக்கம் 801)


100. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“அறிவு என்பது அல்லாஹ்வின் பரிசு; 

எல்லோரும் அதைப் பெறுவதில்லை."

நூல் : தபகாத் அல்-ஹன்பலி 1/323


101. இமாம்  இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: 

பணம் உங்கள்  கையில் இருக்கும்போது 

அது நிறைய இருந்தாலும் அது 

உங்களுக்கு தீங்கு விளைவிக்காது!

அதே பணம் உங்கள் 

இதயத்தில் இருக்கும்போது!

உங்கள் கையில் இல்லாவிட்டாலும்

அது உங்களுக்கு தீங்குவிளைவிக்கும்!

மதாரிஜூஸ் ஸாலிஹீன் (1/463/)


102. உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

அல்லாஹ்வை  நினைகூர்வது என்பது

நீ பாவம் செய்யும் போது அல்லாஹ்வை

நினைவு கூர்ந்து அதை விட்டு

விலகுவதான் சிறந்த நினைவு 
ஆகும்!

நூல் : ஜாமிஉல்  ஊலும் வல் ஹிகம்(252/254/)


103. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) கூறினார்கள் : 

அல்லாஹ்வை சந்திப்பதிலும் இருக்கும்

 மகிழ்ச்சியை மனிதன் அறிந்தால்

அவனை விட்டு விலகி இருப்பதை

நினைத்து மனிதன் கைசேதபடுவான்!

நூல் : அல் பவாயித் (119)


104. இமாம் ஷாபிஈ ரஹி கூறினார்கள் :

பறவைகளில் மிகவும் புத்திசாலியானது (புறாவாகும்)

நூல் : (குர்துபி)


105. ஒரு மனிதர் மரணித்த பின்னர் அவரது அருகில்  குர்ஆன் ஓதுவதை

இது ஓதப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை 

அல்லது கேட்கவில்லை!

இதுதற்கு எந்த ஆதாரமும் இல்லை! 

- இமாம் இப்னு பத்தா (ரஹி)


106. இன்றைய தினம் மற்றவன் என்ன

பாவம் செய்கிறான் பார்ப்பதை விட

நீ என்ன பாவம் செய்து இருக்கிறாய்

என்று  பார்த்து  

உன்னை திருத்திக் கொள்!

- இமாம் இப்னு தைமிய்யா( ரஹி)


107. தர்மம் செய்வதில் உள்ள நன்மையை,

மனிதன் அறிந்தால், தன் செல்வதின்

பெரும் பகுதியை சதக்கா செய்வான்!

- இமாம் ஹஸன் பஸ்ரி ரஹிமஹுல்லாஹ்)


108. இப்னு அல்-ஜவ்ஸி  (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அலட்சியத்தை உருவாக்குவதற்கான (கவனக்குறைவுக்கான) மிகப்பெரிய முக்கிய காரணங்கள் இரண்டு விஷயங்கள்:

அதில் ஒன்று வயிற்றை நிரப்புவது, 

மற்றொன்று பயனற்றவர்களுடன் பழகுவது.

எனவே கவனமின்மையின் சங்கிலிகளிலிருந்து விடுபட நீங்கள் பசியுடன் இருக்க வேண்டும் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

التذكرة في الوعظ (١٠٢).


109. ஹசன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"பாவத்தின் மேல் பாவம்,

இதயத்தை குருடாக்கும் வரை பாவத்தின் மேல் பாவம், 

பின்னர் அது இறந்துவிடும்."

 [المخلصيات ١٧١٢]


110. அறிஞர்களே கண்ணியத்தை

அரசர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்!

அல்லாஹ்விடம் எதிர்பார்ருங்கள்!

(இமாம் ஹஸன் பஸ்ரி ரஹீமஹீல்லாஹ்)


111. இமாம் இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

“அறிவையும் அறிவுடைய மக்களையும் விரும்புபவர்; 

நிச்சயமாக (அவர்கள்) அல்லாஹ் நேசிப்பதையே விரும்புவார்கள்."

நூல்: மிஃப்தா தார் இஸ்-ஸாதா, 1/435


112. யஹ்யா இப்னு முஆத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"உங்களால் நன்மை செய்ய முடியாவிட்டால், 

தீங்கு செய்யாதீர்கள். 

உங்களால் மகிழ்ச்சியைக் கொண்டுவர முடியாவிட்டால்,

துன்பத்தைக் கொண்டுவராதீர்கள். 

உங்களால் பாராட்ட முடியாவிட்டால், 

குற்றம் சொல்லாதீர்கள்.

[تنبيه الغافلين 1/165]


113. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

உங்கள் இதயம் சுத்தமாக இருந்தால்

அது அல்லாஹ்வை மட்டுமே நேசிக்கும்!

வேறு யாரையும் நேசிக்காது!

நூல் : மஜ்மூஉல் பதாஃவா /11/10)


114. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

ஒரு ஆணும் 

ஒரு பெண்னும்

இருவரும்

காதலித்தாலும்!

வெளிதோற்றத்தில் அவன்

அவளின் காதலனாக தெரிந்தாலும்!

அவன் அவளுக்கு (கைதியாக)

இருக்கிறான் என்பதான் உண்மை

நூல் : மஜ்மூஉல் பதாஃவா/ 10/135/


115. காதல் உங்கள்  வாழ்கையை 
முடமாக்கி விடும்!

- இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி)


116. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

மனிதன் சாப்பிடும் உணவில் இனிமை,
இல்லை!

உண்மையான இனிமையானது, அல்லாஹ்வை ஈமான், கொள்வதில் இருக்கிறது!

நூல் : மஜ்மூஉல் பதாஃவா


117. இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹுஅன்ஹு கூறினார்கள் : 

குர்ஆனின் சிறந்த 

மொழிபெயர்ப்பாளர்

(இப்னு அப்பாஸ்) ஆவார்

(நூல் : அல் இத்கான் / 2:493/


118. இமாம் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமின் (ரஹ்) கூறினார்கள் : 

நீ உண்மையாக அவளை நேசித்தால் முதலில் அவளை திருமணம் செய்துக் கொள் 

பின்னர் நீ விரும்பிய அனைத்தையும் அவளுடன் பேசு!

நூல் : அல் லிகா அஷ்ஷஹ்ரி/ 28/3/


119. குர்ஆனின் மனிதன் யார்?

மக்கள் தன்னை பற்றி 

பெருமையாக பேசும்போது 

அவன் பணிவு கொள்வான்!

- இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு 


120. இமாம் சுப்யான் அத்தவ்ரீ ரஹ் கூறினார்கள் : 

அஹ்லுஸ் ஸுன்னாவை சேர்ந்த இருவர்

 ஒருவர்  கிழக்கிலும்,

 மற்றொருவர் மேற்கிலும் இருந்தாலும்

அவர்கள் இருவரும் ஒருவக்கொருவர் 

 ஸலாம் கொடுத்து கொள்வார்கள்!

 ஒருவக்கொருவர் துஆச் செய்வார்கள்

நூல் :  ஷர்உஸூலூல் இக்திகாத் /2/264/


121. மனிதர்களே காலையில் பறவைகள் 

உங்களை விட முன்னதாகவே  (விழிப்பது )

மிகவும் வெட்கக்கேடான விஷயம் ஆகும்!

- அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு


122. பொறுமை சுவனத்திற்கு செல்ல  வழிவகுக்கிறது!

கோபம் நரகத்திற்கு   செல்ல வழிவகுக்கிறது!

- இமாம் சுஃப்யான் அத்தவ்ரீ (ரஹ்)


123. அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக அல்லாஹ் பெரிய பாவங்களை மன்னிக்கிறான், 

அதனால் விரக்தியடைய வேண்டாம்,

சிறுபாவங்களுக்கும் அல்லாஹ் தண்டிக்கிறான், 

எனவே ஏமாந்து விடாதீர்கள். "

நூல்: ஷர்ஹ் அல்-புகாரி இப்னு பத்தால்  19/267


124. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 

"யாராவது தவறி விழுந்ததை நீங்கள் கண்டால்,

 அவரைத் திருத்துங்கள், 

அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள், 

அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவாதீர்கள்."

நூல்: தஃப்ஸீர் அல்-குர்துபி தொகுப்பு 15, பக்கம் : 256 
இப்னு பத்தால்


125. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் தனது நாவை அவதூறாகப் பேசவும்,

 முஸ்லிம்களின் பெருமைகளைப் பற்றி பேசவும், 

அவர்களின் குறைகளைத் தேடவும் செய்கின்றாரோ, 

அவருடைய நாவை அல்லாஹ் ஷஹாதாவை (மரணத்தின் போது) கூறவிடாமல் தடுப்பான்."

بحر الدموع


126. இமாம் அல்பானி (ரஹி) கூறினார்கள் : 

என்னுடைய (நேரம்)

எனக்கு (தங்கத்தை)

விட  விலைமதிப்பற்றது!

நூல் : அல் ஹுதா வந்நூர் /  224/


127. "அல்லாஹ்வின் திக்ரை 

மறந்துவிடாதீர்கள், 

ஏனென்றால் அதை மறந்தவர் தன்னைக் கொன்றுவிட்டார் என்று அர்த்தம்."

இமாம் ஃபுதைல் (ரஹி)

 [المجالسة وجواهر العلم ١\٣٨٨]


128. அறிவு என்பது ஆதாரத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும்.

நூல்: இப்னு தைமியா ஃபத்வாஹ் 13/136


129. 15,000 திர்ஹம் கடனில் மூழ்கி அழுது கொண்டிருந்த ஒருவரிடம் அலி இப்னு ஹசன் கூறினார்: 

உங்கள் கடன் என்னுடையது.

[حلية الأولياء ١٤١/٣]

 
130. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்: 

"அகீதா (நம்பிக்கை) சரியாக இருந்தால், 

முஸ்லிமின் செயல்கள் சரியாக இருக்கும்."

خيط: 
[المنتقی ١/١٠٧]
بقلم - الله قريب


131. பக்ர் இப்னு அப்தில்லா அல்-முஸானி  (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:

"உங்கள் தொழுகை உங்களுக்குப் பயனளிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால்,

 (உங்களுக்குள்ளே) சொல்லுங்கள், 

ஒருவேளை நான் வேறொன்றைத் தொழமாட்டேன்" 

(அதாவது. உங்கள் அடுத்த தொழுகைக்கு முன் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும்.)

நூல்: கஸ்ர் அல்-அமல் கட்டுரை 104


132. உங்களால் நன்மை செய்ய முடியாவிட்டாலும்!

நன்மை செய்பவர்களை நேசிக்க கூடியவர்களாக இருங்கள்!

- இமாம் இப்னு கைய்யிம் (ரஹி)


133. நன்மையில் உன்னுடன் போட்டி போடுயிடும் நல்ல!

நண்பனை நீ பெற்றுக் கொள்!

- இமாம் இப்னு கைய்யிம்( ரஹி)


134. அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்)

அவா்களிடம்  மரணத்திற்குப் பிறகு

மீண்டும் வாழ்வதற்கு உங்களுக்கு 

வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்!

என்று கேட்கப்பட்டது. 

அவர் கூறினார்:

நான் (அறிவைத் தேட செல்வேன்)


135. இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிவுள்ள ஒவ்வொரு மாணவரும், 

ஒவ்வொரு முஸ்லிமும் உண்மையை வெளிக் கொண்டு வருவதில் ஆர்வமாக இருப்பதும், 

அதை வெளிப்படுத்துபவர்களை நேசிப்பதும், 

அதை வெளிக்கொணர வேண்டும் என்று அழைப்பதும், 

அவருடன் பழகுவதும், 

உண்மையை வெளிக்கொணரவும், 

பொய்யை விரட்டவும் அவருக்குத் துணை நிற்பதும் கடமையாகும்.

நூல்: அல் இஸ்திகாமா


136. இப்னு முஹம்மது அல் உதைபீ கூறுகிறார் : 

தொழுது முடித்து விட்டு இமாம் இப்னு உஸைமின் (ரஹ்) அவா்கள்!

அல் மஸ்ஜித் அல் ஹராமில் இருந்து தான் விரும்பிய இடத்திற்கு காரில் செல்ல விரும்பினார்!

ஹராமில் இருந்து வெளியே வந்து 

ஒரு டாக்ஸியை நிறுத்தி அதில் அவர் அமர்ந்தார்!

பயணம் செய்கிறார் 

டிரைவர் : 

ஷேக் நீங்கள் யார்!

ஷேக் பதில் : 

நான் முஹம்மது இப்னு உஸைமின்!

டிரைவர் : 

ஆச்சரியத்துடன் கேட்டார் நீங்கள் இப்னு உஸைமினா என்று 

இப்னு உஸைமின் போன்ற ஒருவர் என்னுடைய டாக்ஸியில் பயணிப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை!

இவர் தன்னிடம் பொய் சொல்கிறார் என்று அவா் நினைத்தார்!

ஷேக் : 

சகோதரரே உங்கள் பெயர் என்ன என்று!

டிரைவர் : 

ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் என்று கூறினார்!

ஷேக் : 

சிரித்தார்!
நீங்கள் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் தானா!

டிரைவர் : 

பதில் நீங்கள் இப்னு உஸைமின் என்றால் நான் அது போலவே!

ஷேக்  : 

இப்னு பாஸ் பார்வையற்றவர் டாக்ஸி ஓட்டுவதில்லை என்று கூறினார்!

டிரைவர் :

அப்பொழுதான் டாக்ஸி டிரைவருக்கு புரிந்தது!

அமர்ந்து இருப்பவர் உண்மையிலே இப்னு உஸைமின் என்று!

பின்னர் அவா் தன் தவறை உணர்ந்து தன்னையே  நொந்து கொண்டார்!

நூல் : ரிஸ்ஸாலா/( 13788)


137. இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்)
 கூறினார்கள் : 

துஆ கேட்கும் போது அழுவதை விட 

குர்ஆன் ஒதும் போது அழுவது சிறந்தது!

நூல் : உல்  ஃபிக்ஹிய்யா இபாதத் (94)


138. அல் மக்சுமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 "என் மகனே, 

பயனற்ற பேச்சு,

 [அதிகமாக] கேலி, 

சிரிப்பு மற்றும் சகோதரர்களுடன் கேலி பேசுவதில் ஜாக்கிரதை."

روضة العقلاء صحفة  ٨٦٢


139. அல் மக்சுமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 என் மகனே,

மக்கள் உன்னை அவமதிக்கும் வகையில் மற்றவர்களை உளவு பார்க்காதே."

 [روضة العقلاء صحفة ٠٧٢]


140. நூஹ் நபி 300 ஆண்டுகள் (அல்லாஹ்வை அழைக்கும் பாதையில்) அழுதார்.

[الثبات عند الممات صحفة ٤]


141. இமாம் இப்னு ஹஸம் (ரஹி) கூறினார்கள் : 

இந்த மார்க்கத்தின் பால் மக்களை நீங்கள் அழைக்கும் போது

நிச்சயமாக உங்களுக்கு விமர்சனம் மற்றும் ஏச்சுகள் மற்றும் பேச்சுகள் தாக்குதல் வரும்!

அதை பொருட்படுத்தாமல் நீங்கள் செல்ல வேண்டும் ! 

இலையெனில் மக்களிடம் இந்த (மார்க்கத்தை)

பிரச்னைகள் இல்லாமல் சொல்லலாம்

என்று நினைத்தால் உங்களை விட

பைத்தியகாரன் யாரும் இல்லை!

நூல் : ரசாயில் /339/


142. என் பாவங்கள் என்னிடம்,

அதிகமாக இருக்கும்போது!

நான் எப்படி என் செயல்களால்,

மகிழ்ச்சி அடைய முடியும்!

- துன் மஸ்ரிக் (ரஹி)
நூல் : ஹில்யத்துல் அவ்லியா / 9/384/


143. ஒரு இளைஞன் மற்றும்

ஒரு இளம் பெண் இருவருக்கும்!

படிப்பை காரணம் காட்டி,

திருமணத்தை தள்ளி

போடக் கூடாது!

படிப்பு திருணமத்திற்கு 
ஒரு  தடையில்லை!

இமாம் இப்னு பாஸ்(ரஹி)
நூல் : மஜ்மூஉல் பதஃவா / 20/ 421/


144. அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

நீங்கள் திருமணம் 
செய்யுங்கள்!

அல்லாஹ் உங்களை 
செல்வந்தவனாக ஆக்குவான்!

அவன் வாக்குறுதி நிறைவேற்றுவான்!

 நூல் : துருல் முக்தார்/ 80/81


145. செல்வதை நீங்கள்,
பாதுகாக்க வேண்டும்

அறிவு உங்களை,
பாதுகாக்கிறது!

- அலி பின் அபீதாலீப் ரலியல்லாஹு அன்ஹு


146. தொழாமல் வெறுமனே பள்ளிவாசலை!

கடந்து செல்லும் மனிதனை கண்டு!

வானவர்கள் வியப்படைகிறார்கள்!

- இமாம் இப்னு கஸீர்


147. ஆண்கள் திருமணத்திற்கு முன் (பெண்ணின்) முக அழகையே தேடுகிறார்கள்

திருமணத்திற்கு பின் (பெண்ணின்) அக அழகையே தேடுகிறார்கள்

- அபூ யஹ்யா


148. சல்மான் பாரீஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:

அறிவில் பாதி எனக்கு
தெரியாது என்று கூறுவதாகும்!

நூல் ஜாமிஊல் பயான் இலம்1/54


149. அபூதர் அல் கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

உலகில் இரண்டு

கூட்டங்களை உருவாக்குங்கள்,

ஒன்று :  மறுமையைத் தேடி ஒரு கூட்டம்,

இரண்டு : ஹலாலைத் தேடி ஒரு கூட்டம்!

நூல் :  ஹில்யத்துல் அவ்லியா


150. முடிந்தவரை மக்களிடம் 
பாசத்தைக் காட்டுங்கள், 

குற்றம் சாட்டப்பட்டவர்களைக்,
கூட வாழ்த்துங்கள்!

- இமாம் அபூஹனீபா ரஹி


151. ஹுதைபா அல் மஸ்ரிக் (ரஹி) கூறினார்கள் : 

அல்லாஹ்வுக்காக என்னை

உண்மையாக வெறுக்கும்,

ஒருவரை நான் கண்டால்,

அவரை நேசிப்பதை என் மீது

கட்டாயமாக ஆக்கியிருப்பேன்!

நூல் : இமாம் தஹபீ சியர் அலா பின் நூபலா / 9/283/


152. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) கூறினார்கள் : 

அசத்திய வாதிகளின் ஆக்கங்கள் வெளியே நன்றாக இருக்கும்!

உள்ளே விஷம் கலந்திருக்கும்!

நூல் : முக்தஸர் அஸ்ஸவாயீக்


153. இமாம் ஹஸன் அல் பஸ்ரி (ரஹி) கூறினார்கள் : 

ஒருவர் குர்ஆனை முழுவதுமாக ஒதி முடித்து விட்டேன் என்பார் !

ஆனால் அவா் நடத்தையிலும் செயலிலும் குர்ஆனை  காண முடியவில்லை!

நூல் : தஃப்சீர்  இப்னு கஸீர்


154. ஒவ்வொர்வரும் தன் காதலனுடன்

அவனது காதலியுடன் தனியாக பேசிக்

கொண்டிருக்கிறார்கள் ! ஆனால் 

இங்கே நான்  என் (ரப்பு) 

உடன் தனியாக

பேசிக்கொண்டிருக்கிறேன்!

-- ராபியத்துல் அல்-பஸ்ரியா (ரஹிமஹுல்லாஹ்)


155. இமாம் மாலிக் (ரஹி) கூறினார்கள் : 

நான் சிறுவனாக இருக்கும் போதே,

என் தாய்  எனக்கு அறிஞர்களின்,

ஆடைகளை அணிவித்து

பள்ளிவாசலுக்கு அனுப்புவார்!

நூல் : சியருன் அலா பின் நுபலா


156. யூனுஸ் பின் அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: 

நான் ஒரு கோழியை தொலைத்தால்

நான் கவலைப்படுகிறேன்,

ஆனால் நான் ஒரு வக்த் ஜமாத்

தொழுகையைத் தவறவிட்டால், 

அது என்னை துக்கப்படுத்தவில்லை!

எனக்கு என்னாச் என்று தெரியவில்லை!

(ஹில்யத்துல்  அவ்லியா! ( 3/19]


157.இமாம் அஸ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்மை நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது.

1.) நல்ல குணம்

2.) பெருந்தன்மை

3.) பணிவு

4.) பக்தி

19165  السنن الكبرى للبيهقي]


158. நிச்சயமாக குர்ஆன்

பல அா்த்தங்களை தாங்கியுள்ளது..!

அதில் எந்த அர்த்தம் சரி என்பதை

சுன்னாதான் புரியவைக்கும்.!

- உமா் (ரலி)


159. ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"உண்மையில்,

 உங்கள் ஈமானில் உள்ள ஒரு பலவீனம் என்னவென்றால், 

அல்லாஹ்வின் கையில் உள்ளதை விட உங்கள் உடைமையின் மீது நீங்கள் அதிகம் பற்றுக்கொள்வதேயாகும்."

நூல் : ஜாமி-உல் உலூம் வல்-ஹிகாம், ப.207


160. இமாம் ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"நன்றிகெட்டவன் துன்பங்களை எண்ணி அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறந்தவனே!"

நூல்:  தஃப்சீர் இப்னு கஸீர் 4/542


161. இமாம் இப்னுல் கயீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“அல்-ஷதகா (அதாவது: வெள்ளிக்கிழமைகளில் தர்மம்) கொடுப்பது மற்ற வார நாட்களில் ஒரு தனித்துவமான நன்மையைக் கொண்டுள்ளது.

அதன் மேன்மை மற்ற மாதங்களில் இல்லாமல் ரமழான் மாதத்தில் தர்மம் செய்வது போன்றது.

நூல்: ஸாத் அல்-மஆத் 1/394


162. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

நிச்சயமாக அல்லாஹ் தன்னை

நேசிக்கும் மக்களுக்கு இரண்டு

அத்தாட்சிகளை செய்திருக்கிறான்

1) சுன்னாவைப் பின்பற்றுவது

2) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்.செய்வது!

 நூல் :  உபூதிய்யா பக்கம்/ 1/32/


163. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

வழிகேட்டில் பயணிப்பவர்களிடம்

வழிகாட்டுதலலை  

தேடுவது மிக பெரிய,

அறியாமை ஆகும்!

நுல் : மஜ்மூஉல் பஃதாவா /4/21/


164. இமாம் இப்னு அல் ஹரத் (ரஹி) கூறினார்கள் : 

அல்லாஹ் பாதையில் செல்லும்

ஒரு மனிதனை தடுக்கும் 

ஒரு விடயம் (புகழ்) ஆகும்!

அதை தவிர வேறு ஏதும் தடுக்காது !

நூல் : அஸ்ஸியர் : 214


165. மாலிக் இப்னு தீனார்  رحمه الله அவர்கள் கூறினார்கள் : 

“அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதை உங்கள் வேலையாக ஆக்குங்கள்;

 நீங்கள் எதையும் விற்காமல் லாபம் ஈட்டுவீர்கள்.

நூல் : ரவ்த்ஹத்  அல்-உகாலா’ தொகுப்பு. 1, பக்கம். 13


166. இமாம் சுஃப்யான் அல்-தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் (மக்களிடத்தில் பிரபலமானவராக) அறியப்படுவதை விரும்பாததுதான் பாதுகாப்பு

நூல்: சியார் ஆலம் அல்-நுபாலா, 7/258


167. இமாம் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

நேரம் என்பது வாழ்கையாகும்!

யார் நேரத்தை வீணடிக்கிறானோ,

அவன் தன் வாழ்கையை வீணடித்து 

விட்டான்!

யார் வாழ்கையை வீணடித்து,

விட்டானோ,

அவன் கைசேதம் அடைந்து விட்டான்!

அந்த கைசேதம் அவனுக்கு எந்த

 பலனையும் தராது!

நூல் : மஜ்மூஉல் பஃதாவா 10/201/


168. ஹசன் அல்-பஸ்ரி رحمه الله அவர்கள் கூறினார்கள் :

"உடலின் தலைவன் நாக்கு. 

நாக்கு குற்றம் செய்யும் போது உறுப்புகள் அதைச் செய்யும். 

நாக்கு துறந்தால் உறுப்புகள் (பாவத்திலிருந்து) விலகிவிடும்."

جامع العلوم والحكم ٢٧٥/١


169. ஷெய்க் முஹம்மது அமீன் அல்-ஷிங்கிதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு பெண்ணின் அழகான குணாதிசயங்களில் இருந்து அவள் வீட்டிற்குள்ளேயே இருப்பாள்."

நூல்: அத்வா அல் பயான் (6/314)  


170. தாபிஈன் ஸஹீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நாளை மறுமையில் முதல் முதலில் சொர்க்கத்திற்க்கு அழைக்கப்படுபவர் யார் எனில் அவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை புகழ்பவர்கள் ஆவார்கள்

அல்லது மகிழ்ச்சியான தருணத்திலும் கஷ்டமான தருணத்திலும் அவர்கள் அல்லாஹ்வை புகழ்வார்கள் 

நூல் : அஷ்ஷஹீத் இப்னு அல் முபாரக்: 206


171. இமாம் பாக்கர் (ரஹி)கூறினார்கள் :

ஜாபிர் ரலியல்லாஹுஅன்ஹு

அவா்களிடம் கேட்கப்பட்டது

நீங்கள் எந்த கூட்டத்தை 

சார்ந்தவர் என்று!

அவா் பதிலளித்தார் : 

நான் அல்லாஹ்வை அஞ்ச கூடிய கூட்டத்தை சார்ந்தவன் 

என்று!

நூல் : உஸுலுல்( காஃபியா)


172. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (حفظه الله) அவர்கள் கூறினார்கள் :

"இறப்பிற்கும், 

அதற்குப் பின் வரப் போவதற்கும் தயாராகுங்கள்.

மறுமையில் உங்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவதற்காகவே அல்லாஹ் இந்த வாழ்க்கையை உங்களுக்குத் தந்தான். 

எனவே உங்கள் வாழ்க்கையை விளையாட்டாகவும் கேலியாகவும் கழிக்காதீர்கள்."

நூல்: அல்-மின்ஹதுர் ரப்பானியா ஃபீ ஷேர் அல்-அர்பாயீன் (ப. 285-287)


173. உண்னுடைய உண்மையான (முஸ்லிம்) சகோதரன் யார் தெரியுமா?

நீ வழிதவறும் போது உன் தவறுகளை

சுட்டிகாட்டி உன்னை திருத்துவான்!

உன்னை நேரான 

பாதையில் வழி நடத்துவான்!

- இமாம் பின் பாஸ் ரஹி


174. இப்னு அல்-கய்யிம் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:

நேரத்தை வீணடிப்பது மரணத்தை விட கடுமையானது,

ஏனென்றால் நேரத்தை வீணடிப்பது ஒரு நபரை அல்லாஹ்விலிருந்தும் மறுமையிலிருந்தும் பிரிக்கிறது, 

அதே சமயம் மரணம் ஒரு நபரை இந்த உலக வாழ்க்கையிலிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பிரிக்கிறது.

الفوائد (44)


175. அல்-ஹசன் அல்-பஸ்ரி  رحمه الله அவர்கள் கூறினார்கள்:

"யாரொருவர் மரணத்தை நினைவுகூருவதை வழக்கமாக்குகிறாரோ, 

அவருடைய பார்வையில் உலக வாழ்க்கை அற்பமாகிவிடும்."

நூல்: கிதாப் முக்தசர் மின்ஹாஜ் அல்-காசிதீன், ப.383


176. லுக்மான் (அலை) அவர்கள் மகனிடம் கூறினார்கள்:

என் மகனே, மனந்திரும்புவதை தாமதப்படுத்தாதே, மரணம் திடீரென்று வரலாம்.

التبصرة لابن الجوزي


177. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

உண்மையான வாழ்வு என்பது மறுமை வாழ்வு தான்!

தஃப்ஸீருல் குர்ஆனுல் கரீம்: அம்ம ஜுஸ்உ ப: 78


178. நிச்சயமாக ஸஹாபி இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ-விற்கும் தன் ஆடைகளுக்கு புகூர் (தூபம்) நறுமணம் பூசிக் கொள்வார்கள்.

இப்னு அபீ ஷைபா: 5591


179. ஷேய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் (ஹஃபிழ):

பாவத்திலிருந்து பாதுகாப்பு பெற்றவர் ஒருவரும் அல்ல! 

ஆனால் தவ்பா-வின் கதவு திறந்து இருக்கின்றது. 

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

இகாஸதுல் லஹ்ஃபான்: 18/05/1439


180. முஹம்மது இப்னு சிரின் அவர்கள் கூறினார்கள்: 

நிச்சயமாக அதிக பாவங்கள் உள்ளவர்கள் மக்களின் பாவங்களைக் குறிப்பிடுபவர்கள்.

[المجالسة وجواهر العلم لأبي بكر الدينوري ٦٨/٦]


181. இமாம் மாலிக் رحمه الله அவர்கள் கூறினார்கள்: 

"இறைநம்பிக்கையாளர் ஒரு முத்து போன்றவர்; 

அவர் எங்கிருந்தாலும், 

அவருடைய அழகான குணங்கள் அவருடன் இருக்கும்."

நூல்: ஹிலியாத் அல்-அவ்லியா


182. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹி கூறுகிறார்கள் : 

அல்லாஹ்வுக்கு பழிவாங்குவதை

விட மன்னிப்பு 

மிகவும் பிரியமானது!

தண்டனையை விட

இரக்கம் அவனுக்கு 

மிகவும் பிடித்தமானது

நூல் : மதாரிஜுஸ் ஸாலிஹீன்


183. இமாம் அஸ்மஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உன்னிடம் கேள்வி கேட்காதவனிடம் நீயே சென்று பதில் அளிப்பதும் அல்லது உனக்கு பதில் அளிக்காதவனிடம் சென்று நீ கேள்வி கேட்பதும் அல்லது உனக்கு செவிமடுக்காதவனிடம் சென்று நீ பேசுவதும் ஒழுக்கம் அல்ல!

ஸியர் அஃலாமுன் நுபலா: 6/408


184. அப்துல்லாஹ் இப்னு மசூத்  رضي الله عنه  அவர்கள் கூறினார்கள்:

"நீர் தாவரங்களை உண்டாக்குவது போல் 

இசை இதயத்தில் பாசாங்குத்தனத்தை வளர்க்கிறது.

موسوعة ابن أبي الدنيا 5/283


185. அமிர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் தனது உறவினரிடம் கூறினார்:

"உங்கள் விஷயத்தை அல்லாஹ்விடம் விட்டு விடுங்கள் (அதனால்) நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்."

حلية الأولياء ٩۰/٢


186. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஈமானின் சுவையை ஒரு பெண் கண்டுகொள்வதில்லை

அவள் கணவனின் உரிமைகளை நிறைவேற்றும் வரை."

நூல் : ஸஹீக் தர்கீப் : 1939

قال رسول الله صلى الله عليه وسلم  : 

لا تجد امرأة حلاوة الإيمان 

حتى تؤدي حق زوجها

صحيح الترغيب 1939


187. ஹபீப் அபு முஹம்மது அல்-ஃபரிஸியின் மனைவி (ரஹ்) இரவில் அவரை எழுப்பி, 

என் அன்பே விழித்தெழு, 

ஏனென்றால் பாதை நீளமானது, 

எங்கள் (தயாரிப்பு) ஏற்பாடு சிறியது. 

நீதிமான்களின் வண்டி நமக்கு முன்னே சென்றுவிட்டது, 

நாம் பின்தங்கிவிட்டோம்!

இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலியின் அல்லாஹ்வை நோக்கிய பயணம் | பக்-59


188. இப்னு கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“தன் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் தன் வாழ்நாளைக் கழிப்பவனே! 

உங்களை விட உங்கள் எதிரிகளில் யாரும் உங்களுக்கு தீயவர்கள் இல்லை.

நூல் : அல்-ஃபவாயித் பக். 107


189. அஷ்ஷெய்க் காலித் பின் உதுமான் அல் மீஸ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

நமது குழந்தைகளுக்கு
அகீதாவை  

முதலாவதாக 
கற்றுக், கொடுப்போம்!

அதை அவா்கள்
விருப்பத்க்குரிய,

பாடமாக,
கற்றுக் கொடுப்போம்!

நூல் : இஸ்லாமிக் குழந்தைகள் பக்கம் (4/)


190. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் நண்பரின் (பாவங்களை) குறைகளைக் குறிப்பிட விரும்பினால்,

உங்கள் தவறுகளை (பாவங்களை) நினைவில் கொள்ளுங்கள்

الزهد لإحمد بن حنبل ١٥٤


191. அல்-ஃபுதைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"குறை இல்லாத சகோதரனைத் தேடுபவன் நண்பனாக ஒரு சகோதரனைப் பெறமாட்டான்."

‎[روضة العقلاء ص ١٦٩]


192. பிலால் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"பொது இடத்தில் அல்லாஹ்வின் நண்பராக இருந்துகொண்டு, 

தனிப்பட்ட முறையில் அவனுக்கு எதிரியாக இருக்காதீர்கள்."

நூல்: சியார் ஆலாம் அந்-நுபாலா 11/518


193. இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒரு நபர் குர்ஆனுக்கு மேலாக இசையைக் கேட்பதை விரும்புவது அவர் ஷைத்தானின் நண்பர் என்பதையும் அல்லாஹ்வின் நண்பர் அல்ல என்பதையும் காட்டுகிறது."

நூல்: அல்-ஃபுர்கான் பைனா அவ்லியா அர்-ரஹ்மான் வ அவ்லியா அல்-ஷைத்தான் பக்.55


194. அஷ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

“அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிய உதவும் ஒரு நண்பர் உங்களிடம் இருக்கும்போது, ​​

அவரை உறுதியாகக் கைப்பிடியுங்கள். 

ஏனென்றால் ஒருவருடன் நட்பு கொள்வது கடினம், ஆனால் அவர்களை இழப்பது எளிது. "

நூல்: அல்-ஹிலியா 4/101


195. ஃபுதைல் இப்னு இயாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் தவிர்க்க வேண்டிய ஒரு வகை நண்பர் உள்ளது:

“தன் சகோதரனின் தீய செயலைக் கண்டு அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தவன் [இவ்வாறு அவனுக்கு அறிவுரை கூறவில்லை], 

அவன் அவனுக்குத் துரோகம் செய்துவிட்டான்.”

நூல்: அல் மஜாலிஸ் வா ஜவாஹிர் அல்-இல்ம் (5/115)


196. இமாம் யஹ்யா பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

குறைகளை உனக்குத் தெரிய வைப்பவனே உன் சகோதரன்!

பாவங்களை விட்டு உன்னை எச்சரிப்பவனே உன் நண்பன்!

நூல்: ஸிஃபதுஸ் ஸஃப்வா: 2/87


198. ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இளம் வயதில் அறிவைத் தேடுவது கல்லில் பொறிப்பது போன்றது" என்று கூறினார்.

[المقاصد الحسنة, رقم الحديث ٣٧٦]


199. இமாம் முக்பில் அல்வாதிஈ ரஹி கூறினார்கள் : 

நாம் ஃபித்னாவின்

காலத்தில்

இருக்கிறோம்!

அல்லாஹ்வை தவிர 

வேறு யாரும்!

நம்மை ஃபித்னாவில் 

இருந்து பாதுக்காக்க முடியாது!

நூல் : காமா அல் மானீன் 2/370/


200. இமாம் இப்னு உஸைமின் (ரஹி) கூறினார்கள் : 

குழந்தைகளிடம் 

அன்பு செலுத்துங்கள்!

நீங்கள்  சொர்க்கத்தில், நுழைவதற்கும் மற்றும்

நரக நெருப்பில் இருந்து  உங்களை

காப்பாற்றுவதற்கு அவர்கள்

காரணமாக இருப்பார்கள்!

நூல் : ரியாலுஸ் ஸாலிஹின் (3/113)


201. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டார்கள்?

நான் ஏன் மீகாயீல்(அலை) அவர்களை ஒருபோதும் சிரித்தவராக பார்த்ததில்லை?

ஜிப்ரீல்(அலை) விடை அளித்தார்: 

நரகம் படைக்கப்பட்ட அன்று முதல் மீகாயீல்(அலை) அவர்கள் சிரித்ததில்லை!

நூல் : அஸ்ஸஹீஹா: 2511


202. இமாம் அஹ்மது பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

நீங்கள் விரும்புவதை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவதில்!

விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்!

அல்லாஹ் விரும்பும் விஷயங்களைச் செய்வதிலும் 

நீங்கள் விடாமுயற்சியுடன் இருங்கள்!

நூல் : சியருன் அலா பின் (நுபலா)


203. சிறந்த நண்பன் யார் தெரியுமா!

நீங்கள் கஸ்டத்தில் இருக்கும் போது உதவி செய்பவர்!

உங்களை பற்றி நீங்கள் இல்லாத போது புறம் பேசாதவர்!

உங்கள் மரணத்திற்கு பின் உங்களுக்காக (துவா) செய்பவர்!

- அலி பின் அபீதாலீப் ரலியல்லாஹு அன்ஹு


204. இமாம் இப்னு ஸஹ்னூன் மாலிகீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அனைத்து உயிரினங்களும் வயிறு நிரம்பிய பின் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன ஆதமுடைய மகனை தவிர, அவன் வயிறு நிரம்பி விட்டால் தூங்கி விடுகின்றான்.

நூல்: தர்தீபுல் மதாரிக்: 4/81


205. இமாம் இப்னுல் கைய்யிம்  ரஹிமஹுல்லாஹ்
கூறினார்கள் : 

தவ்ஹீத் இஸ்லாத்தில் முதலில் நுழைந்தது ஆகும்!

இவ்வுலக வாழ்க்கையிலிருந்து கடைசியாகப்   பிரிவதும் தவ்ஹீத்  ஆகும்!

நூல் : மதாரிஜ் ஸாலிஹீன் 3/348/


206. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) கூறினார்கள் : 

குர்ஆன் ஒதுவதை கேட்கும்போது, மனிதன் மந்தமாக இருக்கிறான்!

இசை பாடலை கேட்கும்போது
மனிதன் எழுந்து ஆட ஆரம்பித்து விடுகிறான்!

நூல் : அவ்லியா அர் ரஹ்மான் (43: 36)


207. முஆத் இப்னு ஜபல் ரலி அவா்களிடம் !

தக்வா உடைய மக்கள் யார் என்று
கேட்கப்பட்டது 

ஷிர்க் வைக்காத மனிதர்கள் என்று 
அவா் பதிலளித்தார்.

நூல் :  சியருன் அலா பின் நுபலா


208. அலி பின் அபிதாலீப் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :

உங்கள் எதிரிக்கு உங்கள் நண்பராக ஆவதற்கு ஆயிரம் வாய்ப்புகளை கொடுங்கள்!

ஆனால் உங்கள் நண்பருக்கு உங்கள் எதிரியாக மாற ஒரு வாய்ப்பு கூட கொடுக்காதீர்கள்!

நூல் :  முஸ்னத் இப்னு அல் ஜாத்


209. இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : 

இசை ஷைத்தானின் 

குரல் ஆகும்!

நூல்: {சுனன் அல் குப்ரா}


210. இப்னு மஸ்வூத் (ரலி)  அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக, 

எவரும் அறிவாளியாக பிறப்பதில்லை; 

அறிவு படிப்பின் மூலம் வருகிறது."

كتاب الزهد الإمام أحمد بن حنبل ٥٠٩


211. ஷேய்குல் இஸ்லாம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

காஃபிர்கள் சிரமத்தில் சிக்கி துடிதுடித்து அல்லாஹ்வை அழைப்பார்கள், 

அல்லாஹ் அவர்களின் அழைப்பிற்கு பதிலளிப்பான்.

எப்படி முஃமின்களுக்கு (பதிலளிக்காமல் இருப்பான்)?

நூல்: ஜாமிஉல் மஸாயில் 1/71


212. அபுல் கத்தா ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

அன்று பேசாமல் செயல்படும் மக்களை நான் சந்தித்தேன்!

ஆனால் இன்று (செயல்படாமல்) பேசும் மக்களை சந்திதுள்ளேன்!

நூல் : அஸ்சாமாட் /பககம்/ 
294)


213. அனாதையின் கண்ணீர் மற்றும் 

அநீதி இழைக்கப்பட்ட நபரின்( துவா)

இவை குறித்து எச்சரிக்யைாக இருங்கள்!

- அபு தர்தா ரலியல்லாஹு அன்ஹு


214. இமாம்   இப்னு தைமிய்யா ரஹி கூறுகிறார்கள் : 

(குர்ஆன் மற்றும்  சுன்னாவை) ஸஃலபுகளின் வழியில் 

பின்பற்றுவதை எதிர்ப்பவர்கள் 

தெளிவான குழப்பத்தில், இருக்கிறார்கள்'

என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

நூல் :  அல்/ ஹாமாவிய்யா/ பக்கம்/ 271/


215. அல்-ஹஸன் அல்-பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

"மறதி மற்றும் புறக்கணிப்பு காரணமாக அறிவு அழிக்கப்படுகிறது."

- சுனன் அத் தாரிமி 
தொகுப்பு. 1 பக்கம். 488 எண். 649


216. அபு அலி அன்-நய்ஸாபூரி அவர்கள் கூறினார்கள்: 

"மனப்பாடம் செய்வதை விட புரிந்துகொள்வது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது."

- இமாம் தஹாபி
இஸ்லாத்தின் வரலாறு
தொகுப்பு - 7 பக்கம். 349


217. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறினார்கள்: 

 'அல்லாஹ்வின் வேதத்தையும் இறைத்தூதரின் ஸுன்னாவையும் கற்றறிந்த ஓர் அறிஞர். 

இறை கட்டளைகளுக்கும் இறைத்தூதரின் நெறிமுறைக்கும் எதிரானவை என்றிருந்தபோதிலும் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுகின்றபோது முர்தத் ஆகிவிடுகின்றார்.

உலகத்திலும் மறுமையிலும் தண்டனைக்கு உரியவராகி விடுகின்றார்.

நூல்: ஈமானை அரிக்கும் நோய்கள் 


218. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 

"ஒருவர் தான் செய்த பாவங்களின் காரணமாக ஒருமுறை பெற்ற அறிவை மறந்து விடுகிறார் என்று நான் பார்க்கிறேன்."

நூல்: அல்-ஹிலியா தொகுப்பு 1 பக்கம் : 131 ஹஸன்


219. குதைபா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒருவர் அஹ்மத் இப்னு ஹன்பலை நேசிப்பதை நீங்கள் கண்டால், 

அவர் சுன்னாவைப் பின்பற்றுகிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்."

مناقب الإمام أحمد بن حنبل صحفة ٣٠١


220. அப்துல்-அஸீம் அபாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“மார்க்க நம்பிக்கையுடனும்,

 உன்னதமான குணத்துடனும் இருக்கும் ஒரு மனிதன், 

எல்லா விஷயங்களிலும்,

 குறிப்பாக நீண்ட கால விஷயங்களில் தனது மார்க்கத்தை மையமாகக் கொள்ள வேண்டும். 

ஆகவே, இறை நம்பிக்கையுள்ள ஒரு மனைவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நபிகள் கட்டளையிட்டார்கள், 

அதுவே இறுதி இலக்காகும்.
 
عون المعبود ١٣/٦


221. இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் உங்கள் (உள்ளத்தை) இதயத்தை சரிசெய்ய விரும்பினால்,

அல்லது உங்கள் குழந்தை

அல்லது நண்பர் 

அல்லது யாரேனும் ஒருவரில் முன்னேற்றம் காண விரும்பினால், 

குர்ஆன் ஓதப்படும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, 

அவர்களை குர்ஆன் உடன் இருக்கச் செய்யுங்கள். 

ஒருவேளை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அவர்களை சிறந்தவர்களாக மாறச் செய்வான்!

நூல்: ஹில்யாத் அல்-அவ்லியா வசனம் -9 பக்கம் 123


222. மாலிக் இப்னு தினார் (ரஹ்) அவர்கள் பின்வரும் துஆவைச் செய்தார்:

"அல்லாஹ்வே, 

நீதிமான்களை நல்லவர்களாக ஆக்கியவன் நீயே, 

நாங்களும் நீதிமான்களாகும் வரை எங்கள் காரியங்களைச் சீர்படுத்துவாயாக."

قَالَ: كَانَ مَالِكُ بْنُ دِينَارٍ يَقُولُ:

اللَّهُمَّ أَنْتَ أَصْلَحْتَ الصَّالِحِينَ فَأَصْلِحْنَا حَتَّى نَكُونَ صَالِحِينَ "

٦٧ - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ ، ثنا الْحَكَمُ بْنُ سِنَانٍ،


223. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"நிச்சயமாக,

பிரார்த்தனைக்கு முன் (அல்லாஹ்வை) புகழ்வது, 

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஒரு காரணமாகும்."

நூல்: மின்ஹாஜ் அல்-சுன்னா 5/380


224. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

 "தனிமை என் இதயத்திற்கு மிகவும் வசதியானது என்பதை நான் கண்டேன்."

நூல்: அல்-அதாப் அல்-ஷரிய்யா 2/28


225. அல் ஹாரித் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நினைத்தால், 

அதை நாளை வரை தாமதப்படுத்தாதீர்கள்."

الزهد والرقائق المجلد ١ ص ١٢٦


226. தாபிஉ ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

புறத்திற்கான பரிகாரம் நீ யாரை குறித்து புறம் பேசினாயோ அவரிடம் மன்னிப்பு கேட்பதாகும்.

நூல் - அல்-மஜ்மூ' : 3/291


227. தவறுகள்

அனைத்தையும்

நாம் செய்து விட்டு

நேரம் சரியில்லை என்று 

நேரத்தின் மீது  பழிபோடுகிறோம்!

நேரத்திற்கு  மட்டும் நாக்கு இருந்தால்

அது நம்மை திட்டும்!

- இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ்


228. உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 

ஒரு மனிதன் குர்ஆன் 

ஓதுவதைக் கண்டு ஏமாறாதீர்கள்!

அதை செயல்படுத்துகிறானா 

என்பதை உற்று  பாருங்கள்!

நூல் : இக்திதா/ அல் இல்மீ அமல்/ பக்கம் / 71


229. மாலிக் பின் தினார்  (ரஹ்)  அவர்கள் கூறினார்கள்: 

 "உங்களுக்கு நன்மை செய்யாத ஒவ்வொரு தோழர்களையும்; அவர்களை விட்டு விலகி இருங்கள்."

الزهد لابن أبي عاصم ٨٦


230. இமாம் இப்னு கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : 

இவ்வுலகில் நீங்கள் படும்

கஷ்டங்களை, துன்பங்களை

தவ்ஹீத்தை தவிர வேறு ஏதும் நீக்காது!

(நூல் : அல் பவாயித்/ 96/)


231. மண்ணறை, வாழ்கையில் நுழையும் வரை நான்  கல்வியை தேடுவேன்!

-இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹி)


232. நான்  இரவை  மூன்று பாகங்களாக 
பிரித்து கொள்வேன்!

1) முதல் பகுதியில் 
 கல்வியை எழுதுவேன்!

2) இரண்டாவ பகுதியில் (தொழுகையை ) நிறைவேற்றுவேன்!

3) மூன்றாம் பகுதியில்  (தூங்குவேன்)

 - இமாம் ஷாஃபிஈ( ரஹி)


233. “ஒரு இறை விசுவாசி

இவ்வுலக வாழ்கையை

(சொர்க்கம்) செல்ல பயன்படுத்துகிறார்! 

அது அவருக்கு மிகவும் நலவாகும்!

அதே நேரம் இவ்வுலக வாழ்க்கை

நரகத்திற்கு செல்ல பயன்படுத்தும் 

ஒரு காஃபிருக்கு  அது மிக பெரும் தீமையாகும்!

 - (இமாம் ஹஸன் அல்பஸ்ரி ரஹி)


234. மாலிக் பின் தீனார்(ரஹ்):

உன் உள்ளத்தில் கடின தன்மையையும்,

உன் உடலில் பலவீனத்தையும், 

உன் ரிஸ்கு (வாழ்வாதாரம்) தடைப்பட்டுப் போவதாக நீ கருகினால், 

அறிந்து கொள்! 

நிச்சயமாக நீ உனக்குத் தேவையற்ற விஷயங்களில் (அதிகமாக நுழைந்து‌ அதைப் பற்றி) பேசிக் கொண்டிருக்கிறாய்!

நூல்: ஃபைழுல் கதீர்: 1/369


235. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹி கூறினார்கள்:

உன் சகோதரன்  உன்னிடம் எவ்வாறு!

நடக்க வேண்டும், என்று விரும்புகிறயோ!

அவ்வாறு நீயும், அவனிடம் நடந்து கொள்!

நூல் : அல் பவாயித்//


236. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) கூறினார்கள் : 

காதல் என்ற நோயில், விழுந்தவர்களை

முதலில் தவ்ஹீதை 

கொண்டு, குணப்படுத்துஙகள்!

நூல் : அல் :பவாயித்/


237. இமாம் இப்னுல் கைய்யிம்   (ரஹி) கூறினார்கள் : 

1) தொழுகை  உங்கள் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்கிறது!

2) தொழுகை உங்களுக்கு ஆரோக்கியத்தை  அளிக்கிறது!

3) தொழுகை உங்களை தீமையை செய்வதிலிருந்து  தடுக்கிறது!

4) தொழுகை உங்கள் நோயை விரட்டுகிறது!

5 ) தொழுகை உங்கள் இதயத்தை பலப்டுத்துகிறது!

நூல் : அல்/ பவாயித்


238. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) 
கூறினார்கள் : 

மதுவால் ஏற்படும், போதையை, விட

இந்த உலகத்தை நேசிப்பதால்,

ஏற்படும் போதை மிக கடுமையானது !

நூல் : அல் /பவாயீத் /349


239. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி)  கூறினார்கள் : 

நீங்கள் ஒரு மனிதனுக்கு, தர்மம் செய்த பின்பு எங்களுக்காக துஆ செய்யுங்கள், என்று அவரிடம் சொல்லாதீர்கள்!

தர்மம் செய்தால் அல்லாஹ்வுக்காக செய்யுங்கள் , அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பாருங்கள்!

நூல் : மஜ்மூஉல் பஃதாவா /11/11


240. "ஒரு நபர் அல்லாஹ்விடம் 

கேட்கும் துஆவாக்களில், சிறந்தது

பாவ மன்னிப்பு (துஆ)! ஆகும்!

- இமாம்  இப்னு தைமிய்யா (ரஹி)
  

241. இமாம் சுஃப்யான் அத் தவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

உங்கள் வாழ்கை துணையாக வருபவள் 

உங்களுக்கு, அல்லாஹ்வை

நினைவூகூரச் செய்பவளாக 

இருக்க வேண்டும்!

நூல் : ஹில்யத்துல் அவ்லியா/ 7/82/


242. அபு மூஸா அல் அஷாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

"யாரிடத்தில் சில அறிவு இருக்கிறதோ, 

அவர் அதை மக்களுக்குக் கற்பிக்கட்டும், 

ஆனால் அவர் தனக்குத் தெரியாத விஷயங்களைச் சொல்வதில் ஜாக்கிரதையாக இருக்கட்டும், 

அவர் வரம்புகளை மீறி இஸ்லாத்தின் வெளிர்க்கு அப்பால் செல்லக்கூடாது."

நூல்: சுனன் அத் தாரிமி 174


243. இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) கூறினார்கள்:

நிச்சயமாக! அல்லாஹ்வின் திக்ரில் என்றும் நிலைத்திருக்கின்றவர் சொர்க்கத்தில் சிரித்தவராக நுழைவார்.

அல்வாபில் அஸ்ஸய்யிப்: 178ப


244. இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் மற்றும் செயல்கள் பற்றி அறிந்தவர் சந்தேகத்திற்கு இடமின்றி அவனை நேசிப்பார்கள்."

நூல்: அல் ஜவாப் அஸ் ஷாஃபி - 99


245. நபி (ஸல்) சந்தித்த 

சோதனையுடன் என்னுடைய 

சோதனையை  ஒப்பிட்டு பார்த்தேன் 

அதை  மிகவும் சிறியதாக காண்கிறேன்

- ஸஅத் இப்னு முஆத் அவா்களின் தாயார்

வரலாறு : ரஹீக் அல் மக்தூம்


246. ஸுஃப்யானுஸ் ஸௌரி(ரஹ்) அவர்கள் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: 

இப்ராஹீமே! 

நம்முடைய உயிர்களை தவ்ஹீதில் தான் அல்லாஹ் கைப்பற்ற வேண்டும் என்று அவனிடம் பிரார்த்தியுங்கள்!

ஸிபாதுல் இன்தல் மமாத்: 80


247. அல்வலீத் பின் அப்துல் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக! 

அல்லாஹ், 

லூத் நபியின் சமுதாயத்தைப் பற்றி மட்டும் எனக்கு கூறாமல் இருந்தால் அப்படியும் ஒருவர் செய்வார் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும்.

ஸியர் அஃலாமுன் நுபலா: 4/347


248. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் அன்று வேலை (பார்க்காமல்) விடுவது வெறுக்கத்தக்க செயலாகும். 

அது வேதக்காரர்களான (யூதர்களும் கிருத்துவர்களும்) சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை செய்யும் செயலை போன்றது.

இக்திதாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்: 1/390


249. இமாம் இப்னு கஸீர் (ரஹி) கூறுகிறார் :

துன்யாவின் சிறப்பு என்னவென்றால்,

அது தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறது!

மேலும் அது தன்னை  விட்டு ஓடுகிறவரை துரத்துகிறது!

தஃப்ஸிர்/ இப்னு கஸிர்/ (4/197)


250. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) கூறினார்கள் : 

" தவ்ஹீத் உங்களுக்கு

மகிழ்ச்சியை உண்டாக்கும்!

நூல் : ஸாதுல் முஆத் / 4/202/


251. இமாம்  இப்னு கைய்யிம் (ரஹி) கூறினார்கள் : 

நேற்றைய  தினத்தை, திருப்பி 
பார்த்து இன்றைய!

நாளை கெடுத்துக் கொள்ளார்தீர்கள்!

நூல் : அல் பவாயித் /89)


252. இமாம் ஹஸன் அல் பஸ்ரி (ரஹி) கூறினார்கள் : 

எவனுடைய செல்வம் பெருகுகிறதோ

அவனுடைய பாவங்கள் பெருகும்!

எவனுடைய பேச்சுப் பெருகுகிறதோ,

அவனுடைய பொய்யும் பெருகும்!

நூல் :  ஹில்யத்துல் //அவ்லியா//


253. "நான் சுத்தமானவன், 
என்று நினைக்கும்போது தான் 
ஒரு மனிதன் 
தவறின் பக்கம் செல்கிறான்!

- இமாம் இ்ப்னு தைமிய்யா( ரஹி)


254. உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : 

"உன்னை புண்படுத்தும் அனைத்தையும் விட்டுவிட்டு, 

நேர்மையான நண்பனைத் தேடு!"

நூல் : அல்-ஹில்யாஹ் - 7996


255. அப்துல்லாஹ் பினுல் முபாரக்(ரஹ்) அவரிடம் கேட்கப்பட்டது: 

உங்களுக்கு உங்கள் வாழ்வில் ஒரு நாள் மட்டுமே மீதமாக உள்ளது என்று சொல்லப்பட்டால் (அன்று) நீங்கள் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்?

அதற்கு அப்துல்லாஹ் பினுல் முபாரக்(ரஹ்) கூறினார்கள்: 

நான் மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பேன்!

நூல்: பைஹகீ: 2/45


256. ஹுதைஃபா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது: 

நயவஞ்சகன் யார்?

அதற்கு ஹுதைஃபா(ரழி) கூறினார்கள்: 

அவன் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைப்பான் இன்னும் அதை செயல்படுத்த மாட்டான்!

நூல்: ஹில்யதுல் அவ்லியா: 1/351


257. ஸுஃப்யானுஸ் ஸௌரி(ரஹ்) அவர்கள் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: 

இப்ராஹீமே! 

நம்முடைய உயிர்களை தவ்ஹீதில் தான் அல்லாஹ் கைப்பற்ற வேண்டும் என்று அவனிடம் பிரார்த்தியுங்கள்!

நூல்: ஸிபாதுல் இன்தல் மமாத்: 80


258. இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் நன்மையை ஏவுவது அவர் மீது கடமை, 

அவர் அதை செய்யா விட்டாலும் சரியே. 

மேலும் தீமையை தடுப்பது கடமை அவர் அதை செய்து கொண்டிருந்தாலும் சரியே!

நூல்: தஃப்சீர் மாயிதா: 2/242


259. அப்துல்லாஹ் பினுல் முபாரக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதனுக்கு (ஏற்படும்) மிகப்பெரிய சோதனைகளில் ஒன்று; தனக்குள் ஏதோ (ஈமானிய) குறைபாடு உள்ளது என்பதை அறிந்தும் பிறகு அதை கண்டுக்கொள்ளாமல் அதைக் குறித்து கவலைக் கொள்ளாமல் இருப்பதாகும்.

நூல்: அல்ஜாமிஉ லிஷுஃப்பில் ஈமான்: 2/271


260. பாத்திமா (ரழி) அவர்கள் கூறினார்கள் : 

ஜும்மாவுடைய நாளாக இருந்தால்,

சூரியனை பார்ப்பதற்காக தன் அடிமையை அனுப்புவார்கள். 

அவர் சூரியன் மறைகிறது என்று அவர்களுக்கு அறிவித்தால், 

(உடனே) அது மறையும் வரை துஆ-வில் ஈடுபடுவார்கள்.

நூல்: ஃபத்ஹுல் பாரி கிதாபுல் ஜுமுஆ : 1922


261. இமாம் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உன் கடும் முயற்சியின் மூலம் ஸாலிஹான மனைவியை பெற்றுக்கொள்ள முடியாது. 

யார் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ அவருக்கு அவன் வழங்கும் ரிஸ்க் ஆகும்.

நூல்: அஹ்காமுல் குர்ஆன் 1/536


262. இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்-மஸீஹ் (ஈஸா நபி) அவர்கள் தொட்டிலில்  குழந்தையாக இருந்த போது பேசிய முதல் வார்த்தை

 "நிச்சயமாக நான் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை)" என்று தான்.

மாறாக அவர்:

 "நான் இப்னுல்லாஹ் (அல்லாஹ்வின் மகன்)" என்று கூறவில்லை.

நூல் : தஃப்ஸீர் 2/677


263. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"நல்ல செயல்கள் முகத்தை அழகுபடுத்தும்."

الجواب الكافي ١/٥٤


264. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹீமஹீல்லாஹ் கூறுகிறார்கள் : 

ஒரு முஸ்லிம்

கிறுஸ்துவர்களின்

பண்டிகை பொருட்களான

கிறிஸ்துமஸ், மரங்கள்

மற்றும் பொம்மைகள்,

மற்றும் பிறந்த நாள் அட்டைகள்,

போன்றவை விற்பதற்கு அனுமதி இல்லை!

நூல் : மஜ்மூஉல் ரஸாயில் 


265. இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

சில நிக்காஹ்கள் நிகழ்ந்ததனால் இமாம் ஷாஃபிஈ இமாம் அஹ்மத் போன்ற (மாபெரும் அறிஞர்கள்) பிறந்திருக்கின்றார்கள். 

இது ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட சிறந்ததாகும்.

நூல்: தல்பீஸ் இப்லீஸ்: 263


266. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ்
கூறினார்கள் : 

இந்த மார்க்கம் மக்களிடம்,

குறைந்து வருவதற்க்கான, காரணம்!

காஃபிர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதே

முதன்மையான , காரணமாகும்!

நூல் : ஸிராத்தல் முஸ்தகீம்/பக்கம்/116/)


267. இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

தவ்பாவும் இஸ்திக்ஃபாரும் யாருடைய பழக்கமாக இருக்கிறதோ, 

திட்டமாக அவர் பல சிறந்த பழக்கங்களின் பக்கம்  வழிநடத்தப்படுவார்.

நூல்: இகாஸதுல் லஹ்ஃபான்: 2-945


268. ஷெய்குல்  இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

 பாவங்கள் முகத்தை அசிங்கப்படுத்தும்.

الجواب الصحيح ٤/٣٠٦


269. ஸுஃப்யான் பின் உயைய்னா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஜிஹாத் என்பது பத்து வகையாகும்: 

அதில் ஒன்று எதிரியுடன் போரிடுவது (மீதமுள்ள) ஒன்பதும் நீ உன் உள்ளத்துடன் போராடுவதாகும்.

நூல்: ஹில்யதுல் அவ்லியா 7/147


270. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒரு பெண்ணுக்குச் சிறந்த ஹிஜாப்,

ஒரு அவசரத் தேவைக்காகத் தவிர வீட்டை விட்டு வெளியேறாமல் தன் வீட்டில் தங்குவதுதான்."

مجموع الفتاوى


271. இமாம் அபு ஹனிஃபா (ரஹ்) அவர்கள் தனது மாணவருக்கு வழங்கிய அறிவுரை:

அவளுடைய எல்லா தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும் என்று தெரிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

முதலில் அறிவைத் தேடுங்கள், 

பின்னர் ஹலாலானவற்றிலிருந்து செல்வத்தைச் சேகரித்து, 

பின்னர் திருமணம் செய்து கொள்ளுங்கள்!

الطبقات السنية ، ص ١٨٦ - ١٨٧


272. இமாம் இப்னுல் கையீம் அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

குர்ஆன் முழுவதுமே நிவாரணம் தான் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்தாஆலா வானத்தில் இருந்து நிவாரணத்தை இறங்கியதில்  நோய்யை நீக்கியது (நோய்யை  அகற்றுவதில்) சிறந்த ஒரு பயன் குர்ஆனை தவிர வேறு எதுவும் இல்லை 

(الداء والدواء) (ص6)
وينظر: (إغاثة اللهفان) (1/ 70)


273. இமாம் இப்னுல் கையீம் அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு மனிதன் மறுமை நாளில் தன்னுடைய பாவங்களை மலை அளவு கொண்டுவருவான் 

ஆனால் அவன் நாவில் இறைவனை நினைத்தின் காரணமாக அவனுடைய மலை அளவு பாவங்கள் இடிக்கப்படும் 

 [ الــدَّاء وَالــدَّوَاء | ٢٣١ ]


274. இமாம் இப்னுல் கையீம் (ரஹ்)‌ அவர்கள் கூறினார்கள் :

“மஹ்ரம் அல்லாத பெண்களுடன் பேசுவதிலோ,

உரையாடினாலோ அல்லது பார்ப்பதிலோ எந்தக் கவிஞர்களும் தவறாக எதையும் காணவில்லை, 

ஆனால் இது இஸ்லாம் மற்றும் பொது அறிவுக்கு முரணானது,

மேலும் இது தன்னைத்தானே சோதனைக்கு ஆளாக்குகிறது. 

எத்தனை பேர் தங்கள் ஈமான் இறைநம்பிக்கையில்  ஈடுபாடு மற்றும் உலக விவகாரங்கள் தொடர்பாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூல்: ராவ்தாத் அல்-முஹிப்பீன் : 88


275. இமாம் :அஷ்ஷாபிஈ (ரஹ்) கூறினார்கள் :

நான் சுன்னாவுக்கு

எதிராக ஏதாவது ஒரு 

வார்த்தை பேசியிருந்தால்!

அதை என் வாழ்நாளில்  

திரும்பப் பெறுகிறேன்.

நூல் : கதீப் அல் பக்கீ


276. ஒரு நபர் கூறினார்:

 "எனக்கு சட்டப்பூர்வமாக இல்லாத (மகரமல்லாத) ஒரு பெண்ணை நான் பார்த்தேன், 

அதனால் என் மனைவி நான் விரும்பாதவரை(மஹ்ரம் அல்லாத, அந்நியரை)ப் பார்த்துக் கொண்டிருந்தாள்"

-இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) ஷைய்த் அல்-காதர்


277. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிவை தேடுவது என்பது நஃபிலான தொழுகை விட சிறந்தது

நூல் : முஸ்னத் அல்-ஷாபிஈ  பக். 249

قال الشافعي - رحمه الله -: 

"طلب العلم أفضل من صلاة النافلة"؛

(مسند الشافعي - ص 249).


278. ஒரு மனிதன் உலகில், அனைத்தையும் அறிந்துருந்தாலும்!

அவன் (அல்லாஹ்வை)
பற்றி அறியவில்லை என்றால், 
அவன் அறிவற்றவன்  ஆவான்!

- இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்)


279. ஒரு இறை விசுவாசியின் தலையில் உள்ள 

ஒரு முடியாக இருந்திருக்க நான் விரும்புகிறேன்!

~அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு


280. இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :

நான் குளியறைக்குள்

சென்றால் ஒரு 

தடிமனான ஆடையை

அணிந்து குளிப்பேன்

அல்லாஹ் என்னைக்

குளியலறையில் ஆடை

இல்லாமல் பார்க்க வெட்கப்படுகிறேன்!

நூல் : ஸியர்/1/34/


281. இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 "அல்லாஹ்விடம் உங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் தன்னார்வ செயல்களில் மிகப் பெரியது குர்ஆனை ஏராளமாக ஓதுவது,

அதைக் கேட்பது, 

அதைப் பற்றி சிந்திப்பது மற்றும் புரிந்துகொள்வது."

جامع العلوم والحكم ٢/٣٤٢


282. உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வார்த்தைகளை காணாத (அதாவது குர்ஆனை ஓதாத) ஒரு நாளோ அல்லது ஒர் இரவோ என் மீது நிகழ்வதை நான் விரும்பவில்லை.

நூல்: ஹில்யதுல் அவ்லியா 7:147


283. அல்லாமா சாலிஹ்  பின் முஹம்மது அல் லுஹைதான் (حفيلة الله) அவர்கள் கூறினார்கள் 

கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களை வாழ்த்துவதைப் பொறுத்தவரை, இது ஒரு முஸ்லீம் தவிர்க்க வேண்டிய ஒரு தீமையாகும்.

المصدر: مقطع صوتي


285. உமர் பின் கத்தாப்(ரழி):

அல்லாஹ்வுடைய எதிரிகளை அவர்களின் பண்டிகை நாட்களில் விலகியிருங்கள்! நிச்சயமாக (அன்று) அல்லாஹ்வுடைய கோபம் அவர் மீது இறங்குகிறது.

அத்-தாரீக் இமாம் புகாரி: 1804


286. இமாம் இப்னுல் ஜௌஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பிள்ளைகள் பருவ வயதை அடைந்து விட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்

அவர்களுடைய பாவ சுமைகளை நீங்கள் சுமக்காமல் இருப்பதற்காக.

நூல்: அஹ்காமுன் நிஸா 304


287. இமாம் இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"இந்த பூமியில் நாக்கை விட சிறைப்படுத்த வேண்டிய அவசியம் வேறு எதுவும் இல்லை."

كتاب الفوائد للإمام ابن القيم صفحة ٩٤٢


288. இமாம் இப்னு அல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

"ஒரு காஃபிர் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், 

ஆனால் அவரது இதயம் மிகவும் நோயுற்றது."

كتاب الفوائد للإمام ابن القيم صفحة ٨٤٢


289. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)  அவர்கள் கூறுகிறார்கள்:

யார் அரபு மொழி அல்லாத தேசத்தில் வாழ்ந்து, 

அவர்களின் புத்தாண்டையும் அவர்களின் கொண்டாட்டத்தையும் கொண்டாடி, 

அதே நிலையில் இறக்கும் வரை அவர்களுக்குச்சமமாக நடப்பாரோ,

மறுமை நாளில் அவர்களுடனே சேர்ந்திருப்பார்.

நூல் : அஹ்காம் அஹ்லுல் திம்மாஹ் 2/240


290. இமாம் இப்னுல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

“ஓ ஆத்மா! 

உங்களை கொஞ்சம் சிரமப்படுத்துங்கள்,

நீங்கள் அல்-ஃபிர்தவ்ஸில் நிரந்தரமாக ஓய்வெடுப்பீர்கள் .

நூல் - அல்-மவாயித் 1/79


291. அல்ஹாஃபிழ் சலாமாஹ் இப்னு தினார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

"அல்லாஹ்விடம் உங்களை நெருங்காத ஒவ்வொரு அருளும் [உண்மையில்] ஒரு பேரழிவாகும்."

تهذيب الكمال ١١/٢


292. இமாம் இப்னு அல் கையீம் ரஹ் அவர்கள் கூறினார்கள் : 

"மனிதன் தான் செய்த பாவங்களால் தான் பெற்ற அறிவை கிட்டத்தட்ட மறந்து விடுகிறான்."

كتاب الفوائد للإمام ابن القيم صفحة ٨٤٢


293. இமாம் இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"ஜன்னத்துக்காகப் படைக்கப்பட்டவர் (இவ் உலகில்) என்றென்றும் பேரிடர்களால் துன்புறுத்தப்படுவார்."

நூல்: அல்-ஃபவாயித், 36


294. ஷெய்க் அஸ்ஸாதி (ரஹ்) கூறினார்கள்: 

“உண்மையில் ஜாஹீல் (அறியாமையில் உள்ளவர்) அதில் எந்த நன்மையும் இல்லாத பேச்சை உச்சரிக்கிறார், 

மேலும் அவர் மக்களை கேலி செய்பவர். ”

 أنظر : تفسير السعدي ٢\٦٧


295. ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 "கல்லறை எலும்புகளையும் இறைச்சியையும் சாப்பிடுகிறது, 

ஆனால் நம்பிக்கையை சாப்பிடாது.

العزلة لابن أبي الدنيا ٢٠٤


296. ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அறிஞர்களுக்கு அல்லாஹ் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளான்.

1. அதை (அறிவை) மலிவான விலைக்கு விற்காதீர்கள்.

2. அதில் உங்கள் ஆசைகளைப் பின்பற்றாதீர்கள்.

3. மேலும் இதில் யாருக்கும் பயப்பட வேண்டாம்.

أخبار القضاة لوكيع ص ٢٠٠


297. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

 "கிட்டத்தட்ட 700 பெரிய பாவங்கள் உள்ளன, 

மனந்திரும்பினால் அதில் ஒன்றும் பெரியது அல்ல, 

அவை தொடர்ந்தால் ஒன்றும் சிறியது அல்ல."

تفسير الطبري ٢٤٥/٨


298. இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"சலஃப்களில் சிலர் மாவுக்கு உப்பு மற்றும் ஆடுகளுக்கு புல் தேவைப்படும்போது கூட அல்லாஹ்விடம் எல்லாவற்றையும் கேட்பார்கள்."

جامع العلوم والحكم صفحة ٢٧٦]


299. இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

“அல்லாஹ்வை நோக்கிய முதல் படி ஒருவரின் ஆன்மாவை (உள்ளத்தை) தியாகம் செய்வதாகும்.

இது தான் பாதை,

இன்னும் இதில் நடப்பவர்கள் எங்கே?!”

நூல்: கிதாப் அல் லாதாயிஃப் ஃபில் வாயிஸ் பக்கம் 131


300. ஷெய்க் அப்துர் ரசாக் அல் பத்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"உள்ளம் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும்,

அல்லாஹ்வை வழிபடுவதில் மும்முரமாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளது.

எனவே அது மற்ற விஷயங்களில் மும்முரமாக இருக்கும் போதெல்லாம் அது கவலையை அனுபவிக்கிறது."

شرح الوسائل المفيدة للحياة السعيدة


301. உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) கூறினார்கள்:

“நான் அதிகம் பேசுவதைத் தடுப்பது தற்பெருமையில் விழும் பயம்தான்”.

நூல்: கிதாப் அல் ஜுஹ்த் இப்னுல் முபாரக்  : 126


302. இமாம் இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) கூறுகிறார்:

 “ஒரு அறிஞர் கூறினார்கள்:

"தன் பெற்றோரை அவமரியாதை செய்பவனுடன் நட்பு கொள்ளாதே, 

அவன் உனக்கு ஒருபோதும் நல்லவனாக இருக்க மாட்டான். 

அவன் உன்னை விட அவன் மேல் அதிக உரிமை உள்ளவர்களை அவமரியாதை செய்திருக்கிறான் 

(அதனால் அவன் உன்னை நன்றாக நடத்துவான் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்)."”

நூல்: அல் பிர் வஸ் சிலாஹ்


303. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

சிந்திக்காமலும் விளங்காமலும் முழு குர்ஆனை ஓதி முடிப்பதை விட ஒரே ஒரு வசனத்தை சிந்தித்து விளங்கி ஓதுவது சிறந்தது.

நூல்: மிஃப்தாஹு தாருஸ் ஸஆதா: 1/181


304. இமாம் ஸுஃப்யான் பின் உயைய்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

புறம் என்பது கடனை விட கடுமையானது.

(வாங்கிய) கடனை பூர்த்தி செய்துவிடலாம் (பேசிய) புறத்தை பூர்த்தி செய்ய முடியாது.

நூல்: ஹில்யதுல் அவ்லியா 7/275


305. ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

எங்கள் பணி மக்களை காஃபிர்-ஆக்குவதும் 

அவர்களை வழிகெடுப்பதும் அல்ல.

எங்கள் பணி எது குஃப்ர், எது வழிகேடு என்று அடையாப்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டுவதும்,

நேர்வழிப்படுத்துவதும், கற்றுக் கொடுப்பதுமே.

நூல்: முதஃபர்ரிகாதுன் ஷரித்: 227


306. ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு ஸுன்னா (எது என்று) தெரியவில்லையோ 

அவரால் பித்அத்தை (இருபோதும்) அறிந்துக்
கொள்ள முடியாது.

நூல்: ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர்: 715


307. இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் அவர் வீட்டிலிருந்து வெளியேறிய போது அவருடைய மனைவி கூறினாள்

“ஹராமாக சம்பாதிப்பதை விட்டு நான் உங்களை எச்சரிக்கிறேன்!

நம்மால் பசியை பொறுத்துக் கொள்ள முடியும் நரக நெருப்பை ஒருபோதும்) பொறுத்துக் கொள்ள முடியாது.”

நூல்: முக்தஸர் மின்ஹாஜுல் காஸிதீன்: ப81


308. ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"சிலர் தங்கள் ஆடைகளில் அடக்கம், 

ஆனால் அவர்களின் உள்ளங்களில் ஆணவம்" என்று கூறினார்.

التواضع والخمول ص ٩٠


309. உங்கள் செல்வம் எவ்வளவு குறைகிறதோ, அவ்வளவு குறைவாக நீங்கள் கணக்குக் கேட்கப்படுவீர்கள்!

- உமர் ரலியல்லாஹு அன்ஹு


310. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்  :

உங்கள் இதயத்தை

நீங்கள் துன்யாவிடம் 

கொடுத்தால் அது

உங்களுக்கு

கவலையை

கொடுக்கும்!

உங்கள் இதயத்தை நீங்கள்

அல்லாஹ்விடம்

கொடுத்தால் அது

உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்!

நூல் :  இலாமு அல் மூவக்கீன்


311. இமாம் அல்பானி رحمه الله கூறுகிறார்கள்:

பித்அத்வாதிகள் அனைவரும் நபிமொழியை புறக்கணிப்பார்கள்.

நபிமொழி கூறும் விளக்கத்திற்கு எதிராக குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

இதனால் அவர்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுப்பார்கள்.

இந்த மோசடியில்இருந்து அல்லாஹ்குவிடம் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

-நூல்: மவ்சூஅ துல் அல்பானி ஃபில் அகீதா 
(பாகம் 1 பக்கம் 301)


312. இந்த துன்யா ஒரு நிழல் போன்றது. நீங்கள் அதைப், பிடிக்க முயற்சித்தால், உங்களால் ஒருபோதும் பிடிக்க முடியாது!

நீங்கள் அதை புறக்கணித்தால் அதற்கு உங்களைப், பின்தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை!

~ இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ்


313. துஆக்களுக்கு பதில் தாமதம் ஆவது பற்றி  கவலைப்பட வேண்டாம்!

துவா செய்யும் திறனை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பதே, அல்லாஹ்வின் கருணை ஆகும்!

~ உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு


314. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

“ஒருவர் வீட்டில் இருக்கும் போது அது சுன்னாவில் இருந்து வருகிறது, 

உதாரணமாக அவர் தனது சொந்த தேநீர் தயாரிப்பது, 

அவருக்குத் தெரிந்தால் சமைப்பது மற்றும் கழுவ வேண்டியதைக் கழுவுவது, 

இவை அனைத்தும் சுன்னாவிலிருந்து வந்தவை.

நீங்கள் இதைச் செய்தால், 

சுன்னாவைப் பின்பற்றுவதன் மூலம், 

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, 

வல்லமையும் மகத்துவமுமான அல்லாஹ்வுக்காக உங்களைத் தாழ்த்திக் கொள்வதன் மூலம் நீங்கள் வெகுமதியைப் பெறுவீர்கள்.

இது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே அன்பையும் ஏற்படுத்துகிறது.

 அவர்களின் வேலைகளில் நீங்கள் அவர்களுக்கு உதவுகிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தினர் உணர்ந்தால், 

அவர்கள் உங்களை நேசிப்பார்கள், 

மேலும் உங்கள் மதிப்பு அவர்களிடம் அதிகரிக்கும், 

எனவே இது ஒரு பெரிய நன்மையாக முடிவடையும்.

நூல்: ஷரஹ் ரியாலுஸ் ஸாலிஹீன், 3/529


315. அபூதர்தா (ரலி அல்லாஹு அன்ஹு) கூறினார்கள்: 

யார் மரணத்தை அடிக்கடி நினைவுகூறுவாறோ,

அவரது மகிழ்ச்சி குறைகிறது!

அவரிடம் பொறாமையும் குறைகிறது!

நூல் : சியருன் அலா பின் நுபலா/1/23/


316. அபூதர்தா (ரலி) அன்ஹு கூறுகிறார்கள் : 

நான் ஏழையாகிவிடும் நாளைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லடுமா

நான் மரணித்து மண்ணறையில் செல் நாள் ஆகும்!

நூல் : சியரூன் அலா பின் நுபலா/1/23/)


317. அபூதர்தா (ரழி அல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள் : 

இறந்தவர்களை

நினைவுகூரும் போது, ​​

அவர்களில் ஒருவராக

உங்களை எண்ணிக்

கொள்ளுங்கள்!

நூல் : ஸியர்/1/23/


318. இமாம் இப்னு ரஜப் அல்  ஹம்பலி (ரஹ்) கூறுகிறார்கள் : 

குழந்தைகள்தான்

இவ்வுலகத்தின் சிறந்த,

அருட்கொடைகள் ஆவார்கள்!

நூல் : பத்ஹுல் பாரி


319. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் 

"கடுமையான வாழ்க்கைக்கு பழகிக் கொள்ளுங்கள், 

ஆடம்பரம் என்றென்றும் நிலைக்காது."

حلية الأولياء 10/242


320. இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"தேன் உடல் நோய்களை குணப்படுத்துவது போல் குர்ஆனை ஓதுவதால் உள்ளத்தின்  நோய்களுக்கு குணமாகும்."

التبصرة 79


321. அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அற்பமான உலக இன்பத்தில் மூழ்கி, 

மறுமையை மறந்துவிடாதீர்கள், 

உங்கள் வாழ்க்கை குறுகியது, 

எனவே அவசரப்பட்டு, 

இன்றைய வேலையை நாளை வரை ஒத்திவைக்காதீர்கள்,

ஏனென்றால் நீங்கள் எப்போது இறந்துவிடுவீர்கள்,

அல்லாஹ்வை சந்திப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது."

حلية الأولياء  2/140


322. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு சிறிய பாவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்,

ஏனென்றால் மிகப்பெரிய தீ சிறிய தீப்பொறிகளால் ஏற்படலாம்."

الفوائد 3/227


323. ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான் (ஹஹ்) அவர்கள் கூறினார்கள்: 

ஆண் இல்லாத பெண் துன்பமானவள், 

பெண் இல்லாத ஆணுக்கும் துன்பம்.

ஆனால் இரண்டு பொருத்தமான வாழ்க்கைத் துணைவர்கள் இணைந்தால், 

இது அல்லாஹ்வின் அருள்களில் நிறைவிலிருந்தது.

நூல்: இன்னாஹ் அல் முஸ்தஃபித் பி ஷரஹ் கிதாப் அல் தவ்ஹீத் 2/206


324. ஸஆத் இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்கள் தனது மகனிடம் கூறினார்கள்:

“ஓ என் மகனே, 

நீ செல்வத்தைத் தேடும்போது,

அதை மனநிறைவுடன் தேடு. 

நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், 

செல்வம் உங்களை ஒருபோதும் வளப்படுத்தாது!

عيون الأخبار  3/207


325. இமாம் அல் புகாரி (ரஹ்) அவர்கள் மூன்று குணங்களுடன் வேறுபடுத்தப்பட்டார்:

1. அவர் அதிகம் பேசியதில்லை.

2. மக்களிடம் இருப்பதற்காக அவர் ஒருபோதும் ஏங்கவில்லை.

3. அவர் ஒருபோதும் மற்றவர்களின் விவகாரங்களில் தன்னை ஆக்கிரமிக்க மாட்டார்; 

அவரது கவனமெல்லாம் அறிவை நோக்கியே இருந்தது.

سير أعلام النبلاء 12/449


326. ஷெய்க் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்: 

"இன்றைய முஸ்லிம்களால் விஷயங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. 

பேசுவதால் தான் ஆலிம் என்று நினைக்கிறார்கள்."

سلسلة الهدى و النور ٨٥٢


327. ஷெய்க் முக்பில் பின் ஹதி அல் வாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

நாம் வெற்றி பெற விரும்பினால், 

இஸ்லாமிய அறிவைத் தேடுவது நம் மீது உள்ளது

நூல் : அல் இஹாத் அல் குமைனி பக்.292


328. மாலிக் இப்னு தினார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

இவ்வுலக வாழ்வின் உவமை பாம்பு. 

தொடுவதற்கு மென்மையானது,

அதற்குள் ஒரு கொடிய விஷம் உள்ளது. 

புத்திசாலிகள் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறார்கள், 

குழந்தைகள் (உலக வாழ்க்கையால் ஏமாற்றப்பட்டவர்கள்) அதை விரும்புகிறார்கள்.

صفة الصفوة 2/168


329. இமாம் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமின் (ரஹ்) கூறுகிறார்கள் : 

நன்மையை ஏவி தீமையை தடுப்பவரை,

உங்கள் நண்பராக ஆக்கிக், கொள்ளுங்கள்!

நூல் : மஜ்மூஉல் பஃதாவா/ 2/34/


330. இமாம் ஹஸன் அல் பஸ்ரி (ரஹ்) கூறுகிறார்கள் : 

குர்ஆனை அதிகமாக ஓதி அதனை முழுமையாக நம்பிக்கை கொண்டவர் 

1-  அல்லாஹ்வுக்கு அதிகமாக பயப்படுவார்

2- அவருக்கு கவலை அதிகமாக இருக்கும்

3-  அவர் அதிகமாக அழுது கண்ணீர் சிந்துவார்

நூல் : ஹீல்யத்துல் அவ்லியா


331. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

ஸஜ்தா செய்யுங்கள்

உங்கள் கவலைகள்,
நீங்கும்!

நூல்  : இலாமு அல் முவக்கீஈன்/1/14/


332. இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 

குர்ஆன் மற்றும் சுன்னா நேரான பாதையாகும்!

அது இல்லாத மற்ற பாதைகள் ஷைத்தானின் பாதையாகும்.

நூல் : மதாரிஜூஸ் ஸாலிஹீன்  2/439/


333. இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:

உலகை விட்டுவிட்டு அல்லாஹ்வை நோக்கி விரைபவர்களாக ஸாலிஹீன்கள் காணப்பட்டார்கள்.

தற்போது, அல்லாஹ்வை விட்டுவிட்டு உலகை நோக்கி விரைந்து செல்லல் காணப்படுகிறது".

- மராஃபிகுல் முவாஃபிக்


334. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"அல்லாஹ்வுக்கு பயந்து நீங்கள் அழுவது

 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளாகும்."

فتاوى إسلامية ٨/٢٦


335. இமாம் இப்னு அல் கைய்யிம்( ரஹ்) கூறுகிறாகள் : 

அறிவு மட்டும் ஒரு முகம் 

இருந்தால், சூரியன் மற்றும்

சந்திரனை விட அழகாக

இருக்கும்!

நூல் : அல் பவாயித் /2/23/


336. யார் பாவ மன்னிப்பு அதிகமாக கேட்பாரோ,

அவருக்குப் பூட்டப்பட்ட (கதவுகள்) திறக்கப்படும்

- இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்)


337. முதலில் உன் உள்ளத்தில் மறுமை தேவைக்கு முதல் இடம் கொடு!

உலக தேவைக்கு இரண்டாம் 
இடம் கொடு!

- முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு 


338. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

உங்கள் ஈமானின் அளவை நீங்கள் பார்க்க விரும்பினால்,

நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி இருக்கிறீர்கள் என்று பாருங்கள்.

உண்மையில் ஈமான் அதன் உண்மையான அளவை இரண்டு யூனிட் தொழுகையிலோ அல்லது பகலில் (நோன்பு)  உண்ணாவிரதத்திலோ காட்டுவதில்லை.

ஆனால் அது உங்கள் ஆன்மா (உள்ளம்) மற்றும் ஆசைகளுக்கு எதிராகப் போராடுவதைக் காட்டுகிறது.

நூல்: மதாரிஸ் அல் ஸாலிகீன் | 164/82


339. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 

 "குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு,

 படைக்கப்படாதது, 

எனவே உண்மையில் எவர் குர்ஆனை நேசிக்கிறாரோ அவர் அல்லாஹ்வை நேசிக்கிறார்."

فقه الأدعية والأذكار ج١ ص٦٦


340. ஷெய்க்  இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"அல்லாஹ் ஆண்களை பாதுகாவலர்களாக ஆக்கியுள்ளான், 

எனவே ஃபித்னாவின் ஒவ்வொரு காரணத்திலிருந்தும் தங்கள் பெண்களைப் பாதுகாப்பது அவர்கள் மீது கடமையாகும்."

اللقاء الشهري ٣


341. இமாம் இப்னு அல்-கய்யிம் رحمه الله கூறினார்கள்:

“அல்லாஹ்வை நினைவு கூறுவதனால் இதயம் புத்துயிர் பெறுகிறது.”

-மதாரிஜ் அஸ்-ஸாலிகீன் 2/29


342. ஷெய்க் ஸாலிஹ் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"இப்போது உள்ள பிரச்சனை என்னவென்றால், 

குஃப்ஃபாரைப் பின்பற்றுவது ஒரு பெருமை என்று நினைக்கும் சிலர் மற்றும் நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் இருந்த நிலைக்குத் திரும்புவது பின்தங்கிய நிலை என்று நினைக்கிறார்கள்."

 كتب و رسائل لعثيمين ٨، صحفة ١١٧


346. கலீஃபா அலீ பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

மானக்கேடானவற்றை பேசுபவனும் அதை (மக்கள் மத்தியில்) பரப்புபவனும்; 

பாவத்தில் சரிசமம் ஆனவர்கள்.

الأدب المفرد للبخاري 324


347. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

பாவத்தை விட்டு விலகுவதும், 

உனக்கு பயனளிக்காத விஷயத்தை விட்டுவிடுவதும் உள்ளத்தை ஒளிப் பெற செய்யும் 

நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா: 10/98


348. ஷேய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

பூமியில் ஏற்படும் குழப்பங்களில் ஒன்று: 

முஃமின்கள் நிராகரிப்பாளர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்வது

عمدة التفسير ١ / ٨٥


349. ஷெய்க் ஜமீல் ஜைனூ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நிக்காஹ் மற்றும் தலாக் போன்ற விவகாரங்களில் உங்களது பெற்றோர்கள் உங்களது முடிவுக்கு ஒத்துவரவில்லையானால் நீங்கள் மார்க்கத்தின் முடிவையே செயல்படுத்துங்கள்.

அதுவே சிறந்த வழியாகும்.

நூல்: தவ்ஜீஹாதுன் இஸ்லாமியா லிஇஸ்லாஹில் ஃபர்தி வல்முஜ்தமி': 173


350. நபி (ஸல்) அவா்கள் என்னை செல்லமாக ஆயிஷ்! என்று அழபை்பார்கள்...

- ஆயிஷா ரலி, (நூல் புகாரி)


351. தவ்ஹீது என்பது ஒளி 
ஆகும்!

ஷிர்க் என்பது இருள் ஆகும்!

- இப்னுல் கைய்யிம் (ரஹ்)


352. ‘உங்களில் சிறந்தோர் எனக்குப் பிறகு என் இல்லத்தாரிடம் நன்முறையில் நடந்துகொள்வார்கள்' 

என அண்ணலார் கூறிய தகவல் ஒன்றை அபூஹுரா (ரலி)  அறிவிக்கிறார்.

அப்துர்ரஹ்மான் (ரலி) அதற்கேற்றவாறு நடந்துகொண்டார்.

தனது ஒரு தோட்டத்தை நம்பிக்கையாளர்களின் அன்னையருக்காக அவர் வஸிய்யத் செய்தார். 

அதன் மதிப்பு 40 ஆயிரம் பொற்காசுகள். 

நூல்: பஸ்ஸார்


353. எண்ணி எண்ணி அல்ல, எண்ணியே பார்க்காமல் கோடிக் கணக் இல் இறைவழியில் செலவு செய்த ஷஹாபாக்களைப் பார்க்க முடிகின்றது. 

அதில் தலையானவர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)

ஒருமுறை ஒரே நாளில் 30 அடிமைகளை அப்துர் ரஹ்மான் (ரலி)

விடுதலை செய்தார். 

நூல்: உஸதுல் காபா


354. இறைத்தூதரின் காலத்தில் ஒருமுறை அப்துர் ரஹ்மான் (ரலி) 4000 தொகையை செலவுசெய்தார். 

பிறகு 40,000 கொடுத்தார். 

பிறகு 40 ஆயிரம் தீனார்களைக் கொடுத்தார். 

பிறகு, 5 ஆயிரம் குதிரைகளைஅல்லாஹ்வின் பாதையில் வழங்கினார். 

ஒரு வணிகத்தில் அவர் ஈட்டிய ஒட்டுமொத்த செல்வம் இது. 

நூல்: தபுரானி


355. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒரு பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். 

அவள் (வீட்டைவிட்டு) வெளியேறிவிட்டால். ஷைத்தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க வைக்கிறான். 

ஒரு பெண் தனது இல்லத்தின் உள் அறைக்குள் இருக்கும்போதுதான் தன் இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி); 

நூல்:  தப்ரானீ (அல்கபீர்), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ஸஹீஹ் இப்னு குஸைமா, முஸ்னது அல்பஸ்ஸார். முஸன்னஃப் இப்னு அபீஷைபா. ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-1093.


356. ஷுபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 "ஹதீஸ்கள் தெரியும் ஆனால் அரபு மொழி தெரியாத ஒருவரின் உதாரணம், 

உணவு இல்லாமல் மூக்கு பையுடன் இருக்கும் கழுதையாகும்."

தஃப்சிர் அல்-குர்துபி பக். 26


357. ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

உங்கள் மனைவியை சபிப்பது ஒரு தீய விஷயம் மற்றும் பெரிய பாவம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒரு முஸ்லிமை சபிப்பது அவனைக் கொல்வதற்கு சமம்"

ஷெய்க் பின் பாஸின் அல் ஃபத்தாவா 3/217 


358. மனைவி இல்லாத வெறுமையான வீட்டிற்கு வரும் ஒருவன், 

வீட்டில் பணமும், 

சுகமும் நிறைந்திருந்தாலும், 

கடினமான வாழ்க்கை வாழ்கிறான்.

- ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்,  அல் இத்திஹாஃப், பக்கம் 857 


359. இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"தன் ஈமானுக்கு (நம்பிக்கைக்கு) உதவி செய்யும் ஒரு நேர்மையான மனைவியை ஏற்றுக்கொண்டவனே மகிழ்ச்சியானவன்."

நூல்: ரஸாயில் இப்னு ரஜப், 2/421


360. இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மனைவியிடம் கூறினார்கள்: 

“சாரா! பூமியின் மேற்பரப்பில் (இந்த நேரத்தில்) உங்களையும் நானும் தவிர வேறு நம்பிக்கையாளர்கள் இல்லை.

- ஸஹீஹ் அல்-புகாரி


367. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

கணவனின் மனைவி மீதுள்ள உரிமைகள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் உரிமைகளுக்கு அடுத்ததாக வருகின்றன.

நூல்: மஜ்மூ அல்-ஃபதாவா 32/260



قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

قلبٌ شاكرٌ و لسانٌ ذاكرٌ و زوجةٌ صالحةٌ تُعينُك على أمرِ دنياك و دينِك خيرٌ ما اكْتَنَزَ الناسُ

صحيح الجامع ٤٤٠٩ | الشيخ الألباني رحمه الله | صحيح

368. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(அல்லாஹ்வின் அருள்களை நினைவுகூறும்) நன்றியுள்ள இதயம், (அடிக்கடி) அல்லாஹ்வைக்  திக்ரு செய்யக்கூடிய நாவு, மற்றும் உலக மார்க்க விவகாரங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஸாலிஹான மனைவி. இவைதான் மனிதன் வைத்திருக்கக்கூடிய சிறந்த பொக்கிஷங்கள்."

சஹீஹ் அல்-ஜாமி '4409 | ஷேக் அல்பானி | ஸஹீஹ்


369. இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் கண்ணீர் விட்டு அழுபவர் அல்ல, 

மாறாக, உண்மையில் அல்லாஹ்வுக்கு பயப்படுபவர், 

(ஹராமான) விரும்பியதைச் செய்யக்கூடிய திறன் இருக்கும்போது அதைத் துறப்பவர்."

நூல்: மஜ்மு அல்-ரஸாயில், 1/163


370. இமாம் பாகவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"என் தாத்தா என்னிடம் கூறினார் 

நாற்பது ஆண்டுகளாக, 

நான் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் குர்ஆனை ஓதி முடித்துவிட்டேன்."

நூல்: சியார் ஆலம் அந்-நுபாலா தொகுப்பு -11, பக்கம் - 484


371. இப்னு அப்பாஸ்  رضي الله عنه அவர்கள் கூறினார்கள்: 

"ஒவ்வொரு ஆன்மாவும் மறுமை நாளில் தன்னைத் தானே குற்றம் சொல்லும். 

நன்மை செய்பவன் தன் நற்செயல்கள் பெருகவில்லையே என்று வருந்துவான், 

பாவம் செய்தவன் தன் பாவங்களிலிருந்து வருந்தவில்லையே என்று வருந்துவான்."

إغاثة اللهفان من مصائد الشيطان 105


372. ஸஹாபி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

எவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை பிரித்து வழங்கியுள்ளானோ அதைபோன்று ஒழுக்க மாண்புகளையும் பிரித்து வழங்கியுள்ளான்.

நூல்: ஸஹீஹுத் தர்கீப்: 1571


373. இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

கவலையாக இருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி)  அவர்களை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள்.

 அப்போது கூறினார்கள்: 

அதிகமாக கவலை கொள்ளாதீர்! 

உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும், 

உனக்கு வழங்கப்பட்ட ரிஸ்க் உன்னை வந்தடையும்.

நூல்: ஷஅபுல் ஈமான்: 1188


374. ஷெய்க் அப்துல் அஜிஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"பாவங்கள் உள்ளம், உடல் மற்றும் சமுதாயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன, 

மேலும் அவை அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனையையும் இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கின்றன. 

இந்த மோசமான விளைவுகள் மற்றும் தண்டனை பற்றிய விவரங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது."

நூல்: மஜ்மூ அல்-ஃபதாவா இப்னு பாஸ், தொகுப்பு: 9,  பக்கம் - 159


375. ஷெய்க் இப்னுல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"ஒருவர் குர்ஆனைப் பற்றிய அறிவை அதிகரிக்கும்போதெல்லாம் அல்லாஹ்வின் மீதுள்ள பயம் அதிகரிக்கிறது."

تفسير الفاتحة والبقرة ٢\٣٦١


376. சுஃப்யான் பின் உயாய்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"தன்னை அறிந்தவன் புகழ்ச்சியால் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை."

الجامع لأخلاق الراوي ص ١٤٠


377. உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் கூறினார்கள்:

“உங்கள் மறுமையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் உலக வாழ்க்கையை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள்,

உங்கள் பொது வாழ்க்கையை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்”

நூல்: கிதாப் அல்-இக்லாஸ்-  50


378. இமாம் யஹ்யா பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

யார் தன் செல்வம் குறைந்து விட்டதால் கவலை கொள்கிறாரோ அவரை கண்டு நான் ஆச்சரியமடையகிறேன். 

எப்படி அவர் தன் வாழ்நாள் குறைவதை குறித்து கவலை கொள்ளாதிருக்கிறார்.

الفوائد والأخبار والحكايات لابن حمكان : (149)


379. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

யார் உன்னை திருமணம் அல்லாத (அதற்கு முன் நடத்தப்படும் சடங்குகளுக்கு) அழைக்கின்றாரோ அவர் இஸ்லாம் அல்லாததன் பக்கம் உன்னை அழைக்கிறார்.

நூல்: அல்முக்னீ:7/334


380. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஃமின் தன் சகோதரனுக்கு செய்யும் துஆ. 

அதன் மூலம் பிராத்திப்பாரே அவருக்கும் யாருக்காக பிராத்திப்பாரோ அவருக்கும் பலன் அடைவார்கள்.

مجموع الفتاوى [۱/۱۳۳]


381. அப்துர்ரஹ்மான் அல்-முஸானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் 

நாங்கள் கூறுவோம்:

"மஸ்ஜித் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாக்கப்பட்ட கோட்டை!"

நூல்: அல் முஸன்னாஃப் இப்னு அபி ஷைபா: 34613


382. ஒரு மனிதர் சல்மான் அல்-ஃபாரிஸி (ரலி) அவர்களிடம் "எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார்கள்."

“பேசாதே” என்றார்.

“பேசாமல் மக்கள் மத்தியில் என்னால் வாழ முடியாது” என்றார் அந்த மனிதர்.

“நீங்கள் பேசினால் உண்மையைப் பேசுங்கள் அல்லது அமைதியாக இருங்கள்” என்றார்.

جامع العلوم والحكم (١\٣٤٠)


383. அல் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

 "அதிகமாக கேலி செய்வது ஒருவரின் ஆண்மையைக் குறைக்கிறது"

المجالسة وجواهر العلم ٢\٣٣٣


384. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"நீங்கள் ஒரு பாவம் செய்ய நினைத்தால்,

நீங்கள் ஒரு ஜனாஸாவாக கப்ரில் வைக்கப்படும் நாளை நினைவில் கொள்ளுங்கள்."

நூல்: அல் தஃப்ஸிரா (277)


385. இமாம் இப்ராஹீம் பின் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் பொருத்தம் இல்லாத விஷயத்திலுருந்து தன்னையும் தன் நேரங்களையும் வீணடிப்பதை விட்டு காத்துக் கொள்கிறாரோ, 

அல்லாஹ் அவருடைய தீனையும் துன்யாவையும் பாதுகாப்பான்.

الزهد الكبير للبيهقي - (۲۹۸)


386. இப்னுல் கையீம் ரஹ் அவர்கள் கூறினார்கள் 

"ஆணவக்காரர்களின் தஸ்பீஹை விட பாவிகளின் (மனம் திருந்தி பாவமன்னிப்புக் கேட்டு அழும்) அழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது."

நூல்: மதாரிஸ் அஸ்-ஸாலிகின் | 1/177-178


387. அகமது பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் .

"நீங்கள் எங்கு சென்றாலும் அல்லாஹ்வின் பயத்தை எடுத்துச் செல்லுங்கள், 

மறுமையை நோக்கி உங்கள் கண்களை வைத்திருங்கள்."

நூல்: தஹபி சியார் ஆலம் அல் நுபாலா 


388. ரபீ'அ(ரஹ்) அவர்கள் ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார் அவரிடம் கேட்கப்பட்டது: 

உங்களை அழ வைத்தது எது?

கூறினார்(ரஹ்): 

வெளிப்படையான ரியா-வும், மறைந்திருக்கும் மன இச்சையும்.

நூல்: அல்ஹில்யா: 3/259


389. இமாம் இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

"(அவர் மனந்திரும்பிய) பாவத்திற்காக உங்கள் சகோதரனை நீங்கள் அவமானப்படுத்துவது அதைவிட பெரிய பாவமாகும்."

مدارج السالكين


390. இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி, 

உங்கள் பாவங்களிலிருந்து வருந்தி, 

அவனிடம் மன்னிப்புக் கோரினால், 

உங்களை யாராலும் வெல்ல முடியாது."

مجموعة الفتاوى ١٧٨/١


391. சலமா இப்னு தினார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

"இரண்டு விஷயங்களை நீங்கள் அறிந்தால், 

நீங்கள் உலக வாழ்க்கையையும் மறுமையையும் அடைவீர்கள்!"

அதில் கேட்கப்பட்டது: அவை என்ன?

அவர் சொன்னார்:

"நீங்கள் விரும்பாததை அல்லாஹ் நேசித்தால் நீங்கள் சகித்துக்கொள்வீர்கள்,

மேலும் நீங்கள் விரும்புவதை அல்லாஹ் வெறுத்தால் விட்டுவிடுவீர்கள்!"

நூல் : சியார் ஆலம் அல் நுபாலா: 6/98


392. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிட்டுள்ளான், 

ஏனென்றால் அது தூய்மையான இதயத்திற்கான பாதை."
تلبيس إبليس صحفة ٣٨٦


393. இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

உள்ளம் கலங்கி,

கவலைப்பட்டால்,

அல்லாஹ்வை நினைவு கூர்வதைத் தவிர (திக்ர்) ஆறுதல் அடைய எதுவும் இல்லை.

நூல்: மதாரிஸ் அஸ் ஸாலிஹீன், 3/72


394. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்த (தாய்) மீது உங்கள் நாவின் கூர்மையை பயன்படுத்தாதீர்கள்.

أخبار الدولة العباسية 1/91


395. அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் அந்த பெண்ணிடம் முதலில் விசாரிக்கப்படுவது அவளுடைய தொழுகை, 

பிறகு அவள் கணவனைப் பற்றி, 

அவள் எப்படி நடந்துகொண்டாள் என்று விசாரிக்கப்படுவாள்.

இப்னு கஸீர் -  774, 
அல் பிதாயா வன் நிஹாயா, 2/54


396. கேள்வி: ஒருவர் எவ்வளவு காலம் அறிவைத் தேட வேண்டும்?

அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் ரஹ் அவர்கள் கூறினார்கள்: 

மரணம் வரை, இன் ஷா அல்லாஹ்.

நூல்: ஜாமி' பயான் அல்-'இல்ம் வ ஃபத்லிஹி : 428


397. இமாம் பர்பஹாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

மார்க்க விஷயங்களில் செய்யப்படும் சிறிய புதுமைகளிலும் (கூட) எச்சரிக்கையாக இரு! 

நிச்சயமாக சிறிய பித்அத்கள் தான் (இறுதியில்) பெரியதாக திரும்புகிறது.

நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா: 15/91


398. அப்துர்ரஹ்மான் அஸ்ஸ’அதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நன்றி செலுத்தும் வகைகளில் தலைசிறந்தது, 

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வதாகும்.

المواهب الربانية (ص۱۳۱)


399. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்கள் மனைவி உங்கள் உணவில் இருந்து உண்பது உங்களுக்கு (தர்மம்) சதகாவாகும்."
நூல்: ஸஹீஹ் முஸ்லிம்

அறிஞர் ஷெய்க் முஹம்மது பின் சையீத் ரஸ்லான் (ஹஹுஹ்) அவர்கள் கூறினார்கள்:

"உங்கள் மனைவி அதிகமாக சாப்பிட்டால் மகிழ்ச்சியான செய்தி, 

உங்கள் சதகா (அவள் சாப்பிடும் அளவுக்கு) அதிகரிக்கும்."

நூல்: ஷரஹ் அல் ஆதாப் அல் முஃப்ரத், தொகுதி. 3, பக். 2289


400. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பெரும் பொறுமையும், 

மகத்தான மன்னிப்பபும் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்,

அடியார்களில் பாவத்தினால் வானங்களும் பூமியும் திட்டமாக உலுக்கப்பட்டிருக்கும்.

நூல்: அத்தாஉ வத்தவாஉ: 88


401. ஸுஹைப் பின் சினான் அர்ரூமி (ரஹி) அவர்கள் 

இரவில் அதிக நேரம் விழித்திருப்பார்கள். 

இதனால் அவர்களுடைய துணைவியார் ஸுஹைப் (ரஹி) அவர்களைக் கடிந்துகொள்வார்கள்.

ஒரு முறை அவர்கள் தம் துணைவியாரிடம், 

"ஓய்வுக்காக இரவை அல்லாஹ் படைத்துள்ளான்; 

ஆனால், ஸுஹைபுக்கு ஓய்வில்லை. 

ஸுஹைப் சொர்க்கத்தை
நினைத்தால் ஆர்வம் மேம்படுகிறது 
(கண்விழித்து வழிபாடு செய்கிறார்); 

நரகத்தை நினைத்தால் அவரது தூக்கம் பறந்துவிடுகிறது" என்று சொன்னார்கள். 

நூல்: இப்னு கஸீர்


402. யஹ்யா பின் கதீர் ரஹ் அவர்கள் கூறினார்கள்: 

 "ஒரு மனிதன் ஹலாலுடன் நோன்பு நோற்கிறான்,

தன் சகோதரனின் இறைச்சியை தின்று ஹராமுடன் முறித்துக் கொள்கிறான்."

‏حلية الأولياء ٦٩


403. ஆலோசிப்பது தெளிவை தருகிறது..

அறிவுகள் அறிவுகளுக்கு உதவுகின்றன..

இறைத்தூதர் கூறினார்கள் 'பிறரோடு ஆலோசியுங்கள்’

- ரூமி (ரஹ்)


404. இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஃமினின் பண்புகளில் சிறந்தது,

(தண்டிக்க சக்தி பெற்றிருந்தும்) மன்னிப்பது.

நூல்: அல்ஆதாபுஷ் ஷர்இய்யா 1/71


405. இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

என் சகோதரனின் மகனே!
கல்வியை கற்றுக்கொள்ளும் முன் ஒழுக்கத்தை கற்றுக்கொள்!

நூல்: ஹில்யதுல் அவ்லியா: 6/330


406. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ் சுப்ஹானஹு (தன் பாவத்திற்கு வருந்தி) பாவமன்னிப்பு கேட்பவரை தண்டிக்க மாட்டான்!

நூல்: மஜ்மூஉல் ஃபதாவா: 8/163


407. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"பிள்ளை வளர்ப்பு என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான விஷயம்,

யவ்ம் அல்-கியாமாவில்,

குழந்தையின் கீழ்ப்படிதலைப் பற்றி பெற்றோரிடம் கேட்பதற்கு முன், 

பெற்றோரின் செயல்திறனைப் பற்றி அல்லாஹ் குழந்தையிடம் கேட்பான்."

நூல்: துஹ்ஃபத்துல் மவ்தூத் பீ அஹ்காமில் 
மவ்லூத், பக். 336


408. இமாம் அல் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

தன் மனைவியும் பிள்ளைகளும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதை காண்பதைத் தவிர வேறு எந்த ஒரு விஷயமும் முஃமினுக்கு கண்குளர்ச்சி தராது.

நூல்: தஃப்ஸீர் அல்பகவீ: 9/66


409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் குர்ஆனையும் அதில் உள்ளவற்றைப் படிப்பவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்; 

அவன் இம்மையில் வழிதவற மாட்டான், 

மறுமையில் விரக்தியடைய மாட்டான்."

مفتاح دار السعادة ٥٨/١


410. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

“அல்லாஹ் உன்னுடன் இருக்கும்போது, ​​

கவலைகள், துக்கம் மற்றும் சோகம் அனைத்தும் மறைந்துவிடும்; 

அல்லாஹ் அடிமையுடன் இருக்கும்போது எந்த துக்கமும் நிலைத்திருக்க முடியாது.

நூல்: அத்-தா’வா அத்-தாவா’ 269


411. இமாம் ஸுஃப்யான் அஸ்-ஸௌரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

யார் சோதனையை அருளாகவும்,

சௌகரியத்தை முஸீபத்தாகவும் கருதவில்லையோ அவர் அறிவாளியல்ல!

நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா: 7/266


412. தாபிஉ ஸலாமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

உன் பாவத்தை எப்படி (மக்கள் பார்வையிலிருந்து) மறைத்துக் கொள்கின்றாயோ அதேபோன்று உன் நன்மையையும் மறைத்துக் கொள்! 

உன் அமல்களை கண்டு நீயே ஆச்சரியப்பட்டு கொள்ளாதே! 

ஏனெனில் உனக்கு தெரியாது நீ (நரகம் செல்லும்) துர்பாக்கியசாலியா அல்லது (சுவனம் செல்லும்) பாக்கியசாலியா என்று.

நூல்: ஷு'அபுல் ஈமான் 6412


413. ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமின் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

கர்ப்பம், பிரசவம், பாலூட்டுதல் போன்ற எந்த வலியையும் துன்பத்தையும் தாங்கிக்கொள்வதால், 

அவள் அந்தஸ்து உயர்த்தப்படுவாள், 

அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும்.

நூல்:  ஃபதாவா நூர் அலா அத்-துர்ப், தொகுப்பு 2, பக். 22


414. ஷெய்க் முக்பில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

"அல்லாஹ்வின் ஒரு எச்சரிக்கையாகவும், 

முடிவாகவும்,

முன்னறிவிப்பாகவும், 

மக்களின் பாவங்களின் விளைவாகவும் நிலநடுக்கம் ஏற்படலாம். 

அதை நேரில் பார்த்தவர்களுக்கும், 

உயிருடன் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையாக நிலநடுக்கம் ஏற்படலாம்."

நூல்: அல்-மஹ்ராஜ் மினால் ஃபிதான்’, ப. 161


415. இமாமுஷ் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

யார் கல்வியை நேசிக்கவில்லையோ! 

அதில் அவருக்கு ஒரு நலவும் கிடையாது

நூல்: தாரீக் திமிஷ்க்: 15/407


416. "நமது காலத்தில்,

அந்நியர்கள் என்பது சுன்னாவைக் கடைப்பிடிப்பவர்களும், 

அதில் உறுதியாக இருப்பவர்களும், 

புதுமைகளை உறுதியாகத் தவிர்ப்பவர்களும், 

கடந்த கால இமாம்களின் விளக்கங்களைப் பின்பற்றுபவர்களும், 

அவர்கள் வாழும் காலத்தின் யதார்த்தத்தை அறிந்தவர்களும்

அவர்கள் - தங்களைத் தாங்களே சுத்திகரிப்பதற்காக அர்ப்பணித்துக்கொள்கிறார்கள்,

கீழ்ப்படியாமையிலிருந்து தங்கள் அவயவங்களைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள், 

தங்களுக்குப் பொருந்தாத எதையும் விட்டுவிடுகிறார்கள், 

தங்கள் சொந்த தவறுகளைத் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

நூல்: அந்நியர்களின் பயணம்  - இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) & அபு பக்கர் அல்-அஜுரி (ரஹ்) 


417. இப்ராஹிம் அன்-நக்கி (ரஹ்) அவர்கள் ஒரு வியாழன் அன்று தனது மனைவியிடம் அழுவார்கள், 

அவர்களும் (மனைவியும்) அவரிடம் அழுவாள், அவர்கள் கூறினார்கள்:

"இன்று நமது செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன!"

நூல்: லதாயிஃப் அல்-மஆரிஃப்: 228


418. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹ் அவர்கள் கூறினார்கள் :

"அல்லாஹ்விடம் மனந்திரும்பவோ அல்லது பாவங்களுக்காக மன்னிப்பு தேடவோ தேவையில்லை என்று நினைக்க யாருக்கும் உரிமை இல்லை,

மாறாக ஒவ்வொரு நபருக்கும் எல்லா நேரங்களிலும் அது தேவை."

நூல்: மஜ்மு அல் ஃபதாவா  255/11


419. இமாம் தஹபீ (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் :

குழப்பங்கள் ஏற்படும்போது இறைத் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை இறுக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.

மெளனத்தை அவசியமாக்கிக்கொள்ளுங்கள்.

நூல் : ஸியரு அஃலாமி அந் - நுபலாஇ லி தஹபீ -141 / 20




Previous Post Next Post