துஆ சிறியதுதான்! ஆனால், அதன் உள்ளடக்கமோ மிகப்பெரியதும் பெறுமதியானதுமாகும்


*« ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار »* (البقرة: الآية-  ٢٠١ )

*"எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும், மறுமையில் நல்லதையும் தந்தருள்வாயாக! மேலும், நரக வேதனையை விட்டும் எம்மை நீ பாதுகாப்பாயாக!*                (அல்குர்ஆன், 02: 201) என்ற இந்த துஆவை ரசூல் (ஸல்) அவர்கள் ஏன் அதிகமாக ஓதி வருபவர்களாக இருந்தார்கள்? என்பதை *அல்லாமா நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்)* அவர்கள் கீழ்வருமாறு விளக்கப்படுத்துகிறார்கள்:

*🔹நபியவர்கள் கேட்ட துஆவில் வந்திருக்கக்கூடிய உலக நலவு என்பது:* “பயனுள்ள கல்வி, நற்செயல், உடல்- உள நிம்மதி, உணவு, குடிபானம், உடை, உறையுள், திருமணம் போன்ற எல்லா நலவுகளையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய ஓர் பிரயோகமாகும்!”. அதாவது: “நிலைமைகள் சீரும் சிறப்புமாக இருத்தல், குறை அனைத்திலிருந்தும் ஈடேற்றம் பெற்றிருத்தல் என்பவற்றை உள்ளடக்கியிருக்கக்கூடியதோர் வார்த்தைப் பிரயோகமாகும்!”.

*🔹 நபியவர்கள் கேட்ட துஆவில் வந்திருக்கக்கூடிய மறுமை நலவு என்பது:* “அல்லாஹ் தனது நேசர்களுக்காகத் தனது கண்ணியமான சுவர்க்க வீட்டில் தயார் செய்து வைத்திருக்கக்கூடிய எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத,  எந்த உள்ளமும் கற்பனைகூடச் செய்து பார்த்திராத அனைத்து வகையான இன்பங்களையும் குறிக்கும்!”.

             உலகம் மற்றும் மறுமை நலவின் பூரணத்துவமே நரக வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாவங்கள் மற்றும் தவறுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும்தான்! எனவேதான், *“ நரக வேதனையை விட்டும் எம்மை நீ பாதுகாப்பாயாக!”* என அந்த துஆவில் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.

           ஆதலால் இந்த துஆ, அனைத்து வகையான நன்மைகளையும், புகழுக்குரிய வேண்டுதல்களையும் உள்ளடக்கியிருப்பதோடு எல்லா வகையான தீங்கையும் வேதனையையும் தடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது! இதன் காரணமாகத்தான் இந்த துஆவை நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஓதக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்!.

{ நூல்: 'அல்மவாஹிபுbர் ரப்bபானிய்யா' லிஸ்ஸஃதீ, பக்கம்: 56 }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               قال العلّامة عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-

        لماذا كان يدعو النبي صلى الله عليه وسلم بهذا الدعاء كثيرا؟ *« ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار »*

*حسنة الدنيا:* "إسم جامع للعلم النافع والعمل الصالح، وراحة القلب والجسم، والرزق الحلال الطيب - من كل مأكل ومشرب وملبس ومنكح ومسكن ونحوها - ، فهي إسم جامع لحسن الأحوال، وسلامتها من كل نقص".

*وأما حسنة الآخرة:* "فهي كل ما أعدّه الله لأوليائه في دار كرامته مما لا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر".

          ولما كانت حسنة الدنيا والآخرة تمامها وكمالها الحفظ من عذاب النار، والحفظ من أسبابه - وهو الذنوب والمعاصي -  قالوا: *« وقنا عذاب النار »*.

           فاشتمل هذا الدعاء على كل خير ومطلوب محمود، ودفع كل شر وعذاب. ولهذا كان النبي صلى الله عليه وسلم يدعو بهذا الدعاء كثيرا .

{ المواهب الربانية للسعدي، ص - ٥٦ }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم