இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மக்காவுக்கு பயணம் சென்ற வேளையில் (கஃபாவில் வைத்து) அங்குள்ள அறிஞர்களில் ஒருவரைக் கண்டார். வயது முதிர்ந்தவராக இருந்த அவர் கதிரையில் அமர்ந்தவாறு மக்களுக்குப் பாடம் நடாத்திக்கொண்டிருந்தார். அவரின் பேச்சு இமாம் முஹம்மத் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; அவரும் இமாமவர்களை ஆச்சரியப்படுத்திவிட்டார். மக்காவாசிகளிடம் நன்மதிப்பைப் பெற்று அவர்களிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவராக அந்த அறிஞர் காணப்பட்டார். தனது கதிரையிலிருந்து அவர் எழும்ப நாடியபோது, (யா அல்லாஹ்! என்று அழைப்பதற்குப் பதிலாக) “யா கஃபதல்லாஹ்!” (கஃபதுல்லாவே!) என்று உதவிக்காக அழைத்தார். இது, பிரச்சினைக்குரிய விடயமாகும். காரணம், இவ்வார்த்தையின் மூலம் தனக்குத் தெரியாமலேயே அல்லாஹ்வுக்கு அவர் இணைவைத்து விட்டார்.
இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் புத்திசாதுர்முடையவர்களாக இருந்தார்கள். (தொழுகைக்கான அழைப்பான) அதானின்போது பாடமும் அப்போது முடிவடைந்திருந்தது. இதன்போது கதிரையிலிருந்து இறங்கி வந்த அவ்வறிஞர், (தொழுகைக்குத் தயார் என்பதை வலியுறுத்தும்) 'இகாமத்' சொல்லப்படுவதை எதிர்பார்த்து கீழே அமர்ந்துகொண்டிருந்தார். அவரிடம் சென்று அவருக்கு சலாம் கூறி, அவரோடு உரையாடினார்கள் இமாம் முஹம்மத் அவர்கள். அப்போது அவ்வறிஞர் இமாம் முஹம்மதைப் பார்த்து, “நீங்கள் எங்கே?” என்று கேட்டார்.
“நான் நஜ்த் பிரதேசம்” என்று இமாம் முஹம்மத் கூறிவிட்டு, “அறிஞரே! உங்கள் விரிவுரை என்னை ஆச்சரியப்படுத்தி விட்டது. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! நீங்கள் செய்த உங்கள் போதனை நல்லவர் ஒருவருடைய, அறிஞர் ஒருவருடைய நல்ல போதனையாகும். அல்குர்ஆனிலிருந்து சில அத்தியாயங்களை உங்களிடம் ஓதிக்காட்ட நான் விரும்புகிறேன். ஏனெனில், இது விடயத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவன் நான்!” என்று கூறினார்கள். பின்னர் அல்குர்ஆனின் கடைசி அத்தியாயமான 114- ம் அத்தியாயம், பிறகு 113, 112, 111, 110, 109, 108, 107 ஆகிய அத்தியாயங்களை இமாம் முஹம்மத் அவர்கள் அந்த அறிஞரிடம் ஓதிக்காட்டி விட்டு, 106- ம் அத்தியாயமான لإيلاف قريش ௭ன்று ஆரம்பித்து வரும் 'அல்குரைஷ்' அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த அத்தியாயத்தில் வரக்கூடிய فليعبدوا ربّ هذا البيت (பொருள்: “கஃபா எனும் இந்த வீட்டின் இரட்சகனை அவர்கள் வணங்கட்டும்”) என்ற வசனத்தில் உள்ள “இரட்சகன்” எனும் பொருள் தரும் ربّ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, فليعبدوا هذا البيت (பொருள்: “கஃபா எனும் இந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும்” என்று பிழையான அர்த்தத்தில்) ஓதினார்கள்.
இதைக்கேட்டதும் இமாம் முஹம்மத் அவர்களுக்கு மறுப்புக் கொடுத்த அந்த அறிஞர், فليعبدوا ربّ هذا البيت என்று ஓதும்படியாகக் கூறினார். அதற்கு இமாம் முஹம்மத் அவர்கள், “நான் ஓதிக்காட்டிய படிதான் கற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அவ்வறிஞர், “அப்படி இருக்க முடியாது; அவ்வீட்டை அவர்கள் வணங்கினால் அல்லாஹ்வுக்கு அவர்கள் இணை வைத்துவிட்டார்கள்; இணை வைக்கும்படி அல்லாஹ் ஏவவில்லையே!” என்று சொன்னார்கள். “சரியானது என்ன?” என்று இமாம் முஹம்மத் கேட்க, “(கஃபா எனும் அவ்வீட்டின் இரட்சகனை அவர்கள் வணங்கட்டும்) فليعبدوا ربّ هذا البيت என்று ஓதுவதுதான் சரியானது” என அந்த அறிஞர் கூறினார். பின்னர், *“என்னை அழையுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிப்பேன் என்று உங்கள் இரட்சகன் கூறுகிறான்”*(40:60) என்ற அல்குர்ஆன் வசனத்தை இமாம் முஹம்மதுக்கு அவர் ஓதிக்காட்டி விட்டு, “கஃபா எனும் அல்லாஹ்வின் வீட்டை அழைக்கும்படி அல்லாஹ் இங்கு கூறவில்லை; எனவே, உதவிக்காக அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அழைக்கப்படக் கூடாது” என்று போதித்தார்கள்.
இதைக்கேட்ட இமாம் முஹம்மத், “அறிஞர் அவர்களே! கதிரையிலிருந்து நீங்கள் எழும்ப முற்பட்டபோது 'கஃபதுல்லாவே!' என்று உதவிக்காக நீங்கள் அழைத்ததை நான் செவிமடுத்தேன்” என்று சொன்னார்கள். அப்போது தவறை உணர்ந்து கொண்ட அவ்வறிஞர் இமாம் முஹம்மதிடம், “மார்க்கத்தில் விளக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு திறந்து தருவானாக; நல்ல கூலியையும் அவன் உங்களுக்கு வழங்குவானாக!” என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.
( நூல்: 'ஷர்ஹுல் காfபியா அஷ்ஷாfபியா', 04/410 )
قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ إن الشيخ محمد بن عبدالوهاب رحمه الله حين سافر إلى مكة رأى عالما من علمائها على كرسي يحدّث النّاس، فأعجبه حديثه وأعجب به، فلمّا أراد أن يقوم من الكرسي وهو شيخ كبير معتبر عند أهل مكة قال: "يا كعبة الله!". فهذه مشكلة؛ لأنه أشرك وهو لا يدري.
وكان الشيخ محمد بن عبدالوهاب رحمه الله ذكيّا، وكان الدرس قد انتهى عند الأذان، ونزل هذا العلم من على الكرسي وجلس ينتظر الإقامة. قال له الشيخ محمد بعد أن سلّم عليه، وسأله: من أين أنت؟ فقال: أنا من نجد، لكن أنا أعجبني كلامك، جزاك الله خيرا، هذا كلام طيّب وعالم، وأنا أريد أن أقرأ عليك شيئا من القرآن لأنّني مبتدئ. فقرأ من آخر القرآن « قل أعوذ برب الناس »، و « قل أعوذ برب الفلق »، و « قل هو الله أحد »، و « وتبّت »، و « إذا جاء نصر الله والفتح »، و « الكافرون، والكوثر، والماعون » . فلمّا وصل إلى سورة قريش قرأ « لإيلاف قريش 🔅إيلافهم رحلة الشّتاء والصّيف🔅 فليعبدوا ربّ هذا البيت🔅 الذي أطعمهم من جوع وآمنهم من خوف ».
قال: « فليعبدوا البيت »، فردّ عليه الشيخ قال: « فليعبدوا ربّ هذا البيت »، قال: هكذا تعلّمت، قال: لا يمكن! لو عبدوا البيت لأشركوا، والله لم يأمر بالشرك. فقال: مالصواب؟ قال: الصواب « فليعبدوا *ربّ* هذا البيت »، ثم قال له: وقال الله تعالى *« وقال ربّكم ادعوني أستجب لكم »* (سورة المؤمن، الآية - ٦٠). ولم يقل: أدعوا الكعبة أو البيت؛ لأنه لا أحد يدعى إلا الله.
فقال له: أنا سمعتك يا شيخنا لمّا أردت أن تقوم من الكرسي قلت: "يا كعبة الله!"، فقال له: "فتح الله عليك، وجزاك الله خيرا" }.
[المصدر: شرح الكافية الشافية، ٤/٤١٠ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா