அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
*“உங்கள் மீது சாந்தி (மற்றும் பாதுகாப்பு) உண்டாவதாக!”* என்ற அர்த்தத்தையுடைய *السلام عليكم* எனும் முகமன் வார்த்தையை நீ ஒருவருக்குக் கூறினால், “அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவரை அல்லாஹ் பாதுகாத்து அவருக்கு சாந்தியளிக்க வேண்டும் என அவருக்காக நீ பிரார்த்திக்கின்றாய் என்று அர்த்தமாகும்!”. அதாவது, “பைத்தியம் என்ற நோயிலிருந்து அல்லாஹ் அவரைப் பாதுகாக்க வேண்டும்; மக்களின் தீங்கிலிருந்து அவரை அவன் பாதுகாக்க வேண்டும்; பாவங்களிலிருந்தும், உள நோய்களிலிருந்தும் அவரை அவன் பாதுகாக்க வேண்டும்; நரகத்திலிருந்து அவரை அவன் பாதுகாக்க வேண்டும் என்பதும் அதன் அர்த்தமாகும்!”. இப்படி, ஆபத்துக்கள் அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்படி அந்த முஸ்லிமுக்காக பிரார்த்தனை செய்தல் என்ற பொதுவான அர்த்தத்தை உள்ளடக்கியிருப்பதுதான் இந்த «அஸ்ஸலாமு அலைக்கும்» எனும் முகமன் வார்த்தையாகும்!”.
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 04/380 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*[ فإذا قلت لشخص: "السلام عليك" فهذا يعني: أنك تدعو له بأن الله يسلمه من كل آفة؛ يسلمه من المرض من الجنون، يسلمه من شرّ الناس، يسلمه من المعاصي وأمراض القلوب، يسلمه من النار!. فهو لفظ عام معناه الدعاء للمسلم عليه بالسلامة من كل آفة ]*
{ شرح رياض الصالحين، ٤/٣٨٠ }
➖➖👇👇👇👇👇👇➖➖
❇👉🏿 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
*ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் (பண்புகளில்) மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்!”* என்று பதிலளித்தார்கள்.
{ நூல்கள்: புகாரி - 6236, முஸ்லிம் - 63 }
🔹➖➖➖➖➖➖➖➖🔹
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா