_இமாம் யூனுஸ் அஸ்ஸதபீf (ரஹ்) கூறுகின்றார்கள்:_ -
"இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்களை விட நல்ல புத்திசாதுரியமிக்க ஒருவரை நான் கண்டதில்லை! ஒரு நாள், மார்க்க சட்டப் பிரச்சினையொன்றில் அவரோடு நான் வாதிட்டேன்; பின்னர் இருவரும் பிரிந்து விட்டோம்!
அச்சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்த அவர் என் கையைப் பிடித்து, *"மார்க்க சட்டப் பிரச்சினை விடயத்தில் எம்மிடம் உடன்பாடு இல்லாவிட்டாலும் சகோதரர்களாகவே இருந்து கொள்ள ஏன் எம்மால் முடியாதா?!"*எனத் தெரிவித்தார்கள்.
_{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா', 10/16 }_
🌿➖➖➖➖➖➖➖➖🌿
_قال الإمام يونس الصدفي رحمه الله تعالى:-_
"ما رأيت أعقل من الشافعي، ناظرته يوما في مسألة، ثم افترقنا.
ولقيني فأخذ بيدي، ثم قال:
*{ألا يستقيم أن نكون إخوانا وإن لم نتفق في مسألة؟!"*
{ سير أعلام النبلاء، ١٠/١٦ }
🌿➖➖➖➖➖➖➖➖🌿
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா