உங்களுக்குக்காகத் திறந்திருக்கும் நன்மையின் வாசலை அநியாயமாக மூடிவிடாதீர்கள்


           இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

            எமக்கு முன் வாழ்ந்த சலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் கூறுகின்றார்:-

         *“ நன்மை ஒன்றைச் செய்வதற்கான வாசல் உங்களில் ஒருவருக்குத் திறக்கப்பட்டிருந்தால் அதன் பக்கம் அவர் விரைந்து செல்லட்டும்; ஏனெனில், அது அவரை விட்டும்  எப்போது மூடப்படும் என்று அவருக்குத் தெரியாது!”*

{ நூல்: 'கிதாபுஸ் ஸுஹ்த்' லில் இமாம் அஹ்மத், பக்கம்: 311 }


            قال أحد السلف:- *[ إذا فتح أحدكم باب خير فليسرع إليه؛ فإنه لايدري متى يغلق عنه! ]* 

{ كتاب الزهد للإمام أحمد ، ص - ٣١١ }

➖➖➖➖➖➖➖➖➖➖

 ❇👉🏿 இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“முஸ்லிம் சகோதரர் ஒருவரின் தேவையொன்றை நான் நிறைவேற்றிக் கொடுப்பது, ஆயிரம் ரக்அத்துகள் நான் தொழுவதை விட எனக்குச் சிறந்ததாகும்!”* 

{ நூல்: 'கழாஉல் ஹவாயிஜ்' லிப்னி அபித்துன்யா, பக்கம் : 48 }


             قال الإمام الحسن البصري رحمه الله تعالى:-

           *[ لأن أقضي لمسلم حاجة أحب إليّ من أن أصلّي ألف ركعة ]*

{ قضاء الحوائج لابن أبي الدنيا، ص - ٤٨ }

➖➖👇👇👇👇👇👇➖➖

👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: *“இத்தகையோர்தாம் நன்மைகள் செய்வதில் விரைவோராவர். மேலும், அவர்களே அதற்காக முந்திக்கொள்வோரும் ஆவர்”.* (அல்குர்ஆன், 23:61)

        *“ஆகவே, நன்மைககளில் நீங்கள் முந்திக்கொள்ளுங்கள்!”* (அல்குர்ஆன், 02:148)

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم