இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“(இஸ்லாமிய சமூகத்திற்கு) உள்ளேயும், வெளியேயும் தன் எதிரிகளால் தனக்கெதிராகத் தீட்டப்படுகின்ற சதிகள் குறித்து முஸ்லிம் பெண் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். *'பெண்கள் தினம்'* எனும் பெயரில் சீரழிக்கும் தம் சிந்தனைகளையும், தமது ஆசைகளையும் பரப்புவதற்காக வேண்டி முஸ்லிம் பெண்ணை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்புகின்றவர்களாலேயே இது மேற்கொள்ளப்படுகின்றது. *“பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் நீதம்”* என்ற கோஷங்களுக்குக் கீழாலேயே இவற்றையெல்லாம் அவர்கள் பரப்பி வருகின்றார்கள்.
இஸ்லாமியப் பெண்ணே! - நல்ல சிந்தனையை அல்லாஹ் உனக்குத் தருவானாக! - முஸ்லிம் பெண்ணுக்கு இவ்வுலக வாழ்க்கையில் நிறைய எதிரிகள் இருக்கின்றார்கள் என்ற இவ்விடயத்தில் கண்டிப்பாக நீ விழிப்புடன் இருக்க வேண்டும். முஸ்லிம் பெண்ணின் கண்ணியத்தை இல்லாதொழிக்கவும், அவளது கெளரவம், அவளின் வெற்றி, அவளது சுபீட்சம் ஆகியவற்றின் பாதையில் இடையூறை ஏற்படுத்தவும், இழிவு மற்றும் சீரழிவு என்ற துர்நாற்றத்தில் அவளைக் கொண்டுபோய் வீழ்த்தி விடவுமே அவர்கள் பாடுபட்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு முடியுமான அனைத்தையும் அந்த வழியில் அவர்கள் முன்வைக்கின்றார்கள். இந்த எதிரிகளில் முன்னணியில் வரக்கூடியவன்தான் அல்லாஹ்வின் எதிரியாகவும், அவனை விசுவாசம் கொண்ட அடியார்களின் எதிரியாகவும், மார்க்கத்தின் எதிரியாகவும் இருக்கின்ற ஷைத்தானாவான். அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாவான். எனவே, அவனை நீங்கள் விரோதியாகவே எடுத்துக்கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தாரை, நரகவாதிகளில் அவர்கள் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அழைக்கின்றான்”.* (அல்குர்ஆன், 35: 06)
முஸ்லிம் பெண் தனது நற்பண்புகளை விட்டும், தனது மார்க்கத்தின் ஒழுக்க நெறிகளை விட்டும், இம்மை - மறுமை ஆகிய இரண்டிலும் தனது கண்ணியத்திற்கும் வெற்றிக்கும் தேவைப்படுகின்ற காரணிகள் ஆகியவற்றை விட்டும் நீங்கியிருக்க வேண்டும் என்பதையே தமது நோக்கமாகவும் மிகப்பெரிய அபிலாசையாகவும் கொண்டிருக்கின்ற இந்த எதிரிகள் குறித்து மிகமிக எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும்! ”.
{ “பெண்களுக்கான உபதேசம்” என்ற தலைப்பிலான ஷெய்க் அவர்களின் கடட்டுரை ஒன்றிலிருந்து.......
முகநூலில் - bhadrat.khaier எனும் பக்கம் }
قال الشيخ عبدالرازق البدر حفظه الله تعالى:-
{ المرأة المسلمة يجب أن تعي ما يدسّ لها من مكائد من أعدائها في الداخل والخارج ممّن يريدون إستعمالها كأداة لبثّ شهواتهم وأفكارهم الهدامة باسم *"عيد المرأة"* ، والتي ينشرونها تحت شعارات حرية المرأة والمساواة والعدالة.
أختي المسلمة! عليك التّنبّه -وفّقك الله- إلى أن المسلمة لها في هذه الحياة أعداء كثر يسعون للإطاحة بكرامتها، وخلخلة سبيل عزّها وفلاحها وسعادتها، وإيقاعها في حمأة الرّذيلة والفساد. ويقدّمون في سبيل ذلك كل ما يستطيعون، ويأتي في مقدمة هؤلاء الأعداء الشيطان عدوّ الله وعدوّ الدّين وعدوّ عباده المؤمنين، قد قال الله تعالى: *«إنّ الشيطان لكم عدوّ فاتّخذوه عدوّا إنّما يدعو حزبه ليكونوا من أصحاب السّعير »* (سورة فاطر، الآية : ٦).
فالواجب الحذر كل الحذر من هؤلاء الأعداء الذين غايتهم وأكبر منيتهم أن تتحلّل المرأة المسلمة من أخلاقها وآداب دينها، وأسباب عزّها وفلاحها في الدنيا والآخرة }.
[ المصدر: من رسالة بعنوان "موعظة النساء" للشيخ عبدالرازق البدر ]
{ Facebook: Bhadrat.khaier }
🍑➖➖➖➖➖➖➖➖🍑
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா