🔅👉🏿 *“செல்வத்திலும் தோற்றத்திலும் தன்னைவிடச் சிறப்பிக்கப்பட்ட ஒருவரை உங்களில் ஒருவர் பார்த்தால், உடனே அவர் (அவற்றில்) தன்னைவிடக் கீழான நிலையில் இருப்பவரை (நினைத்துப்) பார்க்கட்டும்!”* என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: புகாரி - 6490)
இந்த ஹதீசுக்கு இமாம் இப்னு ஜரீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும், இன்னும் சிலரும் தருகின்ற விளக்கத்தை இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
“நன்மையான காரியங்களின் பல வகைகளை உள்ளடக்கியிருப்பதாக இந்த ஹதீஸ் காணப்படுகின்றது. ஏனெனில், இவ்வுலகில் தன்னைவிட மேலாக சிறப்பிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மனிதன் கண்டுவிட்டால் அவரைப் போன்று இருக்கவே அம்மனிதனின் மனம் வேண்டிக்கொண்டிருக்கும். அப்போது அவன், தன்னிடம் இருக்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடையை சிறிதாகவும் கேவலமாகவும் பார்ப்பான்; அத்தோடு, (வளங்களில் தன்னைவிட மேல் நிலையிருக்கும் மனிதரை விடவும்) தனக்கு அதிகம் கிடைக்க வேண்டும் என்று, அல்லது அவரிடம் இருக்கின்ற அளவுக்காவது தன்னிடம் இருக்க வேண்டும் என்று அவன் பேராசைப்படுவான்; பெரும்பாலான மனிதர்களிடம் இதுதான் இன்று இருந்துகொண்டிருக்கின்றது! ஆனால், உலக விவகாரங்களில் தன்னைவிடக் கீழாக இருப்போரை மனிதன் பார்ப்பானாக இருந்தால், தன்னிடம் இருக்கின்ற அல்லாஹ்வின் அருட்கொடை(யினது பெறுமதி அந்நேரம் அவனுக்குத் தெரிய வரும். உடனே அதற்காக அவன் நன்றி செலுத்துவான்; பணிவைக் கடைப்பிடிப்பான்; நல்ல விடயங்களையும் அவன் செய்துகொண்டு வருவான்!”.
{ நூல்: 'ஸஹீஹ் முஸ்லிம் பிb ஷர்ஹின் நவவீ ', 18/97 }
🔅عن أبي هريرة رضي الله عنه قال، قال رسول الله صلّى الله عليه وسلم: *« إذا نظر أحدكم إلى من فضّل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه »* ( أخرجه البخاري في صحيحه، رقم : ٦٤٩٠ )
يقول الإمام النووي رحمه الله تعالى: « قال إبن جرير وغيره: هذا حديث جامع لأنواع من الخير؛ لأن الإنسان إذا رأى من فضّل عليه في الدنيا طلبت نفسه مثل ذلك، واستصغر ما عنده من نعمة الله تعالى، وحرص على الإزدياد ليلحق بذلك أو يقاربه؛ هذا هو الموجود في غالب الناس. وأمّا إذا نظر في أمور الدنيا إلى من هو دونه فيها ظهرت له نعمة الله تعالى عليه؛ فشكرها، وتواضع، وفعل الخير ».
{ صحيح مسلم بشرح النووي، ١٨/٩٧ }
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத் (காஸிமி, மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா