அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதில் நம்பிக்கையிழக்காதீர்கள்


        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

      “பிரார்த்தனைக்கான பதில் தாமதமானாலும் அல்லாஹ்வின் அருளில் நீ நம்பிக்கையிழந்து விடாதே! காரணம், (பிரார்த்தனையின் பயனாக அல்லாஹ் தாமதப்படுத்தி வைத்திருக்கும்) அந்த நலவு எது? என்பது உனக்குத் தெரியாது. (தன்னிடம்) பிரார்த்திக்குமாறு உன்னை அல்லாஹ்  பணித்திருப்பது, உனக்குப் பதிலளிக்க அவன் விரும்புகிறான் என்பதற்காக வேண்டியே தவிர வேறெதற்காக வேண்டியும் அல்ல. அல்லாஹ் கூறுகிறான்: *“என்னை அழையுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிப்பேன் என உங்கள் இரட்சகன் கூறுகின்றான்”* (அல்குர்ஆன், 40:60)


          قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

          { ولا تقنط من رحمة الله ولو تأخرت إجابة الدعاء، فأنت لا تدري ما هو الخير؟ ما أمرك الله تعالى بالدعاء إلاّ وهو يريد أن يستجيب لك، كما قال تعالى: *«وقال ربّكم ادعوني أستجب لكم»* - سورة المؤمن، الآية - ٦٠}

[ المصدر: 'شرح رياض الصالحين، ٤/٢٩٢ ]

➖➖➖👇👇👇👇➖➖➖

🔅👉🏿 “ (நபியே) என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கின்றேன். (என்று நீர் கூறுவீராக!) *பிரார்த்திப்பவன் என்னை அழைத்தால், (அந்த) அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்.* எனவே, அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னையே அழைக்கட்டும்; மேலும், என்னையே நம்பிக்கை கொள்ளட்டும்!”. (அல்குர்ஆன், 02:186)

📚➖➖➖➖➖➖➖➖📚 

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post