இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அஹ்மத் அந்நஜ்மீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மனித சிந்தனைகள் மீதோ, மனிதர்களின் மனோ இச்சைகள் மீதோ (வைத்து அளவீடு செய்யப்பட்டதாக) சத்தியத்தை அல்லாஹ் ஆக்கி வைக்கவில்லை
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மனிதர்களின் சிந்தனைகள் பலதரப்பட்டவையாகும்; அவர்களின் மனோ இச்சைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதும், வேறுபட்டவையுமாகும். மனிதர்களின் மனோ இச்சைப்படியே சத்தியம் இருக்குமாக இருந்திருப்பின் அவர்களின் நிறங்களும், அவர்களின் முகங்களும், அவர்களுடைய இயல்புகளும் எப்படி வேறுபட்டிருக்கின்றனவோ அப்படியே இதுவும் வேறுபட்டிருந்திருக்கும்! என்றாலும், நபியின் நாவின் மூலம் அல்லாஹ்விடமிருந்து வந்தது இருக்கிறதல்லவா! அதுதான் சத்தியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: *“சத்தியம் அவர்களது மனோ இச்சைகளைப் பின்பற்றியிருந்தால் வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவர்களும் நிச்சயமாக சீர்கெட்டிருப்பார்கள்”*.
(அல்குர்ஆன், 23:71)
[ நூல்: 'இர்ஷாதுஸ் ஸாரீ', பக்கம்: 53 ]
قال فضيلة الشيخ أحمد النجمي رحمه الله تعالى:-
{ ولنعلم أن الله سبحانه وتعالى لم يجعل الحق على عقول الرجال ولا على أهواء النّاس؛ لأن عقول الرجال مختلفة، وأهواءهم متضادة ومتباينة. فلو كان الحق على أهواء النّاس لكان مختلفا كاختلاف ألوانهم ووجوههم وطباعهم... ! ولكن الحق هو ما جاء من الله على لسان رسوله صلّى الله عليه وسلم. والله سبحانه وتعالى يقول: *« ولو اتّبع الحق أهواءهم لفسدت السّماوات والأرض ومن فيهنّ »* سورة المؤمنون، الآية: ٧١ }
[ المصدر: 'إرشاد السّاري، ص: ٥٣ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா