‘கழா கத்ர்' பற்றிய நம்பிக்கை வாழ்க்கையை ஒளிமயமாக்கும்!

இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:

“நன்மை, தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கும் என்ற 'கழா கத்ர்' குறித்த  நம்பிக்கை சரியாக  இருக்கும்போதே மனிதன் உண்மையான இன்பத்தையும் மகிழ்ச்சியையும்  அனுபவிக்கின்றான். ஏனெனில், வரும் அனைத்தும் தன் இரட்சகனிடமிருந்தே வருகின்றன என்று அந்நேரம் அவன் அறிந்துகொள்கிறான்; இதனால் அவன், தன் இரட்சகனின் திட்டமிடலில் திருப்தியடைந்து, தான் பெற்றுள்ள அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்தி, பீடித்திருக்கும் சோதனைகள், துன்பத்திற்காகப் பொறுமை காத்து, கஷ்டங்களின்போது  அவன் ஒருவனிடமே பாதுகாப்புத் தேடி ஒதுங்குவான்.

இவ்வடிப்படையில், கழா கத்ரை மனிதன் சரியாக நம்பிக்கை கொண்டுவிட்டால் அவன் வாழ்க்கை திருப்தியானதாகவே இருக்கும். அருள்வளங்கள் கொடுக்கப்பட்ட ஒருவர் குறித்தும் அவன் பொறாமைப்படவோ, துன்பத்திற்குள்ளாக்கப்பட்ட எவர் குறித்தும் அவன் மகிழ்ச்சியை வெளிக்காட்டவோமாட்டான். காரணம், அது அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கிறது என்பதை அவன் அறிந்து வைத்திருக்கின்றான். எனவே, தன் சகோதரனுக்கு அல்லாஹ் அருள் புரிந்திருப்பது போல் தனக்கும் அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் அவன் பிரார்த்திப்பான். அத்தோடு, மற்றவர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்க தன்னை அதிலிருந்து பாதுகாத்ததற்காக அல்லாஹ்வை அவன்  புகழவும் செய்வான்”.

[ நூல்: 'அழ்ழியாஉல்  லாமிஃ' , 01/399 ]

*قال الشيخ ابن عثيمين* رحمه الله:

 « إن العبد لا ينعم حق النعيم حتى يؤمن بالقدر؛ لأنه حينئذ يعرف أن كل شيء من ربه فيرضي بتدبيره ويشكره على نعمه ويصبر على البلاء والمصائب، ويفزع إليه وحده عند الشدائد.

          وإذا آمن بالقدر عاش عيشة راضية، فلا يحسد أحدا على نعمه، ولا يشمت بأحد أصيب ببلية؛ لأنه يعلم أن ذلك من الله، فيسأله أن ينعم عليه كما أنعم على أخيه، ويحمده أن عافاه مما ابتلي به الآخر ».

(الضياء اللامع / ج1 / ص399)

~_________________________~

*தமிழில்*

அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.

         

أحدث أقدم