அற்ப பாலியல் சுகத்தை அனுபவிக்க மார்க்கத்தை விற்கிறார்கள் சில மடையர்கள்


        இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! இறுதி நிலை மோசமாக அமைதல் என்பது வெளிப்படையான வாழ்க்கையில் உறுதியாக இருப்பவருக்கும், மறைமுக நடவடிக்கைகளைச் சீர்செய்துகொண்டவருக்கும் இருக்கமாட்டாது. புகழ் அனைத்தும்  அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்!  சிந்தனையில் சீர்கேடு உள்ளவனுக்கும், பெரும்பாவங்களில் மூழ்கியிருப்பவனுக்கும்தான் இறுதி நிலை மோசமாக இருக்கும். சிலவேளை இந்நிலை அவனில் மிகைத்து, அவன் மீது அது ஆதிக்கமும் செலுத்திவிட்டால் பாவமன்னிப்புத் தேடிக்கொள்வதற்கு முன்னரே மரணம் அவனுக்கு வந்து விடும். அப்போது,  அந்த அனர்த்த நேரத்திலேயே ஷைத்தான் அவனை அடியோடு அழித்து விடுவான்;  அந்தக் குழப்பமான சந்தர்ப்பத்திலேயே அவனைப் பிடுங்கியும் சென்றுவிடுவான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்; திரும்பவும் அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லது மார்க்கத்தில் ஒருவர் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்து பின்னர் அவரின் நிலை மாற்றமடைகிறது. (கடைப்பிடித்து வந்த) தனது வழிமுறைகளிலிருந்தும் அவர் வெளியேறி, ஷைத்தானின் வழியில் செல்ல அவர் ஆரம்பித்து விடுகிறார் என்றால் அவரின் இறுதி நிலை மோசமானதாகவும், அவரின் இறுதி முடிவு அபசகுனமாவும் அமைவதற்கு அது காரணமாகி விடும்.

        எகிப்து நாட்டில் ஒருவர் இருந்தார். அவர்,  பாங்கிற்கும் தொழுகைக்கும் என பள்ளிவாசலோடு நல்ல ஈடுபாட்டுடன் இருந்து வந்த சிறந்த மார்க்கவாதியுமாவார். வணக்க வழிபாட்டின் செழிப்பும், இறை வழிபாட்டு ஒளிகளும் அவர் மீதிருந்தன. அவர்  ஒரு நாள், பாங்கு சொல்வதற்காக  வழமை போலவே 'மனாரா'வுக்கு ஏறினார். 'மனாரா' வுக்குக் கீழே ஒரு வீடு இருந்தது. அது,  இஸ்லாமிய அரசின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழிருந்த 'திம்மி' கிறிஸ்தவருக்குச் சொந்தமானது. அவ்வீட்டை எட்டிப் பார்த்த அவர்,  வீட்டுக்காரரின் மகளைக் கண்டுவிட்டார். அந்த நேரமே அவளால் குழப்பத்துக்குள்ளாகி காதல் வயப்பட்டுவிட்டார். உடனே பாங்கு  சொல்வதை அவர்  விட்டுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து அவளிடமே நேராகச் சென்றுவிட்டார். “நீர் நாடி வந்த விடயம்தான் என்ன?” என்று அவள் கேட்க, “உம்மைத்தான்  நான் நாடி  வந்துள்ளேன்!” என்றார் அவர். “எதற்காக?” என்று அவள் கேட்டாள். “என் புத்தி எடுபட்டுப் போய்விட்டது; உன்மீது நான் கொண்ட காதல்  என் உள்ளத்திலுள்ள அனைத்தையும் எடுத்தே விட்டது!” என்றார் அவர். அதற்கு அவள், “(இஸ்லாம் என்ற) சந்தேக(மார்க்க)த்தில் உள்ள உமக்கு என்னால் பதிலளிக்க முடியாது” எனக் கூறினாள். “உம்மை நான் மணம் முடித்துக் கொள்கிறேன்!” என்று அவர் கூறவே, “நீர் ஒரு முஸ்லிம்; நான் ஒரு கிறிஸ்தவர். என் தந்தை உம்மை எனக்குத் திருமணம் முடித்துத் தரமாட்டார்!” என அவள் கூறினாள். அப்போது அவர் அவளிடம், “கிறிஸ்தவராக நான் மதம் மாறிக்கொள்கிறேன் ” என்றார். “அவ்வாறு நீர்  செய்தால் நான் உம்மை முடிக்கிறேன்” என்று அவள் கூறினாள்.

            உடனே, அவளை முடிப்பதற்காக கிறிஸ்தவராக அவர் மதம் மாறிக்கொள்ளவே  திருமணமும் நடந்தது. அவர்களுடனேயே அவரும் தங்கினார். அந்த நாள் இரவு வேளையில் வீட்டின் மேல் பகுதிக்கு அவர் ஏறியதும் கீழே விழுந்து விட உடனே மரணித்தும் போய்விட்டார். இதனால், “(ஆரம்பத்தில் தான் இருந்த இஸ்லாமிய) மார்க்கத்தில் அவர் இருக்கவுமில்லை; அவளோடு அவர் இருந்து குடும்பம் நடாத்தவுமில்லை! எனவே, அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்புத் தேடிக்கொள்வோம்;  பின்னரும் நாம் அவனிடம், இறுதி முடிவு அசிங்கமாகப் போவதிலிருந்தும், இறுதி நிலை கெட்டதாகி விடுவதிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக்கொள்வோமாக!”

{ நூல்: 'அத்தஸ்கிரா fபீ அஹ்வாலில் மவ்தா வ உமூரில் ஆஹிரா' லில்குர்துபீ, பக்கம்: 34,35 }

💢➖➖➖➖➖➖➖➖💢

        قال الإمام القرطبي رحمه الله تعالى:-

         { إن سوء الخاتمة - أعاذنا الله منها - لا تكون لمن استقام ظاهره وصلح باطنه، - والحمد لله - وإنما تكون لمن كان له فساد في العقل، أو إصرار على الكبائر،  فربما غلب ذلك عليه حتى ينزل به الموت قبل التوبة، فيصطلمه الشيطان عند تلك الصدمة، ويختطفه عند تلك الدهشة - والعياذ بالله! ثم العياذ بالله! ، أو يكون ممّن كان مستقيما، ثم يتغيّر عن حاله ويخرج عن سننه، ويأخذ في طريقه، فيكون ذلك سببا لسوء خاتمته وشؤم عاقبته.

          كان بمصر رجل ملتزم مسجدا للأذان والصلاة، وعليه بهاء العبادة وأنوار الطاعة، فرقى يوما المنارة على عادته للأذان ، وكان تحت المنارة دار لنصرانيّ ذمّيّ، فاطّلع فيها فرأى إبنة صاحب الدار، فافتتن بها وترك الأذان، ونزل إليها ودخل الدار. فقالت له: ما شأنك ما تريد؟ فقال: أنت أريد. فقالت: لماذا؟ قال لها: قد سلبت لبّي وأخذت بمجامع قلبي، قالت: لا أجيبك إلى ريبة. قال لها: أتزوّجك، قالت له: أنت مسلم وأنا نصرانية وأبي لا يزوّجني منك. قال لها : أتنصّر، قالت: إن فعلت أفعل. فتنصّر ليتزوّجها، وأقام معهم في الدار، فلمّا كان في أثناء ذلك اليوم رقى إلى سطح كان في الدار فسقط منه فمات. فلا هو بدينه ولا هو بها! فنعوذ بالله، ثم نعوذ بالله من سوء العاقبة وسوء الخاتمة... }

[ *المصدر:* "التذكرة في أحوال الموتى وأمور الآخرة" للقرطبي، ص - ٣٤،٣٥ ]

💢➖➖➖➖➖➖➖➖💢

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم