அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:-
*🔅கேள்வி:* மார்க்க வழியில் ஸ்திரமாகச் செல்ல உறுதிபூண்டு, அதன் ஆரம்பக்கட்ட நிலையில் இருந்துகொண்டிருக்கும் இளைஞனொருவனுக்கு உங்களின் உபதேசம் என்ன?
*பதில்:* இன்ஷா அல்லாஹ்! சீரான திருப்பத்தில் இருந்துகொண்டிருக்கும் இவ்விளைஞனுக்கான எமது உபதேசம் இதுதான்:
*01)* கொள்கை உறுதியிலும், சரியான தெளிவிலும் எப்போதுமே இருப்பதற்கு அல்லாஹ்விடம் அவர் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
*02)* பொருள் அறிந்து விளக்கத்துடன் அல்குர்ஆன் ஓதுவதை அவர் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், பொருள் அறிந்து விளக்கத்துடன் இக்குர்ஆனை ஒருவர் ஓதுகின்றபோது அது அவருக்கு உள்ளத்தில் பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்தும்.
*03)* வணக்க வழிபாடுகளில் தொடர்ச்சியைக் கடைப்பிடிக்க அவர் ஆர்வம் காட்ட வேண்டும். அவர் சோர்வடையவோ, சோம்பல்தனம் காட்டவோ கூடாது. காரணம், நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இயலாமையிலிருந்தும், சோம்பேறித்தனத்திலிருந்தும் பாதுகாப்புத் தேடியிருக்கின்றார்கள்.
*04)* நல்லவர்களோடு சேர்ந்திருக்க ஆர்வம் காட்ட வேண்டும்; கெட்டவர்களுடன் சேர்ந்திருப்பதை விட்டும் தூரமாகியிருக்க வேண்டும்.
*05)* கெட்ட நண்பர்களை விட்டும் அவர் விலகியிருக்க வேண்டும். இதற்கு முன்னர் அவரின் நண்பர்களாக இவர்கள் இருந்திருந்தாலும் சரியே! காரணம், கெட்ட நண்பர்கள் அவரில் தாக்கம் செலுத்தி விடுவார்கள். இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *“கெட்ட நண்பனுக்கு உதாரணம் கொல்லனின் உலையைப் போன்றதாகும். இது, ஒன்றில் உன்னுடைய ஆடையை எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையை நீ பெற்றுக்கொள்வாய்!”* என்று கூறினார்கள்.
{ நூல்: 'லிகாஉல் பாபில் மfப்தூஹ்', 23/70 }
🔳➖➖➖➖➖➖➖➖🔳
سئل الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى.....
*السؤال:* ما نصيحتكم لشاب في بداية طريق الإستقامة؟
*الجواب:* نصيحتنا لهذا الشاب الذي هو في إتجاه سليم - إن شاء الله -
*🔅أولا:* أن يسأل الله الثبات دائما والصواب.
*🔅ثانيا:* أن يكثر من قراءة القرآن بتدبّر؛ لأن هذا القرآن له أثر كبير على القلب إذا قرأه الإنسان بالتّدبّر.
*🔅ثالثا:* أن يحرص على ملازمة الطاعات، وألّا يملّ أو يكسل، فإن النّبي صلّى الله عليه وسلم إستعاذ من العجز والكسل.
*🔅رابعا:* أن يحرص على مصاحبة الأخيار، ويبتعد عن مصاحبة الأشرار.
*🔅خامسا:* أن يبتعد عن قرناء السّوء، حتى ولو كانوا أصحابا له من قبل؛ لأن قرناء السّوء يؤثّرون عليه. ولهذا قال النّبي عليه الصلاة والسلام: *«مثل الجليس السّوء كنافخ الكير؛ إما أن يحرق ثيابك، وإما أن تجد منه رائحة خبيثة.
{ *المصدر:* لقاء الباب المفتوح، ٢٣/٧٠ }
🔳➖➖➖➖➖➖➖➖🔳
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனி