ஆடை அழகும், ஆன்மா அழகும்


       பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுள்ளாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:-

         “ஞானம் நிறைந்த  அல்லாஹுதஆலா மனிதனுக்கு மறைக்க வேண்டிய பகுதிகள் இரண்டை, அல்லது வெட்கத்தலங்கள் இரண்டையும் மறைப்புக்குத் தேவையான திரைகள் இரண்டையும் வழங்கியிருக்கின்றான். மறைக்க வேண்டிய  பகுதி ( அவ்ரத்- عورة ) ஒவ்வொன்றுக்கும் மறைக்கும் திரையும் இருக்கவே செய்கிறது.

        மறைக்க வேண்டிய பகுதிகள், அல்லது விடயங்கள்  இரண்டு இருக்கின்றன.

*01)* மறைத்தாக வேண்டிய உடல் ரீதியான பகுதிகள்:  ( இதற்கு, உடல் ரீதியான அவ்ரத் -  عورة الجسم - என்று சொல்லப்படும்)

*02)* மறைத்தாக வேண்டிய ஆன்மா (உள)ப் பகுதி: (இதற்கு, உள ரீதியான அவ்ரத் - عورة النّفس - என்று சொல்லப்படும்)

          இதில், முதலாவது வகைக்கான மறைப்புத் திரையாக ஆடைகளையும், இரண்டாவது வகைக்கான மறைப்புத்  திரையாக நற்பண்பையும் நன்னடத்தையையும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.

           இரு 'அவ்ரத்'களும், சொல்லப்பட்ட மறைப்புத்  திரைகள் இரண்டின் மூலம் மறைக்கப்பட வேண்டும் என்று கண்டிப்பான கட்டளையை இடும் அல்லாஹ், இந்த இரு வகை 'அவ்ரத்'களில் ஆக முக்கியமானதாக  உணர்த்திக் காட்டுவது இரண்டாவது வகையான 'அவ்ரத்' தைத்தான் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஏனெனில், பாவ அழுக்குகளிலிருந்து மனிதனின் ஆன்மாவின் மானத்தை மறைக்கும் ஆடையாக இருக்க வேண்டியது புகழுக்குரிய அவனது  நற்பண்புகளாகும். ஆதலால், இவற்றை விட்டும் மனிதன்  நீங்கியிருக்கவே முடியாது. எனவேதான் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! *உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும்,* அலங்காரத்தையும் உங்களுக்கு நாம் இறக்கியிருக்கின்றோம். எனினும், *(பயபக்தி எனும்) 'தக்வா'வுடைய ஆடையே மிகச் சிறந்ததாாகும்.* இவை, அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகக் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களில் உள்ளவையாகும்🔅.

            ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து, அவர்களைச் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் (ஏமாற்றி) குழப்பத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். நிச்சயமாக அவனும், அவனது பட்டாளமும் நீங்கள் அவர்களைப் பார்க்காத போதிலும் அவர்கள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கியுள்ளோம்”. (அல்குர்ஆன், 07: 26,27)

            (இரு வகை 'அவ்ரத்' விடயமாகச் சொல்லப்பட்ட) இந்தக் கருத்தை விளக்கப்படுத்துகின்ற அல்குர்ஆனின் தெளிவான இவ் ஆதாாரம் ஆச்சரியமாகவே இருக்கிறது! எனவே,  இவ்விடயத்தை மனிதன் சிந்தித்துப் பார்ப்பது கட்டாயமாகும்.

           இந்த வகையில், இரண்டு வகை ஆடைகளைக்கொண்டு அல்லாஹ் எமக்கு அருள் புரிந்திருக்கிறான்; மேலும், அவனை நாம் கட்டாயம் நினைவுகூர்ந்து பார்க்கும்படியான அளவுக்குள்ள அவனது அத்தாட்சிகளில் இரண்டாகவும் அதை அவன் ஆக்கியுள்ளான்.

          அத்துடன் அல்லாஹ்வின் வேதம் இன்னொரு விடயத்தையும் இங்கு  சுட்டிக்காட்டுகிறது. அதுதான்: மானம் வெளியாகின்ற விடயத்திற்கும், ஷைத்தான் மற்றும் அவனை நேசித்து அவனைப் பின்பற்றி நடக்கின்ற அவனது நண்பர்களுக்கிடையிலும் தொடர்பொன்று இருக்கிறது என்ற விடயமாகும். ஷைத்தானைப் பொறுத்தளவில் அவன், மனிதனின் உடல் 'அவ்ரத்' வெளியாகி அசிங்கத்தில் போய் விழுவதற்கும் மனிதனுக்கு அவன் ஏவுவான்; தீய பண்புகளைக் கடைப்பிடித்தல் வழியாக மனிதனின் உள ரீதியான 'அவ்ரத்' வெளியாகி அசிங்கத்தில் அவன் போய் விழுவதற்கும் ஷைத்தான் அவனுக்கு ஏவுவான்!.

         கவிஞர் ஒருவர் கூறுகிறார்: *“எம்மை அலங்கரித்து அழகுபடுத்திக் காட்டும் ஆடைகளைக் கொண்டுள்ள அழகு, அழகே அல்ல! கல்வி அழகும், ஒழுக்க அழகும்தான் உண்மையான அழகாகும்!”.*

{ நூல்: 'அல்அஹ்லாக் அல்fபாழிலா', பக்கம்: 126 - 128 }

🌠➖➖➖➖➖➖➖➖🌠

          قال الأستاذ الدكتور عبدالله بن ضيف الله الرحيلي حفظه الله تعالى:-

           { إن الله الخالق الحكيم سبحانه جعل للإنسان عورتين أو سوءتين، وسترين، لكلّ سوءة ستر. أما العورتان: فعورة الجسم، وعورة النفس.

              وجعل للأولى سترا هو الملابس، وجعل للثانية سترا هو الخلق والسلوك الجميل.

           وقد أمر الله تعالى بالسترين، ولكنه نبّه على الأهمّ منهما وهو الثاني؛ لأن لباس الإنسان لايغني عن أخلاقه الحميدة، ولهذا قال تعالى: *« يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوءاتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلّهم يذّكّرون🔅يا بني آدم لا يفتننّكم الشّيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوءاتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للّذين لا يؤمنون »* (سورة الأعراف : الآية - ٢٦،٢٧)

             إن هذا النصّ القرآني عجيب في بيان هذا المعنى،  فينبغي للإنسان أن يتدبّره.

         لقد إمتنّ الله سبحانه علينا باللّباسين، وجعلهما من آياته التي يجب أن تذكرنا بالله، وأشار كتاب الله إلى أن هناك علاقة بين كشف السوءة وبين الشيطان وأوليائه الذين يتولّونه ويتّبعونه. إن الشيطان يأمر الإنسان بالوقوع في رذيلة كشف عورة الجسد، والوقوع في رذيلة كشف عورة النفس عن طريق ارتكاب مساوئ الأخلاق!

            قال الشاعر: *ليس الجمال بأثواب تزيّننا#* 

     *إن الجمال جمال العلم والأدب!* 

[ الأخلاق الفاضلة - قواعد ومنطلقات لاكتسابها - ، ص : ١٢٦ - ١٢٨ ]

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم