பின்பற்றுவோர் அதிகம்பேர் என்பது பிரச்சாரம் சரியானது என்பதற்கான அளவுகோல் கிடையாது


         நவீன கால ஹதீஸ் கலை அறிஞர் அல்லாமா நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “இஸ்லாமியப் பிரச்சாரகரின் அழைப்புக்குப் பதிலளிப்போர் குறைவாக இருக்கின்றார்களே என்று அழைப்பு விடுக்கப்படுபவர் வெறுப்பை உணர்ந்துவிடக் கூடாது. சத்தியப் பிரச்சாரத்திலும், அதை நம்பிக்கை கொள்கின்ற விடயத்திலும் சந்தேகம் கொள்வதற்குரிய காரணியாக அதை அவர் எடுத்து விடவும் கூடாது. இதைவிட மேலாக, (அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில்) பிரச்சாரப் பணி செய்பவரை ஒருவரும் பின்பற்றவில்லை; அல்லது அவரைப் பின்பற்றியோரெல்லாம் மிகமிகக் குறைவானவர்களே; அவரது பிரச்சாரம் உண்மையானதாக இருந்திருப்பின் பெரும்பான்மையான மக்களல்லவா அவரைப் பின்பற்றியிருப்பார்கள்?! ௭ன்று வாதிட்டுக்கொண்டு, இது அவரது பிரச்சாரம் தவறானது; அசத்தியமானது என்பதற்கான ஆதாரமாகும் என்று அவர் எடுத்துவிடவும் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்: *“(நபியே!) நீர் எவ்வளவுதான் ஆர்வம் கொண்டாலும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்களாக ஆகிவிடமாட்டார்கள்”* (அல்குர்ஆன், 12:103)

[ நூல்:'அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா', 01/755 ]


        قال العلاّمة المحدث ناصر الدين الألباني رحمه الله تعالى:-

      { والمدعو عليه أن لا يستوحش من قلّة المستجيبين للداعية، ويتّخذ ذلك سببا للشك في الدعوة الحق وترك الإيمان بها، فضلا عن يتّخذ ذلك دليلا على بطلان دعوته، بحجة أنه لم يتّبعه أحد، أو إنما اتّبعه الأقلّون، ولو كانت دعوته صادقة لاتّبعه جماهير النّاس، والله عزّ وجلّ يقول: *« وما أكثر النّاس ولو حرصت بمؤمنين »* (سورة  )

[ المصدر: 'السلسلة الصحيحة' للألباني، ١/٧٥٥ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post