ஒரு வகையில் இவர்கள் சுயநலவாதிகளே


           அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

         “மனிதர்களில் அதிகமானோரின் நிலையை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்த்தால், *'தமக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய உரிமையையே அவர்கள் பார்க்கின்றார்கள்; தாம் அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பார்க்காதிருக்கின்றார்கள்!'* என்றிருப்பதாகவே அவர்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள். இங்குதான் இவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம்மைத் துண்டித்துக் கொள்கின்றனர்; மேலும் அவனை அறிவதை விட்டும், அவனை அன்பு கொள்வதை விட்டும், அவனின் சந்திப்புக்கு ஆசை கொள்வதை விட்டும், அவனது நினைவின் மூலம் இன்புறுவதை விட்டும் அவர்களது உள்ளங்களும் திரையிடப்பட்டு விடுகின்றன. இது, தன் இரட்சகனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் மனிதன் கொண்டிருக்கின்ற அதியுச்சகட்ட அறியாமையாகும்!”.

{ நூல்: 'இஆசதுல் லஹ்fபான்', 01/88 }


               قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

            *[ إذا تأملت حال أكثر الناس وجدتهم ينظرون في حقهم على الله ، ولاينظرون في حق الله عليهم. ومن ههنا إنقطعوا عن الله، وحجبت قلوبهم عن معرفته ومحبته والشوق إلى لقائه والتنعّم بذكره. وهذا غاية جهل الإنسان بربّه وبنفسه!... ]*.

{ إغاثة اللهفان، ١/٨٨ }

➖➖👇👇👇👇👇👇➖➖


❇👉🏿 முஆத் இப்னு ஜபல் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: 

           *“(ஒருமுறை) நான் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே!' என்று அழைத்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்!)' எனப் பதிலளித்தேன். அப்போது நபியவர்கள், 'அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்!' என்று சொன்னேன். நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதனையும் இணைவைக்கக் கூடாது!' என்று கூறினார்கள். பின்னர் நபியவர்கள் என்னை அழைத்து, 'அடியார்கள் அதை நிறைவேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்!' என்று சொன்னேன். அப்போது நபியவர்கள், 'அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்!”* என்று கூறினார்கள்.

{ நூல்: புகாரி - 6500 }

🍀➖➖➖➖➖➖➖➖🍀

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم